இலங்கையில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் அண்மையில் தங்கத்தின் விலையில் எதிர்பாராத அளவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததுடன், இரண்டு இலட்சத்தை தொட்டிருந்தது.
இந்த நிலையில் சடுதியாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில் மீண்டும் தற்போது அதிகரித்த போக்கு காணப்படுகிறது.
இன்றைய நிலவரம்
இதன்படி, இன்றைய தினம் (08.05.2024) 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலையானது 24460 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 195,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22430 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 179400 ரூபாவாகவும் உள்ளது.
மேலும், 21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,410 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171250 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் சில நாட்களுக்கு மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இராமநாதபுரம் புல்லாணியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம். கொத்தனார் கூலி தொழிலாளியான இவர் மற்றொரு சமூகத்தை சேர்ந்த செவிலியரான சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு அஜய்(16) என்ற மகனும் அக்ஷிதா(12) என்ற மகளும் உள்ளனர். சரண்யா தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில் கணவனுக்கு தெரியாமல் அதிகமாக கடன் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதனை தன்னுடன் பழகிய இளைஞர் ஒருவருக்கும் கொடுத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மனைவியின் அதீத கடன் விவகாரம் கணவனுக்கு தெரியவரவே அது குறித்து மனைவி சரண்யாவிடம் கேட்டு சண்டையிட்டுள்ளார் பன்னீர் செல்வம். அதற்கு சரண்யா முறையான காரணம் சொல்லவில்லையென கூறப்படுகிறது.
எனவே கணவன் மனைவி இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். அருகருகே உள்ள தெருவில் இருவரும் வசித்து வந்த நிலையில் பிள்ளைகள் இருவரும் பன்னீர்செல்வத்தோடும் சரண்யா அவரது தந்தையோடும் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் சரண்யா பன்னீர்செல்வத்தின் மகள் பூப்பெய்த நிலையில் உறவினர்கள் இரு தரப்பிலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்ததோடு கடனை சமாளிக்க நீராட்டுவிழா வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு கடனை அடைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் பன்னீர் செல்வத்தின் மகள் காலில் அணிந்திருந்த கொலுசு காணாமல் இருந்ததை பார்த்த பன்னீர் செல்வம் அது குறித்து கேட்கவே அம்மா வாங்கி சென்றதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் அவரிடம் கேட்க போன போது சரண்யா காலில் இருந்த கொலுசும் காணாமல் இருந்ததை பார்த்து அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் ஏதேதோ காரணம் சொல்லி இறுதியாக அதனை விற்றதை அறிந்து மீண்டும் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனால் மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டு அவரவர் வீடுகளுக்கு சென்றுவிட்ட நிலையில் நேற்று இரவு பன்னீர் செல்வம் அவரது வீட்டின் முன்பாக தலை குப்புற கிடந்ததாக சொல்லப்படுகிறது.
அவரது மகன் அவரை எழுப்பி பார்த்த போது வயிற்றில் குத்துப்பட்டு இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுத உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது . . இச்சம்பவம் தொடர்பாக விசாரிப்பதற்காக சரண்யாவின் வீட்டிற்கு சென்றபோது அங்கு சரண்யா வெட்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
சம்பவ இடத்தில் ஏ.எஸ்.பி சிவராமன் சம்பவ இடத்தில் நேரில் வந்து விசாரணை செய்தார். மேலும் சரண்யாவின் செல்போனை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சரண்யாவை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
கடலூர் அருகே 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால், மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா, பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கோட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் அபிநயா. முத்தாண்டிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்த அபிநயா, அனைத்து பாடங்களிலும் தேர்வு பெற்றிருந்த நிலையில், கணக்குப் பாடத்தில் மட்டும் 26 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வியடைந்தார். எனினும் தமிழில் 85, கணினி அறிவியலில் 82 மதிப்பெண்கள் என மொத்தம் 360 மதிப்பெண்களை பெற்றிருந்தார்.
இன்று தேர்வு முடிவுகள் வெளியான சமயத்தில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த அபிநயா, துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த விருத்தாச்சலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவியின் உயிரிழப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற நல்வாழ்வுத்துறை ஹெல்ப்லைன் 104 மற்றும் சினேகா தற்கொலை தடுப்பு ஹெல்ப்லைன் 044-24640050 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.
தமிழகம் முழுவதும் நேற்று12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்தது.
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் கவலை கொள்ள வேண்டாம் மறுதேர்வு எழுதி உடனடியாக உயர்கல்வி பயிலலாம் என முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசும் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் வைரவன்கோவிலில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் ஜெயவேலின் மகள் சௌமியா. இவர் வண்ணாங்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து தேர்வு எழுதினார். நேற்று முடிவுகள் வெளியான நிலையில் சௌமியா எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்தார்.
இதனால் மாணவி சௌமியா யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று மாணவி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை பூசேரியில் வசித்து வருபவர் சத்யா. இவர் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் குறைவான மதிப்பெண் பெற்றிருந்ததாக கருதிய சத்யா மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சத்யா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலை சம்பவங்களால் தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் மாணவர்களிடையே பெரும் சோகமும், அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த சுதாகர் என்பவருக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த முரளி என்பவரின் மகள் புவனேஸ்வரி (23) என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில் புவனேஸ்வரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 100 எண் கால் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று புவனேஸ்வரி தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் மின்விசிறியில் தூக்கிட்டு மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புவனேஸ்வரியின் உறவினர்கள் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி சுதாகர் வீட்டாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தகவல் அறிந்து வந்த ஆலங்காயம் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து பெண் காவலரின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் திடீர் ட்விஸ்ட் நடந்துள்ளது.
புவனேஸ்வரிக்கும் அவரது கணவர் சுதாகருக்கும் இடையே கடந்த சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில் புவனேஸ்வரியின் தந்தை முரளி தனது மகளை கொடுமைப்படுத்தி உள்ளதாக கூறி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்த ஆலங்காயம் போலீசார் மனைவி இறந்ததாக தகவல் அறிந்த கணவன் சுதாகர் மயக்கமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி ஓராண்டுகளே ஆன நிலையில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
வாணியம்பாடி அருகே எஸ் பி அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே மற்றும் காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை பிணைகளில் விடுவிக்க குளியாப்பிட்டிய நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார்.
குளியாப்பிட்டிய – வெரலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவர் கடந்த 22 ஆம் திகதி தனது காதலியைச் சந்திப்பதற்காக காதலியின் வீட்டிற்குச் சென்றிருந்த போதே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.
இளைஞர் காணாமல்போன சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிகிதி என்ற சுஜித் பெர்னாண்டோவை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரை அவரது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததன் பின்னர், பிணை வழங்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை நாடளாவிய ரீதியில் தேடுவதில் அரசாங்க அதிகாரிகள் நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டதாகவும், அவர் சட்டத்தை மதிக்கும் நபராக இருந்தால், அவர் பொலிஸார் முன் வந்திருக்க முடியும் என்றும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சமையல் போட்டி நிகழ்ச்சியான MasterChef Australiaஇல் இலங்கைத் தமிழர் ஒருவர் பாரம்பரிய உணவை காட்சிப்படுத்தி பிரபல்யம் அடைந்துள்ளார்.
பெர்த் நகரைச் சேர்ந்த Darrsh Clarke இந்த நிகழ்ச்சியில் முதன்முறையாக பாஸ்மதி சாதம், தயிர் ரைத்தா மற்றும் கத்தரிக்காய் கறியை சமைத்து வழங்கியுள்ளார்.
இலங்கையின் பாரம்பரிய உணவு
எனினும், “இதற்கு முன் ஏன் இலங்கை உணவை வழங்கவில்லை” என நடுவர்கள் கேள்வியெழுப்பியிருந்ததுடன் அதற்கு பதிலளித்து பேசிய Darrsh தனது இலங்கை பாரம்பரியத்தை நிராகரித்ததை வெளிப்படுத்தினார்.
எனினும், அவரை ஊக்கப்படுத்திய நடுவர்கள் MasterChef Australia நிகழ்ச்சி தமது பாரம்பரியத்தை மீட்டெடுக்க உதவுவதாக தெரிவித்திருந்தனர்.
தனது தந்தை மற்றும் பாட்டியின் சமையலில் Darrsh ஈர்க்கப்பட்டிருந்ததாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, இலங்கை உணவுகளை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ‘MasterChef Australia’ பங்கேற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது நபர் Darrsh ஆவார்.
முன்னதாக, இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா அவுஸ்திரேலிய சமையல் போட்டியில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்ததுடன் நடுவர்களின் பாராட்டைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் விளையாடிய 11 வயது சிறுவன் அந்தரங்க பகுதியில் பந்து பட்டதில் மைதானத்திற்குள் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிரா புனேவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஷௌர்யா என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்தவராவார்.
குறித்த சிறுவன் பந்து வீசிய நிலையில் துடுப்பாட்ட வீரர் பந்தை நேரடியாக அவரை நோக்கி அடித்துள்ளார். இதில் ஷௌர்யாவின் அந்தரங்க பகுதியில் பந்து பலமாக பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து சிறுவன் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இளம் தாய் சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து கைதான சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், சந்தேக நபரான சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதோடு சிறுவன் தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனவும், அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயார் நித்திரை மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.
கொலையின் பின்னர் கொழும்புக்கு பேருந்தில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்து, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்னர் வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (03.05.2024) வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும் 37 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் பெண் உயிரிழந்த நிலையில் மகள் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதான வைத்தியசாலையின் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார். இதன்போது வர் மேலும் கூறுகையில்,
யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை காணப்படுகிறது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும்.
அதனை தாண்டும் போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும். வெப்ப அதிகரிப்பால் வியர்வை அதிகரிப்பு , வியர்குருக்கள் போடுதல் , போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் , உடலில் நீரின் அளவு குறைவடைந்து , மயக்கம் ஏற்படும்.
இந்நிலை தொடர்கின்ற போது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும். அத்துடன் , சிறுநீரகம் , இருதயம் , சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும். அதுமட்டுமல்லாது குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து , உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்படும்.
மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் யாழ்.போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 05 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரணமாக உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் , அதிகரித்த வெப்ப நிலையே நோயினை தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, எம்மை காப்பாற்றி கொள்ள ” ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.
வயதானவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே அவர்களுக்கு தொடர்ச்சியாக நீராகாரங்களை வழங்க வேண்டும். குறிப்பாக தர்ப்பூசணி , வெள்ளரிப்பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும்.
மேலும் குளிர்ந்த நீரினால் , முகத்தை கழுவ வேண்டும். கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழுவிக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்ப நிலையை தணிக்க முடியும்.
உடலின் வெப்ப நிலையை குறைப்பதன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும் எனவும் பொது மருத்துவ நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்
யாழ். புத்தூர்(Jaffna) பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பச்சை உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குகிறார்கள் என்பது தவறான கருத்து என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் விளக்கமளித்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க, உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ அல்லது மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின் போது சூரிய ஒளி படுவதனாலோ ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதாக அவர் தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம், உருளைக்கிழங்கை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக Solanine and Chaconine எனப்படும் இயற்கை இரசாயனங்களால் கிளைகோல்கலாய்டுகளின் உற்பத்தி அதிகரிப்பாகும்.
இந்த பச்சை உருளைக்கிழங்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது. கடை உரிமையாளர்களுக்கு இது நன்றாகவே தெரியும். கடை உரிமையாளர்கள் 10 கிலோ உருளைக்கிழங்கை ஒரு பையாக வாங்குகிறார்கள்.
அவர்களால் அந்த பைகளில் இருந்து அதனை தெரிவு செய்து எடுக்க முடியாது. மக்கள் ஒரு பை உருளைக்கிழங்கை வாங்கும்போது, அதன் அளவு சுமார் 700-1000 கிராமாகும்.
அத்தகைய உருளைக்கிழங்கு இருந்தால், அதனை அகற்றி விடுங்கள். நுகர்வோர் பச்சை உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை “கடும் அவதானம்” செலுத்தப்பட வேண்டிய நிலைக்கு அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, மத்திய, கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அதிக கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இதேவேளை மேலும், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் இவ்வாறு வெப்பநிலை உயர் மட்டத்தில் இருக்கும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
போதுமான அளவு நீர் அருந்துதல், நிழலான பகுதிகளில் முடிந்த அளவு ஓய்வெடுத்தல், கடுமையான வெளிப்புறச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சை எழுதியப் பின்னர் மீண்டும் வீடு திரும்பிய மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பிபிலை பேருந்துசாலைக்கு சொந்தமான பேருந்தில் இருந்தே அந்த மாணவி தவறி விழுந்துள்ளார். இதனையடுத்து குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் நேற்றும் இன்றும் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் சேவையினை பெற்றுக்கொள்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். குறித்த பணிபகிஸ்கரிப்பானது சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.