இலங்கையின் இளம் வீராங்கனைகளான தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகியோல் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
தருஷி கருணாரத்ன பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்ட போட்டியை பிரதிநிதித்துவப்படுத்த தகுதி பெற்றுள்ளதுடன் தில்ஹானி லேகம்கே பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டிக்காக தகுதி பெற்றுள்ளார்.
ஜூன் 30 ஆம் தேதி உலக தடகள தகுதிக் காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீராங்கனை தருஷி கருணாரத்னே மற்றும் ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லேகம்கே ஆகியோர் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதியை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தருஷி கருணாரத்ன, உலக தடகளத் தரவரிசையில் சாத்தியமான 48 தகுதிச் சுற்றுகளில் 45வது இடத்தைப் பிடித்தார்.
இந்த சாதனை 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈட்டி எறிதல் வீராங்கனை தில்ஹானி லெகம்கே, பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இலங்கையின் உயர்தர தடகள வீராங்கனையாக உருவெடுத்துள்ளார், தற்போது சாத்தியமான 32 தகுதிச் சுற்றுகளில் 26வது இடத்தில் உள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 வீதியின் கிழவன் குளம் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பத்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பனிக்கன் குளம் மாங்குளத்தை சேர்ந்த சுப்பையா சிறிதரன் (வயது-41)என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-09 வீதியின் கிழவன் குளம் பகுதியில் கடந்த 28ம் திகதி பிற்பகல் ஒரு மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்ஃ
விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவுக்கு வந்து ரொம்ப வருடங்களாயிற்று என்று ஆசையாசையாய் பெற்றோரைப் பார்ப்பதற்காக தயாராகி வந்தார் மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் 24 வயது இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார்.
சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் இருந்த மன்ப்ரீத் கவுர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தைப் பார்க்க உற்சாகமாக இருந்தார்.
விமானத்தில் ஏறும் முன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படும் கவுர், எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானத்தில் ஏறினார். ஆனால், தனது சீட் பெல்ட்டை அணிய முயன்ற போது, இருக்கையில் மயங்கி விழுந்துள்ளார்.
விமானம் மெல்போர்னில் போர்டிங் கேட்டில் இருந்த போது, கேபின் குழுவினர் மற்றும் அவசர சேவைகள் அவருக்கு உதவ விரைந்தன. ஆனால், அவர் சரிந்து மயங்கி விழுந்த இடத்திலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அவரது இறப்புக்கான காரணம் காசநோய் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கவுர் சமையல்கலை படிக்கும் அதேநேரத்தில், ஆஸ்திரேலியா போஸ்டில் பணிபுரிந்து வந்தார். மார்ச் 2020ல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற கவுர், தனது பெற்றோரைப் பார்க்க இந்தியாவுக்கு பயணப்பட்ட நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், கவுரின் குடும்பத்திற்கு உதவ GoFundMe பக்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு உதவும் வகையில் கவுரின் நண்பர்கள் அதில் நிதிதிரட்டி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை வீதித் தடுப்பில் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-06 வீதியில் குருநாகலையில் இருந்து தம்புள்ளை நோக்கி பயணித்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்போது ஒருவர் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் லக்கல மற்றும் மாத்தளை பிரதேசத்தில் வசித்து வந்த 29 மற்றும் 40 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, குருநாகல்-புத்தளம் வீதியின் கெலிமுனை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த விபத்து தொடர்பில் டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஊட்டி அருகே 5 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31). கூரியர் நிறுவன ஊழியரான இவருக்கு ரம்யா (21) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. பிரேம் தினமும் காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து வேலைக்கு சென்று விட்டு இரவு 9 மணிக்கு திரும்புவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி காலை 9 மணிக்கு பிரேம் வேலைக்கு சென்று உள்ளார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குழந்தையின் கன்னம் சிவந்த நிலையில் இருந்தது.
அதோடு நீண்ட நேரமாகியும் குழந்தையிடம் எந்த அசைவும் இல்லை. இதனால் பயந்து போன ரம்யா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் சாவில் சந்தேகம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த ரம்யா, இது குறித்து ஊட்டி மத்திய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த சில நாட்களாக குழந்தையின் அழுகை சத்தத்தை தாங்க முடியாததால் பிரேம் அவ்வப்போது குழந்தையை அடித்து வந்துள்ளார். அதற்கு ரம்யா எதிர்ப்பு தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ரம்யா துணி துவைத்துக் கொண்டிருந்த போது, குழந்தை அழுது கொண்டே இருந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரேம் குழந்தையை அடித்துள்ளார். இதில் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடிபட்டு ரத்தம் உறைந்து குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதையடுத்து கொலை வழக்காக மாற்றி போலீசார் பிரேமை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பிரேமுக்கு மனநல பாதிப்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையின் இறப்பை தாங்க முடியாத சோகத்தில் ரம்யா கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
காளையார்கோவில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் 23 வயதில் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் இரட்டையர்கள்.
இருவருமே பட்டதாரிகள். அதே போல் இருவரும் மஞ்சு விரட்டு, மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச்செய்யும் வகையில் மாடுகளை வளர்த்து, உரிய பயிற்சியும் அளித்து வந்தனர்.
இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான அரண்மனை சிறுவயல் கிராமத்தில் வசித்து வருபவர் வல்லவன் மகன் ராஜேஷ். சாத்தரசன்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 19 வயது சிவாஜி மகன் நவீன்.
கிளுவச்சி கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயது முத்துமணி மகன் அஜய். இவர்களுடன் சிவகங்கை மாவட்டத்திற்குள் நடைபெறும் மஞ்சு விரட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வென்று பரிசுகளை பெற்று வந்தனர்.
அப்போது அவர்கள் தங்கள் மாடுகளை முதலில் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜூன் 12ம் தேதி பனங்குடி கோவில் திருவிழாவில் மஞ்சு விரட்டில் தங்களது மாடுகளை சகோதரர்கள் அவிழ்த்து விட்டனர்.
அந்த மாடுகளை சிவகங்கை அருகே புதுப்பட்டி யில் வசித்து வருபவர் சக்தி என்பவர் மகன் மதன். அவனது நண்பர்கள் மாட்டை பிடித்ததாகவும் இதில் இரு தரப்பினரிடையே வாய் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
முன்விரோதம் காரணமாக நேற்று இரவு 10 மணிக்கு மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேரும் 3 இருசக்கர வாகனங்களில் சென்று ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.
3 பேரையும் தாக்க முற்படும்போது மூவரும் தப்பி ஓடிவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தனது மனைவியை அனைவரின் முன்னிலையிலும் போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். இவர் ஹாசன் நகர் காவல் நிலையத்தில் காவலராக லோக்நாத் பணியாற்றி வந்தார். இவருக்கும் மம்தாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
லோக்நாத்திற்கும், மம்தாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த நான்கு நாட்களாக அவர்களுக்குள் மோதல் இருந்துள்ளது.
இந்த நிலையில் தனது கணவர் லோக்நாத் மீது புகார் அளிக்க ஹாசன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மம்தா இன்று வந்தார். அப்போது அங்கு வந்த அவரது கணவர் லோக்நாத், மம்தாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால், தனது மம்தாவை சரமாரியாக குத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைவரின் முன்னிலையிலும் பெண் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரத்த வெள்ளத்தில் மம்தா சரிந்து விழுகவும், லோக்நாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
அங்கிருந்த காவலர்கள், மம்தாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி மம்தா அங்கு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஹாசன் நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான லோக்நாத்தை தேடி வருகின்றனர்.
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனைவரின் கண் முன்னே மனைவியை அவரது கணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி, அமெரிக்காவையே அதிர செய்துள்ளார். இதற்காக அவர் சொன்ன காரணம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் லெபனான் பகுதியைச் சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (47). இவர் தன்னுடைய கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கான பின்னணி அதிர்ச்சி அடைய வைக்கிறது. இவருடைய கணவரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பீட்டர்ஸ், பிறந்தநாள் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கணவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்திருக்கிறார். ஆனால், அதனை பாராட்டி அவரது கணவர் எதுவும் கூறவில்லை.
இதனால், ஆத்திரத்தில் இருந்த மனைவி பீட்டர்ஸ், கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்து விட்டார். அதனை அவருடைய கணவர் வாங்கி குடித்தபோது, முதலில் சுவை வேறுபட்டு இருந்துள்ளது. எனினும், அதனை புறந்தள்ளி விட்டு சோடாவை குடித்து முடித்திருக்கிறார்.
சில வாரங்கள் கழித்தே அதன் விளைவுகள் தெரிய வந்தன. அவருக்கு வறண்ட தொண்டை, பேதி மற்றும் வாந்தி ஏற்பட்டு உள்ளது. மனைவி விஷம் கலந்து கொடுத்திருக்கிறார் என அவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சிசிடிவி காட்சியை சந்தேகத்தின் பேரில் பார்த்த போது, பிரிட்ஜில் இருந்து மனைவி சோடாவை எடுப்பதோடு, வீட்டில் இருந்த களைக்கொல்லி பாட்டிலையும் எடுத்து செல்லும் காட்சியை பார்த்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் இரண்டு பொருட்களையும் எடுத்த இடத்தில் பீட்டர்ஸ் வைத்து விட்டார்.
அவர் மனைவியிடம் சென்று, தனக்கு உடல்நிலை சரியில்லை என கூற முயன்றிருக்கிறார். ஆனால் அதற்குள் மனைவியோ, உங்களுக்கு கொரோனா வந்திருக்க கூடும். அதனால், குழந்தைகளிடம் இருந்து தள்ளி இருங்கள் என கூறியிருக்கிறார்.
இதனை கேட்டு கணவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். இதன்பின் ஒரு முடிவுக்கு வந்து, போலீசில் அவர் புகார் அளித்து உள்ளார். அவர்கள் வந்து பீட்டர்ஸை கைது செய்து சென்றனர். போலீசார் விசாரணையில் சோடாவில் விஷம் கலந்து கொடுத்ததற்கான காரணம் வெளியாகி அதிர செய்துள்ளது.
அவருக்கு சட்டவிரோத தொடர்பு ஏதும் உண்டா? அல்லது கணவரான தன்னுடைய ரூ.4 கோடி காப்பீட்டு தொகையை பெறுவதற்காக இதனை அவர் செய்திருக்கிறாரா? என தனக்கு தெரியவில்லை என கணவர் கூறுகிறார்.
சமீபத்தில், வங்கியில் அவர்களுக்கான தனி கணக்கில் பீட்டர்ஸ் செலுத்தும் பணமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனையும் அவருடைய கணவர் கவனித்து போலீசாரிடம் கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.
அவுஸ்திரேலியாவிலிருந்து(Australia) 4 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரை பார்க்க இந்திய செல்லவிருந்த பெண் ஒருவர் விமானம் புறப்படும் முன் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்திலேயே குறித்த 24 வயதுடைய இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய வம்சாவளி பெண்ணான மன்ப்ரீத் கவுர் பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவுஸ்திரேலியாவில் சமையல் கலையை கற்க சென்றுள்ளதோடு, படிக்கும் போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டு மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் எறியுள்ளார்.
இதன்போது விமானத்தில் ஏறி அவர் ஆசன பட்டியை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இவர் காசநோயின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் மாணவிகள் தங்கி இருந்த இல்லம் ஒன்றில் அவர்கள் குளிக்கும் காட்சிகள் பதிவானதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் பிரதேச செயலக அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பெண் பிள்ளைகள் தங்கி இருக்கும் இல்லம் ஒன்றின் வெளிப்புறப் பாதுகாப்புக்காக சிசிடிவி கமரா பொருத்தப்பட்டுள்ளது.
குறித்த கமராக்களில் பெண் மாணவிகள் குளிக்கும் பகுதியின் சில பகுதிகள் பதிவாகியுள்ளமை தொடர்பிலும் வேறு சில குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி அந்தப் பகுதிப் பிரதேச செயலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிகாரிகள் குறித்த இல்லத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.
பியகம, மல்வான பிரதேசத்தில் பெண் ஒருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கொஸ்கொட பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதுடைய நபரொருவரே நேற்று (01) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் சில நாட்களுக்கு முன்னர், பியகம- மல்வான பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
நவந்தகல பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தங்கியிருந்த வாடகை வீடொன்றினுள் அவரது முறையற்ற காதலி என கூறப்படும் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொட மற்றும் பியகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் ஜெட் ஒன்றை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பிரபல மாடல் அழகி பியூமி ஹன்சமாலி(Piumi Hansamali) தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத சொத்து குவிப்பு விசாரணைப் பிரிவில் முன்னிலையாகி, அங்கிருந்து வெளியேறிச் சென்ற போது அவர் இதனை ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
தம்மிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனவும் வேறும் ஓர் நாளில் விசாரணை நடத்தப்படும் என கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்து தாம் வரும் ஈட்டியதாகவும் வேறும் எந்தவொரு வியாபாரமும் தமக்கு கிடையாது எனவும் பியுமி தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை உறுதி செய்யக்கூடிய பற்றுச் சீட்டுக்கள் உள்ளிட்ட சுமார் 25000 ஆவணங்களுடன் தாம் விசாரணைகளுக்கு முன்னிலையானதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் பாரியளவில் சொத்துக்களை குவித்துள்ளதாக பியுமி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் வீடொன்று திடீரென தீப்பற்ரி எரிந்த நிலையில்தொட்டிலில் படுத்துறங்கிய குழந்தை கடவுள் அருளால் காப்பாற்றப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவில் உள்ள கண்ணகிநகர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாயார் மதிய உணவு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியில் சென்று மீன் வெட்டிக் கொண்டிருந்தபொழுது வீடு தீ பிடித்துள்ளது.
இந்நிலையில் திடீரென வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததை அவதானித்த பெண் ஓடிச் சென்று தொட்டிலில் படுத்துறங்கிய குழந்தையை தூக்கிக் கொண்டார்.
அவரது கூக்குரலை கேட்டு ஓடிவந்த அயலவர்கள் மற்றும் உறவினர்களின் துணையுடன் வீட்டில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்த முயன்ற பொழுதும் வீடு முற்றாக எரித்துள்ளது .
இதன் போது வீட்டில் இருந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பணம், தொலைபேசி, 2 மீன் பிடிவலைகள், உடைகள் மற்றும் வீட்டில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் முரல் மீனின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் குருநகர் 5மாடி குடியிருப்பினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய மீனவர் ஆவார்.
மீனவர் நேற்று கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் மீனவரின் கழுத்து பகுதியில் முரல் மீன் தாக்கியுள்ளது.
உயிரிழந்த மீனவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.