பலாப்பழம் பறித்த தாயை தாக்கிய மகன் தப்பியோட்டம்!!

மொனராகலை, தொம்பகஹவெல பிரதேசத்தில், இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாயை அவரது மகன் பலமாகத் தாக்கி காயப்படுத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த தாயார் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தாக்குதலுக்குள்ளான தாயாரும் அவரது கணவரும் தங்களது வீட்டையும் காணியையும் மகனிடம் ஒப்படைத்து சிறிய வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான தாயார் இரவு உணவு தயாரிப்பதற்காக, மகனின் காணியிலிருந்த பலா மரமொன்றிலிருந்து பலாப்பழம் ஒன்றை பறித்துள்ளார். இதன்போது, கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

சம்பவத்தையடுத்து, மகன் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு!!

இன்று (01) நள்ளிரவு முதல் திட்டமிட்டபடி பேருந்து கட்டணத்தை 5.07% குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி, குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 28 ரூபாவாக நிர்நயிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின்படி கட்டணங்கள் எவ்வாறு திருத்தப்படும் என்பதை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இடம்பெற்றது.

இதற்கமைய மநாட்டில் கலந்து கொண்ட தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

ஒக்டேன் 92 பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 ரூபாயால் குறைந்து புதிய விலை 344 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 ரூபாயால் குறைந்து புதிய விலை 379 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாயால் குறைந்து 355 ரூபாவாக புதிய விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டர் இலங்கை வெள்ளை டீசல் 317 ரூபாவாகவும், ஆகவும், ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் 202 ரூபாவாகவும் காணப்படுகிறது.

காதலித்த பெண்ணே மனைவி ஆனாலும் கைகூடாத சந்தோஷம்.. மூன்றே மாதத்தில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

காதலிச்சவளே மனைவியாக அமைவது எல்லாம் வரம் தான். ஆனாலும் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக சதீஷூக்கு செல்லவில்லை. மனைவியின் தாயார் இந்த ஜோடியை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிய வருகிறது.

திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் நந்தினி. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.

இவர் நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, மனைவி நந்தினி கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார்.

இந்நிலையில், சதீஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வர முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் வேதனை அடைந்த சதீஷ் மனைவிக்கு வீடியோ கால் செய்து, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போனை அணைத்து விட்டார். அதிர்ச்சியும், பதட்டமும் அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் சதீஷ் வீட்டிற்கு உடனடியாக சென்று பார்த்த போது, வீட்டின் கதவு உட்புறமாக பூட்டி கிடந்தது.

எவ்வளவோ தட்டியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி நந்தினி கதறி அழுதார்.

இது குறித்து உடனடியாக அரும்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

நயாகராவில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இந்திய இளைஞர் : கதறும் பெற்றோர்!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் அப்புவால் கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சரண்தீப் சிங். இவர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் அப்புவால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்துள்ளார்.

அவர், சரன்தீப்பின் தந்தையான ஜோரா சிங்கிடம், கடைசியாக உங்கள் மகனிடம் எப்போது பேசினீர்கள் எனக் கேட்க, அவர் மகனை மொபைலில் அழைத்தார். சரன்தீப்பின் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவே, அவர் சரன்தீப்புடன் தங்கியிருந்த நண்பர் ஒருவரை அழைத்து விசாரணை நடத்தினார்.

அந்த நண்பர், சரன்தீப் கடந்த வியாழனன்று நயாகரா நீர்வீழ்ச்சிக்கு சென்றதாகவும், அதற்குப்பின் வேலைக்கு செல்வதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார். சரன்தீப் தான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பவேயில்லை.ஆகவே, சரன்தீப்பின் மாமா, நயாகரா நீர்வீழ்ச்சி எல்லைக்குட்பட்ட போலீசாரை தொடர்பு கொண்டு அவரைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

ஆனால், அவர்கள் அவருக்கு சரன்தீப் நயாகரா நீர்வீழ்ச்சியில் குதித்து, தன் உயிரைத் தானே மாய்த்துக் கொண்டதாகவும், அவர் தன் மொபைலை கீழே வைத்துவிட்டு நீர்வீழ்ச்சியில் குதிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தகவல் அறிந்து சரன்தீப்பின் குடும்பத்தினர் கண்ணீர் வடித்துவரும் நிலையில், சரன்தீப்புடன் முன்பு வேலை செய்த 4 இளைஞர்கள் அவருக்கு தொந்தரவு கொடுத்துவந்துள்ளனர்.

இதனை மகன் தன்னிடம் கூறியதாக தெரிவித்த சரன்தீப்பின் தாயான பிந்தர் கௌர், தன் மகனுடைய மரணம் தொடர்பாக விசாரணை நடத்தவேண்டும் என கனடா போலீசாரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தளத்தில் காட்டு யானையால் நேர்ந்த விபத்து : ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழப்பு!!

புத்தளம் (Puttalam) 7ம் கட்டைப் பகுதியில் வீதியில் நின்ற காட்டு யானையைக் கண்டதில் முச்சக்கர வண்டியைத் திருப்ப முற்பட்ட போது வேனில் மோதுண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

வீதியைக் கடந்த காட்டு யானையைக் கண்டு, திரும்ப முற்பட்ட போது,​​புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது மோதியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியினூடாக தினமும் காட்டு யானைகள் நடமாடுவதால் கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதினாலே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த வீதியில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் இடம்பெற்று பல உயிர்கள் பலியாகியுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் இராஜாங்கனை சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த (50) வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!!

பலத்த காற்று மற்றும் கடல் ​கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவநிலை தீவிரமாக இருப்பதால் அரபிக் கடல் பகுதி மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்று திணைக்களம் குறிப்பிடுகிறது.

இந்த அறிவிப்பு அரபிக் கடல் பகுதியில் உள்ள நெடுநாள் மீன்பிடி கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்திற்காக வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் காற்று இடைக்கிடையில் 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு முன்னெடுக்கவுள்ள விசேட நடவடிக்கை!!

நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயத்தை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு விசேட திட்டமொன்றை முன்னெடுக்க உள்ளது.

அந்த வகையில், நாட்டில் எலிக்காய்ச்சல் நோய் பரவும் அபாயமுள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள பாடசாலைகள் மற்றும் வீடுகளுக்குச் சென்று நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சு அறிவுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், இன்று (01) முதல் சுகாதார அமைச்சினால் சுமார் 1,200 சுகாதார பரிசோதகர்கள் மற்றும் 3,500 குடும்ப சுகாதார செவிலியர்கள் பணிக்கு அமர்த்தப்படவுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 5,000 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருந்தை உட்கொள்ளாத 100 நோயாளர்கள் ஆண்டுதோறும் உயிரிழப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற தொடருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்!!

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து பயணித்த தொடருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தெமட்டகொடை பகுதியில் வைத்து நேற்று (30) மாலை 6.40 மணியளவில் இந்த கல்வீச்சு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதிக பயணிகளுடன் சென்றுக்கொண்டிருந்த தொடருந்து மீது கல் வீசி தாக்கியதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சில பயணிகள் கண்ணாடி துண்டுகளால் தாக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த தாக்குதலை பொருட்படுத்தாமல் தொடருந்து தொடர்ந்தும் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த ஈ.பி.டி.பி அமைப்பாளர்!!

யாழில் எரியூட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கபப்ட்டிருந்த ஈ.பி.டி.பி.யின் அமைப்பாளர் சிகிற்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மருதங்கேணியைச் சேர்ந்த 44 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளராகவும், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் இயக்குனருமாக செயற்பட்டு வந்தவராவார்.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, வத்திராயன் பகுதியில் தீக்காயங்களுக்குள்ளான நபர் சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) இரவு உயிரிழந்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் (20) அன்று இரவு நபரொருவர் எரியூட்டப்பட்ட நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர், தீக்காயத்திற்கு உள்ளானதற்கான காரணம் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அதோடு சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவுமில்லை . இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் மரணம்!!

இலங்கை தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். 91ஆவது வயதில் இவர் இயற்கை எய்தினார்.

இலங்கையில் மிகவும் அரசியல் அனுபவம் வாய்ந்த தமிழ்த் தலைவரான இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

வவுனியா ஓமந்தைப் பொலிசாரால் பூசாரி உட்பட 5 பேர் கைது!!

ஓமந்தை, விளாத்திக்குளம் பகுதியில் வைத்து பூசாரி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிசார் இன்று (30.06) தெரிவித்தனர்.

வவுனியா, ஓமந்தைப் பொலிசாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்து விளாத்திக்குளம் பகுதியில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிகையில் ஈடுபட்ட போது புதையல் தோண்டுவதற்கு முற்பட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பகுதியில் இருந்து வருகை தந்த பூசாரி மற்றும் வவுனியாவின் தவசிகுளம், ஓமந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நால்வருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த 5 பேரையும் வவுனியா நீதிமன்றில முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

 

வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்பு!!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் நேற்று இரவு (29.06) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையில் இருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கி சென்றுள்ளார்.

இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு செவன்ற பொலிசார் அச் சடலத்தை மீட்டனர். வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தர்.

வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏறடபடுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்தும் வவுனியா பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 355 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாவாகும்.

420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379ரூபாவாகும்.

377 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

இதேவேளை, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.

வவுனியாவில் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய இளைஞன் கயிறு இறுகி மரணம்!!

வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுப் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞன் இன்றைய தினம் தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டார். தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் குறித்த கயிறு இறுகி மரணித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாமடுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

அலுவலகத்தின் மாடியிலிருந்து குதித்து இளம்பெண்… சிசிடிவியை பார்த்து அதிர்ந்த போலீசார்!!

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், தான் பணிபுரிந்து வரும் அலுவலக கட்டிடத்தில் மாடியில் இருந்து கீழே இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்டார்.

மாடியில் இருந்து குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, தனது செல்போனில் பேசிக்கொண்டே 27 வயதுடைய இளம்பெண் ஓய்வின்றி நடந்துக் கொண்டிருப்பது சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருக்கிறது.

மத்திய பிரதேசம் இந்தூர், கனடியா போலீஸ் வட்டத்தில் 27 வயது பெண் ஒருவர் தனது அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அவள் செல்போனில் யாரிடமோ பேசுவதைக் காட்டுகிறது. அவள் ஆரம்பத்தில் மாடியின் கைப்பிடிச் சுவர் மீது ஏறி நிற்கிறாள். பின்னர் அதிலிருந்து இறங்கினாள். பின்னர், அவள் மீண்டும் கைப்பிடிச் சுவர் மீது ஏறி குதித்தாள்.

யாரோ தொலைபேசியில் அவளை தொந்தரவு செய்து மிரட்டுவதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்தவர் கனாடியா கிராமத்தைச் சேர்ந்த புல்புல் சந்தேலா என அடையாளம் காணப்பட்டார்.

இச்சம்பவம் நேற்று காலை 11:15 மணியளவில் நிகழ்ந்தது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் காலை 11:15 மணியளவில் நிகழ்ந்தது மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவர் தற்கொலை செய்து கொண்டதாக கனடியா காவல் நிலையப் பொறுப்பாளர் கே.பி.யாதவ் தெரிவித்துள்ளார், ஆனால் தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்கொலை முடிவை எடுப்பதற்கு முன் புல்புல், தனது செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருப்பது வீடியோவில் தெளிவாகத் தெரிந்தது. அவரது செல்போன் கைப்பற்றப்பட்டு, அவரது அழைப்பு விவரங்கள், யாரிடம் பேசிக் கொண்டிருந்தார் என்று போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

நான் பைத்தியக்கார காதலன்.. ஸ்டேட்டஸ் வைத்து விட்டு இளைஞர் எடுத்த விபரீத முடிவு!!

தன்னுடைய அண்ணியின் தங்கையைக் காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் ஒருவர், காதல் தோல்வியால், ‘நான் பைத்தியக்கார காதலன்’ என்று வாட்ஸ்-அப் பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(22). இவர் தனது சொந்த அண்ணியின் தங்கையை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளவும் விரும்பிய நிலையில், சந்தோஷின் காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனஉளைச்சலில் இருந்த சந்தோஷ், வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், நான் ஒரு பைத்தியக்கார காதலன் என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன் என்ற தனது புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த முட்கல் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று, சந்தோஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.