இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27.06.2024) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காலி, இமதுவ பிரதேச செயலகப் பிரிவின் ஹட்டங்கல கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 11 வயது மாணவன் தன் குடும்ப சுமையை தன் தோளில் சுமக்கும் செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நிம்சர ரவிந்து பிரபாத் என்ற 11 வயது சிறுவன் தொரபே மேல் நிலைப் பாடசாலையில் 6ஆம் வகுப்பில் கற்று வரும் நிலையில் பாடசாலை படிப்பை விட அவருக்கு நிறைய வேலை இருப்பதாக கூறப்படுகின்றது.
நிம்சரவின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு மரத்தில் இருந்து விழுந்தமையினால் ஒரே இடத்தில் முடங்க நேரிட்ட நிலையில் குடும்ப சுமைகளை அம்மா ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் துரதிர்ஷ்டவசமாக, சில மாதங்களுக்கு முன்பு, அவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவரது காலை இழக்க வேண்டியிருந்தது. இப்போது நிம்சரவின் அப்பா மட்டுமின்றி அம்மாவும் ஒரே இடத்தில் முடங்கியுள்ளனர்.
தற்போது 11 வயது நிம்சர அப்பா, அம்மாவின் அனைத்து வேலைகளையும் செய்து அவர்களை பராமரித்து வருகின்றார். நிம்சரவின் பெற்றோர் இருவருக்கும் ஊனமுற்றோர் உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
அந்த பணத்தில் நிம்சர குடும்பச் சுமைகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு குடும்பத்தை தாங்கி வருகின்றார். எத்தனை தடைகள் வந்தாலும் பாடசாலை செல்வதை நிறுத்துவதில்லை.
அதிகாலையில் எழுந்து அப்பா, அம்மா செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்து, உணவு சமைத்து விட்டு பாடசாலைக்கு சென்று வருகின்றார். இந்த நிலையி்ல நிம்சரவின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காலி மாவட்ட செயலாளர் தர்மசிறி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு 3 வருட சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
2015 ல் தமது டிபெண்டர் வாகனத்தின் மூலம் இளைஞர்கள் சிலரை கடத்தி தாக்குதல் நடாத்திய குற்ற வழக்கிலேயே இந்த தீர்ப்பு ஹிருணிகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான 18 குற்றச்சாட்டுகள் கீழ் ஹிருணிக்கா குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தெமட்டகொட பிரதேசத்தில் தமது டிபென்டர் காரில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்றதாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட சந்தேகநபர்கள் குழுவிற்கு எதிராக பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் மேல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஹிருணிகா பிரேமச்சந்திரவின் ஆதரவாளர்கள் 8 பேர் நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அதற்கமைய, அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் (Colombo) அலறி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் கண்காணிப்பு கமராவை செலுத்திய குற்றச்சாட்டில் இரு இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்கள் செலுத்தியது ஒரு பறக்கும் பந்து வகை விளையாட்டுப் பொருள் என தற்போது தெரியவந்துள்ளது.
கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள அலறி மாளிகை வளாகத்துக்குள் ட்ரோன் போன்ற பொருளொன்றை செலுத்திய குற்றச்சாட்டில் இரு இந்தியர்கள் கடந்த திங்கட்கிழமை (24.06.2024) கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து, அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பறக்கும் பந்து வகை விளையாட்டுப் பொருள் ஒன்றே அலறி மாளிகை வளாகத்துக்குள் பறக்க விடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தவறான ஊடக அறிக்கைகள்
எவ்வாறாயினும், விசாரணைகள் இன்னும் நிறைவு பெறாததால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சமூக வலைத்தளங்களில் இந்த சம்பவம் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாக தவறாக கருதப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த சம்பவம் எந்த விதமான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் இதனை ஒரு அச்சுறுத்தலாக கருதி வெளிவரும் ஊடக அறிக்கைகள் தவறானவை எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.
நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலகூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (26) இரவு நுவரெலியா பிளாக்பூல் ருவன்எலியாவைச் சேர்ந்த 71 வயதுடைய முதியவர் ஒருவரின் சடலமும், இன்று (27) ஆரியபுர பொகவந்தலாவையைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
மலசல கூடத்தில் இருவர் விழுந்து கிடந்ததை அவதானித்த பொதுமக்கள் 1990 அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்கு தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்தவர்கள் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 3 பிள்ளைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலை செய்யப்பட்ட பெண் பின்லாந்தில் பிரபல யூடியூப் தளத்தினை நடத்தி வந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண் தனது குடும்பத்தினருடன் நீண்ட காலமாகப் பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களின் வீட்டிற்குச் சென்ற அயலவர் ஒருவர் குறித்த பெண் சடலமாக இருந்ததை அவதானித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து அந்நாட்டு பொலிஸாரால், பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மீனா, தேஜ்வீர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இந்த காதலை மீனாவின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. தொடர்ந்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த எதிர்ப்பையும் மீறி, கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஜியாபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.இந்நிலையில் மீனாவின் தம்பி சச்சின் (வயது 21) மீனா, தேஜ்வீர் இருவரையும் வாரணாசியில் உள்ள லாலா வரீகம் சந்த் ஜெயின் பூங்காவிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி இருவரும் சென்றனர்.
அப்போது சச்சினுடன் மீனாவின் தாய் மாமன் மகன் ராகுலும் வந்துள்ளார். இருவரும் தம்பதியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தன்வீரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விசாரணை நடந்து வருவதாக ஜிந்த் மாவட்ட எஸ்பி மக்சூத் அகமது தெரிவித்தார். தேஜ்வீரின் தாய் மாமன் மகேந்தரின் மகன் வீரேந்தர் மற்றும் அவரது தாய்வழி அத்தை குந்திதேவி உட்பட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிந்த் மாவட்டம் தாரியாவலி கிராமத்தைச் சேர்ந்த சச்சின், ராகுல் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் 11 வயது மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது 11 வயது மகள் கனிஷ்கா, புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வந்தார்.
இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு கனிஷ்கா சென்று இருந்தார். இடைவேளையின் போது வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவி, திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை மீட்டு அருகில் உள்ள வடிவம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தியதில், மாணவிக்கு ஏற்கனவே இதய கோளாறு இருந்து வந்ததும், அதற்காக ஆந்திராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
முல்லைத்தீவு மாங்குளம் ஏ9 வீதியில் நேற்று முன்தினம் (25) விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த கோரவிபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரே உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் பேருந்து சாரதியான 38 வயதான குணசீலன் லோகேஸ்வரன், மற்றும் சின்னத்தம்பி விசயரத்தினம், பாலசுப்பிரமணியம் பார்த்தீபன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து, முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன்போது சொகுசு பேருந்துடன் பாரஊர்தி ஒன்று மோதி விபத்து இடம்பெற்ற நிலையில் இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (2024.06.27) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 703,298 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 24,810 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 198,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,750 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 181,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,710 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் விம்பிள்டன் பள்ளி விபத்தில் குற்றச்சாட்டு இன்றி தப்பித்த ஓட்டுநர் மீது உயிரிழந்த பள்ளி சிறுமிகளின் குடும்பத்தினர் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவின் விம்பிள்டனில் ஸ்டடி ப்ரெப் பள்ளி வளாகத்துக்கு வெளியே கேம்ப் ரோட்டில் உள்ள கடந்த ஆண்டு ஜூலை 6ம் திகதி நடந்த விபத்தில் நூரியா சஜ்ஜாத்(Nuria Sajjad) மற்றும் செலினா லாவ்(Selena Lau) என்ற 8 வயது பள்ளி சிறுமிகள் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து மோசமான முறையில் வாகன ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக விபத்து ஏற்படுத்திய லேண்ட் ரோவர் காரை ஓட்டிய 46 வயது பெண் கிளாரி ஃப்ரீமண்டில்(Claire Freemantle) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விபத்து தொடர்பான நீண்ட விசாரணையின் முடிவில், 46 வயதான பெண் ஓட்டுநர் மீது ஆபத்தான முறையில் காரை ஓட்டி மரணம் ஏற்படுத்தியது” தொடர்பான குற்றச்சாட்டுகள் இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த முடிவு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரால் கடும் கோபத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 2 சிறுமிகளின் பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், மேலும் ஆழமான விசாரணை வேண்டும் என்றும் விமர்சித்துள்ளனர்.
ஒரு அறிக்கையில், தங்கள் மகள்களின் மரணத்திற்கு ஓட்டுநரின் அலட்சியமான செயலே காரணம் என்று பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நயோமி அமரசிங்க என்ற இளம் பெண் இலங்கையின் முதல் பெண் மாலுமி என்ற அங்கிகாரத்தை பெற்றுள்ளார். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பயிற்சி நெறியை முடித்ததன் பின்னர் அவர் இந்த அங்கிகாரத்தை பெற்றுள்ளார்.
ஊடகவிலாளராக வர ஆசைப்பட்ட நயோமி அமரசிங்க, வேலை தேடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக பல்வேறு பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினரின் ஆட்சேபனைகள் மற்றும் பாலினத் தடைகளைத் தாண்டி மஹாபொல துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அகாடமியில் தனது பயிற்சியை நிறைவு செய்தார்.
இதனையடுத்து கார்னிவல் குரூஸ் லைனில் பணி புரிந்த அவர், உலகம் முழுவதும் பயணம் செய்ததுடன், பல நடைமுறை அனுபவங்களையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் captain தரநிலைக்கு உயர்வதே தனது இலக்கு என நயோமி தெரிவித்துள்ளார்.
மேலும் ஆண் ஆதிக்கம் செலுத்தும் துறையில் பாலினத் தடைகளைத் தகர்த்து, இன்று ஒரு அதிகாரியாக மாறியுள்ளார்.
வவுனியாவில் , ஒருபாலினத்தவர் தங்களது உரிமைகளை வலியுறுத்தி, தங்களையும் சக மனிதர்களாக எண்ண வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்து நேற்று புதன்கிழமை (26) நடைபவனியொன்றை முன்னெடுத்தனர்.
இந்த நடைபவனி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, நகர் வழியாக வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தை சென்றடைந்ததோடு நிறைவு பெற்றது.
‘யாழ். சங்கம்’ என்ற பால்புதுமையினத்தவர்களுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நடைபவனியில் சுமார் 50 பேர் கலந்துகொண்டனர்.
இந்த நடைபவனியில் தமது உரிமைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தாமும் உணர்வுகள் கொண்ட மனிதப் பிறப்புக்களே என்பது போன்ற கருத்துக்கள் அவர்கள் இதன்போது முன்வைத்திருந்தனர்.
நான்கு வயது சிறுமியொருவர் விசர் நாய்க் கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
நான்கு வயதாக குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றையதினம் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.
காதல் உறவில் ஏற்பட்ட தகராறில் 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் கண்டி – திகன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த 25ஆம் திகதி இரவு 7.30 மணியளவில் திகன ரஜவெல்ல பிரதேசத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் பல்லேகல பிரதேசத்தில் வசிக்கும் 05 பாடசாலை மாணவர்களை மெனிக்ஹின்ன பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 5 மாணவர்களும் 16 முதல் 18 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மெனிக்கின்ன பொலிஸ் நிலைய பிரதான பரிசோதகர் எம்.டி.சந்திரபால தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.