நீர்கொழும்பில் இருந்து மரதகஹமுல நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
கடவல பிரதேசத்தில் வைத்து, குறித்த முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டமையினால் இந்த விபத்து இடம்பெறுள்ளது.
விபத்தின் போது, முச்சக்கர வண்டியில் பயணித்த குழந்தை உட்பட்ட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்தநிலையில் விபத்துக்கு அதிக வேகமே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினாலேயே, முச்சக்கர வண்டி மின்சார தூணில் மோதுண்டு விபத்து நேர்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி நீடிக்கப்பட மாட்டாது, எனவே குறித்த திகதிக்கு முன்னதாகவே பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கான அறிவுறுத்தல்
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர் மூலமாகவோ, தனியார் விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ அனுப்ப முடியும்.
இதேவேளை தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் அதன் அச்சிடப்பட்ட பிரதியை தங்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208 அல்லது 0112784537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு வினவ முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்து முல்லைதீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிக்கன் குளம் பகுதியில் விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்து நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த அதி சொகுசு பேருந்தின் திருத்த வேலையில் மூவர் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பேருந்து மீது பார ஊர்தி மோதியதில் மூவர் உயிரிழந்துடன் மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
உயிரிழந்த மூவரின் சடலங்களும் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் உள்ளன சம்பவம் தொடர்பில் மாங்குளம் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் 3 வயதான மகன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை படைத்துள்ளார்.
பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில் இவர் சாதனை படைத்துள்ளார்.
இதன்போது குறித்த சிறுவன் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள், உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள், உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனை பொருட்கள் என 1098 உருவ படங்களை அடையாளம் காட்டியுள்ளார்.
மேலும் அவற்றின் பெயர்களை மனப்பாடமாக கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஷம்லான், 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளார்.
சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கி பாராட்டியுள்ளார்கள்.
இந்நிலையில் 3 வயது சிறுவனின் ஞாபகத் திறனையும் அவரது சாதனையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த சிறுவனின் பெற்றோரை வாழ்த்தி பாராட்டினார்கள்.
டி 20 உலகக்கிண்ண தொடரின் வரலாற்று வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணிக்கு அந்நாட்டு மக்கள் பெரும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இன்று இடம்பெற்ற பங்களாதேஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றியீட்டிய ஆப்கான் அணி அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைத்தது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை அந்நாட்டு மக்கள் வீதிகளில் குவிந்து கொண்டாடி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியானது 19 ஆம் நூற்றாண்டில் இருந்து விளையாடப்பட்டாலும், சமீபத்திய ஆண்டுகளில் மட்டுமே அந்த அணி முக்கியத்துவம் பெற்று வருகிறது.
ஆப்கானிஸ்தான் மக்கள் உள்நாட்டு போரின் பின்னர் பாகிஸ்தானில் இருந்து தாய்தேசத்துக்கு திரும்பியபின் அந்த நாட்டுக்கு தனியாக ஐசிசியில் உறுப்புரிமையை பாகிஸ்தான் பெற்றுக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானுடன் எந்த நாட்டு அணியும் கிரிக்கெட் விளையாட முன்வராத போது, தனது நாட்டிற்கு அழைத்து கிரிக்கெட் விளையாடச் செய்து பாகிஸ்தான் ஊக்கமளித்தது.
2001ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிலும் (ஐசிசி), 2003ஆம் ஆண்டில் ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலும் (ஏசிசி) ஆப்கானிஸ்தான் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டது.
ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் விளையாடிய பின்புதான், ஐசிசி முழுநேர உறுப்பினராக ஆப்கானிஸ்தான் அங்கீகரிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தான் வீரர்களின் கிரிக்கெட் திறமை மெருகேறுவதற்கும், கிரிக்கெட் நுணுக்கங்களையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் தேர்ந்த பயிற்சி எடுக்கவும் உதவியாக இருந்தது ஐபிஎல் டி20 லீக் என்பது முக்கியமானது.
ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆஸ்திரேலியா பிக்பாஷ் லீக், பங்களாதேஸ், இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, மேற்கிந்தியத்தீவுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடர்களில் விளையாடுவதற்கும், இடம் கிடைப்பதற்கும் ஐபிஎல் டி20 லீக் பெரிய தளத்தை அமைத்துக் கொடுத்தது.
இதன் தொடக்கமே சர்வதேச தளத்தில் ஜாம்பவான்கள் அணிகளான நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, பங்களாதேஸ் , மேற்கிந்தியத்தீவுகள் அணிகளை வீழ்த்தி அதிர்ச்சியளிக்க முடிந்தது.
ஆப்கானிஸ்தான் அணியின் கிரிக்கெட் வளர்ச்சியில் பல்வேறு கால கட்டங்களிலும் பயிற்சியாளர்கள் குறிப்பிடத்தகுந்த பங்களிப்பு செய்தனர்.
அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் முன்னாள் வீரர் பில் சிம்மன்ஸ், இந்திய பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், மனோஜ் பிரபாகர், அஜய் ஜடேஜா, தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் லான்ஸ் க்ளுஸ்னர், இங்கிலாந்து முன்னாள் வீரர் கிராஹம் தோர்ப், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் யூனுஸ் கான் ஆகியோரின் காலகட்டம் ஆப்கானிஸ்தானுக்கு முக்கியமானதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலகக்கிண்ண தொடரில் சூப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்களில் முதன் முறையாக ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
எனினும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக போட்டி அமைந்திருந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் நிறைவில் 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரகமதுல்லா குர்பாஸ் அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரிஷாட் ஹொசைன் 03 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதேவேளை, போட்டியில் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பங்களாதேஷ் அணிக்கு 19 ஓவர்களில் 114 என்ற வெற்றி இலக்கு டக்வொர்த் லூயிஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் வெற்றியிலக்கான 114 ஓட்டங்களை நோக்கி பதிலெலுத்தாடிய பங்களாதேஷ் அணி 105 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.
பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் நவீன்-உல்-ஹக் மற்றும் ரஷீத் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
இதற்கமைய, 2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தெரிவாகியுள்ளன.
அரையிறுதி போட்டிகளில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும், தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் நிலையில் இன்று (25) விலை குறைவடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
இதனடிப்படையில், இன்றைய (2024.06.25) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 710,538 ரூபாவாக காணப்படுகின்றது.
அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 25,070 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 200,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்க கிராம் 22,990 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுண் 183,850 ரூபாவாக பதிவாகியுள்ளது. 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,940 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் இன்றையதினம் 175,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மா மரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறாக 60 நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து காணப்படுகின்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது.
சாதாரணமாக ஒரு மாவிலையானது 34 சென்ரிமீற்றர் நீளமுடையதாகவே இருக்கின்றது. ஆனால் இந்த மாமர இலையானது சுமார் 60 சென்ரிமீற்றர் நீளமும் 20 சென்ரிமீற்றர் அகலமும் உடையதாக காணப்படுகின்றது.
சாவகச்சேரி டச் வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர இலையே இவ்வாறு வழமைக்கு மாறாக பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் அந்த மா இலையை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்வையிடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழில் பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.
நேற்றைய தினம் தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகக் கூறிய சாரதி, மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது மாணவியிடம் மோட்டார் சைக்கிள் ஓடக் கற்றுத் தருவதாகக் கூறி, மாணவியை முன் இருக்கையில் அமர்த்தி , மாணவியிடம் பாலியல் ரீதியான சேட்டை புரிந்துள்ளார்.
வீடு திரும்பிய மாணவி இது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, பெற்றோரால் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதனையடுத்து முச்சக்கர வண்டி சாரதியைக் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் புதிய நடைமுறையை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விரைவாக விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகளை அறிவிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அகதி அந்தஸ்து கோரிக்கையை பரிசீலனை செய்ய இதுவரை 18 மாத காலங்கள் எடுக்கப்படுகின்றன. எனினும் அதனை 9 மாதங்களாக குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக தலைநகர் ஒட்டாவாவில் அறிமுகம் செய்யப்படுவதுடன், விரைவில் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் Quebec மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட்டினுக்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
நவகமுவ பிரதேசத்தில் தனது காதலனுடன் ‘பேய் மாளிகை’ பார்க்கச் சென்ற இளம் பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிறிதொரு ஆணுடன் சென்றபோதே கணவர் தாகுதல் மேற்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மனைவியை பிடிக்க சவபெட்டியில் காத்திருந்த கணவன்
பெண் தனது காதலனுடன் பேய் மாளிகை பார்க்கச் சென்றுள்ள நிலையில், அங்கு கணவன் சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்துக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது, 21 வயதுடைய மனைவியைத் தாக்க முயன்ற கணவர் உட்பட, மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் இன்று (24) உத்தரவிட்டுள்ளார்.
நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் ட செல்வச்சந்நிதி ஆலயத்தின் சுற்றுச்சூழலில் அமைந்துள்ள மிக்சர் விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட மிக்சரில் பல்லி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 24 ஆம் திகதி அன்று இரவு பொரிந்த நிலையில் காணப்பட்ட பல்லியுடன் மிக்சர் நுகர்வோரிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
பொரிந்த பல்லியுடன் மிக்சர் விநியோகம்
குறித்த பகுதில் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் ஆளுகைக்குட்பட்டதாகும்.
இதனையடுத்து நுகர்வோரினால் வல்வெட்டித்துறை பொதுச்சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்திய நிலையில், அவ்விடத்திற்கு உடனடியாக விரைந்த பொதுச் சுகாதார பரிசோதகரால் பல்ல்லியுடன் விநியோகிக்கப்பட்ட சட்டநடவடிக்கையின் பொருட்டு கைப்பற்றப்பட்டது.
அதேவேளை செல்வசன்னதியானை தரிசிக்க நாளதோறும் பெருமளவு பக்கதர்கள் வந்து செல்லுவதுடன், குழந்தைகளும் வருகை தருகின்றனர். ஆலய சுற்றாலில் உள்ள கடைகளில் தினபண்டங்களை அவர்கள் வாங்கி செல்வதுடன் குழந்தைகளுக்கும் அதனை கொடுக்கின்றனர்.
இந்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இது தொடர்பில் அவதானமெடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் மேலும், விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி நீடிக்கப்பட மாட்டாது, எனவே குறித்த திகதிக்கு முன்னதாகவே பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர் மூலமாகவோ, தனியார் விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ அனுப்ப முடியும்.
இதேவேளை தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் அதன் அச்சிடப்பட்ட பிரதியை தங்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது தொடர்பில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் 1911 அல்லது 0112784208 அல்லது 0112784537 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொண்டு வினவ முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் நிறுத்தாது சென்றமையால் துப்பாக்கிச் சூடு நடத்தி பல இலட்சம் பெறுமதியான மரங்களை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜயசேகர அவர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் அஜந்த பெரேரா உத்தரவின் பேரில்,
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதர் அழகியவண்ண தலைமையில் பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன், பொலிஸ் சார்ஜன்டுகளான ரன்வெல (6158), சிசிர(44736),
பொலிஸ் கொன்ஸ்தாபிள்களான வீரசேன(78448), ஹேரத் (34712), சுப்புன் (28752), சனத் (25523), குமார (20569), நாமல் (95991) மற்றும் சாரதியான திசாநாயக்க (18129) ஆகியோர் அடங்கிய மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர், உடனடியாக செயல்பட்டு ஓமந்தை, பாலமோட்டைப் பகுதியில் நேற்று இரவு (23.06) விசேட கண்காணிப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, மரங்களை ஏற்றி வந்த பிக்கப் ரக வாகனம் பொலிசாரை மோதித் தள்ளும் வகையில் செயற்பட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இதனையடுத்து பொலிசார் குறித்த வாகனத்தை நோக்கி 5 முறை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது வாகனத்தை கைவிட்டு மரங்களை கடத்திச் சென்றவர்கள் தப்பி ஓடியுள்ளனர். குறித்த வாகனத்தை கைப்பற்றிய பொலிசார் அதில் இருந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மரங்களை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழுாய் கிணறு அமைக்கும் தொழில் செய்து வருகின்றார். குறித்த இளைஞர் வவுனியா நகரில் இருந்து வீடு சென்ற போது அவரை வழிமறித்த குழு ஒன்று அவர் மீது போத்தல்கள் மற்றும் தடிகளால் தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன் குறித்த இளைஞனின் வீடட்டிற்குள் நுழைந்து இளைஞனின் தந்தை மீதும் தாதக்குதல் நடத்தியுள்ளது.
காயமடைந்த இருவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, குழாய் கிணறு அமைத்தல் தொடர்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபர் ஒருவர் தனக்கு மிரட்டல் விடுத்ததாக பாதிக்கப்பட்ட இளைஞன் தெரிவித்துள்ளதுடன், அதன் தொடர்ச்சியாக இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதா என்ற கோணத்திலும் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
வவுனியா, மரக்காரம்பளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையுடன் இணைந்த களஞ்சியசாலை ஒன்றில் இன்று (24.06) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
வவுனியா, மரக்காரம்பளை பகுதியில் அமைந்துள்ள அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கு தொழிற்சாலை மற்றும் வீட்டு தளபாடங்களின் களஞ்சியசாலை என்பவற்றை உள்ளடக்கிய தொழிற்சாலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
தொழில்சாலையில் பணிபுரிந்த இருவர் சாப்பாட்டுக்காக வெளியில் சென்ற நிலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தையடுத்து வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் அப் பகுதி மக்களுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நீர்தாரை வீசி நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் தீ விபத்தில் தொழிற்சலை முழுமையாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் தீயில் நாசமாகியுள்து. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து ஈச்சங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பண்டிகைக் காலங்களை இலக்காகக் கொண்டு குறுஞ்செய்தி (SMS) மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (SLCERT) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்ட குறித்த குழு, பல்வேறு வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அனுப்பப்படும் போலிச் செய்திகள் குறித்து பொதுமக்களை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த குழுவின் கூற்றுப்படி, “குறித்த மோசடிகள் நன்கொடைகள், பணப் பரிசுகள், அதிர்ஷ்டக் குலுக்கல்கள் மற்றும் வேலைக் காப்பீடு போன்றவற்றில் சட்டபூர்வமான நிறுவனங்களின் பெயரைப் பயன்படுத்தி ஈடுபடுகின்றன.
இந்நிலையில், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்கள், சமூக ஊடக தளங்கள், குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் மூலம் தனிநபர்களைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றனர்.
பாவனையாளர்கள் செய்தியில் வழங்கப்பட்ட இந்த இணைப்புகளை அணுகுவதன் மூலம், அவர்கள் கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளில் இருந்து தரவுகளை திருடலாம், இது பல்வேறு வகையான நிதி மோசடிகளுக்கு வழிவகுக்கும்” என்று எச்சரித்துள்ளது.
மேலும் அண்மைக் காலங்களில் குறிப்பாக தேசிய மற்றும் மத விழாக்களை மையமாக வைத்து இவ்வாறான மோசடிகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.