பிறந்தநாளில் பரிதாபமாக உயிரிழந்த 10 வயது சிறுமி… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சிக் காரணம்!!

பஞ்சாப் மாநிலம், பாட்டியாலா பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வாங்கப்பட்ட கேக்கை சாப்பிட்டு 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கேக்கில் அளவுக்கு அதிகமான சக்ரீன் எனப்படும் இனிப்புச்சுவை பயன்படுத்தியமையே சிறுமியின் மரணத்திற்கு காரணம் என பொலிஸார் நடத்திய விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த மார்ச் 24ஆம் திகதி சிறுமி தனது 10 வது பிறந்தநாளை கொண்டாடினார். அதற்காக, சிறுமியின் தந்தை பாட்டியாலாவில் உள்ள பேக்கரியில் ஒன்லைன் மூலம் கேக் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

விநியோகிக்கப்பட்ட கேக்கை, சிறுமி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, சிறுமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் வாந்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி, தன் பிறந்த நாளிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த சிறுமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் குறித்து சிறுமியின் குடும்பத்தினர், கேக் ஆர்டர் செய்த பேக்கரி மீது பொலிஸில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆர்டர் செய்யப்பட்ட கேக்கின் மாதிரியை பரிசோதனைக்கு உட்படுத்தி வழக்குப்பதிவு செய்து, பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பொலிஸாரின் விசாரணையிலேயே இவ் விடயம் தெரிய வந்துள்ளது. இதன்படி, பேக்கரி கடை உரிமையாளரை கைது செய்த பொலிஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தர்!!

மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று(23.04.2024) இடம்பெற்றுள்ளது. மின்னேரிய ஹென்யாய பிரதேசத்தைச் சேர்ந்த எச்.கபில பொன்சேகா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நபரொருவருக்கும் உயிரிழந்தவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றிய நிலையில் சந்தேகநபர் கூரிய ஆயுதத்தால் குத்தி குடும்பஸ்தரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாக்கு நீரிணையை கடக்க முயன்றவருக்கு நேர்ந்த கதி!!

தலைமன்னார் (Mannar) முதல் தனுஷ்கோடி (Dhanushkodi) அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீட்டர் தூரம் பாக்கு நீரிணை (Palk Strait) கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்தி கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்தியா மற்றும் இலங்கை அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் வந்தடைந்தனர்.

அங்கிருந்து இன்று அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கினர்.

அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் மீன்பிடித் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் 16 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையான சேலை!!

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை 16 இலட்சம் ரூபாய்க்கு ஏலமிடப்பட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க புங்குடுதீவு கண்ணகியம்மன் தேவஸ்தானத்தின் முத்தேர் இரதோற்சவம் பக்திபூர்வமாக இடம்பெற்றிருந்தது.

இதில் கண்ணகியம்மன், விநாயகர்,முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேகத்தினை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய எம் அம்பாள், உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் பீடத்தில் வீற்றிருந்து முத்தேரேறி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை

இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். அந்தவகையில் கண்ணகியம்மன் தேர்த் திருவிழாவில் அம்மனுக்கு சாத்தப்பட்ட சேலை ஒன்று ஏலத்தில் விடப்பட்டடுள்ளது.

அதில் பக்தர் ஒருவர் அச் சேலையினை 16 இலட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

உலகில் 100 செல்வாக்கு மிக்க நபர்களில் இலங்கை பெண் ரொசன்னா ஃபிளமர் கால்டெராவும் இடம்பெற்றுள்ளார். உலகப்புகழ்பெற்ற த டைம்ஸ் சஞ்சிகையில் இந்த வருடத்திற்கான சமூகத்தில் செல்வாக்கு மிக்க நபர்களில் இவர் தெரிவாகியுள்ளார்.

இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண்ணாக இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது குரல் உலக அளவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெற்றியை ஈட்டியுள்ளதாகவும் த டைம்ஸ் சஞ்சிகை தெரிவித்துள்ளது

அமெரிக்க கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இடையே நடந்த உரையாடலின் பின்னர் டைம்ஸ் சஞ்சிகை ஆண்டின் 100 சக்தி வாய்ந்த நபர்களை வெளியிட்டுள்ளது.

வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன் ஆறு பேர் கைது : பொலிசார் அதிரடி!!

வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்திற்கு வழங்கிய அறிவுறுத்தலுக்கமைவாக வவுனியா பொலிஸார் இன்று அதிகாலை வவுனியா கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக மோசடிகளில் ஈடுபட்டு வருபவர்கள் என அடையாளம் கண்டுகொண்ட ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொண்ட பின்னர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை எதிர்வரும் நாட்களில் கடவுச்சீட்டு காரியாலயம் முன்பாக ஏதேனும் மோசடிகள் இடம்பெறுமாயின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கமான
0718593520 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய் : முல்லைத்தீவில் சோகம்!!

புதுக்குடியிருப்பு – தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு மாதங்களாக வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த தாயொருவர் உயிரிழந்த தனது மகனின் மரணச்சடங்கை வீட்டில் செய்ய முடியாது தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாக தேராவில் குளத்தின் மேலதிக நீரால் அப்பகுதி வீடுகள் நிரம்பியிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மூங்கிலாறு பொதுநோக்கு மண்டபத்தில் உள்ள இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான சூழலில் மக்களின் தொடர்ச்சியான கோரிக்கையினை அடுத்து இந்த நீரினை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை மாவட்ட அரசாங்க அதிபர் முன்னெடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த 17.02.2024 அன்று குறித்த நீரை வெளியேற்றும் நடவடிக்கைக்காக ஞானம் பவுண்டேசன் நிறுவனம் முன்வந்திருந்தது.

இருந்தும் குறித்த நிதியை கொண்டு வேலையை நிறைவு செய்ய வனவள திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களால் விதிக்கப்பட்ட தடை காரணமாக இதுவரை குறித்த வேலைத்திட்டம் பூர்த்தியாக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறித்த பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளரது மகன் உயிரிழந்த நிலையில் அவரது இறுதிக்கிரியைகளை அவரது வீட்டில் வைத்தே செய்வதற்கு கூட முடியாத நிலையில் அந்த தாய் இருப்பதோடு, இந்த விடயம் தொடர்பில் அதிகாரிகளின் அசமந்த போக்கு குறித்து கடுமையான கண்டனம் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரே கயிற்றில் கர்ப்பிணி மனைவியுடன் தூக்கில் தொங்கிய கணவர்!!

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒசூர் பாகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் உதவிக்காக அவரது தாயும் அவர்களுடன் தங்கியுள்ளார்.

இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் ஏராளமான பணத்தை முதலீடு செய்துள்ளார். அதிக அளவில் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளார். ஆனால், பங்குச் சந்தையில் விஜயகுமாருக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் கடன் அதிகரித்ததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் விஜயகுமார் மனமுடைந்தார். இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு விஜயகுமாரும், அவரது மனைவி சந்தியாவும் அறைக்கு சென்றனர்.

அதன் பின்னர் காலை நீண்ட நேரமாகியும் அறைகதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சந்தியாவின் தாய் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால், அவரது தாய் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

தகவலறிந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, விஜயகுமாரும், சந்தியாவும் ஒரே கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவரது அறையில் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், கடன் பிரச்னையால் இந்த முடிவை எடுத்துள்ளதாக எழுதியுள்ளார்.

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் வாலிபர் கர்ப்பிணி மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர்களுடன் சென்ற 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக பலியான சோகம்!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் வைகை அணை முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர்.

லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் குளித்தபோது அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கியதில் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வைகை அணை போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தண்ணீரில் மிதந்துக்கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்களின் உடல்களை மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து வைகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரங்காடியில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

6 மாத கர்ப்பிணியை கட்டிலில் கட்டி வைத்து எரித்துக் கொலை : கொடூர கணவனைத் தேடும் போலீஸ்!!

பஞ்சாப் மாநிலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கணவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ரய்யா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் – பிங்கி தம்பதி. இதில் பிங்கி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது.

இதனிடையே, கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவருடன் கோபித்துக் கொண்டு பிங்கி அடிக்கடி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போதெல்லாம் சுக்தேவ் அவரைச் சமாதானம் செய்து திரும்ப அழைத்து வந்து குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், கணவன் மனைவி இடையே நேற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுக்வேத், மனைவியை கட்டிலில் படுக்க வைத்து கயிற்றால் கட்டினார்.

பின்னர் கட்டிலில் கிடந்த தலையணை, பெட்சீட் போன்றவற்றில் தீயை வைத்துவிட்டு தப்பித்துச் சென்றார். இந்த தீ கட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருந்த பிங்கி மீதும் பிடித்தது. தீயின் உக்ரம் தாங்கமுடியாமல் அலறித் துடித்த பிங்கி, சற்று நேரத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து அங்கு விரைந்து வந்த போலீஸார், பிங்கியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுக்தேவ் மீது கொலை வழக்குப் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.

இரட்டைக் குழந்தைகளை வயிற்றில் சுமந்திருந்த கர்ப்பிணி பெண்ணை, கணவனே கட்டிலில் கட்டி வைத்து தீ வைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளை பெற்றெடுத்த தாய் : ஆச்சர்யத்தை ஏற்படுத்திய சம்பவம்!!

பாகிஸ்தானில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறப்பது என்பது வழமையானதுதான். இந்நிலையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி மாவட்ட தலைமையக மருத்துவமனையில் தான் தாயொருவர் ஆறு குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் பிரசவித்துள்ளார்.

தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர்

பிரசவத்திற்காக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத் ஏப்ரல் 18ம் தேதி அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 19 ம் தேதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி கூறுகையில், ஒரு மணி நேரத்திற்குள் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்தார். இந்த குழந்தைகளில் 4 ஆண், 2 பெண் குழந்தைகள். ஒவ்வொரு குழந்தையும் 2 கிலோவுக்கு குறைவான எடை கொண்டவையே.

அதே நேரத்தில் 6 குழந்தைகளும், அதன் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. சம்பவம் குறித்து பெண்னுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பர்சானா கூறுகையில்,

தாயும், குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர். வழக்கமான எடை அளவு எட்டும் வரை குழந்தைகள் இன்குபேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை 4.5 மில்லியன் பெண்களில் ஒருவருக்கே இந்த வகையான ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற முடியும். இது ஒரு மருத்துவ அதிசயமே என மருத்துவர்கள் வியக்கின்றனர்.

நாட்டில் உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை!!

நாட்டில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை  பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (21.4.2024) ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை1,000 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கிலோகிராம் எலுமிச்சம் பழ விலை

கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒரு கிலோகிராம் எலுமிச்சம் பழத்தின் விலை பாரிய அளவு குறைவடைந்திருந்ததாகவும் தற்போது சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சந்தையில் ஒரு கிலோகிராம் (Kilogram) எலுமிச்சம் பழத்தின் விலை 1, 200 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கையில் புகைப்படங்கள்!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட இலங்கையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. நாசாவில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அண்மையில் எடுக்கப்பட்ட இலங்கையில் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கனடாவில் புலம்பெயர உள்ளவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!!

கனடாவிற்கு வரும் புதிய குடியேற்றவாசிகளுக்கான முக்கியமான அம்சங்களில் ஒன்று, அவர்கள் எந்த நகரத்தில் குடியேறுவது சிறந்தது என்பதை தீர்மானிப்பது. அதன்படி, அவை வேலை வாய்ப்புகள், அத்தியாவசிய சேவைகள், பல்வேறு கலாச்சார சலுகைகள் மற்றும் வலுவான சமூக உறவுகள் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன.

இந்நிலையில் கனடாவிற்கு புலம்பெயர உள்ளவர்கள் குடியேற சிறந்த பத்து நகரங்களின் பட்டியலொன்றை அந்நாட்டு ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.

குறித்த பட்டியலில் உள்ளடங்கும் நகரங்களும் மாகாணங்களும் பின்வருமாறு,

1. ரொறன்ரோ – ஒன்டாரியோ மாகாணம்

2. வான்கூவர் – பிரித்தானிய கொலம்பியா மாகாணம்

3. மாண்ட்ரீல் – கியூபெக் மாகாணம்

4. கல்கரி – ஆல்பர்ட்டா மாகாணம்

5. எட்மண்டன் – ஆல்பர்ட்டா மாகாணம்

6. ஒட்டாவா – ஒன்டாரியோ மாகாணம்

7. மிசிசாகா – ஒன்டாரியோ மாகாணம்

8. வின்னிபெக் – மனிடோபா மாகாணம்

9. ஹாலிஃபாக்ஸ் – நோவா ஸ்கோடியா மாகாணம்

10. சஸ்கடூன் – சஸ்காட்செவன் மாகாணம்

மேலும், கனேடிய குடியேற்ற அமைப்பு, குறிப்பிட்ட திறன்கள் மற்றும் சுயவிவரங்களின் அடிப்படையில் புலம்பெயர்பவர்களை தேர்ந்தெடுப்பதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செயற்பட்டு வருகிறது.

முன்னேற்றம், கலாச்சார செழுமை மற்றும் உயர்தர வாழ்க்கைக்கான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் 2024 ஆம் ஆண்டிலும் புலம்பெயர்பவர்களுக்கான சிறந்த நாடாக கனடா இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை அமைக்கத் திட்டம்!!

இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Ja) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இந்த தரைப்பாதை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்பதோடு நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.

சுற்றுலாவை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பிரதமர் நரேந்திர மோடியும் 2023ஆம் ஆண்டு ஜூலை புதுடில்லியில் உச்சி மாநாட்டை நடத்தியபோது வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரு நாடுகளிலும் பௌத்த சுற்றுலா மற்றும் இராமாயண பாதையை மேம்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா ஏற்கனவே பாரிய பங்களிப்பை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் லிரிட்ஸ் விண்கல் மழை : மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்!!

வருடாந்திர தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22.04) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும். இந்த விண்கல் மழை லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதேசமயம் “இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும். இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு . இன்று நள்ளிரவுக்குப் பிறகு பார்க்கலாம். இது இந்த விண்கல் மழையை காலை 4 – 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும்.