யாழில் திடீரென உயிரிழந்த குடும்பஸ்தர்.. பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

யாழ்ப்பாணத்தில் தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (29.03.2024) இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில், குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இரு மாதங்களுக்கு முன்னர் அவர்களை விட்டு பிரிந்து வசந்தபுரம் பகுதியில் குடிசை ஒன்றை அமைத்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இவ்வாறான நிலையில் அவர் குடிசைக்கு அருகாமையில் உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் புதிய கொலனி, கீரிமலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய ஐயங்கன் சிவானந்தராஜா என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவரது சடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் அவர் அதிக மதுப் பாவனை காரணமாக நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் வெல்வோம் ஸ்ரீலங்கா நடமாடும் சேவை முன்னெடுப்பு!!

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு “நானே ஆரம்பம் வெல்வோம் சிறிலங்கா ஸ்மார்ட் சூரன்களோடு” வவுனியாவிற்கு ஸ்மார்ட் எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் நடாத்தும் நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இன்று (29.03.2024) இடம்பெற்றது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை பொறுப்பேற்றல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடுகளில் பணிபுரிவோருக்கு உரிய நஷ்டஈடு/ சம்பளம் / காப்புறுதி தொடர்பான சேவைகள் , EPF/ETF தொடர்பான சேவைகள்,

தொழிற்துறை பாடநெறிகள் தொடர்பான பதிவு , தொழில்முனைவாளர்களுக்கு அபிவிருத்தி மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, உத்தேச தொழில்வாய்ப்புகள் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு, வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் போன்ற பல சேவைகள் இவ் நடமாடும் சேவையூடாக முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பிரதம அதிதியாக கலந்து கொண்டமையுடன் அதிதிகளாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.காதர் மஸ்தான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் , ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி தேர்தல் தொகுதி அமைப்பாளர் ம.மயூரதன் உள்ளிட்டவர்களுடன்,

மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அதிகாரிகள், அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், பொதுமக்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நடமாடும் சேவையில் முன்னெடுக்கப்படும் சேவைகளை நேரில் சென்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பார்வையிட்டமையுடன் வெளிநாடுகளில் பணிபுரிவோரின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்த நடமாடும் சேவை வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் நாளைய தினமும் காலை 9.45மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் கணவன் வெளியில் சென்ற நிலையில் வீட்டிலிருந்த மனைவி படுகொலை!!

கடுவெல (Kaduwela), கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அஜந்தா என்ற 51 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது கணவர், மகள் மற்றும் மகன் ஆகியோர் காலையில் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் பெண் தனியாக இருந்துள்ளார். இவரும் கடுவெல நகரில் பணிபுரிந்து வருகின்றார்.

வழமையாக காலை 11.00 மணியளவில் வேலைக்கு செல்வதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பெண்ணின் தலையின் பின்புறத்தில் ஒரு பெரிய காயம் மற்றும் அவரது முகத்தில் கீறல்கள் இருந்தன.

அவர் அணிந்திருந்த தங்க ஆபரணமும் காணாமல் போனதையும், வீட்டில் எதையோ தேடியதற்கான தடயங்களும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், வீட்டில் திருடுவதற்காக புகுந்த யாரேனும் ஒருவர் தாக்கியதமையால் இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கையடக்க தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி ஊடாக அனுப்பப்படும் பரிசுகள் தொடர்பில் எச்சரிக்கை!!

பண்டிகைக் காலங்களில் பிரபல நிறுவனங்களின் வர்த்தக நாமங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் ஊடாக பெரும் மோசடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொதுமக்களின் தகவல்களை பெறும் மோசடிக்கு உள்ளாக்கிய சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றம் தெரிவித்துள்ளது.

பெறுமதியான பரிசுகள் வழங்கப்படும் என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தரவுகள் பெறப்படுவதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தம்மபொல குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் மாத்திரம் 200 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

நிமோனியா தொற்றில் உயிரிழந்த நபர் : பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!

நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் உயிரிழந்த நபரின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனையின் போது நுரையீரலில் பல் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்துள்ளார். பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரின் பிரேதப் பரிசோதனையிலேயே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர் என்றும், நீண்ட நாட்களாக நிமோனியா மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார். இவ்வாறு உயிரிழந்த நபர் தனது தனிப்பட்ட நலனில் அக்கறை செலுத்தவில்லை எனவும் பத்மேந்திர விஜேதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாவில் பலரின் மனதை கவர்ந்த நண்பர்களை பிரித்த அதிகாரிகள்!!

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி பலரின் மனதை கவர்ந்த பறவையையும் நாயையும் வனவிலங்கு துறை அதிகாரிகள் பிரித்து வைத்துள்ளனர்.

இந்நிலையில் பெகியையும் மொலியையும் மீண்டும் சேர்த்துவைக்குமாறு கோரும் மனுவொன்றில் 50000க்கும் அதிகமானவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவில் இன்ஸ்டகிராமில் பிரபலமான மக்பை பறவையை வனவிலங்கு காப்பகத்தினர் அதனை வளர்த்தவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் அந்த பறவையை மீண்டும் அந்த குடும்பத்திடம் ஒப்படைக்கவேண்டும் என குயின்ல்ஸாந்து பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

குயின்ஸ்லாந்தை சேர்ந்த தம்பதியினர் மொலி என அழைக்கப்படும் மக்பையை குஞ்சுப்பருவத்தில் மீட்டெடுத்து வீட்டில் வளர்த்து வந்தனர் .

அந்த வீட்டில் உள்ள பெகி எனப்படும் புல்டெரியர் இன நாய்க்கும் மக்பைக்கும் இடையிலான பாசப்பிணைப்பு சமூக ஊடகள் மூலம் தெரியவந்தது. இதை தொடர்ந்து இஸ்டகிராமில் இரண்டு மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் மொலியையும் பெகியையும் பின்தொடர்கின்றனர்.

மொலியை வனவிலங்கு காப்பகத்தினர் பொறுப்பேற்றுள்ள நிலையில் அதனை குறிப்பிட்ட குடும்பத்தினரிடம் கையளிக்க வேண்டும் என குயின்ஸ்லாந்து பிரதமர் ஸ்டீவன் மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறிய குழுவொன்று தொடர்ச்சியாக முறைப்பாடு செய்து வந்ததால் மொலியை வனவிலங்கு காப்பகத்திடம் கையளித்துள்ளதாக அதனை வளர்த்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தான் எங்கு யாருடன் வசிக்கவேண்டும் என மக்பியே ஏன் தீர்மானிக்க முடியாது என நாங்கள் கேள்விஎழுப்புகின்றோம் என தம்பதியினர் சமூக ஊடகத்தில் பதிவிட்டு;ள்ளனர்.

சமூகத்தின் ஆர்வத்தை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் ஆனால் மக்பைக்கள் வீடுகளில் வளர்க்கப்படுபவவை அல்ல தற்காலிகமாக மாத்திரம் வீட்டில் வளர்க்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் : விசாரணைகள் CID யிடம்!!

கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் சீமாட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பகுதியைச் சேர்ந்த ஹம்தி பஸ்லின் என்ற குழந்தை சிறுநீரக நோயினால் உயிரிழந்துள்ளதுடன், அவரின் பெற்றோர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொரளை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் சத்திரசிகிச்சையை மேற்கொண்டதாக கூறப்படும் விசேட வைத்தியர் நவீன் விஜேகோன் தற்போது அவுஸ்திரேலியாவில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரது இருப்பிடம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன சம்பந்தப்பட்ட துறைகளால் காவல்துறையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் உட்பட பல வைத்தியர்கள் நீதிமன்றில் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டதாக கூறப்படும் நுவான் ஹேரத் என்ற வைத்தியரும் தற்போது வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளிநாட்டில் உள்ள இரண்டு வைத்தியர்களையும் இலங்கைக்கு வரவழைத்து சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் பொரளை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தர் மாயம்!!

யாழ்ப்பாணம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 20.10.2023 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் – கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் 46 வயதுடைய நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபர் கடந்த 20.10.2023 அன்று மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் இருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் சென்றதில் இருந்து 5ஆவது நாள் அவரது கைப்பேசி இயங்காததன் காரணத்தினால் அவரது மனைவி இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 2024.02.01 ஆம் திகதி அன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் இதுவரை காணாமல் போன நபர் கண்டுப்பிடிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் யுத்த காலத்தில் குறித்த நபர் கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது கால் பறிபோயுள்ளதாக கூறப்படுகின்றது. இவர் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 076 – 6348367, 074 – 0910152 மற்றும் 076 – 3934822 ஆகிய இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இப்படியெல்லாமா விளையாடுகின்றது? குடல் வெடித்து இளைஞன் பலி!!

பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள விஜயபுராவைச் சேர்ந்தவர் யோகேஷ்(28). டெலவேர் ஏஜென்டாக பணிபுரிந்து வந்த அவர், தனிசந்திராவில் வசித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சம்பிகேஹள்ளியில் உள்ள சிஎன்சி(சிஎன்எஸ்) பைக் சர்வீஸ் சென்டருக்கு சென்றுள்ளார். தனது வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டும் என்று கடையில் இருந்த அவரது நண்பரான மெக்கானிக் முரளியிடம் கூறியுள்ளார்.

அப்போது ஏர் பிடிக்கும் கம்பரசரில் இருந்து திறந்து விடப்பட்ட காற்றைக் கொண்டு முரளியும், யோகேசும் விளையாடிக் கொண்டிருந்தார். முதலில் யோகேஷின் முகத்தில் காற்றை அடித்தார். அப்போது விளையாட்டாக, யோகேஷின் ஆசனவாயிலில் முரளி காற்றைப் பிடித்துள்ளார்.

இதனால் யோகேஷின் வயிறு வீங்கி மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி யோகேஷ் உயிரிழந்தார்.

ஏர் பிடிக்கும் கம்பரசரில் இருந்து வெளியேறிய காற்று மூலம் வயிற்றுக்குள் குடல் வெடித்து யோகேஷ் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து யோகேஷின் பெற்றோர், சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதன் பேரில், 304 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், முரளியை இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்த டிசிபி லட்சுமி பிரசாத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளி பெண்ணுடன் காதல்… திருமணம் செய்வதாக 56 லட்சம் பணத்துடன் எஸ்கேப்பான இளைஞன்!!

பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேந்திர மூர்த்தி. இவர் கால் இல்லாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை சந்தித்துள்ளார். தொலைபேசி மூலம் அடிக்கடி பேச ஆரம்பித்த சுரேந்திர மூர்த்தி, இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் சுரேந்திர மூர்த்தியை காதலித்துள்ளார்.

இந்த நிலையில், வியாபாரம் செய்ய வேண்டும் என்று அந்த பெண்ணிடம், சுரேந்திர மூர்த்தி பணம் கேட்டுள்ளார். அவரது வார்த்தையை நம்பி தன்னிடமிருந்த தங்க நகை, பணம் ஆகியவற்றை கொடுத்துள்ளார்.

ஆனால், சிறிது நாளிலேயே அந்த பணம், நகை பணம் போதாது என்று கூறியுள்ளார். இதனால் கடன் வாங்கி சுரேந்திர மூர்த்தியிடம் அந்த பெண் கொடுத்துள்ளார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அந்த பெண்ணுடன் சுரேந்திர மூர்த்தி பாலியல் ரீதியாக உறவு கொண்டதாக கூறப்படுகிறது.

இதன் பின், அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்தியுள்ளார். திருமணம் செய்து கொள்ளச் சொல்லி இளம்பெண் கேட்ட போது, கால் இல்லாத பெண்ணை என் வீட்டில் ஏற்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

இதனால் இளம்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார். கடன் வாங்கிக் கொடுத்த பணத்தைக் கேட்ட போது, அவருக்கு சுரேந்திர மூர்த்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த நிலையில் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் சுரேந்திர மூர்த்தி மீது இளம்பெண் நேற்று புகார் செய்துள்ளார். இதனை விசாரித்த போலீஸார், சுரேந்திர மூர்த்தி மீது ஏமாற்றுதல், நம்பிக்கை துரோகம், மோசடி, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

இளம்பெண்ணிடம் சுரேந்திர மூர்த்தி மொத்தம் ரூ.56 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கூறுகையில், ” நானும், என் அம்மாவும் சுயதொழில் செய்கிறோம்.

சுரேந்திர மூர்த்தி 2018-ம் ஆண்டு அறிமுகமானார். என்னைக் காதலிப்பதாக கூறினார். அத்துடன் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார், ஒரு நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்றும், அதற்கு போதுமான பணமில்லை என்று கூறினார். உங்களால் முடிந்த அளவு உதவி செய்யுங்கள் என்றும், நிறுவனம் தொடங்கிய பிறகு திருப்பித் தருவதாக கூறினார்.

இதனால் என் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணம், தங்க நகைகளை அவருக்குக் கொடுத்தேன். அது போதவில்லை என்றும், மேலும் பணம் கடன் வாங்கித் தரச்சொன்னார். அதன்படியும் வாங்கித் தந்தேன். ஆனால், அவர் நிறுவனம் தொடங்கவில்லை.

மேலும், திருமண பேச்சு எடுத்தாலே, ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக் கொண்டார். கடைசியில் என்னைக் கொன்று விடுவதாக மிரட்ட ஆரம்பித்தார்.

அவரது வீட்டுக்குப் போய் நியாயம் கேட்ட போது, கால் இல்லாத பெண்ணை ஏற்கமாட்டோம் எனறு அவரது அப்பா கூறினார். இந்த நிலையில், ஜனவரி 31, 2024 அன்று திருமணம் செய்து கொள்வதாக சுரேந்திர மூர்த்தி கூறினார். நான் இதை நம்பினேன்.

ஆனால், அதன் பின் அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக சஞ்சயா நகர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன். அங்குள்ள இன்ஸ்பெக்டர் விசாரிக்கிறேன் என்றவர், இதன் பின் புகாரை கண்டு கொள்ளவில்லை.

இதனால் கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் சுரேந்திர மூர்த்தி, அவரது தந்தை பரமேஷரப்பா, தாய் மீனாட்சிம்மா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளேன்” என்றார்.

மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பணம், நகை மட்டுமின்றி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சுரேந்திர மூர்த்தியை போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு தானே ஊசி செலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!

இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.

அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அபிராமி, பி.டி.சாக்கோ நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அபிராமி செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் அபிராமி உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அபிராமியின் உடலை மீட்டனர். மேலும், அவரது அறையில் இருந்து ஊசி ஒன்றும், உயிரை மாய்த்துக் கொண்டதான கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

அந்த கடிதத்தில் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக அவர் எழுதியிருந்துள்ளார். அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்தை, அபிராமி ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்டு உயிரை விட்டுள்ளார் என கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமாக போதைப்பொருளை அவர் உட்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

500 ரூபாய் நோட்டுக் குவியலின் நடுவே படுத்து உறங்கும் அரசியல் தலைவர் : யார் இவர்?

அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.

இவர் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்து அரசியல் தலைவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் அரசியல் தலைவரின் செயல் பாஜகவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

NDA மற்றும் UPPL ஆகிய இரு கட்சிகளும் ஊழலற்ற ஆட்சியை உறுதி செய்யும் நிலையில் இந்த மாதிரியான விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கணவனின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத மனைவியின் விபரீத முடிவு!!

குருணாகல், நிகவெரட்டிய பிரதேசத்தில் 88 வயதான கணவனின் மரணத்தைத் தாங்க முடியாமல் விஷம் அருந்திய 85 வயது மனைவி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் மனைவியின் சடலங்களை பொலிஸார் மீட்டு பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர். பிரதேச பரிசோதனையில் கணவர் இதயம் செயலிழந்து உயிரிழந்துள்ளதாகவும் மனைவி விஷமருந்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

நிகவெரட்டிய பொலிஸ் பிரிவில் வசித்து வந்த ஐந்து பிள்ளைகளின் தம்பதியரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் தங்கள் மகன், மருமகள் மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் தங்கள் வீட்டில் வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவியாக மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்துள்ளனர்.

கணவன் சுகயீனமடைந்து இருந்து காலப்பகுதியில், அவர் இறந்தால் தானும் வாழ மாட்டேன் என அவரது மனைவி பல சந்தர்ப்பங்களில் கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மகன் மற்றும் மருமகள் இருவரும் வியாபார விடயமாக அதிகாலை ஐந்து மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும், பேத்தி காலை தேநீருடன் அறைக்கு சென்றபோது, ​​பாட்டி கட்டிலில் முனகுவதை பார்த்ததாகவும் தாத்தா படுக்கையில் இறந்து கிடந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உறவினர்கள் மற்றும் அயலவர்களின் உதவியுடன் பாட்டியை தாயை உடனடியாக நிகவெரட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிப்பதற்கு பேத்தி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அனுமதிக்கப்பட்ட வேளையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையின் போது மேலும் தெரியவந்துள்ளது.

இலங்கையில் தங்க நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

இலங்கையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 171,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 23,380 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 187,000 ரூபாவாகவும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 21,440 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 171,500 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 21 கரட் 1 கிராம் தங்கம் 20,460 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கத்தின் விலை 163,700 ரூபாவாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 24 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 176,500 ரூபாவாகவும், 22 கரட் தங்கப்பவுணொன்றின் விலை 163,300 ரூபாவாகவும் மாற்றமின்றி தொடர்வதாக தெரியவருகிறது.

யாழில் கோர விபத்து : மதுபோதையால் நேர்ந்த விபரீதம்!!

யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (28) மதியம் இடம்பெற்ற விபத்தில் விவசாயி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் ஈவினை கிழக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த (65) வயதுடைய சீனியர் இராஜன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் புன்னாலைக் கட்டுவன் சந்தியில் சிறிய ரக உழவு இயந்திரத்தில் தோட்டத்திலிருந்து புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த விவசாயி மீது லொறி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பலாலியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தின் போது லொறியில் பயணம் செய்த சாரதி உட்பட மூவர் மது போதையில் இருந்ததாகவும் இதனால் வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக உழவியந்திரத்துடன் நிலை தடுமாறி மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் போது வீதியிலிருந்த மின்கம்பம், தொலைத்தொடர்பு கம்பம் என்பன முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன் பாரிய மரம் ஒன்றும் முறிந்து விழுந்துள்ளது. மேலும் விபத்துச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சாதாரண தரப் பரீட்சையின் பின்னரான விடுமுறை இனி இல்லை : கல்வி அமைச்சர்!!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் உடனடியாகவே, மாணவர்களுக்கு உயர்கல்வி வகுப்பை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டமிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

சாதாரண தர பரீட்சையில் தோற்றியதன் பின்னர் பெறுபேறுகள் வரும் வரையான நான்கு மாத காலப்பகுதியில் அந்த மாணவர்கள் வேறு விடயங்களுக்கு உட்படுகின்றனர்.

புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட முடியும். க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவதற்கு முன்பதாக க.பொ.த. உயர் கல்விக்கான வகுப்புகளை ஆரம்பிப்பதன் மூலம் பாடசாலைகளில் உயர் கல்விக்காக தோற்றும் 02 மாணவக் குழுக்கள் ஒன்றாக இணைக்கப்படுவர். இது எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது. அதற்கான இட முகாமைத்துவமும் அதிபர்களினால் ஒழுங்கு செய்யப்படும்.

கல்வி முன்னேற்றம் மற்றும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. அதற்காக தேவையான மாற்றங்களும் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

க.பொ.த. உயர்தர விஞ்ஞான பாடத்துக்காக முதலில் 2001 ஆம் ஆண்டில் ஆங்கில மொழிக் கல்வியை அறிமுகப்படுத்தியதுடன், அது தற்போது 06ஆம் வகுப்பு முதல் க.பொ.த. உயர்தரம் வரை 500 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. நடத்தியுள்ளது.

இதன்போது ஆங்கில பாடம் கற்பித்து அண்மைக்காலங்களில் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள ஆசிரியர்களை, மேலும் 03 வருட காலங்களுக்கு தற்காலிகமாக ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கு இதன்போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

அந்த காலகட்டத்தில் தற்போது பாடசாலைகளில் கற்பித்தலை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் அதற்கான பயிற்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.