வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் மரணம்!!

வவுனியா(Vavuniya) சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (31.03.2024) இடம்பெற்றுள்ளது. ஜாஎல பகுதியைச் சேர்ந்த 34 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல் ஒன்று தொடர்பில் வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வைத்தியசாலையில் குறித்த கைதிக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். மாரடைப்பு காரணமாகவே குறித்த மரணம் இடம்பெற்றுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டது : சற்று முன் வெளியான அறிவிப்பு!!

லிட்ரோ எரிவாயு (Litro Gas) எரிவாயுவின் விலை இன்று (01) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் (Muditha Peiris) தெரிவித்துள்ளார்.

12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 135 ரூபா குறைக்கப்படும் நிலையில் புதிய விலை 4115 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூபா 55 குறைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் புதிய விலை 1,652 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 23 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 772 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு!!

இன்று நள்ளிரவு (31.03.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி 95 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 440 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீட்டருக்கு 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 245 ரூபாவாகும். 92 ஒக்டேன் பெட்ரோல் மற்றும் ஒட்டோ டீசல் விலை மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும், டீசல் மற்றும் ஒக்டேன் 92 பெட்ரோல் ஆகியவற்றின் விலை குறைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த விபரீதம் : ஆசிரியை பலி : மூவர் வைத்தியசாலையில்!!

எம்பிலிபிட்டிய (Embellipitia) நோனகம வீதியில் இன்று (31.03) இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது காரின் முன் இருக்கையில் இருந்த மனைவி தூங்கியதால், கார் வீதியின் எதிர்புறமாக சென்று வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில வீதியில் வசிக்கும் மாத்தறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் சமந்திகா ஜயசிங்க என்ற 51 வயதுடைய ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பலாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரான உயிரிழந்த ஆசிரியையின் கணவர், அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் காயமடைந்த 20 மற்றும் 16 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசனவாயில் காற்று நிரப்பி விளையாட்டு.. குடல் வெடித்து உயிரிழந்த இளைஞன்.. இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தென்னிலங்கை தனியார் நிறுவனமொன்றின் பழுதுபார்ப்பு பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரக் குழாயை செருகி காற்று நிரப்பியதால், அவர் குடல் வெடித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் நிறுவனத்தில் பணியாற்றிய பாணந்துறை அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தேஷான் மதுஷங்க என்ற 24 வயதுடைய இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த திங்கட்கிழமை (25ஆம் திகதி) பிற்பகல், அதே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள், உயிரிழந்த ஊழியரின் ஆசனவாயில் விளையாட்டாக காற்று நிரப்பும் இயந்திரத்தின் குழாயை பிடித்துள்ளனர்.

இதன்போது, குழாய் செருகுப்பட்டு, உடனடியாக அகற்ற முடியாமல் போனது. அத்துடன், அதிக அழுத்தத்தில் காற்று உட்செலுத்தப்பட்டதால் குடல் வெடித்து ஊழியர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த ஊழியரின் பிரேத பரிசோதனை நேற்று (29ம் திகதி) ராகம வைத்தியசாலையில் நடைபெறவிருந்தது. இந்நிலையில் சம்பவம் தொடர்புடைய இரு தொழிலாளர்களை சப்புகஸ்கந்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகத்திற்குரிய தொழிலாளர்கள் இருவரும் திஸ்ஸமஹாராமய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் மஹர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

யாழில் மனைவியின் கல்லறையில் கேக் வெட்டிக் கொண்டாடிய கணவன் : நெகிழ்ச்சிக் காரணம்!!

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளம் மனைவிக்காக கணவன் அவரது கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலருக்கு ஆச்சரியர்த்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் காரணம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களின் முன்பு யாழில் இளம் குடும்ப பெண் திருமணமாக ஒரு வருடத்தில் புற்று நோயால் உயிரிழந்திருந்தார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் பளை பகுதியை சேர்ந்த பெண்ணெ உயிரிழந்திருந்தார்.

கடந்த வருடம் அப்பெண்னுக்கு திருமணமான நிலையில், கணவனும் , மனைவியும் டிக்டொக்கில் பிரபலமானவ்ர்கள் என கூறப்படுகின்றது. உயிரிழந்த பெண் , தமது டிக்டொக் பாலோவேர்ஸ் ஒரு மில்லியன் வந்தவுடன், கேக் வெட்டி கொண்டாட வேண்டுமென கணவரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காணொளி ஒரு மில்லியன் பாலோவேர்ஸ் வருவதற்கு முன்னரே யுவதி புற்றுநோயால் உயிரிழந்து விட்டார். எனினும் அவர் உயிரிழந்த சில நாட்களில் அவர்களின் டிக்டொக் பாலோவேர்ஸ் ஒரு மில்லியனை தொட்டுள்ளது.

இதனையடுத்து மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த கணவர், யுவதியின் கல்லறையில் வைத்து கேக் வெட்டி அதனை கொண்டாடியதுடன், அக்காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண் : இளைஞர்கள் செய்த செயல்!!

மகாவலி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் பெண்ணின் உயிரை இளைஞர்கள் குழு ஒன்று காப்பாற்றியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த யுவதி நேற்று (29.03.2024) இரவு 7.00 மணியளவில் மஹியங்கனை – கண்டி ஏ26 வீதியில் மகாவலி ஆற்றின் வேரகங்தொட்ட பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க முயற்சித்துள்ளார்.

பாலத்தின் கொன்கிரீட் தடுப்பின் மேல் ஏறி ஆற்றில் குதிக்க தயாராக இருந்த குறித்த யுவதியை கண்ட இளைஞர்கள் குழு ஒன்று அவரை காப்பாற்ற ஓடி வந்த போது யுவதி ஆற்றில் குதித்துள்ளார்.

அதன் பின்னர், இளைஞர்கள் குழு யுவதியை மீட்டு மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குறித்த பெண் பாலத்திற்கு வந்த பைக் மற்றும் அவரது கைப்பேசி பாலத்தின் மேல் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொலிசார் அவற்றை கைப்பற்றி, தொலைபேசியில் உள்ள எண்களுக்கு அழைத்து, சம்பவம் தொடர்பில் அவரது பெற்றோருக்கு தெரிவித்தனர். மினிபே பகுதியை சேர்ந்த யுவதி சில காலமாக மனநோயினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடாவில் படுகொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்கள் : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!

கனடாவில் 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி கனடாவின் ஒட்டாவா பகுதியில் இலங்கையை சேர்ந்த தாயும், அவரது நான்கு குழந்தைகளும் மற்றுமொரு இலங்கையரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான 19 வயதான இலங்கையைச் சேர்ந்த ஃபேப்ரியோ டி சொய்சா என்ற மாணவன் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், நேற்றைய தினம் ஒட்டாவாவில் உள்ள நீதிமன்றத்தில் தொலைபேசி மூலம் சந்தேகநபர் முன்னிலையான போது ஏப்ரல் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபர், தனது பெயர், பிறந்த திகதி மற்றும் மீண்டும் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள திகதி ஆகியவற்றை மாத்திரம் தெரிவித்துள்ளார்.

மேலும்,சந்தேகநபரின் மனநிலை குறித்து விரிவான மதிப்பீடு செய்ய இன்னும் பல மாதங்கள் ஆகும் என அவரின் சட்டத்தரணி இவான் லிட்டில் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் – இறுதிக்கிரியை தொடர்பில் தகவல்!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜியின் (Daniel Balaji) கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (29.3.2024) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார்.

தான் இறந்தாலும், தனது கண்கள் மூலம் இந்த உலகத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக கண் தானம் செய்திருந்தார் டேனியல் பாலாஜி. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.

புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்றனர். இதையடுத்து “உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார்” என்று டேனியல் பாலாஜி குறித்து அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

டேனியல் பாலாஜியின் உடல் புரசைவாக்கத்தில் வரதம்மல் காலனியில் உள்ள அவருடைய இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர்கள் வெற்றிமாறன், கவுதம் மேனன், அமீர் ஆகியோர் டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை டேனியல் பாலாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்!!

குயின் விக்டோரியா என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று அதிகாலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து வந்த குறித்த கப்பலில் 1,812 சுற்றுலா பயணிகளும் 964 பணிக்குழாமினரும் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளே குறித்த கப்பலில் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அவர்கள் இன்றைய தினம் காலி, கண்டி மற்றும் பின்னவல ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அதிகரிக்கும் அடிப்படைச் சம்பளம்!!

ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வைப் பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியமும் உயர்த்தப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட் ஊதியம் 12,500 ரூபாவிலிருந்து 17,500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 3,500 ரூபாவை உள்ளடக்கியது, இதன் விளைவாக புதிய குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 21,000 ரூபாவாகும். கூடுதலாக, ஊழியர்களின் EDF மற்றும் EPF பலன்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளதையடுத்து ஜனாதிபதியின் தலையீட்டை விரைவுபடுத்தியுள்ளனர்.

தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் சம்பள அதிகரிப்பு முன்மொழிவுகள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும், இந்தக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கு அமைச்சு தீவிரமாக செயற்பட்டு வருகின்றது என தெரிவித்துள்ளார்.

ஒரு தலைக்காதல் வழக்கு… மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு அதிரடி தண்டனை!!

தும்கா: ஒரு தலைக்காதலால் மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (17) என்பவரை ஷாரூக் உசேன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார்.

அவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்தார். ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அங்கிதாவின் வீட்டிற்குள் நுழைந்து அங்கு, தூங்கிக்கொண்டிருந்த மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார்.

பலத்த தீக்காயமடைந்த அங்கிதா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருதலைக் காதலன் ஷாரூக் உசேன் மற்றும் அவரது நண்பர் நயீம் அன்சாரி மீது போலீசார் கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கு ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் சந்திரா முன் விசாரணகை்கு வந்தது. 51 சாட்சிகள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், 17 வயது சிறுமியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாருக் உசேன், நயீம் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், குற்றவாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி.. வீட்டிற்கே சென்று வெட்டி கொலை செய்த கணவன்!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அனேகல் தாலுகா ஜிகானி நகரை சேர்ந்தவர் முபாரக் (28). இவரது மனைவி அர்பியா தாஜ் (24). இந்நிலையில் அர்பியா தாஜ் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஒரு வாரத்தில் தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவி கூறிவிட்டு ஒரு மாதமாகியும் வீடு திரும்பாததால் முபாரக் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் அர்பியா தாஜ், கதவைப் பூட்டிவிட்டு, உங்களுடன் வீட்டிற்கு வரமாட்டேன் என்று முபாரக்கிடம் கூறினார். பலமுறை அழைத்தும் கதவை திறக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த முபாரக் கோடாரியால் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார். தன்னுடன் வாழ மறுத்த மனைவியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அர்பியாவின் தாய் ஓடி வந்தார். அப்போது முபாரக் கதவை பூட்டிவிட்டு கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஜிகானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அர்பியா தாஜ் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அருகில் முபாரக் ஆபத்தான நிலையில் கிடந்தார்.

உடனே போலீசார் அவரை மீட்டு ஜிகானியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அர்பியா தாஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அனேகல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 மகள்களையும் கொன்றுவிட்டு புகையிரதம் முன்பு பாய்ந்த தந்தை!!

தன்னுடைய 2 மகள்களையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, தந்தையும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டம் பயோலியைச் சேர்ந்தவர் சுமேஷ். இவருக்கு கோபிகா (15) ஜோதிகா(12) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மனைவியை இழந்த பின்னர், குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சுமேஷ் தவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரயில் தண்டவாளத்தில் நடுத்தர வயதுள்ள ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அடையாளம் குறித்து விசாரித்ததில் அந்த நபர் பயோலி பகுதியை சேர்ந்த சுமேஷ் என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரது வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அவரது இரு மகள்கள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நேற்று காலை தனது இரு மகள்களையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, சுமேஷ் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும், குழந்தைகளை கொன்று விட்டு, சுமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

தாங்க முடியாத பாலியல் தொல்லை.. மனமுடைந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் விசாகா என்ற மாணவி பிடெக் படித்து வருகிறார். இவர் அங்குள்ள ரூபாஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர்.

இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விகாஷா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? என காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் அங்குள்ள நாராயணா கல்லூரியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது தெரியவந்துள்ளது.

யாழ். வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம் : தொலைபேசி உரையாடல்களைப் பெற அனுமதி!!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பொலிஸார் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 11ஆம் திகதி காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வீடுக்குத் திரும்பிக்கொண்டிருந்த தம்பதியினரை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து வன்முறைக் கும்பலொன்று கடத்திச் சென்றது.

பின்னர் கடத்திச் சென்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்துள்ளதுடன், மனைவியை வீதியில் இறக்கி விட்டு சென்று இருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த பொலிஸார் இதுவரையில் 09 பேரை சந்தேகத்தில் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் நீதிமன்றால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, 09 சந்தேக நபர்களும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது, சந்தேக நபர்களின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர். அதற்கு மன்று அனுமதித்தது.

அத்துடன் , கடற்படை முகாமிற்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராவின் கட்டுப்பட்டு தொகுதியை (DVR) இராசயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தவும் பொலிஸார் மன்றில் அனுமதி கோரினர் அதற்கும் மன்று அனுமதித்தது.

அதேவேளை கடந்த 24ஆம் திகதி கைது செய்யப்பட்ட 08ஆம் மற்றும் 09ஆம் சந்தேக நபர்களை அடையாள அணிவகுப்பு உட்படுத்தவும் பொலிஸார் அனுமதி கோரினர். அதன் பிரகாரம் எதிர்வரும் 04ஆம் திகதி அடையாள அணிவகுப்பு திகதியிட்ட மன்று , அன்றைய தினத்திற்கு வழக்கினையும் ஒத்திவைத்தது.