எல்ல விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்!!

எல்ல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் காயமடைந்து பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் 2ஆவது சிறப்புப் படையை சேர்ந்த பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுமுறை தினத்தை முன்னிட்டு வீட்டிற்கு சென்றிருந்த வேளையில் விபத்து இடம்பெற்ற இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப்பகுதி மக்களுடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில் அவரது முகத்தில் கல்லொன்று சரிந்து வீழ்ந்ததில் அவர் காயமடைந்ததாக கூறப்படுகின்றது.

காயமடைந்த நபர் தற்போது பதுளை போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

எல்ல பிரதேசத்தில் சுற்றுலா சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது விபத்துக்குளானதில் 15 பேர் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமத்திக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எல்ல விபத்தில் திருமணமாகி இரு மாதங்களேயான ஆண் ஒருவர் பலி!!

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,

“எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இந்த சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார். எனது கணவர் அன்பானவர், அவர் என் உணர்வுகளைப் புண்படுத்தும் ஒரு வார்த்தை கூட கூறியதில்லை. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

என் கணவர் கடைசியாக ராவண எல்ல அருவிக்கு அருகில் வைத்து எனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார். அதனால் அவர் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை.

அதனால் நான் பல முறை அவருக்கு அழைப்பை மேற்கொண்டேன். ஆனால் அவருடைய தொலைபேசி இயங்கவில்லை. பின்னர் தான் விபத்து தொடர்பிலான செய்தியைக் கேள்வியுற்றேன், இந்த துக்கத்தை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்” எனக் கூறியிருந்தார்.

எல்ல விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த பயணிகள் : சோகத்தில் முடிந்த பயணம்!!

இலங்கையில் நேற்றிரவு நடந்த துயரமான பேருந்து விபத்துக்கு சற்று முன்பு எல்லவில் எடுக்கப்பட்ட தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களின் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது. எல்லவிலிருந்து புறப்படுவதற்கு முன்பு சுமார் 30 பேர் கொண்ட குழு ஒன்றாக போஸ் கொடுப்பதை படங்கள் காட்டுகின்றன.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவர்கள் பயணித்த தனியார் பேருந்து எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் 1,000 அடி பள்ளத்தில் கவிழ்ந்ததில் அவர்களின் சுற்றுலா சோகத்தில் முடிந்தமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்ல கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் தொடர்பான விபரங்கள்!!

எல்ல – வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகில் நேற்று இரவு நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான நீதவான் விசாரணை இன்று பிற்பகல் நடத்தப்பட்டது.

அதற்கமைய, தியதலாவ மருத்துவமனையில் வைக்கப்பட்ட, 8 உடல்கள் விசாரணை உட்படுத்தப்பட்டன. பண்டாரவளை பதில் நீதவான் செனவிரத்ன வீரசிங்கவின் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய, உயிரிழந்தவர்ள் 27 வயதான டி.எச். டிரான் திவங்க, 32 வயதுடைய கே.ஏ. தினுஷிகா லக்மினி, 54 வயதான நிஹால் ரஞ்சித் வீரசிங்க, 42 வயதான மதுஷா அனுராதினி, 39 வயதான நிலுஷா ஸ்ரீமாலி,

45 வயதான ஷானிகா அனுராதினி, 34 வயதுடைய ஜெயனி ஜீவந்திகா மற்றும் 45 வயதான ஷானிகா அனுராதா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேரூந்து – வேன் மோதி விபத்து : நால்வர் வைத்தியசாலையில் அனுமதி!!

அநுராதபுரம் – ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்றுள்ளது.

பரசன்கஸ்வெவ பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேனில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாணம்!!

2025ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி, தமிழ் மொழியில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 194 என்ற அதிகபட்ச மதிப்பெண்களைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

இன்று (04) காலை நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், சிங்கள மொழி மூலம் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவர் காலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளதோடு,.அந்த மாணவன் 198 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று (03) இரவு இணையத்தில் வெளியிடப்பட்டன. அதன்படி, பரீட்சை முடிவுகளை திணைக்களத்தின் அதிகார பூர்வ வலைத்தளமான www.doenets.lk இல் காணலாம் .

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் 2,787 மையங்களில் நடைபெற்றதுடன், மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு மொத்தம் 901 சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

16 வயது சிறுமி கடத்தப்பட்டாரா? மாமியார் வீடு சென்றவருக்கு நடத்தது என்ன?

தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளை 16 வயது சிறுமி காணாமல் போயுள்ள சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை பகுதியில் இன்று காலை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக காணாமல் போன சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அவரது முறைப்பாட்டில் ,

தனது 16 வயதுடைய மகள் சாமிமலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் தனது மாமி வீட்டில் இரவு தங்கி இருந்த நிலையில் தானும் தன் மனைவியும் தோட்ட பணிக்கு சென்றிருந்த வேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

மகள் பெயர்லோன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் எட்டு வரை கல்வி பயின்றுள்ளதுடன் அதன் பின்னர் நோய் ஏற்பட்ட காரணத்தால் இடை நடுவில் படிப்பை நிறுத்தியுள்ளார்.

மகள் இரவு நேரத்தில் தனது மாமியார் வீட்டில் தங்குவதாகவும் வழக்கம் போல் தங்கள் இருவரும் பணி முடித்து வந்து பார்த்த போது மகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலை (04) சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்றை அப் பகுதியில் கண்டதாகவும் அதில் இருந்த இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான வேன் , இலக்கம் PH.8233 கொண்ட வெள்ளை நிற சிறிய ரக வேன் என அடையாளம் கண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 0522277222 எண் மூலம் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் வீடொன்றுக்குள் மர்மம் : 4 மனித மண்டை ஓடுகளால் பரபரப்பு!!

கம்பஹா, வெயங்கொட, பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு அருகில் ஒரு பையில் சந்தேகத்திற்கிடமான 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் பல எலும்புத் துண்டுகளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வீடு அமைந்துள்ள காணியில் உள்ள ஒரு கட்டடத்தில் கிராம சேவகர் அலுவலகம் அமைந்துள்ளது. மேலும் கிராம சேவகர் அலுவலக அதிகாரியின் இரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேகத்திற்கிடமான பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உரிய காணி சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஒரு மருத்துவருக்கு சொந்தமானது.

யாரோ ஒருவர் 4 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புத் துண்டுகளை இந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

திருமண வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவர் விபத்தில் படுகாயம்!!

மூதூர் பெரியபாலம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மேள வாத்திய கலைஞர் ஒருவர் படுகாயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையிலிருந்து மல்லிகைத்தீவில் நடைபெறவுள் திருமண வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த மேள வாத்திய கலைஞர் படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கைத் தமிழர் சட்டவிரோத குடியேறிகள் அல்ல : இந்தியாவின் அறிவிப்பால் மகிழ்ச்சி!!

2015ஆம் ஆண்டு 9ஆம் திகதிக்கு முன்னர் உரிய ஆவணங்கள் எதுவுமின்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் அமுல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் தொடர்பிலான சட்டத்தின் கீழுள்ள தண்டனை விதிகளிலிருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு ஒன்றிய அரசு விலக்களித்துள்ளது.

எனவே இலங்கைத் தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகளாக காணப்பட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்திய மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ், உரிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைந்தவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய மத்திய அரசின் இந்த முடிவு, மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

இது, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கை தமிழர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற வேன் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!!

அநுராதபுரம் – ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (04) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பரசன்கஸ்வெவ பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் பின்புறத்தில் வேன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது வேனில் பயணித்த நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பரசன்கஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!!

இந்தவாரம் நாளுக்கு நாள் தங்க விலை அதிகரிப்பை பதிவு செய்த நிலையில் இன்று தங்க விலை சடுதியாக குறைந்துள்ளது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 264,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 1300 ரூபா குறைவடைந்து, 262,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,கொழும்பு செட்டியார் தெருவில் இன்று வியாழக்கிழமை (4) விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரத்தின் அடிப்படையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 2000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு நேற்றையதினம் 284,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றையதினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த வார தொடக்கத்தில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 280,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று (03) 2000 ரூபாயால் அதிகரித்து, 284,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 35,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 32837.5 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்து யாழ் மாணவன் சாதனை!!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 194 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளான்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று அதிகாலை வௌியிடப்பட்டது.

இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 307,951 பரீட்சார்த்திகள் இதற்குத் தோற்றியிருந்தனர்.

மாணவன் ஆனந்தசோதி லக்சயனின் இந்தச் சாதனையின் மூலம், தனது பாடசாலைக்கும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலை அதிபர் லதாநந்தினி சிவபாதம் தெரிவித்தார்.

வவுனியாவில் ஆலயத்தில் 2 லட்சத்திற்கும் அதிகம் ஏலம் விடப்பட்ட மாம்பழம்!!

வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 06ஆம் நாள் மாம்பழ திருவிழாவான நேற்று (03.09) மாலை விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று கோவில் வளர்ச்சி நிதிக்காக ஏலத்தில் விடப்பட்டுள்ளது.

இதன்போது, பலத்த போட்டிக்கு மத்தியில் 220,000 ரூபாவுக்கு குறித்த மாம்பழம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த மாம்பழத்தை வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகீஸ்வரன் என்பவர் 220,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளார்.

இதேவேளை, கடந்த வருடமும் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகீஸ்வரன் என்பவரே 285,000 ரூபாய் செலுத்தி ஏல விற்பனையில் கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

புலமைப்பரிசில் பரீட்சை : சிங்கள மொழியில் சாதனை படைத்த மாணவி!!

2025 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய, காலி அம்பலாங்கொடை ஸ்ரீ தேவாநந்த பாடசாலை மாணவி ஷனுதி அமாயா அஸ்வினி, சிங்கள மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் 198 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை, யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவர் ஆனந்தசோதி லக்சயன், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை அளவில் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (04) அதிகாலை வௌியிடப்பட்டன.

இந்தப் பரீட்சை கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றது. மொத்தம் 3,07,951 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!!

உத்தரபிரதேசத்தில் இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் பழகிய 52 வயதுப் பெண், திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 26 வயது இளைஞர் அவரைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் கஅடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஃபரூக்காபாத்தைச் சேர்ந்த 52 வயதுப் பெண் என்பதும், நான்கு பிள்ளைகளின் தாய் என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக இளைஞரை ஒருவரை விசாரித்தபோது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து தெரியவருகையில், ‘26 வயதான ராஜ்புத்தும், 52 வயதான அந்தப் பெண்ணும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் மூலம் நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். அந்தப் பெண், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக் காட்டிக் கொண்டுள்ளார்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தொலைப்பேசி எண்களைப் பரிமாறி, அடிக்கடி பேசியதோடு, நேரில் சந்தித்தும் வந்துள்ளனர்.

அப்போதுதான் அந்தப் பெண்ணின் உண்மையான வயது இளைஞருக்குத் தெரியவந்துள்ளது. மேலும், அந்தப் பெண் இளைஞருக்கு சுமார் ரூ. 1.5 லட்சம் வரை கடன் கொடுத்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறும், கொடுத்த கடனைத் திருப்பித் தருமாறும் அருண் ராஜ்புத்திடம் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் ராஜ்புத், அந்தப் பெண் அணிந்திருந்த துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.

பின்னர், அவரது செல்போனை எடுத்துக்கொண்டு சிம் கார்டை அப்புறப்படுத்தியுள்ளார். தொடர் விசாரணையில், அருண் ராஜ்புத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்தியதும், கடனைத் திருப்பிக் கேட்டதும், தன்னை வயதைக் குறைத்துக் காட்டி ஏமாற்றியதுமே கொலைக்குக் காரணம் என்று அருண் ராஜ்புத் வாக்குமூலம் அளித்துள்ளார்’ என்று கூறினர்.