இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

mahela

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மஹேல ஜெயவர்த்தன, ஒருநாள் போட்டிகளில் தனது 16 வது சதத்தை இன்று பெற்றுக் கொண்டார். இவர் 107 ஓட்டங்களைப் பெற்றவேளை அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அத்துடன் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்கவும் இந்தப் போட்டியில் தனது 13 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய உபுல் தரங்க ஆட்டமிழக்காது 159 பந்துகளில் 19 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 174 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதுவே இவர் பெற்ற அதிக ஓட்டங்களாகும்.

இன்றைய போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 1 விக்கெட்டை மாதிரம் இழந்து 348 ஓட்டங்களை பெற்று புதிய சாதனை படைத்தது.

துருவநட்சத்திரத்தின் நாயகி சமந்தா இல்லை..!

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் துருவ நட்சத்திரம்.
இப்படத்திற்கு கதாநாயகி யார் என்பதே பெரிய குழப்பமாக உள்ளது.

முதலில் இப்படத்தில் த்ரிஷா அல்லது அமலா பால் நடிக்கலாம் என கூறப்பட்டது.

அதன் பின் அமலா பால் தான் நடிக்க போகிறார் என தகவல்கள் வெளியாகி சில நாட்களிலேயே, கௌதமின் ஆஸ்தான நடிகை சமந்தா தான் நடிக்க போகிறார் என பேசப்பட்டது.

இதற்கிடையே சமந்தாவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் அசினை நடிக்க வைக்கலாமா என்று கௌதம் மேனன் யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.

அசினும் பாலிவுட்டில் ஒன்றும் சரியாகப் போகாததால் அங்கிருந்து கிளம்பி இந்த பக்கம் வரத் தான் காத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் நடிப்பில் கலக்கும் தனுஷின் ராஞ்சனா நாயகி சோனம் கபூரை நடிக்க வைக்கும் திட்டமும் உள்ளதாம்.

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம்..!

ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்களை படுக்கைக்கு சென்று எழுப்பும் ரோபோ அலாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரோபோக்கள் (எந்திர மனிதன்) பல வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது படுக்கைக்கே சென்று ஆழ்ந்து தூங்குபவர்களை எழுப்பும் ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை ரோபோ, அலாரம் வைக்கப்பட்ட நேரத்தில் கீழே இருந்து மேலே குதித்து படுக்கையின் ஓரத்தில் இருக்கும் டேபிளில் உட்காருகிறது. பின்னர் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பவர்கள் காதருகில் பயங்கர சத்தத்துடன் அலாரம் அடிக்கிறது. அதற்காக இந்த ரோபோ மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டுள்ளது.

அது தூங்குபவரின் படுக்கைக்கு வர வசதியாக சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை 3அடி உயரம் வரை எழும்பி தாவக்கூடியவை. தூங்குபவர் எழுந்து அதன் சுவிட்சை அணைக்கும் வரை அதாவது ஆப் செய்யும் வரை அலாரம் அடிப்பது நிற்காது. அதன் விலை ரூ.3,500 (இந்திய ரூபாய் ) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

robotClock

நீச்சல் குளத்தில் மீன் போன்று நீச்சலடிக்கும் 16 மாத பெண் குழந்தை (வீடியோ இணைப்பு)..!

அமெரிக்காவில் 16 மாத பெண் குழந்தை நீச்சல் குளத்தில் சூப்பராக நீச்சலடிக்கும் வீடியோ யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆதம் கிறிஸ்டன்சன் என்பவரின் 16 மாத பெண் குழந்தை எலிசபெத். ஆதமும், அவரது மனைவியும் சேர்ந்து குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுத்துள்ளனர். குட்டி எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் காட்சியை ஆதம் வீடியோ எடுத்துள்ளார்.

எலிசபெத் நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை ஆதம் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டாலும் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நீச்சல் குளத்தில் எலிசபெத் நீந்துவதைப் பார்த்தால் இது என்ன மீன் குட்டியா என்று நினைக்கத் தோன்றுகிறது.

எலிசபெத்தை நீச்சல் கற்றுக்கொள்ளுமாறு தாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்தியது இல்லை என்று ஆதம் தெரிவித்துள்ளார். தனது மகள் நீச்சல் குளத்தில் இறங்கினால் மிகவும் சந்தோஷமாக காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆர்யா தான் பெஸ்ட் – நயன்தாரா!!

Nayan

ஆர்யாவும், நயன்தாராவும் “பாஸ் என்கிற பாஸ்கரன்” படத்தில் ஜோடியாக நடித்தனர். அவர்களின் ஜோடிப்பொருத்தமும் சூப்பராகவே இருந்தது. நிஜ ஜோடியைப் போலவே இருவரும் அவ்வளவு நெருக்கமாக நடித்தனர்.

தற்போது இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லீ இயக்கும் “ராஜா ராணி” யில் மறுபடியும் இணைந்துள்ளது ஜோடி. இந்தப் படத்தில் முன்பைவிட இருவரும் மிக நெருக்கமாக நடித்துள்ளனர்.

ஏற்கெனவே இருவரும் காதலிக்கிறார்கள் என வதந்தி பரவிக் கொண்டிருக்கும் நிலையில் இருவரும் நெருக்கமாக நடித்திருப்பது வதந்தியை உறுதிப்படுத்தி இருக்கிறது.

இதுபற்றி நயன்தாராவிடம் கேட்டதற்கு, “நெருக்கமாக நடிப்பது என்பது கதையைப் பொறுத்தது. எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல புரிதல் உள்ளது. அந்தப் புரிதல்தான் படத்திலும் வெளிப்பட்டிருக்கிறது.

இதுவரை என்னுடன் நடித்த நடிகர்களிலேயே ஆர்யா தான் பெஸ்ட். அவருடன் நடிக்கும்போது ‘கெமிஸ்ட்ரி’ நன்றாக இருக்கிறது. அந்தக்கால ரஜினி – ஸ்ரீப்ரியா, கமல் – ஸ்ரீதேவி ஜோடி போல எங்கள் ஜோடியும் பேசப்படும்” என்றாராம்.

மேலும், ஆர்யாவின் அறிவுரைப்படி வயதான ஹீரோக்களுடன் சேர்ந்து இனி நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் நயன்.

வயதான ஹீரோக்களுடன் நடித்தால் உனக்கும் வயதாகிவிட்டதாக மற்றவர்கள் நினைப்பார்கள். இளம் ஹீரோக்கள் உன்னுடன் நடிக்கத் தயங்குவார்கள் என ஆர்யா அட்வைஸ் செய்ததே இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை!

siva

கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் காட்டில் அடைமழை பெய்கிறதாம்.பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி முன்னணி நடிகைகளும் இவருடன் நடிப்பதற்கு போட்டிபோடுகிறார்களாம்.

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் தனுஷ், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் தனித்தனியாக தயாரிக்கும் படங்கள் சிவகார்த்திகேயனுக்கு வரிசைகட்டி நிற்கின்றன.

நடிகர் தனுஷ் தயாரிக்கும் படத்தை எதிர்நீச்சல் படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்க உள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கும் படத்தை பூபதி பாண்டியன் இயக்குகிறார். பட்டத்து யானை ரிலீஸிற்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார்.

இதைப் பார்த்து மற்ற தயாரிப்பாளர்களும் தங்களுடைய படங்களில் முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

 

சட்டவிரோத பணியாளர்களுக்கான சவுதியின் மன்னிப்புக் காலம் நீடிப்பு..!

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களுக்கான மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி வரை மன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டு பணியாளர்களின் மன்னிப்புக் காலம் நாளை நிறைவடையும் நிலையில் இந் நீடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த கிரிக்கெட் வீரருக்கு எதிராக விசாரணை..!

மது போதையில் விமானத்தில் குழப்பம் விளைவித்த இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தொடர்பில் ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஏற்ப விசாரணை மேற்கொள்ளவதாக அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளி இனங்காணப்பட்டால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கழிவறை என நினைத்து 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவுகளை இலங்கை அணி வீரர் ஒருவர் திறக்க முற்பட்டு குழப்பம் விளைவித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விஜய்காந்தின் எதிர்கட்சித் தலைவர் பதவி பறிபோகுமா?

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுப்பது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் முடிவெடுத்திருப்பதன் மூலம் தமது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க முடிவு செய்துவிட்டார் என்றே கூறப்படுகிறது.

சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில் திமுகவைவிட 6 எம்.எல்.ஏக்கள் கூடுதலாகப் பெற்றதால் தேமுதிக பிரதான எதிர்க்கட்சி ஆனது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். ஆனால் சட்டசபை களேபரத்தில் சிக்கி பணிநீக்கம் ஆக நேரிட்டது போது எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்த்தார்.

அதன் பின்னரும் அந்த வாகனத்தை அவர் பயன்படுத்துவதில்லை. இந்தநிலையில் 7 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியாளர்களாக அதிமுக பக்கம் சாய்ந்திருந்தனர்.

ராஜ்யசபா தேர்தலிலும் அவர்கள் அதிமுகவுக்குத்தான் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து அதாவது ஒரு நீண்டகாலத்துக்குப் பிறகு 7 எம்.எல்.ஏக்களையும் தற்காலிகமாக பணிநீக்கம் செய்வதாகவும் 10 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ஒரு கடிதத்தை தேமுதிக மேலிடம் அனுப்பி வைத்தது.

ஆனால் அதிருப்தி எம்.எல்.ஏக்களோ கட்சியைவிட்டே நீக்கிவிட வேண்டியதுதானே என்று எகத்தாளம் காட்டி பேசி வருகின்றனர்.

இருப்பினும் 7 பேர் மீதும் மேல் நடவடிக்கை தொடரும் நிலையில் அவர்கள் கட்சி சாராதவர்களாக அறிவிக்கப்படுவர். அப்படி கட்சி சாராதவர்கள் என்று அறிவிக்கப்பட்டால் தேமுதிகவுக்கு 22 எம்.எல்.ஏக்கள்தான் இருப்பார்கள்.

இதனால் அக்கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கும். விஜய்காந்தும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழக்க நேரிடும். ஆனால் தேமுதிக தரப்போ, ஆமா இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இத்தனை நாள் கேப்டன் அனுபவித்தாரா? போனா போகட்டும் என்றே கடுப்பான பதிலை வெளிப்படுத்துகின்றனர்.

சுமாத்ரா தீவில் பாரிய நிலநடுக்கம்..!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் அசேஹ் மாகாணத்தின் தலைநகரான பண்டா அசேஹ்-விலிருந்து தென்கிழக்கே 188 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

பூமிக்கடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பல இடங்களில் உணரப்பட்டது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் ஒரு நிமிடம் வரை குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இதுவரை உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. கடந்த 2004-ம் ஆண்டு இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி பேரலை இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் ஏற்படுத்தியது.

ஆசியா கண்டத்தில் 2,30000 மக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆணின் சடலம் மீட்பு..!

vavuniya

வவுனியா நவீன சந்தை சுற்று வீதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலத்தினை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவீன சந்தை வீதி பகுதியில் சைக்கிள் திருத்தும் நிலையம் வைத்திருந்த 55 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலத்திற்கு அருகில் இருந்து மதுபான போத்தல் மற்றும் விஷ திரவப் போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவரது சடலம் தற்போது வவுனியா போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இம் மரணம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஜூலை மாத ராசி பலன்கள்..!

astrology

ஜூலை மாதத்திற்குரிய உங்களது இராசிபலனை அறிந்து கொள்ள உங்களது இராசியின்மேல் கிளிக் செய்யுங்கள்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

மாவை சேனாதிராசா கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அறிவிப்பை ஏற்க முடியாது – சுரேஸ்

வட மாகாண சபைத் தேர்தல் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு அனைத்து கட்சிகளின் அங்கிகாரமும் வேண்டும் எனவும் எழுந்தமானத்திற்கு கூட்டமைப்பில் இருக்கும் ஒரு கட்சி முடிவெடுத்தால் அது குழப்பத்தில் முடியும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் அமைந்துள்ள ஊடக அமையத்தில் இன்று  நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்று தமிழரசுக் கட்சி யாழ் கிளை அக்கட்சியின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எனினும் தேர்தல் நடைபெறும் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு ஐந்து கட்சிகளின் கூட்டு இதில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியின் யாழ். கிளை அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சுரேஸ் பிரேமச்சந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.

மாவை சேனாதிராசா இதில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என்று நான் சொல்லவில்லை. இருந்தாலும் இந்த விடயத்தில் அனைவரின் கருத்துக்களும் அறிய வேண்டியது முக்கியமானது என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு ஒரு கட்சி அறிவிக்கும் போதும் ஏனைய கட்சிகளும் தங்களுக்கு விரும்பி வேட்பாளர்கள் அறிவித்தால் குழப்பம் தான் ஏற்படும். நாங்கள் பூதகரமான சத்திகள் என்று தமிழரசுக் கட்சி தன்தோன்றித்தனமாகச் செயற்படக்கூடாது எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் ஒரு கட்சி தனது கட்சி சார்பானவரை பிரேரிப்பது அது அந்த கட்சி சார்பானதாகவே இருக்கும். அவ்வாறு ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யவதென்றால் கூட்டமைப்பின் அங்கிகாரம் பெறவேண்டும் கூட்டமைப்புடன் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜூலை மாத ராசி பலன்கள் – மீனம்

meenam

குரு பகவான் உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரிப்பது மிகவும் உன்னதமான நிலை. ராகு பகவானின் சஞ்சாரத்தால் தீய பலன்களும், கேது பகவானின் சஞ்சாரத்தால் நற்பலன்களும் விளையும். அதுபோல சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் கண்ட சனியாக உலா வருவதும் நல்லதல்ல.

ஆனால், குருபகவான் இரண்டாமிடத்திலிருந்து நற்பலன்களைக் கொடுப்பதால், மற்ற கிரகங்களின் தீய பலன்கள் அடிபட்டுப் போய்விடும். இனி மாதக் கிரகங்களின் சஞ்சாரப்படி உங்களுக்கு இந்த மாதம் மனோபலம் மேலோங்கும்.

எந்த காரியத்தையும் , தைரியத்துடனும் புத்திசாலித்தனத்துடனும் செய்து வெற்றியடைவீர்கள். முகத்தில் நல்ல பொலிவு ஏற்படும். அதிகாரமுள்ள பதவி சிலருக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் எற்படும். தொழில், வியாபாரத்தில் மேன்மை ஏற்படும்.

தேவைக்கேற்ற வருமானம் கிடைக்கும். அதன் காரணமாக கொடுக்கல்-வாங்கலில் சிறப்பான சூழ்நிலை ஏற்படும். சொல்வாக்கு, செல்வாக்கு ,அந்தஸ்து, கௌரவம் கூடும். சிலருக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை கிடைக்கும். சகல விதத்திலும் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

இருப்பினும் குடும்பத்தாருடன் எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவது நல்லது. ஏனெனில், வீண் விவாதங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும் வாய்ப்புள்ளது. குடும்பத்தாருடன் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கணவன்-மனைவியரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

எதிரிகளைப்பற்றிய அச்சம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால், சில நன்மைகள் கிடைக்கும். தோழர்கள் அபிவிருத்தி அடைவார்கள். வாழ்க்கைத் துணையின் உடல்நலம் பாதிக்கப்படலாம். சிலருக்கு எதிரிகளால் துக்கமும் மன பயமும் ஏற்படும்.

அனுஷ்காவின் நகைகளின் பெறுமதி 5 கோடி..!

அருந்ததி படத்தின் வெற்றிக்குப் பின்பு நடிகை அனுஷ்கா மீண்டும் நடித்து வரும் சரித்திர கால படம் ராணி ருத்ரம்மாதேவி.

இப்படத்திற்காக அனுஷ்கா ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை அணிந்து நடித்து வருகிறார்.

‘ஒக்கடு’ புகழ் (தமிழில் கில்லி) குணசேகர் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ரூ.40 கோடி பொருட்செலவில் தயாராகி வருகிறது.

ஹிருத்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடித்த ‘ஜோதா அக்பர்’ படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணி புரிந்த நீதா லுல்லா ‘ருத்ரம்மா தேவி’ படத்திற்காக அனுஷ்கா அணியும் உடைகளையும், ஆபரணங்களையும் டிசைன் செய்திருக்கிறார்.

தங்கம், வைரம் ஆகியவையுடன் பிரம்மாண்டமான அழகாக உடைகளையும், ஆபரணங்களையும் ‘ராணி ருத்ரம்மா தேவி’ கதாபாத்திரத்திற்காக 5 கோடி ரூபாய் செலவில் உருவாக்கியிருக்கிறார்.

அதோடு படத்துக்காக அனுஷ்கா கத்தி பிடிக்கவும், வாள் சண்டை போடவும் சிறப்பு பயிற்சி எடுத்து நடித்து வருகிறாராம். 3டி யில் படமாக்கப்படும் முதல் சரித்திரப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச தரம்’ – ஜகத் ஜயசூரிய..!

இராணுவ ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் தமது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதன் மூலம் இலங்கை இராணுவத்தினர் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால், ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கடந்த மாதம் 17 ஆம் திகதி இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய அவர்கள் ஜெனரலாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்.

அத்துடன் வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் பாதுகாப்புப் பிரதானியாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க அவர்கள் லெப்டினன் ஜெனரல் என்ற தரத்தோடு ஆகஸ்ட் முதலாம் திகதி இராணுவ தளபதியாகப் பொறுப்பெற்றுக்கொள்ளும் வகையில் ஜனாதிபதியினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வவுனியா ஆயுதப் படைகளின் தலைமையகத்திற்க திங்களன்று விஜயம் செய்த ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் இராணுவத்தினர் மத்தியில் உரையாற்றுகையில் நாட்டில் உள்ள இரண்டு இலட்சம் படையினருடைய நலன்களை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம், குருணாகலை உள்ளிட்ட மூன்று இடங்களில் யுத்தத்தின்போது அவயவங்களை இழந்த படைச் சிப்பாய்களை வைத்துப் பராமரிப்பதற்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

வன்னியில் படையினர் வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு, வசதிகளுடன் கூடிய நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவ முகாம்களுக்குத் தேவையான கட்டிட வசதிகள் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறினார்.

(BBC)