கொழும்பில் கோர விபத்து : பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் மரணம்!!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளர் லக்மினி போகமுவ, வாகன விபத்தில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

அவரது நெருங்கிய நண்பர்கள் மற்றும் ஏராளமான மக்கள் அவரது மரணம் தொடர்பில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் பத்தரமுல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட அதிசொகுசு சுற்றுலா கப்பல்!!

யாழ்ப்பாணம் காரைநகர் உள்ள Mahasen Marine என்ற கப்பல் கட்டும் தொழில்சாலையில் ஓர் அதிசொகுசு சுற்றுலா கப்பல் தயாரிக்கப்பட்ட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பல் பர்மா நாட்டுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கப்பலின் பரீட்சார்த்த பயணம் யாழ்ப்பணம் காரைநகர் துறைமுகத்திலிருந்து இன்றைய தினம் (19.02) முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. அதேவெளை யாழில் தயாரிக்கப்பட்ட இந்த சொகுசு கப்பல் சூரிய மின் சக்தி வசதியை கொண்டதாகும்.

இந்நிலையில் இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கில் யாழ்ப்பாணம் – காரைநகரில் இவ்வாறான ஓர் கப்பல் கட்டும் தொழில்சாலை உள்ளமை யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்க்கும் ஓர் விடயமாகும்.

தாய் மற்றும் மகள் கொலையில் சந்தேக நபருக்கு மரண தண்டனை!!

கொட்டகெத்தனவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (19.02) தீர்ப்பளித்தது.

கொட்டகெத்தன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீல் லக்ஷ்மன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு குறித்த கொலச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், 12 ஆண்டுகளின் பின்னர் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை படைத்த 4 மாதக் கைக்குழந்தை!!

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு தனது குழந்தையின் திறமையை வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வாங்க பணம்கேட்ட மகனை கொலை செய்த தந்தை : இலங்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மகனை , தந்தை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் தெரீலங்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கும்புக்கெட்டிய, வெல்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதுடைய போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் தினமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் நேற்று (18.02) வழமைப்போல போதைப்பொருள் பாவனைக்காக பணம் கேட்டு தனது தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் தந்தை , தனது மகனை சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளம் குடும்பஸ்தர் எடுத்த விபரீத முடிவு : தவிக்கும் குடும்பம்!!

மட்டக்களப்பு பகுதியில் சிறு குழந்தையின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் கன்னங்குடா மண்டபத்தடியை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் என அறியப்படுகிறார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடி பிரதான மெயின் வீதியில் உள்ள கொட்டகை ஒன்றில் குறித்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குடும்பஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்ஒண்டு வருகின்றனர்.

திருமணமாகி 90 நாட்களில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கணவன் : தவிக்கும் மனைவி!!

கொழும்பின் புறநகர் பகுதியில் வாடகை அறையில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் இந்த இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான இந்த இளைஞன், மூன்று நாட்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் கொட்டாவ – பாடசாலை மாவத்தையில் உள்ள வீடொன்றில் அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்துள்ளார்.

இந்த இளைஞன் வீட்டின் மின் விசிறியில் இயங்காமல் இருந்த மின்விசிறியை சீர் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

டிப் சுவிட்ச் செயலிழந்த மின் விநியோகத்தில் இருந்து பாதுகாப்பற்ற மின்சாரத்தைப் பயன்படுத்தியதால் மின்கசிவு ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலத்தின் பிரேத பரிசோதனை ஹோமாகம வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது. வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிஷ்க விஜயதுங்க என்ற 22 வயதுடைய இளைஞனே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவர்!!

வெலிமடை டயரபாவத்தை, மேல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் பெண்ணின் கணவரே கொலையை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

36 வயதான டயரபாவத்தை மேல் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கணவன் மனைவியை கொடூரமாக தாக்கி பின்னர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த 35 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிக்கிய இரண்டு யுவதிகள் : பிரான்ஸிலிருந்து நடக்கும் கடத்தல்!!

பிலியந்தலை இரு யுவதிகள் 10 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் இருந்து பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் பிலியந்தல சித்தும் அல்லது சென்டா என்ற நபரின் கும்பலுடன் தொடர்புடைய 2 யுவதிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சோதனையின் போது, ​​போதைப்பொருள் உட்கொள்ள வந்த மற்றும் போதைப்பொருள் உட்கொண்ட இரு இளைஞர்களை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களுடன், 250 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள், 15 போதை மாத்திரைகள், இலத்திரனியல் தராசு, சுருட்டு சுற்றுவதற்கு பயன்படுத்தப்படும் காகிதம், 8 கையடக்கத் தொலைபேசிகள், 2 லைட்டர்கள் மற்றும் போதைப்பொருள் பொதி செய்யப் பயன்படுத்தப்படும் பொலத்தீன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கையில் நள்ளிரவில் நடக்கும் பயங்கரம் : பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!!

நாடளாவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நள்ளிரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

செல்லப்பிராணிகளுக்கு விஷம் கொடுத்து இந்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யாழில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த சோகம்!!

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவணைக்கு அடிமையான குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரி மற்றும் தாயாரிடம் நேற்று (18.02.2024) பணம் கேட்ட குடும்பஸ்தருக்கு வீட்டார் பணம் கொடுக்காததால் இவ்வாறு தவறான முடிவெடுத்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நபருக்கு திருமணமாகி 05 வயதில் பிள்ளை இருக்கும் நிலையில், அதீத போதைப்பொருள் பாவனையால் குடும்ப அங்கத்தவர்களோடு வன்முறைகளிலும் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவரது மனைவி மற்றும் பிள்ளை அவரை விட்டு பிரிந்து வாழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட கடும் மோதல் : கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி!!

புத்தளம் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற பிறந்த நாள் விழாவில் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புத்தளம், வேப்பமடுவ பிரதேசத்தில் வசித்து வந்த 32 வயதுடைய ஜி.ஜி.அமித் மதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்த நாள் விழாவின் போது இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பே இந்த கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்!!

மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

28 வயதுடைய சந்தேக நபரான பெண் குழந்தையின் தாய் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மினுவாங்கொடை, பன்சில்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது மினுவாங்கொடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மர்மமான முறையில் உயிரிழந்த மகன் : தந்தையின் விபரீத முடிவு!!

அனுராதபுரத்தில் மகன் திடீரென உயிரிழந்தமையை தாக்க முடியாத தந்தை உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார். எப்பாவல, கட்டியாவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய உடற்கட்டமைப்பாளர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 10 ஆம் திகதி குறித்த இளைஞன் தனது வீட்டின் முன் விழுந்து கிடந்த நிலையில், ​​அவரது இளைய சகோதரர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

எனினும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர், அந்த வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அவரது மரணத்தால் அவரது தந்தையும் மனம் உடைந்து விஷம் அருந்திய நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த உடற்கட்டமைப்பாளர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் குடித்துவிட்டு வந்து வீட்டின் அருகே கூச்சலிட்டதாக தெரியவந்துள்ளது.

எனினும், இந்த நபர் தாக்கப்பட்டரா?, அவரது உடலை வளர்க்க பயன்படுத்திய ஊக்கமருந்துகளால் பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் உடல்நிலை காரணமாக இந்த மரணம் ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இந்த உடற்கட்டமைப்பு வீரரின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெறவுள்ளது.

கோர விபத்து : 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை – மில்லகஹமுல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்சென்ற வான் ஒன்றும் மாத்தறை பகுதியிலிருந்து யாத்திரிகர்கள் குழுவை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் கினிகத்தேனை வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் வானும் பேருந்தும் பலத்த சேதமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது!!

வவுனியா தம்பனைச்சோலை பகுதியில் 80000 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை வவுனியா தலைமைபொலிஸ்நிலைய போதைத்தடுப்பு பொலிசார் கைதுசெய்தனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா தலைமை போலீஸ் அதிகாரியின் வவுனியா மது ஒழிப்பு பொலிஸ் பிரிவின் நிலைய பொறுப்பு அதிகாரி பொலிஸ் பரிசோதகர் றிஸ்வி தலைமையிலான,

பொலிஸ் சார்ஐன்களான கீர்த்தி ரத்தின (48001), சொய்சா (67436), டிசாநாயக்க (34831), பொலிஸ் கொஸ்தாபர்களான குமார (77779), விதுசன் (91800) ஆகியோரினால் தம்பனைச்சோலை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் பொலிசார் இன்று சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது 80000 மில்லிகிராம் ஐஸ்போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை கைதுசெய்தனர். கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.