வவுனியா, புதிய சாளம்பைக்குள மக்களின் முறைப்பாட்டையடுத்து வவுனியா மாநகரசபையின் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் நேற்று (17.02) பார்வையிட்டார்.
வவுனியா மாநகரபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கழிவுகள் வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த கழிவுகளால் அதன் அருகில் உள்ள புதிய சாளம்பைக்குளத்தில் வாழும் மக்கள் தாம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கழிவுகள் காற்று மற்றும் நீர் ஊடாகவும், கால்நடைகள் மூலமாகவும் தமது குடிமனைக்குள் வருவதாகவும் இதனால் நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புதிய சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனிடம் முறையிட்டடிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த பகுதி மக்களுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் 125 பேருக்கு விவசாய பயிர் பாதுகாப்பு துப்பாக்கிகள் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானால் வழங்கி வைக்கப்பட்டது. வவுனியா மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் இன்று (17.02.2024) இந்நிகழ்வு இடம்பெற்றது.
யுத்தத்தால் பாதிப்படைந்த வவுனியா மக்கள் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில் விலங்குகளால் விவசாய செய்கைக்கு சேதம் ஏற்படுத்தப்டபட்டு வருகின்றது.
இதன் காரணமாக, பல விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் என்பன பாதிப்படைந்துள்ளன. இதனால் விவசாயிகளின் விவசாய செய்கைக்யை பாதுகாக்கும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 125 பேருக்கு குறித்த விவசாய பாதுகாப்பு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பயனாளிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் பல்வேறு இடங்களில் 30 இற்கும் மேற்பட்ட திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த போதே இருவரும் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது பல பொருட்கள் மீட்கப்பட்டதாகவும், 30 இற்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களுடன் அவர்கள் இருவரும் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட இடங்களில் நீர் இறைக்கும் மோட்டர்கள், குழாய் கிணற்று மோட்டர்கள், சிலிண்டர்கள், மின் விசிறிகள், கிறைண்டர்கள் என பல வகையான பொருட்களை திருடிய சம்பவங்களுடன் இருவரும் தொடர்புபட்டுள்ளதுடன், அவர்களிடம் இருந்து திருடப்பட்ட பெருந்தொகை பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா, வாரிக்குட்டியூர் மற்றும் சமயபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த இருவரும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபயிற்சிக்கு வருகை தந்தவரின் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 32 வயது இளைஞன் ஒருவர் நேற்று (16.02) கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நடைபயிற்சிக்காக கடந்த சில நாட்களாக வவுனியா நகரசபை மைதானத்திற்கு வந்து சென்றுள்ளார். வழமை போன்று நேற்று வியாழக் கிழமை (15.02) மாலையும் நகரசபைக்கு வருகை தந்துள்ளார்.
இதன்போது தான் அணிந்திருந்த சங்கிலி, காப்பு உள்ளிட்ட 4 பவுண் தங்க ஆபரணங்களை நகரசபை வளாகத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்ட தனது மோட்டர் சைக்கிள் இருக்கைக்குள் வைத்து பூட்டி விட்டு நடைப் பயிற்சிக்கு சென்றுள்ளார்.
நடைபயிற்சி முடிந்த பின்னர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக குறித்த பெண் வருகை தந்த போது அவரது மோட்டார் சைக்கிள் இருக்கை உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தன. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் இரவு முறைப்பாடு செய்திருந்தார்.
இதன்போது, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, பம்பைமடுப் பகுதியைச் சேர்ந்த 32 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது திருடப்பட்ட ஆறு அரை லட்சம் ரூபாய் பெறுமதியான 4 பவுண் நகைகளும் உடமையில் இருந்து மீட்கப்பட்டதுடன், திருட்டுச் சம்பவத்தின் போது சந்தேக நபர் தப்பிச் செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட நபரையும், மீட்கப்பட்ட பொருட்களையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தென்னம் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட சுமார் 50 வயதுடைய ஒருவராலேயே சிறுமி, வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கணவன் போதைக்கு அடிமையானவர் என்பதால் அவரது மனைவி பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில் அருகில் இருக்கும் பெண் ஒருவர் சந்தேக நபருக்கு உணவு வழங்கிய நிலையில் சந்தேகநபரும் அவர்களுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
உணவு கொடுத்த பெண்மணியின் மகளும், கணவனும் கற்பிட்டியில் தங்கியிருந்து கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மகளின் 4 பிள்ளைகளும், பேத்தியாரின் பராமரிப்பில் வளர்கின்றனர்.
இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு அண்மையாக, 9 வயது சிறுமியை இனிப்பு வாங்கித் தருவதாக குறிப்பிட்டு, கடைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அதன்பின்னர் சிறுமியை காணவில்லையென பேத்தியார் தேட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அயலவர்களும் இணைந்து தேடினர். தகவல் பரவி, பிரதேசவாசிகள் இணைந்து சிறுமிய தேடியுள்ளனர்.
காவலாளி சிறுமியை அழைத்து சென்றதை பார்த்தாக அயவலர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, பிரதேச இளைஞர்கள் காவலாளியிடம் விசாரணை செய்தனர். எனினும் தான் சிறுமியை அழைத்து செல்லவில்லையென கூறினார். இளஞர்கள் சிறுமியை தேடுவதில் ஈடுபட காவலாளி வீட்டு கதவுகளை பூட்டி விட்டு உள்ளே பதுங்கியிருந்து விட்டார்.
இதையடுத்து காவலாளி வீட்டை சுற்றிவளைத்த மக்கள் வீட்டு கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து, காவலாளிக்கு , தர்மஅடி கொடுத்து விசாரணை செய்தனர்.
தகவலறிந்து பொலிசாரும் சம்பவ இடத்துக்கு வந்து, காவலாளியை தமது பொறுப்பில் எடுத்தனர். பொலிஸார் அப்பகுதியில் உள்ள CCTV காணொளியை பார்வையிட்ட போது சிறுமியின் பின்னால் காவலாளி செல்வது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாலை 3.30 மணியளவில், தென்னந்தோப்புக்கு வேலியோரமாக- அடுத்த காணிக்குள் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. முள்வேலியில் சிக்கி சிறுமியின் ஆடைகள் கிழிந்திருந்தன. அதோடு சிறுமியின் சடலத்தில் மேலாடைகள் மட்டும் அலங்கோலமாக காணப்பட்டது. பிறப்புறுப்பு பகுதிகளில் குருதிப்பெருக்கு காணப்பட்டது.
இந்நிலையில் கைதான நபர் போலி அடையாளத்துடன் தன்னை தமிழராகவே அடையாளப்படுத்தி வந்த போதும், கைது செய்யப்பட்ட பின் அடையாள அட்டையை பரிசோதித்த போதே, அவர் முஸ்லிம் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது அவரது அடையாள அட்டையில் கே.வி.அப்துல் ரகுமான் (வயது-52) குச்சவெளி திருகோணமலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் சந்தேக நபர் தலைமன்னாரில் தனது பெயரை விஜேயந்திரன் என அறிமுகப்படுத்தி வசித்து வருவதாகவும் தெரிய வருகிறது. சந்தேநபர் போதைக்கு அடிமையானவர் என்பதால், அவரை கிராமத்திலிருந்து வெளியேற்றுமாறு பிரதேசவாசிகள், தென்னந்தோட்ட உரிமையாளரிடம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் 10 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, வீரபுரம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் இன்று (16.02) காலை மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பம் ஒன்றுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து கணவனான இளம் குடும்பஸ்தர் வீட்டில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
இதனையடுத்து, மனைவியும், பிள்ளைகளும் அயலில் உள்ளவர்களை அழைத்து மீட்க முயற்சித்தனர். இதன்போது கிராம அலுவலர் மற்றும் பொலிசாருக்கும் அயலவர்கள் முறைப்பாடு செய்தனர்.
அப் பகுதி மக்களின் துணையுடன் அவர் மீட்க்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் பொலிசாரால் ஒப்படைக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய செபமாலை மொரிசன் என்பவரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதனால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல்,
புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை ஒளிப்பதிவு செய்த காணொளிகள் , புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வடமாகாண மக்கள் முறைப்பாடுகள் , போதைப்பொருள் போன்ற தகவல்களை தமிழ் மொழி மூலம் வழங்குவதற்காக 107 எனும் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அவர்களின் என்னக்கருவில் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இச் சேவையின் 107 அவரச அழைப்பு மத்திய நிலையம் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தினுள் அமைக்கப்பட்டுள்ளமையுடன் எதிர்வரும் 17ம்திகதி பாதுகாப்பு அமைச்சர் , அமைச்சின் செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் காரியாலயம் திறந்து வைக்கப்படவுள்ளது.
17.02.2024 ம் திகதி முதல் இவ் தமிழ் மொழி மூல அவசர அழைப்பு சேவை செயற்படுத்தப்படவுள்ளமையுடன் இதன் மூலம் மக்கள் இலகுவான முறையில் முறைப்பாடுகள் மற்றும் தகவல்களை வழங்கக்கூடியதாகவிருக்கும் அல்லது 107COMPLAINTSCENTER@POLICE.GOV.LK என்ற ஈமெயில் மூலமும் தகவல்களை வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களின் தகவல்கள் இரகசியமான முறையில் பாதுகாக்கப்படும் எனவும் குற்றச்செயல்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பவர்களின் விபரங்களும் சேமிக்கப்படாது எனவே மக்கள் தயக்கமின்றி தமிழ் மொழி மூலம் 107 எனும் இலக்கத்திற்கு அழைத்து தகவல்களை வழங்க முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள காணியில் தேசிய புலனாய்வு அலுவலகத்திற்கு இடம் வழங்குவதற்கு வடமாகாண ஆளுநர் பரிந்துரைத்துள்ள நிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் அதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
வவுனியா மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன்போது காணியற்ற அரச திணைக்களங்களான அரச ஒசுசல, புவிச்சரிதவியல் திணைக்களம்,தெங்கு அபிவிருத்திசபை,பனை அபிவிருத்திசபை, சமூக நீர்வழங்கல் திணைக்களம், தேசிய புலனாய்வு அலுவலகம், மற்றும் பொது அமைப்புக்களான முச்சகரவண்டி உரிமையாளர் சங்கம், சிகை அலங்கரிப்பாளர் சங்கம், பேருந்து உரிமையாளர் சங்கம், பாரவூர்திசங்கம், ஓய்வூதியர் சங்கம் ஆகியன தமக்கு நகரப்பகுதியில் காணி ஒதுக்கித்தருமாறு வவுனியாபிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டது
அதற்கமைய குறித்த அமைப்புக்களுக்கு வவுனியா பூங்காவீதியில் அமைந்துள்ள பகுதி மற்றும் திருநாவற்குளம் பாரவூர்தி தரிப்பிடம் ஆகியவற்றை பிரித்து வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிடம் இன்று அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதன்போது பூங்காவீதியில் அமைந்துள்ள காணி தேசிய புலனாய்வு அலுவலுகத்திற்கு வழங்குவதற்காக ஆளுநரால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து காணியினை அவர்களுக்கு வழங்குவதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுதலைவர் தீலிபன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.
புலனாய்வு பிரிவு அனைத்து இடங்களிலும் இயங்கமுடியும், அது ரகசியமாக இருக்கவேண்டிய அமைப்பு. எனவே நகரப்பகுதியில் அதற்கு காணி வழங்குவது பொருத்தமானதாக இருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இதன்போது தெரிவித்திருந்தார்
வவுனியா புகையிரத நிலைய வீதியில் காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பயணம் செய்வதினால் தினசரி விபத்துக்கள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.
வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகே காணப்படும் புகையிரத பாதுகாப்பு கடவையின் கதவுகள் மூடப்பட்டிருக்கும் சமயத்தில் பொதுமக்கள் வீதி போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்றாது பாதையின் இரு பக்கங்களிலும் சீரற்ற முறையில் வாகனங்களை தரித்து வைத்தல் , புகையிரத பாதுகாப்பு கடவை மூடப்பட்டிருக்கும் சமயத்தில் வாகனத்தினை செலுத்துதல், புகையிரத கடவை திறந்தவுடன் எதிர்த்திசையில் வருகின்ற வாகனத்திற்கு வழி விடாது செல்லுதல் போன்ற செயற்பாடுகளில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக புகையிரத நிலைய வீதியில் தினசரி இரண்டிற்கு மேற்பட்ட விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் சில சமயங்களில் மாத்திரமே பொலிஸார் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்கள் வீதி நடைமுறைகளை பின்பற்றாத சந்தர்ப்பங்களை ஒளிப்பதிவு செய்த புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள போதிலும் மக்களின் நிலமைகளை கருத்தில் கொண்டு நாம் எவ்வித கட்டண அதிகரிப்பினையும் மேற்கொள்ளவில்லை என வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.
முச்சக்கரவண்டி கட்டண அதிகரிப்பு தொடர்பில் அவரிடம் வினாவிய போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அடிக்கடி எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களில் எரிபொருளின் விலை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தற்போதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எரிபொருள் அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. இருந்த போதிலும் மக்களின் பொருளாதார நிலைமைகளை கருத்தில் கொண்டு நாம் கடந்த ஒரு வருடமாக எவ்வித கட்டண அதிகரிப்பினையும் மேற்கொள்ளவில்லை
வவுனியா மாவட்டத்தில் எமது சங்கத்தின் கீழ் பதிவிலுள்ள முச்சக்கரவண்டிகள் முதலாவது கிலோமீற்றருக்கு 150 ரூபாவும் அடுத்த இரண்டாவது கிலோமீற்றருக்கு 100ரூபாவும் , 20கிலோமீற்றருக்கு மேல் ஒரு கிலோமிற்றருக்கு 90 ரூபாவும் அறவிடுகின்றோம்.
இனிவரும் காலங்களிலும் எரிபொருள் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் நாம் சாரதிகளின் நலனை கருத்தில் கொண்டும் மக்களின் நலனை கருத்தில் கொண்டும் சிறிதளவில் கட்டண அதிகரிப்பு தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ள வேண்டிய நிலமைக்கு நாம் தள்ளப்படுவோம்
அடுத்ததாக எமது சங்கத்தின் கீழுள்ள சாரதிகளின் வாழ்வாதாரங்களும் பாதிப்படைந்துள்ளன இதனை யாருக்கு தெரிவிப்பது யார் நிறைவேற்றி வைப்பார்கள் என தெரியவில்லை , எரிபொருள் அதிகரிப்பு , உதிரிப்பாகங்கள் அதிகரிப்பு , திருத்துதல் செலவுகள் , லீசிங் வட்டி வீகிதம் அதிகரிப்பு போன்ற பல காரணங்களினால் எமது முச்சக்கரவண்டி சாரதிகள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். சில குடும்பத்தினர் தற்கொலைக்கு கூட முயன்றுள்ளனர். அவ்வாறான நிலமையே முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு காணப்படுகின்றது.
வாழ்க்கை செலவீனம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. தினசரி நான்கு அல்லது ஜந்து பயணிகள் கூட சில சாரதிகளுக்கு கிடைப்பதில்லை இதனால் பலர் தமது வாழ்வாதாரத்தினை இழந்து முச்சக்கரவண்டியினை விற்று வேறு தொழிலினை நோக்கி செல்ல வேண்டிய நிர்ப்பத்திற்கு ஆலாகியுள்ளனர். எனவும் வரையறுக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி.ரவீந்திரன் மேலும் தெரிவித்திருந்தார்.
யாழ். கோண்டாவில் – காரைக்காலை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இனுவில் கிழக்கு புகையிரத கடவை பகுதியில் ஏற்பட்ட குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்ததோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (14.02.2024) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரும் வானில் பயணித்த வேளை, இனுவில் கிழக்கு புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது, புகையிரதத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இந்நிலையில், விபத்துக்குள்ளான மூவரில் கணவன் மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு மனைவி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாகும் மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி என்ற பெண். மலைக்கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் பிரிவை சேர்ந்த இவர், ஏலகிரி மலையில் கல்வி கற்றார்.
இதைத்தொடர்ந்து B.A.,B.L., சட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் சமயத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. எனினும் படிப்பை கைவிடாத இவர், தனது குடும்பத்தினர் உறுதுணையால் சட்டப்படிப்பை முடித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயின்று வந்த இவர், அதற்காக தன்னை தயார் படுத்திக்கொண்டார். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கும் வகையில், தேர்வு தேதியின்போது, இவருக்கு பிரசவ தேதியும் குறிக்கப்பட்டிருந்தது.
இதனால் தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் குழந்தையை பெற்றுக்கொண்ட இவர், ஒரு பக்கம் குழந்தை மறுபக்கம் புத்தகம் என இருந்து தேர்வுக்கு முழுமையாக தன்னை தயார்படுத்தி வந்துள்ளார். பிரசவித்து 2 நாட்களில் தேர்வு. இதற்காக மருத்துவர்கள் ஆலோசனைப்படி தேர்வு எழுத புறப்பட்டார்.
சுமார் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வெழுத சென்னை சென்றார். அங்கே வெற்றிகரமாக தேர்வு எழுதினார். இந்த நிலையில் தற்போது அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக சாதித்து காட்டியுள்ளார்.
பழங்குடியினர் பிரிவை சேர்ந்த வெறும் 23 வயதே ஆன இளம்பெண், குழந்தை பிறந்து 2 நாட்களில் பல கி.மீ பயணித்து தேர்வுக்கு சென்ற நிலையில், அவரது முழு முயற்சிக்கும் பலன் கிட்டியது போல் இன்று சாதித்துள்ளார். தற்போது ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). அப்பகுதியில் மளிகை நகை நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பண நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். இதனால் குடும்ப வறுமையின் காரணமாக சியாமளா தேவி, வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் சியாமளா தேவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.
ரத்தம் பீறிட்டு வெளியே வந்த நிலையில் சியாமளா தேவி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்தார்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் செய்கிற வேலையா இது.. பள்ளி சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை..!
இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், சியாமளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஆந்திராவைச் சேர்ந்த மாணவன், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவிலில் தனியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் வெளியூர், வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலர் விடுதியில் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் மாவட்டம், நரசாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரப்பா என்பவரது மகன் மஞ்சுநாத் (வயது 20) பல்கலைக்கழக விடுதியில் தங்கி பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார்.
விடுமுறைக்கு சொந்த ஊர் சென்ற மஞ்சுநாத் நேற்று காலை கல்லூரிக்கு வந்துள்ளார். பின்னர் தனது விடுதி அறையில் மஞ்சுநாத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதேபோல் ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் வடிகபள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோபால் என்பவரது மகள் கௌகிவாலி பள்ளி அகிலா(19). இவர் விடுதியில் தங்கி இருந்து பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரும் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணன் கோயில் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிருஷ்ணன்கோவில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில், காதலனுடன் சேர்ந்து மது அருந்திய இளம்பெண் திடீரென உயிரிழந்தஹ்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது போதை பழக்கத்தால், இளம்பெண் ரிதி ஏஞ்சலின் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (20). இவரது தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஆகாஷ் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
அதே போன்று ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் ரிதி ஏஞ்சல் (19). இவரும், ஆகாசும் ஊட்டியில் தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பில் ஒன்றாக படித்த பழக்கத்தில், அதன் பின்னரும் இருவரும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்களது நெருக்கமான பழக்கம், நாளடைவில் காதலாக மாறிவிட்டது.
இதற்கிடையே ரிதி ஏஞ்சல் கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியிலும், ஆகாஷ் நீலகிரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சேர்ந்தனர். காதலர்கள் அவ்வப்போது தனிமையில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கல்லூரி விடுமுறையான கடந்த சனிக்கிழமை காதலனின் வேண்டுகோளுக்கு இணங்க ரிதி ஏஞ்சல் கோவையில் இருந்து ஊட்டி வந்தார். அங்கு காதலி ரிதி ஏஞ்சலை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்ட ஆகாஷ், டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்கிக்கொண்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து வீட்டுக்கு வரவழைத்தார். இதைத் தொடர்ந்து ஆகாசும், ரிதி ஏஞ்சலும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அதன் பின்னர் மோட்டார் சைக்கிளில் அருகில் உள்ள பைன் பாரஸ்ட் பகுதிக்கு சென்று மேஜிக் காளான் எனப்படும் போதை காளான் பறித்து வந்து மதுவுடன் அதையும் சேர்த்து இருவரும் சாப்பிட்டு உள்ளனர்.
இதனால் போதை தலைக்கு ஏறி இருவரும் நிலைகுலைந்து காணப்பட்டு உள்ளனர். பின்னர் 2 பேரும் தூங்கிவிட்டனர். காலையில் கண்விழித்து எழுந்த ஆகாஷ், ரிதி ஏஞ்சல் படுக்கையை விட்டு எழுந்திரிக்காததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். எவ்வளவோ எழுப்பியும் ரிதி ஏஞ்சல் எழுந்திருக்கவில்லை என்பதால், 108 ஆம்புலன்சுக்கு அழைத்துள்ளார்.
அங்கு வந்த மருத்துவ பணியாளர், இளம் பெண்ணின் உடலை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, ரிதி ஏஞ்சல் இறந்து விட்டார் என்று கூறினார்.
மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதலில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து பின்னர் கொலை குற்றம் ஆகாத மரணம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆகாஷை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் ரிதி ஏஞ்சல் இறப்பு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.