10 ரூபாய் தகராறு… சகோதரன் பேச மறுத்ததால் பெண் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையை அடுத்த பழைய பல்லாவரம் சாரா நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் குமரன். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு விட்டல் என்ற மகனும், மலர்விழி (வயது 20) என்ற மகளும் உள்ளனர். இன்ஜினியரான மலர்விழி, பூந்தமல்லியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

அவரது அண்ணன் விட்டல், மலர்விழியிடம் தனது செலவுக்கு பத்து ரூபாய் தருமாறு கேட்டார். ஆனால் மலர்விழியோ தன்னிடம் பணம் இல்லை என்று கூறி பணம் தர மறுத்துவிட்டார். இதனால் அண்ணன், தங்கை இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதும் கோபமடைந்த விட்டல், ‘இனி உன்னிடம் பேசமாட்டேன்’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பத்து ரூபாய்க்கு அண்ணன் பேச மறுத்ததால் மனமுடைந்த மலர்விழி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

27 வயதில் பெண் பொலிஸ் எடுத்த விபரீத முடிவு!!

கர்நாடக மாநிலம் ராம்நகர், ஹரோஹள்ளி தியாவச்சந்திரா கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுஸ்ரீ, 27. இவருக்கு திருமணம் ஆகவில்லை.

இவர் பெங்களூரு மைக்கோலே-அவுட் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன், சிவாஜி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என கூறி விடுமுறை கேட்டுள்ளார். விடுமுறையில் ஊருக்குச் சென்ற மஞ்சுஸ்ரீ, மனமுடைந்து தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

இடமாற்றம் காரணமாக மன உளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி கொடுத்த கடன் தொல்லையால் இளம் தம்பதி உயிரிழந்த பரிதாபம்!!

தெலுங்கானா மாநிலம் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கீசரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (45). இவரது மனைவி பாக்யா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டுத் தேவைக்காக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கடன் பெற்று வந்தனர்.

ஆனால் உரிய நேரத்தில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால், வங்கிக் கடனை வசூலிக்கும் முகவர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து, கிரெடிட் கார்டு பில்களை செலுத்தும்படி தம்பதியினரை சித்ரவதை செய்துள்ளனர்.

அவமானப்படுத்தப்படுத்தியுள்ளனர். இதனால் சுரேஷ் மற்றும் பாக்யா மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிகிறது. அவமானம் தாங்க முடியாமல் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள பாக்யாவின் தாய் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்து சென்று விட்டு வந்துள்ளனர். நேற்று வீட்டில் தனியாக இருந்த கணவன், மனைவி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

முன்னதாக, தங்கள் இறப்புக்கு வங்கி கிரெடிட் கார்டு அதிகாரிகளை குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீசர போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கணவன்-மனைவி இருவரின் உடல்களையும் மீட்டு,

பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவர்கள் எழுதிய கடிதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பு பல்கலைக்கழக இளம் விரிவுரையாளர் விபத்தில் பலி : இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் பணிபுரிந்து வந்த உதவி விரிவுரையாளரின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளன.

பத்தரமுல்லை 10 பத்தமக விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிக்கிரியைகள் இன்று (21.02.2024) மாலை 5 மணிக்கு சமயச் சடங்குகளுடன் நடைபெற்று தலவத்துகொட பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் உதவி விரிவுரையாளரான 24 வயதுடைய லக்மினி போகமுவ என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் விக்கிரமசிங்கபுரவிலிருந்து வேலைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் சென்ற போது பத்தரமுல்ல பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச் சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி வீதியில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2017ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இரண்டு பதக்கங்களையும் புலமைப்பரிசில்களையும் பெற்று சிறந்த மாணவியாக தெரிவாகியுள்ளார்.

இவர் கொழும்பு ஆனந்த பாலிகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி விசேட திறமையை வெளிப்படுத்திய மாணவி என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

“எல்லாவற்றிலும் வல்லவனான நீ எப்படி எங்களை இப்படித் தனியே விட்டுச் சென்றாய்?” என்று சகோதர, சகோதரிகள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

யாழ். பல்கலைக்கழக மாணவன் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் இன்று (21.2.2024) யாழ். நீா்வேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் – வேம்படி பகுதியை சோ்ந்த யாழ்.பல்கலைகழக கலைப்பிரிவில் கல்வி பயிலவுள்ள புதுமுக மாணவனான ரமேஷ் சகீந்தன்(22 வயது) என்ற மாணவனே விபத்தில் உயிரிழந்துள்ளாா்.

விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது வீட்டிலிருந்து இன்று (21) அதிகாலை நீா்வேலிக்கு மோட்டாா் சைக்கிளில் பயணித்த போது வீதியின் குறுக்கே பாய்ந்த நாயுடன் மோட்டாா் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

காதலனுடன் வெளியேறிய மகள்.. விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

கேரள மாநிலத்தில், தன்னுடைய காதலனுடன் திருமணம் செய்து கொள்வதற்காக பெற்றோரின் எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு மகள் வெளியேறியதால் விரக்தியில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பவும்பா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன்(55). இவரது மனைவி பிந்து (47). இந்த தம்பதியரின் மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு உன்னிகிருஷ்ணன் தம்பதியர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மகள் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலனுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தங்களது மகள் காதலனுடன் சென்றதால் விரக்தியடைந்த உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி பிந்து, சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே உன்னிகிருஷ்ணன் – பிந்து தம்பதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் பொலிஸாரை தாக்கிய சீனப் பெண்!!

விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் இன்று செவ்வாய்க்கிழமை (20.02) கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை மங்கள மாவத்தையில் வசிக்கும் 36 வயதுடைய சீனப் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பேருவளை மங்கள வீதியிலுள்ள வீடு ஒன்றில் சீனப் பெண்ணொருவர் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அங்கு சென்றுள்ளனர்.

இதன்போதே அங்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக பொலிஸார் மீது சீன பெண் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைதான சீன பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவருக்கு நேர்ந்த கதி!!

கனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த ஷேக் முஸாம்மில் அஹமது என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹைதராபாதைச் சேர்ந்த குறித்த மாணவருக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டு அவதியுற்று வந்த நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது நண்பர்களில் ஒருவர் இந்தியாவிலிருக்கும் ஷேக்கின் பெற்றோருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மகனுடைய மரணச் செய்தி கேட்டு ஷேக்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ள தோடு, தங்கள் மகனுடைய உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்ஷங்கரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து : தாய், மகள் மற்றும் மகன் பலி : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த தொடருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆராச்சிக்கட்டுவ மற்றும் அனவிலுந்தவ உப நிலையங்களுக்கு இடையில் நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக இரு பிள்ளைகளுடன் தாய் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிக்கட்டுவ பகுதியை சேர்ந்த 41 வயதான தாய் ஷாலிகா தில்ருக்ஷி, ஒன்பது வயது மகள் சிதுமி சாவிந்தி ஜயலத் மற்றும் ஏழு வயது மகன் சசன் மந்துல ஜயலத் ஆகியோர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிதுமி 4ஆம் வகுப்பும், சசனின் மகன் 2ஆம் வகுப்பும், இவர்களது தந்தை அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் எனவும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் வினவியபோது தொடருந்து இயங்கினாலும் கடவை மூடப்படவில்லை எனவும், அப்போது கடவை நடத்துநர் அங்கு இருக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற தாய் கவனமாக இருந்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம் என தெரிவித்த பொலிஸ் அதிகாரி, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு செல்ல முயன்ற இனைஞனின் விபரீத முடிவு!!

புத்தளத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தல் பகுதியை சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞனே நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் வெளியில் சென்ற நிலையில் தந்தை தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் வீட்டின் அறையொன்றுக்குள் உயிரை மாய்த்துள்ளார்.

உடனடியாக அவரை முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும், இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞன் வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளார். இதற்காக வீட்டில் பணம் கேட்டதாக தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பணம் இல்லை எனவும் அதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக தந்தை தெரிவித்திருந்த போதும் இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய சிறுவன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (20.02.2024) இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் (18) ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சிறுவனது வீட்டிற்கு விரைந்து சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ் இளைஞனை மோசம் செய்த தென்னிலங்கை இளைஞன் : மக்களே அவதானம்!!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனக்கு சொந்தமில்லாத புதிய மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

நெல்லியடி , கரணவாய் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடனேயே தென்னிலங்கை இளைஞர் தலைமறைவானதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த தென்னிலங்கை இளைஞர் கரணவாய் சோழங்கன் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் பார்த்தீபன் என்ற இளைஞருடன் நட்பாக பழகிவந்துள்ளார் இந்நிலையில் கடந்த 13 ஆம் திகதி கடை ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வர மோட்டார் சைக்கிளை தருமாறு இரவல் கேட்டுள்ளார்.

தென்னிலங்கையருடன் நட்பாக பழகிய காரணத்தினால் தனது Pulsar 220 Black Color பெறுமதி ரூபா 700,000 , வகை மோட்டார் சைக்கிளை கரணவாய் சோழங்கன் இளைஞர் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவான தென்னிலங்கை இளைஞரின் தொலைபேசியும் இயங்கவில்லை என்பதுடன் , அவர் பணிபுரிந்த பூ கடைக்கும் குறித்த இளைஞர் வருவதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த யாழ் இளைஞர் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸாரிடச்ம் முறைப்பாடு செய்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

நடுரோட்டில் மனைவியை தீவைத்து எரித்த கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரள மாநிலம், ஆலப்புழாவில் சேர்தலாவில் வசித்து வருபவர் 37 வயதான ஷியாம்ஜித். இவருடைய மனைவி 32 வயது ஆரத்தி. இவர் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் இன்று பிப்ரவரி 19ம் தேதி காலை, ஸ்கூட்டியில் ஆரத்தி தனது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றுக் கொண்டிருந்தார். அவரது கணவர் அவரை வழிமறித்து ஆரத்தி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

ஆரத்தியின் அலறல் சத்தம் கேட்டு வாகன ஓட்டிகள், அக்கம் பக்கத்தினர் உடனடியாக திரண்டு வந்து , எரிந்துக் கொண்டிருந்த ஆரத்தியை பலத்த தீக்காயங்களுடன் மீட்டு, உடனடியாக சேர்த்தலாவில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் ஆரத்தி தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக ஷியாம்ஜித் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. ஆரத்தியுடன் தீயில் சிக்கிய ஷியாம்ஜித்துக்கும் தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

பாடம் புரியாததால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் : கதறும் பெற்றோர்!!

தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் கணித பாடம் புரியவில்லை என தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரியின் தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி அம்பலத்தடிவிளையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அஜய் (19).
இவர் நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அஜய்யின் அறை கதவை அவரது தாய் தட்டியுள்ளார். ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சன்னல் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அஜய் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் சன்னல் வழியாக உள்ளே சென்று அஜயை கீழே இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், அஜய்யின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடந்த விசாரணையில், அஜய்க்கு கணித பாடம் புரியாததால் குழப்பத்தில் இருந்ததாக தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் தனது சித்தியிடம் கூறி கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்.

ஆனால் இந்த விடயம் வெளிநாட்டில் இருக்கும் தந்தைக்கு தெரிந்தால் கோபப்படுவார் என்று பயந்து அஜய் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

 

கடையொன்றில் பனிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அனுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்தவர்கள் அதில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தெரியவந்ததும் கடையின் உரிமையாளர் கல்லஞ்சியாகமவில் உள்ள வீட்டு மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த பனிஸை அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரே கொள்வனவு செய்துள்ளனர்.
மேலும், இருவரும் பனிஸ் பாக்கெட்டை சேவை நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதை சாப்பிடுவதற்காக ஒரு துண்டை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது, அதில் பல்லி கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் இப்பலோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து இப்பலோகம பொது சுகாதார அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்தலில், தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் இயங்கி வரும் இந்த பேக்கரியிலேயே பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டி பொலிஸாரை அச்சுறுத்திய பெண்கள்!!

அநுராதபுரம், மதவாச்சி பகுதியில் புதையல் தேடுவதற்காக நள்ளிரவில் வீட்டில் குழி தோண்டிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக வீட்டின் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உளவு பார்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு கிடைத்த தகவலின்படி, விசாரணைக்கு சென்ற மதவாச்சி பொலிஸாரை வீட்டினுள் நுழையவிடாது மூன்று பெண்கள் கைகளை அறுத்து அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மதவாச்சி பகுதியை சேர்ந்த தந்தையும், மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், உளவு பார்த்த தாய், மகள் மற்றும் தாயின் சகோதரி ஆகியோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.