அம்பாறை கல்முனை பிரதேசத்தில் பாடசாலை வேன் மோதி நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (29.02) நீலாவணையில்( கல்முனை) இடம்பெற்றுள்ள நிலையில், சம்பவத்தில் அருணா ஹர்க்ஷான் எனும் நான்கு வயது பாலகனே உயிரிழந்துள்ளார்.
வீட்டிற்குள் நின்று கொண்டிருந்த குறித்த சிறுவன் , கேற் திறந்திருந்ததும் தற்செயலாக ரோட்டிற்கு ஓடி வந்துள்ளார் . அபோது பாதையால் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் சிறுவனை மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் சிறுவன் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில், சிறுவனின் பிறந்த தினம் மார்ச் 21 ஆம் திகதி வரவுள்ள நிலையில், இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஆவரங்கால் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த பிரதாபன் ஷாலமன் என்ற 23 வயதான இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த இளைஞனை கடித்த விசர்நாய் வேறு யாரையும் கடித்திருக்கலாம் என கருதப்படுவதால் அப்பகுதியில் அண்மையில் நாய்க்கடிக்கு உள்ளானோர் வைத்தியசாலை நாடுவதுடன்,
உயிரிழந்த இளைஞனுடன் பழகியவர்கள் வைத்தியசாலையை நாடுவது சிறந்தது என அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு : யாழ்ப்பாணத்தில் நாய் கடிக்கு இலக்கான இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று (26) உயிரிழந்துள்ளார். மணற்பகுதி ஆவரங்கால் கிழக்கு பகுதியைச் சேர்ந்த பிரதாபன் சாலமன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் சில நாட்களுக்கு முன்னர் நாய் கடிக்கு இலக்கான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அந்த விடயம் தெரியந்துள்ளது.
குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.
அதற்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய இரண்டு பிள்ளைகளும் மீரிகம – மகாபோதி பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
02 வயது மதிக்கத்தக்க மற்றைய குழந்தையின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய நிலையில் மொரட்டுவை – பிரேமா சிறுவர் இல்லத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.
பெண்ணொருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணையும் அவரது மூன்று பிள்ளைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாசகம் பெறும் பெண்ணும் மூன்று பிள்ளைகளும் கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, முறைப்பாடு செய்த பெண் ஒரு குழந்தைக்கு நன்கொடை அளித்துள்ளார். அந்த பணத்தையும் யாசகம் பெறும் பெண் பெற்றுக் கொண்டதனால் இந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, யாசகம் பெறும் பெண்ணையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரம் ஒன்றை உருவாக்கி இந்தியாவை சேர்ந்த நபரொருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
குறித்த இந்த கின்னஸ் சாதனை தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சாய் திருமலாநீதி என்பவர் உலகிலேயே மிகச்சிறிய சலவை இயந்திரத்தை (Washing Machine) உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அது தொடர்பான காணொளியும் இணையத்தில் வைரலாகி வருகிறது. காணொளியில், Washing Machine-யை சாய் திருமலாநீதி உருவாக்கும் செயல்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
சுவிட்ச் மற்றும் ஒரு சிறிய பைப் உள்ளிட்ட சிறிய பாகங்களை நுணுக்கமாக முறையில் பயன்படுத்தி ஒருங்கிணைக்கிறார்.
மேலும், முழுமையாக அந்த சிறிய சலவை இயந்திரம் செயல்பட தொடங்குகிறது.
பின்னர், அந்த இயந்திரத்தில் தண்ணீரை ஊற்றி பவுடரை போட்டு சிறிய துணி ஒன்றையும் போடுகிறார். சிறிது நேரத்தில் அந்த துணியை வெளியே எடுத்தபோது அது சுத்தமாக காட்சி அளிக்கிறது.
தங்காலை – மாத்தறை பிரதான வீதியின் தலல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த் விபத்தில் கொட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெண்ணே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியில் 5 பேர் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த 33 வயதான முச்சக்கரவண்டி சாரதி, 15 வயது சிறுவன், 14 வயது சிறுமி மற்றும் 11 மாத குழந்தை ஆகியோர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா, புதிய பேரூந்து நிலையம் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றை இரவு நிறுத்திவிட்டு கொழும்பு பயணித்த ஒருவர் மறுநாள் பகல் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்ட இடத்தில் காணப்படவில்லை.
அப் பகுதியில் தேடிய போதும் மோட்டார் சைக்கிள் கிடைக்காத நிலையில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களை பொது இடங்களில், வீதியோரங்களில் நிறுத்தி விட்டு தூர பயணங்களை மேற்கொள்ளாது அதனை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுமாறு வவுனியா பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
யாழில் தனியார் பேருந்தில் பயணித்த, முல்லைத்தீவு இளைஞன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை(23) யாழ்ப்பாணம் நல்லூர் முன் வீதியில் இடம் பெற்றுள்ளது.
பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த பொழுது குறித்த இளைஞன் தவறி விழுந்ததாக போலீசார் கூறினர். உயிரிழந்த இளைஞன் முல்லைத்தீவு ஒட்டிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அழகன் நிதர்சன் என பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் விபத்து தொடர்பான விரிவான விசாரணைகளை யாழ்ப்பாண போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிழக்கிலங்கையில் தாயொருவர் தமது பெண்குழந்தைகளை தவிக்க விட்டுசென்ற நிலையில், குழந்தைகள் கண்னீர் விட்டு கதறி அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெருவில் அனாதை மாதிரி தம்மை விட்டுச்சென்றதாக அந்த பிஞ்சுகுழந்தைகள அழுதபடி கூறுகின்றனர். அந்த காணொளியில் சிறுமிகள் கூறுகையில்,
எங்களை விட்டிடிட்டு போய்விட்டீர்களே அம்மா, எங்கே இருக்கின்றீர்கள், நாங்கதான் முக்கியம் என சொல்வீர்களே, இப்பொழுது ரோட்டில் எங்களை அநாதையாக விட்டு சென்று விட்டீர்களே.
தயவு செய்து வாருங்கள் அம்மா, நாங்கள் சாப்பிட்டோமா இல்லையா என்பது கூட தெரியாது அனாதையாக விட்டுச்சென்றீர்களே , நாங்க இல்லாம எப்படி இருக்கின்றீர்கள்,
நாங்க உங்களுக்கு முக்கியம் இல்லையா, எங்களை பார்க்க வாங்கம்மா என கேட்டு சிறுமிகள் அழும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழக்கின்றது.
வவுனியாவில் முதியவர் ஒருவரை தாக்கி விட்டு கைத்தொலைபேசியை திருடிய சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று தெரிவித்தனர்.
வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் முதியவர் ஒருவர் வீதியால் சென்ற போது அவரை தாக்கி விட்டு அவரிடம் இருந்த கைத்தொலைபேசியை இருவர் பறித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட முதியவர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் 17 மற்றும் 38 வயதுடைய இருவர் பொலிசாரால் கைது செய்யபட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் முதியவரிடம் இருந்து பறித்துச் சென்ற கைத்தொலைபேசியை வவுனியா நகரப் பகுதியில் உள்ள மதுபான நிலையம் ஒன்றில் கொடுத்து விட்டு மது அருந்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த கைத்தொலைபேசியை பெற்றுக் கொண்ட மதுபானசாலை ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து திருடப்பட்ட கைத்தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளின் பின் குறித்த மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் குறித்த வியாபார நிலைய உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் இன்று (24.02) தெரிவித்தனர்.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் பீடி தருமாறு கூறியதுடன், குறித்த பெண் பீடியை எடுத்துக் கொண்டு நின்ற போது அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மன்னார் பாடசாலை ஒன்றில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் மாணவன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்டமை குறித்து குறித்த மாணவனின் பெற்றோர் வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னார் வங்காலை கிராமத்தில் அமைந்துள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் ஒருவர் கடந்த புதன்கிழமை (21.20.2024) மதியம் பாடசாலை வகுப்பறை ஒன்றிற்கு சென்றுள்ளார்.
இதன்போது இரண்டு மாணவ தலைவர்கள் மாணவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டு கன்னத்தில் அறைந்து மாணவனை இழுத்துச் சென்று த கணித பாட ஆசிரியரிடம் கொடுத்து எதிர்த்து கதைப்பதாக கூறியுள்ளனர்.
கணித பாட ஆசிரியர் மாணவனிடம் எவ்வித கேள்வியும் இன்றி , தன் பங்கிற்கு இரண்டு கன்னத்திலும் கண் மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
இவர்களைன் தாக்குதலாம் மாணவன் இயலாத நிலையில் வகுப்பறைக்குச் சென்றுள்ளார். பின்னர் மைதானத்திற்கு வருமாறு அறிவித்த நிலையில் மாணவன் ,தாமதித்து வந்ததாக மைதானத்தில் நின்ற ஆசிரியர் ஒருவரும் அதே கன்னத்தில் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாணவன் வீடு சென்ற நிலையில் திடீர் சுகயீனமடைந்த நிலையில் அன்றைய தினம் மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் கடுமையான தாக்குதலின் காரணமாக மாணவனின் ஒரு காது கேட்கும் திறன் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை மாணவனை தாக்கிய பாடசாலை ஆசிரியர் கைது செய்யப்படவில்லை எனவும், ஆசிரியரை காப்பாற்றும் முயற்சியில் பாடசாலை நிர்வாகம் செயல்படுவதாக சிறுவனின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மாணவனை பரிசோதித்த சட்ட வைத்திய அதிகாரி குறித்த மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை – கனடாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை மோசடிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன என யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த அறிவுறுத்தியுள்ளார். மேலும், இது தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், நீர்வேலியில் விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன், வீடொன்றில் புகுந்து வாகனத்துக்கு தீவைத்து விட்டு திரும்பியபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் (21.02.2024) அதிகாலை நாய் குறுக்காக ஓடியதால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள மானிப்பாய் வேம்படி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து, விபத்தில் சிக்கியவர் என்பது தெரியவந்தது.
இதேவேளை, வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுப்பிட்டியில் உள்ள வீடொன்றில் தாக்குதல் முயற்சி நடந்தது. இது குறித்து பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியபோது,
குறித்த வீட்டிற்குள் நுழைந்து துடுப்பு மட்டையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி, வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த வானுக்கு தீ வைத்து விட்டு திரும்பி வரும் போதே பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கியது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனும் காயமடைந்தவரும் இணைந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு விட்டு திரும்பி வரும் போது நீர்வேலியில் விபத்தில் சிக்கினர்.
அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றையவர், மோட்டார் சைக்கிளை மறைத்து வைத்து விட்டு, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
ஒரு தலைக்காதல் விவகாரத்தினால் இந்த வன்முறை தாக்குதல் நடத்ததாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நபர் உட்பட இருவரிடம் அச்சுவேலி பொலிஸார் மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான கொழும்பு பல்கலைக்கழகத்தின் இளம் உதவி விரிவுரையாளரின் மூளை செயலிழந்ததால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிய 27 வயதுடைய லக்மினி போகமுவ, அண்மையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்திருந்தார்.
பத்தரமுல்லை விக்கிரமசிங்கபுர சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகில் வீதியைக் கடக்கும்போது லொறியொன்று மோதியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேலைக்கு செல்வதற்காக விக்கிரமசிங்கபுரத்திலிருந்து பாதசாரி கடவைக்கு அருகில் வீதியின் மறுபுறம் செல்ல முயன்ற போது, பத்தரமுல்லை பெலவத்தையிலிருந்து தலவத்துகொட நோக்கிச்சென்ற லொறியின் முன்பகுதியில் மோதி வீதியில் விழுந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களனிப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சந்திரசிறி போகமுவவின் ஒரே பிள்ளையான லக்மினி போகமுவ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் பிரிவில் உதவி விரிவுரையாளராக கடமையாற்றி வந்த நிலையில் விபத்தில் உயிரிழந்திருந்தார்.
இந்நிலையில், குறித்த யுவதிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாகவும், இறப்பதற்கு முன்னர் திருமண மோதிரங்களும் ஹோட்டல்களும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் -கிதுலுதுவ பிரதேசத்தில் வானுடன் லொறி மோதி இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (22.02.2024) மாலை இடம் பெற்றுள்ளது. கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து மேலதிக விசாரணை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த வேன் எதிர் திசையாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லொறியுடன் மோதியதினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வானின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்கமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ள நிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்ஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியர் கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.