வவுனியா குருமன்காடு பகுதியில் கிணற்றிலிருந்து 29 வயதுடயை இளம் பெண்ணின் சடலம் மீட்பு!!

வவுனியா குருமன்காடு கோவில் வீதி பகுதியில் கிணற்றிலிருந்து 29வயதுடைய இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்படுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக காணப்பட்டவராவர். இம் மரணம் தற்கொலையா அல்லது எதிர்பாராது இடம்பெற்றதா அல்லது கொலையாக என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளனர்.

யாழில் தனிமையில் வசித்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவர், வீட்டுக்கு அருகில் உள்ள தோட்ட கிணற்றில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் யாழ்ப்பாணம் கரணவாய் தெற்கை சேர்ந்த, சிவஞானம் கனகமணி (வயது 71) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மக்களை ஏமாற்றி 500 கோடி சுருட்டிய ஆசிரியருக்கும் யுவதிக்கும் நடந்த பரிதாபம்!!

தென்னிலங்கையில்..

தென்னிலங்கையில் மக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி 500 கோடி ரூபாவை மோசடி செய்த நபரையும், அவரது கள்ளக்காதலியையும் விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று (28.01) கஹட்டகஸ்திகிலிய பதில் நீதவான் உத்தரவிட்டார்.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற இந்த மோசடி சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் , சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதான சந்தேக நபர்களை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வீரசேகர முதியன்செலாகே தரிந்து இரோஷன் வீரசேகர என்பவரும், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடிகையான எகொட கெதரவைச் சேர்ந்த சமிலா பியதர்ஷனி ராஜரத்ன என்பவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், 2021 ஆம் ஆண்டு கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் “ட்ரெட்வின் ஷேர்” என்ற பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்தி பணத்தை மோசடி செய்துள்ளார்.

இவர் மக்களை ஏமாற்றி கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தனது கள்ளக்காதலியுடன் தங்கியிருந்து மக்களிடம் மோசடி செய்துள்ளார். அதோடு அந்த பணத்தில் காணிகள் மற்றும் வாகனங்களை வாங்கி மிக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு, காதலியின் பெயரில் 80 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகையும் பராமரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மோசடி செய்யப்பட்ட பணத்தை முதலீடு செய்த குற்றச்சாட்டில் அவரது காதலியும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 39 வயதுடைய தரிந்து ஈரோஸ் வீரசேகர பட்டதாரி ஆசிரியராவார். அதோடு அவர் விகாரையொன்றின் பஸ்நாயக்க நிலமேயாகவும் செயற்பட்டார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் உண்மைகளை முன்வைத்துபோது,

சந்தேக நபர் இரண்டு வருடங்களாக பொலிஸ் விசாரணைகளுக்கு உதவாது தலைமறைவாக இருந்தவர் எனவும், சந்தேக நபர் எவ்வாறு சம்பாதித்தார் என்பதை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு சொத்துக்களை வாங்கியவர் எனவும் சுட்டிக்காட்டினர்.

அதோ, குறிப்பிட்ட காலப்பகுதியில் அவ்வளவு பணத்தை பெறுவது சாத்தியமில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பாதிகப்பட்ட 180க்கும் மேற்பட்ட விவசாயிகள் முறைப்பாடு செய்துள்ளதாகவும், கடந்த ஜூலை மாதம் கஹடகஸ்டிஜிலிய பிரதேசத்தில் போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டார்.

மேலும் , சந்தேகநபருக்கு பிணை வழங்கினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடும் என்பதால் ,அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையின் இயக்குனருக்கு கிடைக்கப்பெற்ற சர்வதேச விருது!!

இலங்கையில்..

இலங்கையின் பிரபல இயக்குனரான ஜகத் மனுவர்ணா 22 வது டாக்கா சர்வதேச திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனருக்கான விருதை வென்றுள்ளார்.

ering Mountains) படத்திற்காக இந்த விருது கிடைத்துள்ளது. ரஹஷ் கியன கந்து (Whispering Mountains) படம் ஜகத் மனுவர்ணாவின் முதல் படம் என்பதும் சிறப்பு அம்சம்.

பிள்ளைகளால் விரக்தி : 23 கோடி ரூபாவை வளர்ப்பு பிராணிகளுக்கு எழுதி வைத்த மூதாட்டி..!!!

சீனாவில்..

தனது பிள்ளைகளை கவனிக்காததால் 23 கோடி சொத்துகளை மூதாட்டி ஒருவர் பூனைகள் மற்றும் நாய்களுக்கு எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது பிள்ளைகள் 3 பேருக்கும் சொத்துகளை கொடுப்பதாக உயில் எழுதி இருந்த நிலையில்தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது யாரும் தன்னை பார்க்க வராததால் விரக்தியில் இவ்வாறு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது 3 பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுக்கும் வகையில் உயில் எழுதி வைத்தார்.

ஆனாலும் அந்த மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது அவரது பிள்ளைகள் 3 பேரும் ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. இது லியூவுக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது.

இதனால் ஆவேசம் அடைந்த அவர் தனது உயிலை மாற்றி எழுதி சொத்துகள் அனைத்தையும் தான் வளர்க்கும் நாய்கள் மற்றும் பூனைகள் மீது எழுதி வைத்துள்ளார். இதையறிந்த அவரது பிள்ளைகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால், இதுபோன்ற செயல்களுக்கு அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பதால், கால்நடை மருத்துவ மனையை துவக்கி, நாய், பூனையை நன்றாக பராமரிக்கும்படி, விலங்குகள் நல அமைப்பிடம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் நிலையில், பல பயனர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதேவேளை சீனாவில் வளர்ப்பு பிராணிகள் மீது சொத்து எழுதி வைக்க அந்நாட்டு சட்டத்தில் இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் வெளிநாட்டு பெண்ணிடம் கைவரிசை காட்டிய சகோதரர்கள் : வெளியாகிய சிசிரிவி காணொளி!!

யாழில்..

ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை நுாதனமான முறையில் திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களிடம் இருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியை சேர்ந்த குறித்த பெண், பொருட்களை கொள்வனவு செய்வதற்காக யாழ். திருநெல்வேலி சந்தைக்கு வந்த போது, அவரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், 500 யூரோ மற்றும் 20, 000 இலங்கை ரூபா அடங்கிய கைப்பையை கைக்குழந்தையுடன் வந்த பெண்ணொருவர் நூதனமான முறையில் அபகரித்துள்ளார்.

இந்நிலையிலேயே, திருட்டுச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கண்காணிப்பு கமராவின் உதவியுடன் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் புலனாய்வு பிரிவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். மேலும், திருடப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகனின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை பலியான சோகம்!!

கேகாலையில்..

கேகாலை – தெதிகம, ஜயலத் கந்த பிரதேசத்தில் மகன் தவறுதலாக மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளார். காட்டுப்பன்றி வேட்டைக்கு தந்தையும் மகனும் நேற்றிரவு (28) சென்ற வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய தந்தை தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்படி டபிள்யூ.சம்பத் என்ற 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதுடன், அவரது 17 வயது மகனே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, தந்தையும் மகனும் காட்டுப்பன்றியை சுற்றிவளைக்க இரு பக்கமாக சென்றுள்ள நிலையில் மகன் சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. இதன் பின்னர், தனது தவறினால் தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன் உறவினர் ஒருவருடன் பொலிஸில் வந்து சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரட்டைத் தொடர்ந்து தக்காளி விலை திடீரென அதிகரிப்பு!!

இலங்கையில்..

நாட்டில் கரட் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து தக்காளியின் விலையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தை மேற்கோள்காட்டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

விலை அதிகரிப்பு தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த சில மாதங்களாக பெய்த கனமழையால் நுவரெலியா தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த தக்காளி பயிர் நாசமடைந்துள்ளது.

எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு எனவே பசுமைக்குடில்களில் பயிரிடப்பட்ட மரக்கறி பயிர்களே இந்நாட்களில் சந்தைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ தக்காளியின் மொத்த விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய மொத்த விற்பனை நிலையங்களில் (29) விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளின் மொத்த விலை பட்டியலை மத்திய நிலைய காரியாலயம் வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் கரட் 1350/=, சீமை தக்காளி 800/=, சுக்கினி 550/=, சிவப்பு ராபு 1100/=,புரகோலின் 4100/=, ரோஸ்மேரி 550/=, பாசலி 1500/=, மிஞ்சி இலை 800/=, சிவப்பு சலாது 1800/=, ஐஸ்பேக் 2600/=, சல்திரி 1200/=, பெஸில் இலை 3100/=, குடைமிளகாய் சிவப்பு 1900/=, குடைமிளகாய் மஞ்சல் 1900/=

குடைமிளகாய் பச்சை 1300/=, சிவப்பு கோவா 3700/= என விற்பனை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லீக்ஸ் 460/=, கோவா 520/=, ராபு 170/=, இலையுடன் பீட் 470/=, இலை அகற்றிய பீட் 570/=, உருளைகிழங்கு 320/=, சிவப்பு உருளைகிழங்கு 340/=, நோக்கோல் 370/= என மொத்த விற்பனை விலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஸ்கட் சாப்பிட்ட 25 வயது பிரித்தானிய பெண் அதிர்ச்சி மரணம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் வசித்து வந்த பிரித்தானிய இளம்பெண் ஒருவர், வேர்கடலையால் தயாரிக்கப்பட்ட பிஸ்கட் சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரித்தானியாவைச் சேர்ந்த பாலே நடனக் கலைஞர் Orla Baxendale. 25 வயதான இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார்.

இங்கிலாந்தின் கிழக்கு Lancashire பகுதியைச் சேர்ந்த Baxendale, தனது நடன வாழ்க்கையை அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். Orla Baxendale-வுக்கு கடுமையான வேர்க்கடலை ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால் உணவுப்பொருட்களை வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மளிகைக் கடையில் பிஸ்கட்ஸ் வாங்கியுள்ளார். அதன் package label-யில் வேர்க்கடலை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் அந்த பிஸ்கட்டை அவர் சாப்பிட்டுள்ளார்.

ஆனால், அதில் வேர்க்கடலை கலந்திருந்ததால் Orla-வுக்கு உடனடியாக ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. அதனை கட்டுப்படுத்த அவர் EpiPen எனும் ஊசியை செலுத்திக் கொண்டபோதிலும், Anaphylactic Shock ஏற்பட்டு 11ஆம் திகதி Orla Baxendale பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து Stew Leonard-யின் மாளிகைக் கடை, Orla Baxendale-வின் இறப்புக்கு காரணமான Vanilla Florentine Cookiesஐ திரும்பப் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில், Orla Baxendaleவின் அதிர்ச்சி மரணத்தால் அவரது குடும்பத்தினர் கற்பனை செய்ய முடியாத பேரழிவிற்கு ஆளாகியுள்ளதாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடி முறை அழுது இருக்கிறேன் : கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

நடிகை..

“என்னுடைய கணவர் இறந்த பின்னர் அவரின் புகைப்படத்தை பார்த்து பல முறை அழுது இருக்கிறேன் ” என நடிகை சண்முகப்பிரியா பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பிரபல தொலைக்காட்சியில் கடந்த 2010 – 2015 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒளிபரப்பான சீரியலில் “ராகினி ”கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா.

இதனை தொடர்ந்து நாதஸ்வரம் சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார். இதிலும் சண்முகப்பிரியாவிற்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. இதற்கடுத்தபடியாக வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பொம்முக்குட்டி அம்மாவுக்கு, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் சண்முகப்பிரியா, அரவிந்த் சேகர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னர் தம்பதிகள் இருவரும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருந்தனர். மாறாக திடீரென ஒரு நாள் அரவிந்த் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார்.இது சண்முகப்பிரியாவை போல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இப்படியொரு நிலையில் சமூக வலைத்தளங்களில் தவறான வதந்திகள் பரவ ஆரம்பித்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சண்முகப்பிரியா, “தவறான கருத்துக்களை பகிர வேண்டாம்.

குடும்பத்திலுள்ளவர்களுக்கு கவலையாக இருக்கின்றது..” என பேசி வீடியோவொன்றை பகிர்ந்திருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், “என் வாழ்க்கையில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன என என்னுடைய கணவரின் புகைப்படத்தை பார்த்து கோடி தடவைக்கு மேல் நான் அழுது இருக்கிறேன்.” என உருக்கமாக பேசியுள்ளார்.

குடி போதையில் மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை!!

கர்நாடகவில்..

குடிக்க பணம் தர மறுத்த மகனை தந்தை சுட்டுக் கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள குடகு பகுதியைச் சேர்ந்தவர் நர்தன் போபண்ணா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர், வீட்டில் தந்தை சுரேஷ் மற்றும் தாயாருடன் வசித்து வந்தார்.

நர்த்தனின் தந்தை சுரேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. படுத்த படுக்கையான மனைவியையும் கவனிக்கப்படவில்லை. குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தனிடம் சுரேஷ் அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

நேற்று மாலை வழக்கம்போல் தந்தைக்கும் மகனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மது குடிக்க பணம் கேட்டு மகன் நர்த்தன் போபண்ணாவிடம் சுரேஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இதனால் நர்த்தன் போபண்ணா அவரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டினார். ஆனால் அறைக்குள் இருந்து சுரேஷ் குடிக்க பணம் கேட்டுள்ளார்.

பூட்டிய அறைக்கு வெளியே நர்த்தன் போபண்ணா அமர்ந்திருந்தார். அப்போது திடீரென கதவின் பூட்டை உடைக்க கதவின் பின்புறத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டார். நர்தனின் தொடையில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் தங்கையை அழைத்தார் நர்தன் போபண்ணா. தந்தை துப்பாக்கியால் சுட்டதாக கூறினார்.

அவரது சகோதரி சம்பவ இடத்திற்கு வந்தபோது நர்த்தன் போபண்ணா சுயநினைவின்றி இருந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நர்த்தன் போபண்ணா உயிரிழந்தார்.

இந்த கொலை குறித்து காமக்ஷிபால்யா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நர்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போதையில் இருந்த சுரேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை!!

சென்னையில்..

சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை 5ம் வகுப்பு மாணவன் காதை பிடித்து திருகி உள்ளார். இதில் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பது உத்தரவாக உள்ளது. அதேநேரம் பள்ளிக்களில் குறும்புத்தனம் செய்யும் மாணவ, மாணவிகளை, கண்டிக்கிறார்கள். பள்ளிகளுகக்கு வீட்டுப்பாடம் செய்யாமல் வருவோர், படிக்காமல் வருவோரையும் கண்டிக்கிறார்கள்.

ஒழுங்கீனமாக நடக்கும் குழந்தையை சில ஆசிரியர்கள் பயமுறுத்தி சரி செய்யும் நோக்கில் அடிக்கவும் செய்கிறார்கள். அதிமுக – பாஜக ரகசிய டீலிங்.. அதிராம்பட்டினம் பள்ளி விவகாரத்தில் அவசரம் வேண்டாம்! பீட்டர் அல்போன்ஸ் அப்படி அடிக்கும் ஆசிரியர்கள், சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது விபரீதத்தில் முடிகிறது.

அப்படித்தான் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விபரீதமாக மாறி காவல்துறை வரை சென்றுள்ளார்கள். பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை உள்ளது என்றாலும், எதற்காக கண்டிக்கிறார்கள் என்பதும் மிக முக்கியமாக பார்க்கிறார்கள் பெற்றோர்கள்.

ஆசிரியர்கள் தவறான காரணங்களுக்காக கண்டித்தால் அவர்களை தட்டிக்கேட்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் இங்கும் தட்டிக்கேட்டுள்ளார்கள் பெற்றோர்கள்.

என்ன நடந்தது என்பதை பார்ப்போம். சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்துத் திருக்கி உள்ளாராம் பள்ளி ஆசிரியை நாயகி. மாணவனின் காதை ஆசிரியை ஓங்கி திருகியதால், காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் மாணவர்.

இதனால் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பின்னாடியே பள்ளிக்கு சென்று ஆத்திரத்துடன் ஆசிரியையையும் தாக்கி உள்ளனர்.

அப்போது தான் என்ன நடந்தது என்பது பள்ளியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் போலீசார், சம்பவம் குறித்த விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் மாணவரின் காதை பிடித்து திருக்கி காயப்படுத்திய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து ஆசிரியை நாயகியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை காதை பிடித்து திருகி மாணவனை படுகாயப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

வீடுகளை வாடகைக்கு விடுபவர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!!

இலங்கையில்..

இந்த நாட்களில் அதிக பணத்தை செலுத்தி வாடகைக்கு வீடுகளுக்கு வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தவிர, வீடுகளை வாடகைக்கு விடும் நபர்களின் நடவடிக்கைகள் குறித்தும் உள்ளூர் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கை காரணமாக போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிலர் குடும்பங்களுடன் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் வாடகைக்கு வீடுகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதென பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பேருந்து விபத்து!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டாவளை பகுதியில் தனியார் பேருந்தொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்றைய தினம் (27.01.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்து பயணிகளை ஏற்றிச்சென்ற போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தினை உடைத்துக்கொண்டு கால்வாயில் விழுந்துள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீண்டும் அதிகரிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் : கடும் நெருக்கடியில் மக்கள்!!

இலங்கையில்..

இந்த வருடத்தின் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்திகளை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லாததால், தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்திலும் பொதுமக்கள் அதிக விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் எதிர்பார்க்கும் வருவாய் இலக்குகளின்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக் கொள்கையினால் இதுவரையில் ஒருவர் ஒரு மாதத்தில் செலுத்திய மறைமுக வரியான 6330.00 ரூபா 3684 ரூபாயிலிருந்து 10,014.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.  இதன்படி, நாட்டில் வசிக்கும் ஒருவர் மாதாந்தம் 14,737 ரூபா மறைமுக வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்த விடயங்களின் அடிப்படையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரிகளை அரசாங்கம் மேலும் அதிகரிக்க வேண்டியிருக்கும். எனவும், இதன் காரணமாக எதிர்காலத்தில் மக்கள் தமது வாழ்க்கைச் செலவுகளை ஈடுசெய்வதில் கடும் நெருக்கடி உள்ளாகலாம் எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட மற்றுமொரு விபத்து!!

மாத்தறையில்..

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த கொள்கலன் பாரவூர்தி ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 118 ஆவது கிலோமீற்றருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து காரணமாக மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கொடகமையில் வௌியேறி கொக்மாதுவ ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் மீண்டும் நுழையுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.