யாழ்ப்பாணத்தில் திடீரென மாயமான இளைஞன்!!

யாழில்..

யாழ். இணுவிலை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 26 ஆம் திகதி வியாழக்கிழமை மதியத்தில் இருந்து இளைஞன் காணாமல்போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

இளைஞன் மாயமான தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

காணாமல்போன இளைஞனை பற்றிய தகவல் அறிந்தால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 772690673 அல்லது 0776523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வவுனியா ஏ9 வீதியில் பேரூந்து மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதி வலயக்கல்வி பணிமணைக்கு முன்பாக இன்று (28.01.2024) காலை இடம்பெற்ற பேரூந்து – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து மோட்டார் சைக்கிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிலின் சாரதி காயமடைந்த நிலையில் பொதுமக்களின் உதவியுடன் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கனடா ஆசையால் பெண்ணிடம் ஏமாந்த பலர்!!

கனடாவில்..

கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 14 பேரை ஏமாற்றி தவணை முறையில் 20 – 75 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்ட பெண் கைதாகியுள்ளார். இத்தகவலை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த சிலர், பெண்ணின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளது. சந்தேகநபரான பெண் , அவர்களுக்கு போலி ஆவணங்களைத் தயாரித்துவழங்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குருணாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட பொத்துஹெர, கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்களே இவரது பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துள்ளனர்.

கைதான 37 வயதுடைய சந்தேக நபர் வத்தளை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது .

திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டியால் பரபரப்பு!!

கொழும்பில்..

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றியதால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கொழும்பு பம்பலப்பிட்டி காலி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பிரதேசவாசிகள் முச்சக்கரவண்டியில் ஏற்பட்ட தீப்பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து!!

அவிசாவளையில்..

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா சென்றவர்கள் விபத்தில் சிக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுற்றுலாவை முடித்துக் கொண்டு அதே வேனில் திரும்பிச் சென்றுக்கொண்டிருந்த போது, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறிமீது வேன் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது வேனில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த வேன் சாரதி உட்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று காலையில் மற்றுமொரு கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி!!

குருணாகலில்..

குருணாகலில் இன்று காலையில் ஏற்பட்ட வீதி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாரம்மல – கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் நால்வர் பயணித்த நிலையில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த மோசமான அனுபவம்!!

அங்குலானயில்..

12 வயது சிறுவனை கடலுக்குள் இழுத்துச் சென்று உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்திய இளைஞனும் அதற்கு உதவிய மற்றுமொரு சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை அங்குலான பொலிஸாரால் நேற்று(26.01.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவன் கடற்கரையில் இருந்தபோது சந்தேகநபர்கள் இருவரும் தன்னை தண்ணீருக்குள் இழுத்து, உடல் ரீதியாக துன்புறுத்தியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் வேலை வாய்ப்பு : பெருந்தொகை பணமோசடியில் சிக்கிய பெண்!!

கனடாவில்..

கனடாவில் வேலை வாய்ப்பினை பெற்றுத்தருவதாகக்கூறி பெருந்தொகை பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் பல்வேறு பிரதேசங்களில் வசிக்கும் 14 பேரை ஏமாற்றி பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் புலனாய்வுப்பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்ற 37 வயதுடைய சந்தேகநபர், சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும், கனடாவில் வேலை வழங்குவதாக குருநாகலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 14 பேரை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது.

கொட்டாஞ்சேனை, நீர்கொழும்பு, வத்தளை பிரதேசங்களில் 20-75 இலட்சம் ரூபா தவணை முறையில் கிடைத்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வு அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

கனடாவில் வேலை வாய்ப்புக்காக காத்திருந்த பலர் இவரின் பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டு பணத்தைக் கொடுத்து வேலைகளை இழந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஏமாற்றப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக, அவர்களிடம் போலி ஆவணங்களைத் தயாரித்து வழங்கியுள்ளார்.

மேலும் அவற்றில் தூதரகத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் பிரபல நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் போலி ஆவணங்கள் உள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் எடுத்த விபரீத முடிவு!!

ஹொரணையில்..

ஹொரணை பிரதேசத்தில் வாகன விபத்தில் மனைவி உயிரிழந்ததையடுத்து, துக்கத்தைத் தாங்க முடியாமல் கணவர் விஷம் குடித்து உயிரை மாய்க்க முயற்சிதுள்ளார். கடந்த 20ஆம் திகதி, இங்கிரிய எலபட வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த 20 வயதுடைய யுவதி படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்தில் அவரது கணவர் லேசான காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய கணவனுக்கு மருத்துவமனையில் இருந்து அழைப்பு கிடைத்து சென்ற போது மனைவி உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.

மனைவியின் மரணத்தை தாங்கிக் கொள்ள முடியாத கணவன் வீட்டிற்கு வந்தவுடன் விஷம் குடித்துள்ளார். குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்கிரிய பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு!!

பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25.01) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபரின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர் தேசத்தில் தற்போது வசிக்கும்,

வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன், ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கை சாரணர் சங்கத்தின் வவுனியா மாவட்ட ஆணையாளராக ஜனாதிபதி சாரணன் நியமனம்!!

இலங்கை சாரணர் சங்கத்தினால் வவுனியா மாவட்டத்திற்கான புதிய ஆணையாளராக யோகதாஸ் கஜேந்திரன் 24.01.2024 அன்று உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனத்தினை பிரதம ஆணையாளர் ஜனப்பிரித் பெர்ணாண்டோ அவர்கள் புதிய வவுனியா மாவட்ட ஆணையாளர் கஜேந்திரனிடம் இலங்கை சாரணர் சங்கத்தின் தேசிய தலைமைக் காரியாலயத்தில் வைத்து வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி சாரணன் யோகதாஸ் கஜேந்திரன் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவனும், ஜனாதிபதி விருது பெற்ற சாரணரும் ஆவர். இவர் 2002ம் ஆண்டு பூட்டானில் நடைபெற்ற தெற்காசிய நட்புறவு பாசறையில் இலங்கை சார்பாக கலந்து கொண்டிருந்தார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பரிதாபமாக பலி!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று 25.01.2024 இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றிவந்த உழவு இயந்திரமும் சிறியரக பட்டாவாகனமும் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பட்டா வாகனத்தில் பயணித்த வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த 28 அகவை உடைய க.நவீன் என்ற இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளை உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் நெல்லு வெட்டும் இயந்திரத்தினை ஏற்றி சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியினை கைதுசெய்துள்ளனர்.

விபத்திற்குள்ளான இரண்டு வாகனங்களையும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

அமெரிக்க இளைஞனை இந்திய முறைப்படி திருமணம் செய்த தமிழக பெண்!!

அமெரிக்காவில்..

அமெரிக்க இளைஞரை இந்திய முறைப்படி தமிழக பெண் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவத்திற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. தமிழக மாவட்டமான சிவகங்கை, காரைக்குடி முத்துப்பட்டனத்தை சேர்ந்த தம்பதியினர் சிதம்பரம் மற்றும் மீனாள்.

இவர்களுடைய மகள் பிரியா அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பிரியாவுக்கு நியூ ஜெர்சி பகுதியில் வசிக்கும் மைக்கேல், ஏஞ்சல் தம்பதியின் மகனான மென்பொருளாளர் சாம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இவர்களுடைய நட்பு, காதலாக மாறியது.

இதனைத்தொடர்ந்து இருவரும் திருமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர். இதனால், பிரியா தனது வீட்டில் இதை பற்றி தெரிவித்து பெற்றோர் சம்மதத்தை பெற்றார்.

ஆனால், பிரியாவுக்கு அமெரிக்காவில் திருமணம் செய்வதை விட, இந்திய முறைப்படி சொந்த ஊரில் திருமணம் செய்ய வேண்டும் ஆசை இருந்ததால் அதனை சாமிடம் தெரிவித்தார். அதற்கு, அவரும் சம்மதம் தெரிவித்து தனது பெற்றோருடன் அமெரிக்காவில் இருந்து சிவகங்கைக்கு வந்தனர்.

அங்கு, சில நாட்களாக திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில், நேற்று காலை காரைக்குடியில் செட்டிநாட்டு நகரத்தார் பாரம்பரிய முறைப்படி மாக்கோலம், மாவிலை தோரணம், அரசனிக்கால் மணவறை, நாதஸ்வர இசையுடன் கெட்டிமேளம் முழங்க இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது சாமின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமிழ் பாரம்பரிய உடையில் வந்து உற்சாகத்துடன் மணமக்களை வாழ்த்தினர்.

மனைவியைக் கொன்ற கணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

கேரளாவில்..

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே குடும்பத் தகராறில் மனைவி குழந்தைகளை அரிவாளால் வெட்டிவிட்டு கணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பகுதியில் பினு (40), ஷீஜா (38) ஆகியோர் தங்களது இரு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இருவருக்கும் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலையில் இந்த தம்பதிகளின் குழந்தைகள் இருவரும், அரிவாளால் வெட்டப்பட்ட காயங்களுடன் அழுதபடியே வீட்டிலிருந்து அருகில் உள்ள வீடுகளை நோக்கி ஓடி வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக விரைந்து சென்று வீட்டிற்குள் பார்த்தபோது,

அங்கு ஷீஜா, அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 11 மற்றும் 8 வயது சிறுவர்கள் சிகிச்சைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அருகில் உள்ள கொரட்டி பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் ஆண் சடலம் ஒன்று கிடைப்பதாக தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் ஆய்வு செய்தபோது அது பினு என்பது தெரிய வந்தது. இதனால், குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிவிட்டு, பினு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இருப்பினும் எதனால் இந்த சம்பவம் நடைபெற்றது என்று தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் இருவருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சற்று உடல்நலம் தேறிய பிறகே, இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோகேம் விளையாடுவதால் ஏற்படும் பிரச்சனை : உலகம் முழுக்க நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

அமெரிக்காவில்..

நீங்கள் அதிகமாக வீடியோ கேம் விளையாடுபவராக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக நாம் ஹெட்போன் அணிந்து அப்படியே அதிக நேரம் திரையை பார்த்து வீடியோ கேம் விளையாடினால் நம் கண்கள் பாதிப்பு அடைவதோடு,

காதுகளும் பாதிப்பு அடையும். எப்போதும் ஹெட்போன் அணிந்து வீடியோகேம் விளையாடுவதால் காதிரைச்சல் (Tinnitus) அல்லது கேட்கும் திறன் இழந்து போகும் வாய்ப்பு ஏற்படவுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

ஹெட்போன் அணிந்து கேம் விளையாடும் போது அனுமதிக்கப்பட்ட சத்தத்தை விட அதிகமான சத்தம் தான் நம் காதுகளுக்கு கேட்டு கொண்டு தான் இருக்கிறது. இது தொடர்பாக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடத்தப்பட்டது.

அப்போது, 20 முதல் 68 சதவிகிதம் இளைஞர்கள் வீடியோ கேம் விளையாடுகின்றனர் என்று தெரியவந்தது. அதில் 60 சதவிகிதத்தினர் கேமிங் செண்டர் சென்று விளையாடுவதாக தென்கொரியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.

மேலும், அமெரிக்காவில் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அதிக சத்தத்துடன் வீடியோ கேம் விளையாடுவதாக அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, காது கேளாமைக்கும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், நிரந்தரமாக அவர்களுக்கு காது கேட்கும் திறன் இழக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஆசிரியை கழுத்தை நெரித்து கொலை செய்து எரித்த இளைஞன்!!

கர்நாடகாவில்..

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் தீபிகா.28 வயதாகும் இவர் மேலக்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ரீல்ஸ் செய்வதிலும் பிரபலமானவர்.

இவருடைய கணவர் லோகேஷ். இவர்களுடைய மகன் 8 வயது லோகேஷ். ஜனவரி 20ம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்ற தீபிகா நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்போனை தொடர்பு கொண்ட போதும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடிவந்தனர்.

காணாமல் போன தீபிகாவின் வாகனம் மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவில் வாசலில் நிற்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீவிர விசாரணையில் அங்கே எரிந்த நிலையில் சடலம் ஒன்றை கைப்பற்றினர்.

இறுதியில் அது மாயமான ஆசிரியை தீபிகாவின் சடலம் என்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கொடூரமாக கல்லால் தாக்கி கொலை செய்து உடலை எரித்தது விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக நித்தேஷ் கவுடா என்ற 22 வயது இளைஞருடன் பழகி வந்தார்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தீபிகாவுடன் ரீல்ஸ் தயாரிப்பு பணியில் நித்தேஷ் கவுடா உடன் இருந்தார். தீபிகாவுடன் நெருங்கிப் பழகிய சூழ்நிலையில் நாளுக்கு நாள் இவரின் போக்கு சரியில்லாததால் தீபிகா இவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.

இந்நிலையில் நித்தேஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாட தீபிகாவை, மேலக்கோட்டில் உள்ள யோக நரசிம்ம சுவாமி கோவிலுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். கோவிலில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் தீபிகாவின் சுடிதார் சால் மூலம் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பயத்தில் உடலை எரித்து மலையடிவாரத்தில் புதைத்துள்ளார். பாதி எரிந்த தீபிகாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த அறிக்கைக்கு பிறகே தீபிகா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும் என்கின்றனர் காவல்துறையினர்.