உலகின் உயரமான பெண் 23 வயதில் மரணம் : உயிரைப் பறித்த ஜலதோஷம்!!

சீனாவில்..

உலகின் உயரமான பெண் என அறியப்படும் இளம்பெண் ஒருவர், ஜலதோஷத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளால் தனது 23ஆவது வயதில் மரணமடைந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த Xiao Mo, 7அடி 5 அங்குல உயரம் கொண்டவர்.

உலகின் உயரமான பெண் என அழைக்கப்படும் Xiao Mo, சீன சமூக உடகங்களில் பிரபலமானவர் ஆவார். தனது அசாதாரண உயரம் காரணமாக இதயப் பிரச்சினை உட்பட அவருக்கு பல உடல் நலப் பிரச்சினைகள் இருந்தன.

இந்நிலையில், ஜல்தோஷம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உருவான பிரச்சினைகளால், Xiao Mo இம்மாதம், அதாவது ஜனவரி மாதம் 15ஆம் திகதி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தனது வாழ்வைக் குறித்த தகவல்களை சீன சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டுவந்த Xiao Moவை 152,000 பேர் பின்தொடர்கிறார்கள். Xiao Moவை அவரது தாயும் தந்தையும் கைவிட்டுவிட்டதால், அவரது தாத்தா பாட்டிதான் அவரை வளர்த்தார்கள்.

Xiao Moவின் உடல் தகனம் செய்யப்பட்டபின்பு, அவரது அஸ்தியைக்கூட இதுவரை அவரது தந்தை பெற்றுக்கொள்ள வரவில்லை என கூறப்படுகிறது. Xiao Mo உலகின் உயரமான பெண் என சிலரால் அழைக்கப்பட்டாலும், உண்மையில், துருக்கி நாட்டவரான 7 அடி 7 அங்குல உயரமுடைய, Rumeysa Gelgi என்னும் பெண் தான் உலகின் உயரமான பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வயது குழந்தை கங்கையில் மூழ்கடித்து கொலை : மூடநம்பிக்கையால் விபரீதம்!!

உத்தராகண்ட் மாநிலத்தில்..

நாகரீகமும், தொழில்நுட்பமும் எத்தனையோ வளர்ந்துவிட்ட போதும் இன்னும் பல இடங்களில் மூடநம்பிக்கைகள் மாறவில்லை. இவை பல நேரங்களில் விபரீதத்தில் கொண்டு விடுகிறது. அந்த வகையில் உத்தராகண்ட் மாநிலத்தில் 5 வயது ஆண் குழந்தைக்கு ரத்தப் புற்று நோய் ஏற்பட்டது.

இதனை குணப்படுத்துவதாக குழந்தையை பெற்றோர் கங்கை நீரில் மூழ்கடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்த கொடூர வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் இருந்து கங்கைக்கு வருகை தந்த குடும்பத்தினர் தங்கள் 5 வயது ஆண் குழந்தையுடன் உத்தராகண்ட் மாநிலம், ஹர்கி பௌரிக்கு வந்தனர். அவர்கள் தங்கள் குழந்தைக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் நோய் குணமாகும் என நம்பிக்கையில் தொடர்ந்து குழந்தையை தண்ணீரில் வைத்து அமுக்கி எடுத்தனர். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், பெண் ஒருவர் குழந்தையை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைப்பதும், அங்கிருந்தவர்கள் அதனைக் கண்டிப்பதையும் காணமுடிகிறது. ‘இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது வாக்குறுதி’ என ஆவேசமாக கூறி வருகிறார்.

தொடர்ந்து தண்ணீரில் மூழ்க வைத்ததும், அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டனர். அப்போது ஆவேசம் அடைந்த அந்த பெண் குழந்தையை மீட்ட நபரை தாக்க முயற்சித்துள்ளார். தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்ட குழந்தை மயக்கமடைந்தது.

தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து குழந்தையை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கங்கை நீரில் மூழ்கடித்தால் நோய் குணமாகும் என்ற மூடநம்பிக்கையில் குழந்தையை பெற்றோரே மூழ்கடித்தே கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வந்த நெதர்லாந்து பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

களுத்துறையில்..

களுத்துறைக்கு வருகை தந்த நெதர்லாந்து பெண் ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சித்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பெட்ரோனெல்லா எக்னிடா மரியா என்ற 42 வயதான நெதர்லாந்து பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் முறைப்பாட்டாளரிடம் நட்பு ரீதியான பழக்கம் ஒன்றையும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டாளரான பெண் வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக தெரிவித்த பொலிஸார், நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு அறையில் உறங்கிக் கொண்டிருந்த போது சந்தேகநபர் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக,

முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பெண்ணொருவருடன் தவறானமுறையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இலங்கை வரலாற்றில் சாதனை படைத்த இராணுவத் தளபதி!!

இலங்கையில்..

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகே வானில் இருந்து பரசூட் மூலம் குதித்து சாதனை படைத்துள்ளார். இலங்கை இராணுவ வரலாற்றில் இராணுவத் தளபதியொருவர் பரசூட் மூலம் குதித்து சாதனை புரிந்துள்ள முதலாவது நிகழ்வு இதுவாகும்.

ஊவா குடா ஓயா பரசூட் பயிற்சி மையத்தில் அதற்கான பயிற்சிகளை விகும் லியனகே பெற்றுக் கொண்டதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மாலைதீவின் இராணுவத்தினர் மற்றும் இலங்கை இராணுவத்தின்,

அங்கத்தவர்களைக் கொண்ட குழுவொன்றுடன் அம்பாறை உகணை விமானப்படை வளாகத்தில் வைத்து அவர் வானில் இருந்து பரசூட் மூலம் குதித்து சாதனை செய்துள்ளார்.

ஒரேவீட்டில் பறிபோன இரு உயிர்கள்!!

ஆனமடுவவில்..

ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதி லபுகம பகுதியில் வியாழக்கிழமை (25.01.2024) இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் ஆபத்தான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நவகத்தேகம, வெலேவெவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய இராணுவ விஷேட படையின் லெப்டினன்ட் பதவி வகித்த ஜீவக செனவிரத்ன மற்றும் அவரது 10 வயதான மகன் மனுஜ பிரபாஸ்வர ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இராணுவ வீரர் , மகன் மற்றும் மனைவி ஆகியோர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஆனமடுவ – நவகத்தேகம பிரதான வீதியின் ரஜமஹா விகாரைக்கு முன்பாக லொறியுடன் மோதியுள்ளது.

இதன்போது தந்தையும் மகனும் உயிரிழந்த நிலையில் தாய் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஔவையார் நினைவுதினம் அனுஸ்டிப்பு!!

வவுனியா சின்னப் புதுக்குளம், வெளிக்குளம் சந்தியிலுள்ள ஒளவையார் நினைவுத் தூபியில் அவரது நினைவு தினம் இன்று (25.01) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபை செயலாளர் தயாபரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது ஔவையாரின் திருவுருவசிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவுப் பேருரையினை இந்து கலாச்சார உத்தியோகத்தர் சிவகஜனால் நிகழ்த்தியிருந்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர், தமிழ் விருட்சம் அமைப்பினர், நகரசபை உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருமண வீட்டிலிருந்து சென்ற சனத் பலி : வேதனையில் புதுமண தம்பதி!!

கட்டுநாயக்கவில்..

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரழப்பதற்கு முன்னர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

சமூக ஊடக செயற்பட்டாளர் ஒருவரின் திருமணத்திற்கு சென்று மீண்டும் திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருமணமான மணமகன் இது தொடர்பில் பேஸ்புக்கில் பதிவிட்டு தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

“மாமா சனத் நிஷாந்தவுக்கு என்ன நடந்தது என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. எனக்காக என்னை பார்க்க வந்த பயணித்தில் இந்த சம்பவம் நடந்தது என்பதனை நான் எப்படி தாங்கிக் கொள்வேன். ஆத்மா சாந்தி அடையட்டும் மாமா” என அவர் பதிவிட்டுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் மரணம்!!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரணி உடல் நலக்குறைவால் இலங்கையில் வைத்து இன்று (25.01.2024) மாலை காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும்.

5 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதியுற்றதாகவும், இதன் காரணமாக அவர் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ள நிலையில், நாளை மாலை அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தற்போது கொழும்பில் தங்கியிருக்கும் இசைஞானி இளையராஜா, அவரது மகள் பவதாரணி காலமான தனியார் வைத்தியசாலையை நோக்கி விரைந்துள்ளார்.

இதேவேளை, இசைஞானி இளையராஜாவின் விசேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான விபரங்கள் எதுவும் தற்போது வெளியிடப்படவில்லை. குறித்த இசை நிகழ்ச்சிக்காக நேற்றையதினம் இசைஞானி இளையராஜா இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வீட்டிற்குள் நுழைந்து முச்சக்கர வண்டியை அடித்து நொருக்கிய நபர்கள் : பொலிஸார் விசாரணை!!

வவுனியா, மகாறம்பைக்குளம் பகுதியில் வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனம்தெரியாத நபர்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை அடித்து சேதப்படுத்தியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் கணவன் தொழில் நிமித்தம் வெளியே சென்ற சமயத்தில் வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகள் தனிமையில் இருந்துள்ளனர்.

இதன் போது வீட்டிற்குள் உள் நுழைந்த 5 பேர் கொண்ட இனம் தெரியாத குழு ஒன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியினை அடித்து சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

கட்டார் வாகன விபத்தில் யாழ் இளைஞர் உயிரிழப்பு ; திருமணம் செய்து சில வருடங்களில் சோகம்!!

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் மூன்று வருடங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தந்தையான குறித்த இளம் குடும்பஸ்தர் தொழில் நிமிர்த்தம் கட்டார் நாட்டுக்கு சென்று வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் வயது 24 என்ற ஒரு பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்றைய தினம் இறுதிக்கிரியைகள் இடம் பெற்று தகனம் செய்யப்படவுள்ளது. இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகனையும் கணவரையும் வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு யாழ் நோக்கி வீடு திரும்பிய பெண் விபத்தில் பலி!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று கிளிநொச்சி பகுதியில் விபத்திற்குள்ளானதில் தாயொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனனர்.

கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது. தனது கணவரையும், மகனையும் வெளிநாடு செல்வதற்காக விமானத்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது. பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், பாசையூரைச் சேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் 9 வகையான எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன் நான்கு மாடுகள் காயமடைந்துள்ளன. சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் 6000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரேஞ் ஜூஸ்!!

இலங்கையில் ஒரேஞ் ஜூஸ் ஒன்று ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஒரேஞ் ஜூஸ் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிறுவனத்தினால் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டின் பிரதி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ஒரேஞ் ஜூஸின் விலை 4565 ரூபா எனவும், வரிகள் 1055 ரூபா எனவும், சேவைக் கட்டணம் 456 ரூபா எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய வரி விதிப்புக்கள் காரணமாக பல ஹோட்டல்களில் கட்டணங்கள் வெகுவாக அதிகரித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த பில் தொடர்பில் குறிப்பிட்ட ஹோட்டல் நிர்வாகம் இதுவரையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா மேல் நீதிமன்றத்தினால் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிப்பு!!

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் இன்று (24.01.2024) காலை 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டது.

கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்குகளில் ஆஜர்ப்படுத்தப்பட்ட 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், நீதிமன்ற பொலிஸாரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது.

சுகாதார நிலமைகளை கருத்தில் கொண்டு மக்கள் நடமாட்டம் மற்றும் அருகே வீடுகள் அற்ற பகுதியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கஞ்சா எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து விபத்து : ஒருவர் பலி!!

யாழில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்துதானது கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று(24.01.2024) அதிகாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்றும், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

பேருந்தானது வீதியில் படுத்துறங்கிய மாடுகளுடன் மோதுண்டு எதிரே வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 8 பேரில் ஐவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிசிச்சை பெற்று பெற்று வருகின்றனர்.

சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட அழகி வெற்றி!!

சமோவா மாநிலத்தில் முதன்முறையாக இடம்பெற்ற சர்வதேச அழகிப்போட்டியில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அழகி ஒருவர் வெற்றியீட்டியுள்ளார்.

சர்வதேச மிஸ் குளோபல் அழகி போட்டியில் சமோவா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முத்து குருப்பு என்ற யுவதியே இரண்டாம் இடத்தைப்பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இவரது தாயார் சமோவா நாட்டைச் சேர்ந்த பெண் எனவும், தந்தை இலங்கையர் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் வியட்நாமில் நடைபெற்ற சர்வதேச மிஸ் குளோபல் அழகிப்போட்டியில் இணையும் வாய்ப்பையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகளின் பின்னணி!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைகளுக்கு டுபாய் நாட்டில் வாழும் கொஸ்கொட சுஜீ என்ற பாதாள உலக தலைவரே தலைமை தாங்கியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்துருவ றோயல் பீச் ஹோட்டலின் உரிமையாளரான அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பிரசன்ன பெரேராவை கொலை செய்வதற்கு இதற்கு முன்னரும் ஒருவரை கொஸ்கொட சுஜி, நியமித்திருந்தார் என தெரியவந்துள்ளது.

சமன் பிரசன்ன நொடிப்பொழுதில் உயிர் பிழைத்ததாகவும், அவரது வெளிநாட்டு முதலீட்டாளர் சுடப்பட்டு காயமடைந்ததாகவும் பாதாள உலகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எஸ்.டி.எப் நந்துன் என்பவர் இருந்த காலத்திலிருந்து கொஸ்கொட சுஜீக்கும், சமனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சுஜீயின் எதிரிகளான கொஸ்கொட தாரக உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தமையினால், அரசியலுக்கு வருவதற்கு முன்னரே, சமன் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதற்கு முன்னர் இடம்பெற்ற கொலைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் டுபாயில் தலைமறைவாக உள்ள கொஸ்கொட சுஜீயை இலங்கைக்கு அழைத்து வர குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்க நடவடிக்கை எடுத்திருந்தது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி தங்கல்ல அசேல என்ற போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக சாட்சியமளித்தவரை கொலை செய்த சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சமன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

2022ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 24 ஆம் அன்று, அவர் பொலிஸார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சமன் பெரேராவுக்குச் சொந்தமான டிபென்டரில் அந்த 5 பேரும் சம்பவ வழக்கில் பங்கேற்க வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.