சொகுசுப் பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : இளைஞன் பலி!!

மொனராகலை, புத்தல, பெல்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22.08.2025) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சொகுசு பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் புத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஆவார்.

இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்!!

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கார்டிஃப் பகுதியில் வசிக்கும் 32 வயதான நிரோதா கல்பானி நிவூன்ஹெல்ல என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் திகதி காலை வேளையில் பெண் ஒருவர் இரத்த காயங்களுடன் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவிக்குழுவினர், குறித்த பெண் உயிரிழந்தமை உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 37 வயதான மற்றுமொரு இலங்கையர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகள் அல்லது டேஷ்கேம் காட்சிகளை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறார்கள்.

இ.போ.ச பேரூந்து – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் படுகாயம்!!

நூவரெலியாவில் வலப்பனை – நில்தண்டஹின்ன வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (22.08.2025) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டிய பொலிசார்!!

வவுனியா நகரில் வாகன போக்குவரத்தினால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் துவிச்சக்கர வண்டிகளுக்கு ஒளியூட்டக்கூடிய ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியினை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸார் இணைந்து துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் பணியினை முன்னெடுத்திருந்தனர்.

இரவில் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும் போது பின்னால் வரும் வாகனத்திற்கு துவிச்சக்கர வண்டியினை சரியாக தெரியதக்கதாக ஒளியூட்டப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டும் வேலை திட்டம் வவுனியா குருமன்காட்டுசந்தியில் நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைத்துள்ளமையுடன் இவ்வாறான ஒளியூட்டக்கூடிய பட்டிகள் போன்றவற்றை மாடுகளின் கழுத்துப்பகுதியில் கட்டும் சமயத்தில் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்படும் விபத்தினையும் தடுக்க முடியும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மில் வீதியில் தீப்பற்றிய பற்றரி விற்பனையகம் : காரணம் இதுதான்!!

வவுனியா மில் வீதியில் நேற்று (22.08.2025) இரவு 9 மணியளவில் பற்றரி விற்பனையகம் திடீரென தீப்பற்றி எரிந்தமைக்கான காரணம் மின்சார ஒழுக்கு என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தக நிலையத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரத்தில் ஏற்பட்ட மின்ஒழுக்கு வர்த்தக நிலையத்தினுள் பரவ ஆரம்பித்துள்ளது. உடனடியாக செயற்பட்ட பொதுமக்கள் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த மாநகரசபையினர் மற்றும் மாநகர தீயனைப்பு பிரிவினர் தீ விபத்து மேலும் பரவலையும் இடங்களை பார்வையிட்டதுடன் மின்சாரத்தினை துண்டிக்கும் முகமாக மின்சார சபைக்கும் தகவலை வழங்கியிருந்தனர்.

வவுனியாவில் குளத்தின் கீழ் தடம்புரண்ட முச்சக்கரவண்டி : இளைஞர்களின் உதவியுடன் மீட்பு!!!

வவுனியா வைரவப்புளியங்குளம் குளக்கட்டில் நேற்று (22.08) மதியம் முச்சக்கரவண்டி குளக்கட்டு வீதியிலிருந்து தடம்புரண்டு கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

மாடசாமி ஆலய வீதியிலிருந்து வவுனியா நகர் நோக்கி வைரவப்புளியங்குளம் குளக்கட்டு வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழிறங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

எனினும் இவ் விபத்தில் முச்சக்கரவண்டி பகுதியளவில் சேதமடைந்திருந்தமையுடன் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை. இளைஞர்களின் உதவியுடன் குளக்கட்டின் கீழே வீழ்ந்த முச்சக்கரவண்டி வீதிக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் மீன்பிடிக்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்கக் கண்டி கடல் பகுதியில் இன்று (21) இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.

குச்சவெளி இறக்ககக் கண்டி வாழை ஊத்து பகுதியை சேர்ந்த என்.அப்சான் வயது (22) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான 100 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைப்பற்றியுள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்தில் தெமட்டகொட ருவான் இந்தக் கட்டிடத்தை வாங்கியது தெரியவந்தது. இதை அடுத்து, அந்தக் கட்டிடத்தை CIDயின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) கைப்பற்றியது.

சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக தெமட்டகொட ருவான், அவரது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவரது மகன் மீது சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) முன்பு வழக்குப் பதிவு செய்திருந்தது.

அதேவேளை போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்த நீண்டகால விசாரணைகள் காரணமாக அந்தக் கட்டிடம் செயல்படாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

நாடாளுமன்ற வளாகத்துக்குள் சுவர் ஏறி குதித்தவரால் பரபரப்பு!!

இந்தியா – டெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று (22) காலையில் சுவர் ஏறி குதித்து அத்துமீறி நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் இன்று (22) காலை 6.30 மணியளவில் ஒரு நபர் மரத்தில் ஏறி சுவர் மீது குதித்து உள்ளே நுழைந்தார்.

ரயில் பவன் பக்கத்திலிருந்து சுவர் தாண்டி குதித்து ஊடுருவியவர், புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் கருடா வாயிலை அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுவர் ஏறி குதித்து ஊடுருவிய நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பெரும் அனலை கிளப்பிய பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வியாழக்கிழ​மையுடன் (21) நிறைவடைந்த நிலையில், இன்று (22) இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த ஆண்டு இதேபோன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் ஒன்று நடந்தது. அப்போது 20 வயதுடைய நபர் பாராளுமன்ற வளாகத்தில் சுவர் ஏறி அனெக்ஸ் கட்டிடத்தின் உள்ளே குதித்தார்.

இந்த சம்பவத்தின் ஒரு வீடியோவும் வெளியாகியிருந்தது. அவரை சிஐஎஸ்எப் வீரர்கள் கைது செய்தனர், அவரிடம் ஆயுதம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்றொரு அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தஸ்தைப் பாராது சட்டம் பாயும் : அதுவே NPP இன் நோக்கம்!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகள் என எந்த அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் சட்டம் அமல்படுத்தப்படுவதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குற்றம் செய்திருந்தால், அவர்களை நீதியின் முன் நிறுத்த நாங்கள் ஒருபோதும் தயங்க மாட்டோம். சட்டத்தை அமல்படுத்துவது அந்தஸ்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதோடு குற்றம் நிகழும்போது, ​​பாதிக்கப்பட்டவர்கள் மீது சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். அதுதான் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கம் என கூறிய பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் , பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் நீதியை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்றும் கூறினார்.

மரக்கிளை முறிந்து பெண் உயிரிழப்பு!!

கொழும்பில் மாதம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட போதி சந்தி பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (21) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஆவார்.

குறித்த பெண் வீதியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது அவர் மீது திடீரென மரக்கிளை முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்துளார். இதனையடுத்து பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாதம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அழைப்புக்கள் உங்களுக்கும் வரலாம் : மக்களே அவதானம்!!

பொது மக்களுக்கு , பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி என கூறி, பணம் கோரும் போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து அவர்களின் வர்த்தகத்தில் தவறுகள் இருப்பதாக கூறி, அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க, பண்ம் கோரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்யுமாறு கோரும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இவ்வாறான போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் 1977 அல்லது 0771088922 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவில் யுவதியின் மோசமான செயல்!!

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத் தொடர்ந்து கண்காணித்துள்ளனர்.

இதன்போது, யுவதி ஒரு பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டபோது, சாரணர்கள் அவரை மடக்கிப் பிடித்து கடமையில் இருந்த பொலிஸாரிடம் யுவதி ஒப்படைக்கப்பட்டார்.

பொலிஸார் யுவதியை சோதனையிட்டபோது, அவரது உடைமைகளில் இருந்து மூன்று தங்கச் சங்கிலிகள் மீட்கப்பட்டன.

விசாரணையில், குறித்த யுவதி கொச்சிக்கடைப் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவருடன் மேலும் சிலர் ஆலயத்திற்கு வந்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவருடன் வந்த ஏனைய நபர்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யுவதியின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானித்து, அவரைக் கையும் களவுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சாரணர்களுக்கு பொலிஸார் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.

மேலும், தேர்த் திருவிழாவின் போது தமது தங்க நகைகள் திருடப்பட்டதாக 08 பேர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு புதிய தேர்வு!!

கனடாவில் நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு ‘TOEFL Essentials’ என்ற புதிய ஆங்கிலத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

‘IELTS’ அல்லது ‘CELPIP’ தவிர விண்ணப்பதாரர்களுக்கு மற்றொரு’ தேர்வை வழங்க வேண்டும் என்பதற்காக குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா(IRCC) இந்தத் தேர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுமார் 1.5 மணிநேரம் மட்டுமே நடைபெறும் இந்தத் தேர்வு மிகவும் குறுகியதாக கருதப்படுகின்றது.

மக்கள் அன்றாட வாழ்க்கையில் ஆங்கிலத்தை எவ்வளவு சிறப்பாகப் பயன்படுத்த முடியும் என்பதைச் சரிபார்க்க இந்தத் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தேர்வில், கேட்பது, படிப்பது, எழுதுவது மற்றும் பேசுவது ஆகிய நான்கு பகுதிகள் உள்ளன.

பணியிடப் பேச்சுக்கள் அல்லது அன்றாட உரையாடல்கள் போன்ற நிஜ வாழ்க்கை தகவல் தொடர்புகளில் கவனம் செலுத்தும் தேர்வாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது கனடாவில் வாழவும் வேலை செய்யவும் தயாராகும் புலம்பெயர்ந்தோருக்கு ஒரு பயனுள்ள தேர்வாக அமைகின்றது. இந்தத் தேர்வு குறைந்த விலையில் உலகளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தேர்வை எழுதி 6 நாட்களில் அதற்கான அதிகாரப்பூர்வ மதிப்பெண்கள் தயாராகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண்களை பல்வேறு நிறுவனங்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் அனுப்பலாம்.

ஒட்டுமொத்தமாக, இந்தப் புதிய தேர்வு, கனடாவுக்குச் செல்ல விரும்பும் திறமையான தொழிலாளர்களுக்கு குடியேற்றத்தை எளிதாக்குகிறது.

உலகை பீதியில் ஆழ்த்தியுள்ள பாபா வங்காவின் அடுத்த கணிப்பு!!

2026ஆம் ஆண்டு இயற்கைப் பேரிடர்களால் உலகம் பாதிக்கப்படவிருப்பதாக, பல்கேரியாவைச் சேர்ந்த பாபா வங்கா கணித்துள்ளார்.

இவர் 1996ஆம் ஆண்டே மறைந்துவிட்டாலும், உலகில் நடக்கவிருக்கும் பல நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்து வைத்திருக்கிறார்.

அந்தவகையில், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு, மிக மோசமான இயற்கைப் பேரிடர்கள் நிகழும் ஆண்டாக இருக்கும் என்றே பாபா வங்காவின் கணிப்புகள் சொல்கின்றன.

உலகம் முழுக்க ஏராளமான நிலநடுக்கங்கள், எரிமலை சீற்றங்கள், மிக மோசமான மழை போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இயற்கைப் பேரிடர்கள் மனித உயிர்களையும் உட்கட்டமைப்புகளையும் சீர்குலைத்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

அவர் கணித்திருப்பது, ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளில் உண்மையாகி வரும் நிலையில், கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ பரவி வருகிறது. பல இடங்களில் நிலநடுக்கம் கூட அண்மைக் காலங்களில் ஏற்பட்டுள்ளன.

உலகளவில் மிகப் பெரிய நாடுகளுக்கு இடையேயான போர்களும் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், உலகின் மிக முக்கிய துறைகளை இயந்திரங்கள் நிர்வகிக்கத் தொடங்கும் இதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உலகத்துடன் தொடர்பில்லாத வேற்றுக்கிரக விண்கலன்கள் பூமிக்கு வரும், ஏலியன்களை மனிதர்கள் சந்திப்பார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலித்தீன் உறைகளுக்குப் புதிய வரி விதிப்பு : அரசாங்கம் தீவிர கவனம்!!

பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன் பிரகாரம் இனி வரும் காலங்களில் பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட எந்தவொரு விற்பனை நிலையத்திலும் பொலித்தீன் உறைகள் இலவசமாக வழங்கப்பட மாட்டாது. அதற்குப் பதிலாக கட்டணமொன்று அறவிடப்படும் சூழ்நிலை உருவாகும்.

சூழலை மாசுபடுத்தும் பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான வரி விதிப்பொன்றை மேற்கொள்வது குறித்து சுற்றாடல் அதிகார சபை, நிதியமைச்சுக்கு முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.

தற்போதைக்கு குறித்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் தீவிர கவனம் திரும்பியுள்ளது.

பொலித்தீன் உறைகளுக்கு வரி விதிப்பது தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் அதற்கென புதிய சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் சுற்றாடல் அதிகார சபை முன்மொழிவொன்றைச் சமர்ப்பித்துள்ளது.