45 வயது நபருக்கு கண்ணின் கீழே முளைத்த பல் – மருத்துவ உலகில் அதிர்ச்சி சம்பவம்!!

நோயாளின் கண்ணின் கீழே முளைத்திருந்த பல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தின், சிவான் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர், பல மாதங்களாக முக வீக்கம் மற்றும் கண் பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பாதிப்பு மோசமடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதித்துள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் கண்ணுக்கு கீழே உள்ள எலும்பில் பல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த பல்லின் வேர், கண்ணின் குழியை நெருங்குவதை பார்த்த அவர்கள், அதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற முடிவெடுத்தனர்.

பல் மருத்துவத்துறை தலைவர் மருத்துவர் நிம்மி சிங்கின் மேற்பார்வையில், சிறப்பு அறுவை சிகிச்சை குழு இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

பல்லின் வேர் உள்ள சரியான நிலை மற்றும் ஆழத்தை கண்டறிய மேம்பட்ட CBCT ஸ்கேன் செய்யப்பட்டது.

பல மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர், கண்ணுக்கு எந்த சேதமும் ஏற்படாமல், பல் அகற்றப்பட்டது. அதன் பின்னர் அவரின் முக வீக்கமும் குறைந்தது.

பொதுவாக பற்கள் வாயின் உள்ளே வளரும், இவருக்கு கண்ணின் கீழே வளர்ந்துள்ளது இது அரிதான ஒன்று என மருத்துவர் நிம்மி தெரிவித்துள்ளார்.

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையினால் வார இறுதியில் வீதியோர சந்தை : தவிசாளர்!!

வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை எல்லைக்குட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் 17.08.2025 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வாராந்த சந்தை ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பாலகிருஸ்ணன் பாலேந்திரன் அறிவித்துள்ளார்.

“இச்சந்தையில் எமது பிரதேச முயற்சியாளர்களின் விவசாயத்துறை, கைத்தொழிற்துறைசார் உற்பத்திப்பொருட்களை வாராந்தம் விற்பனை செய்யமுடியும் எனவும்,

இதனூடாக உற்பத்தியாளர்களின் இடைத்தரகர்களுக்கான செலவீனம் குறைக்கப்படுவதுடன் எதிர்காலத்தில் நுகர்வோரின் தேவைக்கேற்றவாறு உற்பத்தி நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு அவர்கள் தமது பொருளாதாரத்தில் முன்னேற்றமடைவதுடன் ஏனையவர்களுக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியும்” எனவும் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பின்பற்றி பயன்பெற விரும்பும் முயற்சியாளர்கள், “வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, நேரியகுளம் வீதி, நெளுக்குளம், வவுனியா” எனும் அலுவலக முகவரிக்கு நேரடியாக தொடர்பு கொண்டு அல்லது அலுவலக நேரத்தில் 024 2225737 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது முன்பதிவுகளை மேற்கொள்வதுடன் மேலதிக விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தவிசாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்த மாற்றமும் வராது : வர்த்தர் சங்கத் தலைவர்!!

எதிர்வரும் பதினெட்டாம் திகதி இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பில் வவுனியா வர்த்தகர் சங்கம் எடுத்த தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் வராது என வவுனியா வர்த்தகர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வவுனியா வர்த்தகர் சங்கம் ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்காது எனவும் கடைகள் வழமை போன்று திறக்கும் எனவும் வர்த்தகர் சங்க நிர்வாக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எனினும் சிலர் வர்த்தக சங்கம் மீளவும் ஆராய்ந்து முடிவை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் வர்த்தகர் சங்கத்தின் தலைவரிடம் கேட்டபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வர்த்தகர் சங்க நிர்வாக சபை கூடி ஒரு முடிவினை எடுத்து அறிவித்துள்ளது. அதில் எந்தவித மாற்றத்திற்கும் இனி இடம் இருக்காது. ஹர்த்தாலுக்கு நாம் ஆதரவு தெரிவிக்க போவதில்லை. இது வர்த்தகர்களுடைய கருத்துக்களின் பிரகாரம் எடுக்கப்பட்ட முடிவுவாக காணப்படுகிறது.

ஆகவே எவர் எவ்வாறான கருத்துக்களை பரிமாறினாலும் எமது தீர்மானத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நாம் ஆராய்ந்து இந்த தீர்மானங்களை எடுத்து வெளியிட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

வவுனியா உட்பட வடகிழக்கு இராணுவப்பிரசன்னத்தை அகற்ற பொது முடக்கத்திற்கு ஆதரவு தாருங்கள் : செந்தில்நாதன் மயூரன்!!

எதிர்வரும் திங்கட்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு மக்கள் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று முன்னாள் வடக்குமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

போர் முடிவுற்று 16 வருடங்கள் கடந்த போதும் வடகிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை. அவர்களின் பிரச்சன்னமும் குறைக்கப்படவில்லை. மாறாக பொதுமக்களின் காணிகளை கபளீகரம் செய்த அவர்கள் அங்கு நிலையான இராணுவ கட்டுமானங்களை அமைத்தனர்.

அந்தகாலம் தொட்டு தமிழ்மக்களின் அன்றாட வாழ்வில் இராணுவத்தின் தலையீடனாது பல்வேறு பாதிப்புக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது. அவ்வாறான ஒரு சம்பவமே கடந்தவாரம் முல்லைத்தீவு முத்தையன் கட்டுபகுதியிலும் இடம்பெற்றுள்ளது.

தமிழர்தாயக பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றி மக்களின் சுதந்திரமான வாழ்வுரிமையை உறுதிப்படுத்தவேண்டிய நிலைமையை ஆட்சிக்குவந்த பேரினவாத அரசுகள் சிறிதளவேனும் செய்யவில்லை.

தொடர்ச்சியாக அதிகாரவர்க்கமானது தமிழ்மக்களை அடிமை மனோநிலையில் நடாத்துகின்ற இந்த நிலைக்கு வடகிழக்கு மக்கள் தமது பூரண எதிர்ப்பை காட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

அந்தவகையில் தமிழர்தாயக பகுதிகளில் இடம்பெறும் அதிகாரவர்க்கத்தின் எதேச்சியதிகாரப்போக்கிற்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை(18) அனுஸ்டிக்கப்படவுள்ள பொதுமுடக்கத்திற்கு வடகிழக்கு தமிழ்மக்கள், தங்களது பூரண ஒத்துழைப்பை நல்கி சர்வதேச சமூகத்திற்கும்,அரசுக்கும் எமது நிலைப்பாட்டை உறுதிபடவெளிப்படுத்த வேண்டும் என்று குறித்த அறிக்கையில் உள்ளது.

 

மடுக்கோவிலுக்கு சென்று திரும்பிய பேரூந்துடன் டிப்பர் மோதி விபத்து!!

மன்னார் மடு தேவாலயத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி இடம்பெற்றிருந்த நிலையில் அதில் கலந்து கொண்டுவிட்டு யாழ் – மன்னார் வீதியூடாக யாழைச் சேர்ந்த பக்தர்கள் பேரூந்து ஒன்றில்,

யாழுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அதே வழித்தடத்தில் யாழிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த டிப்பர் ரக வாகனமும் மன்னார் இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில்,

பேரூந்தின் சாரதி பலத்த காயத்துடன் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

-படங்கள் ஜெ.டனுஷன்-

ஆலய கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தியவர் கீழே விழுந்து மரணம்!!

தமிழகத்தில் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் போராட்டம் நடத்திய நபர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

தமிழ்நாட்டின், புதுக்கோட்டை விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலரான இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி கடந்த ஆண்டு போராட்டம் நடத்தினார்.

அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர். இந்த நிலையில் இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின நாளான வெள்ளிக்கிழமை (15) காலை சுமார் 5 மணி அளவில் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் அவர் தேசியக் கொடியுடன் திடீரென்று ஏறினார்.

கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு அங்கு நின்றவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தீயணைப்புத் துறையினர் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க கோவில் கோபுரம் மீது ஏறியபோது தானே வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.

கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கியபோது மாற்றுத்திறனாளி ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முச்சக்கர வண்டி – சிறிய ரக வேன் மோதி விபத்து : 6 பேர் காயம்!!

ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள பகுதியில், முச்சக்கர வண்டியும் சொகுசு சிறிய ரக வேனும் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சொகுசு பஸ் – லொறி மோதி விபத்து : 7 பேர் காயம்!!

பதுளை – மகியங்கனை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (15) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது சொகுசு பஸ்ஸில் பயணித்த 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில் இருந்து நல்லூருக்கு பாதயாத்திரை!!

வவுனியா வேப்பங்குளம் காளி கோவிலில்இருந்து நல்லூர் கந்தசாமி கோவிலை நோக்கி பாதயாத்திரை நேற்று (14.08.2025)ஆரம்பமானது.

வருடாந்தம் நல்லூர் உற்சவ காலத்தில் குறித்த பாதயாத்திரையானது ஆலயத்தின் தர்மகர்த்தா சாமி அம்மா தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில், நேற்று ஆரம்பமான பாதயாத்திரை நல்லூர் கந்தசாமி கோவிலின் தேர் திருவிழா அன்று நல்லூரை சென்றடையும்.

இதனையடுத்து, நேற்று காலை கோவிலில் விசேட பூஜைகள் இடம் பெற்றதன் பின்னர் பக்தர்கள் புடைசூழ வவுனியாவில் உள்ள பல்வேறு ஆலயங்களையும் தரிசித்து பாதயாத்திரை ஆரம்பமாகியது.

நள்ளிரவில் இளைஞனின் உயிரை பறித்த நாய்!!

பதுளை-மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நாயுடன் மோதியதில் காயமடைந்த ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

நேற்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பதுலுஓயா, பகுதியை சேர்ந்த 26 வயதுடைய மிலிந்த மதுமல் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது. மீகஹகிவுல பகுதியில் இருந்து கரமெட்டியவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பி கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

விபத்தில் காயமடைந்த இளைஞர் மீகஹகிவுல பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

விபத்து நடந்த இடத்திலேயே நாயும் உயிரிழந்ததாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள் சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.

விபத்து குறித்து கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கொழும்பில் இளம் பெண்ணொருவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

கொழும்பில் நகை மற்றும் பணத்தை பேருந்தில் தொலைத்த பெண்ணுக்கு அவை மீண்டும் கிடைத்துள்ளது.

தனியார் பேருந்தில் தொலைந்து போன 800,000 ரூபாவுக்கு மேல் மதிப்புள்ள தங்க சங்கி மற்றும் பணப்பையை உரிமையாளரிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோட்டை மஹரகம பேருந்து நிலைய வீதியில் தனியார் பேருந்தில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

பேருந்து நடத்துனர் மற்றும் சாரதியின் இந்த நேர்மையான செயல் நெகிழ்ச்சியடைய செய்ததாக பொருட்களை தொலைத்த பெண் தெரிவித்துள்ளார்.

பொதுவாக இவ்வாறு ஒன்று விட்டு சென்றால் மீளக்கிடைக்காத நிலையில் அவர்களின் செயல் ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயம்!!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியின் 99ம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் இன்று (15) இடம் பெற்றுள்ளது.

விபத்து சம்பவம்

99ம் கட்டை சந்தியை அண்மித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றில் இருந்து பிரதான வீதியின் வழியாக திரும்ப முயன்ற மோட்டார் சைக்கிளுடன் கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில் பிரதான வீதி ஊடாக கந்தளாய் வீதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஹோட்டல் அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்!!

கொழும்பு, மருதானை-டெக்னிக்கல் சந்தியிலுள்ள மூன்று மாடிக் கட்டடத்தில் நேற்று மதியம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு குறித்த பெண், ஆண் ஒருவருடன் விடுதிக்கு சென்ற நிலையில் குறித்த நபர் அங்கிருந்து வெளியேறிய போதும் மீண்டும் திரும்பி வரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சுமார் 40 முதல் 45 வயதுக்குட்பட்ட அந்தப் பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. குறித்த பெண்ணும் ஆணும் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வந்து விடுதியின் இரண்டாவது மாடியில் அறை ஒன்றை முன்பதிவு செய்தனர்.

பின்னர் ஆண் விடுதியை விட்டு வெளியேறி மது போத்தலுடன் திரும்பி வந்துள்ளார். அவர் பசறை பிரதேசத்தில் வசிப்பவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை அவர்கள் விடுதியை விட்டு வெளியேற வேண்டிய போதிலும் மதியம் வரை வெளியேறாமையினால் விடுதியின் முகாமையாளர் அவர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டார்.

அறையின் கதவு ஏற்கனவே பூட்டப்பட்டிருந்தது, மேலும் விடுதியின் முகாமையாளர் படுக்கையில் பெண் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டதை கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் வந்து அறையை ஆய்வு செய்தபோது, உயிரிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அந்தப் பெண்ணின் ஆடைகள் அடங்கிய இரண்டு பைகள் மட்டுமே அங்கு காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ். பொது சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுதர்சன் மரணம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணரான வைத்தியர் சுதர்சன் மாரடைப்பு காணரமாக இன்றைய தினம் கொழும்பில் காலமானார்.

வைத்தியரின் இழப்பானது வைத்திய துறைக்கு மாபெரும் இழப்பு என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் என்று அழைக்கப்படும் பொதுவாக எல்லோராலும் அழைக்கப்படுபவர்.

அவர், தனிப்பட்ட தேவைக்காக கொழும்பு சென்றிருந்த நிலையில் அங்கு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, வைத்தியரின் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி – சிறிய ரக வேன் மோதி விபத்து : 6 பேர் காயம்!!

ராவணன் அருவி அருகே முச்சக்கர வண்டியும், சிறிய ரக வேன் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியில், ராவணன் நீர்வீழ்ச்சிக்கு மேலே உள்ள பகுதியில், முச்சக்கர வண்டியும் சொகுசு சிறிய ரக வேனும் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தெமோதரை மற்றும் பண்டாரவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் பதுளை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பில் வேனில் இருந்து 10 மில்லியன் ரூபா மாயம் : திகைப்பில் நிறுவனம்!!

கொழும்பில் பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பணப் பரிவர்த்தனை நிறுவனத்திற்குச் சொந்தமான வேனில் இருந்து 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மதிப்புள்ள பணப் பை காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பணப் பையில் 13,96,000 ரூபாய் இருந்ததாக கூறப்படுகின்றது. மாயமான பணத்தில் 10,000,000 ரூபாய் செல்லுபடியாகும் நாணயம், 6,000 ரூபாய் சேதமடைந்த நாணயங்கள் மற்றும் 3,90,000 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும் என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த வேனில் 15 பைகள் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும், அவற்றில் 14 பைகள் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது