வவுனியா நெளுக்குளம் நேரியகுளம் பிரதான வீதியிலிருந்து சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் – உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் காபைட் வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளது.
காலபோக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் அறுவடை செய்த நெல்லை உலர வைப்பதற்கான போதியளவு உலரவிடும் தளம் இன்மையால் வருடா வருடம் காபெற் வீதிகளில் நெல் உலர விடும் அவலம் தொடா்கின்றமை வழமை இருப்பினும்,
வீதியின் ஒரு பகுதியில் நெல்லை உலர வைப்பதுடன் மறு பகுதியினை போக்குவரத்து ஏற்றவகையில் விடுகின்றமையடுத்து விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
எனினும் சின்னத்தம்பனை ஊடாக செட்டிகுளம் – உலுக்குளம் பிரதான வீதிக்கு செல்லும் காபைட் வீதியில் தனிநபர் ஒருவர் வீதித்தடையினை ஏற்படுத்தி வீதி முழுவதுமாக ஆக்கிரமித்து நெல் உலர வைத்துள்ளமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றாக பாதிப்படைந்துள்ளதுமையுடன் மக்கள் மாற்று வீதியூடாக செல்ல வேண்டிய நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே இவ்விடயத்தில் செட்டிக்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவினர் கவனம் செலுத்தி மக்களின் போக்குவரத்திற்கு இடையுறு இல்லாத வகையில் பாதையில் நெல்லை உலர வைக்க பணிக்குமாறும் அல்லது அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிங்க தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தில் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06.2023) மதியம் 3.30 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம், ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா,
படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும்,
இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம் போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டம் நடைபெற்றிருந்தது.
இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன. இப் போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கிராம மக்கள் இன்று (24.06.2023) மதியம் 3.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் விசேட தேவைக்குட்பட்டவர்கள் , முதியோர்கள்,
விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தோணிக்கல் ஜயா சனசமூக நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 வீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை. மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர்பட்டியல் வந்துள்ளன.
இதனை கேட்கச் சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசண்டையீனமாக பதிலளிப்பதுடன் எமது நியயமான கோரிக்கைகளையும் சேவிமடுப்பதில்லை.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் மரியாதை குறைவாகவும் கதைக்கின்றார். எமது கிராமத்தில் உண்மையில் கஸ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை என தெரிவித்து கண்ணீர் மல்க தமது தீர்வினை பெற்றுத்தருமாறு தெரிவித்தனர்.
திரைப்படங்களில் மறுபிறவி கதைகளை சுவாரஸ்யமாக ரசிப்பவர்கள் கூட நிஜத்தில் இதெல்லாம் வெறும் கட்டுக்கதை வேலையப் பார் என்போம். ஆனால் பலர் நிஜ வாழ்க்கையிலும் இதை நம்புகிறார்கள்.
சில உண்மையும் கூட என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் மைன்புரி ஜாகிரின் ரத்தன்பூரில் வசித்து வரும் மனோஜ் மிஸ்ரா ஜனவரி 9, 2015 அன்று தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பாம்பு கடித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் உயிரிழந்தார்.
அப்போது அவருடைய மகள் ரஞ்சனா கர்ப்பமாக இருந்தார். மனோஜ் மிஸ்ரா இறந்து 20 நாட்களுக்குப் பிறகு ரஞ்சனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஆர்யன் என்று பெயர் சூட்டப்பட்டது.
ஆர்யன் தனது 4 வயதில் தனது தாயிடம் நீ என் தாய் அல்ல என கூறிவந்தார். விளையாட்டாக சிறுபையன் கூறுகிறான் என நினைத்து விட்டுவிட்டனர். கடைசியாக மைன்புரிக்கு வந்ததும் பாட்டியை பெயர் சொல்லி கூப்பிட்டு உள்ளார்.
அவரது தாய் பாட்டியின் பாதங்களை தொட்டு வணங்குமாறு கூறியுள்ளார். கோபமடைந்த சிறுவன் அவர் என் மனைவி, என் பாட்டி அல்ல எனக் கூறினார். அம்மாவை மகள் என்றும், அண்ணனை மகன் என்றும் அழைத்தார்.
அவர் தன்னை 8 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பு கடித்து இறந்த மனோஜ் மிஸ்ரா என அறிமுகப்படுத்திக் கொண்டார். தாத்தாவின் மறு அவதாரம் என்று கூறுகிறான். அக்கம்பக்கத்தினர் அவனை தாத்தா பற்றி நிறைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.
சிறுவன் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதிலளிக்கிறான். குறிப்பாக தனது தாத்தாவின் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து ஆர்யன் கூறியது தான் ஹைலைட்.
காதல் அழைப்பை நிராகரித்த கோபத்தில் வீடு புகுந்து திருமணமான பெண்ணை வன்புணர்வு செய்து தங்க நகையை கொள்ளையடித்த இருவரை திருகோணமலை- குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று காலை இருவரும், வீட்டிற்குள் நுழைந்து கணவரை தாக்கி, பெண்ணை வன்புணர்வு செய்து, பின்னர் அவரிடம் இருந்த தங்க நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
காலி மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தமது வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திய பின்னர் தவறான முடிவெடுத்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (23) இரவு இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாயாருடன் வசித்து வந்த 22 வயதுடைய ரி.ஜே.மாளவிகா என்ற யுவதி தாயார் வீட்டுக்குள் இருந்த வேளை வீட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
வீட்டுக்குள் சிக்கிய தாயார் காயங்கள் எதுவுமின்றி வெளியில் தப்பியோடி வந்து அயலவர்களின் உதவியைக் கோரியுள்ளார். அயலவர்களின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போதிலும் வீட்டில் இருந்த பெரும்பாலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
தீ அணைக்கப்பட்ட பின்னர் அயலவர்களின் உதவியுடன் காணாமல்போன மகளைத் தாயார் தேடியுள்ளார். அவ்வேளை வீட்டுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மாளவிகா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் தோல்வியால் ஏற்பட்ட மனநோயால் குறித்த யுவதி பாதிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது. குறித்த யுவது கடந்த நான்கு மாதங்களாக அந்த நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்திருந்தார் என்று அவரின் தாயார் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் பிரேத பரிசோதனையின் பின்னரே யுவதியின் மரணம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த யுவதியின் தந்தை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடன் தொல்லையால் உயிரை மாய்த்திருந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கனடாவில் இலங்கையை சேர்ந்த ஒருவர் சுமார் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அதிஷ்டமாக பெற்றுள்ளார். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் 35 மில்லியன் கனேடிய டொலர்களை அவர் பரிசாக வென்றெடுத்துள்ளார்.
ஒன்றாரியோவின் வின்ட்ஸோர் பகுதியைச் சேர்ந்த ஜயசிங்க என்ற இலங்கையரே இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. கனடாவிற்கு குடிபெயர்ந்ததன் பின்னர் ஜயசிங்க அடிக்கடி லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜாக்பொட் பரிசுத் தொகை அதிகமாக காணப்படும் சந்தர்ப்பங்களில் மட்டும் அவர் லொத்தர் சீட்டு கொள்வனவு செய்வார்.
லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் வென்ற 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை விக்டோரியா மற்றும் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் இடையே தலா 35 மில்லியன் டொலராக பகிரப்பட்டுள்ளது.
அதிஷ்டத்தில் பெற்ற பணத்தை ஒரு தொகை பணத்தை மகளின் கல்விக்காக செலவிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மிகுதியில் கார் ஒன்றை கொள்வனவு செய்யவும், அறக்கட்டளைகளுக்கு வழங்கவும், நாட்டில் உள்ள உறவினர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் பிரபல தமிழ் பாடசாலைக்கு செல்லும் மாணவிகளிடம் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளில் நடத்துனர்களால், மாதாந்த பருவச் சீட்டிற்கு மேலதிகமாக பணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் தகவல் கசிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மட்டக்குளியிலிருந்து கல்கிஸ்சை வரை இயங்கும் 155 இலக்க பேருந்து கோவிட் தொற்றுக்கு முன்னதாக அதிகளவு பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் பயன்படுத்துவதாக இருந்தது.
இந்த நிலையில் திடீரென குறித்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், அந்த வழித்தடத்தில் ஒரு நாளைக்கு ஓரிரு பேருந்துகளே இயங்குகின்றன.
எனினும் இந்த பேருந்துகள் இன்மை காரணமாக பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு கள ஆய்வொன்றை செய்திருந்தது.
இதன்போது பல விடங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை தருவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கடமையாகும்.
தற்போதைய மதிப்பீட்டின்படி 2048ஆம் ஆண்டளவில் டொலரின் பெறுமதி 1385 ரூபாவாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அந்த நேரத்தில் இந்த நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2048ஆம் ஆண்டு இந்த நாட்டை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அவ்வாறு செய்வதற்கு வருடாந்தம் 6.5 வீத பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் 2048ஆம் ஆண்டு ஜனாதிபதி கூறிய இலக்கை எட்டவே முடியாது.
அந்த இலக்கை அடைவதற்கு 2048ஆம் ஆண்டுக்குள் நாட்டின் தனிநபர் வருமானம் 13205 டொலர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், சர்வதேச நாணய நிதியத்தின் கணிப்புகளின்படி 2026ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3% மட்டுமே இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் கடற்பசு ஒன்று நேற்று (22) கரையொதுங்கியுள்ளது. இராமநாதபுரம் – பாம்பனுக்கு அருகில் உள்ள தெற்கு மன்னார் வளைகுடா பகுதியிலுள்ள தோனித்துறை கடற்கரையில் இந்த கடற்பசு கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக இராமேஸ்வரம் வனவள திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய இந்த கடற்பசு சுமார் 8 வயது மதிக்கத்தக்கது என்பதுடன், 1500 கிலோகிராம் எடை கொண்டதாக இருக்கலாம் என இராமேஸ்வர வனவள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பரிசோதனையின் பின்னர் கடற்பசுவை கடற்கரை மணலில் புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முகப்புத்தகத்தில் பெண் வேடமணிந்து 14 வயது சிறுவனை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவன் கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரினுடைய போலி முகப்புத்தக பக்கம் உள்ளிட்ட தகவல்கள் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் எதிர்வரும் 30ஆம் திகதி சிறப்பு வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி ஹஜ் பெருநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
களுத்துறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர்கள் கடந்த மாதம் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, பிரதான சந்தேகநபரின் சாரதிக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் 16 வயதான சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கவர்ந்து சென்று, குடும்பம் நடத்திய 20 வயதான இளைஞனும், இளைஞனின் பெற்றோரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
16 வயதான மாணவியொருவர் மாயமானதாக பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர். அதேவேளை ஏற்கனவே 20 வயதான இளைஞன் ஒருவருடன் ஏற்பட்ட காதல் தொடர்பையடுத்து, சிறுமி அவருடன் சென்றிருந்தார்.
அதன்பின்னர் இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பெற்றோர்களிடம் பிள்ளைகள் ஒப்படைக்கபட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் ஒரு மாதம் கழித்து, மீண்டும் சிறுமி மாயமாகியிருந்தார்.
சில நாட்கள் தலைமறைவாக இருந்த இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து கைதான சிறுமியையும் இளைஞரையும் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.
இதன்போது, சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்க உத்தரவிடப்பட்டதுடன், இளைஞனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தவிட்டது.
அதேவேளை இளைஞனின் வீட்டிலேயே தாம் தங்கியிருந்ததாக இருவரும் அளித்த வாக்குமூலத்துக்கு அமைய, இன்று இளைஞனின் தாயும், தந்தையும் வல்வெட்டித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
ஆயிரம் ஆயிரம் மாடர்ன் உடைகள் வந்தாலும் பெண்களுக்கு அழகு என்றாலே அது புடவை தான். பட்டு, காட்டன், பகல்பூரி, நவுவாரி, மங்களகிரி பட்டு என பல ரகங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
500 ரூபாய் புடவையோ அல்லது 5 லட்ச ரூபாய் புடவையோ அது கட்டும் விதத்தில் தான் அழகே இருக்கிறது. மிக நேர்த்தியாக அவரது உடல் அமைப்பு, நிறத்துக்கு ஏற்றவாறு கட்டினால் ஜொலி ஜொலிப்பார்கள்.
இது பற்றி விவரிக்கிறார் Saree Drapist, சுதா ராஜேஷ் (புடவை கட்டும் நிபுணர்). தற்போதைய காலகட்டத்தில் கடல் மாதிரியான பிஸினஸாக மாறிக் கொண்டிருக்கிறது Saree Drapist என விளக்குகிறார் சுதா ராஜேஷ். சொந்த ஊர் விருதுநகர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை தானாம், 7 ஆண்டுகளாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்திருக்கிறார்.
புடவை கட்டுவதே பெரிய போராட்டமாக இருந்த காலம் போய், தற்போது 10 நிமிடத்தில் ஆயிரக்கணக்கில் வருமானமாக ஈட்டிக் கொண்டிருக்கிறார் சுதா. திருமணம், பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போது மற்றவர்கள் கட்டியுள்ள புடவைகளை பார்த்து வியந்திருக்கிறார் சுதா.
நாமும் ஏன் இப்படி அழகாக கட்டக்கூடாது என கேள்வி எழ, தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு முதலில் கட்டிவிடத் தொடங்கியிருக்கிறார். இதையே ஏன் தொழிலாக மாற்றக்கூடாது என்ற சிந்தனையுடன் ஆரம்பித்து இன்று பலருக்கும் சொல்லிக்கொடுத்தும் கொண்டிருக்கிறார்.
அவர் பேசுகையில், இந்த தொழில் பற்றி பலருக்கும் தெரிவதில்லை, கடல் மாதிரி கொட்டிக் கிடக்கிறது, பலவிதமாக புடவை கட்ட ட்ரை பண்ணி நல்லா ரிசல்ட் கொடுத்தது, பயிற்சி எடுக்க வராங்க, பயிற்சி, முயற்சி இருந்தாலே போதும் சம்பாதிக்கலாம்.
எடுத்த உடனே காசு சம்பாதிக்க முடியாது, நேர்த்தியா உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் உருவாக்குங்க, நாலு பேருக்கு தெரியணும், அப்பறம் தானா காசு வரும். முதலில் 200 ரூபாயில் தொடங்கி 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம், ஆனால் உங்களது முயற்சி மிக முக்கியம்.
அதிலும் குறிப்பா சோசியல் மீடியால ஆக்டிவா இருக்கணும், உங்களோட சொந்த தொழிலா நீங்கள் வருமானத்தை ஈட்டலாம் என பல பெண்களுக்கும் உத்வேகம் அளிக்கிறார் சுதா ராஜேஷ்.