கிளிநொச்சியில் கணவனால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட இளம் மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தலைமறைவான கணவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
இச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இளம் மனைவியின் கண்களையும் குறிவைத்து கணவன் கடுமையாக தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைவாக கணவனை பொலிசார் தேடிவருகின்றனர்.
அதேவேளை தாக்குதலுக்குள்ளான பெண் சிறுவயதிலே தாய் தந்தையை இழந்தவர் என கூறப்படும் நிலையில், பெண்ணின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புத்தேடி பணிப்பெண்களாக சென்று பல்வேறு காரணங்களால் இலங்கை திரும்ப முடியாது நிர்க்கதியாகியுள்ள பெண் தொழிலாளர்களை உடனடியாக இலங்கைக்கு திரும்பி கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு – கிழக்கு பெண்கள் கூட்டு அமைப்பினரால் வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (01.06) காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை அரசே வெளிநாடு வேலைக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய், மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்,
அரச இலாபத்திற்காக பெண்களை விற்காதே, பெண்களை விலைக்கு வாங்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இறுதியில் அரசாங்கத்திற்கு வழங்குவதற்கான மகஜரை ஊடகங்களுக்கு வாசித்து காட்டியிருந்தனர். அதன் பிரதிகளை மனுஷ நாணயக்கார தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர், அலி சப்ரி – வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்,
பொது முகாமையாளர் – இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவற்றிற்கு அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்த தந்தையை பார்த்து மகள் வெட்கப்படும் காணொளி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது. பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் மகிழ்ச்சி எப்பொழுதும் பொங்கி வழியும். அந்த அளவிற்கு அனைவரின் கவலைகளை மறந்து சிரிக்க வைத்துவிடுவார்கள்.
அதிலும் அவர்களின் ரியாக்ஷன், சேட்டைகள் இவை எல்லாம் வேற லெவல் என்று தான் கூற வேண்டும். இங்கு ஆயிரம் கவலைகளை மறக்க செய்த குழந்தையின் கியூட் ரியாக்ஷனை நீங்கள் காணலாம்.
அதாவது தனது தந்தையினை 15 நாட்கள் கழித்து பார்க்கும் குழந்தை ஒன்று பயங்கர வெட்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் வெளிப்படுத்திய ரியாக்ஷன் காண்பவர்களை கவலை மறக்க செய்துள்ளது.
15 நாள் கழித்து அப்பாவை பார்ப்பதற்கு வெட்கம்.. பஞ்சு மிட்டாயால் செய்த Chubby and cute பாப்பா..😍💜💜 pic.twitter.com/zhfirnhXZ9
— 🌷🌾🌴தேன்மிட்டாய் 🎶🎵🌻🐦 (@arunavijay1970) May 27, 2023
வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது.
அத்தோடு நகர மத்தியில் உள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் வரிசையில் காத்து நிற்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. எரிபொருட்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தாண்டிக்குளம் பகுதியில் 58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (31.05) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
தாண்டிக்குளம் – ஒயார்சின்னக்குளம் பகுதியில் வசித்து வந்த பாலசிங்கம் சுரேஸ் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றையதினம் இரவு உணவருந்திவிட்டு நித்திரைக்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
இரவு தூக்கத்தில் இருந்து கண் விழித்த மனைவி கணவனை நீண்ட நேரம் காணாததால் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது வீட்டின் முன்புறமாகவுள்ள வேம்பு மரத்தில் தூக்கில் தொங்குவதை அவதானித்துள்ளார்.
பின்னர் அயல் வீட்டாரின் உதவியுடன் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கிராம சேவையாளர் மற்றும் பொலிசார் சடலத்தை மீட்டதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மரணத்தில் இருந்து மீண்டு வந்த பெண் ஒருவர், என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறியது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என்ன என்பதை தாம் உணர்ந்ததாக கூறியுள்ள 32 வயது தாயார் ஒருவர், இறந்த பிறகு பயப்பட ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.
கோர்ட்னி சாண்டியாகோ என்பவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதன் தாக்கம் காரணமாக சுமார் 40 நொடிகள் மரணப்பட்டதாக தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்தில் பலபேர்களுக்கு மார்பக புற்றுநோய் காணப்படுவதாக கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்ஆர்ஐ மார்பக ஸ்கேன் எடுத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மருத்துவர்கள் IV ஐச் செருகியதும் அவரது உடல் அதிர்வடையத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி இதனால் அவரது இரத்த அழுத்தம் குறைவதற்கும் இதயத் துடிப்பு வெகுவாகக் குறைவதற்கும் காரணமாகியுள்ளது.
இந்த தருணத்தில் கோர்ட்னி சாண்டியாகோ சுய நினைவை இழந்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவர் தெரிவிக்கையில், அந்த நொடியில் தாம் முழுமையான அமைதியினை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எனது உடல், எனது உயிர், எனது மகன் அல்லது எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டுச் செல்வதைப் பற்றி அப்போது தாம் கவலைப்படவில்லை, இவை எதுவும் அப்போது முக்கியமானதாக உணரவில்லை என தெரிவித்துள்ளார்.
வாழ்க்கையில் ஒருமுறை கூட சந்தித்திராத ஒரு கனவுலகில் நுழைந்தது போன்ற உணர்வு, தாம் ஒரு கடற்கரையில் நின்றிருந்ததாகவும், வாழ்க்கையில் ஒருமுறை கூட சந்தித்திராத ஆனால் நன்கு அறிமுகமான ஒருவரை அங்கே சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் சரியாகிவிடும், ஆனால் இது உரிய தருணம் அல்ல எனவும் அந்த நபர் இவரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் தமது சுற்றும் திடீரென்று மாறத் தொடங்கியது எனவும், பின்னர் ஒரு மலையில் தாம் காணப்பட்டதாகவும், தமது சிறுவயது வீடு, அங்குள்ள தோட்டம் உள்ளிட்ட தமக்கு நெருக்கமான பல பகுதிகளை தாம் நேரில் கண்டு உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அந்த விசித்திர சம்பவத்திற்கு பின்னர் கண் விழித்த பிறகு, தம்மால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை எனவும், உடல் உறைந்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது அந்த மரணத்தை சந்தித்ததாக கூறப்படும் நிலைக்கு மருத்துவ ரீதியான காரணங்களை கூறியுள்ளனர்.
வவுனியாவில் கடந்த 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கே.கே.மஸ்தான் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
வவுனியா பொருளாதார மத்திய நிலையமானது 291 மில்லியன் பெறுமதியில் பல இழுபறிகளுக்கு மத்தியில் வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் அமைக்கப்பட்டது.
எனினும் தற்போது மரக்கறி மொத்த விற்பனையில் ஈடுபடும் வர்த்தகர்களின் கடும் நிபந்தனைகள் மற்றும் அரசாங்கத்தின் மந்த செயற்பாடுகளால் திறக்கப்படாமல் காணப்பட்டது.
இந்நிலையில் பல தடவைகள் குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பதற்காக அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
பார்வையிட்டபோதும் திறக்கப்படாமல் காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்காக பார்வையிட்டிருந்தார். இதன்போது விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர், வவுனியா அரசாங்க அதிபர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 318 ரூபாவாகும்.
அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 385 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.
இதேவேளை மண்ணெண்ணெய் விலை 50 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 245 ரூபாவாகும். மேலும், இதே அளவான விலைத் திருத்தங்களை செய்வதாக லங்கா ஐஓசியும் அறிவித்துள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் இன்று (31.05.2023) நடைபெற்றது.
வவுனியா ஊடக அமையத்தின் தலைவர் ப.கார்த்தீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு, மலர்தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர் தொடர்பான நினைவு பகிர்வுரையினை சிரேஸ்ட ஊடகவியலாளர் சக்திவேல்பிள்ளை பிரகாஸ் நிகழ்த்தியிருந்தார். நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.
அவுஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் இரவு உணவு உண்ணும்போது திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த அப்பெண், குடும்ப விருந்தின்போது துரதிர்ஷ்டவசமாக தனது பெற்றோர் முன்னிலையில் உயிரிழந்துள்ளார்.
26 வயதான டேனியலா டுச்சாடெல் (Dani Duchatel), மே 21 அன்று இரவு 10 மணிக்குப் பிறகு பிரிஸ்பேனின் மோர்டன் பேயில் உள்ள தனது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிட்டு சீட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டது.
அரசு ஊழியரான இவருக்கு சமீபத்தில் கால் முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து பெற்றோருடன் தங்கி இருந்தார். அறுவை சிகிச்சையின் காரணமாக, இரத்த உறைவு ஏற்பட்டு நுரையீரல் தக்கையடைப்பு ஏற்பட்டதாக மருத்துவர்கள் நம்புகிறார்கள்.
இருப்பினும் மருத்துவர்கள் இன்னும் பிரேத பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். டேனி டுச்சாடெல் மயங்கி விழுந்தபோது, அவரது தாயார், கே டுச்சாடெல், அவருக்கு CPR செய்ய முயற்சித்தார், ஆனால் டேனியலாவைக் காப்பாற்ற முடியவில்லை.
மகளின் சோகமான மரணத்தை அவரது தாயார் பேஸ்புக்கில் அறிவித்தார். மேலும், டேனியின் குடும்பத்தினருக்கு உதவியாக இருக்க GoFundMe தொடங்கப்பட்டதில், இதுவரை 20000 அவுஸ்திரேலிய டொலர் திரட்டப்பட்டுள்ளது.
கேரளாவில் தங்கும் விடுதி முதலாளியை கொடூரமாக கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்திய குற்றவாளிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கேரளாவின் திரூர் பகுதியை சேர்ந்த சித்திக்(58) என்பவர், கோழிக்கோடு இரங்கி பாலத்தில் தங்கும் விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளார். கடந்த மே 18ஆம் திகதி இவர் காணாமல் போனதாக, அவரது மகனால் காவல் துறையினர் புகார் அளித்ததை அடுத்து, பொலிஸார் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர்.
பின்னர் கேரளாவின் அட்டப்பாடியில் இறந்த சித்திக்கின் உடல் பாகங்கள் பெரிய பையில் அட்டப்பாடி அருகே காட்டுப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
சித்திக் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியிருப்பதாகவும், அவரது மார்பு பகுதி மற்றும் தலையில் பலமாக தாக்கியிருப்பதால் உயிரிழந்திருப்பதாகவும், பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார் சித்திக்கின் ஹோட்டல் சிசிடிவியை பரிசோதிக்கையில், சிபிலி(22) என்ற நபரும் அவரது காதலியான ஃபர்ஹானா என்பவரும் விடுதிக்குள் வந்திருப்பது பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இறந்த சித்திக்கின் மகன், தனது அப்பாவின் ஏடிஎம் கார்ட்டில், ஒரு லட்சத்திற்கும் மேலாக பணம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். இதனிடையே பொலிஸார் அவர்களை தீவிரமாக தேடியுள்ளார்.
பின்னர் சென்னையில் தலைமறைவாக இருந்த அந்த காதலர்களை, தமிழ்நாடு காவல்துறை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது. இதனை தொடர்ந்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் சிபிலி என்பவர் அந்த விடுதியில் பணிபுரிந்ததாகவும், அவர் முதலாளிக்கு தெரியாமல் பணத்தை திருடியதற்காக, அவரை சித்திக் பணியை விட்டு நீக்கியதாக தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த நபர் தனது காதலியான ஃபர்ஹானா உடன் சேர்ந்து, திட்டமிட்டு சித்திக்கை கொலை செய்து பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, அட்டப்பாடி காட்டுப் பகுதியில் வீசியதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் கூடுதலாக சிலர் சம்மந்தப்பட்டிருப்பதாகவும், அதனை காவல்துறை தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார். நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். மேலும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கனடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
புளியங்குளம் – மதியாமடு பகுதியில் 38 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்று (31.05) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புளியங்குளம் – மதியாமடு பகுதியில் வசித்து வந்த கெ.சதீஸ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். நேற்றையதினம் இரவு தனது தோட்டத்திற்கு சென்ற குறித்த குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி மரணமடைந்துள்ளார்.
தூக்கில் தொங்குவதை அவதானித்த பொதுமகனொருவர் புளியங்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தனர்.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாமென ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து அகதி தஞ்சம் கோரி பிரான்ஸ் சென்ற நிலையில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸில் அகதி முகாமில் தங்கியிருந்த நேற்று முன் தினம் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கைச் சேர்ந்த 33 வயதான இளைஞரே இவ்வாரு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக முகாமில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் உயிர்பிழைக்க பிரான்ஸ் சென்ற யாழ் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அகதிகளின் புகலிட கோரிக்கைகளை நிராகரிக்கும் நாடுகள்
அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப்போர் காரணமாக ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் , அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்ளுக்கு அடைகல வழங்கி வந்த நிலையில், போர் முடிவுக்கு வந்த பின்னர், இவ்வாறு செல்லுபவர்களின் புகலிட தஞ்சக்கோரிக்கைகளை வழங்காது இழுத்தடிப்பு செய்து வருகின்றன.
எனினும் முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி பல லட்சங்களை செலவு செய்து இன்னும் இலங்கையர்கள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு வருகின்றனர்.
அங்கு சென்ற பின்னர் முகாம்களில் அடைக்கப்படும் அவர்களின் அகதி தஞ்ச கோரிக்கைகளும் அண்மைக்காலமாக நிராகரிக்கப்படுவருவதால் மன உளைச்சலுக்கு உள்ளாகி இவ்வாறு விபரீத முடிவால் உயிரிழக்கும் சம்பங்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வந்த இளம் தம்பதியொன்று கோபுரத்தின் சுவரில் எழுதிய போது கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை கோபுரத்தின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்கள் அதன் உடைமைகளை சேதப்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்த அதன் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் தாமரை கோபுர பராமரிப்புக்கு பாரிய செலவு ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
மக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் வர்த்தக நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (31) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுன் “22 கேரட்” தங்கத்தின் விலை 149,000 ரூபாவாக குறைந்துள்ளது.
அதேவேளை கடந்த வாரம் புதன்கிழமை இது 154,500 ரூபாவாக பதிவாகி இருந்தது.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த ஒரு பவுன் “24 கேரட்” தங்கத்தின் விலை தற்போது 161,000 ஆக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.