மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை விபரம்!!

உலக சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகிறது.

இந்தநிலையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 579,553 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 150,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 143,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 20,450 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 18,750 ரூபாவாகவும், 21 கரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை 17,900 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்று (02.06) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் தங்க பவுனின் விலை 147,000 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வௌ்ளிக்கிழமை 152,600 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்க பவுனின் விலை 5,600 ரூபாவால் இவ்வாறு குறைந்துள்ளது. இதனிடையே கடந்த வௌ்ளிக்கிழமை 165,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்க பவுன் இன்றைய தினம் 159,000 ரூபாவாக குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

18 வயது மாணவி கொலை : காதல் விவகாரத்தால் ஆத்திரமுற்ற அண்ணன் வெறியாட்டம்!!

பியகமவில்..

தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், பியகமவில் நேற்று (01.06.2023) மாலை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பியகமவைச் சேர்ந்த எஸ்.ஹிருணிகா என்ற 18 வயது உயர்தர வகுப்பு மாணவி, அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த விடயம் சில நாட்களுக்கு முன்னர் மாணவியின் வீட்டாருக்குத் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆத்திரமுற்ற மாணவியின் மூத்த சகோதரன், தங்கையுடன் நேற்றுமுன்தினம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டு அவரை அடித்தும் துன்புறுத்தியுள்ளார்.

இந்தச் சித்திரவதையைத் தனது காதலனுக்குக் ஹிருணிகா தொலைபேசியூடாகத் தெரியப்படுத்தியுள்ளார். கடும் கோபமடைந்த ஹிருணிகாவின் காதலன், ஹிருணிகாவின் மூத்த சகோதரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் காதலுக்கு எதிர்ப்புக் காட்ட வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மாலை மதுபோதையில் வீட்டுக்கு வந்த ஹிருணிகாவின் மூத்த சகோதரன், காதலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறு சகோதரியை வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் உடன்படாத நிலையில், கத்தியால் அவரின் கழுத்தை அறுத்து வெறியாட்டம் புரிந்துள்ளார்.

இரத்த வெள்ளத்தில் கிடந்த ஹிருணிகாவை, அவரின் குடும்பத்தினர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும் அவரின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஹிருணிகாவின் 25 வயதுடைய மூத்த சகோதரனையும், காதலனான 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறிவிழுந்த சாரதியால் தறிகெட்டு ஓடிய பேருந்து : பயணிகள் உயிரை காத்த இராணுவ வீரருக்கு பாராட்டு!!

கண்டியில்..

கண்டியிலிருந்து மஹியங்கனை நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் பயணித்த 50 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய கோப்ரல் ஒருவரின் துணிகரமான செயலை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே பாராட்டியுள்ளார்.

கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்து கொண்டிருந்த பேருந்தில் ஏற்படவிருந்த பாரிய விபத்தை பஸ்ஸில் பயணித்த இளைஞன் நந்தன யசரத்ன தடுத்து நிறுத்தி பயணிகளினுயிரை காப்பாற்றியிருந்தார்.

இலங்கையின் நான்காவது காலாட்படையின் கோப்ரல் கே.எம்.பி.ஆர்.கே.எல் கருணாரத்ன என்ற கோப்ரலே இவ்வாறு பயணிகளின் உயிரை காப்பற்றி பாராட்டைப் பெற்றவராவார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவின் ஆலோசனையின் பேரில், குறித்த கோப்ரல் வியாழக்கிழமை (01) இராணுவத் தளபதியின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டு, இராணுவத் தளபதியினால் அவருக்கு பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது.

உடுதும்பர பிரதேசத்திலிருந்து குறித்த பஸ் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், வளைவில் திரும்பும் போது சாரதியின் ஆசனத்திலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டதில், பஸ் சாரதியின்றி சுமார் 50 மீற்றர் தூரம் பயணித்துள்ளது.

இந்நிலையில், அந்த பஸ்ஸில் பயணித்த இராணுவ கோப்ரல் துரிதமாக செயற்பட்டு சாரதி இருக்கைக்குச் சென்று பெரும் பிரயத்தனத்தின் பின்னர் பஸ்ஸை நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புங்குடுதீவு பாலத்தில் இருந்து கடலுக்குள் பாய்ந்த உழவு இயந்திரம்!!

புங்குடுதீவில்..

யாழ்ப்பாணம் புங்குடுதீவு வாணர் பாலத்திலிருந்து உழவு இயந்திரமொன்று சரிந்து கடலில் வீழ்ந்துள்ளது . இந்த சம்பவம் இன்று பகல் இடம்பெற்றுள்ளது. இப்பாலமானது அறுபது ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் காணப்படுகின்றது.

புங்குடுதீவு மக்களின் நிதியில் அமைக்கப்பட்ட ஐந்து கிலோமீற்றர் நீளமான இக்கடற்பாதையில் பயணிப்பவர்கள் வார்த்தைகளினால் கூறமுடியாதளவுக்கு துன்பங்களை அனுபவித்துவருகின்றதாக சமூக ஆர்வலகள் கூறுகின்றனர்.

நீண்டகாலமாக இலங்கையின் நீளமான கடற்பாதையாக புங்குடுதீவு வாணர் பாலம் காணப்படுகின்றது . மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் இப்பாலத்தினை புனரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் பின்னர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் அந்நிதி ஒதுக்கீடு மீளப்பெறப்பட்டு புனரமைப்பு பணி திட்டம் முழுமையாக நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் முப்பது ஆண்டுகளாக மத்திய அமைச்சராக குப்பை கொட்டுகின்ற டக்ளஸ் தேவானந்த இதுகுறித்து எதுவித அக்கறையும் செலுத்துவதாக இல்லை எனவும் அவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மேலும் தீவக மக்களின் வாக்குகளால் 1994 ல் நல்ல வாழ்க்கையை அனுபவிக்க தொடங்கிய டக்ளஸ் தேவானந்த, தனக்கு வாக்களித்த மக்களின் குறைகளை கண்டுகொள்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறைகிறதா?

கையடக்க தொலைபேசி..

நாட்டில் நிலவும் பொருளாதார தடைக்கு மத்தியில் பல நூற்றுக்கணக்கான பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி தடை தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் எதிர்காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் விலை குறையும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறிப்பாக கையடக்க தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள்,பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள விதிகள் தளர்த்தப்படவுள்ளன.

இதற்கமைய 843 வகையான பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பண வரம்பு தேவையை நீக்குவதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த பொருட்களின் மொத்த மதிப்புக்கான பண வைப்பு வரம்பை நீக்குவதாக அறிவித்துள்ளது.

இதன்போது இறக்குமதி கட்டுப்பாடு காரணமாக கடந்த சில மாதங்களாக கைத்தொலைபேசிகளின் விலைகள் பல மடங்காக அதிகரித்து காணப்பட்ட நிலையில் விரைவில் அவற்றின் விலைகள் மீண்டும் குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கையில் வியப்பை ஏற்படுத்திய பிரபல அரசியல்வாதியின் மகளின் திருமணம்!!

தென்னிலங்கையில்..

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் மூத்த மகள் நேற்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றது.

எனினும் இந்த திருமண வைபவத்தில் எந்தவொரு அரசியல்வாதியும் கலந்து கொள்ளாதது விசேட அம்சமாகும். நீண்ட காதல் உறவுக்கு பிறகு திருமணம் செய்து கொண்ட அமாவுக்கும் குஷானுக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரபலமானவர்கள் தமது திருமணங்கள் வெகு விமர்சையாக அரசியல்வாதிகளுடன் இடம்பெறும். ஆனால் பிரபல அரசியல்வாதியான சம்பிக்கவின் வீட்டுத் திருமணத்தில் அரசியல் பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்காமை குறித்து அதிகம் பாராட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இரண்டாவது நாளாகவும் எரிபொருளை பெற்றுகொள்ள நீண்ட வரிசை!!

வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் எரிபொருளை பெற்று கொள்ள வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகின்றது. அத்தோடு நகர மத்தியில் உள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை என பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வவுனியாவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலினை பெற்றுக்கொள்ள மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் நீண்ட வரிசையில் காத்து நிற்பதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

எரிபொருட்களின் விலைகள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டிருந்தமையினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் எரிபொருளுக்கான முன்கூட்டிய பதிவினை மேற்கொள்ளமையினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலையிடம் விளையாடி கையை இழந்த நபர்.. வைரலாகும் வீடியோ!!

முதலை..

ACசமூக வலைதளங்களில் காலக்கட்டத்தில் நாம் இப்போது உள்ளோம். செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு கிடைப்பது எளிதாகிறது. அந்த அளவுக்கு தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இப்படியான சூழலில் நாள்தோறும் பல்வேறு வகையான வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒரு முதலை தொடர்பான நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் கத்தியுடன் ஒரு மனிதன் முதலையிடம் செல்கிறார். அந்த நபர் அந்த முதலையை கத்தியால் தாக்க முயற்சிக்கிறார்.

இதனை உணர்ந்த முதலை, அந்த நபர் முதலையை தாக்க வரும்போது அது, அவர் சிறிதும் எதிர்பாராத வண்ணம் அவர் கையை கவ்வி பிடித்துக்கொள்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வலியால் துடிக்கிறார்.

இந்த வீடியோ @crazyclipsonly என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘மனிதன் தாக்கினான்…முதலை பதிலடி கொடுத்தது’ என்று இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ 80 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் நெட்டீசன்கள் இதற்கு பல கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். இதற்கு ஒரு பயனர், ‘தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என கமெண்ட் செய்துள்ளார்.

ஆண் வேடமிட்டு மாமியாரைக் கொலைசெய்த மருமகள்.. காட்டிக் கொடுத்த சிசிடிவி!!

நெல்லையில்..

நெல்லை, துலுக்கர்குளம் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமம், வடுகன்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் (வயது 63) என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்துவருகிறார்.

அவரின் மனைவி சீதாராமலெட்சுமி (58). இந்தத் தம்பதிக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்த நிலையில் சீதாராமலெட்சுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீதாராமலெட்சுமியின் மகன் ராமசாமிக்குத் திருமணமாகிவிட்டது. அவருடைய மனைவி மகாலட்சுமி. ராமசாமி-மகாலட்சுமி தம்பதிக்கு இரு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.

மூத்த மகனுக்கு ஐந்து வயதும், இளைய மகனுக்கு 10 மாதமும் ஆகிறது. திருமணமானதிலிருந்தே மகாலட்சுமிக்கும் அவருடைய மாமியாருக்குமிடையே சுமுகமான உறவு இருக்கவில்லை என அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.

மாமியார்-மருமகளிடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டையும் ஏற்பட்டு வந்திருக்கிறது. அதனால் ராமசாமி தனிக்குடித்தனம் போக ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், அவர்களைத் தனியாக அனுப்ப விரும்பாத சீதாராமலெட்சுமி, தனது வீட்டின் பின்பக்கத்தில் தனியாக வீடு கட்டிக் கொடுத்து அதில் மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.

அருகருகே மாமியார்-மருமகள் வசித்ததால் இருவருக்குமிடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு இருந்துவந்திருக்கிறது. அதனால் ஆத்திரத்திலிருந்த மகாலட்சுமி, ஒருகட்டத்தில் தன்னுடைய மாமியாரைத் தீர்த்துக் கட்டினால் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என நினைத்திருக்கிறார். அதற்கான சரியான சந்தர்ப்பத்துக்காக அவர் காத்துக்கொண்டிருந்திருக்கிறார்.

அண்மையில் வீட்டிலுள்ளவர்கள் அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில், மாமியார் சீதாராமலெட்சுமி மட்டும் வீட்டில் படுத்திருப்பதைப் பார்த்த மருமகள் மகாலட்சுமி, தனக்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நினைத்திருக்கிறார். அதனால் அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்திருக்கிறார்.

40 முறை கத்தியால் குத்தி, கல்லைப் போட்டு சிறுமி படுகொலை.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

டெல்லியில்..

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் பாலியல் வன்முறைகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. பெண்கள், குழந்தைகள் தனியாக வெளியில் செல்லவே அச்சத்தில் உள்ளனர்.

நிர்பயா விவகாரம் தொடங்கி துண்டு துண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து நாய்களுக்கு போட்ட கொடூர ஷ்ரத்தா கொலை வரை திகிலில் உறைய வைக்கிறது. அந்த வரிசையில் டெல்லி ரோகினி பகுதியில் நேற்று மாலை 16 வயது க சாக்ஷி என்ற இளம்பெண், அமைதியாக சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த அவரது சாஹல் என்ற 20 வயது காதலன், சரமாரியாக கத்தியால் 40 முதல் 50 முறை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். அத்துடன் நில்லாமல் ஆத்திரத்தில் கோபம் தணியாமல் அருகில் கிடந்த பெரிய எடுத்து மீது பலமுறை போட்டு சிறுமியின் தலையை நொறுக்கினார்.

இந்த கொடூர கொலையில் அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அந்தப்பக்கம் சென்றவர்கள் இந்த கொடூரத்தை வேடிக்கை பார்த்தனரே தவிர யாரும் தடுக்க முன்வரவில்லை. அந்தப் பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் யாரும் இறங்கவில்லை.

அந்த இளைஞரை பார்த்து பயந்து பின்வாங்கினர். ஆனால் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி வீடியோ வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.அதில் “நடந்த குற்றம் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது, மக்கள் பலர் பார்த்துள்ளனர்,

ஆனாலும் குற்றவாளி இன்னும் கைது செய்யப்படவில்லை. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாதுகாப்பாற்ற நகரமாக டெல்லி மாறிக் கொண்டு வருகிறது ” என ஸ்வாதி மாலிவால் கூறி உள்ளார். சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்த சாஹல் உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹரில் கைது செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் ஷஹபாத் டெய்ரி காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி முதலமைச்சர் இந்த கொடூர சம்பவம் குறித்து அதிர்ச்சிகரமான கொலைக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.

“டெல்லியில் ஒரு சிறுமி கொடூரமான முறையில் பகிரங்கமாக படுகொலை செய்யப்பட்டார். இது மிகவும் வருத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமானது. குற்றவாளிகள் அச்சமற்றவர்களாகி விட்டனர், காவல்துறைக்கு பயம் இல்லை. எல்ஜி சார், சட்டம் ஒழுங்கு உங்கள் பொறுப்பு, ஏதாவது செய்யுங்கள். டெல்லி மக்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது என கூறி உள்ளார்.

வவுனியாவில் 5 வருடங்களாக திறக்கப்படாமல் இருக்கும் பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார நிலுவை 4 இலட்சத்தை கடந்தது : மின் துண்டிப்பு!!

வவுனியாவில் அமைக்கப்பட்டு 5 வருடமாக திறக்கப்படாமல் உள்ள வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தின் மின்சார கட்டண நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளதால் குறித்த பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மூன்றுமுறிப்பு பகுதியில் 291 மில்லியன் ரூபாய் செலவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டு அங்கு 55 கடைத் தொகுதிகளும் உள்ளன.

குறித்த பொருளாதார மத்திய நிலையமானது கடந்த 5 வருடங்களாக திறக்கப்படாது உள்ள நிலையில் அதன் மின்சாரப் பட்டியலுக்கான கொடுப்பனவு நிலுவை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

தனித்தனி கடைகளுக்குமான மின்சாரப் பட்டியல்களின் ஒருமித்த தொகையே 4 இலட்சத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக குறித்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதன் கதரணமாக அங்கு கடமையில் உள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த பொருளாதார மத்திய நிலையமானது திறக்கப்படாத போதும் கோவிட் தொற்று காலப்பகுதியில் அது சிகிச்சை நிலையமாக குறிப்பிட்ட சில மாதங்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரிடம் கேட்ட போது, குறித்த பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாத போதும் கொவிட் தொற்றாளர்களின் பராமரிப்பு நிலையமாக தொழிற்பட்டது.

ஆனால் பொருளாதார மத்திய நிலையம் திறப்பதற்கு முன் மின்கட்டண நிலுவை செலுத்தி மீள் மின்னிணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஜலதோஷத்திற்கு ஆவி பிடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக பலி!!

தூத்துக்குடியில்..

அனுபவம், பக்குவம் வேறு படிப்பு வேறு. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அந்த காலத்து பழமொழி. நர்சிங் படித்த கல்லூரி மாணவி ஜலதோஷத்திற்காக வெந்நீரில் மாத்திரை போட்டு ஆவி பிடிக்க முகம் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.எதுவாக இருப்பினும் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து மருந்து மாத்திரைகளை பயன்படுத்துங்கள், சுய மருத்துவம் மிகப்பெரிய சிக்கலில் கொண்டு விட்டுவிடும் என மருத்துவர்கள் மாறி மாறி எடுத்துக் கூறி வருகின்றனர்..

இருந்தாலும் இளைய தலைமுறையின் அலட்சிய மனோபாவத்தால் விபரீதங்கள் விளைந்து விடுகின்றன. இதை பார்த்தாவது இனி வரும் இளசுகள் தம்மை கொஞ்சம் மாற்றிக் கொண்டால் சரிதான்.

தூத்துக்குடி மேல சேர்ந்த பூமங்கலத்தில் வசித்து வருபவர் கோமதி நாயகம். தனியார் மில் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இளைய மகள் 19வயது கௌசல்யா.

அதே பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக ஜலதோஷம், மூக்கடைப்பு என சிரமப்பட்டு வந்த கௌசல்யா, அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. எனினும் ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலையில் கல்லூரிக்கு கிளம்பிய கவுசல்யா, அதன்முன்பு வெந்நீரில் மருந்தைப் போட்டு ஆவிப் பிடித்துள்ளார். ஆவிப் பிடித்த அடுத்த நிமிடமே மயக்கமான கவுசல்யாவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதனால் கவுசல்யா தன் முன்பாக இருந்த வெந்நீர் பாத்திரத்திலேயே தலை கவிழ்ந்து மயங்கி விழுந்தார். கீழே விழுந்தும், வெந்நீர் பட்டும் அவர் காயமடைந்துள்ளார். இதனை பார்த்த கவுசல்யாவின் குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மாணவி உயிரிழப்பு தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சளி பிரச்னைக்கு ஆவிப்பிடித்து மயங்கி விழுந்து மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

2 குழந்தைகளை கொலை செய்த தாய் எடுத்த விபரீத முடிவு!!

திருச்சி..

திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் வசித்து வருபவர் 33 வயது மனோஜ்குமார். இவருடைய மனைவி 26 வயது ஷோபனா. இவர்களுக்கு 3 வயதில் தஷ்வன், 11 மாதமே ஆன கபிஷன் என இருக்குழந்தைகள்.

பர்னிச்சர் கடை உரிமையாளரான மனோஜ்குமாருக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சொந்தத்தொழிலை விட்டுவிட்டு தற்போது ஸ்ரீரங்கத்தில் உள்ள சாந்தி பர்னிச்சரில் பணிபுரிந்து வருகிறார்.

தொழிலில் நஷ்டமடைந்த பின் அவ்வப்போது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டையும், சச்சரவும் தொடர்ந்தது.

இந்நிலையில் பணி நிமித்தமாக மனோஜ் கொடைக்கானல் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார்.

மனைவி மற்றும் குழந்தைகள் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் தொங்கியதை கண்டு மனோஜ் குமார் அலறிக் கூச்சலிட்டார். உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

இச்சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து எடமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

10ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம்… ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் தான் பாலியல் பலாத்காரங்களும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்து வருகின்றன என நினைத்தால், உத்தரப் பிரதேச மாநிலத்தில், பொள்ளாச்சி சம்பவங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி விடும் அளவுக்கு சமூகத்தில் புரையோடி இருக்கிறது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.

பள்ளியில் வைத்து 10 வகுப்பு மாணவியைக் கதற கதற கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலைச் செய்த சம்பவம் நாட்டையே அதிர செய்துள்ளது. இது குறித்து எந்த விதமான கண்டனங்களும் இல்லாமல், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்து, அதனுள்ளே பழைய செங்கோலை வைத்து சந்தோஷப்படுகிறோம்.

அதே டெல்லியின் இன்னொரு ஓரத்தில், மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என போராடி வருகிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் சன் பீம் என்ற தனியார் பள்ளியின் முதல்வர், அந்த பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவி ஸ்ரீவஸ்தாவாவின் வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பள்ளிக்கு வரச் சொல்லி அழைத்துள்ளார்.

பள்ளியின் முதல்வர் அழைத்ததால், காலை 9 மணிக்கு மாணவி பள்ளிக்கு சென்ற நிலையில், ஒரு மணிநேரம் கழித்து மாணவி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாக மாணவியின் பெற்றோருக்கு தகவல் வந்துள்ளது.

பதறிப் போன பெற்றோர் பள்ளிக்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு மாணவியின் மரணம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் மரணம் குறித்து கேட்ட போது பள்ளி நிர்வாகம் முன்னுக்குப் பின் முரணான தகவலைத் தந்துள்ளனர்.

மாணவி ஊஞ்சலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக பள்ளி தரப்பு கூறிய நிலையில், அவர் மாடியில் இருந்து விழுவது சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பதிவாகியுள்ளது. எனவே, மாணவியை யாரோ மேலே இருந்து தூக்கி வீசியிருக்கிறார்கள் என பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மாணவி விழுந்த இடத்தில் இருந்து ரத்தகறை போன்ற தடயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனால், சந்தேகமடைந்த மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

மாணவியை பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அபிஷேக் மற்றும் மேலாளர் பிரிஜேஷ் யாதவ் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அதை மறைக்க மாடியில் இருந்து தூக்கி வீசியதாக புகார் தெரிவித்துள்ளார். இந்த குற்றத்திற்கு பள்ளி முதல்வர் ராஷ்மி பாடியாவும் உடந்தை என மாணவியின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.

மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், அயோத்தி போலீசார் பள்ளி முதல்வர், மேலாளர், விளையாட்டு ஆசிரியர் ஆகியோர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை பிரிவான 302, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதுபன் சிங் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கொலைக் குற்றத்திற்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பு!!

கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. இதன் பின் அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த சடலம் தடவியல் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றம் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தால் அரச சட்டவாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கரவண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்துபோவதை தடவியல் பொலிசார் மன்றில் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.

சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால்,

முதலாம் சந்தேகநபருக்கு மரணதண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது.

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொன்று விட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய கணவர்!!

திண்டுக்கல்லில்..

மனைவியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார் குடும்ப பிரச்சனையில் மனைவியை கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த அதிர்ச்சி சம்பவம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த பாப்பம்பட்டியை சேர்ந்தவர் திருமூர்த்தி. இவரின் மனைவி மாலதி. காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கொத்தனார் வேலை செய்து வரும் திருமூர்த்தி அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து போதையில் மாலதியுடன் தகராறு செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று மதியம் மது போதையில் மனைவியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது .

இதில் ஆத்திரமடைந்த திருமூர்த்தி , மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்து இருக்கிறார். அதன் பின்னர் இரண்டு குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார் .

மதியம் இந்த சம்பவம் நடந்த நிலையில் இரவு வெகு நேரமாகிய வீட்டில் மின்விளக்குகள் எரியாததை கண்டு அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்திருக்கிறார்கள்.

அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது மாலதி சடலமாக கிடந்திருக்கிறார். இதன் பின்னர்அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாலதியின் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர் .

போலீசாரின் மேற்கட்ட விசாரணையில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு இரண்டு குழந்தைகளுடன் தலைமறைவாகி இருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.

பழனி போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து திருமூர்த்தியை தேடி வந்த நிலையில் அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்ப பிரச்சனையால் மனைவியின் தலைவியில் கல்லை போட்டு கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.