பொசன் போயா தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 5 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று (03.06.2023) பொசன் போயா தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறு குற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் இன்று விடுவிக்கப்பட்டனர். மேலும் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கோவையில் இளம் மனைவியை கொலை செய்த கணவர், கொலைக்கு உடந்தையாக நாடகமாடிய பெண்ணின் மாமியார், மாமனார் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். கோவை மத்துவராயபுரம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) தனது கல்லூரியில் உடன் படித்த ரமணி (வயது 20) என்ற பெண்ணை காதலித்து கடந்த 6 ஆம் தேதி திருமணம் செய்துக்கொண்டார்.
பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து, சஞ்சய் வீட்டில், சஞ்சயின் தாய், தந்தையுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சஞ்சய் கல்லூரியில் உடன் படிக்கும் மற்றொரு பெண்ணிடம் செல்போனில் பேசியது தொடர்பாக மனைவி ரமணிக்கு கோபம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், ரமணியை சஞ்சை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
கொலையை மறைப்பதற்காக தனது அம்மா, அப்பாவுக்கு போன் செய்ததையடுத்து, இருவரும் வீட்டுக்கு வந்து இறந்து போன ரமணியின் உடலில் அணிந்திருந்த உடையை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் பொடியை கரைத்து உடல் முழுவதும் பூசி குளிக்கவைத்து துணிகளை மாற்றிவிட்டு,
சாணிப்பவுடர் குடித்தது போல மற்றவர்களை நம்பவைக்க, அக்கம்பக்கம் உள்ளவர்களை கூவி அழைத்து புளியைக் கரைத்து ஊற்றியும் பின்பு ஆலாந்துறை தனியார் மருத்துவமனைக்கு ரமணி உடலை தூக்கிசென்று மருத்துவரிடம் காண்பித்து, பின்பு பூலுவபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எடுத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அலுவலில் இருந்த பெண் மருத்துவர் ரமணி உடலை பரிசோதித்து இறந்து விட்டதாக கூறியுள்ளார். மருத்துவமனையில் இருந்து காருண்யா நகர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது ரமணி இறந்தது தெரிய வந்தது.
பிரேதத்தை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்மூலம் அனுப்பி வைத்துள்ளனர். சஞ்சய் தனது தந்தை, தாய் உதவியுடன் ரமணி தற்கொலை செய்துகொண்டது போல் நாடகமாடி உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இறப்பில் சந்தேகம் இருப்பதாக ரமணி தந்தை அளித்த புகாரில் காருண்யா நகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், ரமணி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
29ஆம் தேதி சம்பவம் நடந்தபோது முதலில் சந்தேக மரணம் பதிவு செய்யப்பட்டு, வருவாய் கோட்டாட்சியர் விசாரணை செய்த நிலையில், விசாரணைக்கு பின் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
தொடர்ந்து, கணவர் சஞ்சய், மாமியார் பக்ருநிஷா, மாமனார் லட்சுமணன் ஆகியோரை காருண்யா நகர் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் கோரவிபத்துக்குள்ளான புகையிரதத்தில் பயணித்து உயிர்தப்பிய பயணியொருவர் தனது திக் திக் அனுபவத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கைகால் அற்ற உடல்கள் – தண்டவாளத்தில் இரத்தக்களறி ஹவ்ராவிலிருந்து சென்னைக்கு சென்றுகொண்டிருந்த கொரமன்டல் ரயிலின் ஒரு பயணி என்ற அடிப்படையில் இந்த விபத்திலிருந்து உயிர்பிழைத்தமை குறித்து நான் மிகவும் நன்றியுடையவனாக உள்ளேன்.
வரலாற்றில் மிகப்பெரிய ரயில்விபத்தாக இது இருக்கலாம் மூன்று புகையிரதங்கள் இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளன கொரமண்டல்எக்ஸ்பிரஸ்- ஹெவ்ரா எஸ்எவ் மற்றுமொரு சரக்குரெயில்.
கொரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம்புரண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த சரக்குரயிலுடன் மோதியதாகவே ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து தடம்புரண்ட ரயில்கள் அருகில் உள்ள தண்டவாளத்தில் பயணித்துக்கொண்டிருந்த யெஸ்டவன்பூர் எக்ஸ்பிரசுடன் மோதியுள்ளன.
உயிரிழப்புகள் – நான் மிகைப்படுத்தவிரும்பவில்லை,200 முதல் 250 உயிரிழப்புகளை பார்த்தேன் – குடும்பங்கள் சிதைக்கப்பட்டுள்ளன,கைகால் அற்ற உடல்கள் தண்டவாளத்தில் இரத்தக்களறி நான் பார்த்ததை என்னால் என்றும் மறக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.
இந்தியாவில் ஒடிசாவில் இடம்பெற்ற கோரவிபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. இதுவரை238 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
இந்த கோர விபத்தில் 900 மேற்பட்டோர் காயடைதுள்ளதாவும் இந்திய தகவல்கள் கூறுகின்றன. அதேவேளை ரயிலில் பயணித்த 32 பேரின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் விபத்தில் சிக்கிய சென்னை கோரமண்டல் ரயிலில் பயணித்த தமிழக பயணி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த சூழலில் விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழக பயணி கூறுகையில், 2 பெட்டிகளி நான் வெங்கடேசன் பேசுகிறேன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான். கோரமண்டல் விரைவு ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தேன்.
பாலசோர் ரயில் நிலையத்திற்கு மாலை 6 மணி 15 நிமிடத்திற்கு வந்தது. பாலசோர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் கிராசான 15 நிமிடங்களில் டெல்லியில் இருந்து தூரந்திரோ எக்ஸ்பிரஸ் எதிர் திசையில் வந்தது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்தது. அது பக்கத்தில் ஒரு கூட்ஸ் வண்டியும் வந்தது. இரண்டு ரயிலுக்கு நடுப்புறம் கூட்ஸ் வண்டி புகுந்ததால், இந்த இரண்டு ரயில்களும் விபத்தில் சிக்கின. கிட்டத்தட்ட இந்த விபத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஏராமானனோரை மீட்கும் பணி நடந்து வருகிறது. நான் பி 7 இல் இருந்தேன். பி 6 வரை அனைத்து பெட்டிகளும் முழுமையாக விபத்தில் சிக்கியது. இரண்டு பொதுப்பெட்டியில் இருந்த அனைவருமே இறந்துடாங்க.. யாருமே தப்பிக்கல. நான் உடனே எங்க டீம் (ராணுவத்திற்கு)க்கு போன் பண்ணி சொல்லிட்டேன்.
அவர்கள் அடுத்த அரை மணி நேரத்தில் மீட்பு பணியில் இறங்கினர். இந்த பணி விடிய விடிய நடக்கும். நிலைமை சரியாக இரண்டு நாட்களுக்கு மேல் ஆகும் எனத் அந்த பயணி தெரிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் அனைத்து கடன் அட்டைகளுக்கான வட்டி் வீதங்களும் குறைவடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய நாட்டை முழு சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து, கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துக்களில் மூன்றாவது மிகப் பெரிய ரயில் விபத்து என கூறப்படுகின்றது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று ரயில்கள் மோதிக் கொண்ட இந்த கோர விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 900-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் நிகழ்ந்த ரயில் விபத்துகளில் ஒடிசா விபத்து 3-வது மிகப் பெரிய விபத்து இது என்றும் கூறப்படுகிற நிலையில் நாடுமுழுவதையும் ஒடிக்ஷா ரயில் விபத்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பஞ்சாப்பின் அமிர்தசரஸில் தசரா பார்வையாளர்களின் மீது ரயில் மோதிய விபத்தில் 59 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் கான்பூரிலிருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள புக்ராயனில் இந்தூர் – ராஜேந்திரா நகர் விரைவு ரயிலில் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 152 பேர் உயிரிழந்தனர், 250-க்கும் அதிகமான பயணிகள் காயமடைந்தனர்.
ஹவுரா – லோகமானிய திலக் டெர்மினஸ் ஞானேஸ்வரி அதி விரைவு வண்டி, மகாராஷ்டிராவின் ஹமாசுலி மற்றும் சர்திகா இடையே சென்றபோது எதிரே வந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 140 பேர் உயிரிழந்தனர், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம், வாலிகொண்டா நகரத்தில் திடீர் வெல்லத்தால் சிறிய ரயில்வே பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதால், டெல்டா பயணிகள் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 144 உயிரிழந்தனர், 200க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
பிஹாரின் கயா மற்றும் டெஹாரி ஆன் சோன் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்றுப்பாலத்தில், ஹவுரா ராஜ்தானி விரைவு ரயில் தடம்புரண்டு இரண்டு பெட்டிகள் ஆற்றினுள் விழுந்ததில் 140 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் தினாஜ்பூர் மாவட்டத்தின் கைசால் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த அவத் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா மெயில் வந்து மோதிய விபத்தில் குறைந்தது 285 பேர் உயிரிழந்தனர். சுமார் 300-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் கன்னாவில், ஃப்ரன்டியர் கோல்டன் டெம்பிள் ரயிலின் தடம்புரண்ட மூன்று பெட்டிகளின் மீது ஜம்மு தாவி-சீல்டா விரைவுரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 212 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மற்றும் ஒடிசாவின் பிரம்மாபுர் இடையே இரண்டு கோரமண்டல் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்தனர். இதில் ஒரு ரயில் ஹவுராவில் இருந்தும், மற்றொன்று சென்னையில் இருந்தும் வந்து கொண்டிருந்தன.
துசி கிராஸிங் அருகே நாகவல்லி ஆற்றில் கோரமண்டல் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 50 பேர் உயிரிழந்தனர். உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஃபிரோசாபாத் அருகே, நின்று கொண்டிருந்த காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தம் விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 350 பேர் உயிரிழந்தனர். பெரும்பாலன பயணிகளில் ரயிலில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
கேரளா மாநிலம், கொல்லம் அருகில் உள்ள அஷ்டமுடி ஏரியில் உள்ள பெருமான் பாலத்தில் சென்ற விரைவு ரயில் ஒன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 106 பயணிகள் உயிரிழந்தனர். இதில் ரயிலின் 10 பெட்டிகள் நீரில் மூழ்கின. பிஹார் மாநிலத்தில் பாக்மதி ஆற்றுபாலத்தை கடக்கும் போது ரயில் ஒன்று தடம்புரண்டு ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 300 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென்பது அவர்களுக்கு வரி அறவிடப்படும் என்பதல்ல.
வருமான வரிக் கணக்கின் கீழ் நலன்புரிப் பலன்களை விநியோகிக்கவே 18 வயதிற்கு மேற்பட்ட தனிநபர்களின் பதிவு அவசியம். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் உள்ளூர் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வரிக் கணக்கின் விவரங்களின் அடிப்படையில் தனிநபர்களுக்கான சலுகைகள் குறித்து அரசாங்கம் தீர்மானங்களை மேற்கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள், கணக்காளர்கள் உள்ளிட்ட 14 வகைகளைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் நேற்று முன் தினம் (01.06.2023) முதல் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் நிதி மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.
மேலும், 2023 டிசம்பர் 31ஆம் திகதி 18 வயதை நிறைவு செய்தவர்கள் அல்லது 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பிறகு 18 வயதை அடையும் அனைத்து நபர்களும் இந்த புதிய விதிக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்றைய தினம் நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருமானவரி திணைக்களத்தில் வரிக் கணக்கினை திறப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என கருதக்கூடாது. வரி செலுத்தும் வரம்புக்குள் இருப்பவர்கள் மட்டுமே வரி செலுத்த வேண்டும். வரிக் கணக்கினை திறப்பது என்பது வரி செலுத்துவதை கட்டாயப்படுத்தாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தால் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு,
சிலிண்டரின் விலை நாளை (04.06.2023) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 300 ரூபா வரையில் இந்த விலை குறைப்பை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம் விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்டை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர், வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது குறித்த பெண் குறித்த அட்டையைத் திருடியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 சங்கிலி மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி நகரைச் சேர்ந்தவர் எம்.பி.ஏ பட்டதாரியான பசிலத்காத்தூன் (34). இவர் அதே பகுதியை சேர்ந்த ஜமீல் அகமது (36) என்பவரை கடந்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஐந்து மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூன் 1) இரவு பசிலத்காத்தூனின் சகோதரர் முகமது கான் செல்போனில் தொடர்பு கொண்டபோது, பசிலத்காத்தூன் கதறி அழுதியபடி பேசி உள்ளார். இதனால் அவரை சகோதரர் சமாதானம் செய்து போனை வைத்துள்ளார்.
அடுத்த இரண்டு மணி நேரத்தில் பசிலத்காத்தூனின் மாமியர் ஷகிலா ‘உங்களின் மகள் தற்கொலை செய்து கொண்டார். வந்து பிணத்தை எடுத்துச் செல்லுங்கள்’ என பசிலத்காத்தூனின் தாயார் ஹசினாவிடம் தொலைபேசியில் கூறி உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பசிலத்காத்தூனின் தாயார் ஹசினா தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “பசிலத்காத்தூனிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கணவர் ஜமீல் அகமதும் மற்றும் அவரது மாமியார் ஷகிலாவும் தினமும் அடித்து சித்திரவதை செய்து வந்தனர்.தற்கொலை தவிர்தற்கொலை தவிர்மேலும் ஜமீல் அகமது சுமார் 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதனை அடைப்பதற்காக பசிலத்காத்தூனிடம் அவரது தாயார் வீட்டில் இருந்து பணம் வாங்கி வருமாறு சித்ரவதைபடுத்தினர்.
எனவே, இவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.பசிலத்காத்தூனின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில், பசிலத்காத்தூனின் கணவர் ஜமீல் அகமது மற்றும் மாமியார் ஷகிலா ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரனை செய்து வருகின்றனர்.
மேலும் திருமணமான ஆறு வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரனைக்கு உட்படுத்தபட்டுள்ளது.மேலும், திருமணமான ஆறு வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
அரியானாவில் தம்பியை கழுத்தை நெரித்து கொன்ற அக்காவின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவருக்கு 15 வயதில் ஒரு பெண்ணும், 12 வயதில் ஒரு மகனும் இருந்துள்ளனர்.
இருவரும் தங்கள் பாட்டி வீட்டில் வசித்து படித்து வந்தனர். தற்போது மே மாதம் என்பதால் விடுமுறையை தங்களது பெற்றோருடன் செலவழிக்க இருவரும் தங்கள் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.
அப்போது பெற்றோர் தனது மகன் மீது அதிகமாக பாசம் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் தன்னை விட தனது தம்பி மீது அதிக பாசம் காட்டி வந்துள்ளதாக அந்த 15 வயது சிறுமிக்கு மனதில் எண்ணம் தோன்றியுள்ளது.
இதன் காரணமாக அக்காவுக்கு தம்பி மேல் பெரிய அளவில் பொறாமை எழுந்துள்ளது. சம்பவத்தன்று அந்த சிறுவன் தனது பெற்றோரின் மொபைல் போனை எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அவனின் அக்கா அங்கு வந்து தம்பியிடமிருந்து போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால், இதற்கு அந்த சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அக்கா தம்பியின் கழுத்தை நெரித்துள்ளார்.
இதில் அவரின் தம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதன் பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு பெற்றோர் வீட்டுக்கு வந்து சிறுவனை தேடியுள்ளனர். அப்போது போர்வைக்கடியில் சிறுவன் கிடப்பதை அறிந்து அவரை எழுப்பச் சென்றபோது சடலமாக இருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்பின் இது குறித்து அந்த சிறுமியின் கேட்டபோது ஏன் என்னை விட தம்பி மேல் அதிக பாசம் வைத்தீர்கள்.அதனால் நான் அவனை கொலை செய்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பின்னர் அங்கு வந்த போலீசார் சிறுமியை சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அடுத்தடுத்து மூன்று ரயில்கள் தொடர்ந்து மோதிக் கொண்டதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 261 ஆக உயர்ந்துள்ளது. 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்களுக்கு உதவும் வகையில் மூன்று ரயில்கள் மருத்துவ உபகரணங்களுடன் ஒடிசா விரைகிறது. மீட்பு பணிகள் ட் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.
நேற்று வழக்கம் போல கொல்கத்தாவில் இருந்து, மேற்கு வங்கம்- சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இடையே தினசரி இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.
அப்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென, தண்டவாளத்தில் இருந்து வெளியேறி, பக்கவாட்டில் சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதாக தெரிகிறது.
இரண்டு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என்று அறியப்பட்டிருக்கிறது. இந்த பயங்கர விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 7 பெட்டிகள் துரதிர்ஷ்டவசமாக தடம் புரண்டன.
புவனேஷ்வரில் இருந்து 21 கி.மீ தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைப்பெற்றதால் மீட்புப் பணிகளில் பெரும் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சரக்கு ரயிலுடன் மோதி நின்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயங்கர விபத்தை ஏற்படுத்திய நிலையில், சற்று நேரத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயிலும், தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இந்த இரு ரயில்களின் மீது மோதியதில், அந்த ரயிலும் விபத்தில் சிக்கியது.
இந்த கோர விபத்தில் 261 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், கட்டாக் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்த இடத்துக்கு உடனடியாக 50 ஆம்புலன்ஸ்கள் விரைந்து சென்று மீட்பு பணிகள் நடைப்பெற்றன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரயில்வேயின் மூத்த அதிகாரிகள் மேற்பார்வையிட்டு வருகின்றனர். தமிழ்நாடு, ஒடிசா, ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, அவசர கட்டுப்பாட்டு அறை எண், +91 6782 262 286, அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் (பாலசோர்) +91 6782 262 286 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தைத் தொடர்ந்து இன்று கருணாநிதி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கபப்ட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், போக்குவரத்து துறை அமைச்சரும் ஒடிசா விரைந்துள்ளனர்.
இடைநிறுத்தப்பட்ட தமது நியமனங்களை உடனடியாக மீள வழங்குமாறு கோரி வடமாகாண செயற்திட்ட உதவியாளர்கள் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (02.06) காலை ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுசந்தியை அடைந்து அங்கிருந்து வவுனியா, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உப அலுவலகம் வரை சென்றது. அங்கு ஜனாதிபதிக்கு அனுப்பும் வண்ணம் மகஜர் ஒன்றும் வழங்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், நல்லாட்சி அரசாங்கம் 2019 அன்று எடுத்த அமைச்சரவை முடிவின்படி தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு அமைச்சகம் மூலம் செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கோரி வர்த்தமானி வெளியிடப்பட்டது.
பிற்காலத்தில், ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் முறையே இரண்டு நேர்காணல்கள் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றன. பின்னர் 2019 அன்று 6547 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது.
நியமிக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியல் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டது. இந்நிலையில் எமது கடமைகளை தொடர்புடைய அலுவலகங்களில் நாம் ஏற்றுக்கொண்டோம்.
இந்தச்சூழலில், ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதால், நியமனத்தை இடைநிறுத்திய சுற்றறிக்கை அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் தொலைநகலில் அனுப்பப்பட்டது.
அதற்கமைய நாம் பணியிலிருந்து ஒதுங்கியிருந்தோம். தேர்தல் முடிவடையும் வரை காத்திருந்தோம். அதன் பின்னர் மீண்டும் பணிகளை பொறுப்பேற்க சென்ற போது எம்மை சேவையில் இணைக்க முடியாது என தெரிவித்தனர்.
எங்கள் நியமனங்கள் நிதி அமைச்சினால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரால் மேற்கண்ட நியமனத்தை மீட்டெடுக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்ட போதிலும், இதுவரை எந்த தகவலும் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவில்லை.
நான்கு வருடங்களாக நாங்கள் வேலையில்லாமல் இருக்கிறோம். தற்போதைய ஜனாதிபதியே அப்போது பிரதமராக இருந்தார். தற்போது வேலையில்லாமையால் நாமும் எங்கள் குடும்ப உறுப்பினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம். வாழ்வாதார இழப்பு காரணமாக கடுமையான துயரங்களுக்கு ஆளாகியுள்ளோம்.
எனவே, இந்த அரசு எமக்கு நியமனம் வழங்குவீர்களா, இல்லையா என்பதையாவது உறுதியாக கூறும்படி கேட்டு நிற்கின்றோம். எமக்கு நீதி கிடைக்காது விடின் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
குறித்த பேரணியில் நியமனம் இடைநிறுத்தப்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநெச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மாகாணத்தை சேர்ந்த செயற்திட்ட உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.
தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
கேரள மாநிலத்தில் மனைவியரை உறவுக்காக மாற்றிக்கொள்ளும் கும்பல் சமூக வலைதளங்கள் மூலம் செயல்பட்டுவருவதாக கடந்த ஓராண்டுக்கு முன் புகார் எழுந்தது. சங்கனாச்சேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் `கப்பிள் மீட் ஆஃப் கேரளா’ என்ற வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் குழுக்களையும் காண்டுபிடித்தனர். அந்தக் குழுவில் திருமணம் ஆகி ஓராண்டு நிறைவடையாத தம்பதியினர் முதல் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆன தம்பதியினர் வரை இடம்பெற்றிருந்தனர்.
இந்த வழக்கை முதன் முதலில் வெளியே கொண்டுவந்தவர் கோட்டயம் கறுக்கச்சால் பகுதியைச் சேர்ந்த ஜூபி ஜேக்கப் (28) என்ற இளம்பெண்தான். 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜூபி ஜேக்கப் போலீஸில் புகாரளித்தார்.
அதில், தன் கணவர் ஷினோ மேத்யூ, மனைவியரை மாற்றிக்கொள்ளும் குழுவில் உள்ளதாகவும், கணவர் தன்னைப் பிற ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்துவதாகவும், இயற்கைக்கு மாறான வகையில் நெருக்கமாக இருக்க வலியுறுத்துவதாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்துதான் பெரிய நெட்வொர்க்கை போலீஸார் சுற்றிவளைத்தனர்.
இந்த வழக்கைத் தொடர்ந்து புகாரளித்த இளம்பெண் ஜூபி ஜேக்கப் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி ஜூபி ஜேக்கப் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியபோது அவரின் கணவர் ஷினோ மேத்யூ இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என ஜூபி ஜேக்கப்பின் பெற்றோர் சந்தேகம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஜூபி ஜேக்கப்பின் கணவர் ஷினோ மேத்யூவை போலீஸார் தேடிச் சென்றபோது அவர் வீட்டில் விஷம் குடித்த நிலையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை போலீஸார் மீட்டு கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்றுவந்த ஷினோ மேத்யூ சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். பார்ட்னர் ஸ்வாபிங் முறைக்கு அடிமையான கணவன், அவரால் பாதிக்கப்பட்ட மனைவி என இருவரின் உயிரும் பறிபோன சோக சம்பவம் கேரளாவில் நடந்திருக்கிறது.
ராஜஸ்தானில் திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மணமகன் காதலனுடன் ஒடிவிட்ட நிலையில், 13 நாட்கள் மணமகன் மண்டபத்தில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் அனைவரும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மணமகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மணமகள் திருமணத்தில் விருப்பம் இல்லாமல், தான் வீட்டை விட்டு ஓடியிருக்கிறது என தெரிய வந்துள்ளது.
இதனைக் கேட்டு மனமுடைந்த மணமகன், எப்படியும் மணமகள் வருவாள் என்ற நம்பிக்கையில், மண்டபத்திலேயே காத்திருக்கிறார், ஆனால் மணபெண்ணோ வந்தபாடில்லை.
இதனிடையே மணமகனின் உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மணமகன் மண்டபத்தை விட்டு வரவில்லை. மேலும் தொடர்ந்து 13 நாட்கள் மணமகன் திருமண தலைப்பாகையை கழற்றாமல் கூட மணமகளுக்காக காத்திருந்திருக்கிறார்.
இந்நிலையில் மணமகளை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிஸார், மணமகளை தேடி பிடித்து மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இரு வீட்டாரும் சமாதானம் அடைந்து மணமகன் காத்திருந்த அதே மண்டபத்தில்,அ மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேசத்தில் சாலையோர மரத்தின் மீது கார் மோதி தீ பிடித்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது கார் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இது குறித்து போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்து சென்ற போலிஸார் தீயை அணைத்து காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் காரில் இருந்தவர்கள் உடல் கருகிய நிலையிலிருந்தனர். இதையடுத்து அவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த புதுமண தம்பதி உட்பட 4 பேர் திருமண நிகழ்வு ஒன்றுக்குச் சென்று விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் காரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.