வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலை : பொலிஸார் தலையீடு!!

வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குளத்தில் நேற்று (04.06.2023) மதியம் தமிழ் – முஸ்ஸிம் இளைஞர்கள் இடையே ஏற்பட்ட முறுகல் நிலமை பொலிஸாரின் தலையீட்டினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 83 ஆம் பிரிவின் பிரகாரம் பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட வேலியினை அகற்றுவதற்கான கட்டளை வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் மாவட்ட பிரதி ஆணையாளர் பா.தேவரதன் என்பவரினால் கடந்த 08.05.2023 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டளையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா கோவில்குளம் கிராம நிலதாரி பிரிவில் அமைந்துள்ள பட்டாணிச்சூர் கமநலசேவை நிலையத்தின் அதிகாரத்திற்குட்பட்ட பட்டாணிச்சூர் புளியங்குளமானது கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்கு சொந்தமான அளவை செய்யப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள குளமாகும்.

2013 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் 6 ஆம் திகதி அரச விடுமுறை தினங்களில் (இரவு நேரத்தில்) பட்டாணிச்சூர் புளியங்குளத்திற்குள் உள்நுழைந்து குளத்திற்குரிய ஒதுக்கீட்டுப் பிரதேசத்தில் விரோதமான முறையில் இனம் தெரியாதோர்களால் வேலி அடைக்கப்பட்டுள்ளதை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதனால் 2011 ஆம் ஆண்டின் கமநல அபிவிருத்தி சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்ட 2000ம் ஆண்டு 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி சட்டத்தின் 38(4) ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட 83(1) இன் பிரகாரம் அடைக்கப்பட்டவர்களாலே சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட வேலியை 22.05.2023 ஆம் திகதிக்கு முன்பு உடடியாக அகற்றுமாறு கட்டளை இடப்பட்டதுடன்.

அவர்களால் அகற்றத் தவறின் 22.05.2023 ஆம் திகதியன்றோ அல்லது அதற்கு பின்னரான தினத்திலோ கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் , கோவில்குளம் கமநல சேவை நிலையம் என்பவரால் பொருத்தமான நிறுவனங்களின் உதவியுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன்,

அதற்கு செலவான நிதி உரிய சட்ட விரோத வேலியடைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களிடமிருந்து அறவிடப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் தெரிவிக்கப்பட்டிருந்தமையுடன் வவுனியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் குறித்த பகுதியில் நேற்று காலை பள்ளிவாசல் சமூகத்தினர் இணைந்து சட்டவிரோதமான முறையில் வேலி அமைக்கப்பட்ட பகுதியினுள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது வவுனியா மாவட்ட கமக்கார சம்மேளங்களின் தலைவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியமையடுத்து குறித்த பகுதியின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையினை நிறுத்துமாறு தெரிவித்திருந்தார். எனினும் தொடர்ந்தும் சுத்தப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமையினால் தமிழ் இளைஞர்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

இதனால் அவ்விடத்தில் பதட்டமான சூழ்நிலமை நிலவியதுடன் சில மணிநேர குழப்பநிலமையினையடுத்து நிலமையினை வவுனியா பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமையுடன் இரு தரப்பினனரயும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று இருவரிடமும் முறைப்பாட்டினை பெற்றமையுடன் இவ்விடயத்தினை நீதிமன்றிக்கு எடுத்துச்செல்வதற்குரிய நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

பாம்பு பிடிக்க வந்த இடத்தில் மலர்ந்த காதல்.. பாம்புடன் போட்டோ ஷூட் நடத்திய வினோதம்!!

பாம்பு..

வித்தியாசமான முறையில் போட்டோ ஷீட் செய்த ஜோடிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பொதுவாக தற்போது இருக்கும் இளைஞர்கள் தங்களின் திருமணத்திற்கு முன்னர் தன்னுடைய துணையுடன் ப்ரீ வெட்டிங் ஷூட் செய்து கொள்கிறார்.

இதனை திருமணம் நடந்து முடிந்த பின்னரோ அல்லது விருந்துபசாரங்களின் போதோ உறவினர்கள் முன்னாள் போட்டு காட்டுவார்கள். மேலும் ப்ரீ வெட்டிங் ஷூட்டை அவர்கள் பிடித்தவாறு வித்தியாசமான முறைகளில் செய்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் வீட்டிற்கு ஒரு பாம்பு வருவதாகவும் அப்போது அதனை பிடிக்க வரும் போது தன்னுடைய துணையை பார்த்து செல்போனில் உரையாடுவது போன்றும் ஒரு தம்பதியினர் போட்டோ ஷீட் நடத்தியுள்ளார்கள்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ உங்களின் அலப்பறைகள் வர வர தாங்க முடியவில்லை.” என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ஜோடியாக ஊர் சுற்றிய காதலர்கள்… விபத்தில் பலியான காதலியை சாலையோரம் வீசிச் சென்ற காதலன்!!

திருச்சியில்..

காதலியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, விபத்து ஏற்பட்டதில், படுகாயமடைந்த காதலியை பயத்தில், காப்பாற்ற முயற்சி செய்யாமல் சாலையோரம் வீசி விட்டு சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

வேறொரு பெண்ணுடன் நிச்சயிக்கப்பட்ட நிலையில், காதலியைக் காப்பாற்றாமல் அப்படியே சாலையில் காதலன் வீசி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியை அடுத்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிநயா(23).

இவர் தஞ்சாவூரைச் சேர்ந்த பார்த்திபன் (32) என்பவரைக் கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்துள்ளார். பார்த்திபனுக்கு வீட்டில் வேறொரு பெண் பார்த்து திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ள நிலையில், திருமண பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு, அபிநயா வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே தகராறு எழுந்துள்ளது. பார்த்திபன் கோபமாக கிளம்பி விட்டார். பின்னர், பார்த்திபனுக்கு போன் செய்த அபிநயாவிடம், உடையார்பாளையம் வந்து விடுமாறு பார்த்திபன் கூறியுள்ளார்.

இருவரும் உடையார்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சந்தித்து, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊர் சுற்றியுள்ளனர். அதன் பின்னர், இரவு அபிநயாவை வீட்டில் விடுவதற்காக திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பொட்டக்கொல்லை அருகே கட்டுப்பாட்டை இழந்த பார்த்திபனின் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.

இதில், உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் அபிநயா படுகாயமடைந்தார். இந்நிலையில், அபிநயா இத்தனைக் காயங்களுடன் பிழைப்பாரா என்று பயத்தில், பார்த்திபன், அபிநயாவை அங்கிருந்து சாலையின் ஓரத்தில் தூக்கி வீசி விட்டு, எதுவும் தெரியாதவராய் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டார்.

அந்த பகுதியில் இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக உடையார்பாளையம் காவல் நிலையத்திற்கு அந்த வழியே சென்றவர்கள் தகவல் தந்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையிலான போலீசார், அபிநயாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அபிநயா குறித்து விசாரித்து வந்தனர்.

போலீசாரின் விசாரணையில், விபத்துக்குள்ளாகி, ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபிநயாவை காப்பாற்ற முயற்சிக்காமல் அப்படியே சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தூக்கி வீசி விட்டு அங்கிருந்து பார்த்திபன் தப்பி சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, உயிருக்கு போராடிய காதலியை காப்பாற்ற முயற்சிக்காமல் சாலையோரம் வீசிச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள பழங்களின் விலை!!

பழங்களின் விலை..

இலங்கையில் இறக்குமதி செலவு மற்றும் வரி அதிகரிப்பு காரணமாக அனைத்து வகையான பழங்களின் விலைகளும் அதிகரித்துள்ளது. இதன்படி, இலங்கையில் பொருளாதார மையங்களில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களின் விலையை உயர்ந்து காணப்படுகின்றன.

மேலும், கடந்த 2022ஆம் ஆண்டு மே மற்றும் ஜூன் மாகங்களில் 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 75 ரூபா தொடக்கம் 100 ரூபாவாக இருந்தது. தற்போது 100 கிராம் ஆப்பிள் பழத்தின் விலை 350 ரூபாவாக உள்ளது. அதாவது 1 கிலோ ஆப்பிள் பழத்தின் விலை 1350 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ உள்ளூர் இனிப்பு தோடம் பழத்தின் விலை 600 ரூபா, ஒரு கிலோ நாட்டு மாம்பழத்தின் விலை 700 தொடக்கம் 750 ரூபாவாகவும், ஒரு கிலோ கொய்யாவின் விலை 750 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு கிலோ புளி வாழைப்பழத்தின் 250 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிராம் தோடம்பழத்தின் விலை 817 ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை ஆப்பிள் பழத்தின் விலை 836 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. மேலும் பழச் சந்தையில் பப்பாசிபழம் ஒரு கிலோ 3830 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை ஒரு கிலோ 1,572 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பழங்களின் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் வீட்டில் தனிமையில் இந்த பெண்ணுக்கு மூவரால் காத்திருந்த அதிர்ச்சி.!!

கொழும்பில்..

கொழும்பில் உள்ள பகுதியொன்றில் உள்ள வீடொன்றில் தனிமையில் இருந்த 73 வயதுடைய வயோதிப பெண்ணின் கை கால்களை கட்டிவிட்டு தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு மூன்று நபர் தப்பிச் சென்றுள்ளதாக கெஸ்பேவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவம் கெஸ்பேவ, படுவந்தர பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த சம்பவத்தில் சுமார் 13 இலட்சம் ரூபாவிற்கும் பெறுமதியான தங்க மோதிரங்கள், தங்க நெக்லஸ்கள், தங்க வளையல்கள் மற்றும் கைத்தொலைபேசியை திருடிக்கொண்டு சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைகளில் கோப்பு அட்டைகள் மற்றும் ஆவணங்களுடன், நல்ல நேர்த்தியான உடை அணிந்த மூவரும் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் முன்பகுதியில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதா என அவதானிப்பதைப் போன்று நடித்துள்ளனர்.

இதன் பின்னர் மூதாட்டி இருந்த வீட்டிற்கு அவர்கள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய இரண்டு வீடுகளிலும் இரண்டு அல்லது மூன்று பேர் இருந்ததை அவதானித்த கொள்ளையர்கள் இந்த வீட்டிற்கு வந்து வயோதிப பெண்ணிடம் ஒரு குவளை தண்ணீர் கேட்டதாகவும், அதனை கொடுப்பதற்காக சமையல் அறைக்குள் நுழைந்த போது இந்த சம்பவத்தை நடத்தியுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்ற இலங்கை அணி!!

இலங்கை..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 132 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இலங்கை – ஆப்கானிஸ்தான் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தின் இடம்பெற்றுள்ளது.

போட்டியின் நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 323 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 75 பந்துகளில் 78 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். துமித் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், சதீர சமரவிக்கிரம 33 ஓட்டங்களையும் மற்றும் பெத்தும் நிஸ்ஸங்க 43 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்து வீச்சில் பரீட் அஹமட் மற்றும் மொஹமட் நபி ஆகியோர் தலா இர்ண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர். இதனையடுத்து, பதிலுக்கு 324 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 42.1 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுக் கொண்டுள்ளன.

மகனின் தலையை சமைத்து சாப்பிட்ட தாய் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

எகிப்தில்..

எகிப்து நாட்டில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மனகை திட்டமிட்டு கொலை செய்துள்ளார் என குற்றம்சாற்றப்பட்டு கைதுசெய்யப்படுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை கொலை செய்து கொதிக்கும் நீரில் சமைத்து சாப்பிட்டதாக அவரது உறவினர்கள் புகார் செய்துள்ளனர். மேலும் அந்த சிறுவனின் உடற்பாகங்கள் வீட்டில் உள்ள வாலியில் இருந்ததாகவும், அதை புதைப்பதற்குள் பொலிஸார் கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. தனது மகன் காலம் முழுவதும் என்னுடைய மகன் என்கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவனை கொலை செய்து தலையை சாப்பிட்டேன் என்று தனது கருத்தை அந்த பெண்மணி கூறியுள்ளார்.

வாக்குமூலம், கொலை செய்த தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் இல்லை என்பது விசாரணையில் உறுதியானது. தனது மகன் காலம் முழுவதும் என்னுடைய மகன் என்கூடவே இருக்க வேண்டும் என்று தான் அவனை கொலை செய்து தலையை சாப்பிட்டேன் என்று தனது கருத்தை அந்த பெண்மணி கூறியுள்ளார்.

திருமணமான மூன்றாவது வாரத்தில் மனைவியைக் கொன்ற கணவன்!!

கோவையில்..

காதலித்தவளையே திருமணம் செய்து கொண்ட பின்னரும், காம வெறி அடங்காமல், மனைவியின் தோழியுடன் கள்ளக்காதல் செய்து வந்த காதலன், மனைவி எதிர்த்ததால், கழுத்தை நெரித்துக் கொலைச் செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைக்கு மொத்த குடும்பமும் உடந்தையாக இருந்துள்ளது துயரத்தின் உச்சம். பெற்றோர் பேச்சைக் கேட்காமல், காதல் பெயரில் இது போன்ற சைக்கோக்களை நம்பி வீட்டை விட்டு வெளியேறும் இளம்பெண்களுக்கு இது படிப்பினை என்று சொல்லி புலம்புகிறார்கள் ரமணியின் கல்லூரி ஆசிரியர்கள்.

கோவை குறிஞ்சி நகரைச் சேர்ந்த சஞ்சய்(20) தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த ரமணியைக்(20) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் தெரிய வர, ரமணியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெற்றோரின் அறிவுரையை நிராகரித்து விட்டு, வீட்டை விட்டு வெளியேறி, கடந்த மாதம் 6ம் தேதி சஞ்சயைக் கல்யாணம் செய்து கொண்டார் ரமணி. இருவரும் ஒன்றாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், ரமணி சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லி, மூச்சு பேச்சில்லாமல் கடந்த 29ம் தேதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார் சஞ்சய்.

ரமணியை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே ரமணி உயிரிழந்ததாக சொல்லி, காருண்யா நகர் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர்.

ரமணியின் மரணம் குறித்து சந்தேகம் இருப்பதாக, ரமணியின் தந்தை கருப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

ஆர்டிஓ விசாரணைக்கு பின்னர் ரமணியின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் ரமணியின் கணவர் சஞ்சய், மாமனார் லட்சுமணன், மாமியார் பக்ருநிஷா ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மூன்று பேருமே முன்னுக்கு பின் முரணான கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

பின்னர் விசாரணையில் சஞ்சய் அடிக்கடி செல்போனில் அவருடன் படித்த ரமணியின் தோழியும், கல்லூரி மாணவியுமான ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதை ரமணி தட்டி கேட்டு இனி அந்த பெண்ணுடன் தனிமையில் சந்திக்க கூடாது, பேச கூடாது என்று கணவனிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடந்த 29ம் தேதி வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து கோபத்தில் சஞ்சய், ரமணியை அடித்து கழுத்தைப் பிடித்துள்ளார். அதன் பின்னர், கீழே தள்ளி ரமணியின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்ததாகவும் தெரிகிறது. இதனால் ரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

பின்னர், தனது தாய், தந்தையிடம் சஞ்சய் ரமணியைக் கொன்றது குறித்து கூறியுள்ளார். இதனால் கொலையை மறைப்பதற்காக ரமணியின் உடலில் இருந்த ஆடைகளை அகற்றி சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சளை உடல் முழுவதும் பூசி குளிக்க வைத்து, சாணிப்பவுடரை குடித்து இறந்தது போல் செட்டப் செய்துள்ளனர்.

அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க புளியை கரைத்து ஊற்றி, உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போல் நாடகமாடியது தெரிய வந்தது. விசாரணையில், குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர். 20 நாட்களில் ஆசையாக திருமணம் செய்து கொண்ட காதலியை கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓடும் ஸ்கூட்டில் அத்துமீறி நடந்து கொண்ட சிறுவர்கள்.. கொந்தளிக்கும் இணையவாசிகள்.!!

ஸ்கூட்டியில்..

ஸ்கூட்டியில் செல்லும் போது சிறுவர்கள் இருவர் முத்தம் கொடுத்து கொண்டு செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது இருக்கும் இளைஞர்கள் பொது இடத்தில் நடந்து கொள்ளும் விதங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றது.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுவர்கள் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள். அப்போது முன்னாள் இருந்த சிறுவனின் தலையை திருப்பி பின்னாள் இருக்கும் சிறுவன் முத்தம் கொடுக்கிறான்.

இதனை அந்த வண்டிற்கு பின்னாள் வாகனத்தில் செல்பவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் குறித்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அப்பகுதியில் இருக்கும் போக்குவரத்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இதனை பார்த்த இணையவாசிகள்,“ தவறான முன்னுதாரணங்களை ஆரம்பத்தில் கண்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் வீதி விபத்துக்களையும் சமூக சீர்கேடுகளையும் தடுக்கலாம்.” என கருத்துக்களையும் ஆதங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்!!

கோவையில்..

கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் தொடர்ந்து செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டிருந்த 2வது மனைவியை குத்தி கொலை செய்த கணவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் மதுரை வீரன். இவருக்கும் வீரம்மாள் என்பவருக்கும் திருமணம் ஆன நிலையில் வீரம்மாள் வெறு ஒருவருடன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து இவர் கோவை வேலாண்டிபாளையம் பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்துள்ளார். அதேபோல் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சித்ரா இவர் வேலாண்டிபாளையம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சித்ரா வேலை செய்யும் உணவகத்தில் சாப்பிடச் செல்லும்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு தடாகம் பகுதியில் குடியிருந்து வந்துள்ளனர். மதுரைவீரன் மட்டும் வேலைக்கு சென்று வர சித்ரா வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சித்ரா அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கேட்டபோது உறவினருடன் பேசுவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த மதுரை வீரன் சித்ராவிடம் இது தொடர்பாக வாக்குவாதம் செய்துள்ளார். சித்ராவும் போதையில் இருந்ததால் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் மதுரைவீரன் சித்ராவை காலால் மிதித்து அருகில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து சித்ராவின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் சித்ரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து தப்பித்து நிலக்கோட்டைக்குச் சென்று அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

அங்கு மதுரை வீரன் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து தடாகம் காவல் துறையினர் அவர்கள் இருவரும் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பாணந்துறையில் கரையொதுங்கிய உலகின் மிகப்பெரிய ஆமை!!

பாணந்துறையில்..

பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய ஆமை இனத்தைச் சேர்ந்த கடல் ஆமை ஒன்று இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான விலங்குகளை காண்பது மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை கரையோரக் காவற்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் பாணந்துறை கடற்கரையில் இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது. இது குறித்து ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க கூறுகையில்,

“உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விளிம்புகளை கொண்டுள்ளன. வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றதாகவும் குறிப்பிட்டார்.

யாழில் 10 வயது சிறுவன் கைது.. வெளியான காரணம்!!

யாழில்..

உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யாழில் 10 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ். வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்,

உயிர்கொல்லி ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார். விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோய்னை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

உயிர்கொல்லி ஹெரோய்னை ஊசி மூலம் மேற்படி சிறுவன் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆண் வேடமிட்டு மாமியாரை இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்ற மருமகள்!!

நெல்லையில்..

நெல்லையில் மருமகள் ஆண் வேடமிட்டு மாமியாரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் துலுக்கர்குளம் அருகே உள்ள கிராமம் வடுகன் பட்டி.

இந்தக்கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் துலுக்கர்குளம் பஞ்சாயத்து துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி சீதாராமலட்சுமி. இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

ராமசாமிக்கு மகாலட்சுமி என்பவருடன் திருமணம் முடிந்து இரு ஆண்குழந்தைகள் உள்ளனர். இவருக்கும் ராம்சாமி அம்மாவிற்கும், அதாவது மகாலட்சுமிக்கும் சீதாராம லட்சுமிக்கு ஆரம்பத்தில் இருந்தே முட்டல் மோதல் நிலவி வந்ததாகத் தெரிகிறது.

இவர்களுக்கிடையேயான மோதலை பார்த்த ராமசாமி மனைவியுடன் தனியாக சென்று வாழ விருப்பப்பட அதற்கு அனுமதிக்காத சீதா வீட்டின் பின்பகுதியிலேயே தனியாக வீடு கட்டிக்கொடுத்து அதில் மகனையும் மகளையும் தனிக்குடித்தனம் வைத்திருக்கிறார்.

இருப்பினும் இருவருக்கும் இடையேயான கருத்துவேறுபாடும் மோதலும் முடிவுக்கு வந்த பாடியில்லை. ஒருகட்டத்தில் விரக்தியின் உச்சத்திற்கு சென்ற மகாலட்சுமி மாமியாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.

அண்மையில் வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்றுவிட்ட நிலையில் மாமியார் தனியாக தூங்கிகொண்டிருப்பதை பார்த்த மகாலட்சுமி அவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

ஆனால் நாம்தான் கொலை செய்தோம் என்பது தெரியக்கூடாது என்பதற்காக வேறு ஒருவர் வந்து இந்த சம்பவத்தை அரங்கேற்றியது போல நாடகம் நடத்த மகா திட்டமிட்டு இருக்கிறார்.

அதன்படி கணவரின் பேன்ட் சட்டையை அணிந்து கொண்ட மகாலட்சுமி இரு சக்கர வாகனத்தின் ஹெல்மெட்டை எடுத்து தலையில் அணிந்து கொண்டார். தொடர்ந்து இரும்புக்கம்பியுடன் மாமியார் படுத்திருந்த அறைக்குள் நுழைந்த அவர் தூங்கிக்கொண்டிருந்த சீதாராம லட்சுமியை சரமாரியாக தாக்கினார்.

இரத்தவெள்ளத்தில் மாமியார் மயக்கமடைய அவர் இறந்து விட்டார் எனக்கருதி மகாலட்சுமி அங்கிருந்து சென்றிருக்கிறார். மேலும் இதனை மர்மநபர்கள்தான் செய்தார்கள் என்பதை காட்சிப்படுத்த சீதாராமலெட்சுமியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை சவரன் தங்கநகையை அறுத்து எடுத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து சீதாராமலட்சுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன்றி சீதா உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது அதில் மகாலட்சுமியின் உருவம் பொருந்திய ஒருவர் பேன்ட்.,சர்ட் போட்டு நடந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகாலட்சுமியிடம் தீவிரமாக விசாரணை நடத்திய நிலையில் அவர் செய்த தவறை ஒத்துக்கொண்டார்.

டீக்கடையாக மாரிய AUDI கார்.. தினமும் டீ விற்று வரும் 2 இளைஞர்கள்!!

மும்பையில்…

மும்பையைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் Audi காரில் டீ விற்பனை செய்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகவும் விலை உயர்ந்த மற்றும் சொகுசு கார்களில் ஒன்றாக Audi கார் கருதப்படுகிறது.

இந்நிலையில் Audi காரில் இரண்டு இளைஞர்கள் டீ விற்பனை செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மும்பையைச் சேர்ந்தவர்கள் மன்னு சர்மா மற்றும் அதித் காஷ்யப்.

இந்த இரண்டு இளைஞர்களும் சேர்ந்து Audi காரில் லோகந்த்வாலா சாலையின் ஓரத்தில் தினமும் டீ விற்பனை செய்து வருகின்றனர். இவர்களின் டீ விற்பனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இளைஞர்கள் இரண்டு பேருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். “எந்த வணிகமும் ஒரு சிறு வணிகம் அல்ல, கடின உழைப்பை மதிக்கவும்.

வாழ்த்துக்கள் சகோதரரே” என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு பயனர் ‘இது ஒரு சாத்தியமான வணிகம் அல்ல’ என்றும், “அவரால் Audi கார் வாங்கமுடிந்தாலும் இன்னும் டீ விற்க வேண்டும் என்றால் அவர் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் புகழ் மட்டுமே விரும்புவோர் அல்லது கல்வியில் ஏதேனும் தவறு உள்ளது” என மற்றொரு பயனர் விமர்சனம் செய்துள்ளார்.

இப்படி Audi காரில் டீ விற்பனை செய்து வரும் இளைஞர்களுக்கு ஒரு புறம் பாராட்டும் மற்றொரு புறம் விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

“அவ்வளவுதான் உயிர் போயிடுச்சினு நினைச்சோம்”.. ஒடிசா ரயில் விபத்தில் உயிர் தப்பியவர்கள்!!

ஒடிசாவில்..

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் ஹவுராவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.

இதனால் ரயிலின் சில பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது அந்த தண்டவாளத்தின் வழியாக வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு கிடந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது. அதேபோல் அடுத்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயிலும் தடம்புரண்டு இருந்த ரயில் வெட்டிகள் மீது மோதியது.

நேற்றிலிருந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒடிசா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளும் மற்றும் ஒன்றிய அரசுகளும் ஒத்துழைப்புடன் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த கோர விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. மேலும் 1000க்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் தவறான சிக்னல் கொடுத்தால் இந்த விபத்து நடந்துள்ளது என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே விபத்துக்குள்ளான ரயில் வழித்தடத்தில் ரயில் விபத்துகளைத் தவிர்க்க ‘Kavach’ என்று அழைக்கப்படும் தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பு (ATP Automatic Train Protection) அமைக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து உயிர் தப்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பயணிகள் புவனேஸ்வரிலிருந்து விமானம் மூலம் இன்று சென்னை வந்துள்ளனர்.

பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சரியான சிக்னல் கிடைக்காததால் சரக்கு ரயில் மீது மோதியது. ரயில் ஓட்டுநர் உடனே பிரேக் பிடித்து வண்டியை நிறுத்தியதால்தான் நாங்கள் இப்போது உயிரோடு இருக்கிறோம். இல்லை என்றால் சரக்கு ரயில் மீது வேகமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியிருக்கும்.

அதிகமான இளைஞர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். அனைவரும் வேலைக்குச் சென்றவர்கள். நான் பயணித்த பெட்டியும் விபத்தில் சிக்கியது. அப்போது அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன். ஆனால் இப்போது அதிர்ஷ்டவசமாக உயிரோடு இருக்கிறேன்.

ஒவ்வொரு பெட்டியும் தனித்தனியே சிதறிக் கிடந்தது. எங்கள் கண் முன்னாடி பலரின் சடங்கள் இருந்தது. விபத்து நடந்த 10,20 நிமிடத்திற்கு பிறகுதான் மீட்புப் பணிகள் நடக்கத் தொடங்கியது. பலர் ரத்த காயங்களுடன் இருந்தனர்” என தெரிவித்துள்ளனர்.

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை : முழு விபரம் வெளியானது!!

லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயு விலைகளை திருத்தியுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. எனவே சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,186 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 181 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,281 ரூபாவாகும். 2.3 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 598 ரூபாவாகும்.

இன்று (04.06.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இச் செய்தி எரிவாயு பாவனையாளர்களை மகிழ்ச்சியடையவைத்துள்ளது.