தமிழக மாவட்டம் காஞ்சிபுரத்தில் வரதட்சணை கொடுமையில் புதுப்பெண் கொலை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரத்தின் குன்றத்தூரை அடுத்த அமரம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோகுல கண்ணன் (32).
இவருக்கும் லோகப்பிரியா என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. கோகுல கண்ணன் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாக கூறியுள்ளார்.
இதனால் திருமணத்தின்போது பெண் வீட்டார் 30 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சணையாக வழங்கியதாக கூறப்படுகிறது.
திருமணம் முடிந்த சில தினங்களில் மாப்பிள்ளைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கோகுல கண்ணன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்த நிலையில் ஒருநாள் கணவரின் தலையைப் பார்த்து லோகப்பிரியா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
ஏனெனில் அவர் தலையில் விக் வைத்து இதுநாள் வரை ஏமாற்றி வந்துள்ளார். மேலும், திருமணத்திற்கு பிறகு அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால், லோகப்பிரியா அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அவர், நீங்கள் கூறியபடி வரதட்சணை தராமல் ஏமாற்றியுள்ளீர்கள் என்று கூறி சண்டையிட்டுள்ளார்.
அதேபோல் ஐ.டியில் வேலை பார்ப்பதாக அவர் கூறியதும் பொய் என லோகப்பிரியாவுக்கு தெரிய வந்துள்ளது. இவற்றை அறிந்த புதுமணப்பெண் ஏமாற்றப்பட்டுவிட்டோமே என நினைத்து கதறி அழுதுள்ளார்.
இதற்கிடையில் வரதட்சணை குறித்து கேட்ட கோகுல் கண்ணன், தனது மனைவியை கடுமையாக தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பின்னர் தன் தாயிடம் நடந்ததைக் கூறி, இருவரும் சேர்ந்து லோகப்பிரியாவின் சடலத்தை தூக்கில் தொங்கவிட்டுள்ளனர்.
தன் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக அவர் நாடகமாடியுள்ளார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் நடத்திய விசாரணையில் கோகுல கண்ணன் தன் மனைவியை கொலை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கோகுல கண்ணன் மற்றும் அவரது தாயார் ராஜேஸ்வரி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக மாரடைப்பால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை மாரடைப்பால் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்கள் கூட மாரடைப்பால் மரணமடைவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் தற்போது தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டத்தில் உள்ள போடா தாண்டா என்னும் கிராமத்தில் வசித்துவருபவர் லகாபதி. இவரது மனைவி பசந்த்.
விவசாயம் செய்து வரும் இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ள நிலையில், மகள் போடா ஸ்ரபந்தி அப்பகுதியில் உள்ள பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வியாழக்கிழமை விடுமுறை என்பதால் சிறுமி டோரா தனது நண்பர்களோடு மாலை வரை விளையாடி விட்டு பாடி வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு இரவு உறங்கியவருக்கு மறுநாள் காலை கடுமையான மூச்சித் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பாட்டி அவரிடம் வந்தபோது சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்று கூறியுள்ளனர். இது சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினரி கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விளையாடிக்கொண்டிருந்த சிறுமி அடுத்த நாள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டமை தொடர்பில் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (02.04) தெரிவித்தனர்.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள பிரபல பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் வங்கியில் வைப்புச் செய்வதற்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக விற்பனை நிலைய உரிமையாளரால் கடந்த புதன் கிழமை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
விசாரணைகளின் அடிப்படையில் குறித்த வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி கொழும்பு சென்றிருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் சூட்சுமமான முறையில் வவுனியாவிற்கு வரவழைத்து வவுனியா பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த பணத்தில் 9 இலட்சம் ரூபாய் இளைஞனின் வங்கியில் உள்ளதாகவும், மிகுதி 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து விட்டதாகவும் தெரிவித்ததாக பொலிசார் கூறினர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
சீனாவில் மக்கள் தொகையை அதிகரிக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில் கல்லூரி மாணவர்களிடையே காதலை ஊக்குவிக்க காதல் விடுமுறையை அறிவித்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வந்ததால் ஒரு கணவன் – மனைவி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று புதிய சட்டத்தை கொண்டு வந்தது.
இதனால் குழந்தை பிறப்பு வீதம் குறைந்த நிலையில் எதிர்காலத்தில் சீனாவில் இளைஞர்கள் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டது. அதனால் தற்போது குழந்தைகளை அதிகம் பெற்றுக் கொள்ளும்படி சீன அரசு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
ஒரு குழந்தைக்கும் அதிகமாக பெற்றுக் கொள்பவர்களுக்கு பல்வேறு சலுகைகள், விடுமுறைகள் என அள்ளி வழங்கி வருகிறது. அதேசமயம் இளைஞர்கள் காதலிக்கவும் தேவையான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, கல்லூரி மாணவர்கள் படிப்பு சுமையில் இருந்து விடுபட்டு சுதந்திரமாக காதலிக்க ‘காதல் விடுமுறை’ திட்டத்தை சீனாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி ஏப்ரல் 1 முதல் 7ம் திகதி வரை 7 நாட்களுக்கு 9 கல்லூரிகளில் காதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி காதல் விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் தங்கள் காதலியுடன் சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அந்த அனுபவங்களை டைரியில் எழுதியோ, வீடியோ வி லாக்காக எடுத்தோ கொண்டு வந்து சமர்பிக்க வேண்டுமாம். இந்த காதல் விடுமுறை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டில் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், அதிக உடற்பயிற்சி செய்பவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலையில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அதிக வெப்பமான காலநிலையின் எதிர்மறையான உடல் விளைவுகளைக் குறைக்க எடுக்கக்கூடிய முக்கிய நடவடிக்கை, அதிக தண்ணீர் குடிப்பதாகும், மேலும் உடல் உழைப்பு ஏற்பட்டால், ஒரு மணி நேரத்திற்கு 2 முதல் 4 கிளாஸ் தண்ணீர் குடிப்பது பொருத்தமானது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முடிந்தவரை வீட்டிற்குள் அல்லது மூடிய பகுதிகள் அல்லது நிழலான பகுதிகளில் இருக்கவும், குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகளைப் பயன்படுத்தவும், குளிக்கவும் அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும், வெளிர் நிற, வெளிர் பருத்தி ஆடைகளை அணியவும், சூரிய ஒளியில் இருந்து உடலைப் பாதுகாக்க தொப்பி அணியவும். குடை பயன்படுத்துவது போன்றவற்றை பின்பற்ற வேண்டும்.
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
பதுளை தர்மதூத கல்லூரிக்கும் ஊவா கல்லூரிக்கும் இடையிலான பாடசாலைகளுக்கிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன பேரணியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் பதுளை தர்மதூத வித்தியாலயத்தில் 13ஆம் தரத்தில் கல்வி கற்ற ஆர். எம். ரவிந்து மற்றும் ஹரேந்திர ருக்மால் ஆகிய இரு மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.
இந்த போட்டியின் போது பிரதான வீதியில் வாகன பேரணிக்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில்,குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்காக பதுளையில் நிர்மாணிக்கப்பட்ட இடத்தில் வாகன பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்போது விபத்திற்குள்ளான வாகனத்தை பாடசாலை மாணவர் ஒருவர் செலுத்தியதாகவும், விளையாட்டு பயிற்சிவிப்பாளர் வாகனத்தை செலுத்த வேண்டாமென மாணவரை பல முறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது.
இதனையும் மீறி மாணவர்கள் குழு வாகனத்தை செலுத்திய போது மைதானத்தில் காணப்பட்ட இரும்பு தூண் ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தினை இரு பாடசாலைகளுக்கிடையில் வருடாந்தம் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியை இடைநிறுத்துவதற்கு பாடசாலை நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்து, கனடாவுக்கு தப்பிச்செல்லும் வழியில், பிரித்தானிய இந்திய கடல் கடந்த ஆள்புலங்களில் ஒன்றான, டியாகோ கார்சியா என்னும் தீவில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்கள் இருவரின் அரசியல் தஞ்ச கோரிக்கைகள் நேற்றைய தினம் (02-04-2023) முதல் தடவையாக, நீண்ட கால போராட்டத்தின் பின், அந்த பிராந்திய நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இது கடந்த 18 மாத காலமாக தொடர்ந்த தமது சட்டரீதியான போராட்டத்துக்கு கிடைத்த முதல்படியான வெற்றியாகும் என இந்த இருவருக்காகவும் போராடிய மூத்த சட்ட ஆலோகர் கீத் குலசேகரம் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முக்கிய வெற்றியானது, அந்தத் தீவில் சிக்கியள்ள ஏனைய தமிழர்களுக்கும், பிரித்தானியாவில் புதிதாக அரசியல் தஞ்சம் கோரிய நிலையில், ருவண்டாவுக்கு அனுப்பபடலாம் என்ற அச்சத்தில் இருப்பவர்களுக்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள ஒரு தீவான டியாகோ கார்சியாவில் நிரந்தர குடிமக்கள் இல்லை. 1960கள் மற்றும் 1970களில் பூர்வீக சாகோசியன் மக்களை, இங்கிலாந்து பிரித்தானிய – அமெரிக்க படைகள் தமது கூட்டு இராணுவத் தளத்தை உருவாக்குவதற்காக வெளியேற்றினர்.
தற்போது இந்த தீவு பிரித்தானி்ய ஆளுகையின் கீழ் வந்தது. கடந்த 2021 ஒக்டோபரில் டியாகோ கார்சியாவுக்கு வந்த முதல் 89 தமிழ் அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களில் 22 வயதான ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, மற்றும் 22 வயதான அஜித் சஜித்குமார் ஆகிய இருவரும் அடங்குவர்.
இந்தியாவிலிருந்து புறப்பட்டு, கனடா செல்லும் வழியில் அவர்களின் படகு இந்த தீவுக்கு அருகில் பழுதடைந்ததை அடுத்து அவர்கள் பிரிந்தானிய மற்றும் அமெரிக்க கடற்படைகளால் மீட்கப்பட்டனர்.
அவர்களை இலங்கை மற்றும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முற்பட்ட வேளை, பிரித்தானியாவில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் தலையிட்டு, இடைநிறுத்தம் செய்யப்பட்டது.
இறுதியில் சட்ட முன்னெடுப்பின் விளைவாக, அவர்களது அரசியல் தஞ்ச கோரிக்கைகளை பரிசீலிக்க பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இயங்கும் பிரித்தானிய இந்திய கடல்கடந்த ஆள்புல நிர்வாகம் (BIOT) சம்மதித்தது. இதற்காக இந்த தீவுக்கான புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்க ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 2022 இல் இலங்கையில் இருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆக உயர்ந்தது. ஆனால் பலர் இலங்கைக்குத் திரும்புவதற்கு இங்கிலாந்து அரசாங்கம் வழங்கிய பணத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் நாடு திரும்புவதற்கு சம்மதித்தனர்.
வேறு சிலர் தாங்களாக முன்வந்து பிரான்ஸ் தீவான ரியூனியனில் தஞ்சம் கோருவதற்கு ஒப்புக்கொண்டனர். எஞ்சிய 68 புகலிடக் கோரிக்கையாளர்களில், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பலர் உள்ளடங்கியுள்ளனர்.
1980 களில் உயிர்பாதுகாப்பு தேடி கடல்மூலம் இந்தியா தப்பிச்சென்று, அகதிமுகாம்களில் வாழும் பெற்றோருக்கு பிறந்து, அகதிமுகாமிலேயே வளர்ந்த இளைஞர்களும் இதில் அடங்குவர். கடந்த 18 மாதங்களாக, இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தீவில் உள்ள முள்வேலியிடப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பலமாதங்கள் எந்த தொலைபேசி வசதியும் வழங்கப்படவில்லை. தற்போது மிக மட்டுப்படுத்தப்பட தொடர்பாடல் வசதிகளே உள்ளன. அங்கு பலர் உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது எனவும் முறைப்பாடு செய்து வருகின்றனர்.
இங்கு உள்ள நிலை காரணமக பலரின் உடல்நிலை மற்றும் மனநிலை கடுமையாக பாதிப்படைந்து வருகிறது. தீவில் உள்ள பல புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டோம் என்று உறுதியளிக்கக் கோரி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்
தற்போது 50 க்கும் மேற்பட்டோர்களது தஞ்சம் கோரும் கோரிக்கைகளை இங்கிலாந்தின் கீழ உள்ள BIOT அதிகாரிகளால் மதிப்பீடு செய்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிராகரிக்கப்பட்டனர். அவர்களின் நிராகரிப்பு கடிதங்களில் “நீங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு உத்தரவு வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பரில், BIOT ஆணையாளர் Paul Candler, புகலிடக் கோரிக்கையாளர்களிடம், எவரும் இங்கிலாந்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற வகையில் பிரித்தானிய சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.
இதனைத்தொடர்ந்து பல பிரித்தானிய அதிகாரிகள் தீவுக்கு சென்று அங்கு இருப்பவர்களை தமது கோரிக்கைகளை கைவிட்டு இலங்கை திரும்பும்படி பலவகையிலும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
குறிப்பாக, Christoper என்ற ஒரு பிரித்தானிய அதிகாரி அரசியல் தஞ்சம் கோரியவர்களை “குற்றவாளிகள்” (criminals) என்று ஏழனப்படுத்தியது மட்டுமன்றி, அவர்களை எந்த ஐரோப்பிய நாடும் ஏற்றுக்கொள்ளமாட்டாது என்றும் நீங்கள் இலங்கைக்கு நாடுகடந்தப்படுவீர்கள் என்றும் அச்சுறுத்தியுள்ளார்.
இந்த அச்சுறுத்தலின் விளைவாக, இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதை மற்றும் இந்திய அகதிமுகாம்களில் இடம்பெற்ற துஸ்பிரயோகம் என்பவற்றில் மிகவும் ஏற்கனவே பாதிப்பப்பட்டிருந்தவர்களின் மனநிலை மேலும் மோசமடைந்தது.
இதன் விளைவாக, ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் சஜித்குமார் உட்பட ஐவர் சவர அலகு, தூண்டில் ஊசி உட்பட்ட கூர்மையான உலோகப் பொருட்களை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர். இதனைத்தொடர்ந்து 5 பேரும் அவசர மருத்துவ மற்றும் மனநல சிகிச்சைக்காக ருவாண்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த செப்டெம்பரில் 2021 இருந்து இந்த அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களை சட்ட ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டனை தளமாகக் கொண்ட Jein Solicitors இன் மூத்த சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம், Leigh Day என்ற சட்ட நிறுவனத்தின் உதவியுடன், இவர்களை டியாகோ கார்சியாவிற்கு மீண்டும் கொண்டு செல்வதை தடுக்க பிரித்தானியாவில் உள்ள ஒரு உயர்நீதிமன்றில் இடைக்கால தடை உத்தரவைக் கோரியிருந்தார்.
இதே நேரம் பிரித்தானியாவில் உள்ள “சித்திரவதையில் இருந்து விடுதலை” (Freedom From Torture) உட்பட்ட அமைப்புக்கள் மற்றும் வைத்திய நிபுணர்கள் மூலம் மருத்துவ ரீதியான ஆதாரங்களை பெற்று சமர்ப்பித்திருந்தார். இந்த ஆதாரங்களின் அடிப்படையில் மிக விரிவான வாதங்களையும் முன்வைத்திருந்தார்.
இந்த வாதங்களில் அடிப்படையில் நேற்றய தினம், ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் சஜித்குமார் ஆகியோரின் அரசியல் தஞ்ச கோரிக்கைகளை தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும், அவர்கள் இலங்கைக்கு நாடுகடந்தப்பட மாட்டார்கள் எனவும் BIOT உத்திய்யோகபூர்வமாக எழுத்துமூலம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, அவர்கள் பாதுகாப்பான மூன்றாவது நாட்டுக்கு விரைவில் அனுப்பபடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. “டியாகோ கார்சியாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்கள் இலங்கையில் இடம்பெறும் இனப்படுகொலையால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். இவர்களில் பலர் இலங்கை அரசபடைகளால் சித்திரவதை மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள்.
இலங்கையில் இன்று வரை சித்திரவதை தொடர்வதால், இவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்”. என்று தெரிவித்தார். ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் சஜித்குமார் ஆகிய இருவரின் கோரிக்கைகள் பற்றி பேசும்போது “இருவருக்கும் வலுவான மருத்துவ ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்திருந்தோம்.
அவர்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்றும் தீவிரமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தற்கொலைக்கான அதிக ஆபத்தில் உள்ளனர் என்றும் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.
இருப்பினும், ஆரம்பத்தில் BIOT அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. உரிய சிகிச்சைகளும் வழங்கப்படவில்லை. அதன்விளைவாக இருவரின் மனநிலை மேலும் மோசமடைந்து அவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
அவர்கள் மிக மோசமான நிலையில் ருவண்டா கொண்டு செல்லப்பட்ட பின்னர், நாங்கள் மேலதிக மருத்துவ ஆதாரங்களை சமர்ப்பித்து, உயர்நீதிமன்றில் வழக்கையும் ஆரம்பித்தோம். இதன் பின்னரே BIOT அவர்களுடைய கோரிக்கையை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ருவாண்டாவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் கருத்துக்களும் இருவருடைய கோரிக்களை வெற்றிபெறுவதில் உதவியதாகவும் அவர் கூறியுள்ளார். “டியாகோ கார்சியாவில் தற்போது பரிசீலிக்கப்படும் ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பில் இந்த நிகழ்வு சாதகதான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
அத்துடன் டியாகோ கார்சியா மற்றும் ருவண்டாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான போதிய சிகிச்சை வசதிகள் இல்லை என்பதும் இந்த வழக்கில் நிரூபிக்கப்பட்டுள்ளதானது இன்னொரு முக்கிய விடயமாகும். இது பிரித்தானியாவில் இருந்து ருவண்டாவுக்கு அனுப்பப்படவுள்ள புதிய அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்களை காப்பாற்ற உதவும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா இராணுவ மருத்துவமனையில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஊடகங்களிற்கு பேசிய ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஜித் ஆகிய இருவரும் கீத் குலசேகரம் அவர்களின் கடின உழைப்பே இந்த வெற்றிக்கு காரணம் என்றும், ஏனைய பல சட்டத்தரணிகள் கைவிட்ட பின்னரும் தொடர்ந்து போராடி தமது உயிரை காப்பாற்றியதுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.
தற்போதைய BIOT இன் முடிவு தீர்மானம் தொடர்பாக குறிப்பிடும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், இன்னும் எவ்வளவு காலம் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்று கவலைப்படுகிறேன்” எனவும் ஹம்சிகா கூறியுள்ளார். கீத் குலசேகரம் பாதிக்கப்பட்டவர்களின் இந்த அரசியல் தஞ்சகோரிக்கை வழக்குகளை இலவசமாகவே செய்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 9 பேர் காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்றும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
இந்தப் போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த வாகனத் தொடரணியில் கப் ரக வாகனம் ஒன்று பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும் இடத்துக்கு அருகாமையில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மைதானத்தில் விபத்துக்குள்ளானது.
இதன்போது 11 பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஏனைய 9 பேரும் பதுளை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் இருவர் கவலைக்கிடமாக உள்ளனர் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பதுளையில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். பதுளை கிரிக்கெட் மைதானத்திற்கு அருகில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (01) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மேலும் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். பாடசாலை கிரிக்கெட் போட்டியின் (Big Match) போது, இடம்பெற்ற வாகன அணிவகுப்பில் ஏற்பட்ட விபத்திலே மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் மாரடைப்பினால் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக உயிரிழந்த யுவதியின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
மேலும் மாரடைப்பினால் யுவதி மரணமடைந்திருப்பின் வேலைக்கு சென்ற பாதையில் சடலமாக மீட்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் 200 கிலோ மீட்டர் தூரத்தில் எவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
யுவதியின் கைத்தொலைபேசி நீண்ட நேரமாக தேடப்பட்டு வந்த நிலையில் பின்னர் உயிரிழந்த இடத்திற்கு அருகில் காணப்பட்டதாகவும்,கொலைக்கு காரணமானவர்கள் தொலைப்பேசியை இவ்விடத்தில் பின்னர் வீசியிருக்கலாம் எனவும், உரிய அதிகாரிகள் மரணம் தொடர்பான விரிவான விசாரணையை மேற்கொள்ளுமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யுவதியின் கைத்தொலைபேசி காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இரத்தினபுரி நிரியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சச்சினி ஜினாதாரி என்ற பெண்ணின் சடலம் கடந்த 27ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
பல்கலைக்கழக படிப்பை முடித்த சச்சினி, இரத்தினபுரியின் ஹிடெல்லானா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை வேலைக்கு சென்ற யுவதி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதலில் அவரது சடலம் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெல்மதுல்ல புலத்வெல்கொட பிரதேச வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவரின் சடலம் 2மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த திருமதி துஷ்மந்தி அபேரத்ன (40) என்பவரின் சடலம் அவரது படுக்கையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காலையில் அவரது வீட்டுக்குச் சென்ற பணிப்பெண் பெண் சட்டத்தரணியின் சடலத்தைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் கடந்த 30 ஆம் திகதி இரவு முதல் வழக்கறிஞரின் கணவர் வீட்டில் இல்லை எனவும் அவர் பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் பணிப் பெண்ணிடமும் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளளதுடன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
72 வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நடிகை சமினா அகமது தற்போது ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார். பாகிஸ்தான் சினிமாவில் அதிகம் விரும்பப்பட்ட மற்றும் மிகவும் மதிக்கப்பட்ட நடிகைகளில் ஒருவராக சமினா அகமது திகழ்ந்து வந்தார்.
கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களாக தனது நடிப்பு திறமையால் மக்கள் இதயங்களை சமினா வென்றுள்ளார். இவர் பாகிஸ்தான் திரைப்பட தயாரிப்பாளரான ஃபரிதுதீன் அகமதுவை(Fariduddin Ahmed) திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்த நிலையில், கணவன் ஃபரிதுதீனுடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தார். நீண்ட வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்த சமினா( Samina Ahmed), தன்னுடைய 72 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 4ம் திகதி லாகூரில் ஒரு தனியார் நிக்காஹ் விழாவில் காதலர் Manzar Sehbai-வை சமினா திருமணம் செய்து கொண்டார்.
சமினாவின் இந்த திருமணத்தின் போது ரசிகர்கள் பலர் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர், இருப்பினும் 72 வயதில் திருமணம் செய்தது குறித்து ஒரு பிரிவினர் விமர்சனங்களை முன் வைத்த வண்ணம் உள்ளனர். மன்சார் செபாயுடனான திருமணத்திற்குப் பிறகு சமீனா ஜேர்மனிக்கு வசித்து வருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கீழப்பெருவிளை அய்யாகோவில் பகுதியில் வசித்து வருபவர் சண்முகவேல் . இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
இவருடைய மனைவி 51 வயது சாந்தி. இந்த தம்பதிக்கு 3 மகள்கள். இதில் மூத்த மகள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் எள்ளு விளை பகுதியில் வசித்து வரும் இளைஞருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
நேற்று மார்ச்27ம் தேதி திங்கட்கிழமை திருமணம் நடக்க இருந்தது. சண்முகவேல் வீட்டில்நேற்று திருமண விழாவிற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறவினர்கள் பலர் வந்து வீட்டில் தங்கி இருந்தனர்.
இதில் சண்முகவேலின் மனைவி சாந்தி உறவினர்களை கவனித்துக் கொண்டு அவர்களுக்கு உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். கிரைண்டரில் மாவு அரைக்கும் போது எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டு சாந்தி மீது மின்சாரம் பாய்ந்தது.
மயங்கி விழுந்த சாந்தியை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மகளுக்கு திருமணம் நடக்க இருந்த பந்தலில் தாயாரின் உடல் வைக்கப்பட்டதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.
திருமண வீடு சோகத்தில் மூழ்கி இருந்தது. இந்நிலையில் தாயாரின் ஆசைப்படி மகளின் திருமணத்தை திட்டமிட்டபடி நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். சாந்தியின் உடலை உடனடியாக பிரேத பரிசோதனை செய்து தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் மாலை 6 மணிக்கு பிறகு பிரேத பரிசோதனை செய்யப்படமாட்டாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். கலெக்டரின் பரிந்துரையின் பேரில் இரவே பிரேத பரிசோதனை முடிந்து சாந்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
மகளுக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தாயார் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இருந்தபோதிலும் திட்டமிட்ட படி நேற்று காலை நிச்சயித்தபடி அதே சத்திரத்தில் திருமணம் நடத்தப்பட்டது.
தாயார் இல்லாததால் அவர் கண்கலங்கி கதறி அழுதபடி இருந்தார். அவரை உறவினர்கள் சமாதானப்படுத்தினார்கள். இந்த காட்சி காண்பவர்களை கரைய வைத்தது. மண்டபத்தில் எளிய முறையில் அதே மாப்பிள்ளையுடன், மணமகளுக்கு திருமணம் நடைபெற்றது. உறவினர்களுடன் கண்ணீருடன் மணமக்களை வாழ்த்தினர்.
மீடூ அனுபவங்கள் பலரும் சொல்லி அதிரவைத்து வருகின்றனர். அண்மையில் நடிகையும், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு, ஐந்து வயதில் பெற்ற தந்தையால் பாலியல் தொல்லைகளை அனுபவித்தேன்.
அப்போது எனக்கு எதிர்க்கும் தைரியம் வரவில்லை. 15 வயதில்தான் எனக்கு எதிர்க்கும் தைரியம் வந்தது சொல்லி பல விவாதங்களை தொடங்கி வைத்திருந்தார். இந்த நிலையில், கேரளாவில் ஆட்சியர் திவ்யா தனது மீடூ துயரத்தை பகிர்ந்திருக்கிறார்.
கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஆட்சியராக இருப்பவர் திவ்யா சேச ஐயர். அடிப்படையில் மருத்துவரான திவ்யா, குழந்தை நலன் சார்ந்த பல நடவடிக்கைகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படி ஒரு நிகழ்வில் பங்கேற்று பேசிய திவ்யா, தனது குழந்தை பருவத்தில் மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்து பேசினார். ’’அப்போது எனக்கு ஆறு வயசு. ஒரு நாள் வீட்டில் பெரியவர்கள் இல்லாத நேரம் பார்த்து இரண்டு ஆண்கள் வந்தார்கள்.
அவர்களின் முகம், அடையாளம் எதுவும் என் நினைவில் இப்போது இல்லை . ஆனால் அவர்கள் நடந்து கொண்ட விதம் என் ஆயுள் வரைக்கும் மறக்க முடியாத அளவிற்கு வடுவாக இருக்கிறது.
என்னிடம் பரிவாகப் பேசுவது போல பேசி, தொட்டு தொட்டு விளையாடுவது போல பேசிக்கொண்டே இருந்தவர்கள் அத்து மீற ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் என் ஆடையை கழற்ற முயற்சித்தார்கள். நான் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன்.
பெற்றோரிடம் சொல்லி அழுததும் அவர்கள் என்னை அரவணைத்து என் அச்சத்தை போக்கினார்கள். இந்த சம்பவம் என்னை ரொம்பவே பாதித்துவிட்டது. அதனால் தான் சொல்கிறேன் …ஆணோ- பெண்ணோ குழந்தைகள் வளர்ப்பில் ரொம்பவே கவனம் தேவை. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் உள்ளிட்டவத்தை பயிற்றுவிக்க வேண்டும். அறியா வயதில் சந்திக்கும் பாலியல் சீண்டல்கள் தான் குழந்தைகளின் மகிழ்ச்சியை பாதிக்கும் . அதனால் குழந்தை வளர்ப்பில் எச்சரிக்கை தேவை’’ என்று பேசினார்.
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மூதாட்டியை கொலை செய்து பாத்திரத்தில் அடைத்து வைத்த பேத்தியை கைது செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் செல்வமணி(வயது 55). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார். மகள்கள் திருமணாகி சென்று விட்டனர்.
இந்நிலையில், செல்வமணி தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தார். கடந்த 24ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு சென்று வருவதாக அக்கம் பக்கத்தினரிடம் செல்வமணி கூறியுள்ளார். அதன் பிறகு நேற்று வரை செல்வமணி வீடு பூட்டி கிடந்துள்ளது.
இது குறித்து அக்கம் பக்கத்தினர், செல்வமணி மகள் ராஜலட்சுமிக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து ராஜலட்சுமி மாலை வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும், வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது.
பின்னர், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது செல்வமணி பித்தளை குவளையில் தலை கீழாக அமுக்கி வைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது குறித்து பாபநாசம் காவல் துறையினர் தகவலறிந்து செல்வமணியின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து குடும்பத்தினரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்திய போது, செல்வமணியின் பேத்தியான ஜெயலட்சுமி (28) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அவரிடமிருந்து பல்வேறு தடயங்கள் சிக்கின. இதை தொடர்ந்து காவல் துறையினர் ஜெயலட்சுமியை கைது செய்தனர்.
காவல் துறையினரின் விசாரணையில், செல்வமணி மகள் கீதா வெளிநாட்டில் உள்ளார். கீதா தனது தாய்க்கு மாதந்தோறும் பணம் அனுப்பி வந்துள்ளார். இதனையறிந்த, கீதாவின் மகளான ஜெயலட்சுமி, தனது பாட்டி செல்வமணியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.
இதில், இருவருக்கும் கடந்த 23ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி தனது பாட்டி செல்வமணியை கீழே தள்ளியுள்ளார். இதில் செல்வமணியின் தலையில் ரத்தம் வந்துள்ளது.
மேலும், ஜெயலட்சுமி செல்வமணியை அவரது சேலையால் கழுத்தை தெறித்து கொலை செய்து, பித்தளை குவளைக்குள் அமிக்கி வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஜெயலட்சுமியை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சாலிய தெருவை சேர்ந்த சரவணன்(30), என்ற இளைஞருக்கு நாகையை சேர்ந்த நந்தினி என்ற தாட்சாயிணியை(25) பெண் பார்த்து, கடந்த பிப்ரவரி 3ஆம் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்த இளம் தம்பதியர் ஒரு மாதம் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி நந்தினி திடீரென காணாமல் போனார். அதன் பின்னர் தான் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது நந்தினி தனது கணவரை சரவணனை தாக்கி கட்டிப் போட்டு கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளார் என்பது. பின்னர் அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுமாப்பிள்ளை சரவணன் குத்தாலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது தான் புதுபெண் நந்தினி, தனது காதலரான நாகையை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவருடன் சேர்ந்து கொண்டு கணவரை தாக்கி விட்டு அவருடன் ஓடியது தெரிய வந்தது.
பின்னர் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக இருந்த நந்தினி, அவரது காதலர் ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்திய போது மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
அதாவது, திருமணத்திற்கு முன்பே நந்தினியும், ராஜசேகரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் நந்தினி, சரவணனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் நந்தினி, தனது காதலர் ராஜசேகருடன் பேசி வந்துள்ளார். இதை அறிந்த சரவணன் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நந்தினி, தனது காதலர் ராஜசேகரை வீட்டுக்கு வரவழைத்து, பின்னரும் இருவரும் சேர்ந்து கொண்டு சரவணனை தாக்கியுள்ளனர்.
மேலும் அவரை கட்டிப் போட்டு தாக்கி கழுத்தை அறுத்து விட்டு தப்பி சென்றுள்ளனர், என்பது விசாரணையில் அம்பலமானது. நல்வாய்ப்பாக கழுத்தில் ஆழமாக வெட்டு படவில்லை என்பதால் சரவணன் காயத்துடன் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. கூலித் தொழிலாளியான இவருக்கு 65 வயதாகிறது. இவருக்கு கவுண்டமணி (வயது 30) மற்றும் செந்தில் (வயது 28) என இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். சமீபத்தில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுப்பிரமணி வீட்டிலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரும் தங்களது தந்தையை தேடிவந்திருக்கின்றனர். புதுச்சேரியில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு சுப்பிரமணி சென்றிருக்கலாம் என நினைத்த அவருடைய மனைவி மற்றும் மகள் அங்கே சென்றிருக்கின்றனர்.
இதற்கிடையே ள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள காட்டுப் பகுதியில் வயதானவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அடையாளம் தெரியாததால் யாருடைய சடலம் அது என்பதில் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த கவுண்டமணி மற்றும் செந்தில் தியாகதுருகம் பகுதிக்கு சென்றிருக்கின்றனர். உயிரிழந்தவரின் சடலம் தங்களுடைய தந்தையுடையது என எண்ணிய இருவரும் அதனை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு திரும்பியிருக்கின்றனர்.
இறுதிச் சடங்குகளுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் இவர்களுடைய உறவினர் ஒருவர் மாலை வாங்க சென்றிருக்கிறார். அப்போது கடைதெருவில் சுப்பிரமணி நடந்து வந்துகொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
பின்னர் அவரிடத்தில் விபரத்தை கூறவே உடனடியாக சுப்பிரமணி வீட்டுக்கு சென்றிருக்கிறார். இறந்துபோனதாக நினைத்து இறுதி சடங்கை செய்துகொண்டிருந்த மகன்கள் இருவரும் தங்களது தந்தையை கண்டு உறைந்து போயினர்.
இதனிடையே இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக அங்கே சென்றிருக்கின்றனர். அவர்களிடம் இருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.