மனைவியைக் கைவிட்ட போலீஸ்காரர்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்… தாலிகட்டும் நேரத்துல அதிரவைத்த மனைவி!!

கடலூரில்..

ஆசையாசையாய் காதலித்தவனையோ, காதலித்தவளையோ திருமணம் செய்து கொள்கிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அப்படி காதலித்தவனையே கரம் பிடிக்கிற மகிழ்ச்சியில் இருந்த சபிதாவுக்கு அந்த வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக செல்லவில்லை.

தன்னை மறந்து விட்டு, வேறொருவளைக் கல்யானம் செய்து கொள்ள முயன்ற கணவனின் தகிடுத்தனங்களை தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்தி போராடியிருக்கிறாள்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவர் ராம்குமார் (30). திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணியாற்றி வருகிற ராம்குமார், கடந்த 2019ம் ஆண்டு சபிதாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் இவர்களது காதல் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் கல்யாண வாழ்க்கையில் இல்லாமல் போனது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், சபிதாவுக்கு தெரியாமல் சபிதாவின் சம்மதமும் பெறாமல், மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ராம்குமார் மோசடியாக, சபிதாவிடமிருந்து விவகாரத்து பெற்றதாகக் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து திருவெண்காடு கோவிலில் ராம்குமார், தன்னுடன் பணியாற்றும் சக பெண் காவலரை, உறவினர்களின் முன்னிலையில் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்த சபிதா, தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று திருமணத்தைத் தடுத்து நிறுத்தினார். திடீரென மனைவி திருமணத்திற்கு வந்து உறவினர்களுடன் சேர்ந்து போராட்டம் செய்வதையறிந்து, பெண் காவலருடன் அங்கிருந்து ஓடிய ராம்குமார், திருவெண்காடு காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

சம்பந்தப்பட்ட இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளிக்கச் சொல்லி திருவெண்காடு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, சபிதாவின் குடும்பத்தினர் மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷாவிடம் தனது கணவர் மோசடியாக விவாகரத்து பெற்று வேறொரு திருமணம் செய்ய முயன்றது குறித்து புகாரளித்தார்.

அவரிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட எஸ்.பி என்.எஸ்.நிஷா, சீர்காழி டிஎஸ்பி அலுவலகத்துக்கு புகாரை அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட தனது காதல் கணவர் வெறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த நிலையில், தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை தடுத்து நிறுத்தியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாதிக்கப்பட்ட சபிதா செய்தியாளர்களிடம் கூறுகையில், “சபிதா ஆகிய தானும் எனது கணவரான ராம்குமாரும் ஆறு வருடங்களாக காதலித்து 2016-ல் ஜூன் 19-ம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கணவருடன் அவரது வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, யாருக்கும் தெரியாமல் கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு அவரே விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், சரியாக வீட்டிற்கு வரமால் உள்ளார் என்று தான் நெய்வேலி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்ததாகவும், அப்போது தான், அவர் தன்னை அவரது மனைவியே இல்லையென மாயவரத்திலுள்ள கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒருதலைபட்சமாக விவாகரத்துக்கு விண்ணப்பித்து விவாகரத்து பெற்றுள்ளார் எனத் தெரியவந்தது.

இதனிடையே, தனது கணவருக்கும் சீர்காழி காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் ரம்யாவிற்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அப்பெண் காவலர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும், மேலும் இவை குறித்து அவரது பெற்றோரிடமும் மூன்று முறை கண்டித்துள்ளதாகவும் கூறினார்.

பின்னர், அப்பெண் காவலரின் சகோதரர்களும் நீயும் எனது சகோதரி போலதான்; உனது வாழ்க்கையை எவ்வித பிரச்சனையும் எனது சகோதரியால் வராது என்று கூறியிருந்ததாக தெரிவித்தார்.

பின்னர் மீண்டும், எனது கணவர் சரியாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில், அவர் மீது புகார் அளிக்க சென்றபோது தான், ஒருதலைபட்சமாக விவாகரத்து வாங்கியது தனக்கு தெரிந்தது என வருந்தினார்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருக்கும் நிலையில் தான், எனது கணவரும் அந்த பெண் காவலரும் திருவெண்காடு சுவதாரண்யேசுவரர் கோயிலில் திருமணம் செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தேன் என்றார். எனவே, காவல்துறையினரும் நீதிமன்றமும் விசாரணை மேற்கொண்டு தனக்கு நியாயம் வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியாவில் 10 வயது மாணவி 4 வருடங்களாக துஸ்பிரயோகம் : சகோதரன் மற்றும் சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது!!

10 வயது மாணவி..

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியினை சேர்ந்த 10 வயது பாடசாலை மாணவி ஒருவரை கடந்த 4 வருடங்களாக பா.லி.ய.ல் து.ஸ்.பி.ரயோகத்திற்கு உள்ளாக்கியதாக சிறுமியின் சகோதரன் மற்றும் சிறிய தந்தையார் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (31.03) தெரிவித்தனர்.

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் 10 வயது மாணவி வவுனியா நகர்ப்புற பாடசாலை ஒன்றில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்று வருகின்றார். குறித்த மாணவி கடந்த புதன்கிழமை தனது வகுப்பு சக மாணவிக்கு தனக்கு வீட்டில் நடக்கும் கொடுமைகளையும், பா.லி.ய.ல் து.ஸ்.பி.ரயோகங்களையும் கூறி அழுதுள்ளார்.

இதனையடுத்து அந்த மாணவி குறித்த விடயத்தை தமது வகுப்பாசிரியரிடம் தெரியப்படுத்தியுள்ளார். ஆசிரியர் சம்மந்தப்பட்ட மாணவியிடம் சம்பவத்தின் உண்மை தன்மையை விசாரித்து அறிந்து கொண்டு உடனடியாக, வவுனியா மாவட்ட செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அவர்கள் வவுனியா பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

குறித்த 10 வயது மாணவி மூவரால் கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பா.லி.ய.ல் ரீ.தி.யி.ல் து.ன்.பு.று.த்.த.ப்பட்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து துரிதமாக செயல்பட்ட வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் சம்பவத்துடன் தொடர்பான மூவரை கைது செய்துள்ளனர்.

10 வயது மாணவி வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் தாயின் இரண்டாவது கணவரான இறம்பைக்குளம் அலைகரை பகுதியைச் சேர்ந்த 32 வயது நபர்,

மாணவியின் உடன் பிறந்த சகோதரனான சமனங்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞர், உறவினரான வைரவபுளியங்குளம் பகுதியை சேர்ந்த 53 வயது நபர் ஆகிய மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின் மூவரையும் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும், சி.றுமியை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

தந்தை இறந்ததைத் தாங்க முடியாமல் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவில் சரவணன் என்பவர் தனது மனைவி, மகள் கீர்த்தியுடன் வசித்து வந்துள்ளார். கீர்த்தி தனது தந்தை மீது அளவுகடந்த பாசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தில் புயலை வீசியது. சரவணன் மறைவுக்கு பிறகு மனைவி, மகள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

தந்தையின் நினைவில் வாடி வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார். தந்தை மறைவுக்கு பிறகு கீர்த்தி யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கீர்த்தியின் தாய் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில், மகள் கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தந்தையின் மரணத்தால் வேதனையின் இருந்த மகள், மின்விசிறியில் தூக்கிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கீர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை மறைவால் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பல்கலைக் கழக பட்டதாரி மாணவி.. விசாரணையில் வெளியான தகவல்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி பகுதியில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இளம் யுவதியின் மரணம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இரத்தினபுரி, நிரியெல்ல பகுதியைச் சேர்ந்த சச்சினி ஜினாதாரி என்ற 25 வயதுடைய ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இளம் யுவதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் உடல் உறுப்புகள் மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க ரசாயனையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பிரேத பரிசோதனையில் அவரது மரணம் கழுத்து நெரிக்கப்பட்டமையினால் ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது. மேலும், அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

சடலம் தொடர்பில் வெளிப்படையான தீர்மானம் எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் யுவதியின் கைத்தொலைபேசி காணவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

இரத்தினபுரி நிரியெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சச்சினி ஜினாதாரி என்ற பெண்ணின் சடலம் கடந்த 27ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாயில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

பல்கலைக்கழக படிப்பை முடித்த சசினி, இரத்தினபுரியின் ஹிடெல்லானா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் காலை வேலைக்கு சென்ற யுவதி குறித்த தகவல் கிடைக்காததால், குடும்பத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்ததையடுத்து நடத்திய தேடுதலில் அவரது சடலம் கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளம் வர்த்தகர்.. விசாரணையில் வெளிவந்த கொலைக்கான காரணம்!!

மிதிகம பிரதேசத்தில்..

மிதிகம பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஹோட்டல் உரிமையாளரான ‘பாபா’ எனப்படும் பசிந்து சந்தருவன் தொடர்பில் விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிதிகம, குரு பபில பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவருடன் ஹரக்கட்டா தரப்பினருக்கும் மிதிகம பிரதேசத்தில் இரவு விருந்துகளை நடாத்தியவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகன் ஆர் காரில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டு தப்பி ஓடிய காட்சியும் அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு சுமார் 5 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மிதிகம பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாபா எனப்படும் பசிந்து சந்தருவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் வாகனத்தை T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரைக் கொலை செய்த கார் மற்றும் துப்பாக்கியுடன் இணைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மகசீன் மற்றும் 23 தோட்டாக்களுடன் நேற்றிரவு பனுகல்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் கொல்லப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களான சன் ஷைன் சுத்தா மற்றும் மாகந்துரே மதுஷ் ஆகியோரின் நெருங்கிய உறவினர் எனவும் விசாரணையில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சன் ஷைன் சுதாவின் மரணத்திற்குப் பிறகு, இந்த இளைஞன் தனது ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்வதுடன், அந்தப் பகுதியில் பணக்காரர் போல் வேடமிட்டு வந்துள்ளதாகவும் பொலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், உயிரிழந்த இளைஞன் அப்பகுதியில் இரவு விருந்துகளை நடத்தும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு போதைப்பொருள் மற்றும் மதுபானங்களை விற்பனை செய்து வந்துள்ளமையையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்படி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், இதனையடுத்து உயிரிழந்த பாபா என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சந்தேக நபரின் பெயரில் தனியார் வங்கியொன்றில் இருந்த 100 இலட்சம் ரூபா கணக்கு மற்றும் சுற்றுலா ஹோட்டல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும் உயிரிழந்த இளைஞன் அப்பகுதியில் உள்ள பாதுகாப்புப் படையினருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும், சில நாட்களுக்கு முன்பு அங்கு சுமார் 15 அதிகாரிகளுக்கு விருந்து வைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் உயிரிழந்த நபருக்கு குறித்த குழுவினர் பாதுகாப்பு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பில் மாத்தறை குற்றப்பிரிவு உட்பட பல பொலிஸ் குழுக்கள் மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவில் குப்பிவிளக்கில் வாழ்ந்த குடும்பம்.. 6 மாத குழந்தையினை பலிகொடுத்த சோகம்!!

முல்லைத்தீவில்..

குப்பிவிளக்கு வீழுந்து தீப்பற்றியதில் காயமடைந்த 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில்,

அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வசித்து வரும் இளம் தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சின்னையா சுறோமி என்ற இந்த இளம் தம்பதிகள் எந்தவித அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்காலிக வீட்டில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 22.02.2023 அன்று வீட்டில் குப்பி விளக்கு தவறி விழுந்ததில் குழந்தையின் உடலில் தீப்பற்றி தர்மபுரம் ஆதார மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி கொண்டு சென்று பின்னர்,

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறுமி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. இந்த குழந்தையின் உடல் இன்று (31.03.2023) முல்லைத்தீவு இளங்கோபுரம் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற இரு இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கிய நாடு!!

இலங்கையில்..

இலங்கையில் இருந்து பிரித்தானியாவிற்கு சென்று அடைக்கலம் கோரிய இரு இலங்கையர்கள் சன் டியாகோவிற்கு அனுப்பட்ட நிலையில் டிக்கோ கார்சியா தீவில் தற்கொலைக்கு முயற்சி செய்த காரணத்தால் இந்த மாத ஆரம்பத்தில் ருவாண்டாவில் இருந்து பிரித்தானியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டு இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம் வழங்குவதற்கு பிரித்தானிய அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்களுடைய ஆவணங்களின்படி அவர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல மாட்டோம் எனவும் அவ்வாறு சென்றால் இலங்கையில் கொலை செய்யப்படுவோம் எனவும் அச்சம் இருப்பதாக கூறி இலங்கைக்கு செல்வதற்கு மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக இப்போது மூன்றாவது நாடு ஒன்றில் அடைக்கலம்/அகதிகளாக உரிமை வழங்குவதற்கு பிரித்தானியா தீர்மானித்துள்ளது. இந்த மூன்றாவது நாடு எது என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. 2021 ஓக்டோபரில் வுக்கு வந்த முதல் 89 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களில் ஹம்ஷிகா கிருஷ்ணமூர்த்தி, வயது 22, மற்றும் அஜித் சஜித்குமார், வயது 22 ஆகிய இரு அடைக்கலம் கோரும் நபர்களும் அடங்குவர்.

அவர்களின் படகு தீவுக்கு அருகில் உடைந்து, அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் மீட்கப்பட்டனர். 2022 இல் இலங்கையில் இருந்து சென்ற புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 200 ஆக உயர்ந்தது. ஆனால் பலர் இலங்கைக்குத் திரும்புவதற்கு பிரித்தானியா அரசாங்கம் வழங்கிய பணத்தை ஏற்றுக் கொண்டு மீண்டும் நாடு திரும்புவதற்கு சம்மதித்தனர்.

வேறு சிலர் தாங்களாக முன்வந்து பிரான்ஸ் தீவான ரியூனியனில் தஞ்சம் கோருவதற்கு ஒப்புக்கொண்டனர். எஞ்சிய 68 புகலிடக் கோரிக்கையாளர்களில், 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரின் போது சுதந்திரத்திற்காகப் போராடிய பிரிவினைவாதக் குழுவுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இலங்கை பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறும் பலர் உள்ளடங்கியுள்ளனர்.

சிங்களவர்கள் ஆதிக்கம் செலுத்தும் இலங்கை அரசாங்கத்தில் தமக்கு பாதுகாப்பு இல்லை என அவர்கள் கருதுகிறார்கள். இப்போது 50 க்கும் மேற்பட்டோர்களது தஞ்சம் கோரும் கோரிக்கைகளை பிரித்தானிய அதிகாரிகளால் மதிப்பீடு செய்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

அவர்களின் நிராகரிப்பு கடிதங்களில் “நீங்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு உத்தரவு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ” ருவாண்டா தலைநகர் கிகாலியில் உள்ள ருவாண்டா ராணுவ மருத்துவமனையில் இருந்து வாட்ஸ்அப் மூலம் ஊடகம் ஒன்றிற்கு கிருஷ்ணமூர்த்தி தற்போதைய பிரித்தானிய அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடும்போது, “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில், இன்னும் எவ்வளவு காலம் இந்த மகிழ்ச்சி நீடிக்கும் என்று கவலைப்படுகிறேன்” எனக் கூறியுள்ளார்.

இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் லண்டனை தளமாகக் கொண்ட Jein Solicitors இன் மூத்த சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம், குறித்த இருவரையும் டியாகோ கார்சியாவிற்கு மீண்டும் கொண்டு வருவதைத் தடுக்க பிரித்தானியாவில் உள்ள ஒரு நீதிபதியிடம் தடை உத்தரவைக் கோருவதாகக் கூறியுள்ளார்.

ருவாண்டாவில் உள்ள மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் இருவரும் புகலிடம் கிடைப்பதில் முக்கிய பங்கு வகித்ததாக அவர் கூறியுள்ளார். “இருவருக்கும் வலுவான மருத்துவ ஆதாரங்களை நாங்கள் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளோம், அவர்கள் தீவிரமான மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் தற்கொலைக்கான எண்ணத்துடன் இருப்பதால் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்” என அவர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

“டியாகோ கார்சியாவில் தற்போது பரிசீலிக்கப்படும் ஏனைய விண்ணப்பங்கள் தொடர்பில் இந்த நிகழ்வு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார். படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பதைத் தடுப்பதற்காக, புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட “சட்டவிரோத குடியேற்ற மசோதா” பிரித்தானிய அரசாங்கத்தினால் இம்மாதம் நிறைவேற்றப்பட்டது.

இது உரிமைக் குழுக்கள் மற்றும் ஐ.நா மூலம் விமர்சனத்துக்கு உள்ளானது. கடந்த ஆண்டு 20 ஆண்டுகளில் அதிகபட்சமாக 45,000 புகலிட விண்ணப்பங்களை பிரித்தானியா பதிவு செய்திருந்தாலும், புதிய சட்டத்தினை விமர்சித்த குழுக்கள் இந்த எண்ணிக்கை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவிற்கு சொந்தமான இந்தியப் பெருங்கடல் பகுதியின் பகுதியான டியாகோ கார்சியாவில் நிரந்தர குடிமக்கள் இல்லை, 1960கள் மற்றும் 1970களில் பூர்வீக சாகோசியன் மக்களை, இங்கிலாந்து பிரித்தானிய-அமெரிக்க கூட்டு இராணுவத் தளத்தை உருவாக்குவதற்காக வெளியேற்றியது.

கடந்த 18 மாதங்களாக, புகலிடக் கோரிக்கையாளர்கள் தீவில் உள்ள வேலியிடப்பட்ட முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர், அங்கு பலர் உணவு மற்றும் மருத்துவ சேவைகள் போதுமானதாக இல்லை என்றும், தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுவதும் வழக்கமாக உள்ளது எனவும் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

தீவில் உள்ள டஜன் கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டோம் என்று உறுதியளிக்கக் கோரி பல உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கடந்த செப்டம்பரில், BIOT ஆணையாளர் Paul Candler, புகலிடக் கோரிக்கையாளர்களிடம், எவரும் பிரித்தானியாவில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், பாதுகாப்பற்றவர்கள் என்று கருதப்படுபவர்களை “பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு” அழைத்துச் செல்ல அனுமதிக்கும் வகையில் பிரதேசத்தின் சட்டம் மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.

கிருஷ்ணமூர்த்தியும், சஜித்குமாரும் மார்ச் 1ஆம் திகதி, இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய அரசு அதிகாரி, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறியதை அடுத்து, கூர்மையான உலோகப் பொருட்களை விழுங்கி தற்கொலைக்கு முயன்றனர்.

மேலும் மூன்று புகலிடக் கோரிக்கையாளர்கள் மார்ச் 13 அன்று இதே வழியில் தற்கொலைக்கு முயன்றனர். ஐந்து பேரும் மருத்துவ மற்றும் மனநல சிகிச்சைக்காக ருவாண்டாவில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

ஊற வைத்த அரிசியை சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சோகம்!!

ராணிப்பேட்டையில்..

சமையலுக்கு ஊற வைத்த அரிசியை சாப்பிட்ட 2ம் வகுப்பு குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த பின்னாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி(50). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் 8ம் வகுப்பும், இளைய மகள் நிகிதா லட்சுமி (8) 2ம் வகுப்பும் அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நிகிதா, நேற்று மாலை சமையலுக்கு ஊற வைத்திருந்த அரிசியை அதிகமாக எடுத்து சாப்பிட்டுள்ளார். உடனே அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதுடன், வாந்தியும் ஏற்பட்டதால் அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு சரியான வசதிகள் இல்லாததால் பெரிய அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதால், மகளை நேற்று இரவு குறித்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அப்பொழுது மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்த போது குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். குறித்த குழந்தையின் தாய் பரமேஸ்வரி கூறுகையில்,

ஒரே ஒரு நாள் மட்டும் காய்ச்சல், வாந்தி இருந்ததாகவும், அரசியை சாப்பிட்ட அவர் அடுத்து பிஸ்கட் சாப்பிட்டு தண்ணீர் குடித்ததாகவும், தற்போது எனது மகள் என்னை விட்டு சென்றுவிட்டார் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொன்ற மகன்.. நெஞ்சு பதைபதைக்கும் கோர சம்பவம்!!

பெரம்பலூரில்..

பெரம்பலூர் | பாரதிதாசன் நகர் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ராமகிருஷ்ணன் – மலர் கொடி தம்பதியினர் ராமகிருஷ்ணன் ஆறு வருடங்களாக தியேட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு 24 வயதில் வெங்கடேசன் என்ற மகன் உள்ளார் . ராமகிருஷ்ணனுக்கு இரு மாதங்களுக்கு முன்பு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் ஆனதாக கூறப்படுகிறது.

மேலும் திருமணம் ஆனதிலிருந்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதேபோல் நேற்று காலை 11 மணியளவில் மலர்கொடியும் வெங்கடேசனும் ராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் ஒரு கட்டத்தில் வெங்கடேசன் வீட்டின் ஓட்டை உடைத்து சண்டையில் ஈடுபட்டதுடன் ராமகிருஷ்ணனை இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் இருவரும் அங்கிருந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. காயமடைந்த ராமகிருஷ்ணன் வீட்டின் பின்புறம் தள்ளாடி கீழே விழுந்து கிடந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டின் அருகில் வசிக்கும் ராமகிருஷ்ணனின் தாயார் நீலம்மாள் வந்து பார்த்தபோது ராமகிருஷ்ணன் நீண்ட நேரம் ஆகியும் எழுந்தி இருக்காமல் இருந்ததை பார்த்து சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் கூச்சல் இட்டு அழைத்துள்ளார்.

அவர்கள் வந்து பார்த்தபோது மூக்கில் ரத்தம் வந்த நிலையிலும் தலையில் பின்புறம் அடிபட்ட நிலையிலும் காலில் ரத்த காயங்களுடன் ராமகிருஷ்ணன் இறந்த கடந்துள்ளார் .

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ராமகிருஷ்ணனின் மகனும் மனைவியும் சேர்ந்து அடித்துக் கொன்று விட்டு தப்பித்து சென்றது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளாதேவி கொலை சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் இறந்த ராமகிருஷ்ணனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு ராமகிருஷ்ணனை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள மலர்க்கொடி மற்றும் அவரது மகன் வெங்கடேசன் தேடி வருகின்றனர் .

பெரம்பலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக மாவட்ட கண்காணிப்பாளர் பல முயற்சிகள் எடுத்து வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் காவல்துறை மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் வேதனை அளிக்கிறது.

அகதி ஒருவரின் வெறிச்செயல்… இரு பெண்களுக்கு ஏற்பட்ட துயரம்.. வெளியான புகைப்படம்!!

லிஸ்பனில்..

லிஸ்பனில் உள்ள இஸ்லாமிய மத மையத்தில் அத்துமீறி நுழைந்த அகதி ஒருவரால் கொடூரமாக கத்தியால் தாக்கி கொல்லப்பட்ட இரண்டு பெண்களின் புகைப்படம் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

போர்த்துகல் குடிமக்களான 24 வயது Mariana Jadaugy மற்றும் 49 வயது Farana Sadrudin ஆகிய இருவருமே ஆப்கான் அகதி ஒருவரால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

உள்ளூரில் அப்துல் பஷீர் என அறியப்படும் அந்த ஆப்கான் அகதி, நீளமான கத்தி ஒன்றுடன் அந்த இஸ்லாமிய அமையத்தில் நுழைந்து இரு பெண்களையும் மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளான்.

மட்டுமின்றி, தமது ஆங்கில மொழி ஆசிரியரையும் அப்துல் பஷீர் கொடூரமாக தாக்கியுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓராண்டுக்கு முன்னர் மனைவியை இழந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான அப்துல் பஷீர், பொலிசாரால் காலில் சுடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

கத்தியை கைவிட பொலிசார் அறிவுறுத்தியும், கண்டுகொள்ளாத நிலையிலேயே பொலிசார் அப்துல் பஷீரின் காலில் சுட்டுள்ளனர். தற்போது அவர் பொலிசாரின் பாதுகாப்பில், சிகிச்சையில் உள்ளார் என்றே கூறப்படுகிறது.

இதனிடையே, மரியானா மற்றும் ஃபரானா ஆகியோரின் மறைவுக்கு, அவர்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இருவருமே தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாமிய மையத்தில் பணியாற்றுபவர்கள் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில் போர்த்துக்களில் உள்ள ஆப்கான் சமூகத்தினர் தெரிவிக்கையில், அப்துல் பஷீர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் எனவும், தமது பிள்ளைகள் மூவரின் பசியை போக்க அவர் கடுமையாக போராடி வந்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

ஒரே மாணவனுக்காக கட்டிப் புரண்டு சண்டையிட்ட 30 மாணவிகள்.. தீட்டித் தீர்த்த பொதுமக்கள்!!

திருப்பூரில்..

ஒரே பள்ளியில் படிக்கும் மாணவனை காதலித்து வந்த மாணவி, வேறொரு மாணவி அவனுக்கு செல்போனில் மெசேஜ் அனுப்பி, பேசி வந்ததால், பொது இடத்தில் பேச்சு வார்த்தை நடத்தி, தோழிகளுடன் கட்டிப் புரண்டு சண்டையிட்டது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென மாணவிகள் குடுமிபிடி சண்டையில் ஈடுபட்டது குறித்து என்னமோ ஏதோ என திரண்ட பொதுமக்கள், விஷயம் கேள்விப்பட்டு காரித்துப்பி, திட்டி மாணவிகளை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி சாலை அருகே புது ராமகிருஷ்ண புரத்தில் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப் பகுதியில், அந்த பள்ளி மாணவிகள் 30க்கும் மேற்பட்ட ஒன்றாக திடீரென திரண்டனர். காட்டுப் பகுதியில் ஒன்றாக திரண்டதுடன், ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்ட தொடங்கினர்.

ஒருவரை பார்த்து இன்னொருவர் ஆபாசமாகவும், அசிங்கமாகவும் திட்டிக் கொண்டார்கள். இவர்களுக்குள்ளான தடித்த வார்த்தைகள் தகராறாக உருவெடுத்தது. மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டனர். தலை முடியைப் பிடித்துக் கொண்டு கட்டிப் புரண்டு சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

திடீரென பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டதைப் பார்த்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அனைவரும் சென்று அந்த சண்டையைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்துள்ளனர்.

எதற்காக இவர்கள் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள் என்றும் புரியாமல் விழித்தனர். மோதலை தடுத்து நிறுத்த முயன்றும் ஆவேசமாக காணப்பட்ட மாணவிகளை உடனடியாக கட்டுப்படுத்த முடியவில்லை.

பிறகு, பெரும் முயற்சிக்கு பிறகு அவர்களை அமைதிப்படுத்தினர். சண்டையை நிறுத்திய பொதுமக்கள் மாணவிகளிடம் சண்டைக்கான காரணம் குறித்து விசாரணை செய்துள்ளனர்.

அப்போது அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியில் பயின்று வரும் ஒரு மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அந்த மாணவனுக்கு மற்றொரு மாணவி வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பல்வேறு மெசேஜ்களை அனுப்பி சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அறிந்த அந்த மாணவனின் காதலியான மாணவி எப்படி நீ என் காதலனுடன் சாட்டிங் செய்யலாம் என மற்ற மாணவிகளிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் அடிக்கடி அவர்களுக்குள் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இந்த சிக்கலைப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என இரண்டு மாணவிகளும் தங்களது தோழிகளுடன் பவானி நகர் காட்டுப்பகுதிக்கு வந்துள்ளனர். இரண்டு தரப்பினரும் பேசும் போது சுமூக முடிவு ஏற்படாமல் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிப் போனதால் இருதரப்பு மாணவிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. காரணத்தைக் கேட்டு காரித்து துப்பி, மாணவிகளை அங்கிருந்து விரட்டினார்கள். தலையெழுத்து… தறுதலையாக போகுது அடுத்த தலைமுறை என்று தலையிலடித்தப் படியே பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இருதரப்பு மாணவிகளிடமும் பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

பாசமாய் வளர்த்த தந்தை இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து தந்தையின் நினைவில் வாடி வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த கீர்த்தி யாரிடமும் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார்.

வழக்கம் போல் தாய் வேலைக்கு சென்றுவிட கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தந்தையின் மரணத்தால் வேதனையின் உச்சிக்கு சென்ற மகள், மின்விசிறியில் புடவைகளால் தூக்கிட்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கீர்த்தியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கீர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி செய்த மோசடி.. தவிக்கும் ஜெமினி கணேசனின் பேரன்!!

சென்னையில்..

சென்னையில் தி.நகர் ஆற்காட் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் 37 வயதான மஞ்சு.இவர் ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் .

இவர், சின்னத்திரை நடிகைகள், தொகுப்பாளர்களுக்கு ஆடை வடிவமைத்து கொடுத்து வருகிறார்.இதனால் திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருக்கிறார். இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுவிற்கு ‘சென்னை28 பாகம்2’ உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகரும், பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனுமான அபிநயின் மனைவி அபர்ணா அறிமுகமானார். பின்னர் அபர்ணா வாடிக்கையாளர் என்ற முறையில் மஞ்சுவிடம் பழகி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு மஞ்சுவின் மகள் லாவண்யாஸ்ரீ 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தார். பின்னர் லாவண்யா விரும்பிய கல்லூரியில் மருத்துவ சீட் கிடைக்காததால் மஞ்சு தனக்கு தெரிந்த நபர்களிடம் கல்லூரி சீட் குறித்து கேட்டுள்ளார்.

இதை கேள்விப்பட்ட அபர்ணா அபிநய், மஞ்சுவிடம் தனக்கு ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் தெரிந்த நண்பர் இருப்பதாகவும், 20 லட்ச ரூபாய் கொடுத்தால் லாவண்யாவுக்கு மருத்துவ சீட் வாங்கி விடலாம் என்றும் முதற்கட்டமாக 5 லட்ச ரூபாய் கொடுத்து மருத்துவ சீட்டை புக் செய்து ரசீது பெற்றுக் கொள்ளலாம் என்றும் மீதி பணத்தை கல்லூரியில் சேர்ந்த பின்பு செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி மஞ்சு கடந்த ஜனவரி மாதம் அபர்ணா கூறியதன் பேரில் அவரது நண்பர் அஜய் வங்கிக் கணக்கில் 5 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்று பின்பு அபர்ணா அபிநய், மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கியது போன்று ஒரு சான்றிதழை மஞ்சு வாட்ஸ்அப்பிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் மஞ்சு அந்த சான்றிதழுடன் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு மகளை சேர்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு சான்றிதழை ஆய்வு செய்த கல்லூரி நிர்வாகம் இது போலி சான்றிதழ் என கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் மஞ்சு அபர்ணாவிடம் சென்று இது குறித்து கேட்டதுடன் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழித்து வந்த அபர்ணா ஒரு கட்டத்தில், 5 லட்சம் பணத்தை தனது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு தானே அனுப்பினாய், அவரிடம் சென்று வாங்கிக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மஞ்சு தொடர்ந்து பணத்தை கேட்டு்வந்ததால் தான் நடத்தி வந்த ஆடை விற்பனை செய்யும் கடையை மூடிவிட்டு அபர்ணா தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட மஞ்சு மாம்பலம் காவல் நிலையத்தில் அர்பணா மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் அபர்ணா மற்றும் அவரது நண்பர் அஜய் ஆகியோர் மீது மோசடி, போலியான ஆவணம் தயாரித்தல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து போலீசார் தலைமறைவான அபர்ணா, அஜய் ஆகியோரை தேடிவருகின்றனர்.

பெண் வேடத்தில் ஆண்கள் : அசந்துபோன இளைஞர்கள் : விநோத திருவிழா!!

கேரளாவில்..

பெண் வேடமிட்டு விநோத திருவிழாவில் கலந்துக்கொண்ட ஆண்கள், வைரலாகும் புகைப்படங்கள். இந்தியாவை பொறுத்தவரை பல மதங்கள் உள்ளது, இங்கு பல வித்யாசமான சடங்குகள் பூஜை முறைகள் உள்ளது.

அந்த வகையில் கேரளாவில் ஆண்கள் பெண்களை போல அலங்காரம் செய்து கொண்டு கடவுளை வழிபாடு செய்யும் விநோத வழக்கம் உள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள சாவரா என்ற கிராமத்தில் உள்ள கொட்டங்குளங்கரா பகவதி அம்மன் கோயில்.

இது சுயம்புவாக தோன்றிய கடவுளாக கருதப்படுகின்றது . இந்த கோயிலில் ஒரு விநோத சடங்கு ஒன்று பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த சடங்கில், ஆண் பக்தர்கள் பெண்களை போல வேடமிட்டு கடவுளை வழிபடுகின்றனர்.

ஆண்கள் பெண்களை போல மாறி நேர்த்திக்கடன் செலுத்துவது இங்குதான் என்று கூறப்படுகின்றது . இதன்போது ஆண்கள் ஏதேனும் பாவங்கள் செய்திருந்தால் இவ்வாறு பரிகாரம் செய்தால் பாவமெல்லாம் போகும் எனபது இங்கு உள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

முதலில் உள்ளூர் திருவிழாக இருந்தது தற்போது உலகமெங்கும் உள்ள பல ஆண்கள் பங்கேற்று இந்த சடங்கில் கலந்துகொள்கின்றனர் குறிப்பாக லண்டனில் இருந்தும் ஆண் பக்தர்கள் வருவதாக கூறப்படுகின்றது.

இந்த விநோத சடங்கில் பங்கேற்கும் ஆண்களுக்கு ரூ.500 முதல் ரூ.2000 ஆயிரம் வரை ஒப்பனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. யாரும் பெண் வேடம் தரிக்கும் ஆண்களை கேலி செய்வதில்லை.

இது கேரளாவின் மிக முக்கிய பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. பெண் வேடத்தில் ஆண்கள் வலம் வந்த காட்சியைப்பார்த்து இளைஞர்கள் ஜொள்ளு விட்ட விநோத திருவிழா இணையத்தில் வைரலாகி வருகின்றது.

வட்ஸ்அப் காதலால் ஏற்பட்ட விபரீதம்.. 15வயது சிறுமிக்கு நேர்ந்த கதி!!

கண்டியில்..

வாட்ஸ் அப் காதலுக்குள்ளான 15 வயது சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்ற இளைஞன், சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.துவிட்டுத் த.லை.ம.றை.வாகியுள்ளார். இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சி.று.மி.யுடன், அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் வட்ஸ்அப் மூலமாக கா.த.ல் தொ.டர்பை ஏற்படுத்தியுள்ளார்.

சிறிது காலம் நீடித்த இவர்களது வாட்ஸ் அப் காதல் தொடர்ந்தது. இந்நிலை நிலையில் சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த காதலன், சிறுமியுடன் பேசிக், கதைத்து ஏ.மா.ற்.றி கண்டி கெட்டம்பே பகுதியிலுள்ள வி.டுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு சி.று.மி.யை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செய்த பின்னர் இ.ளைஞர் த.லை.ம.றை.வா.கி.யுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏ.மா.ற்.றமடைந்த சி.று.மி, கண்டி பொலிஸ் நிலையத்தில் செய்த மு.றைப்பாடு செய்ததால், இளைஞர் தே.ட.ப்பட்டு வருகிறார். பா.தி.க்.கப்பட்ட சி.று.மி வை.த்திய ப.ரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

9 வயதில் இன்ஸ்டகிராம் ரீல்ஸ் புகழ்.. தந்தை கண்டித்ததால் 4ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் பெரிய குப்பம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ண மூர்த்தி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.

இவர்களுக்கு தற்போது 9 வயதில் பிரதிக்ஷா என்ற மகள் உள்ளார். இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் தற்போது குழந்தைகள் கைகளில் மொபைல் போன்கள் உலாவி வருவதுபோல் பிரதிக்ஷாவும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி வந்துள்ளார்.

அதில் தனக்கென இன்ஸ்டா ஐடி ஒன்றை உருவாக்கி பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் தற்போது அனைவரையும் ஈர்த்த ரீல்ஸ் என்ற விஷயம் அவரையும் ஈரத்தால் தினமும் ரீல்ஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனாலே இவர் அந்த பகுதியில் இன்ஸ்டா பிரபலமாக அறியப்பட்டார். இதனால் சிறுமிக்கு படிப்பில் இருந்த கவனம் சிதறியிருக்கிறது. மேலும் படிக்காமல் விளையாடி வந்துள்ளார்.

அதே போல் சம்பவத்தன்றும் சிறுமி படிக்காமல் தனது பாட்டி வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அவரது தந்தை, சிறுமியை படிக்கும்படி கண்டித்துள்ளார்.

இதையடுத்து வீட்டின் சாவியை சிறுமியிடம் கொடுத்துவிட்டு பெற்றோர் இருவரும் கடைக்கு வெளியே சென்றனர். சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்கள் பூட்டியிருந்த கதவை தட்டினர்.

மேலும் தங்கள் மகளையும் கத்தி அழைத்தனர். இருப்பினும் அந்த கதவு திறக்கப்படாததால் பதறிப்போன பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சிறுமி பிரதிக்ஷா அங்குள்ள ஜன்னல் கம்பியில் தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறிக்கொண்டே தங்கள் மகளை மீட்டு பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சுமார் சிறுமி பிரதிக்ஷாவுக்கு 1 மணி நேரமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் போலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் பிரதிக்ஷாவின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை படிக்க சொன்னதால் கோபப்பட்ட 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .