மகனுக்கு திருமணமாகாத கவலையில் தீக்குளித்த தாய்.. பாசத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு!!

சென்னையில்..

சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் ராணுவ மருத்துவமனையில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 57 வயதான நாகேஸ்வரி என்ற மனைவியும் 34 வயதான நவீன மகனும், 32 வயதான விவேக் மற்றும் மகனும் உள்ளனர்.

30 வயது கடந்து மகன்களுக்குத் திருமணம் ஆகவில்லை என நாகேஸ்வரி வருத்தத்தில் இருந்து உள்ளார். இதனால் கணவனுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

விரைவில் மகன்களுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் எனத் தனது கணவரிடம் நாகேஸ்வரி அடிக்கடி தகராறு ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம்போல் நேற்று காலை மகன்களின் திருமணம் தொடர்பாக நாகேஸ்வரி கணவரிடம் பேசியுள்ளார்.

இது குறித்து மனைவியை அசோகன் கண்டித்துள்ளார். மகன்களுக்குத் திருமணம் நடைபெறவில்லை என்ற வேதனையில் இருந்த நாகேஸ்வரி திடீரென சமையலறையில் இருந்த மண்ணெண்ணெய்யைத் தனது உடலில் ஊற்றித் தீக்குளித்துள்ளார்.

இதனால் உடல் கருகி சம்பவ இடத்திலேயே நாகேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று மாலை நாகேஸ்வரிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்று உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இரண்டாவது மகன் விவேக் மனமுடைந்துள்ளார்.

தாயின் இழப்பைத் தாங்க முடியாத விவேக், தானும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் விவேக் திடீரென வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்துக் கொண்டு காசிமேடு நாகூர் தோட்டம் பகுதிக்குச் சென்றுள்ளார்.

அங்குள்ள காலி இடத்தில் மண்ணெண்ணெய்யைத் தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே விவேக் உயிர் இழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு ரியல் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனது தாய் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டதை விவேக் நேரில் பார்த்துத் துடித்துள்ளார். அதன் காரணமாக விவேக்கும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் எனக் கூறப்படுகிறது.

தற்போது இது தொடர்பாக புது வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும், மகனும் அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

10 ஆண்டுகளாக காதலித்துவிட்டு வேறு பெண்ணுடன் திருமணம்.. காதலி எடுத்த அதிரடி முடிவு!!

பண்ருட்டியில்..

பண்ருட்டியில் விடிந்தால் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலி வீட்டு முன்பு இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் திருமண மாப்பிள்ளை கைது செய்யப்பட்டார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஆர்.எஸ். மணிநகரைச் சேர்ந்தவர் சக்கரபாணி மகன் சுப்ரமணியன்(31). மெக்கானிக்கான இவரும், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த ரம்யா (29) என்பவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து தனிமையில் ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இதில் ரம்யா பலமுறை கர்ப்பமாக இருந்து கலைத்து உள்ளார். இந்த நிலையில் சுப்பிரமணியன் கடந்த 22ஆம் தேதி விழுப்புத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் விழுப்புரத்தில் அறை எடுத்து தங்கி தனிமையில் இருந்துள்ளனர்.

தற்போது சுப்ரமணியனுக்கு கடலூரைச் சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டு இன்று காலை திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.

இதனை அறிந்த ரம்யா பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இரவு முழுக்க காதலன் வீட்டு முன்பு வாசலில் அமர்ந்து ரம்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று அதிகாலையில் திருமணம் நடக்க இருந்த நிலையில், காதலன் வீட்டு முன்பு காதலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திருமணத்தை நிறுத்த திருவந்திபுரம் சென்றனர்.

ஆனால் காவல்துறையினர் செல்லும் முன்பே சுப்ரமணியன் வேறொரு பெண்ணுக்கு தாலி கட்டியது தெரியவந்தது. இருந்தாலும் காவல் துறையினர் மணக்கோலத்தில் இருந்த சுப்பரமணியனை கைது செய்தனர்.

காதலித்து திருமணம் செய்த பெண்ணை கைவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்த சுப்பிரமணியத்தால் இரண்டு பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாகி உள்ளது.

வட கொரியாவில் கொடூரத்தின் உச்சம் : 2 வயது குழந்தைக்கும் ஆயுள்தண்டனை!!

வட கொரியாவில்..

வட கொரியாவில், ‘பைபிள்’ வைத்திருந்ததற்காக, 2 வயது குழந்தை உட்பட பல கிறிஸ்துவர்களுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக, அமெரிக்க வெளியுறவுத் துறை குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, அணு ஆயுத விவகாரத்தில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திர அறிக்கையை, அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ளது.

வட கொரியாவில், பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன், 70 ஆயிரம் கிறிஸ்துவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், 2 வயது ஆண் குழந்தையும் அடங்கும் என கூறப்படுகின்றது.

குழந்தையின் பெற்றோர் பைபிள் வைத்திருந்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர். அவர்களோடு, 2 வயது குழந்தைக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துவர்கள், தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கிளிநொச்சி A9 வீதியில் தறிகெட்டு ஓடிய பேருந்தால் நேர்ந்த விபரீதம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி A9 வீதி திரேசம்மாள் கோவில் அருகில் சற்று முன் வீதிப் பாதுகாப்புத் தூண்களை இ.போ ச பஸ் வண்டி மோதித் தள்ளியது.

இதன்போது பயணிகள் எவருக்கும் பாரிய சேதமில்லை எனினும் பேருந்தின் கதவு மற்றும் மிதிபலகை என்பன சேதமடைந்துள்ளது.

பூநகரிக்கு சென்றுகொண்டிருந்த பேருந்தே தற்கெட்டு ஓடி வீதிப் பாதுகாப்புத் தூண்களை மோதியுள்ளது.

இந்நிலையில் பேருந்தில் இருந்த பயணிகள் அவதிப்பட்ட நிலையில், சற்று நேரத்தில் மாற்று பஸ் வண்டி வரவழைக்கப்பட்டு பயணிகள் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் இந்த விபத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை வீழ்ச்சி!!

தங்கம்..

உள்ளூர் சந்தையில் தங்கம் மற்றும் தங்க ஆபரணங்களின் விலை மீண்டும் வெகுவாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே தங்கத்தின் விலைக் குறைப்புக்குக் காரணம்,

என கொழும்பு செட்டியார் தெரு வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி இன்றைய நிலவரத்தின் பிரகாரம் 22 கரட் தங்கத்தின் விலை 150,800 ருவாகும். 24 கரட் தங்கம் ரூ. 163,000 முதல் ரூ. 164,000 ஆக உள்ளது.

அதேவேளை உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை ஆண்டின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட விலையில் இருந்து தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு!!

இலங்கையில்..

இலங்கை மத்திய வங்கி இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை தளர்த்தியதுடன் சுமார் 843 வகையான பொருட்களுக்கு அந்த பொருட்களை இறக்குமதி செய்யும் போது பொருட்களின் மொத்த மதிப்புக்கு சமமான ‘பண வரம்பு தேவை’ கட்டுப்பாட்டை நீக்கியுள்ளது.

இதில் கையடக்கத் தொலைபேசிகள், குளிர்சாதனப் பெட்டிகள், மின் விசிறிகள், பழங்கள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்குவதாகவும்,

இந்த தீர்மானத்தினால் எதிர்காலத்தில் பல அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைவடையும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக பல்வேறு பொருட்களுக்கு இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

கிளிநொச்சியில்..

வீதியில் பேஸ்புக் பார்த்துகொண்டு சென்ற இளைஞனிடம் போனை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கிளிநொச்சி – உதயநகரில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நம்மில் பலரும் வீதியில் செல்லும்போது அருகே செல்பவர்களை கவனிக்காது சமூக வலைத்தளங்களில் மூழ்கிப்பொவது வழமை.

இவ்வாறான செயல்களால் விபத்துக்கள் இடம்பெற்ற சம்பவங்களும் , உயிர்ப் பலிகளும் பதிவாகியுள்ளமை நாம் அறிந்ததே.

எனவே வெளியே செல்கையில் கூடுமானவரை வீதியில் செல்லும்போது தேவையற்று மொபைலை நோண்டுவதை தவிர்த்துகொண்டால் ஆபத்துக்களையும் , திருட்டுக்களையும் தவிர்க்கலாம்.

பாக்கு நீரிணையை கடந்து புதிய உலக சாதனையை நிகழ்த்திய இலங்கைத் தமிழ் மாணவன்!!

மதுஷிகன்..

இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து தலைமன்னார் வரை நீந்தி இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் புதிய உலக சாதனையை நேற்று 28ஆம் திகதி நிகழ்த்தியுள்ளார்.

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் மாணவரான தேவேந்திரன் மதுஷிகன் ஜனாதிபதி சாரணரும் ஆவார்.

பாக்கு நீரிணை வழியாக 30 கிலோமீட்டர் தூரத்தை 14 மணி நேரத்தில் நீந்தி பள்ளி மாணவன் என்ற வகையில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

தனுஸ்கோடியில் இருந்து அதிகாலையில் ஒரு மணிக்கு நீந்தத் தொடங்கிய மாணவன் பிற்பகல் 3-05 மணியளவில் தலைமன்னாரை வந்தடைந்தார்.

இந்நிகழ்வில் மன்னார் மற்றும் மட்டக்களப்பு மாகாணங்களின் ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சகோதரர்கள்!!

மொனராகலையில்..

மொனராகலை – கொணகங்கார பிரதேசத்தில் மின்னல் தாக்கி சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 32 வயதான 1990 அம்புலன்ஸ் சாரதி , 31 வயதான இளைஞர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயல்வெளியில் வேலை செய்துக்கொண்டிருந்த போது கடுமையான மழை பெய்தமையால், அங்குள்ள வாடியில் இருவரும் அமர்ந்திருந்த வேளை ஒருவரின் அலைபேசிக்கு வந்த அழைப்பிற்கு பதிலளிக்கும் போது ஏற்பட்ட கடுமையான மின்னல் தாக்கத்தினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வாடி தீப்பற்றி எரிந்ததனையடுத்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

யாழில் இடம் பெற்ற கோர விபத்து : ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழில்..

யாழ்ப்பாணம் முட்டாஸ் கடை சந்தியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒருவர் பயணித்து கொண்டிருந்த நபர் மீது பின்னால் வந்த வாகனம் அவரது மோட்டார் சைக்கிளை தட்டியுள்ளார்.

இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்நிலையில் பின்னால் வேகமாக வந்த லொறியின் சக்கரம் அவரது தலைக்கு மேல் ஏறியதில் தலை சிதைந்து சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் யாழ்.தென்மராட்சி – மீசாலையை சேர்ந்த இராஜரட்ணம் அபிதாஸ் (வயது 26) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் 40 நிலையங்களில் 4480 மாணவர்கள் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றுகின்றனர்!!

க.பொ.தராதர சாதாரணதர பரீட்சை இன்று (29.05) ஆரம்பித்த நிலையில் வவுனியாவில் 4480 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதுடன் அவர்களுக்காக 40 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை நாடாளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது. அந்தவகையில் வவுனியா மாவட்டத்திலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்துசெய்யப்பட்டு பரீட்சை செயற்பாடுகள் ஆரம்பித்திருந்தது.

இம்முறை சாதாரணதர பரீட்சைக்கு வவுனியாவில் 4480 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், அவர்களுக்காக 40 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், 14 இணைப்பு காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறித்த பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 472553 பேர் தோற்றவுள்ளனர். இவர்களில் 394450 பாடசாலை பரீட்சார்த்திகளும், 78103 தனியார் பரீட்சார்த்திகளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வீழ்ச்சியை சந்திக்கப் போகும் இலங்கை ரூபாயின் பெறுமதி.. அபாய நிலை குறித்து அறிவிப்பு!!

டொலர்..

டொலர்களை சம்பாதிப்பதன் ஊடாக நாட்டில் ரூபாயின் பெறுமதியை வலுப்படுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

ரூபாயை வலுப்படுத்த நாட்டிலிருந்து டொலர்கள் வெளியேறுவதனை தடுப்பது மாத்திரம் தீர்வாகாதென குறிப்பிட்டுள்ளார். இலங்கையை விட்டு வெளியேறும் டொலர்களை தடுத்து வைத்தே ரூபாயினை வலுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

எனினும் இந்த நிலைமை மாற வேண்டும். டொலர் சம்பாதிப்பதற்காக வழியை கண்டுபிடித்து ரூபாயின் பெறமதியை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய நிலைமை காரணமாக எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுகின்றது.

தற்போது ரூபாயின் பெறுமதி வலுவடைவதனை பார்த்து எவ்வித திருப்தியும் அடைய முடியாது. எதிர்வரும் நாட்களில் கடன் செலுத்தவுள்ளது. இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

டொலர் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய தேவைகள் அதிகமாக உள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் காலங்களில் கடும் நெருக்கடியான நிலைமை ஒன்றை சந்திக்க நேரிடும் அபாயங்கள் அதிகமாக உள்ளது.

இதேவேளை, நாட்டின் பொருளாதாரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் அந்தந்த துறைகளினால் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பிரியங்க துனுசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

கொடுத்த கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. பெண்ணை 6 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்த நபர்!!

ஐதராபாத்தில்..

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வருபவர் சந்திர மோகன் (48). இவரது வீட்டின் கீழே அனுராதா என்ற 55 வயதுடைய பெண் வசித்து வருகிறார். கந்து வட்டி தொழில் செய்து வரும் இவர், கடந்த 2018 முதல் சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

இந்த சூழலில் கொடுத்த கடனை தொடர்ந்து கேட்டுள்ளார் அனுராதா. இதனால் சிறுக சிறுக கடனை கொடுத்து அடைக்க முயன்றுள்ளார் சந்திர மோகன். ஆனால் சந்திர மோகனால் அந்த கடனை முழுமையாக அடைக்க முடியவில்லை.

இருப்பினும் அனுராதா விடாமல் தொந்தரவு செய்துள்ளார். இந்த சூழலில் அனுராதாவின் தொல்லை தாங்க முடியாத சந்திர மோகன் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அதற்காக சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்தார். அதன்படி வழக்கம்போல் கடந்த 12-ம் தேதியும் அனுராதா, சந்திர மோகனிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டுள்ளார்.

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சந்திர மோகன், அனுராதாவை அடித்து தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் இறந்த உடலை என்ன செய்வது என்று யோசித்த அவர், கல் வெட்டும் இயந்திரம் மூலம் அனுராதாவின் உடலை 6 பகுதிகளாக வெட்டியுள்ளார். பின்னர் அந்த பகுதிகளை பிரிட்ஜ் ஒன்றில் பதப்படுத்தியுள்ளார்.

வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது என்பதால் ரூம் பிரஷ்நர் வாங்கி பயன்படுத்தியுள்ளார். இதையடுத்து துண்டாக்கப்பட்ட தலையை முதலில் அப்புறப்படுத்த எண்ணிய அவர், மே 17-ம் தேதி இரவில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஒரு குப்பை தொட்டியில் அவரது தலையை கவருக்குள் வைத்து போட்டுள்ளார்.

இந்த சூழலில் மறுநாள் காலை துப்புரவு பணியாளர் ஒருவர் குப்பையில் கிடந்த தலையை கண்டு அதிர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதனை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 10 நாட்களுக்கு மேல் தான் அந்த தலை அனுராதாவுடையது என்று அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அவர் இருக்கும் பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது சந்திர மோகன் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரிடம் கிடுக்குபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மேலும் தனது குற்றத்தை சந்திர மோகன் ஒப்புக்கொண்டார்.

அதோடு அவரது வீட்டின் பிரிட்ஜில் இருந்த அனுராதாவின் உடல் பகுதிகளையும் மீட்டு ஆய்வுக்கு அனுப்பினர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போல் நாடு முழுவதும் உள்ள டெல்லி, மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில பகுதிகளில் ஏற்கனவே அரங்கேறி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் மனைவிக்காக இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு சைக்கிள் பயணம்.. சுவாரசியமான காவியக் காதல்!!

இந்தியாவில்..

தனது ஸ்வீடிஷ் மனைவியைச் சந்திக்க இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சைக்கிளில் சென்ற இந்தியரின் காவியக் காதல் கதையை தெரிந்துகொள்ளுங்கள். ஸ்வீடனைச் சேர்ந்த சார்லோட் வான் ஷெட்வின் (Charlotte Von Schedvin) 1975-ஆம் ஆண்டு டெல்லியில் இந்தியக் கலைஞர் பிகே மகாநந்தியாவைச் சந்தித்தார். அவர்களது சந்திப்பு ஏதேச்சையாக நடக்கவில்லை.

மகாநந்தியாவின் கலையைப் பற்றி கேள்விப்பட்ட பிறகு, ஷெட்வின் ஸ்வீடனில் இருந்து இந்தியாவுக்கு சென்றார். மேலும் தனது உருவப்படத்தை மகாநந்தியாவின் கையால் உருவாக்க முடிவு செய்தார்.

அப்போது மகாநந்தியா ஒரு கலைஞராக தனக்கென ஒரு பெயரை உருவாக்கத் தொடங்கினார். இவர் டெல்லியில் உள்ள கலைக் கல்லூரியில் ஒரு ஏழைக் கலைக்கல்லூரி மாணவராக இருந்தார்.

மகாநந்தியா ஷெட்வின் உருவப்படத்தை உருவாக்கும் போது இருவரும் ஒருவரையொருவர் காதலித்தனர். அவல் அழகில் அவன் மயங்கினான், அவனுடைய எளிமையில் அவள் காதலில் விழுந்தாள்.

வான் ஷெட்வின் இந்தியாவை விட்டு சொந்த நாட்டுக்கு வெளியேற வேண்டிய நேரத்தில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மகாநந்தியாவின் குடும்பத்தினரின் ஆசியுடன், பழங்குடியினர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

அவள் கிளம்பும் நேரம் நெருங்கிவிட்டதால், தன் கணவனைத் தன்னுடன் வரச் சொன்னாள். இருப்பினும், மகாநந்தியா முதலில் தனது படிப்பை முடிக்க வேண்டியிருந்தது. ஸ்வீடிஷ் ஜவுளி நகரமான போராஸில் உள்ள அவரது வீட்டிற்கு விளைவில் வந்து சந்திப்பதாக அவர் உறுதியளித்தார்.

இருவரும் கடிதங்கள் மூலம் தொடர்பு கொண்டிருந்தனர். ஒரு வருடத்திற்குப் பிறகு, வான் ஷெட்வினைப் பார்க்க அவர் திட்டமிட்டபோது, ​​விமான டிக்கெட் வாங்குவதற்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை என்பதை உணர்ந்தார். தனக்குச் சொந்தமான அனைத்தையும் விற்று சைக்கிள் வாங்கினான்.

அடுத்த நான்கு மாதங்களில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளைக் கடந்தார். வழியில் அவரது சைக்கிள் பல முறை பழுதடைந்தது, மேலும் அவர் பல நாட்கள் உணவின்றி செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அவரது காதலை எதுவும் உடைக்க முடியவில்லை.

அவர் ஜனவரி 22, 1977-ல் தனது பயணத்தைத் தொடங்கினார், மேலும் அவர் தினமும் சுமார் 70 கிமீ சைக்கிள் ஓட்டுவார். வழியில் மக்களின் உருவப்படங்களை உருவாக்கி சிறிது பணம் ஈட்டினார், பலர் அவருக்கு உணவு மற்றும் தங்குமிடம் கொடுத்து உதவினர்.

அவர் மே 28 அன்று இஸ்தான்புல் மற்றும் வியன்னா வழியாக ஐரோப்பாவை அடைந்தார், பின்னர் ரயிலில் கோதன்பர்க் சென்றார். இருவரும் சந்தித்தபிறகு அதிகாரப்பூர்வமாக ஸ்வீடனில் திருமணம் செய்து கொண்டனர். “ஐரோப்பிய கலாச்சாரம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

இது எனக்கு புதியது, ஆனால் அவள் ஒவ்வொரு அடியிலும் என்னை ஆதரித்தாள். அவள் ஒரு சிறப்பு நபர். நான் 1975 இல் இருந்ததைப் போலவே நான் இன்னும் காதலிக்கிறேன்,” என்று அவர் பிபிசியிடம் கூறினார். இந்த ஜோடி இப்போது தங்கள் இரண்டு குழந்தைகளுடன் ஸ்வீடனில் வசிக்கிறது, மேலும் அவர் தொடர்ந்து ஒரு கலைஞராக பணியாற்றுகிறார்.

இரண்டாவது தாலியும் நிலைக்கவில்லை.. திருமணமாகி 8 நாளில் ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை!!

கேரளாவில்..

முதல் கணவருடனான திருமண வாழ்க்கை ஒத்து வராத நிலையில், அவரை விட்டுப் பிரிந்து தனியே மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார் ஸ்ரீஜா. காதலும், காமமும் எப்போது வாழ்க்கையைப் புரட்டி போடும் என்று யாருக்கும் தெரியாது தானே? தனது காமம் + காதல் காரணமாக ஏற்கெனவே திருமணமாகி குழந்தை, மனைவியுடன் வாழ்ந்து வரும் ஷஜியுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது ஸ்ரீஜாவுக்கு.

முதல் மனைவிக்கு தெரியாமலேயே ஷஜியும், ஸ்ரீஜாவும் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் தனியே வசித்து வந்த நிலையில், இன்று காலை 5 பேருமே வீட்டில் உயிரிழந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர்.

3 குழந்தைகளையும் கொன்று விட்டு, ஸ்ரீஜாவும், ஷஜியும் தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர். கேரள மாநிலம் கன்னூர் மாவட்டம் வச்சல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா (38).

இவருக்கு சுராஜ் (12), சுஜின் (10), சுரபி (8) என 3 குழந்தைகள் உள்ளன. இதனிடையே, கடந்த ஸ்ரீஜா கடந்த புதன்கிழமை ஷஜி (42) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி 3 குழந்தைகளுடன் ஷஜி வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். ஷஜி வீட்டில் ஸ்ரீஜா அவரது கணவர் ஷஜி குழந்தைகள் 3 என 5 பேரும் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக 3 குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு ஸ்ரீஜா மற்றும் அவரது கணவர் ஷஜி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2வது திருமணம் செய்த 8 நாட்கள் 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை TO கோபுரம்.. திடீரென சூப்பர் மாடலாக அவதாரம் எடுத்த சிறுமி.. யார் இந்த மலீஷா?

மும்பையில்..

மும்பை, தாராவியை சேர்ந்த 12 வயது சிறுமி மலீஷா ‘Forest Essentials’ என்ற அழகு சாதன நிறுவனத்துக்கு விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் செளராஷ்டிரா பகுதியில் மீன் பிடி தொழில் செய்து வரும் ‘கார்வா’ என்ற சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சமூகத்தை சேர்ந்த 12 வயது மலீஷா என்ற சிறுமியின் குடும்பம், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் குஜராத்தில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தனர். அங்கே தாராவி என்ற பகுதியில் வசித்து வருகின்றனர்.

மலிஷா தனது தாய், தந்தை, தம்பி என்று குடும்பத்தோடு அந்த பகுதியில் அமைந்துள்ள குடிசையில் வசித்து வருகிறார். வறுமையின் பிடியில் சிக்கி தவித்த இந்த சிறுமிக்கு நடனம், பேச்சு என பல திறைமைகள் இருந்துள்ளது.

இந்த சூழலில் ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ராபர்ட் ஹாப்மேன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு இசை ஆல்பத்துக்காக இந்தியா வந்திருந்தார். அப்போது மும்பையில் இருந்த அவர், கொரோனோ தொற்று காரணமாக மும்பையிலே தங்க வேண்டியதாயிற்று.

அப்போது அவருக்கு சிறுமி மலீஷாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவரிடம் அந்த சிறுமி நன்றாக பேசவே, அவருடன் பழகியுள்ளார். மேலும் சிறுமியின் வறுமையிலும், அவரது திறமை ராபர்ட்டை வெகுவாக கவர்ந்துள்ளது.

எனவே சிறுமிக்கு எதாவது செய்ய எண்ணியுள்ளார். அதன்படி சிறுமிக்கு டொனேஷன் பெற்றுக்கொடுக்க எண்ணி, அதற்காக அவருக்கு என்று பிரத்யேகமாக இன்ஸ்டா பக்கம் ஒன்றை ஓபன் செய்து கொடுத்துள்ளார்.

பின்னர் அதில் அவரது புகைப்படங்கள் உள்ளிட்டவையை பதிவேற்றம் செய்து Followers-களை பெற்றுக்கொடுத்தார். அதில் இருந்து சிறுமிக்கு நிதி வர தொடங்கியது. சுமார் 15 லட்சம் வரை நிதி பெற எண்ணிய ராபர்ட், அதற்காக சிறுமிக்கு பலவற்றை செய்துகொடுத்துள்ளார்.

இப்படியே சிறுமி பிரபலமாக தொடங்கினார். அவரது ஒவ்வொரு போஸ்டுக்கும் கீழே #theprincessfromtheslum(‘குடிசை இளவரசி) என்று இருக்கும். இப்படியே இந்தியா முதல் வெளிநாடு வரை அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், பிரபல மாடலாக மாறினார்.

தி பீக்காக், காஸ்மோபாலிட்டன் இந்தியா உள்ளிட்ட முக்கிய முன்னணி இதழ்களில் மலீஷாவின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்டன. அதிலும் சில நேரங்களில் முதல் பக்க அட்டையில் அவரது புகைப்படங்கள் இடம்பெற்றன. இப்படியே அவருக்கு ஒரு குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடிக்கவும் செய்தார்.

இவரது பிரபலத்தின் காரணமாக தற்போது 2 பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தொடர்ந்து மாடலிங் துறையில் இருக்கும் இவர், சில நேரங்களில் பத்திரிகைகளுக்கு பேட்டிகளும் அளித்து வருகிறார். அதோடு இவர் ஆடைகள் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கும் விளம்பரங்கள் செய்து கொடுக்கிறார்.

சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட followers-களை வைத்திருக்கும் இவர், தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி அழகு சாதன தயாரிப்பு நிறுவனமான ‘Forest Essentials’ நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் தற்போது அவர் சூப்பர் மாடலாக உருவெடுத்துள்ளார். இந்த நிறுவனம் இந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட ஷோரூம்களை கொண்டுள்ளதோடு, உலகளவில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்கிறது.

இந்த சூழலில் மும்பையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஷோ ரூமுக்கு மலீஷா செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் மாடலாக நடித்த ஷோ ரூமுக்கு, மலீஷா பள்ளி சீருடையில் எளிமை தோற்றத்தில் சென்று அதனை கண்டு பிரம்மித்து போவது போன்று அந்த வீடியோவில் இடம்பெற்றிருந்தது.

தாராவியில் ஒரு குடிசையில் வசிக்கும் மலீஷா, முன்னணி நிறுவனத்துக்கு விளம்பரம் செய்வது, விளம்பர தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளது பலரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.