மணப்பாறை அருகே திருமணமான நான்கு மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி மாவட்டம் களத்துப்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் என்பவருக்கும், வடக்கிப்பட்டியைச் சேர்ந்த கவிபிரியா என்ற பெண்ணிற்கும் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கணவன் வீட்டிலிருந்த கவிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையறிந்த பெண்ணின் குடும்பத்தார் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து, பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் முடிந்து நான்கு மாதங்களே ஆகியுள்ளதால் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்திய பின்னரே உண்மை நிலை தெரியவரும்.
இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், திருமனம் செய்து வைப்பதற்கு நிச்சயம் எல்லாம் செய்த நிலையில், காதல் ஜோடி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஹோட்டலிலேயே அறையில் விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியையும், போலீசார் மத்தியில் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
காதல் ஜோடிகள் இருவரின் செல்போன்களையும் கைப்பற்றி ஆய்வு செய்தும், இருவரின் தற்கொலைக்கான காரணங்கள் தெரியாமல் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் சன்வர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கபில் சாகு (23). இவருக்கும் நிஷா என்பவருக்கும் திருமணம் செய்வது என நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், கபில் தனது பெற்றோரிடம் விஜய் நகர் பகுதிக்கு செல்கிறேன் என கூறி விட்டு காலை நேரத்தில் சென்று உள்ளார்.
ஆனால், மதியம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், கபிலின் தந்தை அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, கபில் விஷம் குடித்த தகவலை, அவருடன் இருந்த நிஷா தெரிவித்து உள்ளார். அவரும் விஷம் குடித்திருக்கிறார். தங்களை காப்பாற்றும்படியும் அவர் கோரியுள்ளார்.
அவர்கள் இருவரும் ஓட்டலில் தங்கி இருந்து உள்ளனர். ஆனால், எந்த ஓட்டல் என தெரியாமல் கபிலின் உறவினர்கள் பல இடங்களில் தேடி மாலையில் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர்.
ஓட்டல் பணியாளர்கள் உதவியுடன் மாற்று சாவி அறையை உடைத்து உள்ளே சென்ற போது, கபில், நிஷா இருவரும் சுயநினைவற்று கிடந்து உள்ளனர். அவர்களை உடனே மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அதில் பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டனர் என மருத்துவர்கள் கூறி உள்ளனர். பொதுவாக, திருமணம் செய்வதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கும் போது இது போன்ற தற்கொலை முடிவை காதல் ஜோடிகள் எடுப்பது வழக்கம்.
ஆனால், திருமண நிச்சயம் செய்த ஜோடி ஓட்டலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது விசித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த சதீஷ்குமார்- (31), தேனி மாவட்டம் கடமலைகுண்டைச் சேர்ந்த ரம்யா (25) ஆகியே இருவரும் திருப்பரங்குன்றம் அருகே ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர். அங்கு இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டு பின்னர் காதலிக்கத் தொடங்கினர்.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சதீஷ்குமார் – ரம்யா திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள், விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வது தெருவில் வசித்து வந்தனர். இதையடுத்து ரம்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம்போல் நேற்று முன்தினமும் சதீஷ்குமார், ரம்யாவுக்கு இடையே கடுமையான தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து ரம்யாவை தாக்கியுள்ளதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த ரம்யா சரிந்துவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த கொலை ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அங்கு சென்றனர். மேலும் அவர்கள் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு ரம்யாவின் மாமனார், மாமியாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை அரசு மருத்துவமனையில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். இதையடுத்து சதீஷ்குமார் (31), சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை – தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையிலான ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பாகிய ஊர்திப் பவனியானது நேற்றிரவு வவுனியாவை வந்தடைந்து இன்று (13.05.2023) காலை வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகியிருந்ததுடன் மக்கள் அஞ்சலியும் செலுத்தியிருந்தனர். அதன் பின்னர் குறித்த ஊர்திப்பவனியானது நகரை வலம்வந்ததுடன் மன்னார் நோக்கி பயணமானது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழினம் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப்பட்டதை அடையாளப்படுத்தி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்பட்டு வருவதோடு 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் முற்றத்திலே மாபெரும் நினைவேந்தல் நிகழ்வுகளும் இடம்பெறுவது வழக்கம்.
தமிழ் இனப் படுகொலையின் நினைவாக இந்த ஆண்டு பல பகுதிகளிலும் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கும் நிகழ்வு பல தரப்பினராலும் ஒழுங்கமைக்கப்பட்டுச் செயற்படுத்தப்படுகின்றன.
நேற்றைய தினம் வடக்கு , கிழக்கு மாவட்டங்கள் பலவற்றிலும் இந்தக் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. இதன் மற்றொரு அங்கமாக முல்லைத்தீவில் இருந்து குறித்த முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்திப் பவனி தொடங்கப்பட்டிருந்தது.
மன்னார் , கிளிநொச்சி, யாழ்ப்பாணம் பகுதிகளுக்கும் செல்லும் இந்த ஊர்தி மீண்டும் கிளிநொச்சி மாவட்டம் ஊடாக முள்ளிவாய்க்கால் முற்றத்தை மே 18 வந்தடையும் என்று இதன் ஏற்பாட்டாளாகிய தாயக நினைவேந்தல் அமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி உதயராஜ் – திரித்துஷா 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்து காட்டியுள்ளார். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500 ற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள 50 ற்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி கற்று வருகின்றனர். 2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
அதில், உதயராஜ் – திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார்.
தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 ,எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு நிறைவடைந்தவுடன் அறிவியல் பிரிவை கற்று மருத்துவராக வேண்டும் என்று தான் ஆசை என கூறிய ஆனால், அகதிகள் முகாமில் இருப்பதால் எங்களால் படிக்க முடியாது என்பதனால் வணிகவியல் படித்து ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” எனவும் உதயராஜ் – திரித்துஷா தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைகழ்கத்தில் ஆரம்பித்த ஒரு காதல் கதை சிங்களப் பகுதியில் பேசு பொருளாக மாறியிருக்கிறது. காதலுக்கு கண்ணில்லை என்று கூறுவோரும் உண்டு. ஏனெனில் உண்மையான காதலுக்கு இனம், மதம் , மொழி என்பவற்றை தாண்டி மனங்களை மட்டுமே அவர்கள் நேசிக்கின்றனர்.
அவர்கள், சிங்களவர்கள், இவர்கள் தமிழர்கள் என்பதை தாண்டி நாம் எல்லோரும் இலங்கையர்கள் என்கின்ற உணர்வு கடந்த கால குடும்ப ஆட்சிக்கு எதிராக மக்கள் வெகுடெண்ழுந்து சர்வாதிகாரமாக மக்களை ஆண்டவர்களை வீட்டுகளுக்குள் பதுங்கிக்கொள்ளவைத்த சம்பவமும் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது.
அதேபோலவே 2016 ஆண் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் இன, மத மொழி கடந்து இதயத்தைக் கொள்ளைகொண்ட காதல் ஓர் காதல் கதைதான் இது. தென்னிலங்கையை சேர்ந்த சிங்கள இளைஞன் யாழ் பல்கலைக்கு கற்கவந்தபோது தமிழ் யுவதி மீது காதலில் விழுகின்றார்.
தென்னிலங்கை இளஞருக்கு தமிழ் தெரியாது தமிழ் யுவதிக்கு சிங்களம் புரியாது . அவளுக்காக அவன் தமிழ் கற்றுக்கொள்கிறான். ஒரு நாள் நான் உன்னை காதலிக்கிறேன் என தமிழிலேயே தன் இதயத்தைத் திறந்து காட்டினான் அந்த சிங்கள இளைஞன்.
அதன் பின்னர் அவனும் அவளும் ஒருவாரம் பேசிக்கொள்ளவில்லை மீண்டும் ஒருவாரத்தின் பின்னர் இருவரும் பேசிக்கொண்டார்கள். அப்போது நான்உன்னை காதலிக்கிறேன் என்று மீண்டும் சொன்னான் அந்த இளைஞன். அவள் பதிலாக ஒரு புன்னகை மட்டுமே அவனுக்கு கிடைத்தது.
அந்த நட்பு ,அந்தக் காதல்,அந்த சிங்கள தமிழ் இளைஞர் யுவதிகளை கிடையிலான அந்தஉறவு தொடர்கிறது. ஒரு நாள் அவன் அவளுடன் பேசாமல் உறங்கச் சென்று விடுகிறான். திடீரென ஏதோ ஒரு உந்துதல் அதிகாலையில் கண் விழித்து அவர் கைபேசியை பார்க்கிறான். அங்கே அவள் அனுப்பிய குறுஞ்செய்தி,
அதிலே நான் உன்னை கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன். ஆனாலும் எப்படியும் என் உறவினர்களுக்கு உன்னை பிடிக்காது. ஆனால் என் பெற்றோரை தாண்டி உன்னிடம் என்னால் வந்து விடவும் முடியாது.வீணாக உன் இதயத்தில் ஆசைகளை ஏற்படுத்திவிட எனக்கு பயமாகஇருக்கிறது என அவள் தனது ஆதங்கத்தை அனுப்பி இருந்தாள்.
இவ்வாறு ஆரம்பித்த அவருடைய காதல் படிப்படியாக வளர்ச்சி அடைந்து பல சவால்களுக்கு மத்தியில் அவர்களுடைய காதல் பயணிக்கிறது. இவர்கள் நட்பால் தொடர்ந்த கட்டுக்கதைகள்,அவதூறுகள், வதந்திகள் என அவருடைய காதலை பாதிப்படையச் செய்கிறது.
இந்த நிலையிலே நாக விகாரையின் படிக்கட்டுகளில் அமர்ந்து இருவரும் கைகோர்த்தபடி அழுகின்றனர். அதன் பின்னர் நாட்கள் செல்லசெல்ல சில ஆதரவுகள் பல எதிர்ப்புகள் என அத்தனையும் கடந்து 2023ஆம் ஆண்டு நான்காம் மாதம் 25ஆம் திகதி நண்பர்கள் உறவினர்கள் ஆதரவுடன் அந்தகாதல் கதை திருமணத்தில் முடிவடைகின்றது.
இந்த காதல் ஜோடியின் கதைதான் தென்னிலங்கை மக்களிடையேயும் இணையவாசிகளின் இதயத்தைக் கொள்ளை கொண்ட ஒரு நிகழ்வாக பதிவுசெய்யப்படுகிறது. தற்போது அந்த தென்னிலங்கை இளைஞர் தமிழ் மக்களுக்கு சிங்களமும் சிங்கள மக்களுக்கு தமிழும் படிப்பிக்கின்றாராம்.
சினிமாவில் மட்டுமே இப்படியான சம்பவங்களை நாம் பார்த்து மகிழ்ந்திருப்போம். பல சவால்களை தாண்டி இன்று தம்பதிகளாய் இணைந்துள்ள அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் இன்று (13.05.2023) காலை சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 263 போத்தல் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.
தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான தா.வாகீசன், த.சிவரஞ்சன், அ.விதுசன், ஞா.ஞானப்பிரதாப், ர.கிஷோஷான் ஆகியோர் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை ஊர்மிளாகோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டினை சுற்றிவளைத்தனர்.
இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.
சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 263 போத்தல்களில் (750 மில்லிலீற்றர் போத்தல்) அடைக்கப்பட்ட சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுத்தப்பட்ட சமயத்தில் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
வவுனியா நகர மத்தியில் இன்று (13.05.2023) மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றி எரிந்ததுடன் அதில் பயணித்தவர்கள் எவ்வித பாதிப்புமின்றி உயிர்தப்பியிருந்தனர்.
ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த TVS சாம் ரக மோட்டார் சைக்கில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மித்த பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
அதில் பயணித்த கணவன், மனைவி, பிள்ளைக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என்பதுடன் தீப்பற்றிய மோட்டார் பொதுமக்களின் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் பகுதியளில் எரிந்து நாசமாகியுள்ளது.
மோட்டார் சைக்கிலில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
திருமணத்துக்கு பின் மகளை பிரியமுடியாமல் தவிக்கும் தந்தையின் பாசத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சி பூரண வீடியோ ஓன்று இணையத்தில் வெளியாகி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்து விடுகின்றனர்.
முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும். தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள்.
பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கின்றனர். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது.
மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை மயங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழங்கள் சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியம் என்றாலும், சில தருணங்களில் உயிர் பலியையும் ஏற்படுத்துகின்றது என்பது அனைவருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கின்றது.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜா அனீஸ், பாத்திமா என்ற தம்பதியினிரின் ஒன்றரை வயது மகன் முகமது அர்ஷத். குழந்தைக்கு மாதுளம் பழத்தினை சாப்பிட கொடுத்துள்ள நிலையில், சாப்பிட்ட குழந்தை திடீரென வாந்தி எடுத்ததுடன் மயங்கியுள்ளது.
மயங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு பெற்றோர்கள் மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், குறித்த சம்பவத்தினால் கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
சென்னை பொழிச்சலூர் கமிஷனர் காலனியில் வசித்து வருபவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 33 வயது ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 மகள்கள்.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் ஐஸ்வரியா சென்னையில் இரு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக மருத்துவரிடம் சிகிச்சையும், மன நல ஆலோசகரிடம் ஆலோசனையும் பெற்று வந்தார்.
பொன்னியின் செல்வன் 2 படம் வெளியான நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்ள தியேட்டரில் படம் பார்க்க 2 குழந்தைகளை அழைத்து சென்றார். தன் இரு குழந்தைகளிடம் பாத்ரூம் சென்று விட்டு வருவதாக கூறி விட்டு தியேட்டரை விட்டு வெளியே சென்றார்.
விறுவிறுவென உள்நாட்டு முனையம் வழியாக பன்னடுக்கு கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றார். அங்கு 4வது மாடிக்கு ஏறியவர் திடீரென கார் பார்க்கிங்கின் 4வது தளத்தில் இருந்து ஐஸ்வர்யா கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து விட்டார்.
அதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டிய மருத்துவமனையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வேல் மாவட்டத்தில் உள்ள அலம்பூர் நகரை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா.
விவசாயம் செய்து வரும் இவருக்கு பிரணவ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்துள்ளார். இதில் பிரணவ்க்கு தலையில் அடிபட்டு புருவத்தில் தசை கிழிந்துள் ரத்தம் கொட்டியுள்ளது.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அங்குள்ள ரெயின்போ மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கிருந்த மருத்துவர் ரத்தத்தை துடைத்து காயம் ஏற்பட்ட இடத்தில் தையல் போடுவதற்கு பதில் பெவிகுயிக்கை பூசி ஒட்டியுள்ளனர்.
மகனின் காயத்தில் தையல் இல்லாமல் ஒட்டப்பட்டிருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த பிரணவ்வின் தந்தை வம்சி தனது மகனை வேறொரு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவர்களிடம் நடந்ததை கூறிய நிலையில், அவரின் காயத்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் காயத்தை பெவிகுயிக்காய் வைத்து ஒட்டியதை கண்டு பிடித்து அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றவேண்டும் என்று வம்சியிடம் கூறியுள்ளனர். அதற்கு வம்சி ஒப்புக்கொண்டதும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரின் காயத்தில் இருந்த பெவிகுயிக்கை மருத்துவர்கள் அகற்றினர்.
இதன் பின்னர் தன் மகனுக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை வம்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். அதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் ரெயின்போ மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பளையில் காணாமல் போயுள்ள 22 வயது யுவதி பாத்திமா முனவ்வராவினுடையது என கூறப்படும் சடலம் சற்றுமுன் மீட்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இது தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கம்பளையில் காணாமல் போயுள்ள 22 வயது யுவதி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரது சடலத்தை தேடுவதற்கான நடவடிக்கை இன்று எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர் அடையாளம் காட்டிய இடத்தில் கம்பளை நீதவான் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கம்பளை பகுதியைச் சேர்ந்த 22 வயது யுவதியொருவர் கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த யுவதியை கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில், சம்பவம் தொடர்பில் கைதான 24 வயது சந்தேகநபர் நேற்றைய தினம் வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார்.
அந்த வாக்குமூலத்தில் குறித்த யுவதியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதுளை – கொஸ்லந்தை பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான இளம் ஜோடி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இளம் ஜோடி தங்கியிருந்த நிலையில் காட்டு யானை தாக்கி 23 வயதான தருஷி கவீஷா என்ற யுவதி உயிரிழந்திருந்தார்.
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த 23 வயதான தனுஷ்க என்ற இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், யுவதியின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.
நாங்கள் திருமணம் முடிக்கவில்லை. எனது காதலி மாத்தறை, குருநாகல் தாதியர் இல்லத்தில் கல்வி கற்று வருகின்றார்.நேற்று காலை குருநாகலிலிருந்து வந்து அப்புத்தளையில் உள்ள எனது நண்பரின் வீட்டிற்கு சென்று மதியம் மூன்று மணியளவில் மலைப்பகுதிக்கு சென்றோம்.
பிரதான வீதியில் இருந்து இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் சுத்தப்படுத்தப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்தோம். இரவு 10.30 மணியளவில் யானை வந்தது. சத்தம் இல்லாமல் கூடாரத்திற்குள் பதுங்கியிருந்தோம். யானை வரும் என்று நாங்கள் நினைக்கவில்லை.
உடனே வந்து கூடாரத்தை யானை மிதித்து விட்டு சென்றது. நாங்கள் இருந்த பகுதியில் தொலைபேசிக்கு சிக்னல் இல்லை. நண்பருக்கு அழைப்பினை மேற்கொள்ள பலமுறை முயற்சித்தேன். அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
கவீஷாவின் வயிற்றையும் நெஞ்சையும் பலமாக யானை மிதித்துவிட்டது. அவள் தண்ணீர் கேட்டு கஷ்டப்பட்டு பேசிக்கொண்டிருந்தாள்.எனது இடது கை உடைந்துவிட்டது. கையை குணப்படுத்த முடியுமா என்றும் கேட்டாள்.
இதன்பின்னர் மெதுவாக நகர்ந்து சென்று நண்பர்களுக்கு அழைப்பினை எடுத்தேன். சுமார் 11.59 மணியளவில், சிக்னல் கிடைத்ததும் யானை வருவதாக தெரிவித்தவுடன் அழைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வந்து பார்த்த போது அவள் உயிரிழந்துவிட்டாள். யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
அடுத்த நாள் ( 12.05.2023) காலை 6:30 மணியளவில், கிராம மக்களும் 1990 களில் வந்தவர்களும் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவள் என்னை விட்டுச்சென்றுவிட்டாள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் யுவதியை காட்டு யானை தாக்கியதில் நெஞ்சு மற்றும் வயிற்றில் பல இடங்களில் காயம் ஏற்பட்டமையினால் திடீர் மரணம் சம்பவித்துள்ளதாக பிரேத பரிசோதனையை மேற்கொண்ட சட்ட வைத்தியர் சானக ரொஷான் பத்திரன தெரிவித்துள்ளார்.
குறித்த ஜோடி நாட்டின் பல இடங்களுக்கு சென்று அந்தக் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருவதனால் பிரபல்யம் அடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இரத்தினபுரி, திரிவானாகெட்டிய பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் தம்பதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹவத்த ஓபாத பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய எஸ்.மோகன் ராஜ் மற்றும் புஷ்பிகா ஹர்ஷனி தம்பதியே உயிரிழந்துள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மாதங்களோயான நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக இரத்தினபுரி மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
நேற்று காலை ஏழு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், அவர்கள் இருவரும் இரத்தினபுரி திரிவானாகெட்டிய விகாரைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் தனியார் பேருந்தை முந்திச் செல்லச் முயன்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் மோதிய டிப்பர் வண்டியின் சாரதி 40 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள உடவல பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த இருவரின் பிரேத பரிசோதனை இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் இளம் குடும்பப் பெண் உள்ளிட்ட இருவரின் சடலங்கள் இன்று (13.05) காலை மீட்கப்பட்டுள்ளதாக பறையனாலங்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கிராம மக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த இரு சடலங்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. வவுனியா, நீலியாமோட்டைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளம் குடும்ப பெண் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் வாசல் பகுதியில் இடியன் துப்பாக்கி சூட்டு காயத்துடன் இளைஞர் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் இடியன் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்பட்டுள்ளது.
சம்பவத்தில் நீலியாமோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பிள்ளை ஒன்றின் தாயாரான நியூட்டன் தர்சினி (வயது 26), சிவபாலன் சுஜாந்தன் (வயது 24) ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பறையானாலங்குளம் பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.