இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு இளம் பெண்ணின் மரணம்!!

கண்டியில்..

கண்டியில் நேற்று(11.03.2023) சடலமாக மீட்கப்பட்ட இளம் குடும்ப பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அலவத்துகொட பகுதியை சேர்ந்த 26 வயதான தனுக வதுவந்தி என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியிலுள்ள வயல்வெளியில் புதைந்திருந்த நிலையில் பொலிஸார் சடலத்தை மீட்டனர். குறித்த பெண் காணாமல் போனமை தொடர்பில் உயிரிழந்தவரின் தாய்க்கு கணவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டது. பொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவருடன் சேர்ந்து கடை ஒன்றை நடத்தி வந்தமை தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 9.50 மணியளவில் கணவர் இறுதி சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதாக கூறி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். பின்னர், அதிகாலை 2 மணியளவில் வீடு திரும்பியதாக பொலிசார் தெரிவித்தனர்.

காலையில் இருவரும் வசித்த வீட்டின் பக்கத்திலிருந்து அலறல் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். இது கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

பணத்திற்காக கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட ஒன்றரை வயது குழந்தை.. விசாரணையில் வெளியான தகவல்!!

இலங்கையில்..

பணத்திற்காக ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பக்கமூன தர்கல்லேவ, கமஎல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சித்திரவதைக்கு உள்ளான ஒன்றரை வயது சிறுமி தனது பாட்டியின் பராமரிப்பில் வெயாங்கொடையில் உள்ள வீடொன்றில் வசித்து வந்துள்ளார்.

அங்கிருந்து பக்கமுன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அவரது தந்தை அழைத்துச் சென்றுள்ளார். இதன்போது சிறுமியை தடி மற்றும் கைகளால் கொடூரமாக தாக்கி, அதனை காணொளியாக பதிவு செய்து வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி பணம் கேட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர் ஹிங்குராகொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சித்திரவதைக்கு உள்ளான சிறுமியை பாதுகாப்பிற்காக பாட்டியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யாழில் டிக்டொக்கில் மலர்ந்த காதல்.. காதலனை பார்க்க சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!!

யாழில்..

யாழில் டிக்டொக் செயலி மூலம் காதல் வயப்பட்டு சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு தேடி சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. அச் சிறுமி திருகோணமலைக்குச் சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவில் அண்மையில் பதிவாகியுள்ளது. மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ரிக்ரொக் செயலி மூலம் மலர்ந்த காதல் காரணமாக காதலனைச் சந்திப்பதற்கு திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.

அங்கு காதலன் வருகை தராத நிலையில் அநாதரவாக சிறுமி மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலனை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இலங்கையில் ஒரே வாரத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்!!

இலங்கையில்..

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஒரு வாரத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், ஒரு தங்கப்பவுணின் விலை சுமார் 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக, விலைமதிப்பற்ற உலோகங்கள் பகுப்பாய்வு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக்க பண்டார தெரிவித்தார்.

39,000 ரூபாவினால் குறைவடைந்தது தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் நகைக்கடைகளில் நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க டொலரின் பெறுமதி குறைவடைந்துள்ளதன் காரணமாக, உலக தங்கத்தின் விலையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை தெரிவித்தது.

கோவிட் தொற்று உலகளவில் ஏற்படுத்திய கடும் பாதிப்பு, மற்றும் உக்ரைன் – ரஷ்யப் போரினால் உலகின் பொருளாதாரம் பெரும் சரிவைக் கண்ட நிலையில், தங்கம் தாறுமாறாக விலை ஏறியதுடன், கடந்தகாலத்தில் நடுத்தர மக்களுக்கு தங்கம் வாங்குவது எட்டாக்கனியாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதுடன், 24 கரர்ட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,517 ரூபாவுக்கு விற்பனையானது.

வவுனியாவில் கடந்த 5 நாட்களில் 6 மரணங்கள் பதிவு : நால்வர் கைது!!

வவுனியாவில்..

வவுனியா மாவட்ட மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் 6 அகாலமரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நான்கு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா குட்செட் வீதியிலுள்ள உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த 07.03.2023 அன்று காலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்களாக மீட்கப்பட்டதுடன்,

குறித்த சம்பவத்தில் வீட்டின் குடும்பஸ்தர் சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன் அவரது மனைவியான கெ.வரதராயினி (வயது36),

இரு பிள்ளைகளான கெ.மைத்ரா (வயது9) , கெ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கிய படியும் சடலமாக மீட்கப்பட்டதுடன் இவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் அவர்களின் உடற்கூற்று பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையினர் தெரிவித்தனர்.

வவுனியா பூவரசங்குளம் மணியர்குளத்தின் அணைக்கட்டினை அண்மித்த பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 09.03.2023 கழுத்து பகுதியில் வெட்டுக்காயங்களுடன் நித்தியநகர் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய சக்திவேல் யசோதரன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன்,

குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இது மது போதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை பூவரசங்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வவுனியாவில் பிரபல வைத்தியரின் வீட்டின் அவரது மகன் செந்தில்காந்தன் லக்சிகன் (வயது 26) நேற்று 10.03.2023 மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இவ்வாறு தொடர்ச்சியாக நிகழ்ந்த மரணங்களின் அடிப்படையில் மாவட்டத்தில் கடந்த 5நாட்களில் 6 அகாலமரணங்கள் பதிவாகியுள்ளதுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மரணம் : பொலிசார் வெளியிட்ட தகவல்!!

நால்வர் மரணம்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் மரணம் தொடர்பில் பகுப்பாய்வு அறிக்கை வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும் என வவுனியா பொலிசார் இன்று (11.03) தெரிவித்துள்ளனர்.

வவுனியா, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த செவ்வாய்கிழமை (07.03) காலை தம்பதிகள் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.

சிவபாலசுந்தரம் கௌசிகன் என்ற 42 வயதுடைய நபர், அவரது மனைவி 36 வயதுடைய கௌசிகன் வரதராஜினி மற்றும் மகள்களான 09 வயதுடைய கௌசிகன் மைதிரா மற்றும் 03 வயதான கௌசிகன் கேசரா ஆகியோரின் சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர்.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனை புதன்கிழமை (08.03) இரவு மேற்கொள்ளப்பட்ட போதிலும், மரணத்திற்கான சரியான காரணம் வெளியாகவில்லை. ஆனால் அவர்கள் நஞ்சு அருந்தவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணை திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் முடிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறும். அதன் முடிவுகள் வந்த பின்னரே மரணத்திற்கான காரணத்தை கூற முடியும்.

குறித்த சம்பவம் தொடர்பில் சிசீரீவி காட்சிகள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

சேற்றுப் பகுதியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்.. நெஞ்சு பதைபதைக்கும் பரபரப்பு சம்பவம்!!

கண்டியில்..

கண்டியில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் இன்று (11) காலை பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படு வருகின்றது.

தாயின் 25 வருட கனவை நிறைவேற்றிய மகள் : இன்ப அதிர்ச்சியில் கண் கலங்கிய தாய்!!

தாய்..

இந்த உலகத்தில் தாய், தந்தையரை போல ஒருவர் மீது அன்பு காட்டும் ஆட்கள் யாருமில்லை. தங்களது பிள்ளைகள் வாழ்வில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என்பதற்காக தங்களின் வாழ்வில் நிறைய தியாகங்களை செய்து அவர்களை முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்று உழைக்கவும் செய்வார்கள்.

அதே போல, தங்களின் பெற்றோரின் தியாகங்களால் பல கடின உழைப்புகளுடன் வாழ்வில் முன்னேறும் பலரும், ஏணியாக இருந்து தங்களை உயர்த்தி விட்ட பெற்றோரை இன்னும் அழகு பார்க்க அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை செய்வதோ அல்லது அவர்கள் வாழ்வில் அனுபவம் செய்யாத விஷயங்களை சர்ப்ரைஸாக செய்து ஆனந்தப்படுத்தவோ செய்வார்கள்.

இந்த உலகில் நமது பெற்றோர்களுக்கு நல்ல விஷயங்களை செய்வதை விட யாருக்கு செய்து அழகு பார்க்க போகிறோம். அந்த வகையில் இளம் பெண் ஒருவர் தனது தாயின் 25 வருட கனவை நிறைவேற்றியது தொடர்பான வீடியோ பலரையும் மனமுருக வைத்து வருகிறது.

இது தொடர்பான வீடியோவில் அந்த இளம் பெண் தனியாக நகைக் கடைக்கு செல்கிறார். அங்கே தனது தாய்க்காக தங்க மாட்டல் ஒன்றை வாங்குகிறார். 25 வருடமாக அந்த இளம்பெண்ணின் தாயார் தங்க மாட்டல் அணிய வேண்டும் என்றும் கனவு கண்டுள்ளார்.

ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண்ணின் தந்தையால் அது நிறைவேறாமல் போயிருந்தது. இதனால், அதனை நிறைவேற்றவும் அந்த மகள் முடிவு செய்து தங்க மாட்டலை வாங்கி மிகவும் சர்ப்ரைஸாக தனது தாயிடம் காட்டவும் செய்கிறார்.

தொடர்ந்து அந்த பெட்டியை திறப்பது வரை உள்ளே என்ன இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவரது தாய் முகத்தில் இருந்த சூழலில் அதனை திறந்து பார்த்து தங்க மாட்டல் இருப்பதை அறிந்ததும் அந்த தாயின் ரியாக்ஷன் தற்போது பலரையும் மனம் கலங்க வைத்தும் வருகிறது.

25 வருடமாக தன்னால் நிறைவேறாமல் போன விஷயத்தை தனது மகள் நிறைவேற்றியதை அறிந்ததும் அவரைக் கட்டி அணைத்துக் கொண்டு முத்தம் கொடுக்கவும் செய்கிறார் அந்த தாயார்.

‘என்னால இந்த நகையை போடவே முடியல, கடைக்கு போய் பாத்துட்டு வந்துருவேன்’ என கண்ணீருடன் அவர் தெரிவிக்கும் சூழலில் அவரை கட்டியணைத்து மற்றொரு பக்கம் கண்ணீருடன் தேற்றவும் செய்கிறார் அவரது மகள்.

தனது தாய் மற்றும் தந்தை ஆகியோர் தான் படிப்பதற்கும், தான் வாழ்வதற்கும் பல்வேறு தியாகங்களை செய்துள்ள சூழலில், தனது தாயாருக்காக தன்னுடைய சொந்த பணத்தில் தங்க நகை வாங்கி கொடுத்துள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் அந்த மகள் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் பிரபல மருத்துவரின் மகன் தவறான முடிவெடுத்து மரணம்!!

செந்தில்காந்தன் லக்சிகன்..

வவுனியாவில் பிரபல மருத்துவர் ஒருவரின் மகன் தவறான முடிவெடுத்து மரணமடைந்தார். குறித்த இளைஞர் நேற்றையதினம் மாலை நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (10.03.2023) மரணமடைந்தார். சம்பவத்தில் செந்தில்காந்தன் லக்சிகன் என்ற 26 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

2016ம் ஆண்டு உயர்தர விஞ்ஞானப் பிரிவில் 3A எடுத்து மாவட்ட மட்டத்தில் முதல் நிலை பெற்று மருத்துவபீடத்துக்கு தெரிவாகியிருந்தார். வவுனியாவில் தொடர்ச்சியாக தற்கொலை மரணங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரீல்ஸ் மோகத்தால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. தொடரும் சோகம்!!

மகாராஷ்டிராவில்..

இன்றைய இளைய தலைமுறை எதற்கெடுத்தாலும் ரீல்ஸ், கொண்டாட்டங்கள் மட்டுமல்ல , இந்த மோகம் விபத்து நடைபெறும் இடங்கள், மருத்துவமனைகள், துக்க வீடு வரை தொடர்கிறது.

இதனால் பல நேரங்களில் அசம்பாவிதங்கள், பேராபத்துக்கள் நிகழ்ந்து விடுகின்றன. இருந்தாலும் இதனை இன்றைய இளைஞர்கள் கருத்தில் கொள்வதே இல்லை. ரீல்ஸ் மோகத்தால் உயிரைவிட்ட சம்பவம் ஒன்று மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள ஹதப்சார் என்ற பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை (மார்ச் 6 ) மாலை 5 மணி அளவில் அயன் ஷேக், சையத் ஜாவித் ஷேக் என்ற இளைஞர்கள் சாலையில் பைக் ஓட்டி சாகச செயல்களில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த பைக் சாகசங்களை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோவுக்காக அவர்கள் எடுத்து வந்துள்ளனர். மக்கள் வந்து செல்லும் என்ற சாலை என்று எண்ணாமல் அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசத்தில் அவர்கள் ஈடுபட்ட நிலையில், அந்த சாலையில் பெரோஸ் பதான் (31) என்ற பெண் ஸ்கூட்டியில் வந்துள்ளார்.

அப்போது ரீல்ஸ் வீடியோ செய்து கொண்டிருந்த ஆர்வத்தில் பெண் வருவதை கவனிக்காமல் பெண்ணின் ஸ்கூட்டி மீது இருவரும் தங்களின் பைக்கை வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

இதில் பெரோஸ்சின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து இரு வாலிபர்களும் பயந்து தப்பியோடியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, அயன் ஷேக், ஜாவித் ஷேக் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளியலறையில் ப.ரி.தாபமாக இ.ற.ந்.து கி.ட.ந்.த பு.து.ம.ண.த் த.ம்.ப.தி : போ.லீஸ் தீ.வி.ர வி.சா.ர.ணை!!

மும்பையில்..

மு.ம்.பை, கா.ட்.கோ.ப.ர் கி.ழ.க்.கு.ப் ப.கு.தி.யி.லு.ள்.ள ப.ந்.த் ந.க.ரி.ல் அ.டு.க்.கு.மா.டி.க் கு.டி.யி.ரு.ப்.பி.ல் வ.சி.த்.த.வ.ர் தீ.ப.க் ஷா. இ.வ.ரி.ன் ம.னை.வி தீ.னா. இ.வ.ர்.க.ள் இ.ர.ண்.டு பே.ரு.ம் பா.த்.ரூ.மி.ல் நி.ர்.வா.ண.மா.க ம.ய.ங்.கி.ய நி.லை.யி.ல் இ.ற.ந்து. கி.ட.ந்.த.து க.ண்.டு.பி.டி.க்.க.ப்.ப.ட்.ட.து.

வீட்டு வேலைக்காரப் பெண் வந்து பார்த்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அந்தப் பெண் தீனாவுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. அதேசமயம் போன் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து வந்தது. உடனே சந்தேகமடைந்த வேலைக்காரப் பெண், தீபக்கின் தாயாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

தீபக்கின் தாயார் அதே கட்டடத்தில் வசிக்கும் தன்னுடைய உறவினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே அந்த உறவினர் தன்னிடமிருந்த மாற்றுச் சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்து பார்த்தபோது, பாத்ரூமில் இருவரும் நிர்வாணமாக மயங்கிய நிலையில் கிடந்தனர்.

உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டார். அவர் வந்து பார்த்து இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து இருவரின் உடல்களும் ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால் என்ன காரணத்தால் இருவரும் இறந்தனர் என்பது குறித்து டாக்டர்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. உடல் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

பாத்ரூமிலிருந்த தண்ணீரைச் சுடவைக்கப் பயன்படும் கைஸரிலிருந்து வெளியான வாயு காரணமாக இறந்தார்களா அல்லது இருவரும் வயாகரா அல்லது ஹோலி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் பாங் எனப்படும் ஒரு வகை பானம் குடித்ததால் இறந்தார்களா என்ற குழப்பம் இருந்துவருகிறது. போலீஸார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்.. இளைஞன் எடுத்த விபரீத முடிவு!!

தென்காசியில்..

காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனமுடைந்த சேர்மன் தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்த நாடார்பெட்டி காமராஜர் தெருவை சேர்ந்தவர் பால சுப்பிரமணியன். இவரது மகன் சேர்மன்(25). இவர் பேவர் பிளாக் கல் பதிக்கும் கூலித் தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்று உள்ளார். பின்னர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர் மகனை தொடர்பு கொள்ள முயற்சித்தும் தொடர்பு கொள்ள முடியாததால் பல இடங்களில் அவரை தேடியுள்ளனர்.

ஆனால் அவர் கிடைக்காத நிலையில் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் சேர்மன் ஊர் அருகே உள்ள ஒரு மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய படி பிணமாக தொங்கி உள்ளார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் பாவூர்சத்திரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்டது பாலசுப்பிரமணியனின் மகன் சேர்மன் என்பதும் தெரிய வந்ததையடுத்து பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் இறந்து போன சேர்மன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அதனை வீட்டில் கூறியதாகவும் தெரிகிறது.

ஆனால் அவரது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் மனமுடைந்த சேர்மன் தற்கொலை செய்து இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இது மட்டும் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

வவுனியாவில் காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு : நால்வர் அதிரடியாக கைது!!

நால்வர் கைது..

வவுனியா மணியர்குளம் குளப்பகுதியில் இருந்து காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டது. வவுனியா பூவரசங்குளம் மணியர்குளம் குளப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் இருப்பதாக,

பூவரசங்குளம் பொலிசாருக்கு நேற்று (09.03.2023) இரவு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞரின் சடலத்தில் காயங்கள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இது மதுபோதையில் நிகழ்ந்த கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில் பூவரசங்குளம் நித்தியநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் யசோதரன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எட்டாம் வகுப்பு மாணவன் தற்கொலை… கதறும் தாய்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

நெல்லையில்..

பள்ளி மாணவ, மாணவிகள் பாதை மாறுவதற்கு செல்போன்கள் முக்கிய காரணமாக உள்ளது. ஆன்லைன் படிப்பிற்காக அவர்களது கைகளில் பெற்றோர்களே செல்போனை கொடுக்க நிர்பந்தம் ஏற்பட்டு தற்போது அந்த செல்போனைகள் இல்லாமல் அவர்களுக்கு பொழுதே போகாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பத்தாத குறைக்கு கேம்ஸ்களும், இன்ஸ்டாகளும் அவர்களை அடிமையாக்கி வருகின்றன. இந்த தாக்கத்தால் ஏற்படும் மன உளைச்சலில் சிறார்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தமிழகத்தில் அவ்வப்போது நிகழ்வது பெரும் துயரமாக உள்ளது.

நெல்லை டவுன் தைக்கா தெருவை சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு தருண் (வயது 13) என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மைக்கேல்ராஜ் உயிரிழந்த நிலையில் தாய் மேரி தனியார் நிறுவனத்தில் பணி செய்து தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த தருண், திடீரென அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான். உடனே தாய் மேரி மகனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தருண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் தருணுக்கும், அவரது சகோதரிக்கும் இடையே செல்போன் பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் கோபம் அடைந்து தருண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொழும்பில் காதலடனுன் சேர்ந்து இளம் பெண் செய்த மோசமான செயல்!!

கொழும்பில்..

பொரளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 28 வயதுடைய பெண்ணுக்கு சொந்தமான வீடொன்று பண மோசடியின் கீழ் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவரது கணக்கில் உள்ள 2 கோடி ரூபாயும், காதலன் கணக்கில் இருந்த 8 கோடி ரூபாயும், குறித்து குற்ற விசாரணை பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு கிலோ 225 கிராம் ஹெரோயின் மற்றும் 868,900 ரூபாய் பணத்துடன் 2021 ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இளம் பெண் மற்றும் அவரது காதலனிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. மிரிஹான ரஜமஹா விஹார மாவத்தையை சேர்ந்த தினேஷ் ஹர்ஷ ரணசிங்க மற்றும் அவரது காதலி என கூறப்படும் பொரளை சர்ப்பன் வீதியை சேர்ந்த அருணி நடிஷிகா ஆகியோரிடம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய,, 2021 ஜனவரி 06 ஆம் திகதி வெலிவேரிய, கிரிக்கித்த பிரதேசத்தில் வீடுடன் கூடிய காணியொன்றை 5,700,000 ரூபாவிற்கு அருணி கொள்வனவு செய்திருந்தமை தெரியவந்துள்ளது.

அத்துடன், சந்தேக நபரின் பெயரில் பல வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள சுமார் 2 கோடி ரூபாயும், சந்தேக நபரின் காதலனின் பெயரில் வங்கிக் கணக்குகளில் சுமார் 8 கோடி ரூபாயும் வைப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த காணி மற்றும் வீட்டை கொள்வனவு செய்வதற்கு சந்தேகநபர் எவ்வாறு பணம் சம்பாதித்தார் என்பதை நிரூபிக்க தவறியதன் பேரில், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மஹர பிரதேச செயலாளர் இந்த வீட்டின் பெறுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 வயதுடைய பெண் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வெலிவேரிய பகுதியில் அவர் வாங்கியதாக கூறப்படும் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வீட்டின் பூட்டை உடைத்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இரவில் வேலை முடித்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த யுவதிக்கு நேர்ந்த கொடுமை!!

பாணந்துறையில்..

வாதுவ பகுதியில் வேலை முடித்து வீட்டுக்கு கால்நடையாக வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 18 வயதான யுவதியை, தமது வாகனத்தில் ஏற்றிச் சென்று கூட்டு வன்புணர்விற்கு உள்ளாக்கிய நபர்களை பொலிசார் தேடி வருகின்றனர்.

பாணந்துறை பகுதியிலுள்ள கடையொன்றில் பணிபுரியும் யுவதி இரவு நேரம் பணி முடிந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது யுவதியை வீடு வரை தமது வாகனத்தில் ஏற்றிச் செல்வதாக சிறிய லொறி ஒன்றில் வந்தவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து யுவதி லொறியில் ஏறியுள்ளார். பின்வத்தை நோக்கி லொறி சென்று கொண்டிருந்த போது, ​​தான் இறங்க விரும்புவதாக யுவதி கூறிய நிலையில் அதனை செவி மடுக்காது , வாகனத்தை நிறுத்தாமல் வாதுவ பிரதேசத்தில் உள்ள ஆட்களற்ற தோட்டத்திற்கு கொண்டு சென்ற யுவதியை கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

ஆபத்தான நிலையில் இருந்த யுவதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட யுவதியின் தாயார் சிறையில் இருப்பதால் தனது பாட்டியின் பராமரிப்பில் இருப்பதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்களை தான்னால் அடையாளம் காட்டமுடியுமென யுவதி தெரிவித்தாக கூறும் பாணந்துறை தெற்கு பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.