அமெரிக்காவின் தென்மேற்கு சட்டக்கல்லூரியில் கல்வி கற்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த டிலான் மஹேன் குணரத்ன 2023 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிறந்த சட்டக் கல்லூரி மாணவருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
‘தென்மேற்கு சட்டக் கல்லூரியின்’ பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான விசேட உரையொன்றை ஆற்றுவதற்கு டிலான் மகேன் குணரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
அதன்போது தென்மேற்கு சட்டக் கல்லூரியில் சிறப்புரை ஆற்றுவதற்கு இலங்கையின் சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
கனடாவில் பிறந்த டிலான் மஹேன் குணரத்னவின் பெற்றோர் இலங்கையர்கள். டிலான் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கால் ஸ்டேட் யுனிவர்சிட்டியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
அதன்பிறகு கனடாவின் டொராண்டோவில் ‘ஒய்டிவி’ சனலில் பணியாற்றினார். 75,000 அமெரிக்க டொலர் உதவித்தொகையை பெற்று ‘தென்மேற்கு’ சட்டக்கல்லூரியில் நுழைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
வீட்டிருந்து புறப்பட்ட யுவதி ஐந்து நாட்களாக காணவில்லை என கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காணாமல் யுவதியை, கம்பளை, வெலிகல்ல, எல்பிட்டிய, மகாவலி கங்கை, இவர உள்ளிட்ட காட்டுப்பகுதிகளில் கிராமத்தவர்கள், கம்பளை பொலிஸார் இணைந்து தேடிவருகின்றனர்.
எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா முனவுவரமா என்ற யுவதியே காணாமல் போயுள்ளார். அந்த யுவதி, கெலிஓயா நகரிலுள்ள பாமசியில் பணியாற்றுக்கின்றார் என அந்த யுவதியின் சகோதரர் மொஹமட் இம்ரான் தெரிவித்தார்.
வீட்டிலிருந்து பயணவைத்து நடந்துச் செல்லும் காட்சி, எல்பிட்டிய பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளது. அதன்பின்னர் எந்தவொரு கமெராக்களிலும் அந்தக் காட்சி பதிவாகவில்லை. அவரை கண்டவர்கள் யாரும் இல்லையெனவும் சகோதரன் தெரிவித்துள்ளார்.
பணியாற்றும் இடத்துக்குச் செல்வதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) வீட்டிலிருந்து புறப்பட்டு, பஸ்ஸூக்காக மட்டும் தன்னிடம் 100 ரூபாயை வாங்கிச் சென்றார் என்றும், தன்னுடனும் வேறு எவருடனும் எவ்விதமான மனஸ்தாபங்களும் இல்லையென்றும் மாயமான யுவதியின் தாய் கூறியுள்ளார்.
தென்னிலங்கையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தியகமவில் இடம்பெற்ற இளையோருக்கான மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவர் இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.
மேலும், வல்வெட்டித்துறை பொலிகண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த செல்வகுமார் செவ்வானம் 2 பதக்கங்களை வென்றார். 18 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பரிதிவட்டம் எறிதலில் தங்கப்பதக்கமும் சம்மட்டி எறிதலில் வௌ்ளிப்பதக்கத்தை வெற்றிகொண்டார்.
இதேவேளை, மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யாழ். மாணவி பயன்படுத்தும் தரமற்ற நிலையில் இருந்த சம்மட்டியை கொட்டாவ வடக்கு தர்மபால மகா வித்தியாலய மாணவியான சனுமி தில்தினி பெரேராவும் அவரது பயிற்சியாளரும் அவதானித்துள்ளனர்.
இதையடுத்து யாழ்ப்பாண மாணவிக்கு குறித்த சிங்கள மாணவி உயர் ரக சம்மட்டி ஒன்றை அன்பளிப்பாக வழங்கியதுடன், வெற்றி பெற வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பல்வேறு இனவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வரும் நிலையில் இவ்வாறான செயற்பாடு பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட ஆசிரியரொருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
களுத்துறையில் உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகளை கொண்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் குறித்த மாணவி உயிரிழந்த தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில், மாணவியின் தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்ட ஆசிரியர் ஒருவர் நேற்று (10.05.2023) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது “குறித்த மாணவியை தனக்கு நன்கு தெரியும் என ஆசிரியர் கூறியதாகவும், விசாரணையில் மாணவி தொடர்பான பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும், என்றபோதும் விசாரணையின் ரகசியத்தன்மை காரணமாக அந்த தகவல்கள் அனைத்தும் தற்போது வெளியிடப்பட மாட்டாது என்றும்” பொலிஸார் கூறியுள்ளனர்.
அதேவேளை பலர் மாணவிக்கு தொலைபேசி மூலம் அழைப்பை மேற்கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் மாணவியின் தொலைபேசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தர்ப்பத்தில், இந்த சம்பவம் தொடர்பில் மாணவி தங்கிய விடுதியின் உரிமையாளரினது மனைவி இன்று (11.05.2023) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியமைக்காகவும், சிறுமிக்கு தங்குமிடங்களை வழங்குவதற்கு முன்னர், அவரது அடையாள அட்டை உள்ளிட்ட விபரங்களைச் சரிபார்க்க தவறியதற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வவுனியா செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள குருமடம் ஒன்றில் தங்கி கல்வி கற்று வந்த மன்னார் முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் காணாமல் போன நிலையில் நேற்றையதினம் அனுராதபுரத்தில் மீட்கப்பட்டுள்ளார்.
செட்டிக்குளம் மாங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த இரு மாணவர்களும் துவிச்சக்கர வண்டியில் பாடசாலைக்கு சென்று வருவது வழமை கடந்த திங்கட்கிழமை பழுதடைந்த துவிச்சக்கர வண்டிக்கு டயர் வேண்டுவதற்காக சென்றவர்கள் நீண்ட நேரமாகியும் விடுதி திரும்பவில்லை
அதன் பிறகு இரவு எட்டு மணியளவில் குறித்த விடுதியின் காப்பாளர் காணாமல் போன மாணவனின் (மன்னார் முத்தரிப்புத்துறை) பெற்றோருக்கு தொடர்பு எடுத்து மகன் வீட்டுக்கு வந்தாரா என்று கேட்டுள்ளனர். குறித்த பெற்றோர்கள் ஏதேனும் பிரச்சினையா என்று கேட்ட போது விடுதி காப்பாளர்களால் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக விடுதி பங்குத் தந்தையர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதுடன் சமூக வலைத்தளங்களிலும் இவ் இரு மாணவர்களினது புகைப்படங்களும் பகிரப்பட்டன.
இந்நிலையில் இரண்டு நாட்களின் பின்னர் நேற்றையதினம் இவ் இரு பாடசாலை மாணவர்களும் அனுராதபுரம் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். எனினும் இவர்களை யாரேனும் கடத்திச்சென்றார்களா அல்லது அவர்களவே சென்றனரா போன்ற விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மினுவாங்கொடை ஓபாத்த பிரதேசத்தில் காதலனால் கடத்தப்பட்டதாக கூறப்படும் 15 வயது சிறுமி தனது தாயாருக்கு காணொளி அழைப்பொன்றை அனுப்பி தான் கடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமி வெளியிட்ட காணொளியில், “என்னை கடத்தி விட்டதாக செய்திகள் வெளியானது. எனினும் அதில் உண்மையில்லை. நான் விரும்பியே காதலனுடன் சென்றேன்.முதலில் இரு வீட்டாரும் என் உறவை விரும்பினர். பிறகு அம்மாவுக்கு பிடிக்கவில்லை.
22 வயதுக்கு மேற்பட்ட ஒருவரை திருமணம் செய்து வைக்க அம்மா நினைத்தார். பிடிக்காததால் சண்டை போட்டேன். நான் இந்த பயணத்தை விருப்பத்துடனே வந்தேன். நாங்கள் இருவரும் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களை வாழ விடுங்கள்” என வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோவை அவர் முக்கிய ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தாய் வெளியிட்ட காணொளியில் கடத்தல் தொடர்பான சிசிடிவி காணொளியும் இடம்பெற்றுள்ளது. 15 வயதுடையவர் இன்னமும் சிறுமி, என்பதால் அவர் திருமணம் தடை செய்யப்பட்டதாகும்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறுகையில், “கடத்தல் தொடர்பில் தாய் மாத்திரம் ஊடகங்களுக்கு முறைப்பாடு செய்ததாகவும், ஆனால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் இருவரும் விரும்பியே சென்றதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்” என அவர் கூறியுள்ளார்.
ராஜபாளையம் அருகே கொடுக்காப்புளி பறிக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள எஸ்.ராமலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சிங்கராஜ். இவருடைய மகன் சிவபிரசாத் (வயது 12). இவர் அருகேயுள்ள சிவகாமிபுரம் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, ஏழாம் வகுப்புக்குச் செல்லவிருந்தார்.
இந்த நிலையில், பள்ளிக் கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மாவட்டம், பருவக்குடியை அடுத்த பால்வண்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமராஜ் என்பவரின் மகன் சரண் (8) விடுமுறையைக் கொண்டாட உறவினரான சிங்கராஜின் வீட்டுக்கு வந்திருக்கிறார்.
வழக்கம்போல சிவபிரசாத்தும் சரணும் அந்தப் பகுதியைச் சேர்ந்த மேலும் சில நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். விளையாட்டின்போது அச்சங்குளம் கண்மாய்க்குச் செல்லும் ஓடைக்கரையிலிருந்த மரத்தில் ஏறி சிறுவர்கள் கொடுக்காப்புளி பறித்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராதவிதமாக சிவராஜ், சரண் ஆகியோர் தவறி ஓடைக்குள் இருந்த கிடங்கில் விழுந்திருக்கின்றனர். சிறுவர்கள் இருவரும் கிடங்கிலிருந்து வெளிவர முடியாமல் தவித்திருக்கின்றனர்.
உடன் சென்ற நண்பர்களுக்கும் நீச்சல் தெரியாததால், ஊருக்குள் சென்று உறவினர்களை அழைத்து வந்திருக்கின்றனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் இருவரும் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்ந்து உறவினர்கள்வந்து நீரில் மூழ்கிக்கிடந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவர்கள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தத் தகவலறிந்ததும் சிவராஜ் வீட்டைச் சுற்றிலும் உறவினர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் எஸ்.ராமலிங்காபுரம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அந்த காலத்தில் எல்லாம் அசால்ட்டாக 10 , 15 பிள்ளைகளை வளர்த்தனர். கூட்டுக்குடும்பமாக இருந்த அன்றைய வாழ்க்கையில் தாத்தா, பாட்டி, அத்தை, சித்தி, சித்தப்பா, மாமா என யாராவது ஒரு உறவினர் குழந்தைகளை பார்த்துக் கொள்வர்.
ஆனால் இன்றைய வாழ்க்கை முறையில் பெற்றோர் இருவரும் பணிக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் குழந்தை வளர்ப்பு என்பது பெரும் சவாலாகியுள்ளது. என்ன தான் கவனித்தாலும் கண் அசந்த நேரத்தில் விபரீதங்களும் , அசம்பாவிதங்களும் ஏற்பட்டு விடுகின்றன.
குழந்தைகளை வீட்டு வாயிலில் விளையாட விட்டு உள்ளே வேலையாக இருந்த தாய் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது இரு குழந்தைகளுமே சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பூலாகுட்டை கிராமத்தில் வசித்து வருபவர் மாதப்பன்.இவர் சென்னையில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சந்திரிகா.
இவர்களுக்கு 5 வயதில் ஸ்ரீநிகா மற்றும் 3 வயதில் அனிருத் என இரு குழந்தைகள். இவர்கள் இருவரும் மாலையில் வீட்டின் வாயிலில் விளையாடிக்கொண்டிருந்தனர். எதிர்பாராத விதமாக அருகே இருந்த ஊர் கிணற்றில் தவறி இரு குழந்தைகளும் விழுந்துவிட்டன.
ஒரு மணி நேரமாக தாயார் சந்திரிகா அவர்களை தேடவில்லை. அதன் பிறகு தேடிய போது அக்கம் பக்கத்தில் விசாரித்தார். யாரும் பார்க்கவில்லை. இரு குழந்தைகளும் கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வந்ததையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் தேடிப் பார்த்ததில் இரு குழந்தைகளும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். மிதந்துள்ளனர்.
இரு குழந்தைகளையும் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு குழந்தைகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தந்தை இழந்த சோகத்தோடு தேர்வு எழுதிய மாணவி, 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 472 மதிப்பெண்கள் பெற்று அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.
கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில், படித்த கிரிஜா என்ற 12ஆம் வகுப்பு மாணவி கடந்த ஏப்ரல் 3ஆம் திகதி வேதியியல் தேர்வு எழுதினார்.
அன்று அதிகாலை கிரிஜாவின் தந்தை ஞானவேல் திடீரென உடல் நலக்குறைவால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தந்தை இறந்த அன்றே தன் அவரது கனவை நிறைவேற்றுவேன் என கூறிய கிரிஜா தேர்வு எழுத சென்றுள்ளார்.
இந்த செய்தி பரவ பலரும் கிரிஜாவின் செயலை பாராட்டினர். இதனை தொடர்ந்து இன்று தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவுகள் வெளியான நிலையில், மாணவி கிரிஜா 479 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதை பற்றி அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் கிரிஜாவின் உறவினர்கள், அவரை ஆரத்தழுவி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கிரிஜா, தனது தந்தை என்னை சிறந்த கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என நினைத்தார்,
நான் அவரது கனவை நிறைவேற்றுவேன் என கூறியுள்ளார். தனது தந்தை உயிரிழந்த பின்னும், சடலத்தை வீட்டில் விட்டு விட்டு தேர்வு எழுத சென்ற கிரிஜாவின் தைரியத்தை, அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் 108 கும்ப சங்காபிசேகம் இன்று (10.05) சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியா வடக்கு, ஓலுமடு, வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் கடந்த பங்குனி மாதம் இறுதிப் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக கடந்த மாதம் 28 ஆம் திகதி மீளவும் தெய்வ திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு, தொடர்ச்சியாகப் பன்னிரெண்டு நாட்கள் பூசை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.
அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (10.05) 108 கும்ப சங்காபிசேகம் சிறப்பாக இடம்பெற்றது. இதில் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
களுத்துறை ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகநபர் கூறியதாக விசாரணை நடத்திய மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தன்னுடன் இருந்த போது தனக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்ததாகவும், “இன்று வீட்டுக்கு சென்றால் கதை முடிந்துவிடும்” என்று கூறிவிட்டு ஓடி சென்று குதித்துவிட்டதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சந்தேகநபரின் வாக்குமூலத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், பல பிரிவுகள் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பின்னர், சந்தேக நபர் குறித்த ஹோட்டலில் தங்கியிருப்பதாக தனியார் உளவாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் பல உத்திகளை கையாண்டுள்ளனர்.
அதற்கமைய, சந்தேக நபர் ஹிக்கடுவையில் இருந்து வாடகை அடிப்படையில் கார் ஒன்றைப் பெறுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, பொலிஸார் ஒரு உளவாளியை நியமித்து வாடகைக்கு காரைக் கொடுத்துள்ளனர்.
அந்த கார் மூலம் காலி நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, வீதித் தடையினால் வாகனம் நிறுத்தப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் தலையீட்டில் சந்தேகநபர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரும் படகில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல தயாராகி இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவருக்கு இரண்டு முறை திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் சில நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபரின் நண்பர் மற்றும் அவரது காதலியின் உதவியுடன் குறித்த விடுதிக்கு பாடசாலை மாணவியுடன் சென்றதாக அவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தில் உள்ள மற்றுமொரு யுவதியின் அடையாள அட்டையை காட்டி ஹோட்டலில் இரண்டு அறைகளை பெற்றுக்கொண்டதாகவும், அதன் பின்னர் நால்வரும் மது அருந்தியதாகவும் பிரதான சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது உயிரிழந்த மாணவியின் நண்பரும், காதலரும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர். போதையில் அமைதியின்றி நடந்து கொண்டதாகவும், பின்னர் மேல் மாடியில் இருந்து குதித்ததாகவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், அவரது வாக்குமூலங்கள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதால், சந்தேகநபர் ஏற்கனவே தெற்கு களுத்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 48 மணி நேர காவலில் வைக்க உத்தரவிட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குவைத் நாட்டில் பணிபுரிந்த 50 வயதுடைய பெண் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து 2 வாரங்கள் கடந்துள்ள போதும், இதுவரை அவரது உடல் நாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை என்றும் தனது தாயாரின் உடலை வெட்டி பரிசோதனை செய்யாமல் பெற்று தருமாறு மகன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாத்தளை – உடஸ்கிரிய பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய தாய் கடந்த 07 வருடங்களாக குவைத் நாட்டில் பணியாற்றியதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு வருவதாக கூறியதுடன் அங்குள்ளவர்களிடம் வீடியோ போன் மூலம் பேசிவிட்டு, பின்னர் அவர் பணிபுரிந்த வீட்டில் உயிர்மாய்த்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், தனது தாயார் இறந்து 2 வாரங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உயிரிழந்த பெண்ணின் மகன் கவலை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியாகின. இந்தாண்டு பெரும்பாலான மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்ததால் உற்சாகம் அடைந்தனர். தேர்வு முடிவுகள் வெளிவந்ததும் மாணவ, மாணவிகள் வெற்றியை கொண்டாடினர்.
இந்நிலையில், சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் கற்பக விநாயகர் கோவில் தெருவில் டில்லி- சாந்தி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மகள் நந்தினி (16), அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
மாணவி நந்தினி நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் தொங்குவதை பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.
தகவல் அறிந்துசென்ற போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவி எதற்காக தற்கொலை செய்துக்கொண்டார் என பெற்றோர், போலீசார் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.
நீண்டநேர விசாரணைக்கு பிறகே மாணவியின் இறப்புக்கு காரணம் தெரியவந்தது. அதாவது, ஆவடி கோவர்த்தனகிரி பகுதியை சேர்ந்த தேவா (17) என்பவர், பிளஸ்-2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் நேற்று விரக்தியில் தேவா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவர் தேவாவும், மாணவி நந்தினியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் காதலன் தற்கொலை செய்து கொண்ட தகவலை அறிந்த நந்தினி,
அந்த விரக்தியில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். எனினும் மாணவி நந்தினி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தில்…தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே தற்கொலைச் செய்து கொண்ட மாணவன், எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காததால், தேர்ச்சியடைந்த பின்பும் தற்கொலைக்கு முயன்ற மாணவி என்று நேற்று தமிழகத்தின் வெவ்வேறு மாவட்டங்களில் ஒரே நாளில் ப்ளஸ்2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 5 மாணவ, மாணவிகள் தற்கொலைச் செய்து கொண்டு தங்கள் உயிரை போக்கிக் கொண்டனர்.
தோல்வி பயத்தால் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் 4 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை ஆவடியில் பாரதி நகரில் வசித்து வரும் கனகராஜ் மகன் 17 வயது தேவா.
இவர் ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் ப்ளஸ்-2 படித்து வந்தார். தமிழ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்த தேவா, தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதே போல் சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையா தெருவில் வசித்து வரும் தனியார் பள்ளி மாணவி 17 வயது தாருண்யா ப்ளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் தோல்வி அடைந்ததில் விரக்தி அடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஓமந்தூர் கிராமத்தில் வசித்து வரும் 19 வயது ரமணி. ஏற்கனவே கடந்த ஆண்டு ப்ளஸ் 2 தேர்வில் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்ததால், இந்த ஆண்டு தனித் தேர்வராக ஆங்கில தேர்வை எழுதினார்.
இதில் மீண்டும் தோல்வி அடைந்ததில் மனமுடைந்த மாணவி ரமணி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதே போல் வானூர் அருகே சேமமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் 18 வயது அருந்ததி, 600க்கு 500 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் என எதிர்பார்த்த நிலையில், 380 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி அடைந்தார்.
இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த மாணவி, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை நாராயண குப்பம் கிராமத்தில் வசித்து வரும் 17 வயது ஹரி, 11ம் வகுப்பில் 3 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. அதற்கும் தேர்வு எழுதி இருந்தார்.
இந்நிலையில் நேற்று தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பாக தேர்வு முடிவு குறித்த பயமும், கலக்கமும் ஏற்பட்டதால் காலை 8 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஹரி மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட ஹரி 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, பட்டாளம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் 17 வயது சுபஸ்ரீ மகா பிரத்திநிஷா பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர் . இவர் 5 பாடங்களில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கணிதம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் ஆசிரியரைக் கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ் நிலையங்களுக்கு நேற்று மாலை (09.05.2023) வரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவிகளை வகுப்பறையில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததுடன் மாணவிகளை வீட்டில் இறக்கி விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு களுத்துறை லாகோஸ்வத்த பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது காரில் அழைத்துச் சென்று காரில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சூம் தொழில்நுட்பம் மூலம் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த இணைப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், பெற்றோர் இல்லாத நேரத்தில் ஆடைகளை அகற்றுமாறு அச்சுறுத்தி, அவற்றை தனது கைத்தொலைபேசியிலும் அவர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் தனது மடிக்கணினியில் அனைத்து காணொளிகளையும் சேமித்து வைத்திருந்ததை அவரது மனைவி கண்டுபிடித்து மாணவிகளின் பெற்றோருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளானவர்களில் களுத்துறை பகுதி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் மகளும் உள்ளடங்கியுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸ் பிரிவு குற்றத்தடுப்பு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவாங்கொடையில் 15 வயது சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் குறித்த மாணவியின் தாயார் பல தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பில் கடத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் தயார் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எனது மகள் வீட்டில் இருந்தார். எனது மகளுக்கும் அவரை கடத்திச் சென்ற இளைஞருக்கும் முன்னதாக காதல் தொடர்பு காணப்பட்டது.
எமது வீட்டாரும், நானும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவில்லை. எனினும் இளைஞரின் வீட்டால் தொடர்ச்சியாக பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சம்பந்தத்தை எவ்வாறாவாது நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் திகதி எட்டாம் திகதி தீக்சன என்ற குறித்த இளைஞரின் அத்தை மற்றும் அத்தையின் மகள், மகன் ஆகியோர் மகளை கடத்திச் செல்ல வந்தனர். நான் அந்த நேரம் வெளிநாட்டில் வசித்தேன். இதன்போது மகள் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார்.
“அம்மா என்னை சிலர் கடத்த வருகின்றனர்” என தெரிவித்தார். வீட்டிலிருந்த பணிப்பெண்ணை அழைத்துக் கொண்டு அங்கிருந்து வெல்லவாய செல்லுமாறு கூறினேன். வெல்லவாய வீட்டில் வசித்த நிலையிலேயே மகள் கடத்தப்பட்டுள்ளார்.
வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த பெண்ணையும் தாக்கி விட்டு மகளை கடத்திச் சென்றுள்ளனர். குறித்த இளைஞரின் வீட்டாருக்கு பல தடவைகள் நான் அறிவித்தேன். அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.
“நாங்கள் பணத்திற்காக மனித கொலை செய்பவர்கள். சட்டம் தொடர்பில் நாங்கள் நன்கு அறிவோம்” என அச்சுறுத்தினார்கள். மகளும் பல தடவைகள் அழைப்பினை ஏற்படுத்தி இந்த தொடர்பிலிருந்து தன்னை காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
எனது மகளை வீட்டுக் காவலிலேயே அவர்கள் வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னுடைய மகளை பார்த்தால் தகவல் வழங்குமாறு மகளின் புகைப்படத்தை வெளியிட்டு குறித்த தாய் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளார்.