தந்தையொருவரின் விபரீத முடிவு : ஆபத்தான நிலையில் பிள்ளைகள்!!

கம்பளையில்..

கம்பளை – தெல்பிட்டிய செவன கிராமத்தில் தந்தையொவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் இனிப்பு குளிர்பானத்தில் விஷத்தினை கலந்து கொடுத்து தானும் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இதன்போது 4 வயது ஆண் பிள்ளையும், 7 மற்றும் 13 வயதுகளுடைய இரு பெண் பிள்ளைகளும், 40 வயதான தந்தையுமே விஷமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்கிடையே நிலவிய குடும்ப பிரச்சினை இந்த தவறான முடிவிற்கு காரணமாக இருக்கலாம் எனவும், சம்பவத்தின் போது மனைவி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தனது தந்தை,தம்பி,தங்கை ஆகியோர் தொடர்ந்து வாந்தியெடுத்துக்கொண்டிருந்ததை அவதானித்த 13 வயது சிறுமி தனது பெரியப்பாவிடம் தெரிவித்ததையடுத்து நால்வரும் உடனடியாக கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தவறான முடிவினை எடுப்பதற்கு முன்னர் தந்தை குடும்பத்துடன் எடுக்கப்பட்ட பழைய புகைப்படங்களை வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்ததாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வவுனியாவில் நால்வர் மரணத்தில் திடீர் திருப்பம்… முதல் நாள் இரவு வந்து சென்ற மர்ம வாகனம்!!

நால்வர் மரணத்தில் திடீர் திருப்பம்..

வவுனியா குட்செட் வீதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சடலங்களாக நேற்று (07.03.2023) முன்தினம் காலை மீட்கப்பட்டிருந்த நிலையில்,

அதற்கு முதல்நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வவுனியா குட்செட் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து கணவன், மனைவி, இரு குழந்தைகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தனர்.

கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உறங்கிய நிலையிலும் உயிரிழந்து காணப்பட்டனர். உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வவுனியா பொதுமருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று சுகாதாரத் துறையினரால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனை தாமதமாகியிருந்தது.

அதேவேளை, பொலிஸாரின் விசாரணையில் குடும்பத்தினர் சடலங்களாக மீட்கப்பட்ட தினத்துக்கு முதல்நாள் இரவு அந்த வீட்டுக்கு ஹயஸ் ரக வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம், முதல்நாள் மாலை மனைவி கடையில் ஐஸ்கிறீம் வாங்கிச் சென்றிருந்த நிலையில் வீட்டில் அந்த ஐஸ்கிறீம் கண்டறியப்படவில்லை. இந்த விடயங்கள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மனைவி மற்றும் குழந்தைகளின் கழுத்துகள் நெரிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்பட்டிருந்த நிலையில், கொலை என்ற கோணத்தில் விசாரணைகளை ஏற்கனவே தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

இரத்த மாதிரிகள், சிறுநீர் மாதிரிகள், இரப்பையில் இருந்த உணவு மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும்,

முதற்கட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் மனைவி, குழந்தைகள் உடல்களில் நஞ்சு மாதிரிகள் எவையும் கண்டறியப்படவில்லை என்றும் அறியமுடிகின்றது. குழந்தைகள் , மனைவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

எனக்கு 62, கணவனுக்கு 26., கோடி ரூபாய் செலவழிக்க ரெடி.. எங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் : வினோத தம்பதி!!

ஜார்ஜியாவில்..

ஜார்ஜியா நாட்டில், 61 வயது பாட்டியும் அவரது 24 வயது கணவரும் இணைந்து குழந்தை பெற கோடி ரூபாய் செலவிடவும் தயாராக உள்ளனர். ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த குரான் மெக்கெய்ன் மற்றும் செரில் மெக்ரிகோர் (Quran and Cheryl McGregor) எனும் 37 வயது வித்தியாசம் உள்ள தம்பதியினர், தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பதற்காக 120,000 பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ. 4.6 கோடி) செலவழிக்கத் தயாராக உள்ளனர்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் செய்து கொண்ட குரான் மற்றும் செரில், 2023-ஆம் ஆண்டிற்குள் வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கவே இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய தயாராக இருப்பதாகக் கூறினர்.

அவர்களுக்கு வாடகைத்தாயும் கிடைத்துவிட்ட நிலையில், “நாங்கள் தேர்ந்தெடுத்த வாடகைத் தாய் கிடைத்திருப்பது எங்களது அதிர்ஷ்டம். குழந்தை 2023 வசந்த காலத்தின் பிற்பகுதியில் வரும்” என்று குரான் கூறியுள்ளார்.

குரானுக்கு இது முதல் குழந்தையாக இருந்தாலும், ​​செரிலுக்கு ஏற்கனவே 7 குழந்தைகள் உள்ளனர். அதுமட்டுமின்றி 17 வயதில் ஒரு பேரக்குழந்தையும் உள்ளதாக கூறப்படுகிறது.

வயது வித்தியாசம் காரணமாக இந்த ஜோடி அடிக்கடி விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மக்கள் பெரும்பாலும் செரிலை குரானின் பாட்டி என்று தவறாக நினைக்கிறார்கள்.

“எங்களுக்கு நேர்மறை மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன. மிக மோசமான விஷயம் என்னவென்றால், நான் செரிலை பணத்திற்காகப் பயன்படுத்துகிறேன் என்று கூறுகின்றனர்.

வெறுப்பை கட்டுபவர்கள் காட்டட்டும், நாங்கள் சாதாரண வாழ்க்கையை வாழப் போகிறோம்” என்று குரான் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்த ஜோடி 2012-ல் குரானுக்கு 15 வயதாக இருந்தபோது சந்தித்தது மற்றும் செரிலின் மகன் கிறிஸ் நிர்வகிக்கும் துரித உணவு உணவகத்தில் பணிபுரிந்தார்.

பல ஆண்டுகளாக அவர்கள் தொடர்பில் இல்லை, ஆனால் நவம்பர் 4, 2020 அன்று குரான் செரிலை கேஷியர் டெஸ்கில் உள்ள ஒரு கன்வீனியன்ஸ் ஸ்டோரில் பார்த்தபோது மீண்டும் இணைந்தனர். அதன்பின் அவர்களுக்குல் காதல் மலர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

இலங்கையில் தொடர் சரிவை நோக்கி தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலவரம்!!

தங்கம் விலை..

மக்களின் வாழ்வோடு தங்கமும் தற்போது பின்னிப்பிணைந்துள்ளது. திருமணம் முதல் வீட்டில் நடக்கின்ற அனைத்து விசேசங்களிலும் தங்கத்திற்கென்று தனி இடமுண்டு.

அந்தளவுக்கு தங்கம் முக்கியம் வாய்ந்ததாக மாறிவிட்டது. கொரோனா தொற்று உலகளவில் ஏற்படுத்திய கடும் பாதிப்பு, மற்றும் உக்ரைன் ரஷ்ய போரினால் உலகின் பொருளாதாரம் பெரும் சரிவை கண்ட நிலையில் தங்கத்தின் விலையும் தாறுமாறாக அதிகத்து நடுத்தர மக்களுக்கு கடந்த காலங்களில் தங்கம் வாங்குவது என்பது எட்டாகனியாகவே மாறியிருந்தது என சொல்லலாம்.

எனினும் இந் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை பிப்ரவரியின் பிற்பாதியில் சற்று குறைந்து வந்த நிலையில் தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்தது எனலாம்.

எனினும் பிப்ரவரி மாதத்தில் உச்சத்திலும் இருந்த தங்கம், மாத இறுதியில் ஒரு கிராம் ரூ.5201 என்ற விலையிலும் விற்பனை ஆனது. ஆனாலும் மீண்டும் விலை ஏற்றத்தில் சென்றது.

இன்று தங்கத்தின் விலை
இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் இன்று 5517 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44,136 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து 5155 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் வரை குறைந்து 41,240 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து, கிராம் வெள்ளி ரூ.67.40 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

யாழில் இடம்பெற்ற ஓர் உண்மைச் சம்பவம் : குடிப்பழக்கம் இல்லாததால் குழம்பிய சம்மந்தம்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் குடிப்பழக்கம் இல்லாததால் சம்மந்தம் ஒன்று குழம்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இச்சம்பவம் யாழ் சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சமீபத்தில் கொக்குவிலை சேர்ந்த அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு, சாவச்சேரியில் தரகர் மூலம் பெண் பொருந்திய நிலையில், கடந்த வாரம் பெண்வீட்டிற்கு பெண்பார்க்கச் சென்றுள்ளனர்.

அப்போது, கதை வழக்கில் மாப்பிள்ளை தண்ணி அடிப்பாரா என கதை வந்துள்ளது. மைலோ மட்டுமே குடித்து பழகிய மாப்பிள்ளை. ச்சே ச்சே… நான் குடிக்கிறதே இல்லை என பெருமையாக கூறியுள்ளார். அதன்போது மணப் பெண்ணின் தாயார், “இந்தக் காலத்தில் குடிக்காதவனெல்லாம் ஆம்பிளையா” என நக்கலாக கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாப்பிள்ளைவீட்டார் சம்பந்தத்தை குழப்பிக்கொண்டு வெளியேறியுள்ளனர். தனது ஒழுக்கமாக வாழ்க்கைக்கு கிடைத்த பரிசு இது தானா என மாப்பிள்ளை வருந்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கின்னஸ் உலக சாதனையுடன் பிறந்த இரட்டைக் குழந்தைகள்… அப்படி என்ன சாதனை தெரியுமா?

கனடாவில்..

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் வாழும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கெவின் நடராஜா (Kevin Nadarajah) மற்றும் ஷகினா ராஜேந்திரம் (Shakina Rajendram) தம்பதிகளுக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளே இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள்.

கரு முழுமையாக முதிர்ச்சி அடையாமல் 22 வாரங்களிலேயே பிறந்து, ஆகக் குறைந்த நாள்களில் பிறந்த இரட்டையர்களாக ஏடியா நடராஜாவும் (Adiah Nadarajah) ஏட்ரியல் நடராஜாவும் (Adrial Nadarajah) இந்த சாதனையை படைத்துள்ளனர்.

குழந்தைகள் இருவரும் 126 நாள்களுக்கு முன்னதாகவே, 2022 மார்ச் 4-ஆம் திகதி பிறந்தனர். பொதுவாக, முழுமையான கர்ப்ப காலம் 40 வாரங்களாகும். ஆனால், கருவுற்று 21 வாரங்கள் 5 நாள்களிலேயே ஷகினாவிற்கு மகப்பேற்று வலி ஏற்பட்டது.

இதனால், ஏடியா- ஏட்ரியல் இரட்டையர்கள் 18 வாரங்களுக்கு முன்னதாகவே பிறந்துவிட்டனர். ஷகினாவுக்கு இது இரண்டாவது கர்ப்பமாகும். அவரது முதல் கர்ப்பத்தை துரதிர்ஷ்டமாக கடந்த ஆண்டு அதே மருத்துவமனையில் இழந்தார்.

22 வாரங்களுக்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே குழந்தைகள் பிறந்திருந்தால், மருத்துவமனையால் உயிர்காக்கும் முயற்சி நடந்திருக்காது என்று கின்னஸ் கூறுகிறது.

ஷகினா கூறுகையில், தனக்கு 21 வாரங்கள் மற்றும் ஐந்து நாட்களில் பிரசவம் தொடங்கியபோது, ​​குழந்தைகள் காப்பாற்றப்பட சாத்தியம் இல்லை என்றும் “உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் 0%” இருப்பதாகவும் மருத்துவர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

கடுமையான இரத்தப்போக்கு இருந்தபோதும், இன்னும் சில மணி நேரத்திற்கு குழந்தைகளை வயிற்றினுள்ளேயே வைத்திருக்க தம்மாலான முழு முயற்சியை செய்ததாக ஷகினா கூறினார்.

அதனையடுத்து, 22 வாரங்களுக்கு இரண்டு மணி நேரம் பிந்தி குழந்தைகள் தாயின் கருவைவிட்டு வெளியில் வந்தன. தொடக்கத்தில் கடுமையான மருத்துவப் பிரச்சினைகள் இருந்தது.

ஆனால், ஒரு வருடத்திற்குப் பிறகு, இப்போது அடியா லேலின் மற்றும் அட்ரியல் லூகா நடராஜா இருவரும் உயிருடன் இருக்கிறார்கள், சமீபத்தில் தங்கள் முதல் பிறந்தநாளை கொண்டாடினர்.

வெளிநாடு சென்ற தாய், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்த மாணவியின் விபரீத முடிவு!!

அனுராதபுரத்தில்..

அனுராதபுரம், மதவாச்சி பிரதேசத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

காதல் தொடர்பின் அடிப்படையில் அவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த மாணவியுடன் சிறிது காலம் காதல் உறவில் ஈடுபட்டு வந்த வேறு பாடசாலை மாணவன் ஒருவர் தனது உறவை முறித்துக் கொண்டதையடுத்து மாணவி இந்த விபரீத முடிவை எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாணவியின் தாயார் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில் குறித்த மாணவி தந்தையின் பராமரிப்பில் கல்வி கற்று வந்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் திருவள்ளுவர் குருபூசை தினம் அனுஸ்டிப்பு!!

திருவள்ளுவர் குருபூசை..

திருவள்ளுவர் குரு பூசைதினமான நேற்று (08.03) வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் குருபூசைதினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அவர் தொடர்பான நினைவு பேருரையினை தமிழருவி சிவகுமாரன் நிகழ்த்தியிருந்தார்.

வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் உபநகரபிதா சு.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நகரசபை உறுப்பினர் சந்திரகுலசிங்கம் மோகன்,

ஓய்வுநிலை விரிவுரையாளர் நா.பார்த்தீபன், நகரசபை ஊழியர்கள், தமிழ்விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை!!

சட்டவைத்திய பரிசோதனை..

வவுனியாவில் மர்மமான முறையில் மரணமடைந்தவர்களின் உடலங்களுக்கான சட்டவைத்திய பரிசோதனை நேற்றையதினம் (08.03.2023) இடம்பெற்றிருந்தது.

பரிசோதனையின் முடிவில் உடலில் நஞ்சருந்தியதற்கான ஆதாரங்கள் எதுவும் இருக்கவில்லை. மரணித்தவர்களினது இரத்தம், சிறுநீர் மாதிரிகளும் மேலதிக பரிசோதனைக்காக அரசாங்க பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் மாதிரிகளுக்கான பரிசோதனை முடிவு வந்ததன் பின்னரே மரணத்திற்கான காரணம் என்னவென தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியும் என சட்டவைத்திய பரிசோதனை அறிக்கையுள்ளது.

வவுனியா குட்செட்வீதி, உள்ளகவீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் பொலிசாரால் நேற்றுமுன்தினம் (07.03.2023) மீட்கப்பட்டிருந்தது.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42), வீட்டின் விறாந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதுடன், அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இருபிள்ளைகளான கௌ.மைத்ரா (வயது9), கௌ.கேசரா (வயது3) ஆகியோர் உறங்கியபடியும் சடலமாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் வவுனியா பொலிசார் மீட்கப்பட்ட சடலங்களை சட்டவைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது. குறித்த சம்பவம் வவுனியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சியில் இடம்பெற்ற கோர விபத்து : நொருங்கிய ஹயஸ் வாகனம்!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி பூநகரி மகாவித்தியாலத்தின் முன் உள்ள பூநகரி வரவேற்பு வளைவின் துாணில் மோதி ஹயஸ் வாகனம் ஒன்று கடும் சேதங்களுக்குள்ளானது.

இன்று (08.03.2023) இடம்பெற்ற விபத்தில் வாகனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதேசமயம், விபத்துக்குள்ளான ஹயஸ் வாகனம் கடும் சேதமடைந்த நிலையில் மேலதிக சேத விபரங்கள் முழுமையாக இன்னும் வெளியாகவில்லை.

பழிக்குப் பழிவாங்க மனைவியை காதலித்தவரின் மனைவியை திருமணம் செய்த கணவன்!!

பீகாரில்..

தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால், தனது மனைவியை கூட்டி சென்றவரின் மனைவியை திருமணம் செய்து பழிக்கு பழி வாங்கிய கணவரின் செயல் பேசு பொருளாக மாறியுள்ளது.

பீகார் மாநிலம் ககாரியா பகுதியை சேர்ந்தவர் நீரஜ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபி தேவி என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணமானது. திருமணம் முடிந்து தற்போது இவர்களுக்கு 4 குழந்தைகள் இருக்கும் நிலையில், ரூபிக்கு முகேஷ் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அதே போல் முகேஷுக்கும் ஏற்கனவே திருமணமாகி அதே பெயர் கொண்ட ரூபி தேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். முகேஷுக்கும் நீரஜ் மனைவி ரூபிக்கும் இடையே இருக்கும் பழக்கம் காதலாக மாறவே இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இந்த பழக்கத்தால் இவர்கள் இருவரும் திருமணம் செய்ய எண்ணியுள்ளனர்.

அதன்படி நீரஜ் மனைவி ரூபி தேவியும், முகேஷும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். இதையடுத்து தனது மனைவியை மர்ம நபர்கள் கடத்தியதாக நீரஜ் காவல்துறையில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்டபோது, ரூபி தேவி, முகேஷுடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஊர் பஞ்சாயத்தாரிடம் இந்த விவகாரம் சென்றது. இதனை பேசி தீர்க்க நீரஜை அழைத்தபோது அவர் வர மறுத்துள்ளார்.

அதோடு இந்த விவகாரத்தை பேசி தீர்க்க முடியாது என்று, அவர்கள் இருவரையும் பழி வாங்க எண்ணியுள்ளார். அதன்படி தனது மனைவியை கூட்டி சென்ற முகேஷின் மனைவி ரூபி தேவியை சந்தித்து அவரிடம் பேசியுள்ளார்.

பின்னர் நீரஜ் மற்றும் முகேஷின் மனைவி ரூபி தேவி திருமணம் செய்துகொண்டனர். மனைவியை பழிவாங்க கணவர் செய்த இந்த சம்பவம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

இவர்கள் திருமணம் அந்த பகுதியிலுள்ள கோயில் ஒன்றில் வைத்து நடைபெற்றுள்ளது. ஆனால் இதில் குழந்தைகள் நிலைமைதான் பரிதாபத்துக்கு உள்ளாகியுள்ளது. முகேஷின் 2 குழந்தைகள், நீரஜின் 1 குழந்தை என 3 குழந்தைகள் நீராஜிடமும், நீரஜின் 3 குழந்தைகளும், முகேஷின் 1 குழந்தையும் முகேஷிடமும் வளர்ந்து வருகிறது.

தனது மனைவி வேறு ஒருவருடன் சென்றுவிட்டதால், தனது மனைவியை கூட்டி சென்றவரின் மனைவியை திருமணம் செய்து பழிக்கு பழி வாங்கிய பீகார் கணவரின் செயல் பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கணவன், மாமியாரைக் கொலை செய்த இளம் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

மும்பையில்..

மும்பை சாந்தாகுரூஸ் பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் வேறொரு நபருடன் திருமணம் மீறிய உறவில் இருந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், அந்த நபருடன் சேர்ந்து தன்னுடைய கணவர், மாமியாருக்கு சாப்பாடு, ஜூஸில் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து கொடுத்துவந்திருக்கிறார்.

இதில் கவிதாவின் மாமியார் சரளா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கவிதாவின் கணவருக்கும் அதே போன்று வயிற்று வலி ஏற்பட்டு, செப்டம்பர் மாதம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்.

இந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கவிதா, அவருடன் நெருங்கிப் பழகி வந்த ஹிதேஷ் ஜெயின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இதில் கணவர் கமல்காந்த் கொலையை ஆதாரத்துடன் நிரூபித்துவிட முடியும். அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையும் இருக்கிறது.

ஆனால் சரளாவுக்குப் பிரேத பரிசோதனை அறிக்கை கிடையாது. எனவே சரளாவை கவிதாவும், அவருடன் பழகிவந்த இளைஞரும் சேர்ந்துதான் கொலைசெய்தனர் என்பதை நிரூபிக்க போலீஸாரிடம் திடமான ஆதாரம் இல்லை.

இது குறித்து குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் குறித்து விசாரணை அதிகாரி ஒருவர் பேசுகையில், “கைதுசெய்யப்பட்டிருக்கும் ஹிதேஷ் இன்டர்நெட்டில் 109 முறை விஷத்தையும், 156 முறை தெல்லியத்தையும் தேடியிருக்கிறார். விஷத்தை வாங்க வியாபாரியுடன் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ம் தேதி அவசரமாக விஷம் தேவை என்று சொல்லி வாங்கியிருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, அதன் மூலம்தான் சரளாவைக் கொலைசெய்திருப்பது தெரிகிறது. இந்த வழக்கில் கமல்காந்தின் சமையல்காரரின் வாக்குமூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

அந்த சமையல்காரர் தனது வாக்குமூலத்தில், `பொதுவாக கவிதா தனக்கும், தன்னுடைய மகளுக்கும் மட்டும்தான் சமைப்பது வழக்கம். மற்றவர்களுக்கு சரளாதான் சமைப்பார். ஆனால், படிப்படியாக கவிதா சமையல் அறையைத் தனது கட்டுக்குள் கொண்டுவந்தார்.

ஒரு கட்டத்தில் கவிதா சமையல் செய்யும்போது சமையல் அறைக்குள் யாரையும் அனுமதிப்பது கிடையாது. நான் சரளாவுக்கு குளிக்க மண்பானையில் தண்ணீர் சுடவைப்பது வழக்கம்.

அதில் தண்ணீர் நிரப்பும் வேலையைக்கூட கவிதா எடுத்துக்கொண்டார். அதோடு சரளாவுக்கு சாப்பாடு கொடுக்கும் வேலையையும் கவிதா எடுத்துக்கொண்டார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

சரளா இறந்தவுடன் நன்றாக இருந்த மண்பானையை வெளியில் எடுத்துச் சென்று போட்டுவிடும்படி கேட்டுக்கொண்டார். சரளா இறந்தபிறகு கவிதா தன்னுடைய கணவருக்கு பாலில் தயாரிக்கப்படும் உகாலா எனப்படும் ஒருவித பானத்தை தானே தயாரித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

எப்போது அவர் உகாலா தயாரித்தாலும், அப்போது என்னை சமையல் அறையில் இருக்கவிடமாட்டார்’ என்று தெரிவித்திருக்கிறார். இந்த வாக்குமூலம் வழக்கில் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இரட்டைக் கொலையை நிரூபிக்க எங்களுக்கு போதிய ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.

ஹிதேஷ் ஜெயின் விஷம், தெல்லியத்தை இந்தியாமார்ட்டில் இடம் பெற்றிருக்கும் வியாபாரிகளைத் தொடர்புகொண்டு வாங்கியிருக்கிறார். இரண்டையும் தனது வீட்டுக்கு வரவழைத்து அவற்றை கவிதாவிடம் ஹிதேஷ் ஜெயின் கொடுத்திருக்கிறார். கவிதாவும், ஹிதேஷும் பாலிய நண்பர்கள்.

அவர்கள் இருவரும் பின்னர் காதலிக்க ஆரம்பித்தனர். கமல்காந்த் சொத்தை முழுமையாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் இரண்டு பேரையும் விஷம் கலந்து கொடுத்து கொலைசெய்திருக்கின்றனர்” என்றார்.

தவிக்கவிட்ட பிள்ளைகள்… 1.5 கோடி மதிப்புள்ள சொத்தை அரசாங்கத்திற்கு எழுதிவைத்த முதியவர்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் முதியவர் ஒருவர் தனது மொத்த சொத்தையும் அரசாங்கத்திற்கு உயில் எழுதிவைத்துள்ளார். ஆனால், அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டதால் மனமுடைந்த 85 வயதான நாது சிங் (Nathu Singh), தனது 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை உத்தரபிரதேச அரசுக்கு உயில் செய்துள்ளார்.

அவர் தனது உடலையும் மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்துள்ளார், மேலும் தனது மகன் மற்றும் நான்கு மகள்கள் தனது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

முசாபர்நகரில் வசிக்கும் நாது சிங்குக்கு ரூ1.5 கோடி மதிப்புள்ள வீடு மற்றும் நிலம் உள்ளது. அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். பள்ளி ஆசிரியராக பணிபுரியும் அவர் சஹாரன்பூரில் வசிக்கிறார். மற்ற நான்கு பேரும் மகள்கள், அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

மனைவி இறந்ததையடுத்து அந்த முதியவர் தனியாக வசித்து வந்தார். சுமார் 7 மாதங்களுக்கு முன்பு, அவர் தனது கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்திற்கு சென்றார்.

குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தன்னைச் சந்திக்க வராததால் மனம் உடைந்த அவர், தனது நிலத்தை மாநில அரசுக்கு உயில் எழுதினர், அவர் இறந்த பிறகு, அங்கு ஒரு பள்ளி அல்லது மருத்துவமனை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

“இந்த வயதில், நான் என் மகன் மற்றும் மருமகளுடன் வாழ்ந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் என்னை நன்றாக நடத்தவில்லை. அதனால்தான் சொத்தை மாற்றுவதற்கு நான் முடிவு செய்தேன்” என்று அவர் கூறினார்.

அப்பகுதியின் துணைப் பதிவாளர், நாது சிங்கின் பிரமாணப் பத்திரம் தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், அவரது மரணத்திற்குப் பிறகு அது நடைமுறைக்கு வரும் என்றும் கூறியுள்ளார்.

மனைவியை துண்டு, துண்டாக்கி தண்ணீர் தொட்டியில் மறைத்த கொடூர கணவர்.. பகீர் வாக்குமூலம்!!

சத்தீஸ்கரில்..

அன்னியோன்ய தம்பதிகள் , ஆதர்ச தம்பதிகள் காலமெல்லாம் மலையேறி விட்டது. கணவன் குடித்து விட்டு அடித்தால் வாங்கிக் கொண்டது எல்லாம் பழைய காலம். குடித்து விட்டு வந்தால் தலையில் கல்லை தூக்கி போடு. மாற்றாள் வீட்டுக்கு கூடையில் சுமந்தது புராண காலம், இப்போதெல்லாம் விஷம் வைத்து கொலை என கொடூரமாகி வருகிறது.

அதே போல் மனைவி சொல் பேச்சு கேட்கவில்லை எனில் அவளை கொலை செய்து நாய்களுக்கு விருந்தாக்கு, துண்டு துண்டாக்கி கடலில் வீசு, நடுக்காட்டில் தூக்கில் தொங்கவிட்டு விலங்குகளுக்கு உணவாக்கு என கொடூர வாழ்க்கை முறையாகி விட்டது. அதே போல் மீண்டும் ஒரு சம்பவ சத்தீஸ்கரில் நடைபெற்றுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள உஸ்லாபூர் பகுதியில் வசித்து வருபவர் பவன் சிங் தாக்கூர். இவருக்கும் சதி சாஹு என்ற பெண்ணுடன் திருமணமாகி உள்ளது.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கணவர் பவன் தாக்கூருக்கு மனைவி சதி சாஹுவின் நடத்தையின் மீது சமீப காலமாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் மனைவி மனைவி சதியை கணவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.

கொலையை மறைக்கும் விதமாக மனைவியின் உடல் பாகங்களை பல துண்டுகளாக வெட்டி வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டு வைத்துள்ளார். சம்பவம் நடந்து இரு மாதங்கள் கடந்த நிலையில், வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

சந்தேகம் அடைந்த அண்டை வீட்டார் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகைக்கு நடந்த விபரீதம்… ஆதாரங்களை வெளியிட்டு கண்ணீர் புகார்!!

கர்நாடகாவில்..

வளர்ந்துவரும் இளம் தமிழ் நடிகை அனிகா விக்ரமன். இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் என்றாலும், பள்ளிப்படிப்பை சென்னையிலும், கல்லூரி படிப்பை பெங்களூரிலும் முடித்தவர்.

பின்னர் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சென்னை வந்தார். கே என்னும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து எங்க பாட்டன் பார்த்தியா, விஷமக்காரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளப்படங்களில் இவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.

இதனிடையே அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில், தனது காதலன் தன்னை கொடூரமாக தாக்கியதாக புகைப்படத்துடன் புகார் கூறியிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது பதிவில், நான் அனூப் பிள்ளை என்ற நபரை காதலித்து வந்தேன்.

அவர் பல ஆண்டுகளாக என்னை மனதளவிலும், உடலளவிலும் சித்ரவதை செய்து வந்துள்ளார். முதலில் சென்னையில் வைத்து என்னை தாக்கினார். ஆனால் அதன்பின்னர் காலில் விழுந்து அழுததால் அதனை பெரிது படுத்தாமல் விட்டுவிட்டேன்.

தொடர்ந்து இரண்டாவது முறையாக என்னை துன்புறுத்தியதால் பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன். ஆனால் அவர் காவல்துறையினரிடம் பணம் கொடுத்து என்னை சிக்கவைத்தார்.

இதன்பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அனூப்பால் நான் ஏமாற்றப்பட்டு வருவதை அறிந்தேன். அதனால் அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால் அவர் என்னை விட்டு பிரிய தயாராக இல்லை.

இதனிடையே, நான் ஷூட்டிங் போகாமல் இருக்க மொபைலை உடைத்தார். அதற்கு முன், என் வாட்ஸ்அப்பை எனக்கு தெரியாமல் லேப்டாப்பில் இணைத்து பார்த்துக் கொண்டிருந்தார்.

இப்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் என்னையும், எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக உள்ளார்.

அவரது சித்திரவதையால் ஏற்பட்ட காயங்கள் இப்போது கொஞ்சம் சரியாகிவிட்டது. நானும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறேன். அடுத்த வாரம் முதல் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து கொள்வேன், என நடிகை அனிகா தெரிவித்துள்ளார். உடல் முழுக்க காயத்துடன் அனிகா விக்ரமன் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாயின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன்.. இருவரும் ஒன்றாக எடுத்த விபரீத முடிவு!!

ஈரோட்டில்..

ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (45). லொறி சாரதியான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டதால், 70 வயதான தாய் சம்பூரணத்துடன் வசித்து வந்தார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சம்பூரணம் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவரது உடல்நலம் சீராகவில்லை என்பதால் நந்தகுமார் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சம்பூரணம் மற்றும் நந்தகுமார் ஆகிய இருவரும் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.

தாய்-மகன் இருவரும் ஒன்றாக தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த நந்தகுமாரின் அண்ணன் உதயகுமார்(48) தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.