அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை.. மணமேடையில் அடம்பிடித்து திருமணம் செய்துகொண்ட தங்கை!!

பீகாரில்..

அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளையை மணமேடையில் வைத்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி தங்கை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சப்ரா பகுதியில் முபராக்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ரிங்கு என்ற இளம்பெண்ணுக்கு அவரது பெற்றோர் திருமணத்துக்கு வரண் பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். அப்போது சரண் என்ற பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவரை வரணாக பார்த்துள்ளனர்.

மாப்பிள்ளை மாற்றும் பெண் வீட்டாருக்கு பிடித்து போகவே, ரிங்குவிற்கும் ராஜேஷிற்கும் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தனர். அதன்படி திருமணம் கடந்த 2-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்தது.

மணமகனும் – மணமகளும் மணமேடைக்கு வந்து மாலையை மாற்றிக்கொண்டனர். அந்த சமயத்தில் திடீரென வந்த ரிங்குவின் தங்கையான புதுல், ராஜேஷை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.

இதனை கேட்டு இரு வீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனர். மேலும் தனக்கு அவரை கட்டாயம் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தங்கை அடம்பிடித்துள்ளார்.

அதற்கு பெண் வீட்டாரோ மாலையெல்லாம் மாற்றியாச்சு. எனவே அது முடியாது என்று எவ்வளவோ எடுத்து கூறியும் சமாதானம் செய்து வைக்க முயன்றனர்.ஆனால் தங்கை புதுலோ தனக்கும் ராஜேஷுக்கும் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்து விடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.

தொடர்ந்து பிரச்னை மேலும் மேலும் அதிகரிக்கவே அக்கா ரிங்கு, ராஜேஷை விட்டு கொடுத்தார். இருப்பினும் இதற்கு மாப்பிள்ளை வீட்டார் சம்மதிக்கவில்லை. தொடர்ந்து இந்த பிரச்னை பூதாகரமான நிலையில், போலீசார் அந்த இடத்துக்கு வந்தனர்.

அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் புதுல் படிக்க வெளியூருக்கு சென்ற சமயத்தில் ராஜேஷிடம் பழகியுள்ளார். இருவரும் மணி கணக்காக போனில் உரையாடி பழகி வந்துள்ளனர். தொடர்ந்து இருவருமே காதலித்து வந்துள்ளனர் என்பது தெரியவந்தது. இதனை கேட்டு இருவீட்டாரும் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மாப்பிள்ளை ராஜேஷ், ரிங்குவிற்கு பதில் அவரது தங்கை புதுலின் கழுத்தில் தாலி கட்டி திருமணம் செய்துகொண்டார். நீண்ட போராட்டங்களுக்கு பிறகு இவர்கள் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

நண்பனின் மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய இளைஞன்.. கடனை திரும்ப கேட்டதால் நடந்த விபரீதம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பாலக்கடவு பகுதியில் சனல்- ஆதிரா (27) தம்பதி வசித்து வந்தனர். சனலின் நண்பர் அகில் (31) மற்றும் ஆதிரா இருவரும் அங்கமாலியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்தனர்.

அகிலுக்கு பொருளாதார நெருக்கடி வரும் போதெல்லாம் ஆதிரா பணம் மற்றும் நகை கொடுத்து உதவி வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் பெரும் தொகை கொடுத்ததாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக திரும்ப வழங்காததால் ஆதிரா, தான் கொடுத்த பணத்தை அகிலிடம் திருப்பி கேட்டு உள்ளார்.

இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எனினும் பணம் கொடுக்காமல் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 29ஆம் தேதி முதல் வேலைக்கு சென்ற ஆதிராவை காணவில்லை என்பதால், அவரை கணவர் மற்றும் உறவினர்கள் தேடினார்கள்.

ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மனைவி ஆதிராவை கண்டுபிடித்து தரக்கோரி சனல் அங்கமாலி போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், ஆதிராவின் செல்போனை ஆய்வு செய்தனர். அப்போது ஆதிரா கடைசியாக அகிலுடன் பேசியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டனர். அப்போது அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் 29ம் தேதி ஆதிராவை, அகில் காரில் அழைத்து சென்றதாக தெரிவித்தார்கள்.

தொடர்ந்து போலீசார் அகிலை தேடி வந்த நிலையில் நேற்று காலை அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அகில் கூறியதாவது, ஆதிராவை நான் தான் கடத்திச் சென்று அதிரப்பள்ளி அருகே உள்ள ஆற்றுப்பகுதியில் வைத்து கழுத்தை நெரித்து கொன்றேன். அவரின் உடலை துண்டு, துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டேன், என தெரிவித்தார்.

மேலும் ஆதிரா தன்னிடம் கடனாக தந்த நகை மற்றும் பணத்தை திருப்பிக் கேட்டதால் அவரை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அதிரப்பள்ளி ஆற்றுக்கு சென்று ஆற்றின் கரையில் கிடந்த ஆதிராவின் கால் மற்றும் உடல் பாகங்களை கைப்பற்றினர்.

எனினும் சில பாகங்களை தேடி வருகிறார்கள். கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக்கேட்டதால் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகனின் மனைவியை திருமணம் செய்துகொண்ட மாமனார் : வைரலாகும் வீடியோ!!

திருமணம்..

முதியவர் ஒருவர் தனது மருமகளை திருமணம் செய்து கொள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பெண்ணின் கணவர் இறந்த பிறகு தன்னை கவனித்துக்கொள்ள யாரும் இல்லை என்று தனது மாமனாரை திருமணம் செய்துள்ளார்.

மேலும் இந்த வீடியோவிற்கு பலரும் தனது கருத்துகளை தெரிவித்து வந்துள்ளனர். இது தெரிந்த ஊடகவியளாலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்துள்ளனர். திருமணம் செய்துக்கொண்ட தம்பதியினர்கள் தனது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது அவர்கள் சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்துள்ளதாகவும் இது முற்றிலும் திட்டமிட்டு வெளியிடப்பட்ட வீடியோவாகும்.

இந்த மாதிரி சம்பவங்கள் நாட்டில் அதிகமாக நடந்து வருவதாகவும்,அதை வெளிக் கொண்டுவந்து காட்டும் முயற்சியிலும் செய்தனர் என தெரிவித்தள்ளனர். இந்த வீடியோவானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாய்க்காலில் கட்டுக்கட்டாக மிதந்து வந்த பணம் : போட்டிபோட்டு அள்ளிய மக்கள்!!

பீகாரில்..

கால்வாயில் இருந்து மக்கள் கட்டு கட்டாக பணத்தை அள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தியா – பீகார் மாநிலம் ரோக்தாஸ் மாவட்டத்தில் உள்ள மொராதாபாத் கிராமத்தில் கழிவுநீர் கால்வாயில் பெரிய மூட்டை ஒன்று கிடந்தது. அதோடு சில ரூபாய் நோட்டுகள் தண்ணீரில் மிதந்தன.

இதை பார்த்த சிலர் கால்வாய்க்குள் இறங்கி அந்த மூட்டையை பிரித்த போது கட்டு கட்டாக பணம் இருந்தது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவியதை அடுத்து கிராம மக்கள் பணத்தை எடுக்க முண்டியடித்தனர்.

கழிவு நீரில் மிதந்த 2000, 500, 100 மற்றும் 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து சென்றனர். இந்நிலையில் அதிகாலையில் வாகனத்தில் வந்த சிலர் பண மூட்டையை கால்வாயில் வீசி சென்றதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாடசாலை மாணவியின் மர்ம மரணம்.. சிக்கிய கார் சாரதி!!

களுத்துறையில்..

களுத்துறையில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியை விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் கார் சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு வந்துள்ளமை சிசிடிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இரண்டு அறைகளை முன்பதிவு செய்த போதும் ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.

இதன்போது இளம் பெண் ஒருவரும், மற்றைய இளைஞனும் விடுதியை விட்டு வெளியேறியுள்ளதுடன், ​​​​20 நிமிடங்களுக்கு பின் மற்றைய இளைஞனும் பதற்றத்துடன் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் புகையிரத தண்டவாள பகுதியில் பெண்ணொருவர் கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டதில் குறித்த மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மாணவியுடன் விடுதிக்கு வந்ததாக கூறப்படும் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாணவியுடன் அறையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இளைஞன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையிலேயே சம்பவம் தொடர்பில் விடுதிக்கு சென்ற ஆணொருவரும், பெண்ணும் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர் இரு திருமணம் முடித்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதவை எனவும் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி – பாடசாலை பெண் அதிபர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

களுத்துறையில்..

களுத்துறை பிரதேசத்தில் உள்ள முன்னணி பெண்கள் பாடசாலை ஒன்றின் பெண் அதிபருக்கு எதிராக பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையினால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. ஆசிரியர் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு மாணவிகளின் உதவியை பெற்று வருவதாகவும் அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இதற்கு மேலதிகமாக பிரதேசத்தில் உள்ள அரசியல் பிரபலத்தின் உதவியுடன் செயற்படும் அதிபர் அந்த பிரதேசத்தின் நகர சபையில் போட்டியிடும் ஒருவரை பாடசாலைக்கு அழைத்து அவருக்கு அரசியல் இலாபம் கிடைக்கும் வகையில் தேர்தல் சட்டத்தை மீறி நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த அதிபரின் நடவடிக்கையால் தங்கள் பெண் பிள்ளைகள் கூட சரியாக வளர்க்க முடியவில்லை என பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் அளித்தும் பலன் இல்லை என கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு முன்னர் இரண்டு இளைஞர்களுடன் அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதிக்கு சென்ற 16 வயதுடைய இரு பாடசாலை மாணவிகளும் அதே பாடசாலையில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்பவர்கள் என தெரியவந்துள்ளது.

மாலை நேர வகுப்பு என்ற போர்வையில் இரண்டு இளைஞர்களுடன் விடுதிக்கு சென்ற மாணவிகளில் ஒருவரின் நிர்வாண சடலம் விடுதிக்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தி ஊடகங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் சடலங்களாக மீட்பு!!

கெட்டயாபத்தனையில்..

குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மத்துரட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெட்டயாப்பத்தன வடுவா ஆற்றில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப் பிரதேசத்தில் கெட்டயாபத்தனை கிராமத்தில் வசித்த டப்ளியூ. ஜி. அசேல ஹிதுவர (வயது 12) என்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் இவரின் சடலம் சம்பவ தினத்தன்று இரவு 09.30 மணியலவில் மீட்க்கப்பட்டுள்து.

அதேநேரம் நீரில் மூழ்கி மாயமான சகோதரி இன்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்துரட்ட பொலிஸார் தெரிவிதித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிறுவர் மற்றும் சிறுமியின் சடலங்கள் பிரேத பரிசோதணைக்காக ரிக்கில்லகஸ்கட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ள 132 இலங்கையர்களுக்கு சிவப்பு பிடிவிராந்து

வெளிநாடுகளில் உள்ள 132 இலங்கையர்…

இலங்கை போதைப்பொருள் கும்பல் தலைவர்கள் 132 பேர் ஐரோப்பிய நாடுகளில் இருப்பதாகவும், அவர்களுக்கு இன்டர்போல் காவல்துறையினர் சிவப்பு வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களில் பெரும்பாலானோர் பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உள்ள அகதிகள் என்பதுவும் இவர்களுக்கு டயஸ் போரா பாதுகாப்பு வழங்கி வருவதுவும் தெரியவந்துள்ளது.

மோதர பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவன் உட்பட 47 இலங்கை கடத்தல்காரர்கள் பிரான்சில் இருப்பதாக தெரியவந்துள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து 100 மைல் தொலைவில் அவை அமைந்துள்ளது.

சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என சர்வதேச காவல்துறையினர் இலங்கைக்கு அறிவித்துள்ளனர்.

இதேவேளை,பிரான்ஸில் கைதான அஞ்சுவை அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு அழைத்துவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ். தையிட்டி விகாரையை ஒருபோதும் அகற்ற முடியாது: சவேந்திர சில்வா

யாழ். தையிட்டி விகாரையை….

யாழ். தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் சவேந்திர சில்வாவிடம் ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

இனவாத, மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்டவிரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது என தெரிவித்துள்ளார்.

குறைந்த வட்டியில் கடன் வசதி! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

குறைந்த வட்டியில் கடன் வசதி!….

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வசதிகளை வழங்க அமைச்சரவை இணங்கியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடன் வழங்கும் திட்டத்தை விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடன் வசதியைப் பெறுவதற்கான ஒரே தகுதி வெளிநாட்டில் பணிபுரிவது அல்லது வெளிநாட்டில் பணிபுரிந்து திரும்பி வந்து இந்நாட்டில் தொழில் தொடங்குவது மட்டுமே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரச மற்றும் வர்த்தக வங்கிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்படாத வகையில் இந்த கடன் திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் சிறப்புத் திட்டம்

சிறுவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும்….

நாட்டின் சிறுவர்களுக்கான போசாக்கு மட்டத்தை உயர்த்தும் வகையில் விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (07.05.2023) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியுள்ளதாவது, உத்தேச வேலைத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி சிறுவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த பிஸ்கெட் வகையொன்றை வழங்கவுள்ளோம்.

அதற்கான ஏற்பாடுகளை தற்போது செய்து வருகிறோம்.

மேலும், குழந்தைகளுக்கு முட்டை போன்ற சத்துள்ள உணவை வழங்குவதற்குத் தேவையான உணவுப் பொருட்களைக் குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு தயாரான இளம் தம்பதி நீரில் அடித்து சென்று மாயம்

திருமணத்திற்கு தயாரான இளம்…

வெயாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்தனகலு ஓயாவின் கிளையான எல் ஓயாவில் நீராடச் சென்ற இளம் காதலர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் குறித்த இளம் காதலர்கள் நீராடச் சென்ற போதே நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் திருமண பந்தத்தில் இணைய எதிர்பார்த்திருந்த 19 வயதுடைய இளம் காதலர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் காணாமல் போன இளைஞன் வெயங்கொட பிரதேசத்தை வசிப்பிடமாகவும், யுவதி குடாஓயா லபுதென்ன பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்டுள்ளார்.

வெயங்கொட பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன காதலர்களை தேடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு – 25 பேர் மரணம் – வைத்தியர்கள் கடும் எச்சரிக்கை

இலங்கையில் ஆபத்தாக மாறியுள்ள டெங்கு…

இந்த வருடத்தில் சுமார் 300,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகலாம் என மருத்துவ திணைக்களம் எச்சரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

ஒரு நோயாளி கண்டறியப்பட்டால், சமூகத்தில் மேலும் 10 நோயாளிகள் இருப்பதாக அனுமானித்துக் கொள்ள முடியும் என அவர் கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் இதுவரை 30,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் விஜேமுனி தெரிவித்தார்.

கொழும்பு நகர எல்லைக்குள் 1337 பேர் காய்ச்சலுடன் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 1138 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்து டெங்கு தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பதை உறுதி செய்யுமாறு மருத்துவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக குழந்தைகள் மத்தியில் இந்நோய் பரவும் தன்மை காணப்படுவதால் பிள்ளைகள் மீது அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் விசேட கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் நிலவும் மூன்றாவது டெங்கு திரிபின் தீவிரத்தை தாங்கும் நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் இல்லை என்பதால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் இந்நோய்க்கு பலியாவதைத் தடுக்க முடியாது எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! சந்தேகநபர் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்

மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி…

களுத்துறை தெற்கில் உள்ள தங்குமிடமொன்றுக்கு அருகாமையில் புகையிரத பாதையில் மர்மமான முறையில் 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாகொட பிரதேசத்தில் வசிப்பிடமாக கொண்ட 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி மேலும் இரு இளைஞர்கள் மற்றும் யுவதி ஒருவருடன் நேற்று முன்தினம் (06.05.2023) பிற்பகல் பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்துள்ளமை சிசிடிவி காட்சி விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றுமுன் தினம் மாலை 6.30 மணியளவில் குறித்த இடத்திற்கு வந்த குழுவினர் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து அந்தந்த ஹோட்டலில் இரண்டு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது தடையாக இருந்தமையினால் தனது நண்பியின் தேசிய அடையாள அட்டையை காண்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு அறைகளை முன்பதிவு செய்து ஒரே அறையிலிருந்து நால்வரும் மது அருந்தியதை ஹோட்டல் ஊழியர் ஒருவர் பார்த்ததாக கூறப்படுகின்றது.

மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம் : இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ!!

கேரளாவில்..

இந்திய மாநிலம் கேரளாவில் மசூதியில் இந்து திருமணம் நடத்தப்பட்ட வீடியோவை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்திய இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், அதன் முன்னோட்டம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மசூதியில் நடத்தப்பட்ட இந்து திருமணம்: இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் பாராட்டி பகிர்ந்த வீடியோ@twitter இந்த படம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது போல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பலரும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ’காம்ரேட் ஃப்ரம் கேரளா’ என்ற ட்விட்டர் பக்கத்தில், மசூதியில் இந்து திருமணம் நடத்தப்படும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்து ’இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என ட்விட் போட்டுள்ளனர்.

இதனை இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் ‘மனித குலத்தின் மீதான அன்பு எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருக்க வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த ட்விட் இணையத்தில் வைரலாகியுள்ளது. கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் இந்து முறைப்படி, ஒரு மசூதியில் திருமணம் நடத்தியிருப்பது அந்த வீடியோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையிலிருந்த குடும்பத்தை சேர்ந்த அந்த மணப்பெண்ணுக்கு, மசூதி நிர்வாகம் 10 சவரன் நகை மற்றும் ரூ.20 லட்சம் ரொக்க பணம் கொடுத்துள்ளது.

ஏற்கனவே மத ரீதியான பல பிரச்சனைகள் உண்டாகியிருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏர். ஆர் .ரகுமான் பகிர்ந்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டகிராம் காதலனுடன் பைக் ரேஸ்.. விபத்தில் காதலி பலி : சாலையிலேயே போட்டு விட்டு தப்பியோடிய காதலன்!!

கன்னியாகுமரியில்..

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் விஜூ. 19 வயதான இவர் பள்ளி படிப்பை முடிக்கவில்லை. இவர் ஹை எண்ட் மாடல் பைக் ஒன்றை வைத்து இருக்கிறார்.

இஸ்டாவில் பைக்கை வைத்து அடிக்கடி போட்டோ போடும் இவருக்கு கஞ்சா பழக்கம் தொடங்கி பல போதை பொருள் பழக்கங்கள் இருக்கின்றன. இவர் போடும் பைக் போட்டோக்களை பார்த்து மணவாளக்குறிச்சியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் மயங்கி உள்ளார்.

இவர்கள் அடிக்கடி இன்ஸ்ட்டாவில் பேசி நட்பாகி உள்ளனர். அதன்பின் இவர்கள் காதலிக்கவும் தொடங்கி உள்ளனர். இதையடுத்து அடிக்கடி இவர்கள் நேரில் சந்தித்து வெளியே சுற்ற தொடங்கி உள்ளனர். இவர்கள் சந்திக்கும் போதெல்லாம் பைக்கில் வேகமாக செல்வதை வழக்கமாக வைத்து இருந்தனர்.

அடிக்கடி கஞ்சா போதையில் இவர் பைக் ஓட்டி வந்துள்ளார். அவரின் காதலியும்.. நான் திருத்துவேன் என்று நம்பிக்கையாக அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இந்த விஷயம் ஒரு நாள் அந்த மாணவியின் குடும்பத்திற்கு தெரிய வந்துள்ளது.

அதற்கு மாணவி.. நான் காதலிக்க வேண்டாம் என்று சொன்னால் அவன் என் மீது ஆசிட் அடிப்பான். அதனால் நான் சொல்ல மாட்டேன் என்று கூறி உள்ளார். இதற்கு விஜூவை நேரில் அழைத்து வந்து அந்த மாணவியின் அம்மா கண்டித்து உள்ளார்.

இதை கேட்டுக்கொண்டது போல நடித்த விஜூ மறுநாளே மாணவியின் பள்ளிக்கு சென்று அவரை பிக் அப் செய்துவிட்டு பின்னர் லேட்டாக வீட்டிற்கு வந்து விட்டுள்ளார். இவர்களின் காதல் அந்த மாணவியின் அம்மாவின் அனுமதியை மீறி இப்படியே தொடர்ந்து உள்ளது.

இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் மாணவியை திடீரென பைக்கில் அழைத்துக்கொண்டு விஜூ சென்றுள்ளார் .குளச்சல் மேற்கு கடற்கரை சாலை பகுதியில் மிக வேகமாக விஜூ சென்றுள்ளார். 120 கிமீக்கும் அதிக வேகத்தில் இவர் பைக் ஓட்டி உள்ளார்.

இவர் கடுமையான கஞ்சா போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதனால் அப்போது கட்டுப்பாட்டை இழந்தவர் சாலை தடுப்பில் மோதி பறந்து இருக்கிறார். பின்னால் இருந்த காதலி சாலை தடுப்பில் இருந்த கம்பியில் படார் என்று மோதி உள்ளார்.

இதில் சம்பவ இடத்தில் அவரின் காதலி உயிருக்கு போராடி உள்ளார். ஆனால் அவரை கண்டுகொள்ளாதது போல.. அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு வேகமாக எஸ்கேப் ஆகி உள்ளார் விஜூ.

இதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற விஜூ.. அங்கே தனது காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளார். அவருக்கு ஏற்பட்டது விபத்து என்பதால் முறைப்படி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் முடிவில் போலீசார் எப்ஐஆர் பதவி செய்தனர்.

இன்னொரு பக்கம் நெடுஞ்சாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த மாணவியை அப்பகுதி மக்கள் காப்பாற்றி குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து இரண்டு விபத்தும் ஒரே இடத்தில் நடந்ததை வைத்து விஜூவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது. இதையடுத்து விஜூ மீது விபத்து ஏற்படுத்துதல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது.