மருதூரில் இயற்கை உபாதை கழிக்க சென்ற பள்ளி மாணவி விரைவு ரயில் மோதி உயிரிழந்தார். இதுதொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் செல்வன். இவரது மகள் கனிமொழி வயது 15. இவர் திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.
தற்போது பள்ளி விடுமுறைக்காக தனது கிராமத்திற்கு வந்துள்ளார். பள்ளி மாணவி கனிமொழி இன்று அதிகாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரயில் மோதியதில் பள்ளி சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் காதலன் தன்னுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் 22 வயதான ஆதிரா. இவர் அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் என்பவரை காதலித்தார். 2 ஆண்டுகளாக காதலித்த இவர்கள் பல இடங்களுக்கு சென்று நெருக்கமாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து கொண்டனர்.
அண்மையில் இருவரும் பிரிந்த நிலையில் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அருண் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆதிரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து ஆதிராவின் பெற்றோர் கொடுத்த புகாரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்காலத்தில் இலங்கை ரூபாவின் பெறுமதி 567 ரூபாவாக குறையும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு முதல் 2028 ஆம் ஆண்டு வரையிலான இலங்கை ரூபாவின் பெறுமதியை ஒப்பிடும்போது, 2022 ஆம் ஆண்டில் 1000 ரூபாவின் பெறுமதி 2028 ஆம் ஆண்டு அளவில் 567 ரூபாவாக குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023ஆம் ஆண்டு ஒருவரின் வருமானத்தை 43 சதவீதம் அதிகரிக்காமல் இந்த நிலையை எதிர்கொள்ள முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். எனினும், இவ்வாறு வருமானத்தை பெருக்குவது ஒருபோதும் சாத்தியமில்லை எனவும், இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக் காலகட்டத்தில் 119% வரிச்சுமையை மக்கள் மீது திணிக்க அரசு திட்டமிட்டுள்ளதால் நிலைமை மேலும் மோசமாகும். 2023 ஆம் ஆண்டு 27,871 பில்லியன் ரூபாவாக இருந்த வரிச்சுமை 2028ஆம் ஆண்டில் 44,601 பில்லியன் ரூபாவாக உயரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையைச் சமாளிக்க, ஒருவரது உணவு நுகர்வு அளவை பாதியாகக் குறைக்க வேண்டும். இது நடந்தால், பெரும்பாலான மக்கள் உணவுப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு உயிரிழப்பார்கள் என அவர் எச்சரித்தார்.
இந்த பேரிடரில் இருந்து மக்களை மீட்பதற்கு அரசு அதிக முயற்சியையும் கூடுதல் செலவையும் செய்ய வேண்டியிருக்கும். நாட்டின் தற்போதைய பொருளாதாரம் 3 – 4 சதவீதம் வரை சுருங்கி வருவதால், மக்களுக்கு நிவாரணம் வழங்குவது கடினம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நாம் தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளோம். அதன் மூலம் இந்நாட்டு மக்களுக்கு நன்மை கிடைத்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் மறுசீரமைக்கப்பட்ட பின்னர் அரசாங்க ஊழியர்களுக்கு இறுதி காலாண்டில் சம்பள உயர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசாங்கம் எதிர்ப்பார்க்கும் இலக்கை எட்ட முடியுமானால் அரச ஊழியர்களுக்கும் அதன் நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியை சுற்றி கொந்தளிப்பு நிலை உருவாகியுள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த கடல் கொந்தளிப்பு நிலை அடுத்த சில நாட்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் சூறாவளியாக மாறும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே, 5 – 10 வடக்கு அட்சரேகைகள், 90 – 100 கிழக்கு தீர்க்கரேகைகள் மற்றும் 1 – 4 வடக்கு அட்சரேகைகள், 85 – 92 கிழக்கு தீர்க்கரேகைகளுக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களுக்கு பயணிக்க வேண்டாம் என மீனவ மற்றும் கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களை உடனடியாக நிலம் அல்லது பாதுகாப்பான இடத்திற்கு வருமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் – வண்ணார்பண்ணை பகுதியில் மின்சாரம் தாக்கி கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்றைய தினம் (07.05.2023) அதிகாலை 1.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் 18 வயதான கண்ணதாசன் இராகுலன் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
வீட்டில் வளர்க்கப்படும் ஆடொன்று குட்டி ஈன்றதனால், குறித்த மாணவர் அதனை வேறோர் இடத்துக்கு மாற்ற முற்பட்டுள்ளார்.
அப்போது அருகில் இருந்த பலா மரத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்குமிழியில் ஏற்பட்ட மின் ஒழுக்கினால் மாணவர் தாக்கப்பட்டிருக்கிறார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
மழை பெய்துகொண்டிருந்த வேளையிலேயே இவ்வாறு மின்சார தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பதுளை – ஹல்துமுல்ல பகுதியில் 12 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (06.05.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 55 வயதுடைய ஆசிரியர் ஒருவரே இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட மாணவி பாடசாலையின் கழிவறையில் வைத்து துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை – பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியில் இலங்கை வீராங்கனை5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கடந்த 20 வருடங்களில் மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டியொன்றில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட் வீழ்த்தியமை இதுவே முதல் தடவை என குறிப்பிடப்படுகின்றது.
கடந்த 04.05.2023 அன்று எஸ்எஸ்சி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை மகளிர் அணி 58 ஓட்டங்களால் வென்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 29.5 ஓவர்களில் 128 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அணித்தலைவி நிகார் சுல்தானா 51 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் ஓஷதி ரணசிங்க 6 ஓவர்களில் 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மகளிருக்கான ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை வீராங்கனை ஒருவர் 5 விக்கெட்களை வீழ்த்தியமை இது 3ஆவது தடவையாகும்.
ஓஷதி ரணசிங்க சிறப்பாட்டக்காரர் என்ற விருதையும் பெற்றுள்ளார். 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் சுதர்ஷினி சிவானந்தன் 2 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
2003ஆம் மார்ச்சில், மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக சந்தமாலி தோலவத்த 16 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். அதன்பின் 20 வருடங்கள் கடந்த நிலையில் இலங்கை சார்பில் ஓஷதி ரணசிங்க 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 3ஆவது போட்டி எஸ்எஸ்சி மைதானத்தில் இன்றைய தினம் (07.05.2023) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி கடற்கரையில் நீராடச் சென்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நேற்றைய தினம் (06.05.2023 மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாகக் கூறி சென்ற மாணவர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணியை சேர்ந்த 16 வயதான டானியல் றோகித் மற்றும் இருதயபுரத்தினை சேர்ந்த 16 வயதான நிரோசன் பிரவீன் ஆகியோர் என உறவினர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் கறுப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் நேற்றைய தினம் (06.05.2023) மாலை வீட்டிலிருந்து வகுப்புக்குச் செல்வதாகக் கூறி விட்டு கடற்பகுதியில் நீராடச் சென்றுள்ளனர்.
இதன்போது அலையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரண விசாரணையைத் தொடர்ந்து சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குப் பிரேதப் பரிசோதனைகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி தொடர்ந்தும் விடுமுறை நாட்களிலும், இரவு வேளைகளிலும் வேலி அடைக்கப்பட்டு வரும் நிலையில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து குறித்த சில நபர்களால் தூண்கள் போடப்பட்டு கடந்த 30 ஆம் திகதி வேலி அடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு சென்றதையடுத்து குறித்த வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தன.
வெசாக் தினத்தை முன்னிட்டு அரச திணைக்களங்களுக்கு விடுமுறை விட்டுள்ள நிலையில் நேற்று (05.05) மாலை முதல் இரவிரவாக குறித்த பகுதியில் மேலும் குளத்து நீரேந்து பிரதேச நிலத்தை கையகப்படுத்தி வேலி அடைக்கப்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கவனத்திற்கு விவசாய அமைப்புக்கள் கொண்டு சென்றதையடுத்து, அரச நிலத்தை அத்து மீறி கையகப்படுத்தி வேலி அடைத்தமைக்கு எதிராக கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த சமட்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த நீரேந்து பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை அண்மித்தே குறித்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது நினைவேந்தல் நிகழ்வு இன்று (06.05.2023) வவுனியாவில் இடம்பெற்றது.
தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் வவுனியா அலுவலகத்தில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வின் போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ரெலோ கட்சியின் முக்கிய உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன் போது தலைவர் சிறி சபாரத்தினம் மற்றும் உயிர் நீத்த போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்தக் காலம் சம்மர் காலம் என்பதால் அடிக்கிற வெயிலைத் தணிப்பதற்கு பலரும் பல வழிகளை யோசித்து வந்தால் இந்தியாவில் ஒரு பகுதியைச் சேர்ந்தவர்கள் இரு தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.
அடிக்கிற வெயிலை சமாளிக்க முடியாத மக்கள் தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாடு, ஒடிசா, வங்காளம், அசாம் மாநிலங்களில் பாரம்பரிய முறைப்படி ஒரு மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கு நடக்கும் திருமணம் போல மேள தாளத்துடன் இத்திருமணம் நடைபெற்றுள்ளது.
நாடியாவில் உள்ள சாந்திபூர் ஹரிபூர் பஞ்சாயத்தின் சர்தார் பாரா பகுதியில் ஒரு பழங்கால வழக்கத்தின் படி தவளைக்கும் தவளைக்கும் திருமணம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தவளைகள் திருமண விழாவில் மந்திரங்கள் ஓதி அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என நம்பப்பட்டது. வெயில் இல்லாமல் நீர் நிலைகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்யக் கூட தண்ணீர் இல்லாத நிலையில் மக்கள் பெரும் பாடு படுவதால் ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அந்த ஊரில் உள்ள காளி கோவிலில் தான் இந்த வெகு விமர்சையாக இந்த திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த ஊர் மக்களின் நம்பிக்கையின் படி தவளைகள் கருவுறுதல் தான் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் தவளைகள் தான் உலகத்தில் முதலில் தோன்றியதாகவும் அவை தண்ணீரில் முட்டையிட்டு பிறகு முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்து நிலத்திற்கு வந்து வாழ்க்கையை வாழ்கின்றனர். இதனால் தான் இந்த தவளைகளுக்கு திருமணம் செய்து மழைக்காக வேண்டி இருக்கிறார்கள்.
கேரளாவின் முதல் திருநங்கை பாடி பில்டர் என்ற பெருமையை பெற்றவர் பிரவீன்நாத். பெண்ணாக இருந்து ஆணாக மாறிய திருநம்பியான பிரவீனும் ரிஷானா ஐஷும் கடந்த காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் பிரிந்து செல்வதாக சில நாட்களுக்கு முன் சில இணைய ஊடகங்களில் செய்தி பரவியது. இதை தொடர்ந்து பிரவீன் மீது சமூக ஊடகங்களில் விமர்சனம் எழுந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானார் பிரவீன். பிரவீன் சமூக வலைதளங்களில் தங்களுக்கு எதிரான தவறான பிரசாரங்களை மறுத்து பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணம் கேரளாவில் பேரும் அதிர்வையும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது.
பிரவீன்நாத் திருநங்கையாக இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். இந்த நிலையில், பிரவீன்நாத் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சூரில் உள்ள அவரது வீட்டில் இறந்து கிடந்தார்.
பிரவீன்நாத்தின் மனைவி ரிஷானா ஐஷூவும் தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். பூச்சி மருந்தை உட்கொண்ட ரிஷானா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரிஷானா ஐஷு முன்னாள் மிஸ் மலபார் ஆவார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரவீன் மற்றும் அவரது மனைவி மீதான சமூக வலைதளங்கள் மூலம் வந்த செய்திகள் தற்கொலைக்கு காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டுகின்றனர். பிரவீன்நாத்தின் தற்கொலை குறித்து திருநங்கைகள் இந்த மரணத்திற்கு ஆன்லைன் ஊடகங்களே காரணம் எனக்கூறி, சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி முதல் மந்திரி மற்றும் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.
அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட விபத்தில் பிரபல யூடியூபர் அகஸ்தியா சவுகான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த TTF வாசனைப் போன்று பலரும் அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டி அதை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இப்படி அதிவேகமாக பைக் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா சவுகான். இவர் சூப்பர் பைக்குகளை அதிவேகமாக ஓட்டி அதைத் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.
இவரின் யூடியூப் பக்கத்தை 10 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் அகஸ்தியா சவுகான் தனது கவாசாகி பைக்கில் யமுனா விரைவு சாலைவழியாக டெல்லிக்கு சென்று கொண்டிருந்தார்.
இவர் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த தடுப்பு மீது பைக் மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட இவர் பலத்த காயம் அடைந்துள்ளார். மேலும் அவரது ஹெல்மெட் இரண்டாக உடைந்துள்ளது.
இந்த விபத்து பற்றி அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி அகஸ்தியா சவுகான் உயிரிழந்தார். இவர் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (20) என்ற இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். ப்ளஸ் டூ வரைபடித்துள்ள இவர் கடந்த இரண்டு மாதங்களாக மல்ல சமுத்திரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் .
நாள்தோறும் பேருந்துகளில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அவரின் தங்கையை அழைத்துக் கொண்டு பணிக்கு சென்று விட்டு, மாலையில் பேருந்து மூலம் வீடு திரும்பினார். அதற்காக ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் தனியார் பேருந்தில் ஏறி பயணித்தார்.
பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால் இருக்கையில் அமர்ந்திருந்த பயணி ஒருவரிடம் தங்கையே பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு அவர் நின்றபடி பயணித்தார். அப்போது பேருந்து படிக்கட்டின் அருகே அவர் நின்றதாக தெரிகிறது.
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகே சந்திர திரையரங்கு வளைவில் பேருந்து திரும்பிய போது, படியின் ஓரம் நின்றிருந்த கௌசல்யா, பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தவறி கீழே விழுந்தார்.
பேருந்து வேகமாக சென்றபோது அவர் கீழே விழுந்ததால் அதே வேகத்தில் சாலையோரம் இருந்த கல்லில் கவுசல்யாவின் தலை மோதியது. இதில் படுகாயம் அடைந்து அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பேருந்தில் இருந்து பிடிமானம் நழுவி தரையில் விழுந்த கவுசல்யாவின் இறுதி நிமிடங்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | சேலம்: ஆட்டையாம்பட்டி அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த கௌசல்யா (20) என்பவர் தவறி விழுந்து உயிரிழப்பு; பதைபதைக்கும் சிசிவிடி காட்சி வெளியானது!#SunNews | #Salem | #Buspic.twitter.com/8IwcpoiLbb
வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் இன்று (06.05.2023) விஜயம் செய்துள்ளனர்.
வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கடந்த 28 ஆம் திகதி ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தலமையிலான குழுவினர் விஜயம் செய்து வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தையும், அதன் சூழவுள்ள பகுதிகளையும் பார்வையிட்டுள்ளனர். இதன்போது, நெடுங்கேணி பொலிசார் மற்றும் சிங்கள மக்களும் உடன் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.