தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழமுக்கம் இன்று (06.05.2023) மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக எதிர்வரும் மூன்று நாட்களில் மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டின் மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு மற்றும் தெற்கு உட்பட பல பிரதேசங்களில் தற்போது மழையுடன் கூடிய காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்சமாக நீர்கொழும்பில் 31.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தை வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மக்களை இலக்கு வைத்து இடம்பெறும் நூதன மோசடி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. நபர் ஒருவர் நீண்ட காலமாக மக்களின் அனுதாபங்களை பெற்று தமக்கான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறார்.
சனநெரிசல் உள்ள பகுதிகள், வாகன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசியை திட்டமிட்டு கீழே கொட்டி விட்டு, அதனை அள்ளுவது போன்று நடித்து வருகிறார். இதனை பார்கும் மக்கள் ஏமாற்றம் அடைந்து அவர் மீது அனுதாபம் கொண்டு பெருந்தொகை பணத்தை வழங்குகின்றர்.
கடந்த காலங்களின் கொழும்பை இலக்கு வைத்து இந்த மோசடிகள் இடம்பெற்று வந்தன. தற்போது நாட்டில் பல பகுதிகளுக்கு செல்லும் தொடருந்துகளில் இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றமை தெரிய வந்துள்ளது. இது குறித்து மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முகத்துக்கு பூசம் கிரீம் மூலம் அண்ணன் தங்கை இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தரம் 08 இல் கல்வி கற்கும் 13 வயதாகிய அச் சிறுமி தூக்கில் தொங்கி தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தலவாக்கலை ட்றூப் தோட்டத்தில் நேற்று (05) மாலை 3 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. போயா தினமாகிய நேற்று அண்ணன் தங்கை மற்றும் பாட்டியுடன் ஆகிய மூவரும் ஆலயத்திற்கு செல்ல தயாராகும் போது அண்ணன் பயன்படுத்தும் கிரீமை தங்கை பயன்படுத்தியுள்ளார்.
இதன் போது அண்ணன் தங்கையிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பாட்டியுடன் குறித்த மாணவன் ஆலயத்திற்கு செல்லும் போது தனது தங்கையையும் அழைத்த போது ஆலய வழிபாட்டில் கலந்து கொள்ள வருவதற்கு மறுத்துள்ளார்.
இதை அடுத்து பாட்டியும் மாணவனும் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டினை முடித்து கொண்ட ஆலயத்தில் வழங்கப்பட்ட அன்னதானத்தினை தங்கைக்கும் எடுத்துகொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அயலவர்கள் சகோதரி இறந்துள்ளதாக தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த இளைஞன் மற்றும் பாட்டியும் வீட்டுக்கு வந்த பார்த்த போது தனது தங்கை தூக்கில் தொங்கி தன்னுயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தலவாகலை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் போது எனது தங்கையிடம் அன்பாக இதனை கூறியதாகவும் இவ்வாறு செய்து கொள்ளுவார் என தனக்கு தெரியாது எனவும் எப்போதும் பேசுவது போல் பேசியதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.
இறந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவியின் தாய் தந்தை கொழும்பில் தொழில் புரிவதாகவும் மாணவியும் , சகோதரரும் பாட்டியின் அரவணைப்பிலேயே இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிற்குள் புகுந்த கபர சுரேஷ் என்ற சந்தேக நபர், தங்கப் பொருட்களையும் பணத்தையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பண்டார மற்றும் மதுரங்க ஆகியோருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிருலப்பனை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 42, 46 மற்றும் 53 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம் – பரடைஸ் பகுதியில் அமைந்துள்ள மகாகாளி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பெருமளவு குவிந்து வருகின்றனர்.
கொழும்பிலுள்ள பழமையான கோவில்களில் இந்த கோவில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கான காரணம், வேறெந்த கோவில்களிலும் இல்லாத ஓர் சிறப்பு தன்மையும் சூழலும் அந்த கோவிலில் காணப்படுகின்றது.
இந்த கோவிலுக்கு ஒரு முறை செல்பவர்கள் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றே எண்ணுவதாகவும், கேட்கும் வரங்கள் அனைத்து கிடைப்பதாகவும் அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
கனவில் கடவுள் கூறியதால் ஆபாச நடிகையாக மாறியதாக முன்னாள் அமெரிக்க ஆசிரியை கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிரபல ஆபாச நடிகையாக அறியப்படுபவர் கர்ட்னி டில்லியா (35). இவர் கூறியுள்ள விடயம் தற்போது இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதாவது, கர்ட்னி டில்லியா இதற்கு முன்பு ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். ஆனால் ஆபாச நடிகையாக மாறுவதற்கு கடவுள் தான் காரணம் என பகீர் கிளப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஆபாச நடிகையாக வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். அது ஒரு கனவு. நான் அப்போது ஆசிரியையாக இருந்தேன். ஆனால் கடவுள் வந்து என்னை ஆபாச நட்சத்திரமாக மாறுமாறு கூறினார். இன்று அவர் விருப்பப்படி இந்தத் தொழிலில் ஈடுபட்டு முழு மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் கடவுளுடன் தொடர்பில் இருக்கிறேன். கடவுள் உலகளாவியர், எனவே கடவுளுடன் இணைவதற்கும், கடவுளின் செய்திகளைப் பெறுவதற்கும், அவரை புரிந்துகொள்வதற்கும் எந்த குறிப்பிட்ட மத அமைப்பும் தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த கர்ட்னி டில்லியா மூன்று ஆபாச இணையதளங்களை நடத்தி வருகிறார். அவருக்கு 25,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் வெசாக் கொண்டாட்ட நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்று வருவதுடன், அதனை பார்வையிட பெருமளவான தமிழ் மக்கள் சென்று வருவதையும் அவதானிக்க முடிகிறது.
வவுனியா மாவட்டத்தின் பிரதான வெசாக் கொண்டாட்ட நிகழ்வு கண்டி வீதியில் அமைந்துள்ள போதிதட்ஷணராமய விகாரையில் சிறப்பாக இடம்பெற்று வருகிறது.
இந்நிகழ்வை விசேட வழிபாட்டை தொடர்ந்து மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் இணைந்து ஆரம்பித்து வைத்தனர்.
விகாரையைச் சூளவும் ஏ9 வீதியிலும் புத்தரின் பல்வேறு வடிவங்களையும் போதனைகளையும் தாங்கிய வெளிச்சக் கூடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், பெரும்திரளான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அதனை பார்வையிட்டு வருகின்றனர்.
இதேவேளை, வவுனியாவில் பல இடங்களிலும் வெசாக் கூடுகளும் பௌத்த கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் போல தமிழகத்தின் நான்கு பக்கமும் சாராய ஆறு ஓடும் அளவிற்கு டாஸ்மாக் வியாபாரம் செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் மது விற்பனை சாதனைப் படைக்கும் அளவுக்கு டார்க்கெட் நிர்ணயம் செய்து திட்டமிட்டு வருகிறது அரசு.
இது ஏதோ தமிழகத்தில் மட்டும் நிகழ்கிற சம்பவமாக இல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களும் இப்படி ‘குடி’யின் பிடியில் சிக்கி தவிக்கின்றன. இந்நிலையில், சரக்கு வாங்கி தர சொல்லி தகராறு செய்து வந்ததால், ஆத்திரத்தில் இளம்பெண்ணை கணவன் அடித்து கொன்ற சம்பவம் கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மய்யா (25). இவரது மனைவி லட்சுமி (22). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான்.
இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே கரடிபுத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் மாந்தோப்பில் குடும்பத்தோடு தங்கி வேலை செய்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ள புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு தர்மய்யா தனது குழந்தையோடு சென்றார். அப்போது மனைவி லட்சுமி குறித்து தர்மய்யாவிடம் அவரது சகோதரி கேட்ட போது கடந்த 23- தேதி கோபத்தில் மனைவியை அடித்து கொன்று விட்டு, வேலைச் செய்து வந்த மாந்தோப்பிலேயே புதைத்து விட்டதாக தெரிவித்தார்.
இந்த தகவலை கரடிபுத்தூரில் உள்ள மற்றொரு மாந்தோப்பு காவலாளியான சுதா என்பவரிடம் தர்மய்யாவின் சகோதரி தெரிவித்தார். இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் பேரில், கடந்த 27ம் தேதி பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கும்மிடிப்பூண்டி தாசில்தார் பிரீத்தி முன்னிலையில் லட்சுமியின் உடலை மாந்தோப்பில் இருந்து தோண்டி எடுத்தனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தர்மய்யாவை தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் ஆந்திராவில் தர்மய்யாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கணவன்-மனைவி இருவருக்கும் குடி பழக்கம் இருந்ததாகவும், கடந்த 22ம் தேதி மனைவி லட்சுமிக்கு மது வாங்கி கொடுக்காததால் அவர் கோபத்தில் மறுநாள் சமைக்காமல் இருந்ததால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தகராறில் ஆத்திரமடைந்த தர்மய்யா மண்வெட்டியால் மனைவி லட்சுமியை தாக்கினார். இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மனைவியை குழி தோண்டி புதைத்ததாக தர்மய்யா தெரிவித்தார். போலீசார் அவரை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைந்தனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிசாரால் 1000 பேருக்கு உணவுப் பொதி வழங்கி வைக்கப்பட்டது. வெசாக் தினமானது இன்றும் நாளையும் நாடு பூராகவும் பௌத்தர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் வெசாக் தினத்தில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையத்தால் சமுதாய பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் காத்தார் சின்னக்குளம் சிவில் பாதுகாப்பு அமைப்பு ஊடாக ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
ஏ9 வீதியால் பயணித்த பலரும் தமது வாகனங்களை நிறுத்தி உணவினைப் பெற்றுச் சென்றனர். வவுனியா தலைமை பொலிசிஸ் நிலையம் முன்பாக பௌத்த, இந்து மத குருமார்களின் ஆசிர்வாதத்துடன், இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, சமுதாய பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, காத்தார் சின்னக்குளம் கிராம அலுவலர், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், காத்தார் சின்னக்குளம் சமுதாய பொலிஸ் குழுவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
காதல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகி வருகிறது. ஆனால் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் செய்வதால் பெற்றவர்களின் மனம் எத்தனை பாதிக்கப்படும் என்பதை பிள்ளைகள் யோசிப்பதே இல்லை.
இத்தனை நாள் வளர்த்த தாய், தந்தையை விட்டு ஒரு வருடம் கூட பழகிப் பார்க்காத ஒருத்தரை நம்பி வீட்டை விட்டு வெளியேறுவது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்பது வயது காலத்தில் இன்றைய இளைய சமூதாயம் அறிவதே இல்லை.
சரியான புரிதலும், திட்டமிடலும் இல்லாத திருமணம் நாளடைவில் சண்டையும், சச்சரவுமாகிப் போகும். பின்னர் கண்ணீர் வடித்து பிரயோசனமில்லை என்பதை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை.
தமிழகத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி பென்னாகரம் பகுதியில் வசித்து வருபவர் சுந்தர்ராஜன். இவரது மகள் ஸ்ரீபவானி. இவர் அதே ஊரில் வசித்து வரும் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வீட்டில் எதிர்ப்பு கிளம்பும் என்பதால் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மாயமான நிலையில், பெண்ணின் பெற்றோர் மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அத்துடன் நில்லாமல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தனர்.
அதன் பிறகு காவல்துறையினரின் தீவிர விசாரணையில் இவர்களின் மகள் ஸ்ரீபவானி, கார்த்திக்குடன் திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.
இதில் கார்த்திக் திருமண வயதை எட்டாததால் பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிடித்து துறையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கார்த்திக் திருமண வயதை எட்டாத நிலையில் அது குறித்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீபவானியின் பெற்றோர் தங்கள் மகளைத் தங்களுடன் அனுப்பி வைக்கும்படி கதறி அழுதனர். அப்போது கார்த்திக் பெண்ணின் தாய் சுமதியின் கையை பலமாக தாக்கினார். இதனால் பெண்ணின் தாயாரின் கையில் இருந்து ரத்தம் வழிந்தோடியது.
அதிகப்படியான ரத்தம் வெளியேறியதால் காவல் நிலையத்திலேயே மயக்கம் அடைந்து சுமதி கீழே விழுந்தார். சுமதியின் கணவர் அதாவது பெண்ணின் தந்தை சுந்தர்ராஜன் காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் கொடுத்தார். பின்னர் சுமதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
காதல் திருமணம் செய்த மகள் மீது மண்ணை அள்ளி வீசி தாய் சாபமிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது.
தாய் சோகத்தில் அரற்றிக் கொண்டிருந்த போது, அவரது மகள் ஸ்ரீபவானி, தனது காதல் கணவன் கார்த்திக்குடன் சிரித்தப்படியே பேசுகிற காட்சி, சினிமாவில் மட்டுமல்ல… நிஜத்திலும் அரங்கேறியது அங்கே கூடியிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காதலுக்கு கண்கள் இல்லை தான் போல!
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள விளாப்பட்டி மேட்டுக்களம் பகுதியை சேர்ந்த அரவிந்த் (26) என்பவருக்கும், அதேபகுதியை சேர்ந்த நாகேஸ்வரி (22)என்ற பெண்ணுக்கும் 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
அரவிந்த் சென்னையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்ததால் நாகேஷ்வரி தனது கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நாகேஸ்வரி 7மாத கர்ப்பிணியாக இருந்தார்.
இவருக்கு ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த அவரது பெற்றோர் முடிவு செய்து இருந்தனர். இதற்காக அரவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
திருமணம் ஆனதிலிருந்து நாகேஸ்வரியிடம் அரவிந்த் மற்றும் பெற்றோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அடிக்கடி நாகேஸ்வரி தாயார் வீட்டுக்கு சென்றிருந்தார்.
மீண்டும் சமாதானம் பேசி கணவருடன் சேர்த்து வைத்திருந்தனர். தொடர்ச்சியாக அரவிந்த் மற்றும் அவரது தாய், தந்தை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, கர்ப்பிணி நாகேஷ்வரிக்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த நாகேஷ்வரி, தனது கணவர் வீட்டில் நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகேஸ்வரி விஷ மருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அரவிந்த் பெண்ணின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரம் நாகேஸ்வரிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இலுப்பூர் ஆர்.டி.ஓ. குழந்தைசாமி விசாரணையும் நடைபெற்று வருகிறது.
ஆனால் கர்ப்பிணியின் பெற்றோர், உறவினர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். இது தற்கொலை அல்ல, அப்பெண்ணின் கணவர் வீட்டார் கொலைச் செய்து விட்டதாக குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் நேற்று மாலை நாகேஸ்வரியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை பெற்றோர், நேராக அன்னவாசல் அருகே உள்ள கணவர் அரவிந்த் வீட்டு வாசலில் அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நாகேஸ்வரியின் தற்கொலைக்கு காரணமான அரவிந்த் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி-புதுக்கோட்டை புறவழிச்சாலையில் கீரனூர் அருகே குளத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் உரிய விசாரணை நடத்தி கர்ப்பிணி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.
ஹபரனை – கொழும்பு வீதியில் நேற்று (04.05) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில், ஹபரனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கிண்ணியா மாலிந்துறையை சேர்ந்த முகம்மது இஸ்மாயில் முகம்மது இஸாம் (வயது 43) என்ற குடும்பஸ்தரே இந்த விபத்தில் உயிரிழந்தவராவார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்
உயிரிழந்தவரின் உறவினரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையுமான செய்யது முஹம்மது முஹம்மது றியாஸ் (வயது 40) என்பவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜப்பான் நாட்டுக்கு தொழிலுக்கு செல்வதற்காக அக்குறுனை பகுதி உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் சந்திக்க சென்றபோதே, இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், வளைவு ஒன்றில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது. மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சாப்பாத்தி மாஸ்டர் ஒருவர் தான் தயார் செய்யும் சப்பாத்தியை வானில் பறக்கவிட்டு செய்யும் வித்தைக்காட்சி பார்வையாளர்களை நெகிழ வைத்துள்ளது. இன்று சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் ட்ரெண்டிங்காகி வருகின்றது.
நபர்களின் திறமைகள் தற்போது மிக எளிதாக இணையதளங்கள் மூலம் வெளிவந்து விடுகின்றது. இங்கு சப்பாத்தி மாஸ்டராக இருக்கும் நபர் ஒருவர் தனது திறமையினை வெளிக்காட்டி 7 மில்லியனுக்கும் மேல் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார்.
குறித்த காட்சியில், இவர் தான் செய்த சப்பாத்தியை உயர பறக்கவிட்ட நிலையில், மீண்டும் பறந்து சென்ற வேகத்தில் தனது கைக்கு வந்துள்ளது. இக்காட்சி காண்பவர்களை நம்பமுடியாத அளவிற்கு நெகிழ வைத்துள்ளது.
குடும்ப வறுமை காரணமாக கல்லூரி படித்துக்கொண்டு பகுதி நேர வேலைக்கு சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்தவர் வேலு (50). இவரது மகன் சதீஷ் (20).
இவர் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்துவந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாகவும், தனது செலவிற்காகவும் நண்பர்களுடன் சேர்ந்து பரிமாறும் வேலைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் தேதி திருமண நிகழ்வு ஒன்றில், சமையல் பணி செய்து கொண்டிருந்த சதீஷ் எதிர்பாராத விதமாக கொதித்துக் கொண்டிருந்த ரசத்தில் விழுந்துள்ளார்.
உடல் முழுவதும் வெந்த நிலையில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் இன்று (05.05) விடுதலை செய்யப்பட்டனர்.
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.
அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுவித்து வழிஅனுப்பி வைத்தனர்.
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் தந்தையினை பாடசாலை அதிபர் அவமானப்படுத்தியதாக தெரிவித்து மாணவன் தற்கொலைக்கு முயன்ற நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இல்ல விளையாட்டு போட்டிக்கான இல்ல அலங்கார செயற்பாட்டினை குறித்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து மேற்கொண்டதாகவும், அதற்கான ஒவியம் வரைவதற்காக அன்றையதினம் இரவு பாடசாலைக்கு தொலைபேசியினை கொண்டு சென்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு தொலைபேசியினை பாடசாலையினுள் குறித்த மாணவன் பாவிப்பதை கண்ட அதிபர் தொலைபேசியினை பறித்ததுடன் மாணவனின் தந்தையை தன்னை சந்திக்க வேண்டும் என கூறியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் மாணவனின் தாய் அதிபரிடம் தொலைபேசியில் விடயத்தை கேட்டதுடன் தொலைபேசியை வழங்குமாறும் கோரியுள்ளார். எனினும் அதிபர் தொலைபேசியினை வழங்காததுடன் தந்தையை கட்டாயம் தன்னை சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து தொலைபேசியின் ஊடாக மாணவனின் தந்தை அதிபரை தொடர்பு கொண்டு கதைத்துள்ளார். இதன் பின்னர் மாணவனின் தந்தை தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக பூவரசங்குளம் பொலிஸில் அதிபர் முறைப்பாட்டினை மேற்கொண்டுள்ளனர்.
இம் முறைப்பாட்டினை அடுத்து இரு பகுதியினரையும் பொலிஸார் அழைத்து பேசி விசாரணை நடத்தியதாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையிலேயே தன்னால் தந்தை அவமானப்படுவதை தாங்க முடியாமல் குறித்த மாணவன் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் மாணவனின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மாணவனின் பெற்றோரால் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வவுனியா தெற்கு வலய கல்வி பணிமனையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் 12 ஆம் திகதி குறித்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்காக அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்படவுள்ளனர். அத்துடன் இச்சம்பவம் தொடர்பான வலயக்கல்விப் பணிப்பாளரும் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே சமயம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த அதிபர் முன்னர் கடமையாற்றிய பாடசாலையில் மாணவி ஒருவருக்கு கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் வழங்க மறுத்தமையினால் அம் மாணவி தற்கொலை செய்து உயிரிழந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.