நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்றதா? விசேட வைத்திய நிபுணர்

நாட்டில் கொவிட் தொற்று அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்படும் அளவுக்கு அதில் உண்மையில்லை. தொற்றாளர்கள் இனம் காணப்பட்டாலும் அது எச்சரிக்கையான நிலை என தெரிவிக்க முடியாது.

என்றாலும் கொவிட் தொற்று இன்னும் முழுமையாக உலகில் இருந்து நீங்கவில்லை என்பதால் அதன் பாதிப்பு தொடர்ந்து இருந்து வருகிறது என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்தார்.

சுகாதார அமைச்சில் வியாழக்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கொவிட் தொற்று 2019இல் உலகளாவிய ரீதியில் பரவிய தொற்றுநாேயாகும். இது இன்னும் முற்றாக உலகில் இருந்து இல்லாமல்போகவில்லை.

என்றாலும் நாடு என்றவகையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம். 2021 ஆரம்பத்தில் எமது நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் நாளாந்தம் 6ஆயிரம் பேர்வரை தொற்றுக்குள்ளாகி வந்தனர்.

என்றாலும் குறித்த வருட இறுதியாகும்போது அதனை 5பேர் வரை குறைத்துக்கொள்ள முடியுமாகியது. 2022 பெப்ரவரியாகும் நாளாந்தம் 20பேர் வரையே தொற்றுக்குள்ளாகி வந்தனர்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை முறையாக மேற்கொண்டதாலே அதனை எமக்கு கட்டுப்படுத்திக்கொள்ள முடியுமாகியது.

அத்துடன் நாட்டின் மொத்த சனத்தொகையில் 70வீதமானவர்கள் கொவிட் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டுள்ளனர்.

அதனால் கொவிட் மரணங்களையும் தற்போது எமக்கு குறைக்க முடியுமாகி இருந்தது. தற்போதும் வாரத்துக்கு இரண்டு அல்லது 3 கொவிட் மரணங்கள் இடமபெறும் நிலையே இருந்து வருகிறது. உலகளாவிய ரீதியில் பார்க்கும்போதும் கொவிட் எச்சரிக்கை இன்னும் முற்றாக நீங்கவில்லை.

என்றாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோன்று கொவிட் தொற்றாளர்கள் இனம் காண்பது முற்றாக நீங்கவில்லை. எமது நாட்டிலும் ஒருசில மாதங்களில் காலநிலை மாற்றத்துக்கு ஏற்பட தொற்றாளர்கள் இனம் காணும் எண்ணிக்கை கூடும் குறையும் வகையில் இருக்கிறது.கடந்த இரண்டு வாரங்களில் 6,7 பேர்வரை தொற்றாளர்கள் இனம் காணப்பட்டிருந்தனர்.

என்றாலும் இது ஆபத்தான நிலை என தெரிவிக்க முடியாது. இருந்தபோதும் தொடர்ந்தும் மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி வரவேண்டும். குறிப்பாக இந்த காலப்பகுதியில் இருமல், தடிமல் நாேய் அதிகரித்து காணப்படுகிறது.

அதற்காக கொவிட் என தீர்மானிக்க முடியாது. இருந்தபோது சமுக பொறுப்பு என்றவகையில் இவ்வாறான நோயுடையவர்கள் முகக்கவசம் அணிந்துகொள்ளல், சன நடமாட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்ந்துகொள்ளவேண்டும் என்றே மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று கொவிட் மரணம் கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்திருப்பதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தன. அவ்வாறு எதுவும் இல்லை. சாதாரணமாக வேறு நோய்களுக்குள்ளாகி அவர்களுக்கு கொவிட் நிலையும் ஏற்பட்டதன் காரணமாக ஏற்பட்ட மரணங்களே இடம்பெற்றிருக்கின்றன.

அத்துடன் கொவிட் தொற்றாளர்கள் என வைத்தியசாலைகளிலில் அனுமதிக்கப்படும் நிலையும் இதுவரை அதிகரித்திருப்பதாக அறிவிக்கப்படவில்லை. அதனால் இது தொடர்பாக வீணாக மக்கள் அச்சப்படத் தேவையில்லை. என்றாலும் மக்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டில்களை பேணிவந்தால் இவ்வாறான நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றார்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் இந்திய முட்டைகள்

பல நாட்களுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2 மில்லியன் முட்டைகள் இன்னும் தேவையான அனுமதியின்றி கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு பல நாட்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட போதிலும், திணைக்களம் இன்னும் அனுமதி வழங்கவில்லை என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

முட்டைகளை வெளியிடுவதில் ஏற்படும் தாமதம் பல விளைவுகளை ஏற்படுத்தும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

விலைவாசி உயர்வு மற்றும் உள்ளூர் சந்தையில் முட்டை தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் பேக்கரி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கு முன் அனுமதியைப் பெறுவதற்காக இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளிலிருந்து மாதிரிகளை விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு தொடர்ந்து அனுப்புவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

சந்தையில் போதுமான முட்டைகள் கிடைக்கும் வரை, அமைச்சரவையின் ஒப்புதலுடன் முட்டைகளை இறக்குமதி செய்வது தொடரும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு போதுமான அளவு எம்ஓபி மற்றும் யூரியா உரம் வழங்க தீர்மானம்!!

மியூரேட் ஒஃப் பொட்டாஷ் உரம் மற்றும் யூரியா உரங்களை போதிய அளவில் விவசாயிகளுக்கு வழங்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது.

நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கிய உர மானியங்களை முன்னர் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய ஹெக்டேருக்கு 20,000 ரூபாயும், 02 ஹெக்டேருக்கு 40,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படும்.

எனவே, யூரியா உரத்தை இந்த ஆண்டு பெரும்போகத்திற்கு விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் கொள்வனவு செய்ய முடியும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் பல அதிகாரிகளுக்கு இடமாற்றம்!!

வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பிரதேச செயலர்கள், மேலதிக மாவட்டச் செயலர்கள் உட்படப் பலருக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சால் வழங்கப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின்படி, சங்கானை பிரதேச செயலர் பி.பிரேமினி கிழக்கு மாகாண சபைக்கும், கிழக்கு மாகாண சபையில் பணியாற்றும் கே.உதயகுமார் சங்கானை பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் க.சிறிமோகன், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் சு.முரளிதரன் கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் ந.இன்பராஜ் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கும், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் ந.திருலிங்கநாதன் வடக்கு மாகாண சபைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகப் பணியாற்றும் சி.கிருஷ்நேந்திரன் வடக்கு மாகாண சபைக்கும், யாழ். மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.”

திருகோணமலை நகரப் பிரதேச செயலர் பி.தனேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச செயலராகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலர் எஸ்.மஞ்சுளாதேவி திருகோணமலை நகரப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கரைச்சிப் பிரதேச செயலர் பி.ஜெயகரன் வடக்கு மாகாண சபைக்கும், வடக்கு மாகாண சபையில் பணியாற்றும் பற்றிக் டிறைஞன், கரைச்சிப் பிரதேச செயலராகவும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை யுவதிக்கு நேர்ந்த கொடுமை!!

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன் புறுத்தல்களின் பின்னர் நேற்று (04.05.2023) நாடு திரும்பியுள்ளார்.

மஹியங்கனை, தம்பனை பகுதியை சேர்ந் 24 வயதுடைய ஸ்வர்ணா மல்காந்தி என்ற யுவதியே பல்வேறு கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர் தனது கிராமத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சவூதி அரேபியா சென்று பணிப் பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஸ்வர்ணா, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார்.

”நான் அதிகாலையில் எழுந்து இரவு வரை வேலை செய்வேன். அந்த வீட்டுப் பெண் மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்போதும் விரைவாக வேலை செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்.”

”அந்த மேடம் என்னை அடிக்கடி அடிப்பார். எப்போதும் உ தைப்பார். என் தலைமுடியைப் பி டித்து இழுத்து தரையில் தள்ளிவிடுவார்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நான் வேலை பார்க்க நேர்ந்தது. இதற்கிடையில், நான் மேடத்தின் அம்மா வீட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்போது அவரது சகோதரர் எனக்கு பல்வேறு து ன்புறுத் தல்கனைச் செய்தார். ஐந்து முறை நான் சுயநினைவை இழந்தேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.” என்று கூறியுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை!!

44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

123 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

மஹரகம, தம்ம மாவத்தையை சேர்ந்த துசித குமார சதரசிங்க என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18 ஆம் திகதி காவல்துறை விசேட அதிரடிப்படையினர் மஹரகம பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 123 கிராம் ஹெரோயினுடன் இவர் கைது செய்யப்பட்டார்.

அவரது முச்சக்கரவண்டியின் இரகசியப் பெட்டியில் இலத்திரனியல் தராசு மற்றும் இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் தீர்ப்பை அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்திருந்தார்.

காதலியை படுகொலை செய்த காதலன் – கண்டியில் நடந்த கொடூரம்!!

கண்டி – பல்லேகல காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் காதலியை வெட்டிப் படுகொ லை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட வருணி நிரோஷா (வயது 30) என்ற பெண்ணே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் பல்லேகல காவல்துறை பிரிவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பல்லேகல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து – 23 பேர் மருத்துவமனையில்!!

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம், கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கஜுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து இன்று காலை 7.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் மோதுண்டே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதிகள் உள்ளிட்ட 23 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று விடுதலையாகவுள்ள 988 கைதிகள்!!

வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று தினம் 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்களில் 6 பெண் கைதிகளும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கும் சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று (5) மற்றும் நாளை (6) இவ்வாறு சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கைதிகளின் உறவினர்கள் அவர்கள் கொண்டு வரும் உணவு மற்றும் இனிப்புகளை பொதிகளை கைதிகளுக்கு வழங்க முடியும் எனவும் சிறைச்சாலை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின்படி முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளின்கீழ் பார்வையாளர்கள் கைதிகளை சந்திக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளில் இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

2023 ஏப்ரலில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2,755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இது மார்ச் 2023 இல் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்து மதிப்பு 2,694 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 2.2வீத அதிகரிப்பைக் காட்டுகின்றது.

எனினும் இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களில் சீனாவின் மக்கள் வங்கியினது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கொதிக்கும் ரசத்தில் விழுந்த மாணவன்… துடிதுடித்து பலியான சோகம்.!!

திருவள்ளூரில்..

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புது நகரை சேர்ந்தவர் சதீஷ் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 3ஆம் ஆண்டு படித்து வந்தார்.

சதீஷ் பகுதி நேர வேலையாக அவ்வப்போது கேட்டரிங் சர்வீஸ் பணிக்கு சென்று வந்துள்ளார். இதன்மூலம் கிடைக்கும் சிறிய தொகை மூலம் தனது செலவையும் அவர் சென்னையில் ஓட்டியுள்ளார்.

அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி மாணவர் சதீஷ், மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு கேட்டரிங் வேலைக்கு சென்று இருந்தார். அங்கு பாத்திரத்தில் இருந்த உணவை பரிமாறுவதற்காக சதீஷ் மற்ற தொழிலாளர்களுடன் தூக்கிச்சென்றார்.

அந்த பெரிய பாத்திரத்தை தூக்கிக்கொண்டு அவர் பின்னோக்கி நடந்து சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த கொதிக்கும் ரசம் அண்டாவுக்கும் சதீஷ் நிலை தடுமாறி உள்ளே விழுந்தார்.

இதில் உடல் வெந்து அலறி துடித்த அவரை தொழிலாளர்கள் மீட்டு உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசம் அண்டாவுக்குள் தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட்டமளிப்பு விழாவில் “இத வாங்க மகன் உசுரோட இல்லையே” என மேடையிலேயே கதறியழுத பெற்றோர்!!

நாகப்பட்டினத்தில்..

ரொம்ப நல்லா படிச்சான்.. எங்க குடும்பத்திலேயே கல்லூரி வாசப்படியை மிதிச்ச முதல் பையன் அவன் தான். அத்தனை கஷ்டப்பட்டு படிச்சவன், படிப்பு முடிச்ச பட்டத்தை வாங்கறதுக்கு உசுரோட இல்லையே என்று பட்டமளிப்பு விழா மேடையில் பெற்றோர் கதறியழுதது அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகளையும் சோகத்தில் ஆழ்த்தியது.

நாகப்பட்டினத்தில் இருக்கும் இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா, நேற்று மே 1ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்றது.

இந்த பட்டமளிப்பு விழாவில் கல்லூரியில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கல்லூரியில் பயின்ற தினேஷ் எனும் மாணவருக்கும் பட்டம் அளிக்கப்பட்டது. மாணவர் தினேஷ் தேர்வெழுதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே மரணமடைந்திருந்ததால், அவரது பட்டத்தைப் பெறுவதற்காக தினேஷின் பெற்றோர்கள் வந்திருந்தனர்.

நாகப்பட்டினம் அக்கறைப்பேட்டையில் வசித்து வரும் தினேஷின் பெற்றோர் கண்ணன் மற்றும் செல்வி, மேடையேறி, மகனின் பட்டத்தை வாங்கும் போது, உணர்ச்சிவசப்பட்டவர்களாக கதறியழுதது, அங்கே கூடியிருந்த மாணவ, மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த பட்டத்தை வாங்குவதற்கு மகன் உசுரோட இல்லையே என்று கண்ணீர் வடித்தனர்.

கண்களில் கண்ணீர் தளும்ப தனது மகனுக்கான பட்டத்தினை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சக மாணவர்களின் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்து அரங்கம் அதிர கைதட்டினர்.

கண்ணன், செல்வியின் மகன் தினேஷ் 2021 ம் ஆண்டு மீன் பிடிக்க சென்ற போது, படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் தொழிலாளர்களுடன் கணவருக்கு தொடர்பு : பிரபல கிரிகெட் வீரரின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!!

முகமட் சமி..

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என்றும் அவர் ஒரு பிளேபோய் எனவும் முகமது ஷமியின் மனைவி ஹாசின் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி வீரராக திகழ்பவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. முகமது ஷமிக்கு ஹாசின் ஜஹான் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்ற நிலையில் இருவருக்கும் இடையே வேறுபாடு நிலவி வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முகமது ஷமி மீது ஹாசின் ஜஹான் பல்வேறு புகார்களை தெரிவித்து வருகிறார். ஷமி வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாக காவல்நிலையத்தில் பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரேயாக பிரிவுகளில் புகார் அளித்தார்.

எனினும் மனைவியின் புகார்களுக்கு முகமது ஷமி மறுப்பு தெரிவித்தார். 2018 ஆம் தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஷமியின் மனைவி ஹாசின் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தனது மனுவில், கடந்த 4 ஆண்டுகளாக ஷமி மீதான கிரிமினல் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக புகாரளித்துள்ளார். கிரிக்கெட் விளையாட சக அணி வீரர்களுடன் பயணம் மேற்கொள்ளும் போது கூட பாலியல் உறவுகளை அவர் தொடர்ந்து மேற்கொண்டார் என ஹாசின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, முந்தைய வழக்கில் தன்னை பிரிந்திருக்கும் கணவர் ஷமி ஜீவனாம்சம் தர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து , கொல்கத்தா நீதிமன்றம் முகமது ஷமி, பிரிந்த மனைவி ஹசின் ஜஹானுக்கு மாதாந்திர ஜீவனாம்சமாக ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. எனினும் இந்த ஜீவனாம்சம் தொகை தனக்கு திருப்திகரமாக இல்லை என ஹாசின் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளாராம்.

விபத்தில் உடைந்து போன முகம்.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய விஜய் ஆண்டனி!!

விஜய் ஆண்டனி..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பல படங்களுக்கு இசையமைத்து பிரபலமானவர் விஜய் ஆண்டனி. தனக்கென ஒரு இசை பயணத்தில் இருந்த விஜய் ஆண்டனி நடிகராகவும் திகழ்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தார்.

கடந்த ஆண்டு பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது கடலில் போட் ஓட்டும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் விஜய் ஆண்டனியின் முகம் உடைந்து பெரிய சோகத்தை கொடுத்துள்ளது.

தீவிர சிகிச்சை மேற்கொண்டு பல சர்ஜெரிகளை செய்து தற்போது மீண்டு வந்துள்ளார். பிச்சைக்காரன் 2 படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வந்த விஜய் ஆண்டனி, ஸ்டண்ட் காட்சிகளில் ஏற்படாத விபத்து ரொமான்ஸ் காட்சியில் விபத்து ஏற்பட்டு என் முகம் உடைந்ததாக கூறியுள்ளார்.

மூக்கு மற்றும் தாடை பகுதிகளில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்ததால் அவரது முகம் அப்படியே மாறிபோயுள்ளது. அவரது புகைப்படத்தை பார்த்த பலரும் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

யுவதியின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல் : திட்டமிட்டு அரங்கேற்றிய காதலன்!!

பிட்டிகல மானமிபிட்ட, தல்கஸ்வல நியாகம பிரதேச சபைக்கு அருகில் பெண்ணொருவர், லொறி மோதி உயிரிழந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளதாக பிடிகல பொலிஸார் இன்று (04) தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 30 ஆம் திகதி பிட்டிகல தல்கஸ்வல பகுதியைச் சேர்ந்த நிரோஷா உதயங்கனி என்ற 32 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.

பெண்ணுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்த நபரை நேற்றிரவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் பெயரில் 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுள்ள நான்கு ஆயுள் காப்புறுதித் திட்டங்கள் இருந்ததாகவும், அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காகவே சந்தேக நபர் காதலியை திட்டமிட்டு கொலை செய்திருப்பது பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொலை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மறுநாள் மாபலகம் வீதியில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும் பெண்ணை லொறியால் மோதி கொலை செய்த வாகன சாரதி தப்பியோடி தலைமறைவாகி விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தைத் திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் இன்று (04) எல்பிட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் பிட்டிகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்ற 24 வயது இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் சென்ற இலங்கை யுவதி ஒருவர் பல்வேறு துன்புறுத்தல்களின் பின்னர் இன்று நாடு திரும்பியுள்ளார்.

மஹியங்கனை, தம்பனை பகுதியை சேர்ந் 24 வயதுடைய ஸ்வர்ணா மல்காந்தி என்ற யுவதியே பல்வேறு கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக, அவர் தனது கிராமத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மூலம் சவூதி அரேபியா சென்று பணிப் பெண்ணாக பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இன்று நாடு திரும்பிய ஸ்வர்ணா, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். ‘

நான் அதிகாலையில் எழுந்து இரவு வரை வேலை செய்வேன். அந்த வீட்டுப் பெண் மிகவும் கண்டிப்பானவர். அவர் எப்போதும் விரைவாக வேலை செய்ய வேண்டும் என என்னிடம் கூறுவார்.’

‘ அந்த மேடம் என்னை அடிக்கடி அடிப்பார். எப்போதும் உதைப்பார். என் தலைமுடியைப் பிடித்து இழுத்து தரையில் தள்ளிவிடுவார்.

கடந்த நோன்புப் பெருநாள் தினத்தில் மேலும் இரண்டு வீடுகளில் நான் வேலை பார்க்க நேர்ந்தது. இதற்கிடையில், நான் மேடத்தின் அம்மா வீட்டில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

அப்போது அவரது சகோதரர் எனக்கு பல்வேறு துன்புறுத்தல்கனைச் செய்தார்.’ ‘ஐந்து முறை நான் சுயநினைவை இழந்தேன். அந்தச் சந்தர்ப்பங்களில் அவர் என்னிடமிருந்து தனது தேவைகளை பூர்த்தி செய்துள்ளார்.’ என்று கூறியுள்ளார்.