வவுனியாவில் ஆசிரியர் மீது போலிக் குற்றச்சாட்டு : பாடசாலை சமூகம் போராட்டம்! !

தரணிக்குளம் கணேசுவரா வித்தியாலத்தின் தமிழ்பாட ஆசிரியர் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலியான தகவலுக்கு எதிராக பாடசாலை சமூகத்தால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று (04.05.2023) காலை பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த மாணவர்கள், எமது பாடசாலையின் தமிழ்பாட ஆசிரியரான திருமகன் மீது அண்மை காலமாக தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களிலே பதியப்பட்டு வருகின்றது. அதற்கு எமது எதிர்ப்பினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் சமூகத்திற்கு ஏற்பட்ட பிரச்சினை ஒன்றை தட்டி கேட்டதற்காக இழிவான முறையில் அவர் பழிவாங்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அந்த விடயத்தை பாடசாலை சமூகம் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு குறித்த நபர்களுக்கு எதிராக உடனடியாக சட்டநடவடிக்கை எடுத்து ஆசிரியருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தை துடைக்க வேண்டிய கட்டாய நிலமையில் நாம் இருக்கின்றோம்.

ஒருதகவலின் உண்மைத்தன்மை தொடர்பாக ஆராயாமல் அதனை பலரும் பகிர்வு செய்தமையானது மோசமான ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. எனவே இனியாவது உண்மைதன்மையினை உணர்ந்துசெயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்று தெரிவித்தனர்.

எமது திருமகன் ஆசிரியருக்கு சரியான தீர்வினை பெற்றுக்கொடு, நீதியை நிலைநாட்டு, அவதூறு வார்த்தை பேசாதே, ஆசிரியர்களை பாதுகார், உண்மை மட்டும் பதிவிடு, ஆசிரியர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்காதே போன்ற வாசகங்களையுடைய பதாதைகளை தாங்கி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கொழும்பில் அழகு நிலையம் செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை : பெண் செய்துவந்த மோசமான செயல்!!

கொழும்பில் அழகு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகளை திருடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அழகுக்கலை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த பைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சந்தர்ப்பங்களை இந்த பெண் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த பெண் அங்குள்ள பைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர்.

அவிசாவளை, கம்பளை, பொரலஸ்கமுவ, வரக்காபொல ஆகிய பல நிலையங்களில் இந்த திருட்டை வெற்றிகரமாக நடத்தி வந்த பெண், அவிசாவளையில் உள்ள அழகு நிலையம் ஒன்றிற்கு வந்து சலூன் உரிமையாளரின் பணப்பையை திருடிய போது சிக்கியுள்ளார்.

இதற்கு முன்னரும் பெண் ஒருவரின் பையை திருடுவது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, சிசிடிவி வீடியோக்களை பெற்று விசாரணை நடத்தி வந்த பொலிஸார், இறுதியில் இந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

இந்த பெண்ணால் திருடப்பட்ட வங்கி அட்டைகளை பயன்படுத்தி தங்கம், கைத்தொலைபேசிகள், ஆடைகள் போன்றவற்றை வாங்கியுள்ளதாகவும், இவை அனைத்தையும் அவர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

வவுனியாவில் ஊடகவியலாளர்களை கண்டதும் பின் கதவால் வெளியேறிய இராஜாங்க அமைச்சர் : வடக்கு ஆளுனரின் உத்தரவை உதாசீனம் செய்த வவுனியா அரச அதிபர்!!

வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களைக் கண்டதும் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இருந்து பின் கதவால் கிராமிய இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வெளியேறிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கூட்டம் முடிந்து வந்த வடக்கு ஆளுனர், மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் ஆகியோரிடம் தம்மை கூட்ட மண்டபத்திற்கு அனுமதிக்காமை தொடர்பில் கேள்வி எழுப்பினர்.

இதனை அவதானித்த கிராமிய இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் தம்மை ஏன் உள்ளே அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள் என்ற விடயத்தை இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து, கூட்ட மண்டபத்தின் பின் வாசல் பகுதிக்கு தனது வாகனத்தை வரவழைத்து அங்கிருந்து ஊடகவியலாளர்களை சந்திக்காது இராஜாங்க அமைச்சர் தனது சகாக்களுடன் வெளியேறியிருந்தார்.

வடக்கு ஆளுனரின் உத்தரவை உதாசீனம் செய்த வவுனியா அரச அதிபர்!!

வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவின் உத்தரவை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர உதாசீனம் செய்த சம்பவம் ஒன்று இன்று (03.05) மாலை வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (03.05) இடம்பெற்றது.

குறித்த கூட்டத்திற்கு வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கூட்டம் முடிந்த பின் 4.30 இற்கு ஊடக சந்திப்பு நடைபெறும் என மேலதிக மாவட்ட அரச அதிபர் தி.திரேஸ்குமாரால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை மண்டப வாயிலில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது இடை நடுவில் வெளியேறிய வடக்கு மாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜாவிடம், ஊடக சுதந்திர நாளான இன்று எம்மை ஏன் மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு அனுமதிக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆளுனர்,

நீங்கள் கூட்ட மண்டபத்திற்குள் வரவில்லையா. உங்களை அனுமதிக்கவில்லை என எனக்கு தெரியாது. மன்னித்துக் கொள்ளுங்கள். யார் வர வேண்டாம் என கூறியது என ஊடகவியலாளரிடம் கேள்வி எழுப்பிய அவர் நீங்கள் மண்டபத்திநற்கு செல்லுங்கள்.

நான் சொன்னதாக அரச அதிபரிடம் சொல்லுங்கள் எனக் கூறி அங்கு நின்ற இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரதிநிதிகளிடம் அரச அதிபரிடம் தெரியப்படுத்துமாறு கூறிவிட்டு சென்றிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் பிரதிநிதிகள் குறித்த விடயத்தை அரச அதிபரிடம் தெரியப்படுத்தியும், ஆளுனரின் உத்தரவை கருத்தில் எடுக்காது கதவுகளை பூட்டி ஊடகவியலாளருக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

11 வயது சிறுமியை திருமணம் செய்த 41 வயது நபருக்கு நேர்ந்த பரிதாபம்!!

பீகாரில்…

ஒரு பெண் கொடுத்த கடனை திருப்பி தராததால் அவரது மகளை திருமணம் செய்துக் கொண்ட நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலத்தில் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்த மகேந்திர பாண்டே என்ற ஒரு நபர் தனது கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் 2 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

அந்த பெண் தனது கடனை நீண்ட நாட்களாக செலுத்தாமல் இருந்ததால், அவருடைய 11 வயதான பெண் பிள்ளையை திருமணம் செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் மத்தியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது மகளை கட்டாய திருமணம் செய்துக் கொண்டதாக அந்த பெண் பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளாளர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபரீதத்தில் முடிந்த பிறந்தநாள் கொண்டாட்டம்.. எச்சரிக்கை காட்சி!!

பிறந்தநாள்..

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறித்த காட்சியில் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு கையில் கேக் மற்றும் அதன் மேலும் மெழுகுவர்த்தியையும் கொழுத்தி வைத்துள்ளனர்.

அதே நபர் மற்றொரு கையில் எரிவாயு நிரப்பிய பலூனையும் வைத்துள்ளார். இதில் எதிர்பாராத விதமாக பலூன் வெடித்து தீப்பற்றியுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் எந்தவொரு சோதமும் ஏற்படாமல் தப்பித்துள்ளனர். கொண்டாட்டம் இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தற்போது இதுபோன்ற நிகழ்வுகள் அதிகமாக இருந்து வருவதால், இக்காட்சியினை அவதானிக்கும் பார்வையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

பசியால் சுவற்றில் காட்சிப்படுத்தப்பட்ட வாழைப்பழத்தை சாப்பிட்ட மாணவர்..!!

தென் கொரியாவில்…

பசி நம் கண்ணை மறைக்கும் என்பதுபோல மாணவர் ஒருவர் கலைப்படையாக சுவரில் டேப் போட்டு ஒட்டப்பட்டு இருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென் கொரியாவில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற நோ ஹூன் சூ என்ற மாணவருக்கு பசி எடுத்துள்ளது. இதனால் அந்த மாணவர் சுவற்றில் காட்சிக்காக ஒட்டப்பட்டிருந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டுள்ளார்.

பின்னர் சுவற்றில் பழத்தின் தோலை சுவற்றில் அதே டேப் கொண்டு ஒட்டியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அருங்காட்சியகம் சார்பில் வாழைப்பழத்தின் தோல் நீக்கப்பட்டு வேறொரு பழம் அதே மாதிரி டேப் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டது.

அருங்காட்சியகத்தில் இவ்வாறு ஒட்டப்படும் பழம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு விடும் என்று கேடிலன் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாணவர் நோ ஹூன் சூ தெரிவிக்கையில் நான் காலை உணவை சாப்பிடாததால் அதிக பசி ஏற்பட்டதான் காரணமாக இந்த வாழைப்பழத்தை எடுத்து சாப்பிட்டேன் என தெரிவித்துள்ளார்.

சேர்ந்து வாழ மறுத்த காதல் மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் டி.குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு ராஜா. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பகுதியை சேர்ந்த சங்கரம்மாள் என்ற அபிராமிக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடைபெற்று உள்ளது.

இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் மதுரையில் வசித்து வந்த நிலையில் பிரபு தினசரி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்வதும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை விற்பனை செய்து மது அருந்துவதுமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சங்கரம்மாள் என்ற அபிராமியின் சகோதரர் பிரபு சுத்தமல்லி சத்யா நகர் பகுதியில் தனது வீட்டிற்கு அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார்.

இந்த நிலையில் அபிராமி நெல்லை டவுன் பகுதியில் உள்ள நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்து அங்கு வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் அபிராமி வேலை செய்த நகைக்கடைக்கும் அவ்வப்போது சென்று கடந்த சில நாட்களாக பிரபு ராஜா தொந்தரவு செய்து வந்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரச்சினைகளை முடித்துவிட்டு வேலைக்கு வந்தால் போதும் என கடை உரிமையாளர் சொன்னதாக தெரிகிறது. இந்த நிலையில் சத்யா நகர் பகுதியில் உள்ள வீட்டில் இருந்த அபிராமியை அங்கு வந்த பிரபு ராஜா தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார்.

இதற்கு அபிராமி மறுப்பு தெரிவித்தாக தெரிகிறது. இந்த நிலையில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்போது பிரபு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அபிராமியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

வெளியே சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாய் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த அபிராமியின் சகோதரர் வீட்டிற்கு சென்று தகவல் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அபிராமி சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்ததுடன் தப்பியோடிய பிரபு ராஜாவையும் தீவிரமாக தேடி கைது செய்தனர். காதல் மனைவியை கணவனே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது

பியூட்டி பார்லருக்கு செல்ல வேண்டாம் என தடுத்த கணவன்.. மனைவி எடுத்த விபரீத முடிவு!!

மத்திய பிரதேசத்தில்..

பியூட்டி பார்லர் செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் நிகழ்வு மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்தவர் பல்ராம் யாதவ். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரீனா என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது.

திருமணம் முடிந்து இந்த தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். இருப்பினும் சில மாதங்களிலே இருவருக்கும் வழக்கமான கணவன் – மனைவிக்குள் நடக்கும் சண்டை நடந்துள்ளது.

தற்போது 34 வயதாகும் ரீனா, சம்பவத்தன்று பியூட்டி பார்லர் செல்ல தனது கணவரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கணவர் பல்ராம் யாதவோ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கணவன் – மனைவிக்குள் சிறு சிறு தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால் இருவரும் சண்டையிட்டு கொண்டுள்ளனர். இந்த சூழலில் ரீனா பியூட்டி பார்லருக்கு செல்ல அனுமதி கேட்டபோது அதற்கு கணவர் மறுத்ததால் அதற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தில் கணவர் வீட்டை விட்டு சில மணி நேரம் வெளியேறியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்ததும் மனைவி ரீனா, தனது வீட்டின் அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதனை கண்டதும் பதறிப்போன பல்ராம், உடனடியாக அக்கம்பக்கத்தினரை அழைத்து மனைவியை கீழே இறக்கி பரிசோதித்தனர். அப்போது மனைவி ரீனா உயிரிழந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், ரீனாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். ரீனா உண்மையில் தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பியூட்டி பார்லர் செல்ல கணவர் மறுத்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடிகாலையில் நடுங்கவைத்த சம்பவம்… தீ விபத்தில் சிக்கிய நிலையில் தாயார் மற்றும் இரு மகள்கள்..!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய நிலையில், அதில் பரிதாபமாக பலியான தாயார் மற்றும் அவரது இரு பிள்ளைகளின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நியூயார்க் நகரின் புரூக்ளின் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் வெள்ளிக்கிழமை விடிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 48 வயதான டேனியல் ஹேவன்ஸ், மற்றும் அவரது மகள்கள் ஜர்னி மைல்ஸ்(11), மற்றும் கெஸ்லீ மைல்ஸ்(9) ஆகியோர் பரிதாபமாக பலியாகினர்.

நியூயார்க் நகர தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள் குழு கடுமையாக போராடி, தீ விபத்தில் சிக்கிய குடியிருப்பில் இருந்து இவர்கள் மூவரையும் மீட்டிருந்தாலும், உயிரை காப்பாற்ற முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

சம்பவத்தன்று விடிகாலை சுமார் 5 மணியளவில் தீயணைப்பு துறைக்கு தீ விபத்து குறித்து தகவல் சென்றுள்ளது. நான்கு மாடி குடியிருப்பு கட்டிடமானது தீ விபத்தில் சிக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது மாடியில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்து, சமையலறையில் இருந்து ஏற்பட்டிருக்கலாம் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், சம்பவத்தின் போது அந்த குடியிருப்பில் புகை எச்சரிக்கை மணி செயல்படவில்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

தீ விபத்தையடுத்து, சம்பவப்பகுதிக்கு குடும்பத்தினர் அனைவரும் கண்ணீருடன் ஒன்று திரண்டிருந்தனர். மொத்த குடும்பமும் தீயில் சிக்கி பலியானதை தாங்க முடியவில்லை என உறவினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, தமது பேரப்பிள்ளைகள் இருவரும் தீ விபத்து காரணமாக பலியாதை அறிந்து, அவர்களது தாத்தா சுயநினைவின்றி சுருண்டு விழுந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர்.

தகவல் அறிந்து 3 நிமிடங்களில் சம்பவயிடத்திற்கு வந்ததாகவும், ஆனால் தீ கொழுந்துவிட்டெரிந்ததால், குடியிருப்புக்குள் செல்வது கடினமாகவும், தீயை கட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, ஒருவழியாக குடியிருப்புக்குள் நுழைந்து விபத்தில் சிக்கிய மூவரையும் மீட்டு வந்த பின்னர், முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும், ஆனால் அவர்கள் உயிர் பிழைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

மூவரும் தீக்காயங்களுடன் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், புகையை சுவாசித்துள்ளனர் எனவும், தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு வரும்போது அவர்கள் சுவாசம் நின்று போயிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அடித்துக் கொடுமைப்படுத்திய கணவன் : விவாகரத்தைக் கொண்டாடிய நடிகை சாலினி!

ஷாலினி…

பொதுவாக நாம் எல்லோரும் எமது வாழ்க்கையில் நடக்கும் இன்பமான நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொள்வதற்காக புகைப்படங்களை எடுத்துக் கொள்வோம் ஆனால் இங்கு ஒரு நடிகை தனது விவாகரத்தை வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறார்.

பிரபல தொலைக்காட்சியில் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து பிரபல்யமான நடிகை தான் ஷாலினி. அதற்குப் பிறகு குஷ்பு ரீ என்டி கொடுத்த சீரியலில் அவருக்கு வில்லியாக நடித்திருந்திருந்தார்.

அதற்குப் பிறகு திருமணம் செய்து செட்டிலான பிறகு நடிக்காமல் இருந்தார். பிறகு ஜீ தமிழ் ஷோ சூப்பர் மாம் ரியாலிட்டி ஷோவில் தனது மகளுடன் பங்கேற்றியிருந்தார். மாடலிங் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான ஷாலினி போட்ட போட்டி , சன்குடும்பம், போன்ற ரியாலிட்டி நிகழிச்சிகளில் பங்கேற்றுள்ளார் இந்நிலையில், நடிகை ஷாலினி பற்றிய செய்தி ஒன்று தான் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

நடிகை ஷாலினி ரியாஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஒரு மகளும் உண்டு. இந்நிலையில் ஷாலினி தனது கணவர் தன்னை பலமுறை துன்புறுத்தி கொடுமைப்படுத்துவதாக நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

இது இவ்வாறு இருக்கும் நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென தனது கணவரை பிரியப்போவதாகவும் அவருக்கும் தனக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருப்பதால் விவாகரத்திற்கு விண்ணப்பித்திருப்பதாகவும் அது தற்போது கிடைத்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த விவாகரத்துக் கிடைத்ததை வித்தியாசமாக போட்டோஷூட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

மூன்று நாட்களாக ஆடையின்றி திரிந்த பெண் : இலங்கையில் நடந்த சோகம்!!

கம்பளையில்..

கம்பளை அம்புலுவா சரணாலயத்தில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக பொலிஸார் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

வனப்பகுதியில் அவ்வப்போது பெண் ஒருவர் அலறல் சத்தம் கேட்டதாக தெரிவித்த உள்ளூர்வாசிகள் குழு குறித்த வனப்பகுதிக்குள் சென்று ஆராய்ந்துள்ளனர். அப்போது ஒரு பெண் உடலில் ஆடை இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் கம்பளை தலைமையக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

கம்பளை தலைமையக பொலிஸாரின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து அதிகாரிகளின் காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இலங்கை வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

இலங்கையில்…

இலங்கை சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் பையில் பெறுமதியான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு இலட்சம் இலங்கை ரூபாய், 100 அமெரிக்க டொலர்கள் மற்றும் 200 அவுஸ்திரேலிய டொலர்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

காலி சமனல மைதானத்திற்கு அருகில் வைத்து நால்வர் பேர் கொண்ட கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தனது பையை தரையில் வைத்துவிட்டு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொள்ளைக் கும்பல் அவ்விடத்திற்கு வந்ததுடன் அவர்களில் ஒருவர் பையை எடுத்துக்கொண்டு ரத்கம கடற்கரையை நோக்கி ஓடியுள்ளார். குறித்த சுற்றுலா பயணியான பெண்ணும், கொள்ளையர்கள் பின்னால் ஓடிய போது கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிலிப்பைன்ஸ் பெண், ரத்கம பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்நிலையில், காலி நகரம் மற்றும் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், பை தொலைந்து போனதாகவும், அதில் இருந்த பணத்தை திருடர்கள் எடுத்துள்ளனர். எனினும் கடவுச்சீட்டு மட்டும் கிடைத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு : புதிய விலை விபரம் வெளியானது!!

லிட்ரோ..

லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று (03.05.2023) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,638 ரூபாவாகும். இதேவேளை 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,462 ரூபாவாகும்.

மேலும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 681 ரூபாவாகும். இந்நிலையில் லாஃப் எரிவாயு நிறுவனம் எந்தவித விலை குறைப்புகளையும் மேற்கொள்ளாது என அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலைகள் அதிகரித்த போதிலும், லாஃப் எரிவாயு உற்பத்திகளின் விலையை அதிகரிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்ப தயாரான பெண் திடீரென மரணம் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!

குவைத்தில்..

குவைத்தில் வீட்டு வேலை செய்து 7 வருடங்கள் கழித்து இலங்கை திரும்பவிருந்த நாளில் பெண் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தளை யட்டவத்த பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடைய ஜி.அனோமா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால், அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது மகனுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் 7 ஆண்டுகளுக்கு முன்பு அவர் குவைத் சென்றுள்ளார். குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த அவர், தன் மகன் மற்றும் பேரக்குழந்தைகளுக்குப் பரிசுகளுடன் நாட்டிற்கு வர தயாரானார். ஏப்ரல் 26 ஆம் திகதி தாய்நாட்டிற்குத் திரும்பத் தயாராக இருந்தார்.

இதுபற்றி அவர் தனது தாயாருக்கு அதற்கு முன்தினம் தொலைபேசி அழைப்பேற்படுத்தி தெரிவித்துள்ளார். மகன் சதுரங்க தம்மிக்க தனது தாயை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார், ஆனால் அவர் வரவில்லை.

உடனடியாக குழப்பமடைந்த அவர், விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்காததால் கட்டுநாயக்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். விமான நிலைய அதிகாரிகளிடம் போலீசார் விசாரித்தபோது, ​​குவைத்தில் இருந்து அனோமா விமானம் ஏறவில்லை என்பது தெரியவந்தது.

பின்னர், இதுபற்றித் தெரிந்து கொள்ள அவரது நண்பர்கள் சிலர் அவர் வேலை செய்த குவைத் வீட்டுக்குச் சென்றனர். அவர் தூக்கிட்டு இறந்துவிட்டதாக வீட்டின் உரிமையாளர் கூறினார்.

குவைத் தூதரகத்தின் ஊடாக கிடைத்த தகவலின் படி குவைத் மாநிலத்தில் இரண்டு இலங்கையர்களின் சடலங்கள் இருப்பதாகவும் அதில் ஒன்று தனது தாயாரின் சடலம் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அனோமாவின் மகன் தம்மிக தெரிவித்துள்ளார். தாய் தூக்கிலிட எந்த காரணமும் இல்லை என்பது குறித்து அரசு முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளிநாடொன்றில் உயிரிழந்த இலங்கை மருத்துவ மாணவனின் மரணத்தில் மர்மம் – விசாரணைகள் ஆரம்பம்!!

பெலாரஸில்..

பெலாரஸில் பல்கலைகழகத்தில் இலங்கை மருத்துவ மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Grodno State Medical பல்கலைகழகத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய திஷான் குலரத்ன என்ற மருத்துவ மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கண்டியில் உள்ள பிரதான ஆண்கள் பாடசாலையொன்றில் கல்வி கற்ற இந்த மாணவன் உயிரியல் பிரிவில் சித்தியடைந்து வைத்தியராக வேண்டும் என்ற நோக்கத்தில் பெலாரஸில் உள்ள Grodno பல்கலைக்கழகத்தில் பதிவு செய்துள்ளார்.

இறக்கும் போது அதே பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டில் கல்வி கற்ற இந்த மாணவன் முதலாம், இரண்டாம், மூன்றாம் வருடங்களில் வருடத்தின் சிறந்த மாணவருக்கான விருதை வென்றிருந்தார்.

இம்மாணவன் பாடசாலைக் காலத்தில் பாடசாலையின் பிரதி மாணவர் தலைவராகவும் கடமையாற்றியுள்ளதுடன் பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடுகளிலும் திறமையானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் மிகவும் நட்புடன் பழகியுள்ளார். மாணவனின் தாயார் தனது மகனுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தபோது, ​​அவர் அழைப்புக்கு பதிலளிக்காததாலும், ஏனைய மருத்துவ மாணவர்கள் சிலரை அழைத்து மகன் தொடர்பில் தகவல் பெற கோரிக்கை விடுத்துள்ளார்.

சக மருத்துவ மாணவர்கள் அவர் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று தேடியபோது இந்த மருத்துவ மாணவனின் உயரமான அலுமாரியில் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

மாணவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா என பெலாரஸ் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான உண்மைகளை வெளிக்கொணருவதற்காக அந்நாட்டு பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த மாணவன் கடந்த 29ஆம் திகதி இரவு சுமார் 11.00 மணி வரை தனது கைத்தொலைபேசியை பயன்படுத்தியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நகைச்சுவை நடிகர் மனோபாலா காலமானார்!!

தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான மனோபாலா(வயது 69) சென்னையில் இன்று (03.05.2023) உடல் நலக்குறைவால் காலமானார்.

கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார்.

இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து, 1982ல் ஆகாய கங்கை என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகினார்.

ஆகாய கங்கை, பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும் தான் உட்பட 24 படங்களை இயக்கியுள்ளார்.

இதேவேளை ஏராளமான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.