30 ஆண்டுகளுக்குப் பின் ஒன்றுசேர்ந்த காதல் ஜோடி… சேர்த்துவைத்த கடிதங்கள்!!

இங்கிலாந்தில்..

இங்கிலாந்தின் கிஸ்பேரோ பகுதியை சேர்ந்த பெண் Kate Pymm(50). இவர் 1989 ஆம் ஆண்டு கேட் தனக்கு 19 வயதாக இருந்தபோது டிவோன் நகரத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அவர் Guenther Baer(57) என்பவரை சந்தித்திருக்கிறார்.

Guenther Baer ஜெர்மனியை சேர்ந்தவர். அப்போது அவருக்கு வயது 32. முதல் சந்திப்பிலேயே இருவரும் நண்பர்களாகியுள்ளனர். இதனையடுத்து, இருவரும் பரஸ்பரம் முகவரிகளை பரிமாறிக்கொண்டனர்.

நட்பாக துவங்கிய இவர்களது பயணம் காதலில் சென்று சேர்ந்திருக்கிறது. கொஞ்ச நாளில் இருவரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கின்றனர். ஆனாலும், கடிதம் மூலமாக இருவரும் தங்களது காதலை வளர்த்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், இந்த காதல் கைகூடாது என Kate நினைத்திருக்கிறார்.

அதன்பிறகு இருவரும் கடிதம் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டனர். இருவருக்கும் தனித்தனியாக திருமணமாகி வாழ்ந்துவந்த நிலையில் அண்மையில் இருவருக்கும் அவரவர் மண வாழ்க்கையில் இருந்து விவாகரத்தும் நடந்திருக்கிறது.

அப்போது, எதேச்சையாக Guenther எழுதிய பழைய கடிதங்களை கண்டுபிடித்திருக்கிறார் கேட். அவருக்குள் பழைய காதல் மீண்டும் பூக்கவே, மிகுந்த சிரமப்பட்டு அவரது முகவரியை கண்டுபிடித்து கடிதம் எழுதியிருக்கிறார் Kate.

தனிமையில் வசித்துவந்த Guenther, Kate-ன் கடிதத்தை கண்டதும் கண்கலங்க, இருவருக்குள்ளும் மீண்டும் காதல் மலர்ந்திருக்கிறது. இதனையடுத்து, 2021 ஆம் ஆண்டு இருவரும் சந்தித்திருக்கின்றனர். இனியும் காலத்தை வீணாக்க விரும்பாததால் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இந்த தம்பதியின் இந்த விஷயம் பலருக்கும் ஏற்கனவே தெரியவந்தாலும் தற்போது காதலர் தினமான பிப்ரவரி மாதத்தில் இவர்களின் காதல் கதையை பலரும் பகிர்ந்து வருகின்றனர். காதல் கைகூடாது என்ற நிலையில் 31 ஆண்டுகள் பிரிந்திருந்த ஜோடிகள் மீண்டும் சேர்ந்திருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

உருகி உருகி காதலித்த நபர் மரணம்.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

கேரளாவில்..

கேரளாவின் திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்தவர் நல்லபதி பிரணவ். 6 வருடங்களுக்கு நண்பருடன் செல்லும்போது நடந்த, எதிர்பாராத விபத்தில் எழுந்து நடமாட முடியாத சூழல் உண்டாக, வாழ்க்கை புரட்டிப்போட்டது.

வீல்சேரிலேயே எப்போதும் பிரணவ் இருக்கவேண்டி இருந்தது. ஆனாலும் மனதளவில் எப்போதும் உற்சாகமாக இருந்த பிரணவ் நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உறுதுணையுடன் இயங்கி வர, வலைதளத்தின் மூலம் அவரை பார்த்த சஹானாவுக்கு காதல் வந்தது.

அப்போது தனது காதலை சஹானா, வெளிப்படுத்த ஆனால், பிரணவ் அதை மறுத்தார். எனினும் சஹானா தனது காதலில் உறுதியாக இருந்தார். பிரணவோ தன் உடல் நிலையை கருத்தில் கொண்டு, சஹானாவின் காதலை பலவழியில் மறுத்து பார்த்தார்.

தனக்கு வேறு ஒரு காதல் இருக்கிறது என்றெல்லாம் கூட சொல்லி, சஹானாவை மடைமாற்ற பார்த்தார். ஆனால் சஹானா தன் காதலில் உறுதியாக நின்றார்.

ஒரு நாள் பிரணவை தேடி திரிசூருக்கு நேரிலேயே சஹானா வந்துவிட அப்போதும் பிரணவ் சஹானாவை திருப்பி அனுப்ப முயன்று அவரது அன்பால் தோற்றுப் போய்விட, அடுத்த நாளே, கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்தனர்.

சாதி, மதம் தாண்டி, வீட்டார் கருத்துக்களை மீறி, தோழிகள் அட்வைஸையும் பொருட்படுத்தாத சஹானா பிரணவை கரம்பிடித்து காதலுக்கு மனம் தான் முக்கியம் என நிரூபித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென பிரணவ் ரத்த வாந்தி எடுத்ததாகவும் பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் பரவி வந்ததுடன்,

அங்கு சிகிச்சைப் பலனின்றி பிரணவ் உயிரிழந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து பலரும் சஹானாவுக்கு ஆறுதல் கூறி வருவதுடன் பிரணவ் மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சதை உண்ணும் பாக்டீரியாவால் உயிரிழந்த சிறுவன்.. நெஞ்சை உலுக்கும் சோகம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் 11 வயது சிறுவன் ஒருவன் மாமிசம் உண்ணும் அரியவகை பாக்டீரியாவால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜெஸ்ஸி பிரவுன் என்ற 11 வயது சிறுவனே இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவனின் பெற்றோர்கள் பல தகவல்களை கூறியுள்ளனர். குறித்த சிறுவன் ஆரோக்கியமாக இருந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த போது கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

பின்பு சில தினங்களில் முழு கால்களிலும் சிராய்ப்பு போன்ற தடங்களும் ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் சிகப்பு நிற புள்ளிகளும் காணப்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவர்களிடம் சோதனை செய்துள்ளனர்.

அப்பொழுது பரிசோதனையில், சிறுவனுக்கு, ஸ்ட்ரெப் – ஏ தொற்று, (அதாவது சதை உண்ணும் பாக்டீரியா) ஏற்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுவனின் கணுக்கால் சுருட்டப்பட்டிருந்ததால் அங்கு தொற்று இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென இறந்துள்ளார். அமெரிக்க குழந்தை மருத்துவர்கள், குழந்தைகளிடையே ஸ்ட்ரெப்-ஏ தொற்று சமீபத்தில் அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர்.

சிலருக்கு சுவாச தொற்றுக்கு பிறகு தான் பாக்டீரியா தாக்குகிறது. அதாவது சுவாசப்பாதை வழியாக நோய் தாக்கலாம். இந்த தொற்று மரணத்தை கூட ஏற்படுத்தலாம்.

குரூப்-ஏ ஸ்ட்ரெப் என்பது தொண்டை அழற்சியை ஏற்படுத்தும் பாக்டீரியா. இதனால் வரும் நோய் எல்லாமே கடுமையானவை அல்ல, ஆனால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், சதை உண்ணும் நோய் போன்ற இரண்டாம் நிலை தொற்றுநோயை ஏற்படுத்தும் என அமெரிக்க மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வீக்கம், தோல் சிவத்தல், துர்நாற்றம், காய்ச்சல் ஆகியவை கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகளாகும். குரூப் – ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ் எனும் பாக்டீரியா பல்வேறு நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும். இந்த நோய்த்தொற்றுகள் சிறிய நோய்கள் முதல் மிகவும் தீவிரமான மற்றும் கொடிய நோய்கள் வரை இருக்க வாய்ப்புள்ளது.

பெரும் சோகத்தை ஏற்படுத்திய விபத்து : காதலி உயிரிழந்தது தெரியாமல் தேடி அலையும் காதலன்!!

விபத்து..

கடந்த வாரம் சிவனொளிபாதமலை யாத்திரைக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த யுவதியின் காதலன் தொடர்பில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 19ஆம் திகதி நோட்டன் பிரிட்ஜ், டெப்ளோ பகுதியில் பள்ளத்தில் வீழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விபத்தில் காயமடைந்த பலர் மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சுயநினைவிற்கு திரும்பியவுடன் தாதிக்கு அழைப்பேற்படுத்தியுள்ளார்.

“மிஸ், நாங்கள் மிகவும் சோர்வடைந்த நிலையில் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும் வழியிலேயே இந்த விபத்து இடம்பெற்றது. எனது காதலி என்னுடன் வந்தார். அவர் சோர்வாக உள்ளதென கூறி என் மடியில் தலை வைத்து வந்தார். விபத்துக்குப் பிறகு நான் சுயநினைவை இழந்தேன்.

என்னை இங்கு அழைத்து வந்தது மட்டும் ஞாபகம் இருக்கிறது. காதலி எந்த மருத்துவமனையில் உள்ளார்? அவருக்கு என்ன நடந்தது என தேடி பார்த்து கூறுங்கள்” என இளைஞன் தாதியிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வழங்கிய தகவலுக்கமைய, தாதி காதலியை தேடி பார்த்த போது அது உயிரிழந்த இரண்டு யுவதிகளில் ஒருவர் என தெரியவந்துள்ளது. “அதைக் கேட்டதும் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

இப்படி இருக்கையில் காதலித்தவர் உயிருடன் இல்லை என எப்படி அவரிடம் சொல்ல முடியும். அதனால சொல்லக்கூடாது என்று முடிவு செய்தேன்” என தாதி பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

திருமணத்திற்கு சீர் வரிசையாக பழைய பீரோ : மணமகன் எடுத்த விபரீத முடிவுக்கு மணமகள் தக்க பதிலடி!!

இந்தியாவில்..

திருமணத்தின்போது பழைய பீரோவை சீர்வரிசையாக கொடுத்ததால் ஆத்திரமடைந்த மணமகன் வீட்டார், திருமணத்தை நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் திருமண நிகழ்வின்போது பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருக்கு வரதட்சணை கொடுத்து வருகின்றனர். ஆரம்பத்தில் ஒரு பழக்கமாக இருந்தது, நாளடைவில் கலாச்சாரமாக மாறியது.

மேலும் இது கட்டாயமாக்கவும்பட்டது. இந்த வரதட்சணை கொடுமை காரணமாக பல பெண்கள் தங்கள் வாழ்க்கையை இழந்துள்ளனர். பல குடும்பங்கள் சீர்குலைத்து போயுள்ளது. பல பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். மேலும் பெண்களை மாப்பிள்ளை வீட்டார் கொலை செய்யவும் செய்கின்றனர்.

இதனால் இந்தியாவில் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தால் பல பேர் தண்டனை அனுபவித்து வந்தனர். வருகின்றனர். இருப்பினும் வரதட்சணை கொடுமை இன்னும் நீங்கவில்லை. தெலுங்கானாவில் தற்போது அதே போல் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது இளைஞர். பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணம் நேற்றைய முன்தினம் நடைபெறவிருந்தது.

எனவே திருமண ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி திருமண நிகழ்வின்போது மணமகள் வீட்டார் உறவினர்கள் என அனைவரும் வந்து நிற்க, மாப்பிள்ளை வீட்டார் திருமண நிகழ்விற்கு வர மறுத்துள்ளார்.

காரணம் பெண் வீட்டார் சீர்வரிசையில் பிரிட்ஜ், பாத்திரங்கள், நகைகள் உடன் பழைய பீரோவை வைத்துள்ளனர். எனவே அவர்கள் வர மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெண்ணின் தந்தை மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று கேட்டுள்ளார்.

அப்போது மாப்பிள்ளை வீட்டார், “நாங்கள் கேட்ட சீர்வரிசை பொருட்களை நீங்கள் தரவில்லை. நீங்கள் கொண்டு வந்த பொருட்களான மெத்தை, கட்டில் ஏற்கனவே பயன்படுத்தியது போல் பழையதாக உள்ளது. எனவே எங்களால் வர இயலாது” என்றனர்.

பின்னர் மணப்பெண்ணின் தந்தை, சீர்வரிசை பொருட்களை புதிதாக வாங்கி தருவதாகவும், திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனவும் கண்ணீருடன் மன்றாடி கேட்டுக்கொண்டார்.

இருப்பினும் அவர்கள் அதனை மதிக்காமல், அநாகரீகமாக பேசி திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி மணமகள் வீட்டார், இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் பழைய பீரோவுக்காக திருமணத்தை நிறுத்தியதால், புது பீரோவை பெண் வீட்டார் வாங்கியுள்ளனர். ஆனால் மாப்பிள்ளையை திருமணம் செய்ய பெண் மறுத்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் தோல்வி.. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு: தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!!

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லப்பாக்கம் அடுத்த கோதாவரி தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தி. இவரது மகள் ஹேமபிரியா. இவர் தனியார் கல்லூரியில் டிப்ளமா நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் ஹேமபிரியா கல்லூரியில் கௌதம் என்ற மாணவனைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக கௌதமுக்கும், ஹேமபிரியாவுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் காதல் தோல்வியால் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இதனால் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிறகு வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் ஹேமபிரியா உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் காதல் தோல்வியே தற்கொலைக்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.

வவுனியாவில் யாழ் மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கு பொது அமைப்புக்கள் கண்டனம் : பிரதம செயலாளருக்கு கடிதம்!!

பொது அமைப்புக்கள் கண்டனம்..

யாழ்ப்பாண மருத்துவ கழிவுகளை வவுனியாவில் எரிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பினையடுத்தும் வவுனியா ஓமந்தையில் மருந்துவ கழிவுகள் எரிப்பது தொடர்பில் மாவட்ட சிவில் சமூகத்தினர் அவசர கலந்துரையாடல் ஒன்றினை குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (23.02.2023) காலை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இனி மேல் தெல்லிப்பளையில் எரிக்கப்படாது என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித் துள்ளார்.

இனிவரும் நாட்களில் மருத்துவக்கழிவுகள் வவுனியாவில் எரிக்கப்படும். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவக்கழிவுகள் இதுவரை தெல்லிப்பளையில் எரிக்கப்பட்டு வந்தது.

அங்கு உரிய சுகாதார முறைகள் பின்பற்றப்படாமல் சுற்றுச்சூழலிலுள்ள மக்களிற்கு ஆபத்தான முறையில் மருத்துவக் கழிவுகள் எரிக்கப்படுவதாக பலமுறை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வந்ததாகவும் யாழ்ப்பாணத்தினை தளமாக கொண்டு இயங்கும் பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தன.

அதனையடுத்து வவுனியா சிவில் சமூகத்தினர் இணைந்து இன்று கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதில் பல வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்து கலந்துரையாடலின் இறுதியில் பிரதம செயலாளருக்கு கடிதம் அனுப்புவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கடிதத்தில் வவுனியாவில் மருத்துவ கழிவுகள் ஓமந்தை பாடசாலைக்கு அருகில் எரிப்பதும் கழிவகற்றல் செயற்பாட்டை மேற்கொள்ளுவதும் இலங்கை அரசியலமைப்புக்கு முரனானதும் சர்வதேச அடிப்படை நியமங்களுக்கும் முரணானது,

எனவே முறையான கழிவு முகாமைத்துவத்தினை நடைமுறைப்படுத்துமாறும் மக்கள் ஆகிய நாம் வீதிக்கு இறங்காமலும் இருக்கும் வண்ணம் உடனடியாக இவற்றில் தலையீடு மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணமான 3வது நாள் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

சத்தீஸ்கரில்..

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான 3 வது நாளில் புதுமண தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் மாவட்டத்தில் உள்ள பிரிஜ்நகர் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அஸ்லாம். 24 வயதான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ககாஷா பானு என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்களது திருமணம் அதே ஊரில் நடைபெற்று உள்ளது. இதில் இரு வீட்டார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியிருக்கின்றனர்.

இதனையடுத்து இருவருக்கும் திருமண வரவேற்பு விழா நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) வரவேற்பு நடத்த ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இதற்காக நேற்று இரவு இருவீட்டாரும் பணிகளில் ஈடுபட்டு இருந்திருக்கின்றனர். அப்போது, வெகு நேரமாகியும் புதுமண தம்பதி தங்களது அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டியிருக்கின்றனர்.

கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்ததை அறிந்த உறவினர்கள், ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது ஒருகணம் உறைந்துபோய் நின்றுவிட்டனர். புதுமண தம்பதிகளான அஸ்லாம் மற்றும் ககாஷா பானு ஆகிய இருவரும் படுகாயத்துடன் மயக்கமடைந்த நிலையில் கிடந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறித்து திக்ராபாரா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் மரணமடைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

ஆகவே, இருவரது உடலையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு உடல்களை அனுப்பி வைத்தனர். புதுமண தம்பதியிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கியிருக்கக்கூடும் என சந்தேகிப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

இருப்பினும் இதுகுறித்த முழுமையான விசாரணை நடைபெற்ற பிறகே உண்மை தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருமணமான 3 நாளில் புதுமண தம்பதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ராய்பூர் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

முல்லைத்தீவில் 9A எடுத்த மாணவனின் விபரீத முடிவு!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் 21 வயதான அபிஷன் என்ற மாணவன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் படித்த இவர் 2021 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9A எடுத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு பெருமை சேர்த்தவர் என கூறப்படுகின்றது.

அதேசமயம் இளைஞனின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை. இந்நிலையில் இளைஞனின் விபரீத முடிவு அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கணவரின் தங்கையை காதலித்து திருமணமும் செய்த பெண்.. அதிர்ந்துபோன உறவினர்கள்!!

பீகாரில்..

பீகார் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர் தனது கணவரின் தங்கையை காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரமோத் தாஸ், இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சுக்லா தேவி என்கிற பெண்ணை திருமணம் செய்தார். தற்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

வாழ்க்கை எப்போதும் போல இயல்பாக போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஒரு நாள் தனது மனைவியும், தனது தங்கையும் காணாமல் போயுள்ளனர். இதனால் அதிர்ந்து போன தாஸ் இருவரையும் தேடியுள்ளார்.

எங்கு தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. அன்று இரவு அவருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. மறுமுனையில் பேசிய சுக்லா, தான் வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதாகவும் எனவே தன்னை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

தாஸுக்கு எதுவும் புரியவில்லை. ஏனெனில் இத்தனை ஆண்டு திருமண வாழ்க்கையில் தங்களுக்குள் பெரிய அளவில் சண்டை, பிரச்னை, சந்தேகம் போன்ற எதுவும் வரவில்லை, இப்படி இருக்கையில் ஏன் தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய வேண்டும்? என்று யோசித்திருக்கிறார்.

அடுத்தடுத்த நாட்களில்தான் இதன் பின்னால் இருந்த உண்மை தெரியவந்துள்ளது. அதாவது சுகலா தேவி திருமணமாகி தாஸ் வீட்டுக்கு வந்ததிலிருந்து சாதாரணமாகதான் வாழ்க்கை நகர்ந்திருக்கிறது. ஆனால், தாஸின் தங்கை சோனி மீது சுக்லாவுக்கு ஈர்ப்பு இருந்திருக்கிறது.

இவர்கள் முதலில் நண்பர்களாகியுள்ளனர். பின்னர் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி புரிந்துக்கொண்டு நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதாவது சுக்லா தனது நாத்தனாரை காதலிக்க தொடங்கியுள்ளார். இந்த விவகாரத்தை கேட்டு முதலில் ஆத்திரமடைந்த சோனு, நாட்கள் செல்ல செல்ல சுக்லாவை புரிந்து கொண்டுள்ளார்.

அவ்வளவுதான் காதலுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கவே இருவரும் காதல் மழையில் நனைந்துள்ளனர். நட்பிலிருந்து காதலாக இது பரிணமித்ததை போல காதலிலிருந்து திருமணத்திற்கு இருவரும் தயாராகியுள்ளனர். எதிர்பார்த்ததைப் போலவே திருமணம் செய்து கொண்டு தனியாக வசிக்க தொடங்கியுள்ளனர்.

இந்த முழு விஷயத்தையும் கேட்டு புரிந்துக்கொண்ட சுக்லாவின் கணவர் தாஸ் இதைப்பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஓகே சொல்லிவிட்டார். இதை சுக்லா எதிர்பார்க்கவில்லை. எனவே திருமணமான புது ஜோடிகள் வாழ்க்கையை ரசித்து வாழ தொடங்கியுள்ளனர்.

ஆனால் சமூகம் மாமியார் என்கிற பெயரில் குறுக்கே வந்துள்ளது. இந்த திருமணத்தால் ஊரில் தன்னைப் பற்றி அவதூறாக பேசுவதாக கூறி தாஸின் தாய் தனது மகள் சோனுவை வலுக்கட்டாயமாக சுக்லாவிடமிருந்து பிரித்து அழைத்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து தற்போது சுக்லா காவல்நிலையத்தை அணுகியுள்ளார். இது குறித்து ரோசரா காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ண பிரசாத் கூறுகையில், “இந்த புகார் தொடக்கத்தில் வினோதமாக இருந்தது.

பின்னர்தான் புகாரில் உள்ள முக்கியத்துவத்தை உணர்ந்தோம். தற்போது இப்புகார் குறித்து விசாரிக்க ஒரு பெண் காவல் ஆய்வாளரை காவல்துறையில் கேட்டிருக்கிறோம்.

சுக்லாவின் காதல் விசித்திரமானதாக இருக்கிறது. அவர் தன்னை ஆண் போல காட்டிக்கொள்ள வேண்டும் என தலைமுடியை வெட்டி, நடை, உடை பாவனை என அனைத்திலும் ஆணாகவே மாறியிருக்கிறார்.

மட்டுமல்லாது பெயரையும் சுக்லா தேவி என்பதற்கு பதிலாக சூரஜ் குமார் என்று மாற்றிக்கொண்டார். வழக்கு குறித்து விரைவில் விசாரணை தொடங்கப்படும்” என்று கூறியுள்ளார்.

வவுனியாவில் போதையை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை : 400 மருந்து வில்லைகளுடன் ஒருவர் கைது!!

மருந்து வில்லை..

வவுனியாவில் போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை விற்பனை செய்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 400 மருந்து வில்லைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

போதையினை ஏற்படுத்தக்கூடிய மருந்து விற்பனை செய்வதாக போதை தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி ஆலோசனையில்,

உப பொலிஸ் பரிசோதகர் மதுசங்க வழிகாட்டலில் பொலிஸ் சார்ஐன் ஹேரத் (14692), பொலிஸ் கொஸ்தாபர்களான ரணில் (81010), சமிந்த (82175), மிதுசன் (91800), தினேஸ் (99172) ஆகியோர் அடங்கிய குழுவினர் திருநாவற்குளம் பகுதியில் குறித்த நபர்களை மறித்து சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போது அவரின் உடமையிலிருந்து PREGABALIN CAPSULES GABIN-150 என்ற போதையினை ஏற்படுத்தக்கூடிய 400 மருந்து வில்லைகளை கைப்பற்றியதுடன் குறித்த மருந்துனை வைத்திருந்த 23வயதுடைய இளைஞளை பொலிஸார் கைது செய்தனர்.

PREGABALIN CAPSULES GABIN-150 என்ற குறித்த மருந்துகள் அளவிற்கு அதிகமாக உள்கொள்ளும் சமயத்தில் போதையினை ஏற்படுத்தக்கூடியது எனவும் மருந்தகங்களில் 20 ரூபா தொடக்கம் 50 ரூபாவிற்குள் விற்பனை செய்யப்படும் மருந்தினை,

இவர்கள் 500ரூபா தொடக்கம் 600ரூபா வரையில் விற்பனை செய்வது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபரை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குறிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குழந்தை பெற்று 3 மணி நேரத்தில் தேர்வெழுத வந்த இளம்பெண் : குவியும் பாராட்டுக்கள்!!

பீகாரில்..

பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ருக்மணி குமாரி (வயது 22). பட்டியல் சமூகத்தை சேர்ந்த இந்த பெண்ணுக்கு திருமணம் முடிந்துள்ளது. எனினும் பல்வேறு போராட்டத்துக்கு மத்தியில் தனது கல்வி தடைபடக்கூடாது என்பதற்காக பத்தாம் வகுப்பு சென்றுவந்துள்ளார்.

இந்த சூழலில் கர்ப்பம் தரித்த அவர் தொடர்ந்து பள்ளிக்கு சென்றுவந்துள்ளார். அவருக்கு தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், நிறைமாத கர்ப்பிணியான ருக்மணி செவ்வாய் கிழமை அன்று கணிதத் தேர்வு எழுதி வீட்டுக்கு சென்றுள்ளார்..

அப்போது அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரின் உறவினர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். புதன்கிழமை அதிகாலை அங்கு அவருக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்து அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

குழந்தை பிறந்து சிறிது நேரமான நிலையில் அறிவியல் பாட பொதுத்தேர்வு எழுதச்செல்ல வேண்டும் என ருக்மணி கூறியதை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தேர்வை அடுத்த ஆண்டு பார்த்துக்கொள்ளலாம் என அறிவுரையும் வழங்கியுள்ளனர்.

ஆனால், தனது முடிவில் உறுதியாக இருந்த ருக்மணி ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு அறைக்கு சென்று பொதுத்தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு உதவியாக மருத்துவமனை செவிலியர்களும் உடன் அனுப்பப்பட்டனர்.

மருத்துவமனை நிர்வாகிகளின் உதவியோடு ருக்மணி நல்ல முறையில் பொதுத்தேர்வை எழுதியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கணவனுக்கே அனுமதி இல்லை.. 3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்ட தாய்!!

இந்தியாவில்..

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு பயந்து, பெண் ஒருவர் கடந்த 3 ஆண்டுகளாக 10 வயது மகனுடன் தனியாக வீட்டுக்குள் அடைந்துகொண்டிருந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோய் பலரின் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பலரது வாழ்க்கை முறை முற்றிலும் மாறிவிட்டது. இந்த தொற்றுநோய்களின் போது, ​​பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து தங்கள் வாழ்க்கையின் தூண்களை இழந்து மன அழுத்தத்தில் விழுந்தனர்.

தற்போது நாட்டில் கோவிட் குறைந்து, இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. ஆனால், டெல்லியில் ஒரு பெண் மட்டும் இந்த கோவிட் சோகத்திலிருந்து மீளவில்லை. அவர்கள் கோவிட் பயத்தில் வாழ்கின்றனர்.

கோவிட் தொற்றுநோய் அச்சம் காரணமாக கடந்த 3 வருடங்களாக பெண் ஒருவர் தனது 10 வயது மகனுடன் வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்த விசித்திரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

3 ஆண்டுகளாக மகனுடன் வீட்டுக்குள் பூட்டிக்கொண்ட தாய்
குருகிராமில் உள்ள மாருதி குஞ்ச் பகுதியில் வசிக்கும் முன்முன் மாஜி (Munmun Majhi), கடந்த 3 ஆண்டுகளாக தனது 10 வயது மகனுடன் கோவிட் பயத்தின் காரணமாக வீட்டுக் காவலில் இருந்து வருகிறார்.

ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு அவர் வேலைக்குச் சென்றதால், கடந்த மூன்று ஆண்டுகளாக தனது கணவரை கூட வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இவரது கணவர் சுஜன் மாஜி (Sujan Majhi) தனியார் நிறுவனத்தில் பொறியாளர்.

ஆரம்ப நாட்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் தங்கினார் சுஜன். ஒரு கட்டத்தில் அதே பகுதியில் தனக்கென ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தார். அவர் தனது குடும்பத்துடன் வீடியோ அழைப்புகள் மூலமாக மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்.

இரண்டு வீட்டுக்கும் வாடகை கொடுப்பது மட்டுமின்றி, மனைவி மகனுக்கு தேவையான பொருட்களை எடுத்து வந்து வீட்டு வாசலில் வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும், கேஸ் சிலிண்டர் முடிந்ததும் கேஸ் சிலிண்டரை பயன்படுத்துவதை நிறுத்தினார் முன்முன் மாஜி. அதற்கு பதிலாக, அவர்கள் ஒரு தூண்டல் அடுப்பைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

சுஜன் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்கும் வந்திருப்பதையும், வெளியே பாதுகாப்பாகவே இருப்பதாகவும் எடுத்துரைக்க முயற்சித்தார். ஆனால், அவரது மனைவிக்கு பயம் கொஞ்சமும் குறையவில்லை.

இந்த கோவிட் மாயையிலிருந்து தனது மனைவியை வெளியே கொண்டு வர கணவன் மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியடைந்த பிறகு, வேறு வழியின்றி அதிகாரிகளின் உதவியை நாட முடிவு செய்தார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற பிறகும், அந்த பெண் பலமுறை கெஞ்சியும் கதவை திறக்க மறுத்துவிட்டார். இதனால் பொலிஸார் கதவை உடைத்து அந்த பெண்ணையும் சிறுவனையும் வெளியே கொண்டு வந்தனர்.

இதுகுறித்து, சக்கர்பூர் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் கூறியதாவது: “முதலில் பெண்ணின் கணவர் இது குறித்து முறையிட்டபோது குடும்பப் பிரச்னை என்பதால் முதலில் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அந்த மனிதன் மிகவும் நெருக்கடியான நிலையில் இருந்தார். வீடியோ கால் மூலம் தன்னுடனும், அவரது மனைவி மற்றும் மகனுடனும் பேசுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்.

நான் குழந்தையுடன் பேசிய பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக அவர் சூரியனைப் பார்க்காததால் நான் மிகவும் வருத்தப்பட்டேன்”என்று கூறினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தனது மனைவியையும் மகனையும் திரும்பப் பெற்ற சுஜன், காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார்.

வவுனியா வைத்தியசாலையில் பல்வேறு கோரிக்கைகள முன்வைத்து ஊழியர்கள் போராட்டம்!!

போராட்டம்..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று (23.02.2023) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலை நுழைவாயில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரி, வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறை, ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் பேரணியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலிருந்து ஆரம்பமாகி சுற்றுவட்டத்தினூடாக ஏ9 வீதியிலுள்ள வைத்தியசாலையின் ஊழியர் நுழைவாயிலை வந்தடைந்து அதன் வாயிலில் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றிருந்தது.

மனைவியை குத்திக்கொன்ற கணவன்… நெஞ்சு பதைபதைக்கும் கோர சம்பவம்!!

மதுரையில்..

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கட்ட குளத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 38). இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். பூங்கொடி மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.

கணவன் வேலைக்கு செல்லாத நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பூங்கொடி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

சம்பவத்தன்று பூங்கொடி வாடிப்பட்டி தாலுகா அலுவலகம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்ற போது அங்கு வந்த ராஜேஷ் கண்ணன் அவரிடம் தகராறு செய்து கத்தியால் சரமாரியாக குத்தியதில் பலத்த காயமடைந்த பூங்கொடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து பூங்கொடியின் உறவினர்கள் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒரு வாரம் ஆகியும் குற்றவாளியை கைது செய்யாத காவல்துறையை கண்டித்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் மறியலில் ஈடுபட முயன்றனர்.

சமயநல்லூர் டிஎஸ்பி பாலசுந்தரம் மறியலில் ஈடுபட்ட முயன்றவர்களை சமரச பேச்சுவார்த்தை நடத்தி ஒரு வாரத்தில் குற்றவாளியை கைது செய்வதாக உறுதியளித்ததின் பேரில் மறியலை கைவிட்டு சென்றனர்.

இந்த நிலையில், தற்போது பூங்கொடியை கொலை செய்த அவரது கணவர் ராஜேஷ் கண்ணனை வாடிப்பட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து பூங்கொடியின் உறவினர்கள் கூறும்போது, குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி மறியல் செய்ய முயன்றதால்தான் தற்போது விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கூறினார்.

கணவன் மற்றும் மாமியாரை கொன்று குளிர்சாதன பெட்டியில் பதுக்கிய பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அசாமில்..

அஸ்ஸாமின் நூன்மதியில் வசிக்கும் வந்தனா கலிதா என்ற பெண் தனது கணவர் மற்றும் மாமியாரை கொன்று, அவர்களின் உடலை வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் அமர்ஜோதி டே மற்றும் மாமியார் சங்கரி டேயின் உடல்களை துண்டு துண்டாக வெட்டுவதற்கு முன்பு வந்தனா அவர்களை கொலை செய்துள்ளார், பின்னர் அவர்களின் உடல் உறுப்புகளை குளிர்சாதன பெட்டியில் மூன்று நாட்கள் வரை அடைத்து வைத்து இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் வந்தனா கலிதாவுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்ததாகவும், வந்தனா கலிதா அவரது காதலருடன் இணைந்து உடல் உறுப்புகளை குவஹாத்தியில் இருந்து 150 கிமீ தொலைவில் உள்ள மேகாலயாவின் சிரபுஞ்சிக்கு எடுத்துச் சென்று மறைவான இடத்தில் வீசியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டெல்லியில் ஷ்ரத்தா வால்கரை அவரது காதலன் ஆப்தாப் பூனாவாலா கொன்று குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்து இருந்த சம்பவத்துக்கு இணையாக இந்த அசாம் நிகழ்வு பார்க்கப்படுகிறது.

மேலும் சமீபத்தில் நிக்கி யாதவ் என்ற மற்றொரு பெண், அவரது கூட்டாளியான சாஹில் கெலாட்டால் கொல்லப்பட்டார் மற்றும் அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது உணவகத்தில் குளிர்சாதன பெட்டியில் சேமிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.