ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள் : பெற்றோரின் கண்ணீர் கோரிக்கை!!

பிரித்தானியாவில்..

பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து ரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் அந்த ரசாயங்கள் கிடைப்பதைக் கட்டுப்படுத்துமாறு கனேடிய பொலிசாரிடம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2022ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்துவந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக ரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

2021ஆம் ஆண்டு, லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்துகொண்டார். 2019க்கும் 2020க்கும் இடையில் ஒன்ராறியோவில் இதேபோல, அதே ரசாயனத்தைப் பயன்படுத்தி குறைந்தது 23 பேர் தற்கொலை செய்துகொண்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த ரசாயனம், ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது.

தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பிவருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law. அந்த ரசாயனம் மட்டும் தன் பிள்ளை கையில் கிடக்காமலிருந்திருந்தால், தன் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பான் என்கிறார் Tomஇன் தந்தையான David Parfett.

ஆக, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர், கனடாவும் பிரித்தானியாவும் இப்படிப்பட்ட விஷப் பொருட்கள் பிள்ளைகள் கையில் கிடைக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களில் மாற்றங்கள் செய்யுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழில் வலம்வந்த அழகிகள் : குவிந்த இளைஞர்கள்!!

யாழ்ப்பாணத்தில்..

யாழ்ப்பாணத்தில் தனியார் நிறுவனமொன்றின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடத்தப்படும் மாற்று மோதிரம் நிகழ்ச்சி நேற்றைய தினம்(30) யாழ் திருநெல்வேலியில் உள்ள தனியார் விருந்தினர் மண்டபம் ஒன்றில் இடம்பெற்றது.

அதில் 50ற்கு மேற்பட்ட அழகுக்கலை நிபுணர்கள் கலந்து கொண்டுள்ளதுடன், திருமணத்துடன் தொடர்புடைய பல விடயங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் யாழ்பாணத்து அழகிகள் மட்டுமன்றி நாட்டின் பல பாகங்களிலும் வலம் வருகின்ற அழகிகள் கலந்து கொண்டு தமது ஒப்பனையுடன் கூடிய அழகினை வெளிப்படுத்தினர்.

பல வகையிலான மணப்பெண் அலங்காரங்கள் அங்கு இடம்பெற்றிருந்தது. அதில், தமிழர்களின் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் பல வர்ணங்களில் சேலை அணிந்தும், மொடல் ஆடைகளை அணிந்தும் பெண்கள் தம்மை அலங்காரம் செய்து அழகினை வெளிப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வருகை தந்த அழகிகளை கண்டு கழிப்பதற்காக வாலிபர்கள் பலர் அந்த மண்டபம் முழுவதுமாக குவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விளம்பரத்தால் சிறை செல்லும் லொஸ்லியா? பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!!

லாஸ்லியா..

ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களில் நடித்து வரும் நடிகைகள் ஷிவானி, லோஸ்லியாவுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது என்பதும் இந்த சட்டத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளதை அடுத்து இந்த சட்டம் தற்போது தமிழகத்தில் அமலில் உள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் விளையாடுபவர்களுக்கு ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஆன்லைன் விளையாட்டுகள் வழங்கும் நிறுவனத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நடிகைகள் லோஸ்லியா, ஷிவானி நாராயணன் உள்பட ஒரு சிலர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது சமூக வலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்கறிஞர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் ஆன்லைன் சூதாட்ட செயலியை அரசாங்கமே தடை செய்திருக்கும் நிலையில் நடிகைகள் சிலர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வருகிறார்கள்.

இது சட்டப்படி குற்றம், அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்க கூட வாய்ப்பு இருக்கிறது என வழக்கறிஞர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் எச்சரித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் விலைமாதுக்கள் கைகலப்பு : ஒருவர் காயம் – பொலிசார் விசாரணை!!

வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் விலைமாதுக்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா, பழைய பேரூந்து நிலையத்தில் நடமாடித் திரிகின்ற இரு விலைமாதுக்கள் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை யார் அழைப்பது என தமக்குள் முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் விலைமாது ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும், சமூக அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற மேதின ஊர்வலம்!!

புதிய ஜனநாயக மாக்சிசலெனினிசக் கட்சியின் பிரதான மேதினக்கூட்டமும், ஊர்வலமும் வவுனியாவில் இன்று (01.05.2023) காலை இடம்பெற்றது.

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய ஊர்வலம் கடைவீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தை அடைந்து அங்கிருந்து வவுனியா மாநகர மண்டபத்தை அடைந்தது. அங்கு மேதினக் கூட்டம் இடம்பெற்றது.

கட்சியின் மாவட்ட அமைப்பாளர் ம.பகிதரன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தேசிய அமைப்பாளர் வே.மகேந்திரன், வன்னி மாவட்டங்களின் செயலாளர் நி.பிரதீபன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் இணைத்தலைவர் பூ.சந்திரபத்மன்,

புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி சார்பாக கே.ஜிந்தீசன்,
தொழிற்சங்கம் சார்பாக க.மகேந்திரன், பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் சார்பில் சிவந்தினி ஆகியோர் சிறப்புரைகளை ஆற்றினர்.

ஊர்வலத்தின் போது விலையேற்றத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் செயற்பாட்டை கண்டித்தும் கோசங்கள் எழுப்பபட்டதுடன், ஐஎம்எப் உடன்படிக்கை சித்தரிக்கும் ஊர்தியும் ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த ஊர்வலத்தில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உலகளவில் தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை மாணவன்!!

சதுரங்கப்போட்டியில்..

கிரீஸில் நடைபெற்ற உலக பாடசாலை சதுரங்கப்போட்டியில் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தங்கப்பதக்கத்தை கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தை சேர்ந்த ரித்மிதா தெஹாஸ் கிரிங்கோடா வென்றுள்ளார்.

உலகின் 23 நாடுகளைச் சேர்ந்த 61 பாடசாலையை சேர்ந்த செஸ் வீரர்கள் போட்டியில் பங்கேற்றுள்ளனர். இதில் 9 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ரித்மிதா தெஹாஸ் 9 சுற்றுகளில் 7.5 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார்.

இந்த போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை கஜகஸ்தானின் பாடசாலை வீரர்கள் பெற்றுள்ளனர். அத்தோடு அவர்கள் இருவரும் 9 சுற்றுகளில் இருந்து புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதேவேளை இந்த போட்டியின் ஆரம்பம் முதல் முன்னணியில் இருந்த ரித்மிதா தெஹாஸ், தன்னை விட அதிக புள்ளிகளை பெற்ற வீரர்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் கோர விபத்து : ஸ்தலத்தில் பலியான இளம் பெண்கள்!!

கோர விபத்து..

யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் இரு பெண்கள் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுகின்றது. இந்த விபத்து இன்று மாலை 4மணியளவில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் விபத்து சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக பொலிஸார் கூறினர். விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்கள் உயிரிழந்த நிலையில் காரில் பயணித்த மானிப்பாயைச் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இலங்கையில் மீண்டும் மிரட்டும் கோவிட் : மொத்த எண்ணிக்கை 672,171 ஆக உயர்வு!!

இலங்கையில்…

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில், புதிதாக 7 பேர் கோவிட் தொற்றாளர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 672,171 ஆக அதிகரித்துள்ளது.

இதனை நேற்றைய தினம் (30.04.2023) அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிசெய்துள்ளது. இதேவேளை, நேற்று முன்தினமும் 5 பேர் கோவிட் தொற்றாளர்களாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் கோவிட் தொற்றால் இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை (28.04.2023) உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா சின்னத்தம்பனை கிராமத்திற்கு வீரேசு குடும்பத்தினரால் பல இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டங்கள்!!

வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்னத்தம்பனை கிராமத்திற்கு புலம்பெயர் நாட்டில் வசிக்கு வீரேசு குடும்பத்தினரால் பல இலட்சம் பெறுமதியான வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

கிராம மக்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கினங்க 12 இலட்சம் ரூபா நிதியில் சின்னத்தம்பனை பத்திரகாளி கோவில் ஆலயத்திற்கு வாயில் கதவு மற்றும் சுற்றுமதில் , தண்ணீர் தொட்டி போன்ற பல வேலைத்திட்டங்கள் புதிதாக அமைத்தமையுடன் 1 இலட்சம் ரூபாய் நிதியில் சின்னத்தம்பனை கிராம மாணவர்களின் வளர்ச்சிக்காக தண்ணீர் போத்தல், சாப்பாட்டு பெட்டி உட்பட கற்றல் உபகரணங்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது

புலம்பெயர்ந்த நாட்டில் வசித்தாலும் தனது ஊர் மக்களின் நலனுக்காக 13 இலட்சம் ரூபாய் நிதியினை வழங்கியமை தொடர்பில் வீரேசு குடும்பத்தினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு விஜயம்!!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதி சிவன் ஆலயத்திற்கு சட்டத்தரணிகள் குழு இன்று (30.04) விஜயம் செய்தது.

வவுனியா வடக்கு, ஓலுமடு ஆதி சிவன் ஆலயத்தில் உடைக்கப்பட்ட விக்கிரகங்களை மீள பிரதிஸ்டை செய்ய வவுனியா நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை அனுமதி வழங்கியிருந்தது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை ஆலயத்தில் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில், விக்கிரங்கள் வைப்பு செய்யப்பட்டமை மற்றும் ஆலயத்தின் தற்போதைய நிலமை தொடர்பில் பார்வையிடுவதற்காக குறித்த வழக்கில் ஆலயம் சார்பிலும், பாதிக்கப்பட்ட தரப்புக்கள் சார்பிலும் மன்றில் ஆஜராகி வாதப் பிரதி வாதங்களை முன்வைத்த சட்டத்தரணிகள் குழு விஜயம் செய்திருந்தனர்.

இதில், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வவுனியா சட்டத்தரணி தி.திருவருள், சட்டத்தரணிகளான திலீப் காந்தன், கீர்த்தனன், இளஞ்செழியன், திபின்சன் உள்ளிட்ட சட்டரத்தரணி குழுவினர் சென்றிருந்தனர்.

இவர்களுடன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சீ.வீ.கே.சிவஞானம், ஜி.ரி.லிங்கநாதன், சுகிர்தன், கேசவன் சயந்தன், ரவிகரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு!!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை குறைக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 7 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 333 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒக்டேன் 95 ரக ஒரு லீற்றர் பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்படுவதுடன், அதன் புதிய விலையாக 365 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 15 ரூபாவினால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலையாக 310 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 330 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நடிகை சமந்தாவுக்கு கோவில் கட்டி திறந்துவைத்த ரசிகர்கள்!!

சமந்தா..

உலகம் முழுக்கவே திரைப்படங்களையும் தாண்டி, அதில் நடித்திருக்கும் கலைஞர்களைக் கொண்டாடும் மனசு ரசிகர்களுக்கு அதிகம். தங்கள் அபிமான நடிக, நடிகையர்களின் திரைப்படங்கல் ரிலீஸாகும் போதெல்லாம் ஆர்வமாக பார்க்க துடிக்கும் ரசிகர்களால் தான் திரைக்கலைஞர்களின் வயிறும், மனசும் நிறைகிறது.

அதிலும், இந்திய ரசிகர்களின் கலைத்தாகம் அளவில்லாதது. இன்னும் அதைச் சுருக்க வேண்டுமானால், ரசிகர்களில் உச்சம் என்பது தென்னிந்திய ரசிகர்கள் தான். அவர்களின் கொண்டாட்டங்களுக்கு உலகில் வேறு எங்குமே ஒப்பீடாக கருத முடியாது.

முதன்முதலா நடிகைக்கு கோயில் கட்டியது யாரு… நம்ம பயலுக தான் என்று கெத்தாக சொல்லலாம். நடிகைகள் குஷ்பு, நமீதா, ஹன்சிகா வரிசையில் இப்போது தனது கனவு நாயகி சமந்தாவுக்கு, தன்னுடைய வீட்டிலேயே கோயில் கட்டி வருகிறார் ஆந்திராவைச் சேர்ந்த ரசிகர் ஒருவர்.

இந்திய திரையுலகில் முண்ணனி நடிகைகளில் ஒருவராக தம்மை நிலைநிறுத்திக் கொண்டவர் நடிகை சமந்தா. இவருக்கு தமிழில் மட்டுமல்ல உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.

அதிலும் இந்திய ரசிகர்கள் மிகவும் ரசனை கொண்டவர்கள். நடிகைகளுக்கு கோயில் கட்டும் பழக்கத்தை முதலில் தொடங்கியது நம்ம இந்தியர்கள் தான். ஏற்கனவே குஷ்பூ, நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது சமந்தாவுக்கும் கோவில் கட்டி வருகின்றனர்.

ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தில் வசித்து வரும் சந்தீப் என்பவர் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் .இவர் நடிகை சமந்தாவுக்காக கட்டி வரும் கோவிலை இன்று திறக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

அந்த பகுதியில் இருப்பவர்கள் இப்போதே ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, நடிகை சமந்தா நடிப்பில் மட்டுமல்ல தொண்டு செய்வதிலும் மிகவும் கவர்ந்துள்ளார்.

சமந்தா பிரதிக்ஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருகிறது.இதனை அறிந்ததும் சமந்தா மீது மேலும் மதிப்பும், மரியாதையும் அதிகமானது. இதனால் அவருக்கு கோவில் கட்ட நான் தீர்மானித்தேன்.

இதற்கு எங்கள் வீட்டிலேயே ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். அதன் இறுதி கட்டப்பணியில் நடைபெற்று வரும் நிலையில் இன்று ஏப்ரல் 28 வெள்ளிக்கிழமை திறப்பு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார்.

தங்களுக்குப் பிடித்தமான நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தென்னக ரசிகர்கள் குஷ்பு, நயன்தாரா, ஹன்சிகா, நமீதா, ஹனிரோஸ் போன்ற நடிகைகளுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. எல்லோருக்கும் சமந்தாவின் தரிசனம் கிடைக்கட்டும்… வேறு என்ன சொல்ல?

சிறுவனின் காதுக்குள் கூடு கட்டிய தேனீ… கதறித் துடித்த சிறுவன்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறை தொடங்கியது. இதனால் சிறுவர்கள் அனைவரும் வீட்டில் இருந்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

அதேநேரம் சிறுவர்கள் நீர்நிலைகளுக்கு சென்று குளித்து சிக்குவது, மலைப்பகுதிகளுக்கு சென்று ஆபத்தில் சிக்குவது, பைக்குகளை ஓட்டி விபத்து ஏற்படுவது பேன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது சிறுவர்கள் மூவருக்கு ஏற்பட்ட பாதிப்பு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை கிராமத்தில், மோகன்பாபு என்ற பத்தாம் வகுப்பு மாணவன் தேன் எடுக்க சென்றுள்ளான்.

அந்த வகையில், தேன் எடுக்க முயன்றபோது மோகன்பாபுவின் காதுக்குள் தேனீ புகுந்தது. இதனால் காது வலி ஏற்பட்டு சிறுவன் துடித்துள்ளான். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வலியால் துடித்த மாணவனை பெற்றோர், குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு நீண்டநேரம் உரிய சிகிச்சை அளித்து, சிறுவனின் காதுக்குள் உயிருடன் இருந்த தேனீயை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அதேநேரம் தேனீ கொட்டியதில் காயமடைந்த மேலும் 2 சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஓடும் இரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர்.. ஓடோடி காப்பாற்ற முயன்ற நண்பனுக்கு நேர்ந்த சோகம்!!

திருப்பத்தூரில்..

திருப்பத்தூரை சேர்ந்த சுவீத் என்ற இளைஞர் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்ல இருந்தார். எனவே தன்னை வழியனுப்ப இருந்து நண்பர்களை அழைத்துள்ளார். அதன்படி அவரது நண்பர்களான ஆசைத்தம்பி, கவுதம் உட்பட 4 பேர், திருப்பத்தூரிலிருந்து சென்னைக்கு கடந்த திங்கள்கிழமை (ஏப். 24) வந்துள்ளனர்.

சென்னை வந்த அவர்கள் விமான நிலையத்துக்கு செல்வதற்காக இரவு நேரத்தில் பூங்கா இரயில் நிலையத்தில் இருந்து மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த இரயில் மாம்பலம் – சைதாப்பேட்டை இடையே சென்று கொண்டிருக்கும்போது வாசலில் நின்று கொண்டிருந்த ஆசைத்தம்பி திடீரென கால் இடறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்டதும் பதறிப்போன நண்பர்கள் சைதாப்பேட்டையில் அந்த இரயில் நின்றவுடன், கீழே விழுந்த ஆசைதம்பியை காப்பாற்ற அங்கிருந்து தண்டவாளத்தில் ஓடியுள்ளனர்.

அப்போது கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் கவுதம் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இதுகுறித்து இரயில்வே போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், கீழே விழுந்த ஆசைத்தம்பியை மீட்டு உடனே மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த கவுதம் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரயில்வே காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், வேறொரு இரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையத்திற்கு 22 பாம்புகளுடன் வந்த பெண்ணால் பரபரப்பு!!

மலேசியாவில்..

மலேசியாவில் இருந்து சென்னை வந்த பெண் பயணி ஒருவரிடம் இருந்து 22 பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

இதன்போது விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பாம்புகளைக் கொண்டு வந்த பெண் பிளாஸ்டிக் போத்தல்களில் தனித்தனியே பாம்புகளை கொண்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சில பாம்புகள் கட்டுப்பாடின்றி வெளியே வந்துள்ளது. மேலும் நடைபெற்ற சோதனையில் அந்த பெண் பச்சோந்தியையும் கொண்டு வந்துள்ளார்.

இதன்படி அந்த பெண் சுங்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைகளின் பசியை தீர்க்க உணவு தேடி தவித்த தாய்.. இறுதியில் நேர்ந்த சோகம்.!!

புத்தளத்தில்..

புத்தளம்- பள்ளம, அடம்மன வெலிய பிரதேசத்தில் மின்னல் தாக்கி இரண்டு பிள்ளைகளின் இளம் தாயொருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர். அடம்மன, எம்.ஏ. பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மல்காந்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ரோகினி தன்னை கணவனின் குடிப்பழக்கத்தால் கடும் பொருளாதார நெருக்கடிக்குள்ளான இந்த இளம் தாய், தனது காணியில் உள்ள முந்திரி மரத்தில் ஒரு கிலோ முந்திரியை பறித்து விற்பனை செய்து தனது இரண்டு குழந்தைகளுக்கும் இரவு உணவு தயாரிப்பதற்காக வருகை தந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

மின்னல் தாக்கத்திற்கு உள்ளான இந்த பெண்ணுக்கு 9 வயது மகளும், ஒரு வயது மூன்று மாத ஆண் குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அனர்த்தத்தின் போது தாயுடன் மகளும் வந்திருந்ததாகவும், வேல் யாய ஆற்றின் ஊடாக வீட்டிற்கு அருகில் சென்றுக்கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

எனினும், மகள் தனது தாயை விட 15 மீற்றருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த போது, ​​எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கியதாகவும், அதில் சிக்கி பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகி தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.