10வது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி : சிக்கிய உருக்கமான கடிதம்!!

சென்னையில்..

எனக்கு கிடைச்ச அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க.. என்னைப் பற்றி கவலைப்படாதீங்க.. நீங்க ப்ளான் பண்ணப்படியே யூரோப் டூர் கிளம்புங்க.. என்று உருக்கமாக தற்கொலைச் செய்து கொள்வதற்கு முன்பாக கடிதம் எழுதி வைத்து விட்டு, பத்தாவது மாடியில் இருந்து கீழே குதித்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் சென்னையைச் சேர்ந்து மருத்துவ கல்லூரி மாணவி நித்யஸ்ரீ.

செமஸ்டர் தேர்வுகள் நடந்து வரும் நிலையில், தேர்வு சரியாக எழுதாததால், தோல்வி பயத்தில் தற்கொலைச் செய்து கொண்டதாக தெரிய வந்த நிலையில், போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

நீங்க மன அழுத்தம் கொரோனா காலத்துக்கு பின்பு, மக்களிடையே அதிகரித்துள்ளதாக மனோதத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மனம் விட்டு பேசுங்கள். தற்கொலை தீர்வாகாது.

சென்னையில், மருத்துவ கல்லூரியில் படித்து வந்த மாணவி, 10வது மாடியில் இருந்து கீழே குதித்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள கே.ஜி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராம சுப்பு (64). அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ராமசுப்பு 10வது தளத்தில் வசித்து வருகிறார்.

ரயில்வே துறையில் ஏஜிஎம் ஆக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ராமசுப்பு, தற்போது சென்னை மெட்ரோ ரயில்வேயில் அட்வைஸ்ராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ராமசுப்புவுக்கு இரண்டு மகள்கள்.

மூத்த மகள் திருமணமாகி, கணவருடன் தனியாக வசித்து வருகிறார். இரண்டாவது மகள் நித்யஸ்ரீ (22) சென்னை கே.கே நகரில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று காலையில் நடைப்பயிற்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்த நித்யஸ்ரீ, சிறிது நேரத்தில் திடீரென தனது வீட்டின் 10வது மாடி படிக்கட்டில் இருந்த ஜன்னல் வழியாக மேலேயிருந்து கீழே குதித்து தற்கொலை முயற்சியில் இறங்கினார்.

அத்தனை உயரத்தில் இருந்து கீழே குதித்ததில், உடல் சிதறி மாணவி நித்யஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகளின் அலறம் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், நித்யஸ்ரீ மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைச் செய்து கொண்டதைப் பார்த்து அலறியடித்தனர்.

அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், உடனே அசோக் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், தற்கொலைக்கு முன்பு மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். மாணவி நித்யஸ்ரீயின் கடிதத்தில், “எனக்கு கிடைத்த அப்பா, அம்மா நல்லவர்கள். அடுத்த மாதம் நீங்கள் திட்டமிட்டபடியே யூரோப் சுற்றுலா சென்று வாருங்கள். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கல்லூரியில் மூன்றாமாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நித்யஸ்ரீ இந்த தேர்வுகளுக்கு சரியாக படிக்கவில்லை என்றும், தேர்வில் தோல்வியடைந்து அரியர் வைத்து விடுவோமோ என்கிற பயத்தில் இருந்து வந்ததும் தெரிய வந்தது.

தனது தற்கொலைக்கான காரணம் எதையும் மாணவி கடிதத்தில் குறிப்பிடவில்லை. இருப்பினும், மாணவியின் தற்கொலைக்கு தேர்வு பயம் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்று போலீசார் பெற்றோர் மற்றும் மாணவியின் நண்பர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்களின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சோகப் பின்னனி!!

வெலிப்பன்னையில்..

வெலிப்பன்னையில் இளம் குடும்பஸ்தரை அடித்துக் கொன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய மூன்று மாணவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 28ஆம் திகதி வரை மாகொல புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் மத்துகம – குருதிப்பிட்ட பிரதேசத்தில் வசித்து வந்த ரங்கவிராஜ் ஜயசிங்க என்ற 34 வயதுடையவர் ஆவார். வீதியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மாணவர்கள் தலைக்கவசத்தால் குடும்பஸ்தரை தாக்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களை பாதசாரிகளுக்கு ஆபத்தான வகையில் அஜாக்கிரதையாக ஓட்ட வேண்டாம் என பலியானவர் மாணவர்களை எச்சரித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அது தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து, ஒரு குழந்தையின் தந்தையை மாணவர்கள் இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளனர். சந்தேக நபர்கள் பாடசாலை ஒன்றின் தரம் 11 மாணவர்கள் எனவும், அதில் உயிரிழந்தவரின் மனைவி ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட நபர் வேலையின்றி இருந்ததாகவும், வெளிநாடு செல்வதற்காக காத்திருந்த நிலையில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியாவில் உமாமகேஸ்வரன் பொதுநூலகம் திறப்பு!!

பொதுநூலகம்..

வவுனியாவில் உமாமகேஸ்வரனின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு வவுனியா கோவில்குளத்தில் நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான த.சித்தாத்தன் மற்றும் நாடாவெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகதாரலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் பிரதேசசபை தலைவர்களான சுப்பையா ஜெகதீஸ்வரன், த.யோகன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வகுப்பறையில் கல்லூரி மாணவிக்கு நடந்த விபரீதம்.. அலறிய மாணவிகள்!!

கோவையில்..

கோவை துடியலூர் அடுத்த உருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீவர்சா (21). பெற்றோருடன் வசித்து வந்த இவர், தனியார் கல்லூரியில் பிஏ ஆங்கில இலக்கியம் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

நேற்றும் ஸ்ரீவர்சா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக, கல்லூரி வகுப்பறையில் இருந்த ஸ்ரீவர்சா திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார்.

இதனை பார்த்த சக மாணவிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூச்சலிட்டதால் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். பின்னர் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவியை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஸ்ரீவர்சா விஷம் குடித்துள்ளதாக தெரிவித்தனர். இதனையடுத்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீவர்சா உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரதுஉறவினர்கள், சக மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அப்போது ஸ்ரீவர்சாவுக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்ததாகவும், அதில் விருப்பம் இல்லாத நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளதாக போலீசார் கூறினர். எனினும் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருந்துக்கு சென்ற புதுப்பெண் தாலியைக் கழற்றி விட்டு தப்பியோட்டம்.. தவிக்கும் மணமகன்!!

திருச்சியில்..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்தவர் இளைஞர் கார்த்திக் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். தனது தாய் வீட்டுக்கு சென்ற புது மணப்பெண் கிருஷ்ணவேணி செய்த செயல் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அதாவது, தாய் வீட்டில் தனது தாலியை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கார்த்திக் மனைவியை தேடியுள்ளார்.

அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், கணவர் கார்த்திக், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.

திருமணமான 20 நாட்களில் இளம்பெண் மாயமான விவகாரத்தில் அவரை யாரேனும் கடத்திச் சென்றார்களா? அல்லது காதல் விவகாரத்தில் அவரே வீட்டை விட்டு வெளியேறினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய், மகள் உயிரோடு தீ வைத்து எரித்துக் கொலை… நெஞ்சை உலுக்கும் கோர சம்பவம்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேசத்தில் அரசு இடத்தில் சட்டவிரோதமாக குடியிருப்பவர்களை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், கான்பூர் திகாத் பகுதிக்கு உட்பட்ட மராவ்லி என்ற கிராமத்தில் சட்டவிரோத குடியிருப்புகளை அகற்றும் பணிக்கு அதிகாரிகள் சென்றனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக அதிகாரிகள் வந்ததை அறிந்த மக்கள், வீட்டில் இருந்து வெளியே வராமல் எதிர்ப்பு தெவித்தனர். மீறினால் குளித்து விடுவோம் என்றும் மிரட்டி உள்ளனர்.

எனினும் அதிகாரிகள் மக்களை வெளியேறி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இந்நிலையில், திடீரென ஒரு வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. அதில் இரண்டு பெண்கள் சிக்கியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த பிரமீளா தீட்சித் (44) மற்றும் அவரது மகளான நேஹா தீட்சித் (22) ஆகிய இருவர் தீயில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது.

காவல் துறையினர் குவிக்கப்பட்டு அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இது பற்றி பிரமீளாவின் மகன் சிவம் தீட்சித் கூறுகையில், அதிகாரிகள் உள்ளிட்ட பிற நபர்கள் வீட்டுக்கு தீ வைத்தனர். இதில் நானும், எனது தந்தையும் உயிர் தப்பினோம். ஆனால் தாயாரும், சகோதரியும் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனினும், வீடு தீ பிடித்து எரிந்ததற்கான சரியான காரணம் எதுவென தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

பள்ளிப் பருவ காதல்… குழந்தையை கைவிட்டு காதலனுடன் ஓட்டம் : இறுதியில் நடந்த விபரீதம்!!

சென்னையில்..

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவில் வசித்து வருபவர் 22வயதான சுதாசந்தர்.இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். ஜனவரி 31ம் தேதி சுதாசந்தர் பைக்கில், தன் கள்ளக்காதலியுடன் ரெட்டைஏரி கல்பாளையம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதாசந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த சுதாசந்தர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடன் பைக்கில் வந்த ராகிணியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் தகாத உறவால், இந்த கொலை நடந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் விடுத்த செய்திக்குறிப்பில் “சுதாசந்தர் ராகிணியுடன் தவறான உறவில் இருந்து வந்தார். இதில் ராகினிக்கு வயது 25.

ராகினிக்கு ஏற்கனவே திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இவர்களின் கள்ள உறவு, ராகிணியின் கணவருக்கும், அவரது அண்ணன்களான உதயா, பரத் என்ற ராபினுக்கும் தெரியவந்துள்ளது. இதனால் ராகினியை கண்டித்துள்ளனர்.

ஆனாலும் இருவரும் அவர்களின் தவறான உறவை துண்டித்துக் கொள்ளவில்லை. இதனால் கடந்த 3 மாத காலமாகவே கணவருடன் சண்டை போட்டு விட்டு அண்ணன் வீட்டில் ராகினி இருந்து வந்தார்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, வீட்டை விட்டு வெளியேறி, சுதாசந்தருடனேயே போய் தங்கி விட்டார். ரெட்டை ஏரி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து ராகினி சுதாசந்தருடன் வசித்து வந்தார்.

இது அவருடைய சகோதரர்களுக்கு சுதாசந்தர் மீதான ஆத்திரத்தை ஏற்படுத்தி விட்டது. இதனாலேயே சுதாசந்தரை கொலை செய்ய முடிவு செய்தனர்.

திட்டமிட்டபடியே ராகிணியுடன் வந்த சுதாசந்தரை, அந்த கும்பல் கள்ளிப்பாளையம் அருகே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றதாக ராகினி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. மேலும், கொலையாளிகள் வந்த ஆட்டோ நம்பரை வைத்தும் விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் கார்த்திக் ஆவடியில் வசித்து வந்த சுதாசந்தர், லட்சுமி புரத்திற்கு வந்து 2 மாதம் தான் ஆகிறதாம்.

அதற்குள் அந்த பெண்ணுடன் கள்ள உறவு ஏற்பட்டது. விசாரித்ததில் இருவரும் பள்ளிக்காலத்திலிருந்தே காதலர்கள். இவர்களது காதல் விவகாரம் ராகிணி வீட்டுக்கு தெரிந்து கண்டித்துள்ளனர். கேட்காததால் அவசர அவசரமாக உறவினர் வசந்திற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனாலும், காதலனை மறக்க முடியாமல் தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளார் ராகினி. இந்த விஷயம் தெரிந்து மொத்த குடும்பமும் ஆத்திரப்பட்டுள்ளது.

தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையையும் விட்டுவிட்டு, சுதா சந்தருடன் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு துணிந்துவிட்டதால் அவர்கள் ஆத்திரத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இந்த கொலையில் ஆட்டோ டிரைவர் கார்த்திக் , ராகிணியின் அண்ணன்கள் பரத் (எ) ராபின் , உதயா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தன்னுடைய ஒன்றரை வயது குழந்தையை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து வீடு எடுத்து வசித்து வந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இரண்டே மாதத்தில் கசந்த காதல் திருமணம்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : கண்ணீர்வடிக்கும் தாய்!!

ராமநாதபுரத்தில்..

காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. 10வகுப்பு வரை மட்டுமே படித்த பிரியங்கா பஞ்சுமில்லில் பணியாற்றி வந்துள்ளார்.

அப்போது ஆவரங்குடியை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. பிரியங்கா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பவர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர். சாக்கோட்டை காவல் நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சமடைந்தனர்.

இருதரப்பினரையும் காவல்நிலையத்துக்கு அழைத்துபேசிய போலீசார் சமாதானம் செய்துவைத்து பிரியங்கா மேஜர் என்பதால் கணவர் மணிகண்டனுடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தன் தாயிடம் பேசிய பிரியங்கா சாதிப்பெயரை கூறி மாமியார் திட்டி அவமானப்படுத்துவதாக கூறி கண்ணீர்விட்டுள்ளார்.

தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் இதற்கு கணவரும் உடந்தையாக இருப்பதாக கூறி அழுதுள்ளார். நீ விருப்பப்பட்டு செய்து திருமணம் எனக் கூறி மகளை சமாதானம் செய்துள்ளார்.

நேற்று காலை பிரியங்காவின் செல்போனுக்கு தொடர்புக்கொள்ள முயற்சித்துள்ளார். நீண்ட நேரம் போன் அடித்தும் யாரும் எடுக்கவில்லை. இதற்கிடையில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக அக்கம்பக்கத்தினர் காளையார்கோவில் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் உயிரிழந்த பிரியங்காவின் தாய் வனிதா சிவகங்கை எஸ்.பி அலுவலகத்தில் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். என் மகளை காதலி திருமணம் செய்துக்கொண்டு சாதிய ரீதியாக திட்டி துன்புறுத்தி வந்துள்ளனர். மகளின் சாவில் மர்மம் இருக்கிறது.

இதற்கு காரணமானவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். காதல் திருமணம் செய்த இரண்டே மாதத்தில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீருக்கடியில் மு.த்.தம் கொடுத்து சாதனை படைத்த காதலர்கள் : வெற்றிக்கு இதுதான் காரணமாம்!!

தென்னாப்பிரிக்காவில்..

காதலர்கள் தினத்தையோட்டி சுமார் 4 நிமிடங்களுக்கு மேல் நீரிலிருந்து மு.த்.தமிட்ட கா.தலர்கள் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள். கடந்த 14ம் திகதி காதலர்கள் காதலர் தினத்தை விமர்சையாக கொண்டாடினர்.

இதன்படி, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த “பெத் நீல்” மற்றும் கனடாவைச் சேர்ந்த “மைல்ஸ் க்ளூட்டியர்” இருவரும் தென்னாப்பிரிக்காவில் தங்களுடைய மகளுடன் வசித்து வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் இன்றைய தினம் காதலர்கள் தினத்தையோட்டி சுமார் 4 நிமிடங்களும் 6 செக்கனும் உ.த.ழு.ட.ன் உ.த.டு மூ.ட.ப்பட்ட நிலையில் மு.த்.தம் கொடுத்துள்ளார்கள்.

இவர்களின் சாதனை சுமார் 13 ஆண்டு கால சாதனையான 3 நிமிடங்கள் 24 விநாடிகள் நேரத்தை முறியடித்துள்ளது. இவர்களின் சாதனை குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்தபெத்,

“சாதனை படைப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் என்னால் மூச்சையெடுக்க முடியவில்லை”அதற்கு மைல்ஸ்,“ஏற்கனவே இருக்கும் சாதனையை எங்களால் அடைய முடியவில்லை.” என நினைத்தோம்.

ஆனால் இது போன்ற தடைகள் எல்லாம் தாண்டி எங்களுடைய காதல் தான் இந்த வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்கள். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், குறித்த ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்

நடு வீதியில் சகோதரிகள் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்!!

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த இருதுக்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் செல்வம். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகப் பதவி வகிக்கிறார்.

செல்வத்தின் மகள்களான தமிழரசி (19), தமிழ்ப்பிரியா (17) ஆகிய இருவரும் பி.பார்ம் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 14) பிற்பகலில் சகோதரிகள் இருவர் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த,

முனிராஜ் என்பவரது மகன் அம்பேத்வளவன் (12) சின்ற சிறுவனுடன் சேர்ந்து, பைக்கில் தேன்கனிக் கோட்டையில் இருந்து அய்யூர் சாலையில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அந்த வழியாக கோழிப் பண்ணைக்கு தீவனம் ஏற்றி வந்த ஈச்சல் லாரி ஒன்று, சாப்பிரானப் பள்ளி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் பைக்கில் சென்ற மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

லாரி பயங்கரமாக மோதியதிலும், கீழே விழுந்ததிலும் சகோதரிகள் மற்றும் சிறுவன் ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த உறவினர்கள் அங்கு திரண்டு கதறி அழுதனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு எடுத்துச்சென்றன. மேலும் இந்த கோர விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் சிவராத்திரி தினத்தில் திடீரென தோன்றிய சிவலிங்கம்!!

யாழில்..

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, முடங்குதீவு பகுதியில் திடீரென சிவலிங்கமொன்று பிரதிஷ்டையாகியுள்ளதாக தெரியவருகிறது. இந்த சிவலிங்கம் அடையாளம் தெரியாத நபர்களினால் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் இரவு குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

குறித்த பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்திற்கு பூ வைத்து, கற்பூரம் ஏத்தி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்வதாக கூறப்படுகிறது.

டீக்கடை லாபத்தில் 91 லட்சத்திற்கு பென்ஸ் கார்.. சாதித்துக்காட்டிய பட்டதாரி இளைஞன்!!

டீக்கடையில்..

எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை நடத்தும் இளைஞர், தனது வியாபாரத்தில் ஈட்டிவரும் பெரும் லாபத்தில் இப்போது ரூ.91 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அவர் மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப படிப்புகளை படித்துவிட்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட, இக்காலகட்டத்தில் எப்பொழுது தங்களது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்தில், கூகுள் போன்ற உகலளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவங்கங்களில் வேலைபார்த்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலை இழந்து திண்டாடுவதைப் பார்க்கமுடிகிறது.

இந்த நிலையில், எம்பிஏ படித்து ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய நினைக்காமல், சொந்த தொழில் செய்ய முடிவு செய்த இந்திய இளைஞர் பிரபுல் பில்லோர் (Prafull Billore), டீக்கடை நடத்தி பெரும் லாபம் பார்த்துவருகிறார்.

முதலில் தனது டீக்கடையை சிறிய அளவில் தொடங்கிய பிரபுல், பின்னர் படிப்படியாக தனது கடையை விரிவுபடுத்தினார்.எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை தொடங்குவதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கேலி செய்தனர்.

ஆனால் அவர் அந்த கேலி கிண்டல்களை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய டீக்கடையை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கடுமையாக உழைத்தார்.

அவருடைய கடுமையான உழைப்பால் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்த பிரபுல், இன்று அவரது நிறுவனத்தின் தினசரி விற்பனையே லட்சக்கணக்கில் இருக்கும்படி இந்தியாவின் பல பகுதிகளில் தனதுடீக்கடை கிளைகளைக் கொண்டுள்ளார்.

டீக்கடை நடத்தியும் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறலாம் எனபதற்கு பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் பிரபுல் பில்லோர், சொந்தமாக ரூ. 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் கார் வாங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ள அவர் தனது புதிய ஆடம்பர காரின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த பதிவில், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, கடின உழைப்பு மற்றும் உத்வேகம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு தன்னுடைய வாழ்க்கை ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மரண அறிவித்தல் : திருமதி கமலகுமாரி செல்வராசா!!

திருமதி கமலகுமாரி செல்வராசா

ஓமந்தை சேமமடுவைப் பிறப்பிடமாகவும், வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்ட கமலகுமாரி செல்வராசா அவர்கள் 15.02.2023 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி தர்மபுத்திரி(கனகம்மா) தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிதம்பரம்பிள்ளை மீனாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சிதம்பரம்பிள்ளை செல்வராசா(செல்வன்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சௌந்தரராஜா(கிராம சேவகர்), தட்ஷணாமூர்த்தி, தயாளன், பரம்சோதி மற்றும் குணாளன்(ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமாரி(லண்டன்), வாசுதேவன்(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்), செந்தில்நாதன்(லண்டன்), கெனடிற்(லண்டன்), ஊர்வசி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

செந்தூரன்(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க கிளை முகாமையாளர்), மயூரன்(வவுனியா நில அளவை திணைக்கள உத்தியோகஸ்த்தர்), அரவிந்தன்(வேந்தன்- லண்டன்), கமல்ராஜ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,கிருத்திகா(வவுனியா பல நோக்கு கூட்டுறவு சங்க பணியாளர்), மகிழினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மலர்மாலை, லட்சுமி, சுவாமிநாதன், காலஞ்சென்றவர்களான தேவசிங்கம், சரஸ்வதி மற்றும் தர்மபாலசிங்கம், காலஞ்சென்ற அழகேந்திரராணி மற்றும் இந்திராதேவி, குணசிங்கம், பாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,கமலாராணி, சந்தான லக்ஸ்சுமி(ஆசிரியை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்), விஜயகுமாரி(ஐக்கிய அமெரிக்கா), சுவர்ணலதா, திருமகள்(லண்டன்), கஜீவினி(லண்டன்), சிவரூபன்(பாம் பீச் உணவக உரிமையாளர் வெம்பிளி- லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆருஷ் அவர்களின் அன்புப் பேத்தியும்,கோபிகிருஸ்ணா(லண்டன்), கரிகிருஸ்ணா, வேணுகிருஸ்ணா, சியாழினி, கருண்கிருஸ்ணா, அஸ்விகா(ஐக்கிய அமெரிக்கா), ஆர்த்திகா(ஐக்கிய அமெரிக்கா), லதுர்சன்(லண்டன்), அபிஷா, சதுசா, வர்சன், வீனுஜா(லண்டன்), ஜனுஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சுஜிதா(லண்டன்), திவ்வியன்(லண்டன்), யதுசா(லண்டன்), யஸ்வின்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சேமமடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
52H சாந்தசோலை வீதி,
பூந்தோட்டம்,
வவுனியா

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
செ . செந்தூரன் – மகன் Mobile : +94779800601

செ . மயூரன் – மகன் Mobile : +94774242108

செ . அரவிந்தன் – மகன் Mobile : +447308741367

செ. கமல்ராஜ்(ஆயன்) – மகன் Mobile : +447818358229

திருமண மேடைக்கு போதையில் வந்த மாப்பிள்ளை.. பெண் வீட்டார் எடுத்த அதிரடி முடிவு!!

செங்கல்பட்டில்..

திருமண ரிசெப்ஷனில் மேடையில் குடிபோதையில் மாப்பிள்ளை பெண் வீட்டாரிடம் தகராறு செய்ததால் திருமணம் நின்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ஒரு குடும்பத்தில் யாருக்காவது திருமணம் ஏற்பாடு செய்வதாக இருந்தால், பேச்சுவார்த்தை தொடங்கும்போதே மணமகளை பற்றி மாப்பிள்ளை வீட்டாரும், மாப்பிள்ளையை பற்றி பெண் வீட்டாரும் அக்கம் பக்கத்தில் விசாரிப்பர்.

அதிலும் பெண் வீட்டார் மாப்பிள்ளைக்கு ஏதேனும் தவறான பழக்கம் இருக்கிறதா என்பதை குறித்துதான் முதலில் விசாரிப்பர். சிலர் குடிப்பழக்கம் மட்டும் இருந்தால் பெரிதாக அதனை கருதாமல், தங்கள் வீட்டு பெண்ணை கொடுக்க சம்மதம் தெரிவிப்பர்.

பின்னர் திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெறும். திருமண வீட்டில் வந்திருக்கும் உறவினர்கள் அனைவரும் தீவிரமாக கல்யாண வேலையை பார்ப்பர். சிலர் பார்ட்டி செய்ய வேண்டும் எண்ணுவர். அதன்படி பெண் வீட்டார் / மாப்பிள்ளை வீட்டார் பார்ட்டி செய்து (மது விருந்து) சில நேரங்களில் திருமண வீட்டை கதி கலங்க செய்துவிடுவர்.

ஆனால் இங்கே உறவினர்களுக்கு பதிலாக மாப்பிள்ளையே குடிபோதையில் மணமேடையில் தகராறு செய்து, பின்னர் அவர் அடி வாங்காத குறையாக தப்பித்து திருமணமும் நடைபெறாமல் நின்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞருக்கும், தையூரை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.

அதன்படி சம்பவத்தன்று மாம்பாக்கம் பகுதியிலுள்ள தனியார் திருமணம் மண்டபத்தில் மணமக்களுக்கு reception ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. இருவீட்டாரும் அங்கே வந்து மணமக்களை வாழ்த்தினர். இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் என சிலர் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

அப்போது, மேடையில் மணமகன் சுர்ஜித், போதையில் மணமகளுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் மணமகள் குடும்பத்தார், உறவினர்களிடமும் மேடையில் வைத்து அநாகரிமாக பேசி ந்டந்துகொண்டுள்ளார். இதனால் பொறுமை இழந்த பெண் வீட்டார், ரிசெப்ஷனை பாதியில் நிறுத்தி விட்டு, சுர்ஜித்தை வசைபாட தொடங்கினர்.

அதோடு இதுகுறித்து அந்த பகுதியிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்ட பெண் வீட்டார், மாப்பிள்ளை மீது புகாரும் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான அதிகாரிகள், மணமகன் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மாப்பிள்ளை ‘நான் செய்தது தவறு.. என்னை மன்னித்து விடுங்கள்’ என்று கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். அதோடு மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து போட்ட தங்க வாட்ச், மோதிரம், பிரேஸ்லெட் உள்ளிட்டவையை திரும்ப பெற்றுக்கொண்டனர்.

மேலும் இதுபோன்ற ஒருவருக்கு எங்கள் வீட்டுப் பிள்ளையை திருமணம் செய்து வைக்க முடியாது என்று திருமணத்தையும் நிறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணமான ஒரே ஆண்டில் இளம் பெண் விபரீத முடிவு : தவிக்கும் பச்சிளம் குழந்தை!!

அரியலூரில்..

அரியலூர் மாவட்டம் தூத்தூர் கிராமத்தில் திருமணமான ஓராண்டுக்குள் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மூத்த மகள் கர்ப்பக லட்சுமி. கர்ப்பக லட்சுமிக்கும் அரியலூர் மாவட்டம் அழகிய மணவாளன் கிராமத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இளவரசன் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கர்ப்பக லட்சுமிக்கு கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கர்ப்பகலெட்சுமி படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குழந்தை நீண்ட நேரம் அழுது கொண்டிருந்த நிலையில், குழந்தையின் அழுகுரலை கேட்ட,

கர்ப்பக லட்சுமியின் மாமியார் செளந்தர்ய வள்ளி படுக்கை அறைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கர்ப்பக லட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து கர்ப்பகாலட்சுமியின் தந்தை பரமசிவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அழகிய மணவாளன் கிராமத்திற்கு வந்த பரமசிவம் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தூத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து பெண்ணின் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தொலைக்காட்சித் தொடர் நடிகர் தூக்கிட்டு தற்கொலை!!

விஜய் டிவியில்..

‘காற்றுக்கென்ன வேலி’ சீரியல் நடிகர் ஹரி இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஹரியின் திடீர் தற்கொலை ரசிகர்களையும், விஜய் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. திரைப்படத்திற்கு நுழைவதற்கு விசிட்டிங் கார்ட்டாகவே விஜய் டிவியின் தொடர்கள், நிகழ்ச்சிகள் உள்ளதால், ரசிகர்களிடையேவும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

கடந்த சில வருடங்களாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிகளவில் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். அப்படி அதிகம் ரசிகர்களைக் கவர்ந்த சீரியல்களில் ஒன்றான ‘காற்றுக்கென்ன வேலி’ சீரியலில், ஹரி என்பவர் நடித்து வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.