பேஸ்புக் காதல்… 10க்கும் மேற்பட்டோருடன் திருமணம் செய்த பெண்ணுக்கு போலீசார் வலை வீச்சு!!

கடலூரில்..

பண்ருட்டி வாலிபர் உட்பட 10க்கும் மேற்பட்டோருடன் திருமணம் செய்த பெண் நகை பணத்துடன் ஓட்டம் பிடித்துள்ளார். பாதிக்கப்பட்ட வாலிபர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (25). இவர் கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருப்பதால் இவருக்கு வேலூரை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இவரிடம் நட்பாக பேசிய அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். நாளடைவில் அவர்களது பேஸ்புக் நட்பு காதலாக மாறியுள்ளது. அந்தப் பெண்ணும் திருமணம் செய்தால் அருள்ராஜை தான் திருமணம் செய்வதாக தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரடானேஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. ஆரம்பத்தில் அவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்றுள்ளது.

அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும் போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அவரது மனைவி கணவரிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் தனது கணவரிடம் தான் நான்கு மாதம் கர்ப்பிணியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அருள்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் அவரது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை மற்றும் 90 ஆயிரம் ரூபாய் ரொக்க படம் ஆகியவற்றை வைத்திருந்து உள்ளார். அதனை மொத்தமும் அவரது மனைவியிடம் கொடுத்து வைத்திருந்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது தோழியை பார்த்துவிட்டு வருமாறு கூறி சென்றுள்ளார். ஆனால் அங்கு அவர் சென்ற பிறகு அந்தப் பெண் மீண்டும் அருள்ராஜ் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. வெகு நாட்களாக அருள்ராஜ் அந்த பெண்ணிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மட்டுமே பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் அருள் ராஜுக்கு சந்தேகம் ஏற்படவே அவரது மனைவி கூறிய விலாசத்திற்கு சென்று பார்த்துள்ளார். அப்போதுதான் அந்தப் பெண் கொடுத்த முகவரி போலியானது எனவும் அவர் தான் தங்கை திருமணத்திற்கு வைத்திருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியதும் தெரிய வந்துள்ளது.

அதனால் அதிர்ச்சி அடைந்த அருள்ராஜ் இது குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த விசாரணையில் அருள்ராஜ் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட வாலிபர்களை திருமணம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது காவல்துறையினர் அந்த பெண்ணை தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.

முன்னதாக அருள் ராஜை தொடர்பு கொண்ட அந்தப் பெண் தனக்கு குழந்தை பிறந்து விட்டதாக கூறியும் அந்தக் குழந்தை உயிரிழந்து விட்டதாகவும் கூறியும் புகைப்படம் ஒன்றை அருள்ராஜ்க்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பல வாலிபர்களை பெண் ஒருவர் காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மாடியில் இருந்து விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்..

சென்னை கொடுங்கையூர் காந்தி நகரில் பிரபாகரன் ( 28), சந்தியா (26) தம்பதி வசித்து வருகின்றனர். இளம் தம்பதியான இவர்களுக்கு 8 வயதில் சந்தோஷ், இரண்டரை வயதில் துர்கேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு குழந்தைகளும் வீட்டில் விளையாடியுள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்தியா தன் தாய் வீட்டிற்கு குழந்தை துர்கேஷுடன் சென்றுள்ளார். அன்று இரவு சந்தியா தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் துர்கேஷ் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த சந்தியா பெரும் அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்துவந்போதும் உடல்நிலை மோசமானதால் நேற்று மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது.

அங்கு குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர் வீழ்ச்சியில் தங்கத்தின் விலை : இலங்கையின் நிலவரம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 667,885 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 188,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 164,950 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காதலியை கொலை செய்து ஃபிரிட்ஜில் வைத்த காதலன் : அதேநாளில் வேறு பெண்ணுடன் திருமணம்!!

டெல்லியில்..

டெல்லியில் ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அஃப்தாப் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மீண்டும் அதே டெல்லியில் மற்றொரு சம்பவம் நடந்திருக்கிறது.

டெல்லியிலுள்ள நஜாப்கர் என்ற இடத்தில் உணவகம் நடத்திவருபவர் சாஹில் கெலாட் (24). கடந்த 2018-ம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டருக்கு சென்ற இடத்தில், சாஹிலுக்கு நிக்கி யாதவ் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது.

இருவரும் ஒரே பஸ்ஸில் சென்று வந்தததால் அடிக்கடி சந்தித்து, பேசிக்கொண்டனர். இதனால் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அதன் பிறகு இருவரும் வேறு வேறு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தனர்.

ஆனால் இருவரும் கிரேட்டர் நொய்டா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒரே அறையில் தங்கிப் படித்துவந்தனர். கொரோனா காலத்தில் இருவரும் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர்.

கொரோனா முடிந்த பிறகு மீண்டும் வாடகை வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர். சாஹில் தனியாக உணவகம் ஒன்றை ஆரம்பித்தார். சாஹில் தன் காதலை வீட்டில் சொல்லாமல் இருந்தார். பெற்றோரின் நிர்பந்தத்துக்குப் பணிந்து வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தார்.

ஆனால் அதற்கு நிக்கி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதோடு தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. எனவே, நிக்கியை பிப்ரவரி 9-ம் தேதி இரவு தன்னுடைய காரிலிருந்த டேட்டா கேபிள் மூலம் கழுத்தை நெரித்துக் கொலைசெய்தார்.

உடலை காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு தன் உணவகத்துக்குச் சென்றார். அங்கிருந்த பெரிய ஃபிரிட்ஜில் நிக்கியின் உடலை வைத்துவிட்டு 10-ம் தேதி வழக்கம்போல் வேறு ஒரு பெண்ணை சாஹில் திருமணம் செய்துகொண்டார்.

சில நாள்கள் ஆன நிலையில், நிக்கியை அவரின் உறவினர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இதனால் அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் விரைந்து செயல்பட்டு விசாரணையைத் தொடங்கினர்.

நிக்கி ஏற்கெனவே சாஹிலுடன் இருப்பது அவரின் உறவினர்களுக்குத் தெரியும். எனவே, சாஹில் குறித்து அவர்கள் போலீஸில் தெரிவித்திருந்தனர். போலீஸார் சாஹிலைத் தேடி அவரின் சொந்த கிராமத்துக்குச் சென்றனர்.

அங்கு அவர் இல்லை. அவரது மொபைல் போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சாஹிலைக் கைதுசெய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் மேற்கண்ட உண்மைகளைத் தெரிவித்தார். பாபா ஹரிதாஸ் நகர் போலீஸார் சாஹில் தெரிவித்த வாக்குமூலத்தைச் சரிபார்த்துவருகின்றனர்.

வீட்டுக்கு தெரியாமல் சென்று காதலர் தினம் கொண்டாடிய இளம் ஜோடிக்கு நடந்த விபரீதம்!!

பெங்களூருவில்..

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்தியாவிலும் காதலர்கள் சந்தித்து காதலர் தினத்தை, முத்தம் கொடுத்து பகிர்ந்துகொண்டனர். இதனால் பல இடங்களில் காதலர்கள் கூட்டம் கூட்டமாக நிரம்பி காணப்பட்டனர்.

அந்த வகையில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த காதல் ஜோடி விபு சர்மா (27), சுப்ரியா துபே (26) ஆகியோர் காதலித்து வந்தனர். விபு டெல்லியில் உள்ள ஒரு நிறுவனத்திலும், சுப்ரியா பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர்.

இருவரும் காதலிப்பது அவர்களது பெற்றோருக்கு தெரியாது. எனினும் காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர். இதனையடுத்து , காதலர் தினத்தை கொண்டாட கடந்த சில நாட்களுக்கு முன் விபு சர்மாவும், சுப்ரியா துபேவும் கோவா சென்றுள்ளனர்.

அவர்கள் கோவாவில் அறை எடுத்து தங்கி பல்வேறு இடங்களை சுற்றிபார்த்தனர். இந்நிலையில், காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் அதற்கு முன்தியநாள் நள்ளிரவு முதல் காதல் ஜோடி கோவாவின் பலோலம் கடற்கரையில் சுற்றி திரிந்துள்ளனர்.

அப்போது எதிராராத விதமாக கடலில் எழுந்த பெரும் அலையில் சிக்கி இருவரும் கடலில் மூழ்கினர். இதனை அங்கிருந்த காதலர்கள் பார்த்து மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் கடலில் மூழ்கிய 2 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், 2 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியா செட்டிகுளத்தில் மின்சாரத்தில் சிக்கி 30 வயது மதிக்கத்தக்க யானை இறப்பு!!

செட்டிகுளம்..

செட்டிகுளம், முசல்குத்தி வீதியில் மின்சாரம் தாக்கி 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இறந்த நிலையில் இன்று (15.02) மீட்கப்பட்டுள்ளது. வவுனியா, செட்டிகுளம், முசல்குத்தி பகுதியில் உள்ள வயல் நிலங்களைச் சூழ போடப்பட்ட மின்சாரக் கம்பியில் சிக்கிய காட்டு யானை ஒன்று அப் பகுதியில் விழுந்து இறந்துள்ளது.

அப் பகுதிக்கு சென்றவர்கள் இதனை அவதானித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் கால்நடை வைத்திய அதிகாரி உள்ளிட்டோர்,

சம்பவ இடத்திற்கு சென்று யானையை பார்வையிட்ட போது யானை இறந்திருந்தது. வயல் நிலங்களுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த யானை மரணமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், யானையின் மரணம் தொடர்பில் கால்நடை வைத்திய அதிகாரியால் உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானையே இவ்வாறு இறந்துள்ளது. இது தொடர்பில் செட்டிகுளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பில் மஹிந்த தேசப்பிரியவால் தெளிவூட்டல்!!

தேர்தல் கண்காணிப்பு..

உள்ளுராட்சி மன்ற தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரியவினால் இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வானது வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள அப்ரியல் அமைப்பின் மாநாட்டு மண்டபத்தில் இன்று (15.02) மாலை இடம்பெற்றது.

இதன்போது, உள்ளுராட்சி தேர்தலின் நடைமுறைகள், வேட்பாளர்களின் செயற்பாடுகள், தேர்தல் முறைகேடுகளை அவதானிக்கும் வழிமுறைகள், சமூக ஊடகங்கள் ஊடான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்,

அரச சொத்துக்களை பயன்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடப்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், இளைஞர், யுவதிகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.

இதில் அப்ரியல் அமைப்பின் இயக்குனர், இயக்குனாத் சபை உறுப்பினர்கள், அப்ரியல் அமைப்பின் ஏற்பாட்டின் கீழ் தேர்தல் கண்காணிப்புக்கான தன்னார்வ முயற்சி (வியூ) அமைப்பின் பல்வேறு மாவட்டங்களுக்குமுரிய கண்காணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கணவனுக்கு மதுவில் ஆசிட் கலந்துகொடுத்து மனைவி செய்த கொடூரம்!!

செங்கல்பட்டில்..

கணவனை கொலை செய்ய மதுபாட்டிலில் ஆசிட் கலந்து கொடுத்து மதுவை குடித்த கணவன் மற்றும் அவரது நண்பன் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்த சுகுமார் இவர் செங்கல்பட்டில் கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி கவிதா தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் கவிதாவிற்கும் அங்கு பணிபுரியும் மற்றொரு நபருக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்தது அவரது கணவர் சுகுமாருக்கு தெரிய வரமே கவிதாவை கடுமையாக சுகுமார் கண்டித்துள்ளார்.

இதனால் கணவருடன் ஏற்பட்ட தொடர் பிரச்னை காரணமாக அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் கவிதா, இதற்காக சுகுமாரின் அண்ணன் மணி என்பவரிடம் ரூ.400 பணம் கொடுத்து இரண்டு மது பாட்டிலை வாங்கி வர சொல்லி அதனை வாங்கி வைத்துள்ளார்.

பின்னர் அதில் ஒரு பாட்டிலை மணியிடம் கொடுத்துவிட்டு ஒரு பாட்டில் மட்டும் இவர் எடுத்துச் சென்று அந்த மது பாட்டிலில் சிரஞ்சி மூலம் மதுவில் ஆசிட்டை கலந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவருக்கு உங்களுக்கு யாரோ கொடுத்துள்ளதாக கோரி இந்த மதுபாட்டிலை கவிதா தன் கணவரிடம் கொடுத்துள்ளார். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அவர் முழு போதையில் இருப்பதால் பிறகு குடித்துக் கொள்ளலாம் என வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள் திங்கட்கிழமை காலையில் அவர் வேலைக்கு செல்லும் பொழுது இந்த மதுபாட்டிலும் எடுத்துச் சென்றுள்ளார் சுகுமார், மதிய உணவு நேரத்தின்போது மதுவை குடிக்க முயற்சிக்கும் பொழுது அவருடன் பணி செய்யும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய பல ஆண்டுகால நண்பருமான ஹரிலால் என்பவர் தனக்கும் மதுவில் பங்கு வேண்டும் என கேட்டு வாங்கி குடித்துள்ளார்.

திருமண கொண்டாட்டம்.. நடனமாடும் போது திடீரென சரிந்து விழுந்த நபர்.. நடந்த விபரீதம்!!

உத்திர பிரதேசத்தில்..

உத்திர பிரதேச மாநிலத்தில் திருமணத்தின் போது நடனமாடிய நபர் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

மருத்துவ உலகில் பல்வேறு உயரங்களை மனித குலம் அடைந்திருந்த போதிலும், சில எதிர்பாராத சோக சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இளம் வயது மனிதர்களிடையே மாரடைப்பு ஏற்படுவது சமீப காலங்களில் அதிகரித்திருப்பதை நாம் தொடர்ந்து செய்திகள் வழியாக அறிந்து வருகிறோம்.

திடீரென கடினமான உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு மாரடைப்பு ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்தும் வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் சோக சம்பவம் ஒன்று நடைபெற்று இருக்கிறது. இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருவதுடன் பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்ற திருமணத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்ததாக தெரிகிறது. அந்த வீடியோவில் திருமணத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட இடத்தில் விருந்தினர்கள் நடனமாடுகின்றனர்.

அப்போது நடனமாடிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுகிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்திருக்கின்றனர்.

ஆனால், அந்த முயற்சிகள் பலனிக்காததால் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்.

இது தொடர்பாக வெளியான தகவலின்படி மரணமடைந்த அந்த அந்த நபர் மருந்து பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்தார் எனவும் அவருடைய மனைவியின் சகோதரி திருமணத்தில் கலந்துகொண்ட வேளையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிகிறது.

திருமணத்தில் நடனமாடும்போது மயக்கமடைந்த நபர் உயிரிழந்த சம்பவம் உத்திர பிரதேச மாநில மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மது அருந்திவிட்டு உணவு முடித்துக் கொண்டு மீண்டும் வேலைக்கு செல்லும் இருவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ஹாரிலால் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர் பிறகு வீட்டுக்கு சென்ற சுகுமாருக்கும் உடல் நிலை மோசமானதால் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போழுது அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் இருவரும் மதுவில் விஷம் கலந்து அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் படாளம் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர்.

அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மனைவி கவிதா மீது சந்தேகம் வர அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் மதுவில் ஆசிட்டை ஊசி மூலம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. போலீஸார் அந்தபெண்ணிடம் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஜகஸ்தான் நாட்டு பெண்ணை தமிழ் முறைப்படி திருமணம் செய்த இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

தஞ்சாவூரில்..

தஞ்சாவூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் கஜகஸ்தான் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். தமிழ் முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த தம்பதியின் புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் பரவ, நெட்டிசன்கள் பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

காதலுக்கு எவ்வித வேறுபாடும் இருப்பது கிடையாது. மொழி, தேசம் என அத்தனை பாகுபாடுகளையும் தகர்க்கும் காதல் தான் உலக மக்களையும் ஒன்றிணைக்கிறது. உள்ளங்கையில் உலகம் சுருங்கிவிட்ட நிலையில் வெளிநாடுகளுக்கு செல்வதும், பலதரப்பட்ட மக்களை சந்திப்பதும் தற்போது மிகவும் சகஜமாகிவிட்டது.

அதுவே, சிலரது வாழ்க்கையில் காதலுக்கான பாதையாகவும் மாறிவிடும். அப்படியானவர்களில் ஒருவர் தான் தஞ்சாவூரை சேர்ந்த பிரபாகரன். யோகா ஆசிரியரான இவர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த புலவஞ்சி கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர்.

33 வயதான இவர் யோகாவில் டிப்ளமோ முடித்தபிறகு கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக வேலை கிடைத்து சென்றிருக்கிறார். அப்போது,அங்கு யோகா கற்றுக்கொள்ள வந்த அல்பினால் எனும் பெண்ணுடன் அவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் இருவரும் நண்பர்களாக பழகிவந்த நிலையில் நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்த இருவரும் தங்களது காதல் குறித்து வீட்டினரிடம் பேசி இருக்கின்றனர்.

இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவே பிரபாகரனின் சொந்த ஊரான மதுக்கூரில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன. அல்பினால் தனது குடும்பத்தினருடன் வருகை தர மாப்பிள்ளை வீட்டினர் அவர்களை விமர்சையாக வரவேற்றிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றிருக்கிறது. இந்த திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தம்பதிகளை வாழ்த்தினர்.

இதுபற்றி மணமகள் அல்பினால் பேசுகையில், தனக்கு தமிழக மக்களின் கலாச்சாரம் மிகவும் பிடித்திருப்பதாகவும் தமிழ் மொழியை ஆர்வத்துடன் கற்றுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார். தங்களது காதல் திருமணம் பற்றி பிரபாகரன் பேசுகையில்,”நான் கஜகஸ்தானில் யோகா ஆசிரியராக பணிபுரிந்து வந்த போது அல்பினால் யோகா கற்றுக்கொள்ள வந்திருந்தார்.

இருவருக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்பட்டு காதலாக மாறியது. இதுபற்றி எங்களது வீட்டினருக்கு தெரியப்படுத்தினோம். அல்பினாலுக்கு தந்தை கிடையாது. அவருடைய தாய் எங்களுடைய விருப்பத்தை அறிந்து முதலில் யோசித்தார். பின்னர் சம்மதம் தெரிவித்தார். ஆகவே சொந்த ஊரில் தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டோம்” என்றார்.

திருமணமான மூன்றே நாட்களில் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பம்!!

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் புதிதாக திருமணம் செய்த ஜோடி சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினு(27). இவருக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரணிதா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து தனது மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக மனைவியை இருசக்கர வாகனத்தில் பினு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது அவர்கள் சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

கொலந்தரா என்ற பகுதியில் நடந்த இந்த கோர விபத்தில் புதுமணத் தம்பதி தூக்கி வீசப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்றே நாட்களில் புதுமணத் தம்பதி சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருநம்பியாக மாறிய பெண்ணை காதலர் தினத்தில் கரம்பிடித்த இளம்பெண்!!

ஈரோட்டில்..

தமிழக மாவட்டம் ஈரோட்டில் திருநம்பியை இளம் பெண்ணொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அருணாதேவி. பட்டாதாரியான இவர் அருண் பாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அருண் பாஷ் பெண்ணாக இருந்து திருநம்பியாக மாறியவர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அருணாதேவி, அருண் பாஷ் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த காதல் ஜோடி, காதலர் தினமான இன்று இல்லற வாழ்வில் இணைந்தது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.

சிவபெருமானை மணந்த இளம்பெண் : சுவாரஸ்ய சம்பவம்!!

மத்தியப் பிரதேசத்தில்..

மத்தியப் பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் நடந்த ஒரு வித்தியாசமான திருமணம் பேசுபொருளாக மாறியுள்ளது. எம்பிஏ பட்டதாரியான நிகிதா சௌராசியா என்பவர்,

தனது குடும்பத்தினர் முன்னிலையில் சிவபெருமானை திருமணம் செய்து கொண்டார். பிரம்மகுமாரி ஆசிரமத்தில் மஞ்சள் நீராட்டு விழா செய்துவிட்டு, கல்யாண மண்டபத்தில் உள்ள பரமேசுவரருக்கு மாலை அணிவித்து,

ஏழு முறை வலம் வந்து சங்கரரைக் கணவனாக ஏற்றுக்கொண்டார். தற்போது இந்த திருமண விழா அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்களின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம்!!

மட்டக்களப்பு..

மட்டக்களப்பு தாந்தாமலையில் உள்ள குளம் ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.02.2023) படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்களின் சடலங்கள் பெருமளவான மக்களின் கண்ணீருடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ட பகுதி சோகத்தில் மூழ்கியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை – தாந்தாமலை பகுதியில் உள்ள மீனச்சிம்பேடி குளத்தில் பாடசாலை மாணவர்கள் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது, ஆசிரியர் ஒருவர் மற்றும் மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கிய நிலையில் உயிரிழந்திருந்தனர். களுமுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியர் யோகேஸ்வரன் கிவேந்தன் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் ரஜிர்த்தனன், சத்தியசீலன் தனுஜன், வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்திருந்தனர்.

நேற்று (13.02.2023) மாலை உயிரிழந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு களுமுந்தன்வெளி கிராமத்திலுள்ள உயிரிழந்த ஒவ்வொருவரின் வீட்டிற்கும் சடலங்கள் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவர்களில் ஆசிரியரான யோகேஸ்வரன் கிவேதன் வர்த்தக துறையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்து, இலவசமாக தமது பிரதேச மாணவர்களுக்கு மாலை நேரங்களில் கல்வி கற்ப்பித்து வந்துள்ளதுடன் பகுதி நேரமாக தனியார் இணைய வானொலிகளில் அறிவிப்பாளராவும் பணிபுரிந்துள்ளார்.

அத்தோடு மாணவர்களான வீரசிங்கம் விதுசன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது ஆண் பிள்ளையாகவும், சத்தியசீலன் தனுஜன் நான்கு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசி ஆண் பிள்ளையாகவும், தயாபரன் ரஜிர்த்தனன் இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூத்த பிள்ளையாகவும் இருந்துள்ளனர்.

இவர்களின் உடல்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையினை தொடர்ந்து நேற்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சடலம் வீடுகளுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சமயம் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வந்த மக்கள் உடலங்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், இரா.துரைரெட்னம் ஆகியோரும் நேரில்வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இவர்களின் குடும்பத்தார், உற்றார் மற்றும் உறவினர்கள் கதறியழ உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஊர்வலமாக வீதி வழியாக கொண்டு செல்லப்பட்டு களுமுந்தன்வெளி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே மருத்துவராகும் கனவுடன் தேர்வுக்கு போன புதுமணப்பெண்!!

கேரளாவில்..

கேரளாவில் திருமணத்தன்று மருத்துவ மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்ற வீடியோ சமூக வலை தளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. தற்போதைய நவீன காலம் பெண்களுக்கான பல்வேறு கதவுகளை அகல திறந்து இருக்கின்றன.

அதன் காரணமாகவே பெண்கள் தங்களது சொந்தக் காலில் நிற்கும் வகையில் தங்களது கல்வியை மிகுந்த கவனத்துடன் பயின்று வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு கல்வி கற்கும் வாய்ப்பு பெண்களுக்கு ஒரு காலத்தில் மறுக்கப்பட்டு வந்ததை நாம் மறுத்து விட முடியாது.

ஆனால் அதேநிலையில் தற்போதைய சூழ்நிலை சற்றே மாறி இருக்கிறது. அந்த வகையில் கேரளாவில் திருமணம் முடிந்த கையோடு மருத்துவ மாணவி ஒருவர் தேர்வு எழுத சென்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீ லட்சுமி அனில். இவர் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் பிசியோதெரபி படித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

செய்முறை தேர்வு அன்று திருமணம் நிச்சயிக்கப்படவே என்ன செய்வதென்று யோசித்த ஸ்ரீ லட்சுமி சரியாக திருமணம் முடிந்த கையுடன் மணக்கோலத்திலேயே சென்று தேர்வையும் எழுதி இருக்கிறார்.

அந்த வீடியோவில் அவர் கல்யாண புடவையில் கல்லூரிக்குள் நுழைகிறார். மணக்கோலத்தில் இருந்த அவருக்கு அவரது தோழிகள் கோட் அணிவித்து கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பை மாட்டி விடுகின்றனர்.

அதேபோல மற்றொரு வீடியோவில் ஸ்ரீ லட்சுமி கல்லூரிக்கு வரும் வழியிலேயே தேர்வுக்கு தயாராகி வருவதும் தெரிகிறது. தேர்வு அறைக்குள் தோழிகளில் ஒருவர் அவரது புடவையை சரி செய்ய மற்றொருவர் அவருக்கு வாழ்த்து சொல்கிறார்.

பரிட்சை முடிந்து வெளியே வந்த ஸ்ரீ லட்சுமி தனக்காக காத்திருந்த தனது தாயை கட்டியணைத்து மகிழ்வதும் இந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவ பலரும் ஸ்ரீ லட்சுமிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை.. பிரபல நடிகையின் கணவர் மீது பெண் புகார்!!

மும்பையில்..

திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் ராக்கி சாவந்த். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2009ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒரே நைட்டில் பிரபலமானார்.

திருமண வரன்களை தேர்வு செய்யும் இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் கணவராக தேர்வு செய்யப்பட்டவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார்.

இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே 2022 ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அடில்கான் துரானியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக ராக்கி சாவந்த் அறிவித்தார்.

இந்த நிலையில் ராக்கியின் தாய் புற்றுநோயால் அண்மையில் இறந்துவிட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போதுதான் ராக்கிக்கும் அடிலுக்கும் திருமணம் நடந்தது.

திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் தன்னை அடில் கான் அடித்து துன்புறுத்துகிறார் என போலீஸில் புகார் அளித்தார். மேலும் தன் மீது ஆசிட் வீசிவிடுவதாகவும் விபத்தை தானே ஏற்படுத்தி கொலை செய்து விடுவதாகவும் தன்னை அடில் மிரட்டுகிறார் என ராக்கி சாவந்த் புகார் அளித்தார்.

அது மட்டுமல்லாமல் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்றும் ராக்கி கண்ணீர் விட்டார். இந்த நிலையில் ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானை மும்பை ஓஷிவோரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவர் மீதான புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது மயங்கி விழுந்தார் ராக்கி சாவந்த் . இதையடுத்து ராக்கியை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் உட்கார வைத்தனர். ராக்கி குறித்து தினமும் ஒரு செய்தி வருகிறது.

அந்த வகையில் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை விற்பனை செய்து அடில் பணம் சம்பாதித்துள்ளார் என ராக்கி கதறினார். அத்துடன் அடில் தன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகவே இது போல் தன்னை டார்ச்சர் செய்கிறார் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் அடில் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீஸில் ஈரான் நாட்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மைசூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி மருத்துவம் படித்து வருகிறேன். எனக்கும் அடில் கானுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

அது காதலாக மாறியது. இதனால் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகி என்னுடன் பாலியல் ரீதியில் உறவு கொண்டார். ஆனால் இந்த உறவு கொண்டதன் பிறகு என்னுடன் பழகுவதை அடில் துரானி நிறுத்திக் கொண்டார்.

என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அத்துடன் வற்புறுத்தினால் அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே அடில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து போலீஸார் அடில் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.