யாழ் அத்தியடி பெண் கொலையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

யாழ்..

யாழ்ப்பாண பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அத்தியடி பகுதியில் சுப்பிரமணியம் கலாநிதி என்ற 55 வயதுடைய கணவனை பிரிந்து ஒருபெண் பிள்ளையுடன் வசித்து வந்த தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தாயும் மகளும் வசித்த வீட்டிற்கு நபர் ஒருவர் நீண்டகாலமாக ஆடுகளுக்கு குழை வெட்ட மற்றும் வீட்டு வேலைகளுக்காக வருகை தருவதாகவும் உயிரிழந்தவரின் மகள் கூறியுள்ளார்.

அந்தவகையில் நேற்று காலையும் அவர் வழமைபோல வருகை தந்து நேற்று இரவு வரை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயும் , சந்தேக நபரும் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது வேலை செய்து கொண்டிருந்தவரை காணவில்லை என தெரிவித்த மகள், தான் சென்று பார்க்கையில் தாயார் இரத்தம் தோய்ந்த நிலையில் நிலத்தில் கிடந்ததாகவும்தெரிவித்திருந்தார்.

பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையின் போது சந்தேகநபர் கூரிய பிக்கான் ஒன்றினால் பெண்ணை தலையில் தாக்கி விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கொலை தொடர்பில் தடயவியல் பொலிசார் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உருளைக்கிழங்கு வயலுக்குள் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!!

மேற்கு வங்கத்தில்..

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்துள்ளார்.

மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ். பாஜகவினரிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தவர் சுசித்ரா மண்டல்(48). இவர் உருளைக்கிழங்கு வயலுக்குள் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரின் தொண்டையில் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார்,சுசித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசியல் ரீதியாக இந்த கொ.லை நடந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆளுங்கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னை விட்டு போகாதே.. மணப்பெண்ணின் சேலையை பிடித்து தடுத்த பாசமான நாய்.. நெகிழ்ச்சி வீடியோ!!

நாகர்கோவில்லில்…

நாகர்கோவில் அருகே பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனம் இல்லாமல் நாய் ஒன்று போராடிய வீடியோ பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக பலருக்கும் வளர்ப்பு நாய் மீது மிகுந்த பாசம் இருக்கும். அதனை தங்களது வீட்டில் ஒருவரை போலவே மக்கள் கருதுவர்.

தங்களது வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே அந்த நாய்களை பார்த்துக் கொள்பவர்கள், நொடி நேரம் கூட அதனை பிரிவதும் கிடையாது. இதன் காரணமாகவே தங்கள் வளர்ப்பு நாய்களை தனியாக விட்டு விட்டு வெளியூர் செல்லக்கூட பலரும் யோசிப்பது உண்டு.

அந்த வகையில் பாசமாக வளர்த்த மணப்பெண்ணை பிரிய மனமின்றி நாய் போராடிய வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் அருகே உள்ள சித்திரை திருமகாராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுயம்பு செல்வன். இவருடைய மகள் சுகப்பிரியா. இவருக்கும் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. அதன் பின்னர் மணப்பெண் வீட்டில் இருந்து திருமணம் ஆகி தம்பதியர் புகுந்த வீட்டிற்கு செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

அப்போது சுகப்பிரியா பாசத்துடன் வளர்த்துவந்த நாய் தனது வாலை ஆட்டியபடி குரைத்தது. பின்னர் காரில் ஏறச் சென்ற சுகப்பிரியாவை தொடர்ந்து சேலையை பிடித்து இழுத்தபடியும் முன்னங்கால்களை அவர் மீது வைத்தும் தனது பாசத்தை வெளிப்படுத்தியது.

தொடர்ந்து அந்த சுகப்பிரியாவும் தனது வளர்ப்பு நாயை சமாதானப்படுத்த முயன்றார். இதனால் அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து சுகப்பிரியா தனது கணவருடன் காரில் ஏறிச் சென்ற பின்னர் நாய் மிகுந்த சோகமடைந்தபடி படுத்திருந்தது.

சுகப்பிரியா கல்லூரிக்கு செல்லும்போதும் அவர் வரும்வரையில் வீட்டின் வாசலிலேயே தங்களது நாய் காத்திருக்கும் என்றும் இப்போது வீட்டை விட்டு பிரிவதால் அதனை நாயால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும்,

சுகப்பிரியாவின் வீட்டினர் தெரிவித்திருக்கின்றனர். பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாசக்கயிறாக மாறிய துப்பட்டா.. பிறந்தநாளில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

கேரளாவில்..

மாவு அரைத்துக்கொண்டிருக்கும்போது இளம்பெண்ணின் துப்பட்டா கிரைண்டரில் சிக்கி உயிரிழந்துள்ளது கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பெரும்பாலான பெண்கள் சுடிதார் அணியும்போது துப்பட்டாவையும் அணிவர்.

அவ்வாறு அணியும் துப்பட்டா சில நேரங்களில் அவர்களுக்கு பாசக்கயிறாகவே மாறுகிறது. குறிப்பாக பெண்கள் ஸ்கூட்டி, பைக் உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும்போது துப்பட்டாவை அணிந்து செல்வர்.

அவ்வாறு அணியும்போது அவர்கள் அதனை சரிவர பாதுகாக்கவில்லை என்றால், அது வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி, வாகனம் விபத்துக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும். இதுபோன்ற செய்திகள் அதிகமானவை நாம் அறிந்த ஒன்றே.

அதோடு இது போன்ற சம்பவத்தால் பல குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியே இருக்கிறது. அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது கேரளாவில் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே உள்ள தலப்பாடி என்ற பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெயஷீலா (24) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த ஆண்டு திருமணமானது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், தனது மனைவியின் விருப்பத்திற்காக ரஞ்சன் அவரை வேலைக்கு செல்ல அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஜெயஷீலா அவர் இருக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பாவத்தன்று அவருக்கு பிறந்த நாள். எனவே புது சுடிதார் ஒன்றை அணிந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு ஏதுவாக ஷால் (துப்பட்டா) அணிந்தும் உள்ளார்.

அவர் அங்கிருந்த ஒரு பெரிய கிரைண்டரில் மாவு அரைத்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கிரைண்டரில் அவரது ஷால் எதிர்ப்பாராத விதமாக சிக்கியது.

இதில் நிலைகுலைந்துபோன அவர் தட்டு தடுமாறி கீழே விழுந்தார். விழுந்ததில் அவருக்கு இரத்தத்துடன் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மீட்டு அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் ஜெயஷீலாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

துப்பட்டா அணியும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அறிவுறித்தியுள்ளனர். பிறந்த நாளன்று வேலைக்கு சென்ற இளம்பெண், கிரைண்டரில் துப்பட்டா சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடக்கமுடியாமல் தவித்த தம்பி.. அண்ணன் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

டுவிட்டரில்..

பள்ளிக்கு செல்லும் சிறுவன் ஒருவன் தனது தம்பியால் நடக்க முடியவில்லை என்பதால் அவனை தூக்கிக் கொண்டு செல்லும் காட்சி டுவிட்டரில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக உடன்பிறப்புகளின் பாசம் என்பது அதனை வார்த்தையால் கூறி விடமுடியாது. அந்த அளவிற்கு உணர்வுப் பூர்வமான பாசம் நிறைந்த ஒரு உறவாகும். இங்கு காணொளியில் சிறுவன் ஒருவன் பள்ளிக்கு செல்கின்றான்.

உடன் சிறுவயது அவன் தம்பியும் செல்லும் நிலையில், தம்பியால் நடக்கமுடியவில்லை என்பதால், தனது புத்தகப் பையையும், தம்பியையும் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு பள்ளிக்கு செல்கின்றான்.

இதனை அந்த சாலையில் வழியாக சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர் காணொளியாக எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வவுனியாவில் முதலிடம் பெற்ற நிர்ஷிகா சத்தியகீர்த்தி.. பொறியியலாளராவதே எனது இலட்சியம்!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை 2022 இன் பெறுபேறுகள் கடந்த 25.01. 2023 அன்று வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி.நிர்ஷிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளைப் பெற்று வவுனியா மாவட்டத்தில் முதல் நிலையில் சித்தி அடைந்துள்ளமை யாவரும் அறிந்ததே.

பாடசாலையின் விடுமுறை காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகிய நிலையில் நேற்றைய தினம் 13.02.2023 (திங்கட்கிழமை) பாடசாலை சமூகத்தை நேரில் சந்தித்து தனது மகிழ்ச்சியினையும் நன்றியினையும் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வின்போது தனது வெற்றிக்கு வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்,உறவினர்கள்,நலன் விரும்பிகளுக்கும் பாடசாலை சமூகத்திற்கும் நன்றி பாராட்டியதுடன் எதிர்காலத்தில் பொறியியலாளராகி இந்த நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்வதே தனது எதிர்கால இலட்சியம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

வவுனியாவில் இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்… தவறவிடாதீர்கள்!!

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் காலத்தை வீணடிக்காமல் பொருத்தமான கற்கை நெறியை தெரிவுசெய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை தவறவிடாதீர்கள்.

தொழில்நுட்பக் கல்லூரியில் நீங்கள் விரும்பிய கற்கை நெறியை தெரிவுசெய்து அத் துறையில் பட்டப்படிப்பு வரை படிப்பதற்கான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும், தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் ஆ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

6 மாதம் அல்லது 01 வருட பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன். வயதெல்லை 17 தொடக்கம் 29 வரை ஆகும். பொருத்தமான மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை கல்லூரிக்கு நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ளுங்கள். அல்லது கீழுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

வவுனியாவில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வேட்பாளர்களுடான கலந்துரையாடல்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி…

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல் செயற்றிட்டமும் வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (13.02) மதியம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு, செட்டிக்குளம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டு, தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இச் சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சர்வதேச இணைப்பாளர் சஜீன் வாஸ் ஆகியோருடன் கட்சியின் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் இறந்த ஆண் ஒருவரின் எச்சங்கள் மீட்பு!!

ஈரற்பெரியகுளம் பகுதியில்..

வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று (13.02) இறந்த ஆண் ஒருவரின் உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஈரற்பெரியகுளம் புதிய நகர் பகுதியின் காட்டுப்பகுதியிலே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன்,

அவை பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் அதே பகுதியில் வசித்து வந்து காணமல் போன ஒருவரின் சடலமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்தனர்.

அதே பகுதியில் வசித்து வந்த 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜிந்தக்க ராஜபக்ஷ என்பர் கடந்த 9 மாதங்களுக்கு முன் காணமால் போயுள்ளார்‌.

இந்நிலையில் இவ் மனித எச்சங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது. இதனால் இது காணமால் போனவரின் உடல் அங்கங்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கணவன் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மனைவியும் உயிரிழப்பு!!

யாழில்..

கணவன் உயிரிழந்த செய்தியை கேட்டதும் மனைவி தனது உயிரிழந்த சம்பவம் சொக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்கு தெருவை சேர்ந்த பெண் 61 வயதான ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை இவரது கணவர் மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கணவனின் மரண செய்தியை தொலைபேசி ஊடாக கேட்ட மனைவி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த தோழிக்காக தனது உயிரை விட்ட இளைஞன் : இந்த காலத்தில் இப்படி ஓர் நட்பா?

செங்கல்பட்டில்..

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் செங்குன்றம் வரதராஜன் பகுதியைச் சேர்ந்தவர் அசோக். பட்டதாரி வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் கல்லூரி படிக்கும் போது அதே கல்லூரியில் படித்து வந்த பெண் ஒருவருடன் நண்பராகப் பழகி வந்துள்ளார். கல்லூரி முடிந்த பிறகும் இவர்கள் இருவரும் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அந்த தோழி இறந்து விட்டார். இது பற்றி அறிந்த அசோக்கை கடுமையாக பாதித்துள்ளது. பிறகு இவர் யாருடனும் பேசாமல், அவ்வப்போது தனியாகவே இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அசோக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பிறகு அங்கு வந்த போலிஸார் அசோக் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து உறவினர்களிடம் விசாணை நடத்தினர்.

இதில் தோழியாகப் பழகி வந்த பெண் திடீரென இருந்துவிட்டதால் மன உலைச்சல் அடைந்த அசோக் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோழி இறந்த துக்கத்தில் அசோக் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக்கில் பழகி திருமணம்… ஒரே மாதத்தில் கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகிலுள்ள சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் விவசாய கூலிவேலை செய்து வருகிறார். இருவருக்கு ஃபேஸ்புக் ( Facebook ) மூலமாக காரைக்கால் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

தன்னை அனாதை என அறிமுகம் செய்துக்கொண்ட மகாலட்சுமி கடந்த 3 மாதங்களாக மணிகண்டனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. மணிகண்டன் தனது காதல் குறித்து தாயிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் சம்மதத்துடன் காரைக்கால் சென்று மகாலட்சுமியை சொந்த ஊரான சிறுதலைப்பூண்டி கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளார். கடந்த நவம்பர் 18ம் தேதி அவலூர்பேட்டை முல்லை நகரில் உள்ள அங்காளம்மன் கோயில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

ஒரு மாதம் மணிகண்டனுடன் குடும்பம் நடத்தி வந்த மகாலட்சுமி டிசம்பர் 11ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த 8 பவுன் தங்க நகை, ரூ.1,00,000 லட்சம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காரில் தப்பி சென்றுள்ளார்.

மணிகண்டன் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகாலட்சுமியை காணவில்லை. இதனால் பல இடங்களில் அவரை தேடியுள்ளார். அப்போது மகாலட்சுமி காரில் சென்றதை பார்த்த கிராமத்தினர் இதுகுறித்து மணிகண்டனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து, தொலைப்பேசியில் மகாலட்சுமியை மணிகண்டன் தொடர்புக்கொண்டுள்ளார். ஆனால் மகாலட்சுமி பதிலளிக்கவில்லை. சில நாட்களுக்கு பிறகு தொலைப்பேசியில் பேசிய மகாலட்சுமி வெவ்வேறு இடங்களில் இருப்பதாக கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் தன்னை தேடி வந்தால் கொலை செய்துவிடுவதாக கூறி மணிகண்டனுக்கு மகாலட்சுமி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் நேற்று மாலை செஞ்சி காவல்துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் வளத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூலில் பழகி திருமணம் செய்த பெண் ஒரு மாதம் குடும்பம் நடத்திவிட்டு நகை, பணத்துடன் இளைஞர் ஏமாற்றிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடுவானில் விமானத்தில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய இலங்கை வைத்தியர்!!

நடுவானில்..

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து விமானத்தில் கொழும்பு நோக்கி பயணித்த வயோதிப பெண்ணின் உயிரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணரான மனோரி கமகே காப்பாற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 85 வயதுடைய வயோதிப் பெண் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது ​​மருத்துவர் அல்லது மருத்துவ உதவி வழங்கக் கூடிய நபர் இருந்தால் தங்கள் குழுவினருக்குத் தெரிவிக்குமாறு விமானப் பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

அதன்போது விமானத்தில் பயணித்த வைத்தியர் மனோரி கமகே சிகிச்சையளிக்க முன் வந்து மூச்சு விடுவதில் சிரமப்பட்ட வயோதிப பெண்ணுக்கு தேவையான அடிப்படை சிகிச்சைகளை வழங்கினார்.

அதன்படி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பலமுறை ஒக்சிஜன் வழங்கவும் இன்ஹேலர் மூலம் மருந்து வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

விமானத்தில் இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எதுவும் இல்லை இதன்போது அங்கு ஒரு பயணியின் ஸ்மார்ட் கடிகாரம் மூலம் வயதான பெண்ணின் இரத்தத்தில் உள்ள ஒக்ஸிஜன் அளவை கணிப்பிட்டதுடன் மற்றொரு பயணியிடம் இருந்த ஆஸ்பிரின் மருந்தை நோய்வாய்ப்பட்ட பெண்ணுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளர்.

நோயாளியிடம் இருந்த இன்ஹேலர் பலமுறை செலுத்தப்பட்டாலும் அது போதுமானதாக இல்லை. மேலும் ப்ரெட்னிசோலோன் சிரப் இனையும் கொடுத்து வயோதிபப் பெண்ணின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். வயோதிபப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த இலங்கை வைத்தியருக்கு விமானத்தில் இருந்த பயணிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

61 ஆண்டுகளாக தூங்காமல் வாழும் 80 வயது முதியவர் : கண்ணீர் விட்டு கூறிய ஒரே ஆசை!!

வியட்நாமில்..

வியட்நாமில் 60 ஆண்டுகளாக தூங்காமல் முதியவர் ஒருவர் வாழ்ந்து வருவது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மனித உடலுக்கு அத்தியாவசிய தேவைகளான உணவு, தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றுடன் துக்கம் இன்றியமையாத ஒன்று.

மனிதன் ஒருவனுக்கு துக்கம் பற்றாக்குறையாக இருந்தால் இதய நோய்கள் முதல் மனநல நோய்கள் வரை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாரசரியாக ஒரு நாளில் மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் அத்தியாவசியமானது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இந்நிலையில் வியட்நாமில் 80 வயது முதியவர் ஒருவர் 60 ஆண்டுகளாக தூங்காமல் வாழ்ந்து வருவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தாய் நகோக் என்ற முதியவர் கிட்டத்தட்ட 1962ம் ஆண்டு முதல் தூங்காமல் உயிர் வாழ்ந்து வருகிறார். 20 வயதில் முதியவருக்கு ஏற்பட்ட காய்ச்சலுக்கு பிறகு தாய் நகோக் தூக்கமின்றி தவித்து வருகிறார்.

இத்தனை வருடங்களாக அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் என எவருமே இத்தனை ஆண்டுகளாக நகோக் துங்கியதை கண்டது இல்லை என தெரிவித்துள்ளனர். இது பற்றி அறிந்த யூடியூப் சேனல் ஒன்று அவரது அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து வெளியிட்டுள்ளனர்.

சாவை எதிர்த்து போராடிய 2 மாத குழந்தை… 128 மணிநேரம் கழித்து மீட்கப்பட்ட அதிசயம்!!

துருக்கியில்..

துருக்கியில் 128 மணி நேரத்துக்குப் பிறகு இடிபாடுகளில் சிக்கிய பச்சிளம் குழந்தை அதிசயமாக உயிருடன் மீட்கப்பட்டது. துர்க்கி மற்றும் சிரியாவின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு 140 மணி நேரத்திற்கும் மேலாக, 28,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

ஆனால் இந்த பேரழிவிற்கும் விரக்திக்கு மத்தியில், சில அதிசயமான உயிர்பிழைப்பு கதைகள் தொடர்ந்து வெளிவருகின்றன முன்னதாக, இடிபாடுகளுக்கும் பிறந்த குழந்தை, பிறந்து 10 நாளே ஆன குழந்தை, 7 மாத குழந்தை, 13 வயது சிறுமி மற்றும் 27 வயது இளைஞன் என மீட்புப் படையினர் பேரழிவிலும் உயிர்பிழைத்த பலரை இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்டனர்.

இப்போது, துருக்கியின் Hatay என்ற இடத்தில் இடிபாடுகளுக்கு அடியில் இருந்த இரண்டு மாத குழந்தை ஒன்று நேற்று (பிப்ரவரி 11) மீட்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு 128 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இன்னும் இடிந்து தரைமட்டமான சுற்றுப்புறங்களில், உறைய வைக்கும் வானிலை இருந்தபோதிலும், உயிருடன் மீட்கப்படுவேம் என்ற நம்பிக்கையில் இடிபாடுகளுக்குள் இன்னும் சவுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் உயிர்களை மீட்க கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிலநடுக்கத்திற்குப் பிறகு ஐந்து நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டவர்களில் 2 வயது சிறுமி, 6 மாத கர்ப்பிணிப் பெண் மற்றும் 70 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவதாக துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை (பிப்ரவரி 6) ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், துருக்கி மற்றும் சிரியா முழுவதும் பல சக்திவாய்ந்த பின்னடைவுகளுடன், இந்த நூற்றாண்டில் உலகின் ஏழாவது கொடிய இயற்கை பேரழிவாக உள்ளது, இது 2003-ல் அண்டை நாடான ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கொல்லப்பட்ட 31,000-ஐ நெருங்குகிறது.

துருக்கியில் இதுவரை 24,617 பேர் இறந்துள்ளனர், இது 1939-க்குப் பிறகு நாட்டின் மிக மோசமான நிலநடுக்கம் ஆகும். சிரியாவில் 3,500-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர், ஆனால் சிரியாவில் வெள்ளிக்கிழமை முதல் இறப்பு எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை.

ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழும் நபர் : கணவனை கொண்டாடும் மனைவிகள் : ஏன் தெரியுமா?

தாய்லாந்தில்..

தாய்லாந்தை சேர்ந்த ஓங் டாம் சொரோட் என்ற இளைஞர் 8 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு மனைவியை திருமணம் செய்து கொள்ளவே இளைஞர்கள் திணறி வரும் நிலையில் தாய்லாந்தை சேர்ந்த ஓங் டாம் சொரோட் என்ற இளைஞர் 8 மனைவிகளை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஓங் டாம் சொரோட் தாய்லாந்தில் பாரம்பரிய முறைப்படி போடப்படும் ஒரு வகை டாட்டு கலைஞராக பணியாற்றி வருகிறார். இவர் தனது முதல் மனைவி நோங் ஸ்ப்ரைட்டை நண்பர் ஒருவரின் திருமணத்தில் சந்தித்ததாகவும்,

இருவருக்கும் பார்த்தவுடன் காதல் ஏற்படவே விரைவாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டாவது மனைவி நோங் எல்-லை மார்கெட்டிலும்,

மூன்றாவது மனைவி நோங் நானை மருத்துவமனையிலும் சந்தித்துள்ளார். 4வது, 5வது மற்றும் 6வது மனைவிகளை இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிக்டாக் தளங்களில் சந்தித்துள்ளார்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் எட்டாவது மனைவியான நோங் மாய்-யை தனது நான்கு மனைவிகளுடன் சுற்றுலா சென்று இருக்கும் இடத்தில் சந்தித்துள்ளார்.

8 மனைவிகளுடனும் சமமான நேரத்தை செலவிடுவதற்காக ஒரு ரூமிற்கு இரண்டு மனைவிகள் தங்குகிறார்கள். தற்போது இரண்டு மனைவிகள் கர்ப்பமாக இருப்பதால் மற்ற 6 மனைவிகள் ஷெட்யூல் போட்டு கணவருடன் வாழ்ந்து வருகின்றனர்.