காலணிக்குள் இருந்த பாம்பு… அலறியடித்து ஓடிய குழந்தைகள்!!

தென்காசியில்..

தென்காசியில் சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். சிறை காவலர். இவரது குழந்தைகள் நேற்று பள்ளி செல்வதற்காக புறப்பட்டு ஷூ மாட்டுவதற்காக அதனை எடுத்த போது,

ஷூவுக்குள் பாம்பு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் வந்து பார்த்து சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் பரமேஸ்வரதாசுக்கு தகவல் கொடுத்தனர்‌.

விரைந்து சென்ற அவர், ஷூவுக்குள் பதுங்கி இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பை உயிருடன் பிடித்துச் சென்றார். குழந்தைகள் நூழிலையில் உயிர் தப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகை உலுக்கிய துருக்கி நிலநடுக்கம் : இலங்கை பெண்ணின் சடலம் மீட்பு!!

துருக்கி..

துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போன இலங்கை பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். துருக்கிக்கான இலங்கை தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பெண்ணின் சடலத்தை அவர் மகள் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரே இவ்வாறு நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்திரிக்கா ராஜபக்ச என்ற குறித்த பெண், கலகெதர பகுதியைச் சேர்ந்தவர் என்றும், இருபது வருடங்களுக்கு முன்னர் அவர் துருக்கி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை கடந்துள்ளது.

மட்டக்களப்பில் சுற்றுலா சென்ற ஆசிரியர் உட்பட 4 மாணவர்கள் பரிதாபமாக பலி!!

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு மாவட்டம் – களுமுந்தன்வெளி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டம் – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்திலிருந்து இன்றைய தினம் (12.02.2023) இவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அறிவிப்பாளரும், பி.பி.கொம்.பட்டதாரியும், தனியார் கல்வி நிலையத்தின் ஆசிரியருமான 27 வயதுடைய ஆசிரியர் மற்றும் 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவதுவதாவது, களுமுந்தன்வெளி கஜமுகன் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும், இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரம் எழுதவிருக்கும் மாணவர்களும்,

தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள் நாற்பதுவட்டைக் குளம் அமைந்துள்ள பகுதிக்கு இன்று (12.02.2023) சுற்றுலா சென்றுள்ளனர். ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து மதிய உணவை சமைத்து உண்டுள்ளனர்.

பின்னர் 3 ஆண் மாணவர்கள் அங்கிருந்த குளத்தின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தோணியை எடுத்துக் கொண்டு குளத்திற்குள் சென்றுள்ளனர். தோணி குளத்தின் நடுவிற்குச் சென்றபோது தோணியிலிருந்த தூவாரத்தின் வழியே நீர் தோணியை நிரப்பியுள்ளது.

அதில் பயணித்த மாணவர்கள் கூக்குரலிட்டு சத்தமிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியரான கிவேதன் குளத்தில் நீந்திச் சென்று மாணவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.

இச்சந்தர்ப்பத்திலேயே இவ்வனர்த்தம் இடம்பெற்று 4 பேரும் மிகவும் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளனர். இதனால் அக்கிராமம் மாத்திரமின்றி அப்பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அழகிய இளம்பெண் வெளியிட்ட புகைப்படங்கள் .. அ.திரடியாக கை.து செ.ய்த பொலிசார்!!

ஈராக்கில்..

ஈராக் நாட்டில் அ.ழகிய இ.ளம்பெண் ஒ.ருவர் மோ.சமான மற்றும் அ.நா.கரீகமான வி.டயங்களை வெ.ளியிடுவதாகக் கூறி பொ.லிசார் அ.வரைக் கை.து செ.ய்துள்ளனர். மொடலான Asal Hussam என்னும் இ.ளம் பெ.ண்ணே பொ.லிசாரால் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

ஈராக் உள்துறை அமைச்சகம், ‘Report’ என்னும் பெயரில் இணையதளம் ஒன்றை உருவாக்கியுள்ளது. பெ.ண்மையின் நற்குணங்கள் மற்றும் சமுதாயத்தை பாதிக்கும் விடயங்களைக் குறித்து அந்த இணையதளத்தில் மக்கள் பு.கா.ர் செ.ய்யலாம்.

ஆனால், அது பொது மற்றும் த.னியுரிமை சு.தந்திரத்தை மீ.றும் செ.யல் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். Asal Hussam சமீபத்தில் இ.ரா.ணு.வ உடையில் இருக்கும் வீ.டியோ ஒ.ன்றை வெ.ளியிட்டார்.

அ.தற்காகத்தான் அவர் கை.து செய்யப்பட்டாரா என்பதோ, அவர் இப்போதும் கா.வலில்தான் அ.டைக்கப்பட்டுள்ளார் என்பதோ தெளிவாகத் தெரியவில்லை.

64 வயதில் மூன்றாவது திருமணம் செய்த தமிழ்ப்பட நடிகை!!

ஜெயசுதா..

தமிழில் குல கௌரவம் படத்தின் மூலம் 1972யில் அறிமுகமானவர் நடிகை ஜெயசுதா. அதனைத் தொடர்ந்து அபூர்வ ராகங்கள், நினைத்தாலே இனிக்கும், பாண்டியன், அலைபாயுதே, தோழா, வாரிசு என 32 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இந்தி மற்றும் மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 64 வயதாகும் ஜெயசுதா வட்டே ரமேஷ் என்பவரை திருமணம் செய்தார்.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்த ஜெயசுதா, 1985ஆம் ஆண்டு நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவர் 2017ஆம் ஆண்டு மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததால், மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரை அவர் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல் என்றாலும், நபர் ஒருவருடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பேஸ்புக்கில் காதலித்து திருமணம் செய்த ஒரு மாதத்தில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி!!

விழுப்புரத்தில்..

அனாதை என முகநூலில் பழகிய பெண், மூன்று மாதம் பழகி திருமணம்  செய்து கொண்ட நிலையில், ஒரு மாதத்தில் நகை பணத்துடன் தப்பிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்புண்டி  கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, முகநூலின் மூலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.

இருவருக்கும் காதல் மலர்ந்த பின்  ஒரு அனாதை எனக்கூறிய அப்பெண் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் அவரது  தாய் ராணியிடம் முகநூலின் மூலம்  காரைக்கால் திருவிடைக்கழி பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்னை காதலிப்பாதாகவும், அனாதையான அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற தாய் மகனுடன் சேர்ந்து  காரைக்கால் சென்று அப்பெண்ணை அழைத்து வந்து தனது சொந்த கிராமமான சிறுதலைப் பூண்டி கிராமத்தில் கடந்த  நவம்பர் 18ஆம் தேதி, அவலூர்பேட்டை முல்லை நகரில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினரின் ஆசியுடன் திருமணம் செய்துவைத்துள்ளனர்.

மணப்பெண்ணிற்கு எட்டு பவுன் நகையை சீராக மணமகன் விட்டாரே அளித்து மகனின் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் மணிகண்டனின் தாய்.

மகிழ்ச்சியுடன் ஒரு மாதம் மணிகண்டனுடன் சந்தோஷமாக இருந்த பெண் திடீரென  டிசம்பர் 11ஆம் தேதி மணிகண்டன் மற்றும் அவர் பெற்றோர் விவசாயிக்கு நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில் எட்டு சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.

காரில் கிராமத்திலிருந்து தப்பி சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் மட்டுமே குடும்ப நடத்திய மகாலட்சுமி முகநூலில் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து  மணமகன் குடும்பத்தை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து தப்பி சென்றதால் ஏமாற்றமடைந்த காதல் கணவன் மணிகண்டன் பெரும் ஏமாற்றத்தில் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அங்கு எவ்வித நடவடிக்கையும்  மேற்கொள்ளாத நிலையில், செஞ்சி சரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமணம் செய்த போட்டோ உள்ளிட்ட  ஆதாரங்களை கொடுத்து அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

சகோதரன் கண் முன்னே இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கிண்டியில்..

ஆயிரம் விளக்கு அஜிஸ் முல்லக் தெருவில் வசித்து வருபவர் 22 வயது பிரியங்கா. இவர் கிண்டியில் உள்ள ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். நேற்று பிரியங்கா தனது அண்ணன் 23 வயது ரிஷிநாதனுடன் இருசக்கர வாகனத்தில் ராயப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை அருகில் அவரது அண்ணன் மாநகர பேருந்தை முந்தி செல்ல முயன்றார் . அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர்களின் இருசக்கர வாகனத்தில் பலமாக உரசியது. இதில் பின்னால் அமர்ந்திருந்த பிரியங்கா நிலைதடுமாறி சாலை நடுவில் கீழே விழுந்தார்.

அப்போது பின்னால் வந்த மாநகர பேருந்து பிரியங்காவின் மீது ஏறி இறங்கியது. இந்த கோர விபத்தில் பிரியங்கா படுகாயம் அடைந்தார்.அவருடைய அண்ணன் லேசான காயங்களுடன் கீழே கிடந்தார். அந்த வழியாக சாலையில் சென்றவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பிரியங்காவையும், அவரது அண்ணணையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பிரியங்கா இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் எதிரில் வந்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற இருசக்கர வாகனத்தையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

பெற்ற தாயையே குத்தி கொலை செய்த மகன் வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்!!

வியாசர்பாடியில்..

மதுபழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. முன்பெல்லாம் பணிக்கு செல்பவர்கள், கடின உழைப்பாளிகள் மட்டுமே குடித்து வந்த நிலையில் தற்போது பள்ளி மாணவ , மாணவிகள் தொடங்கி ரோட்டோரத்தில் நின்று பிச்சை வாங்கி உண்பவர்கள் வரை மதுப்பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர்.

சின்னஞ்சிறு வயதிலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் இவர்கள் பல நேரங்களில் விபரீதங்களை செய்து விடுகின்றனர். இதனால் இவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் 50 வயதான அப்புனு. இவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 45 வயது கண்ணகி. இவர்களின் மகள் மகள் அமலாவுக்கு திருமணமாகி விட்டது.

இவர்களின் இளையமகள் 22 வயது அஜய் ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு பணிக்கு சென்றதால் ஒப்பந்ததாரர்கள் வேலையை விட்டு நிறுத்தியுள்ளர்.

தற்போது வேலை எதுவும் இல்லாமல் தினமும் தாயை மிரட்டி பணம் வாங்கி குடித்துவிட்டு தாஊர் சுற்றி வருகிறார். வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அதிகாலை 4 மணி வரை இவரின் தகராறு தொடர்ந்தது. ஆனால் தாயார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லூசு அஜய், கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து தாயின் தலை, முகம் என சராமாரியாக குத்த தொடங்கினார்.

இத கோர தாக்குதலில் படுகாயமடைந்த கண்ணகி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணகியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், மகா சிவராத்திரி வருவதால், சிவபெருமானுக்கு வேண்டிக்கொண்டு மாலை அணிந்து, குடிக்காமல் இருக்கும்படி லூசு அஜயிடம் கண்ணகி கூறினார். தாயின் பேச்சை கேட்டு லூசுஅஜய்யும் சிவராத்திரிக்காக மாலை அணிந்து 2, 3 நாட்கள் குடிக்காமல் இருந்து வந்தார்.

மாலை அணிந்து கொண்டே அவர் குடிக்க தொடங்கியதால், தாய் கண்ணகி மாலை அணிந்து குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த லூசு அஜய் பீர்பாட்டிலால் தாயை குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி பிப்ரவரி 8ம் தேதி இரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாமிக்கு மாலை போட்டுக் கொண்டால் மகன் திருந்தி விடுவான் என்பதால் சிவராத்திரிக்கு மாலை அணிந்து மகனை திருத்த முயற்சி செய்தார். ஆனால் அதே மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

திருமண நாளன்று புதுமணப் பெண்ணுக்கு கணவன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேசத்தில் புதுமணப் பெண்ணுக்கு திருமண நாளை மறக்கமுடியாத நாளாக மற்ற மணமகன் யாரும் எதிர்பார்க்காத ஆச்சரியத்தை கொடுத்துள்ளார். இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் வியாழக்கிழமை நடந்த திருமண விழாவில் இந்த ஆச்சரியமான சம்பவம் நடந்தது.

புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் உள்ள சோலா கிராமத்தைச் சேர்ந்த மணமகன் லோகேந்திர சிங் சோலங்கி, உத்தரகாண்ட் மாநிலத்தின் ரூர்க்கியைச் சேர்ந்த தனது புதிய மனைவி யாஷான்சி ராணாவை திருமண நாளில் ஆச்சரியப்படுத்த முடிவுசெய்தார்.

திருமணம் முடிந்து மணமகனின் வீட்டிற்கு செல்ல சாதாரணமாக காரை பயன்படுத்தாமல், திருமண மண்டலத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஹெலிகாப்டரை கொண்டுவந்து நிறுத்தியுள்ளார். அந்த ஹெலிகாப்டரில் தான் புதுமண தம்பதியினர் தங்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

“இது நான் யஷான்ஷிக்கு கொடுக்கும் சர்ப்ரைஸ், இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று நான் நினைத்தேன். திட்டம் என்னுடையது என்றாலும், எனது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் ஆதரவு தேவைப்பட்டது.

முழு விடயமும் சரியான நேரத்தில் முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மணமகள் வீட்டார் இதை அறிந்ததும், மிகவும் உற்சாகமாக இருந்தனர்” என்று சோலங்கி கூறினார்.

“வழக்கமாக மக்கள் கார்களைப் பயன்படுத்துகிறார்கள். என் மனைவி சிறப்பு வாய்ந்தவர், மேலும் அவர் ஒரு கமர்ஷியல் பைலட் – அவர் ஹெலிகாப்டருக்குத் தகுதியானவர் என்று நான் கருதுகிறேன்” என்று மணமகன் கூறினார்.

இதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும், கிளம்பத் தயாரான பிறகுதான் தெரிந்தது என்றும் மணமகள் தாகூர் கூறினார். மணமகன் லோகேந்திர சிங் சோலங்கி அவுஸ்திரேலியாவில் பைலட்டாகவும், மணமகள் யாஷன்ஷி சிங்கும் வணிக விமானியாகவும் பணிபுரிகிறார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் மீண்டும் ஒரு விபரீதம்.. தொடரும் தற்கொலைகள்!!

தமிழகத்தில்..

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டது. இருந்தபோதிலும் இளைஞர்களின் முதற் தொழிலாகா மாறியிருக்கும் ஆன்லைன் ரம்மியை முழுவதுமாக தடை செய்ய முடியாமலும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாமலும் தடுமாறி வருகிறது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி இளைஞர்கள் முதியவர்கள் வரை கையில் மொபைலுடன் தான் பலரின் வாழ்க்கையே. இதில் பலரும் ஆன்லைன் விளையாட்டில் நேரத்தை தொலைத்து வருகின்றனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் விரக்தியால் தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி இளைஞர்கள் முதல் குடும்பத்தலைவர்கள், முதியவர்கள் வரை ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து வருவதும் வழக்கமான கதையாகி வருகிறது. தொடக்கத்தில் கையில் பணத்துடன் விளையாட்டை துவங்குகின்றனர்.

அடிமையான பிறகு பணத்தை கடன் வாங்கியாவது விளையாட வேண்டும் என்று எண்ணத்தில் கடன் வாங்குகின்றனர். கடன் அதிகமானதால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

அந்த வரிசையில் தற்போது நாமக்கல் மாவட்டத்தில் வசித்து வந்த ரியாஸ்கான் என்பவர் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் வசித்துவரும் ரியாஸ்கான் மொபைல் கடையில் பணிபுரிந்து வந்தார். அவருடைய பொழுதுபோக்காக ஆன்லைன் ரம்மி இருந்து வந்தது. மொபைல் கடையில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை வைத்து விளையாடியுள்ளார்.

இதில் அவர் சம்பாதித்த மொத்த பணத்தையும் இழந்து விட்டார். பணத்தை இழந்த ரியாஸ்கான் விரக்தியில் வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வாகனத்தை நிறுத்திவிட்டு காவிரி ஆற்றில் குதித்து விட்டார்.

காவிரி ஆற்றில் தற்கொலை செய்துகொண்ட ரியாஸ்கானின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தற்கொலைகளுக்கு அரசு விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாடசாலை மாணவியின் உயிரைப் பறித்த பரோட்டா : சோக சம்பவம்!!

கேரளாவில்..

மக்களே… கூடுமானவரை ஹோட்டல் உணவுகளை தவிர்த்து விடுங்க. மக்களின் ஆரோக்கியத்தின் மீதும் உணவகங்கள் கவலைப்பட்டதெல்லாம் மலையேறி போச்சு. பணம் சம்பாதிக்கும் ஆசையில், எவன் ஆரோக்கியம் எப்படி போனா நமக்கென்ன என்கிற மனநிலையில் தான் பெரும்பாலும்..

பெரும்பாலும் இந்தியா முழுவதும் எல்லா மாநிலங்களிலும் உணவகங்கள் இயங்கி வருகின்றன. கரப்பான்பூச்சிகள் மிதக்குகிற சிக்கன் குழம்பு துவங்கி, எலி தலை மிதக்குகிற மட்டன் சால்னா வரையில் இங்கே பிரியாணியில் புழுக்கள் நெளியும்… நான்கு நாட்களுக்கு முன்பு வாங்கிய சிக்கனை வினிகரில் நனைத்து, சூடுப்படுத்தி நம் பணத்தையும் வாங்கிக் கொண்டு, நம் வயிற்றையும் குப்பைத்தொட்டியாக மாற்றுவார்கள்.

பல சமயங்களில் இவை உயிருக்கே உலை வைக்கின்றன. ஷவர்மாக்களால் அடுத்தடுத்து பலர் உயிரைக் காவு வாங்கிய கேரள உணவகங்கள் இப்போது பரோட்டாவை வைத்து இளம்பெண் ஒருவரின் உயிரை வாங்கியிருக்கிறது.

கேரளாவில், பதினொராம் வகுப்பு பயின்று வந்த மாணவி நயன் மரியா, பரோட்டா சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரை இழந்திருக்கிறார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வாழத்தோப்பு பகுதியில் வசித்து வருபவர் சிஜு கேப்ரியல்.

16 வயதாகும் இவரது மகள் நயன் மரியா, அதே பகுதியில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், நயன் மரியா, வீட்டின் அருகே இருந்த ஹோட்டல் ஒன்றிலிருந்து இரவு நேரத்தில் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.

பரோட்டா சாப்பிட்டு முடித்த சில நிமிடங்களிலேயே நயன் மரியனின் உடலில் எதிர்பாராத சில அலர்ஜி அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது. உடனே பெற்றோர் பதறியபடி, மரியனை இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மருத்துவர்கள் மரியனுக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் பின்னர், வெண்டிலேட்டர் வைக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

மைதா மற்றும் கோதுமை பொருட்களைச் சாப்பிடும் போது நயனின் அவரது உடலில் ஏற்படும் அலர்ஜி சற்று குறைந்துள்ளது. இதனால் நயன் மரியா கடந்த சில காலமாக அதிகப் படியான மைதாவால் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளார்.

மருத்துவர்கள் அனைவருமே மைதாவில் இருந்து செய்யப்பட்ட பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றே கூறி வருகிறார்கள். மைதா மோசமானது என்று சொல்வது எளிது. ஆனால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் உள்ளன.

மேலும் மைதாவில் இருந்து செய்யப்படும் உணவுகள் சுவையாக இருப்பதால், அதை முற்றிலுமாக சாப்பிடாமல் இருப்பது கடினமாகவே இருக்கிறது. எனவே, முற்றிலும் மைதாவை கைவிட முடியவில்லை என்றாலும் முடிந்தவரைக் குறைக்கப் பாருங்கள். உணவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் அதிகம் எடுத்துக் கொண்டு ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

குடிபோதையில் ஞாபகத்துக்கு வந்த நண்பனின் மனைவி… இறுதியில் நடந்த கொலை!!

நெல்லையில்..

மது குடித்துக்கொண்டிருந்தபோது நண்பனின் மனைவியின் அழகை வர்ணித்தது அவதூறாக பேசியதால் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

நெல்லை மாவட்டம் உவரி அருகே மனைவியை அவதூறாக பேசியதாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனையை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் சுபாஷ் என்ற மணி ( 26). இவர் மீன் பிடி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் வசித்து வருபவர் டெல்வர் மகன் ராஜா (28). மீனவர்.

இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது குடிப்பது வழக்கம். நேற்றிரவு இவர்கள் 2 பேரும் சுபாஷ் வீட்டின் பின்புறம் உள்ள காட்டுப்பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டதில், சுபாஷ் ஆத்திரம் அடைந்து ராஜாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ராஜா தனது வீட்டுக்கு சென்று உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளுடன் காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு மதுபோதையில் இருந்த சுபாஷை ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் சுபாஷ் ரத்த வெள்ளத்தில் வெட்டுக்காயங்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் உவரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவல் ஆய்வாளர் பிரேமா தலைமையில் உதவி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராஜா மற்றும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட சுபாஷுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் அவர்கள் திசையன்விளை அருகே உள்ள வெம்மணங்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து ராஜாவுடன் சேர்ந்து சுபாஷ் தனது வீட்டின் அருகிலேயே காட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தி உள்ளார்.

அப்போது மதுபோதையில் ராஜாவின் மனைவியை சுபாஷ் அவதூறாக பேசியதாகவும், அதன் காரணமாக அவரை ராஜா கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தலைமறைவான ராஜா சமீபத்தில் தான் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து உவரி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3 வயது குழந்தையுடன் தாய் தற்கொலை : கணவர் கைது : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

ஈரோட்டில்..

புஞ்செய்புளியம்பட்டி அருகே உள்ள நேரு நகர் ரேஷன் கடை வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (38). இவர் கட்டட மேஸ்திரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரிதா (30). இவர்களுக்கு 3 வயதில் பவன் கிருத்திக் என்ற கு.ழந்தை இருந்தது.

இந்நிலையில், கணவன் மனைவியிடையே கணவரின் செல்போனில் மற்றொரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களாக கு.டும்ப பி.ரச்னை இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 7ஆம் தேதி செல்வராஜ் வேலைக்குச் சென்றுவிட்டார். சரிதா தனது கு.ழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது கணவருக்கும் மனைவிக்கும் இடையே செல்போனில் ஏற்பட்ட தகராறில், கணவர் செல்வராஜ் மனைவியை நீ செ.த்.து போ எ.ன கூ.றியதாகவும்,

இதனால் ம.ன.முடைந்த சரிதா தனது கு.ழ.ந்.தை.யை கொ.லை செ.ய்.து.வி.ட்டு, தா.னு.ம் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்.டா.ர். இ.தையடுத்து மனைவி சரிதாவை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்.டி.ய.தா.க அ.வரது கணவர் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்த,

புஞ்செய்புளியம்பட்டி காவல் துறையினர், கை.து செ.ய்.து சி.றையில் அ.டைத்தனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளதால் த.ற்.கொ.லை வ.ழக்கு கோட்டாட்சியர் வி.சாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

வவுனியாவில் துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி!!

அஞ்சலி நிகழ்வு ..

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்த பொதுமக்களிற்கான அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் நேற்று (11.02.2023) இடம்பெற்றது.

வவுனியா வாடிவீட்டு மண்டபத்தில் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் எம்.ஜி,ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் பாரிய நில அதிர்வுகள் ஏற்படலாம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!!

நில அதிர்வுகள்..

இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

புத்தள, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து 1,000 மைல்களுக்கு அப்பால் இத்தகைய நடுக்கம் ஏற்படுவதால் அதன் தாக்கம் குறைவாகவே இருப்பதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

அதேவேளை இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்கள் ஏற்கனவே இரண்டாகப் பிளவுபடத் தொடங்கியிருப்பதாகவும், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் இது நிகழும் விகிதம் அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியப் பெருங்கடலை உலுக்கிய சமீபத்திய பாரிய நிலநடுக்கங்களும் பூமியின் மேற்பரப்புக்குள் ஒரு புதிய தட்டு எல்லையை உருவாக்குவதற்கான சமீபத்திய படியை சமிக்ஞை செய்துள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தரங்க உறுப்பில் தாக்குதல்.. இரும்பு கம்பியில் சூடு : சிறுமியை கொடுமை செய்த தம்பதி!!

டெல்லியில்..

வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொடூரமாக டார்ச்சர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வீட்டு வேலைக்கு இருந்த மைனர் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து பாலியல் டார்ச்சர் செய்த டெல்லி தம்பதியை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரும் வேலையையும் இழந்துள்ளனர். இந்தியாவில் மைனர் குழந்தைகளை எந்தவொரு ஆபத்தான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று விதி இருக்கிறது. இருந்த போதிலும் பல நேரங்களில் இந்த விதியை கடைப்பிடிப்பதில்லை.

அதுபோன்ற ஒரு சம்பவம் தான் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் நடந்துள்ளது. வீட்டு வேலைக்குச் சென்ற மைனர் சிறுமியை அந்தரங்க உறுப்பில் எல்லாம் அடித்துக் காயப்படுத்தியுள்ளது ஒரு ஜோடி.

‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக் ‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக்

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் வீட்டு வேலை செய்து வந்த மைனர் சிறுமியைச் சித்திரவதை செய்து, பாலியல் டார்ச்சர் செய்ததாக குருகிராமத்தை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே அந்த தம்பதி தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். அந்த பெண் பணிபுரிந்த பிஆர் நிறுவனமும் அவரது கணவர் பணிபுரிந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இருவரையும் வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.

அந்த சிறுமி ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சியைச் சேர்ந்தவர் ஆவார். வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் அவருக்கு இந்த வேலை கிடைத்துள்ளது.. இருப்பினும், குருகிராமில் அங்கு வேலைக்குச் சென்றது முதலே அந்த 17 வயது சிறுமிக்குப் பெரிய டார்ச்சர் தான்..

அந்த தம்பதி தினசரி அந்த சிறுமியை இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர் என்று அந்த சிறுமியை மீட்ட சகி மையத்தின் பொறுப்பாளர் பிங்கி மாலிக் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள ஜார்கண்ட் பவன் அதிகாரியும் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் வாயில் பல காயங்கள் இருந்துள்ளன.. வாய் பகுதியில் பயங்கர வீக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குருகிராமில் நியூ காலனியில் வசிக்கும் மணீஷ் கட்டார் (36) மற்றும் அவரது மனைவி கமல்ஜீத் கவுர் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அந்த தம்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.

அந்த சிறுமியை அவர்கள் இரவில் கூட தூங்க விடமாட்டார்களாம்.. மேலும், சிறுமி சாப்பிடவும் உணவு கொடுக்க மாட்டார்களாம்.. சிறுமியின் வாய் பகுதி கடுமையான காயத்தால் வீங்கியிருந்ததாகவும் சிறுமியின் உடலில் அனைத்து இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்..

கடந்த ஐந்து மாதங்களாகவே இதுபோன்ற டார்ச்சர்கள் தொடர்வதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் சூடான இரும்பு மூலம் சூடு வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மணீஷ் கட்டர் சிறுமியின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் காயப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அந்த சிறுமியை வீட்டியேலே அடைத்து வைத்திருந்த அந்த தம்பதி, யாரிடமும் பேசக் கூடாது என்றும் கண்டிஷன் போட்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த தம்பதி மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மைனர் பெண்ணை வேலைக்கு அனுப்பிய அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சியிடமும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் நாங்கள் சோதனை நடத்தியுள்ளோம். வீட்டு வேலையில் அந்த சிறுமி சிறு தவறு செய்துவிட்டதாகவும் இதனால் கோபமடைந்து இப்படிச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், சிறுமியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநில முதல்வரும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.