பரோட்டா சாப்பிட்ட 16 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சிப் பின்னணி!!

கேரளாவில்..

மைதா மாவு மற்றும் கோதுமையால் ஒவ்வாமையால் 16 வயது சிறுமி, புரோட்டா சாப்பிட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

கேரளாவின் இடுக்கி வாழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சிஜு கேப்ரியல் என்பவரின் மகள் நயன்மரியா சிஜு (16) உயிரிழந்துள்ளார். கோதுமை கொண்ட உணவுப் பொருட்களால் ஒவ்வாமை காரணமாக இதற்கு முன்னர் சிகிச்சை பெற்ற சிறுமி,

சமீபகாலமாக, நோய் குணமாகிவிட்டதாக உணர்ந்து மீண்டும் சிறிய அளவில் சாப்பிட ஆரம்பித்தார். நேற்று மாலை புரோட்டா சாப்பிட்டுவிட்டு உடல்நிலை திடீரென மோசமடைந்து இன்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணம் செய்ய மறுத்ததால் து.ப்.பா.க்கியால் சு.ட்.ட இ.ளைஞர்.. கா.ப்பாற்ற முயன்ற 20 வயது ந.ண்பருக்கு நே.ர்ந்த ப.ரிதாபம்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் ராகுல்(23). இவர் கல்லூரி மாணவியான மோனிகாவை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால், அவரது காதலை மோனிகா மறுத்துள்ளார்.

இந்த நிலையில் ரயில் நிலையத்தில் மோனிகாவை சந்தித்த ராகுல் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

அப்போது சக மாணவர் சங்கர் வர்மா (20) மாணவி மோனிகாவுக்கு ஆதரவாக ராகுலை தடுத்துள்ளார். அவருடன் ச.ண்.டையிட்ட ராகுல், தான் மறைத்து வைத்திருந்த நா.ட்.டு து.ப்.பா.க்.கி.யா.ல் சங்கரை சு.ட்.டு.வி.ட்.டு அ.ங்.கி.ரு.ந்.து த.ப்.பி.யோ.டி.வி.ட்.டா.ர்.

த.லையில் ப.டு.கா.யமடைந்த சங்கர் ம.ருத்துவமனையில் அ.னுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சி.கிச்சை ப.லனின்றி ப.ரிதாபமாக உ.யிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ராகுலை தே.டி வ.ரு.கின்றனர்.

மேலும் வி.சாரணை நடைபெற்று வருவதாக காவல் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இ.தற்கிடையில், கு.ற்.றவாளியை உ.டனடியாக கை.து செ.ய்ய வேண்டும் என காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே பலர் ஆ.ர்ப்பாட்டத்தில் ஈ.டுபட்டனர்.

உயிரிழந்த மனைவியை 115கி.மீ தோளில் சுமந்து நடந்து சென்ற கணவன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

இந்தியாவில்..

நாளுக்கு நாள் வளர்ந்து வரும் விஞ்ஞான யுகத்தில் அருகில் இருக்கும் மனிதனை கொஞ்சம் கூட யோசிக்க மறந்த ஒரு தலைமுறை உருவாகி கொண்டிருக்கிறது. மனிதம் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய் வருகிறது.

வாழ்வதற்கு மட்டுமல்ல இறந்தவர்களிடம் கூட இரக்கம் காட்டுவதில்லை என்பதை தான் சமீபத்திய அடுத்தடுத்த நிகழ்வுகள் உறுதி செய்து வருகின்றன. ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் வசித்து வருபவர் சாமுலு.

இவரது மனைவி 30 வயது ஈடே குரு. இதில் ஈடேவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. விசாகா மாவட்டம் தகரபுவலசாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தார். கடந்த ஒரு வார காலமாக மருத்துவமனையில் இருந்தும் இவரது உடல்நிலை சரியாகவில்லை.

சாமுலுவின் கையில் இருந்த பணம் முழுவதும் தீர்ந்து விட்டது. அடுத்த கட்ட மருத்துவ செலவுக்கு யாரிடம் கடன் கேட்கலாம் என்ன செய்வது என யோசித்து கொண்டிருந்தார்.

இதனால் ஈடே குருவை டிஸ்சார்ஜ் செய்து தனது வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்தார். ஆந்திராவில் அவர் தங்கியிருந்த இடத்தில் அவர்களது சொந்த கிராமம் கிட்டத்தட்ட 145 கி.மீ. இதற்காக ஒரு ஆட்டோவிடம் பேசிவிட்டு மனைவியை அழைத்துகொண்டு கணவர் கிளம்பினார்.

இந்நிலையில் ஆட்டோ விஜயநகரம் மாவட்டம் கந்தியாடா மண்டலம் ராமாவரம் வந்தபோது எதிர்பாராத விதமாக மனைவி ஈடே குரு உயிரிழந்தார். ஈடே குரு உயிரிழந்தவுடன் ஆட்டோ ஓட்டுநர் ‘மேலும் அழைத்துசெல்ல முடியாது’ எனக்கூறி இவர்களை கீழே இறக்கிவிட்டார்.

பாதி வழியில் ஆட்டோ ஓட்டுநர் இறக்கிவிட்டதால் என்ன செய்வது என தெரியவில்லை. கையில் பணமும் இல்லை. மொழியும் புரியவில்லை. ஊருக்கு போக இன்னும் 115 கிமீக்கு மேல் இருந்தது.

இந்நிலையில் வேறு வழியின்றி மனைவியை தன் தோளில் தூக்கிக்கொண்டு எந்த பக்கம் செல்கிறோம் என தெரியாமலேயே சாமுலு நடக்கத் தொடங்கிவிட்டார். 4 கி.மீ நடந்து சென்ற நிலையில் அவரை கவனித்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதலில் சாப்பிட சாமுலுவிற்கு உணவை கொடுத்தனர். பின்னர் ஒரு தனியார் ஆம்புலன்ஸை அழைத்து சாமுலுவையும் அவரது மனைவியின் உடலையும் அவர்களது வீட்டில் விடும்படி அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆந்திரா – ஒடிசா எல்லைக்கும், ஒடிசா போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இறந்த மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்ற சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பம் : இறுதியில் நடந்த சோகம்!!

பஞ்சாபில்..

மகன் கனடாவில் படித்து நல்ல நிலைமைக்கு வந்து தங்களையும் கவனித்துக்கொள்வான் என நம்பியிருந்த அந்தக் குடும்பத்துக்கு தற்போது ஒரு துயரமான செய்தி கிடைத்துள்ளது.

பஞ்சாபிலுள்ள Mansa மாவட்டத்தில் அமைந்துள்ளது Bakhshiwala கிராமம். அந்தக் கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் (Gurjot Singh, 19).

ஜனவரி மாதம் 11ஆம் திகதிதான் குர்ஜோத் சிங் கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்றார். சர்ரேயில் தங்கியிருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே மகனை கனடா அனுப்புவதற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற கவலையிலிருக்கும் அந்தக் குடும்பத்தினர், தங்கள் மகனுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அரசின் உதவியை நாடியுள்ளனர்.

வவுனியாவில் நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!!

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்குமாறு கோரி வவுனியா, ஓமந்தை விவசாயிகள் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நேற்று (10.02) முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, தாண்டிகுளம் விவசாய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டப் பேரணியானது ஏ9 வீதி ஊடாக வவுனியா மாவட்ட செயலகம் வரை இடம்பெற்றது.

இதன்போது ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள் பயிர் அழிவிற்கான நஸ்ட ஈட்டினை வழங்கு, விவசாயிகளின் நாளைய எதிர்காலத்திற்கு வழியை ஏற்படுத்துங்கள், நெல்லிற்கான உத்தரவாத விலையை வழங்கு’ என எழுதப்பட்ட பதாதைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டனர்.

மாவட்ட செயலக வாயிலை அடைந்த விவசாயிகள் சார்பாக ஒரு குழுவினர் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரவிடம் மகஜர் ஒன்றை கையளித்ததுடன், தமது கோரிக்கை தொடர்பிலும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர இது குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஒரு கிலோவிற்கு 100 ரூபாய்க்கு குறையாத வகையில் உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக வர்த்தமானி மூலம் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் விவசாயிகளிடம் இதன்போது உறுதியளித்துள்ளார்.

 

நடுரோட்டில் பள்ளி உடையில் திருமணம் செய்து கொள்ளும் காதலர்கள்.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!!

இணையத்தில்..

முகத்திற்கு சாயம் பூசுவது போல் பள்ளி மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசிய இளைஞனின் வீடியோக் காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது பள்ளி மாணவர்களின் சேட்டை வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் இன்னும் சில தினங்களில் காதலர்கள் தினம் வரவிருப்பதால் இது தொடர்பான கவிதைகள், பாடல்கள் மற்றும் காதலர்களின் சான்றுகள் என பல விடயங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்வார்கள்.

இதனை பார்த்து கமெண்ட் செய்து, ஷேர் செய்வதற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதனால் இது போன்ற வீடியோக்கள் மக்கள் மத்தியில் உலாவ ஆரம்பிக்கிறது.

இதனால் பள்ளி மாணவர்கள் போன்று அடைகள் அணிந்து பலர் லைக்ஸ்க்காக இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் பள்ளி மாணவியொருவர் நடுரோட்டில் புத்தக பையுடன் நிற்கும் போது, முகத்திற்கு சாயம் பூசி ரொமான்ஸ் செய்வதை போன்று குறித்த மாணவியின் நெற்றியில் குங்குமம் பூசியுள்ளார்.

இந்த நிகழ்வை பார்க்கும் தமிழர்களின் திருமண சடங்குகளில் நெற்றியில் குங்குமம் பூசுவது ஒரு சடங்காக செய்து வரும் நிலையில், சிறுவர்கள் இப்படி விளையாடுவது கலாச்சாரத்திற்கு எதிரானது என சொல்லப்படுகிறது.

இந்த காட்சியை funtaap என்பவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த காட்சியை பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்தும், இது பள்ளி மாணவர்கள செய்யும் செயல் அல்ல என நெகட்டிவ்வான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

கிழக்கிலங்கையில் நடந்த கொடூரம் : அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுவன்!!

கிழக்கிலங்கையில்..

காத்தான்குடி பகுதியில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்த நபரே வீட்டுக்குள் இருந்த சிறுவனை தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சிறுவனின் தந்தை நேற்று காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறுவன் சந்தேக நபரால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபரை அன்றைய தினம் கைது செய்தனர்.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, பொலிஸார் இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவிக்க உள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

ஆணாக மாறிய பிறகு குழந்தை பெற்றெடுத்த திருநம்பி : இது எப்படி சாத்தியம்?

இந்தியாவில்..

கேரளாவின் பிரபலமான ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. ஆனால், தற்போது பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக பெற்றோரானா திருநங்கை தம்பதி இவர்கள் தான். அதாவது குழந்தையை தத்தெடுத்து பெற்றோர் ஆகாமல், வாடகைத் தாய் முறையையும் பின்பற்றல், பிரசவித்து பெற்றோரான திருநங்கை தம்பதி ஆவர்.

ஆணாக மாறிய பெண் (ஜஹாத்) கர்ப்பமாகி புதன்கிழமை நிறைமாத குழந்தையைப் பெற்றெடுத்தார். அவனாக மாறிய அவள், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த தம்பதிக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கப் போவதாக தெரிய வந்தாலும், சில மருத்துவ காரணங்களால், மருத்டுவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர்.

தற்போது ஜஹாத் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசிக்கும் திருநங்கைகள் ஜஹாத் (23), ஜியா பவல் (21). ஜஹாத் சமீபத்தில் ஒரு பெண்ணாக மாறினாலும், சில உறுப்புகள் பாலின மாற்றத்தை கொண்டிருக்கவில்லை.

ஜஹாத்தின் மார்பகங்கள் ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் கருப்பைகள் போன்ற சில உறுப்புகள் அப்படியே இருக்கின்றன. இதனிடையே, தான் பெற்றோராக இருக்க விரும்புவதாக ஜியா பவல் உணர்ந்தார்.

இதற்கு ஜஹாத் சம்மதித்தார். இந்த வரிசையில் கருத்தரித்த திருநங்கை ஜஹாத், கருவுற்ற குழந்தையைப் பெற்றெடுத்தது, நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்று எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்.

எங்களை ஆதரித்தவர்களுக்கும், நல்வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும், செய்தி அனுப்பியவர்களுக்கும் நன்றி, என ஜியா பவல் தெரிவித்துள்ளார். ஜியா ஆணாக பிறந்தாலும் பெண்ணாக மாறினார். ஆனால் ஜஹாத் பெண்ணாக பிறந்து, பின்னர் ஆணாக மாற முடிவு செய்தார்.

இந்த வரிசையில் ஆணாக மாற அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் அவரது கருப்பை மற்றும் பிற முக்கிய உறுப்புகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் கர்ப்பமானார்.

காதலனை கரம் பிடிக்க இருந்த கர்ப்பிணி.. திருமணத்திற்கு 3 நாட்கள் முன்பு எடுத்த விபரீத முடிவு!!

திருவாரூரில்..

திருவாரூரில் காதலனுடன் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன்பாக கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் மேப்பலம் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரது மகன் (வயது 24) நரேஷ் குமார். இவர் இளங்கலை பட்டப்படிப்பு படித்து முடித்துவிட்டு திருவாரூரில் உணவகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் நத்தம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகள் சுஷ்மிதா (வயது 21) என்பவருக்கும் கல்லூரி படிக்கும் போது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சுஷ்மிதாவின் பெரியம்மா வீடு நரேஷ் குமாரின் வீட்டின் அருகில் உள்ளதால் இருவரும் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. சுஷ்மிதா இளங்கலை வரலாறு முடித்துவிட்டு தற்போது பி.எட் படித்து வந்தார்.

இந்த நிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த காரணத்தினால் சுஷ்மிதா 7 மாத கர்ப்பமாகி உள்ளார். இந்த விவகாரம் சுஷ்மிதாவின் வீட்டிற்கு தெரிய வர அவர்கள் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய சுஷ்மிதா நரேஷ்குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து பேசி காதலர்கள் இருவரையும் மாலை மாற்றிக் கொண்டனர். தொடர்ந்து பிப்ரவரி 12ம் தேதி இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது எனவும் ஊர் பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து சுஷ்மிதா நரேஷ் குமாரின் வீட்டில் கடந்த ஒன்றரை மாதமாக தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் மூன்று நாட்களில் திருமணம் நடக்கவிருப்பதால் திருமணத்திற்கு தேவையான துணி மற்றும் தாலி உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக நரேஷ்குமாரின் அம்மா மற்றும் உறவினர்கள் திருவாரூருக்கு சென்றுள்ளனர்.

அப்போது வீட்டில் தனியே இருந்த சுஷ்மிதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கூரைக் கொட்டகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று திரும்பி வந்து பார்த்த நரேஷ் குமார் அழுது கூச்சலிட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சுஷ்மிதாவை மீட்டுள்ளனர். இதனையடுத்து காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கொரடாச்சேரி காவல்துறையினர் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இது கொலையா அல்லது தற்கொலையா என்கிற கோணத்தில் காவல்துறையினர் நரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று நாட்களில் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், பெண்ணின் பெற்றோர் கதறி அழுததும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ஆசையாக வளர்த்த நாய்க்காக உயிரைவிட்ட இளம் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சட்டீஸ்கரில்..

ஆசையாக வளர்த்த நாய் உயிரிழந்ததால் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தீயுள்ளது. பொதுவாக அநேக மனிதர்கள் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்ப்பதில் அதிகமாக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

அவற்றினை பாசமாக வளர்த்து வருவதையும் அவதானித்திருப்போம். சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியைச் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்ற இளம்பெண் நாய்க்குட்டி ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.

மிகவும் பாசமாக வளர்த்துவரும் நிலையில், இதுகுறித்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரிச்சா வளர்ந்துவந்த நாயின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதால்,

அதற்கான சிகிச்சையும் கொடுத்துள்ள நிலையில் நாய் திடீரென மரணமடைந்துள்ளது. இதனால் பெரும் சோகமடைந்த ரிச்சா தனது நண்பர்களிடத்தில் இது பற்றி வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். நேற்று வீட்டிலிருந்த ரிச்சா வெகுநேரம் ஆகியும் அறையை திறக்காமல் உள்ள நிலையில்,

தாய் சென்று அவதானித்த போது, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

செல்லமாக வளர்த்த நாய் மரணமடைந்ததால் இளம்பெண் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை பெற்றெடுத்த திருநங்கை தம்பதி.. இன்ப அதிர்ச்சியில் காதல் ஜோடி!!

இந்தியாவில்..

இந்தியாவில் முதன்முறையாக திருநங்கை தம்பதிக்கு நிறைமாத குழந்தை பிறந்துள்ளது. கேரளாவின் பிரபலமான ஜியா மற்றும் ஜஹாத் திருநங்கை தம்பதிக்கு இன்று குழந்தை பிறந்துள்ளது.

ஆனால், தற்போது பிறந்த குழந்தையின் பாலின அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று தம்பதியினர் தேர்வு செய்துள்ளனர். இந்தியாவிலேயே முதன்முறையாக பெற்றோரானா திருநங்கை தம்பதி இவர்கள் தான்.

அதாவது குழந்தையை தத்தெடுத்து பெற்றோர் ஆகாமல், வாடகைத் தாய் முறையையும் பின்பற்றல், பிரசவித்து பெற்றோரான திருநங்கை தம்பதி ஆவர். ஆணாக மாறிய பெண் (ஜஹாத்) கர்ப்பமாகி புதன்கிழமை நிறைமாத குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அவனாக மாறிய அவள், எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த தம்பதிக்கு மார்ச் மாதம் குழந்தை பிறக்கப் போவதாக தெரிய வந்தாலும், சில மருத்துவ காரணங்களால், மருத்டுவர்கள் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்த்தனர். தற்போது ஜஹாத் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசிக்கும் திருநங்கைகள் ஜஹாத் (23), ஜியா பவல் (21). ஜஹாத் சமீபத்தில் ஒரு பெண்ணாக மாறினாலும், சில உறுப்புகள் பாலின மாற்றத்தை கொண்டிருக்கவில்லை.

ஜஹாத்தின் மார்பகங்கள் ஏற்கனவே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் கருப்பைகள் போன்ற சில உறுப்புகள் அப்படியே இருக்கின்றன. இதனிடையே, தான் பெற்றோராக இருக்க விரும்புவதாக ஜியா பவல் உணர்ந்தார். இதற்கு ஜஹாத் சம்மதித்தார்.

இந்த வரிசையில் கருத்தரித்த திருநங்கை ஜஹாத், கருவுற்ற குழந்தையைப் பெற்றெடுத்தது, நாட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இன்று எனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்.

எங்களை ஆதரித்தவர்களுக்கும், நல்வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கும், செய்தி அனுப்பியவர்களுக்கும் நன்றி, என ஜியா பவல் தெரிவித்துள்ளார். ஜியா ஆணாக பிறந்தாலும் பெண்ணாக மாறினார். ஆனால் ஜஹாத் பெண்ணாக பிறந்து, பின்னர் ஆணாக மாற முடிவு செய்தார்.

இந்த வரிசையில் அவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. ஆனால் இந்த அறுவை சிகிச்சையில் அவரது கருப்பை மற்றும் பிற உறுப்புகள் அகற்றப்படவில்லை. இந்த நிலையில்தான் அவர் கர்ப்பமானார்.

மாப்பிள்ளை செய்த செயலால் திருமணம் முடிந்த கையோடு ஃபயர் ஸ்டேஷன் போன ஜோடி : வைரலாகும் பின்னணி!!

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடப்பாகடா என்னும் பகுதியில் வைத்து சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. விஷ்ணு மற்றும் ஹர்ஷா ஆகிய மணமக்களுக்கு ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், திருமணம் சடங்கு ஒன்றிற்காக மணப்பெண்ணின் கை விரலில் மோதிரம் ஒன்றையும் மாப்பிள்ளை விஷ்ணு அணிந்துள்ளார். அந்த சமயத்தில் அளவெடுத்த விரலில் அந்த மோதிரத்தை அணிவதற்கு பதிலாக, வேறு ஒரு விரலில் விஷ்ணு மோதிரத்தை அணிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஹர்ஷா விரலில் அணியப்பட்ட மோதிரம் காரணமாக அவரது விரல் வீங்க தொடங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வலியிலும் ஹர்ஷா துடித்துள்ள நிலையில் மோதிரத்தை கழட்டுவதற்காக பலமுறை முயன்றும் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், திருமணம் முடிந்த கையுடன் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் ஆகிய இருவரும் அங்கிருந்து அருகே உள்ள ஃபயர் ஸ்டேஷன் ஒன்றிற்கும் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் உதவியுடன் நைலான் நூலை பயன்படுத்தி கொஞ்ச நேர போராட்டத்திற்கு பின் மோதிரத்தை கழட்டி உள்ளனர்.

திருமண மண்டபத்தில் இருந்து நேராக ஃபயர் ஸ்டேஷன் சென்ற மணமக்கள் தொடர்பான புகைப்படங்களை அங்கே இருந்த புகைப்பட கலைஞர்கள் தங்கள் கேமராவிலும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் இருவரும் ஃபயர் ஸ்டேஷன் செல்வது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

23 வயதுப் பெண்ணை திருமணம் செய்த 65 வயது முதியவர் : விமர்சையாக நடந்த திருமணம்!!

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நக்கத் யாதவ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது.

மேலும் இவருக்கு 6 மகள்களும் உள்ளனர். இந்த ஆறு பேருக்கும் திருமணமாகி அவர்கள் தங்களின் கணவர்களுடன் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

தனது ஆறு பெண்களுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்து வைத்த நக்கத் யாதவின் மனைவி சில ஆண்களுக்கு முன்பு உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

மனைவியின் பிரிவின் காரணமாக தனிமையில் இருந்து வந்த நக்கத் யாதவிற்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளார் நக்கத் யாதவ். இந்த நிலையில் தான் அவரைவிட சுமார் 42 வயது குறைவான 23 வயதே ஆகும் நந்தினி என்ற இளம்பெண், நக்கத்தை திருமணம் செய்து கொள்ள முன் வந்துள்ளார்.

நக்கத் யாதவிற்கு நந்தினியை பிடித்து போக இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நக்கத் யாதவின் ஆறு மகள்களும் இந்த திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நந்தினியின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் கூறியதையடுத்து இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து, இளம் பெண் நந்தினி மற்றும் நக்கத் யாதவ் ஆகியோரின் திருமணம் நடைபெற்றுள்ளது.

வழக்கமான திருமணம் போல ஆட்டம், பாட்டம் என நக்கத் யாதவின் திருமணம் படு ஜோராக நடந்து முடிந்திருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த திருமணம் பற்றி பேசும் நந்தினி தனக்கு இந்த கல்யாணம் மகிழ்ச்சியாகவே உள்ளதாகவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கணவர் : உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தாயார்!!

வாழைச்சேனையில்..

கல்குடா வீதி வாழைச்சேனையில் தனிமையில் வீடொன்றில்வசித்து வந்த பெண் ஒருவரின் சடலத்தை உறவினர்கள் வழங்கிய தகவலின்படி கண்டு பிடித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் கற்குடா வீதி வாழைச்சேனையைச் சேர்ந்த பாஸ்கரன் சற்குணதேவி வயது (52) என்ற 4 பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். கடந்த 15 நாட்களாக தமது சகோதரியின் தொலைபேசி அழைப்பு துண்டித்து காணப்படுவதாகவும்,

அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லையென அவரை தேடிப் பார்க்கும்படி வவுனியாவில் உள்ளவர் வாழைச்சேனைப் பிரதேசத்தில் வசிக்கும் தமது உறவினருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் இன்று காலை பிரதேச கிராமசேவகருக்கு தகவல் வழங்கியதை அடுத்து பொலிசாரின் துணையுடன் அவர் வசித்த வீட்டில் சென்று பார்த்தபோது உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தினை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 10 வருடங்களாக மலேஷியா நாட்டில் தொழில் புரிந்து வந்த நிலையில் கடந்த 2 மதாங்களாக வழைச்சேனையில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அத்துடன் தான் வசித்து வந்த வீட்டினை விற்பனை செய்து விட்டு வவுனியா திரும்பும் நிலையில் வீட்டினை விற்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் இவர் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளமை தமக்கு கவலையளிப்பதாக சகோதரி தெரிவிக்கிறார்.

அதேவேளை உயிரிழந்தவரின் கணவர் யாழ்ப்பான பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தராக கடமையாற்றி வருகின்றார் என்றும் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மரணத்திற்கான காரணம் வெளியாகத நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்வேடத்தில் பெண் ஒருவர் செய்த மோசமான செயல்!!

ஆண் வேடத்தில்..

பெண் ஒருவர் ஆண் வேடத்தில் வந்து நிதி சேகரிப்பு செய்ய முயற்சித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ள நிலையில் இவ்வாரானவர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மோசடி சம்பவம் மடவளை பிரதேசத்தில் இடம் பெற்றுள்ள நிலையில் அது குறித்த காணொளி வெளியாகியுள்ளது. நாட்டில், பொருளாதார நெருக்கடியால் மக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளைகூட பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் மக்களை ஏமாற்றி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் மனைவி சண்டையில் பரிதாபமாக பலியான இரண்டு பச்சிளம் குழந்தைகள் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கடலூர்..

கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன், செல்வி தம்பதியின் மகள் தனலட்சுமி. கடலூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த இவரும், அதே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த சற்குரு என்பவரும் காதலித்துவந்தனர்.

இருவேறு சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பிறகு சற்குரு வேறு ஒரு பெண்ணுடன் திருமண உறவைத் தாண்டிய நட்புடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த விவகாரத்தில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், குழந்தையுடன் தன்னுடைய தாய் வீட்டுக்குச் சென்ற தனலட்சுமி, அதன்பிறகு விவாகரத்து வழக்கையும் தொடர்ந்திருக்கிறார்.

அந்த வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றம் சென்ற தனலட்சுமியும் அவரின் தாய் செல்வியும், செல்லங்குப்பத்திலுள்ள தனலட்சுமியின் சகோதரி தமிழரசி வீட்டுக்குச் சென்றிருக்கின்றனர். இந்த நிலையில், இன்று அங்கு சென்ற சற்குரு தனலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

அப்போது திடீரென்று அந்த வீட்டிலிருந்து பயங்கர அலறல் சத்தம் கேட்கவே அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்றிருக்கின்றனர். அப்போது சற்குரு, அவர் மனைவி, அவரின் சகோதரி தமிழரசி மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள், தாய் செல்வி ஆகியோர் தீயில் எரிந்துகொண்டிருந்தனர்.

தனலட்சுமியின் ஆறு மாத ஆண் குழந்தையும், சகோதரி தமிழரசி, அவரின் மூன்று மாத பெண் குழந்தையும் அந்த இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துவிட்ட நிலையில், தனலட்சுமி, சற்குரு, செல்வி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ”கருத்து முரண்பாடால் விவாரத்து வழக்கு தொடர்ந்திருக்கின்றனர். நேற்று இருவரும் நீதிமன்றம் சென்ற நிலையில், இன்று காலை தனலட்சுமியிடம் போனில் பேசியிருக்கிறார் சற்குரு.

அதில் வாக்குவாதம் அதிகரிக்கவே நேரில் சென்றிருக்கிறார். தனலட்சுமியின் சகோதரி கணவர் பிரகாஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தனலட்சுமி, அவரின் குழந்தை, சகோதரி தமிழரசி மற்றும் அவரின் குழந்தை, தாய் செல்வி ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு சென்ற சற்குரு, தனலட்சுமியிடம் தகராறு செய்திருக்கிறார். அப்போது தன்மீதும் மற்றவர்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருப்பார் என்று சந்தேகிக்கிறோம். 90 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் தனலட்சுமி, அவர் தாய் செல்வியிடம் வாக்குமூலம் பெறும் முயற்சியில் இருக்கிறோம்” என்றனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தனலட்சுமியின் தாய் செல்வி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கும் நிலையில், தனலட்சுமியும் கணவர் சற்குருவும் அங்கேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில், நீதிபதியிடம் தனலட்சுமி கொடுக்கும் வாக்குமூலத்தின் ஆடியோ வெளியாகியிருக்கிறது. சரியாக 2.44 நிமிடங்கள் இருக்கும் அந்த ஆடியோவில், ”என் கணவர் சற்குரு அவர் மீதே பெட்ரோல் ஊற்றிக்கொண்டார்.

அப்போது நான் அவரைத் தள்ளிவிட்டேன். அங்கு அடுப்பு எரிந்துகொண்டிருந்தது. அதனால் அனைவருக்கும் தீப்பற்றிவிட்டது” என்று நிறுத்தி, நிறுத்தி தெரிவித்திருக்கிறார். தனலட்சுமி கூறுவதுபோல நடந்திருந்தால், பெட்ரோல் ஊற்றாமல் மற்றவர்கள் எப்படி உயிரிழந்தார்கள்,

அனைவருக்கும் தீக்காயம் பட்டது எப்படி என்ற குழப்பம் நிலவுகிறது. அதேசமயம், “தீப்பற்றியவுடன் சற்குரு அங்கும் இங்கும் ஓடியிருப்பார். அப்போது மற்றவர்கள்மீது தீ பரவியிருக்கலாம்” என்கின்றனர் போலீஸார்.