மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த மாணவன் : கதறித் துடித்த பெற்றோர்!!

நாகப்பட்டினத்தில்..

முன்பெல்லாம் 50, 60 வயதுக்கு மேல் வந்த மாரடைப்பு, இதய நோய், சர்க்கரை இவை அனைத்தும் மிக இளம் வயதிலேயே வருவது பெரும் கவலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் மாரடைப்பால் உயிரிழந்து வருவது அதிகரித்து வருகிறது.

அடுத்த தலைமுறையின் வளர்ச்சியை பார்க்க வேண்டிய பெற்றோர்கள், ஆசிரியர்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வலிவலம் பெரிய காருகுடி கிராமத்தில் வசித்து வருபவர் இளையராஜா. இவரது மகன் கவிப்பிரியன் வலிவலம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கம் போல் பள்ளி சென்ற கவிப்ப்ரியன் விளையாட்டு வகுப்பில் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து தனது வகுப்பு மாணவர்களுடன் விளையாட்டு வகுப்பில் பள்ளி மைதானத்தை சுற்றி ஓடி வந்தான்.

3வது சுற்றில் கவிப்பிரியன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஓடிச்சென்று விபரம் தெரிவித்தனர். உடனடியாக ஆசிரியர்கள் மயங்கி விழுந்த மாணவனை வலிவலம் மருத்துவமனையில் கொண்டு சேர்த்து முதலுதவி அளித்தனர்.

மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கவிப் ப்ரியனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே மாணவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வலிவலம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. துள்ளி ஓடி பள்ளிக்குச் சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

48 சீர்வரிசைகளுடன் பசுவிற்கு நடந்த வளைகாப்பு.. நெகிழ வைத்த கிராம மக்கள்!!

தமிழகத்தில்..

இந்திய மாநிலம் தமிழகத்தில் கோவில் பசுமாட்டுக்கு சீர்வரிசை வைத்து வளைகாப்பு நடத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீக காலங்களாக வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு வளைகாப்பு செய்து உரிமையாளர்கள் மகிழ்வதை நாம் புகைப்படமாக அவதானித்திருந்தோம்.

தற்போது பசுவிற்கு வளைகாப்பு நடத்திய சம்பவத்தை குறித்து தெரிந்து கொள்வோம். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் கிராமத்தில் உள்ள கோவில் பசுவுக்கு கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சியை கொண்டாடினர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மேலபட்டு கிராமத்தில் வீற்றுள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வளர்க்கப்பட்டு வரும் பசுமாடு அம்சவேணி.

இந்த பசுமாட்டிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு 24 வகையான வளைகாப்பு சாதம் மற்றும் 48 சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டு வந்துள்ளனர்.

தொடர்ந்து பசுவிற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி நீராடி மாலை அணிவித்ததுடன், காலில் சலங்கை கட்டி வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர்.

குழந்தை இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு குறித்த பசுவிற்கு வளையல் அணிவித்தும், மஞ்சள் பூசியும் வணங்கியுள்ளனர். மேலும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் சுற்றி உள்ள கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் கலந்து கொண்டுள்ளனர்.

21 வயது இளம்பெண் உள்ளிட்ட மொத்த குடும்பமும் தற்கொலை… வெளியான அதிர்ச்சிக் காரணம்!!

கேரளாவில்..

கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்த நிலையில் சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொடுபுழாவை சேர்ந்தவர் ஆண்டனி (62).

இவர் மனைவி ஜெசி (56). தம்பதியின் மகள் சில்னா (21) ஆண்டனி பேக்கரி கடை நடத்தி வந்தார். அவரின் குடும்பத்தாருக்கு பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர். வீட்டு வாடகையும் கொடுக்க முடியாமல் ஆண்டனி சிரமப்பட்டார்.

இதையடுத்து விரக்தியில் குடும்பத்தார் 8 நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து வீட்டில் சரிந்து விழுந்தனர். பின்னர் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஜெசி முதலில் உயிரிழந்தார். பின்னர் அடுத்த சில நாட்களில் ஆண்டனி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

தொடர்ந்து சில்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலனுடன் 3 நாளில் திருமணம்… மணப்பெண் விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!!

திருவாரூரில்..

திருவாரூர் அருகே திருமணம் நடைபெற மூன்று நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கண்கொடுத்தவனிதம் அருகே நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்- ஜெயந்தி தம்பதியினர். இவர்களின் மகள் சுஷ்மிதா வயது 21. இவர் பிஎட் படித்து படிப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் மேப்பலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 27) திருவாரூரில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வருகிறார். ரமேஷ்குமாரும் சுஷ்மிதாவும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே சுஷ்மிதா கர்ப்பமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து இரண்டு வீட்டு தரப்பினரும் கலந்து பேசியதையடுத்து சுஷ்மிதா ரமேஷ்குமார் வீட்டில் சேர்ந்து வசித்து வந்தார். வரும் ஞாயிற்றுக்கிழமை 12ஆம் தேதி இரண்டு வீட்டு தரப்பினரும் இணைந்து திருமணம் நடத்த உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று சுஷ்மிதாவை வீட்டில் விட்டு விட்டு திருவாரூருக்கு புதிய துணிகள் வாங்குவதற்காக பெற்றோர் சென்றுள்ளனர். இதனையடுத்து, சுஷ்மிதா வீட்டின் பின்பக்கம் இருந்த கூரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் பார்த்து கொரடாச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுஷ்மிதாவின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

திருமணத்திற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மாப்பிள்ளை வீட்டாரிடம் வரதட்சணை காரணமாக அல்லது வேறு ஏதும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இடம்பெற்ற சைவ மகா சபையின் அன்பே சிவம் விருது வழங்கல்!

அகில இலங்கை சைவமகா சபையினர் வருடா வருடம் வழங்கும்”அன்பே சிவம்” விருது வழங்கும் விழா  கடந்த 05.02.2022 ஞாயிற்றுக்கிழமை வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலின் காஞ்சி சிவ மட மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் போது 2022 ஆம் ஆண்டுக்கான அன்பே சிவம் விருது  தன்னலமற்ற உன்னத சிவப்பணியும் அறப்பணியும் ஒருங்கே ஆற்றும் கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில்,  தர்மகர்த்தாவும் அகிலாண்டேஸ்வரி அருளகம், மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் ஸ்தாபகருமான  சிவத்திரு.ஆறுமுகம் நவரெட்ணராசா அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

அகில இலங்கை சைவமகா சபையின் தலைவர் சிவத்திரு. நா. சண்முகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருமிகு.தி.திரேஷ்குமார் (மேலதிக அரச அதிபர்- வவுனியா) மற்றும் கௌரவ விருந்தினராக சிவத்திரு.நா.தர்மராசா (தமிழ்மணி அகளங்கன் இந்துமாமன்றம் -வவுனியா)மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.பிரியதர்சினி சஜீவன் (உதவி பிரதேச செயலர் வவுனியா) சி.சுதாகரன் (மனநல மருத்துவர், பொது வைத்தியசாலை வவுனியா) திருமிகு.செ.சந்திரகுமார் தலைவர், தமிழ் விருட்சம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் தவத்திரு.அகத்தியர் அடிகளார் (தென்கயிலை ஆதீனம் -திருகோணமலை) மற்றும் தவத்திரு.உமாபதிசிவம் (மெய்கண்டார் ஆதீனம் -கீருமலை) ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கியதுடன் மருத்துவர். பரா நந்தகுமார் ( அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர்) கலந்து கொண்டு அன்பே சிவம்  விருது தொடர்பான அறிமுகவுரையினை வழங்கியிருந்தார்.

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

வவுனியாவில் நியாமற்ற வரிச் சட்டத்திற்கெதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!!

கவனயீர்ப்பு போராட்டம்..

நியாமற்ற வரிச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (08.02.2023) மதியம் 01 மணி தொடக்கம் 1.30 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஸ் பூட்சிட்டிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியர்கள் நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிச்சுமை, வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுநர்கள் நடு வீதிக்கு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திவாறும்,

தொழில் வல்லுநர்களை சுரண்டித் திண்ணும் வரி யோசனையை மீளப்பெறு, அரசியல்வாதி களவெடுத்த காசை எடுத்து நாட்டை திருத்து, வங்கி திருடன்கள் பெரும் பதவிகளில், நியாயமான வரி வேண்டும் மக்களுக்கு சலுகை வேண்டும், எல்லாப் புறமும் ஊழல் மோசடி இன்னும் அவர்கள் மாடங்களில் போன்ற பல கோசகங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் 30 நிமிடங்களில் நிறைவுற்றிருந்தமையுடன் வவுனியாவிலுள்ள பெருன்பான்மையான வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

வவுனியாவில் வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

பல நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இப்பிரதேசங்களில் சில குறுகிய எண்ணம் கொண்ட மனிதர்கள் தம் குழந்தைகளின் மலக்கழிவுகளையும், மாமிச கழிவுகளையும் வீசுவதால் வீதியோரங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் வீதியை பயன்படுத்தும் மக்களுக்கும் தொற்றுநோய்கள் உருவாகும் நிலையும் தோன்றியுள்ளது.

குறித்த வீதியில் குப்பைகளை வீசிச் செல்வது அதிகரித்த நிலையில், அப்பகுதிகளிலுள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள சி.சி.ரி.வி. காணொளிகள் பரிசோதிக்கப்பட்டு வீதியில் குப்பைகளை வீசிச் செல்பவர்களின்,

மோட்டார் சைக்கிள் இலக்கம், முச்சக்கர வண்டி இலக்கம் ஆகியன பதிவாகியுள்ளமையுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவதற்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மேலும், வீதிகளில் குப்பைகள் வீசப்படும் அனைத்து பகுதிகளிலும் இரகசிய அவதானிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

நகையை திருடி வாயில் ஒளித்துவைத்து வடிவேலு பாணியில் தப்பி செல்ல முயன்ற இளைஞன்!!

புதுச்சேரியில்..

தவம் படத்தில் கீரிப்புள்ள கதாபாத்திரத்தில் வந்த வடிவேலு கண்ணிமைக்கும் நேரத்தில் நகையைத் திருடி வாயில் போட்டுக் கொள்வார். இந்த நகைச்சுவைக் காட்சியை பார்த்து கற்றுக் கொண்ட இந்த ஆசாமி நிஜமாகவே இவ்வாறு செய்து பொதுமக்களிடம் சிக்கி தர்ம அடி வாங்கியுள்ளான்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி. புதுச்சேரி நெல்லுமண்டி வீதியில் நகைக்கடை நடத்தி வரும் நிலையில் கடந்த 3-ம் தேதியன்று ஒடிசாவைச் சேர்ந்த ராஜசேகர் சவுத் என்ற 25 வயது இளைஞர் ஒருவர் தங்க செயின் வாங்குவதற்கு சென்றுள்ளார்.

அப்போது கடை ஊழியர்கள் ஒவ்வொரு செயினையும் காண்பித்து வந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த 4 கிராம் தங்கச் செயினை நாசூக்காக தூக்கிய இளைஞர் அப்படியே வாயில் போட்டு விழுங்கினார்.

இதைக் கண்ட ஊழியர்கள் திருட்டு ஆசாமியை பிடித்து தர்ம அடி கொடுத்து பெரியகடை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், ஒடிசாவில் இருந்து வந்த ராஜசேகர் மீண்டும் சொந்த மாநிலத்துக்கு செல்லவும்,

மது அருந்துவதற்கும் பணம் தேவைப்பட்டதாலும் இப்படியான திருட்டு வேலையில் இறங்கியதாக கூறியிருந்தார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையின் மூலமாக இளைஞரின் சேப்டி லாக்கரில் வைக்கப்பட்ட செயின் பத்திரமாக மீட்கப்பட்டது.

பின்னர் செயினை விழுங்கிய இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் போலீசார். வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் கற்பனை கலந்தே எடுக்கப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் இது சில இடங்களில் இது உண்மையாகியே வருகிறது.

செல்பியினால் பரிதாபமாக உயிரிழந்த தந்தையும் மகளும்!!

பொலன்னறுவை..

தந்தையும் மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சமபவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர்கள் பொலன்னறுவை தம்பால கும்புக்கன் ஆற்றில் தவறி விழுந்ததில் இச் சமபவம் நிகழ்ந்துள்ளது.

கும்புக்கன் ஆற்றை பார்வையிடுவதற்காக நேற்று காலை சென்ற போதே அவர்கள் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர். செல்பி எடுப்பதற்கு முயற்சித்த குறித்த சிறுமி ஆற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளார்.

அவரை காப்பாற்றுவதற்கு தந்தை முயற்சித்த போது இருவரும் நீரில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன தந்தையையும் மகளையும் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் உட்பட்ட குழுவினர் நீரில் மூழ்கிய தந்தையும் மகளும்,

ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள பரணகம பிரதேசத்தில் சடலங்களாக மீட்டனர். மட்டக்களப்பு காத்தான்குடியை சேர்ந்த 46 வயதான தந்தையும் 12 வயதான மகளுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் சுருண்டு விழுந்து உயிரிழந்த இளம்பெண்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

பிரித்தானியாவில்..

கயலா ஜேக்கப் (16) என்ற டீன் ஏஜ் பெண் தனது குடும்பத்தாருடன் பிரித்தானியாவின் லூடனில் குடியேறி வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் கயலாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் அசௌகரியமாக உணர்ந்த நிலையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அது பலனளிக்கவில்லை. இதையடுத்து கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கயலாவின் குடும்பத்தார் கேரளாவின் தொடுபுழாவை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர்.

அவரின் மரணம் குடும்பத்தினரை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவிலேயே கயலாவின் இறுதிச்சடங்குகள் நடக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.

துருக்கி இடிபாடுகளுக்கு அடியில் பிறந்த குழந்தை.. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களுக்கு மத்தியில் தப்பிய அதிசயம்!!

துருக்கியில்..

துருக்கியில் இரண்டு நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட 5 நிலநடுக்கங்களுக்கு மத்தியில், இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இடிபாடுகளில் பெற்றோர் உயிரிழந்த நிலையில், புதிதாக பிறந்த குழந்தை மட்டும் உயிர் பிழைத்ததால், இந்தக் குழந்தையை அதிசய குழந்தை என அழைக்கப்படுகிறது.

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கனக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. இறப்பு எண்ணிக்கை 5000-த்தை கடந்ததாக கூறும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறு வருகிறது, இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு மத்தியில் ஒரு நல்ல செய்தியாக, இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குழந்தியின் பெற்றோர் உயிருடன் மீட்க முடியாததால் அனாதையாக விடப்பட்டுள்ளது.

புதிதாகப் பிறந்த பெண் குழந்தை மற்றும் அதன் குடும்பத்தைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. ஆனால், அவர்கள் சிரியாவின் கொடூரமான போரால் டெய்ர் எஸோரிலிருந்து அஃப்ரினுக்கு இடம்பெயர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

நிலநடுக்கத்தின் போது குழந்தையின் தாய்க்கு பிரசவ வலி ஏற்பட்டதாக அறியப்படுகிறது. வடகிழக்கு சிரியாவின் அஃப்ரின் கிராமப்புறத்தில் உள்ள ஜெண்டரஸில், இருள், மழை மற்றும் குளிர் சூழ்ந்துள்ளதால், பிறந்த குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினரைக் காப்பாற்ற ஒரு மாபெரும் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ஆனால் பெற்றோர்கள், பூகம்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவில்லை. துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து இன்றும் (செவ்வாய்கிழமை) இரண்டு நிலநடுக்கங்கள் துருக்கியைத் தாக்கின.

மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கம்… இடிபாடுகளில் சிக்கி புதைந்த மகளின் கைகளை கோர்த்த நிலையில் தந்தை!!

துருக்கியில்..

துருக்கியை மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்தில் சிக்கி, புதைந்துபோன இளவயது மகளின் கைகளை கோர்த்தபடி தந்தை ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நொறுங்க வைத்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவை மொத்தமாக புரட்டிப்போட்டுள்ள நிலநடுக்கத்தில் இதுவரை 5,200 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிறார்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

மட்டுமின்றி, ஆயிரக்கணக்கானோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். திங்கட்கிழமை துருக்கி மற்றும் சிரியாவை ரிக்டர் அளவில் 7.8 என பதிவான நிலநடுக்கம் மொத்தமாக புரட்டிப்போட்டது.

இதனையடுத்து இன்று பகல் 5.8 என்ற ரிக்டர் அளவில் இன்னொரு நிலநடுக்கம் தாக்கியது. மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மட்டுமின்றி கடும் குளிர், பனிப்பொழிவு என மீட்பு நடவடிக்கைகள் தாமதமாவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கையில், இரண்டு நாடுகளிலும் மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 20,000 தொடலாம் எனவும் 1.4 மில்லியன் சிறார்கள் உட்பட மொத்தம் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, நெஞ்சை உலுக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி புதைந்துபோயுள்ள இளம் வயது மகளின் கைகளை கோர்த்தபடி, தந்தை ஒருவர் காத்திருக்கும் நொறுங்க வைக்கும் காட்சி பலரையும் கலங்கடித்துள்ளது.

15 வயதேயான சிறுமி மொத்தமாக கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ள, தந்தை Mesut Hancer தமது மகளின் வெளியேத் தெரியும் கைகளை மட்டும் கோர்த்தபடி காணப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை, கடும் போராட்டத்திற்கு பின்னர் Irmak என்ற அந்த சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி விடிகாலை 4.17 மணியளவில் முதல் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மக்கள் தூக்கத்தில் இருந்த நிலையில், அவர்களின் வீடுகள் அவர்கள் மீது விழுவதற்கு முன் தப்பிக்க முடியாமல் போயுள்ளது. சுமார் 200 மைல்கள் சுற்றளவில் டசின் கணக்கான கிராமங்கள் மற்றும் நகரங்கள் தரைமட்டமாயுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர். அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிக மிக முக்கியம் எனவும் கூறுகின்றனர். முதல் நிலநடுக்கம் பதிவான பின்னர் சுமார் 200 நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

”அம்மா நான் வெளியே வந்துட்டேன்” பிறந்த குழந்தை பேசிய அதிசயம் : தீயாய் பரவும் செய்தி!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே களியாம் பூண்டி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவித்த ஆண் குழந்தை பேசியதாக பரவப்படும் தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா சேர்ந்த சின்ன அழிசூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்திரன்- ரேவதி தம்பதியினர். இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவதாக ரேவதி கர்பம் தரித்திருந்தார். இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் ரேவதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

பிரசவ வலியால் துடித்த ரேவதியை அருகில் உள்ள களியாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர் சரண்ராஜ், செவிலியர் பிருந்தா ஆகியோர் ரேவதிக்கு பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது காலை 10.15மணியளவில் ரேவதிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று சுகபிரசவத்தில் பிறந்துள்ளது.

இந்த குழந்தை தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்த உடன் திடீரென “நான் வெளியே வந்துவிட்டேன்” என்ற குரலை மருத்துவர்கள், செவிலியர்கள் கேட்டுள்ளனர். பலரும் எங்கிருந்து இந்த சத்தம் வந்தது என தேடி குழந்தை தான் கூறியது என்பதை உறுதி செய்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், செவிலியர்கள், குழந்தையின் தாய், தூய்மை பணியாளர் என பலரும் ஒருவருக்கொருவர் எப்படி சாத்தியம் என கேட்டு கொண்டனர்.

இந்த செய்தி தீயாய் பரவ பலரும் அந்த குழந்தையை வியப்புடன் வந்து பார்த்து செல்கின்றனர். ஆனால் அந்த குழந்தை அதற்கு பிறகு பேசவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

24 மணி நேர பணிப்புறக்கணிப்பு..

நியாயமற்ற வரிக் கொள்கை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (08.02.2023) காலை 8.00 மணி தொடக்கம் 24 மணித்தியாலய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சுகாதாரம், மின்சாரம், துறைமுகம், பெட்ரோலியம், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் உள்ளிட்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று(08.02) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு தினத்திற்கு ஆதரவளித்து 24 மணித்தியால தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்ததுடன்,

அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அவசர நோயாளர் பிரிவு, நோயாளர் விடுதி, விபத்துப்பிரிவு, சத்திர சிகிச்சை பிரிவு உட்பட்ட சில சேவைகளில் மட்டுப்படுப்பட்ட வைத்தியர்கள் சேவைகள் ஈடுபடுவதுடன், வெளிநோயாளர் பிரிவு , கிளினிக் பிரிவு போன்ற ஏனைய சேவைகளிலிருந்து வைத்தியர்கள் முற்றாக 24மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இப் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக கிளினிக், வெளிநோயாளர் பிரிவு ஆகியவற்றிக்கு வருகை நோயாளிகள் பல்வேறு சிரமக்களுக்கு முகங்கொடுத்திருந்தனர்.

திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து… வீதியில் பற்றி எரிந்த கார்!!

தாம்பரத்தில்..

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சானடோரியம் வள்ளுவர் குருகுலம் பள்ளி அருகே உள்ள சிக்னலில் சினிமா ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்படும் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதியது.

அப்போது, பின்னால் வந்த இரண்டு கார்களும் அடுத்தடுத்து மோதியது. இதில் ஒரு கார் திடீரென தீ பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் உடனே வெளியே வந்ததால் உயிர் தப்பினர்.

ஒன்றின் மீது ஒன்று மோதி கொண்டதில் ஒரு கார் திடீரென தீபற்றி எரியத் தொடங்கியது இதில் காரில் பயணித்தவர்கள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.

மேலும் அவ்வழியாக வந்த தண்ணீர் லாரியை கொண்டு வாகனத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதேபோல் கார்களில் பயணித்தவர்களுக்குச் சிறிய காயம் ஏற்பட்டதால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

இந்த விபத்தால் தாம்பரம், பல்லாவரம் செல்லும் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாம் பிரிவதுதான் இருவருக்கும் நல்லது… கடத்தப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ.. கதறும் கணவர்!!

தென்காசியில்..

தென்காசி மாவட்டத்தில் புதுப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பமாக அடுத்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அவரை மீட்க போலீஸார் தனிப்படைகள் அமைத்திருக்கும் நிலையில், அடுத்தடுத்து வீடியோ வெளியாகிவருகிறது.

தென்காசி அருகேயுள்ள குத்துக்கல்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் வினித். மென்பொறியாளரான இவர், தன்னுடன் பள்ளிக்காலத்திலிருந்து சேர்ந்து படித்தவரான கிருத்திகா படேல் என்பவரைக் காதலித்திருக்கிறார்.

கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், குற்றாலத்தில் மரம் அரவை ஆலை நடத்திவருவதால், கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குடும்பத்துடன் குற்றாலத்தில் வசிக்கிறார்.

தமிழரான மாரியப்பன் வினித்துடன், குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கிருத்திகா பழகிவருவது நவீன் படேலுக்கு தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதனால் டிசம்பர் 27-ம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய கிருத்திகா, மாரியப்பன் வினித்துடன் திருமணம் செய்துகொண்டார்.

பின்னர் வினித் வீட்டில் இருவரும் வசித்துவந்திருக்கின்றனர். இந்த நிலையில், கிருத்திகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்ததால், ஜனவரி 4-ம் தேதி இருவரும் குற்றாலம் காவல் நிலையத்துக்குச் சென்றிருக்கின்றனர். அங்கு மாரியப்பன் வினித்துடன் செல்ல விரும்புவதாக கிருத்திகா தெரிவித்ததால் அவருடன் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.

பின்னர், ஜனவரி 25-ம் தேதி இருவரும் காரில் சென்றபோது, அங்கு வந்த கிருத்திகாவின் தந்தை நவீன் படேல் மற்றும் உறவினர்கள், வினித்தை அடித்துவிட்டு வலுக்கட்டாயமாக கிருத்திகாவை காரில் கடத்திச் சென்றனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தில் குற்றாலம் காவல்துறையினர் நேர்மையாகச் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனிடையே தன்னுடைய மனைவியை மீட்டுத்தரக்கோரி டி.ஜி.பி உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மாரியப்பன் வினித் புகார் அனுப்பினார். அதையடுத்து, தென்காசி மாவட்ட காவல்துறையினர், ஐந்து தனிப்படைகள் அமைத்து புதுமணப் பெண் கிருத்திகாவைத் தேடிவருகின்றனர். இதுவரை அவரை போலீஸார் கண்டுபிடிக்கவில்லை. அவர் இருக்கும் இடமும் தெரியவில்லை.

பெற்றோரால் கடத்திச் செல்லப்பட்ட கிருத்திகா எங்கிருக்கிறார் என்பது தெரியாத நிலையில், முதலில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், தனக்கும் உறவினரான மைத்ரிக் படேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருமணம் நடந்துமுடித்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

கணவர், குடும்பத்தினருடன் பாதுகாப்பாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர், தன்னுடைய பெற்றோர்மீது தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி செல்போன் மூலமாகவும் மாரியப்பன் வினித்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் மீண்டும் கிருத்திகா வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில், “என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை. நான் விரும்பியே என்னுடைய பெற்றோருடன் சென்றேன். நான் வினித் வீட்டில் இருந்தபோது, என்னுடைய பெற்றோரிடமிருந்து பணம் வாங்கிவருமாறு வற்புறுத்தினார்கள்.

அதோடு, என் பெற்றோர்மீது போலீஸிலும் முதல்வரின் தனிப்பிரிவிலும் புகாரளித்திருக்கின்றனர். அது பற்றி என்னிடம் எதுவுமே சொல்லவில்லை. தற்போது கணவரின் தொந்தரவு இல்லாமல் இருக்கிறேன்.

நாம் இருவரும் அவரவர் வழியில் போவதுதான் இருவருக்கும் நல்லது. இருவரின் குடும்பத்துக்கும் நல்லது. அதனால் என் குடும்பத்தினர்மீது கொடுத்திருக்கும் புகார்களை உடனே வாபஸ் வாங்க வேண்டும். அதுதான் இருவரின் குடும்பத்துக்கும் நல்லதாக இருக்கும்” என கிருத்திகா வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

ஆனால், அவர் ஏதோ நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகக் கூறும் மாரியப்பன் வினித், தன் மனைவியை மீட்டுக் கொடுக்க வேண்டும் என போலீஸாரை வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கண்ணீர் மல்க வெளியிட்டிருக்கும் வீடியோவில், “நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். அது தொடர்பான விசாரணைக்கு வந்தபோது கிருத்திகாவின் பெற்றோர், அவருக்கு ஏற்கெனவே திருமணம் நடந்ததாகத் தெரிவிக்கவில்லை.

இப்போது வழக்கு, கைது ஆகியவற்றுக்குப் பயந்து கிருத்திகாவைக் கடத்திச் சென்று மிரட்டி ஏதேதோ பேசவைத்திருக்கிறார்கள். கிருத்திகா உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை சீக்கிரம் மீட்டு என்னிடம் சேர்க்க வேண்டும்” என வலியுறுத்தியிருக்கிறார்.

தென்காசி மணப்பெண் கடத்தல் சம்பவத்தில் அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் சர்ச்சையைக் கிளப்பிவருகின்றன. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸாருக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.