காதலியை கொன்றுவிட்டு அந்த சடலத்துடனேயே தூங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

கேரளாவில்..

கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்தவர் ஆண்டோ… இவர் அங்குள்ள ரப்பர் எஸ்டேட் ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.. திருமணமாகிவிட்டது..

மனைவி குழந்தைகளுடன் வைத்ரி பகுதியில் வசித்து வந்தார்… ஆனால் இவருக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.. அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்ததால், மனைவி இவரை விட்டு பிரிந்துசென்றார்.

அதன்பிறகு, ஆண்டோ, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தார். ஆனால் அந்த பெண்ணும், ஆண்டோவை பிடிக்காமல், அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.. இதனால், ஆண்டோ, இன்னொரு பெண்ணுடன் உறவில் இருந்து வந்தார்..

அந்த பெண்ணின் பெயர் நீது.. அவருடன் குடும்பம் நடத்தலாம் என்று முடிவுசெய்த ஆண்டோ, நீதுவை அழைத்து கொண்டு, ஊரை விட்டு வெளியேறினார்.. காசர்கோடு பகுதிக்கு சென்று அங்கேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து நீதுவுடன் வாழ ஆரம்பித்தார்.,. அங்குள்ள ரப்பர் எஸ்டேட்டிலும் வேலை பார்த்து வந்தார்..

ஆனால், ஆண்டோவை நீதுவுக்கும் பிடிக்கவில்லை.. இவர்களுக்குள் தகராறுகளும், சண்டைகளும் வந்துபோயின.. தினம் தினம் வீட்டிற்குள் பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே வந்தது. இப்படித்தான் சம்பவ தினத்தன்றும், விவகாரம் முற்றி உள்ளது.. இந்த சண்டையில் உச்சக்கட்ட ஆத்திரம் அடைந்த ஆண்டோ, நீதுவை சரமாரியாக அடித்து தாக்கினார்..

ஒருகட்டத்தில் ஆவேசம் அதிகமாகி, நீதுவின் கழுத்தை நெரித்துவிட்டார்.. இதில் நீது, துடிதுடித்து உயிரிழந்துவிட்டார்.. கடந்த மாதம் 27-ந்தேதி இந்த கொலையை செய்தார் ஆண்டோ.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துவிட்டதால், நீது கண்ணெதிரே சரிந்து விழுந்து உயிரிழந்ததை பார்த்து ஆண்டோ பயந்துவிட்டடார்..

ஆனால் அவர் நீதுவை கொலை செய்ததை வெளியில் யாரிடமும் சொல்லவில்லை.. பிணத்தை எங்கே கொண்டு போய் போடுவது என்றும் தெரியவில்லை.. அதனால், அந்த பிணத்துடனேயே அதே வீட்டில் 3 நாட்கள் ஒன்றாகவே தங்கி இருந்தார்..

3 நாட்களுக்கு பிறகு, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்தது.. அவரால் பிணத்துடன் அந்த ரூமுக்குள் இருக்கவே முடியவில்லை.. எனவே, அங்கிருந்து தலைமறைவானார்…

இதற்கு பிறகு, துர்நாற்றம் அதிகமாகவும், அக்கம் பக்கத்தினர் சந்தேகப்பட்டு, வீட்டுக்குள் நுழைந்து பார்த்தனர்.. அப்போதுதான், நீது இறந்து கிடப்பது தெரியவந்தது… உடனே அவர்கள் இதுபற்றி போலீசாருக்கு தகவல் தந்தனர்..

போலீசார் விரைந்து வந்து, பிணத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். அதற்கு பிறகு, ஆண்டோவை தேடி ஆரம்பித்தனர்.. எப்படியும் தப்பிச்செல்ல ரெயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளுக்குதான் அவர் வருவார் என்பதால், போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்… எதிர்பார்த்தபடியே, மும்பைக்கு தப்பி செல்ல திருவனந்தபுரம் ரெயில்வே ஸ்டேஷன் வந்தார் ஆண்டோ..

அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்… அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ஆனால், கள்ளக்காதலியை கொலை செய்து பிணத்துடன் 3 நாள் ஆண்டோ தங்கி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்பாணத்தைச் சேர்ந்த தம்பதியினர் பிரித்தானியாவில் செய்து வரும் சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

பிரித்தானியாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வந்த தம்பதிகளான சஞ்சீவ்குமார் ஆரணி பிரித்தானியாவில் பெரும் எரிபொருள் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி உலகம் முழுவதும் வியாபாரம் செய்கிறார்கள்.

1,250 பணியாளர்கள் இவர்களது நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். உலகின் பல்வேறு நாடுகளில் 11 அலுவலகங்கள் இவர்களுக்கு உண்டு.

மசகு எண்ணையைச் சுத்திகரித்து (Crude oil refinery ) டீசல், பெற்றோல், மண்ணெண்ணை போன்றவற்றை பிரித்தெடுத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வழங்குவதே இவர்களது பிரதானதொழில்.

பிரித்தானியாவின் Killingholme எனும் இடத்தில் உள்ள Lindsey Oil Refinery எனும் பாரிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தையே வாங்குமளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். பிரித்தானியாவில் மொத்தமாக ஆறு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன.

Stanlow, Grangemouth, Humber, Pembroke, Prax Lindsey மற்றும் Fawley ஆகியவையே அவையாகும். இதில் யாழ்ப்பாணத்து தமிழன் சஞ்சீவ்குமாரின் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் Prax Lindsey என்பதாகும்.

2021 ஆண்டுவரை பிரான்சின் பிரபல எரிபொருள் நிறுவனமாகிய Total இன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தச் சுத்திகரிப்பு நிலையம் இப்போது இவர்களது கையில் உள்ளதாக கூறப்படுகின்றது.

1999 ஆம் ஆண்டில் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை, குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்திய இந்தத் தம்பதியினர், இன்று நாள்தோறும் 113,000 பரல்கள் எரிபொருளை உற்பத்தி செய்து உலகெங்கும் விற்கிறார்கள். இவர்களின் Turn over £8.6 billion ஆகும் என்று கூறப்படுகிறது.

மு.த்தம் கேட்ட இ.ளைஞரின் உ.தட்டை க.டித்து து.ப்பிய இ.ளம்பெண்.. பின்னர் நடந்த வி.பரீதம்!!

உத்தர பிரதேசத்தில்..

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னிடம் அ.த்துமீறிய இ.ளைஞரின் உ.தட்டை பெ.ண்ணொருவர் க.டி.த்.து து.ப்பிய ச.ம்பவம் ந.டந்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் இளைஞர் ஒருவர் இ.ளம் பெ.ண்ணிடம் அ.த்துமீறியுள்ளார். அவர் அ.ப்பெண்ணை வ.லு.க்கட்டாயமாக மு.த்தமிட மு.யன்றுள்ளார்.

அ.வரது பி.டியில் இ.ருந்து த.ப்பிக்க மு.டியாத அ.ப்பெண், கு.றித்த இ.ளைஞரின் உ.தட்டை க.டி.த்.து து.ப்.பி.யுள்ளார். இ.தனால் அந்நபர் அ.லறி து.டித்துள்ளார். இ.தனை க.வனித்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அந்த இ.ளைஞரைப் பி.டித்து பொலிஸாரிடம் ஒ.ப்படைத்தனர்.

பொ.லிஸார் அ.வ.ரை மு.தலில் ம.ருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சி.கிச்சை பெ.ற வை.த்தனர். பின்னர் அவர் கை.து செ.ய்யப்பட்டார். இதுகுறித்து பொலிஸார் கூறுகையில்,

குறித்த இளைஞர் வயல் வேலைக்கு சென்ற அப்பெண்ணை பின் தொடர்ந்துள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்றபோது அ.ப்பெண்ணை ப.லா.த்.கா.ர.ம் செ.ய்ய மு.ய.ன்றுள்ளார்.

அ.ப்போது சு.தாரித்துக் கொ.ண்ட இ.ளம்பெண் மு.தலில் மு.த்தம் கொ.டுப்பதாக கூ.றியுள்ளார். அ.தற்கு அ.வரும் ச.ரி எ.ன்று கூ.ற மு.த்தம் கொ.டுக்கும்போது உ.தட்டை க.டித்து து.ப்பியுள்ளார்.

பின்னர் அவரின் அ.லறல் ச.த்தம் கே.ட்டு அக்.கம்பக்கத்தினர் வ.ந்து கா.ப்.பாற்றியுள்ளனர். கு.றித்த பெ.ண் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது வ.ழக்குப்பதிவு செ.ய்யப்பட்டு, சி.றையில் அ.டைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர்.

2வது திருமணம் குறித்து வட்சப் ஸ்டேட்டஸ் வைத்த பெண்.. ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்!!

மதுரையில்..

மதுரையில் தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கணவர் ஒருவர் போலீஸீல் சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மதுரை கீரைத்துறையை சேர்ந்தவர் பழனி. எம்பிஏ பட்டதாரியான இவர் கல்லூரியில் ஒரு பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.

ஆனால், அந்த பெண் வேறு ஒருவருடன் திருமணம் ஆகி சென்றுவிட்டதாக தெரிகிறது. அந்த சூழ்நிலையில், பிரிந்து சென்ற பெண்ணுடைய குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் பழனி பழகி வந்திருக்கிறார்.

நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இது வீட்டினருக்கு தெரியவரவே பெண் தரப்பில் எதிர்ப்பு எழுந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் பழனியும் அவரது காதலியும் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனியாக வாடகை வீட்டில் இந்த தம்பதி குடியேறியுள்ளது. திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பழனியின் மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை தொடர்ந்து தனது மனைவியுடன் வாழ விருப்பப்படுவதாக பழனி தெரிவிக்க, இதுகுறித்து அப்பெண்ணின் வீட்டார் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இதனையடுத்து பழனியுடன் வாழ விருப்பமில்லை என காவல்நிலையத்தில் அந்த பெண் தெரிவித்ததை தொடர்ந்து சட்டப்படி விவாகரத்து பெற காவல்துறையினர் ஆலோசனை கூறியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அந்த பெண் தனது வாட்சப்பில் மறுமணம் குறித்து ஸ்டேட்டஸ் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த பழனி, தனது மனைவியை தேடி சென்றிருக்கிறார்.

அப்போது, கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த தனது மனைவியுடன் பழனி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வாக்குவாதம் கைமீறி சென்றதாகவும், தனது மனைவியை பழனி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து கீரைத்துறை காவல்நிலையத்தில் பழனி சரணடைந்திருக்கிறார்.

இந்த கொலை குறித்து காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிரிந்துசென்ற மனைவியை கொலை செய்ததாக கணவர் போலீசில் சரணடைந்த சம்பவம் மதுரை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

69 வயதில் காதலனை தேடி கரம்பிடித்த பெண்.. இனத்தால் பிரிந்த காதலை மீண்டும் புதுப்பித்த நெகிழ்ச்சியான தருணம்!!

அமெரிக்காவில்..

பிரிந்த காதலர்கள் 43 ஆண்டுகள் கழித்து சந்தித்துகொண்டு தங்கள் காதலை மீண்டும் புதுப்பித்து தற்போது திருமணம் செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஜியேனி வாட்ஸ் என்ற பெண் 43 ஆண்டுகளுக்கு முன்னர் கல்லூரி படித்து வரும்போது அங்கு ஸ்டீபன் என்பவரை சந்தித்துள்ளார். இருவரும் தொடர்ந்து பழகிவந்த நிலையில், அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இருவரும் தினமும் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர்.

ஆனால், இந்த காதல் ஜியேனி வாட்ஸின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. ஜியேனி வாட்ஸ் காதலித்த ஸ்டீபன் கறுப்பினத்தை சேர்ந்தவர் என்பதால் ஜியேனி வாட்ஸின் பெற்றோர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் கல்லூரி முடிந்ததும் ஜியேனி வாட்ஸ்க்கு வேறு இடத்தில் வேலை கிடைத்துள்ளது. இதன் காரணமாக அவரால் ஸ்டீபனை பார்க்கமுடியாமல் இருந்துள்ளது. இதுபோன்ற காரணத்தால் ஜியேனி வாட்ஸ் தனது காதலை தியாகம்செய்து வேண்டியிருந்தது.

அதன்பின்னர் காலங்கள் பல உருண்டோடிய நிலையில், தற்போது 43 ஆண்டுகளுக்கு பிறகு ஜியேனி வாட்ஸ்க்கு தனது காதலரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியுள்ளது. அதன்பின்னர் ஸ்டீபனின் உறவுக்காரர் ஒருவரை தொடர்புகொண்டு ஸ்டீபன் குறித்து கேட்டுள்ளார்.

அப்போது அவருக்கு திருமணம் முடிந்து தற்போது விவகாரத்தாகி முதியோர் இல்லத்தில் இருக்கும் தகவல் ஜியேனி வாட்ஸ்க்கு தெரியவந்துள்ளது. உடனடியாக ஸ்டீபன் இருக்கும் அந்த முதியோர் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ஜியேனி வாட்ஸ்ஸை பார்த்ததும் ஸ்டீபனுக்கு அவரை அடையாளம் தெரிந்துள்ளது. 43 ஆண்டுகள் கழித்து சந்தித்துகொண்ட இந்த தம்பதியினர் தங்கள் காதலை மீண்டும் புதுப்பித்துக்கொண்டனர்.

தனது காதலன் ஸ்டீபனுக்கு இரண்டு முறை பக்கவாதம் ஏற்பட்டு கடுமையான உடல் நலம் பாதித்ததும், தற்போது அவருக்கு தங்க வீடு இல்லாததையும் அறிந்து கொண்ட ஜியேனி வாட்ஸ் அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த அக்டோபரில் நடந்த நிலையில் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

58 வயது பெண்ணை கடத்திய சிறுவன்… கொடுமைப்படுத்தி கொலை… சடலத்தையும் விட்டுவைக்காத கொடுமை!!

மத்திய பிரதேசத்தில்..

58 வயது பெண்ணை பழி வாங்க எண்ணிய சிறுவன், அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம், ரேவா மாவட்டத்தில் உள்ளது கைலாஷ்புரி என்ற கிராமம். இங்கு 58 வயதுடைய பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவரது கணவர் அந்த பகுதியில் வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த பெண் வீட்டுக்கு அருகே 16 வயது சிறுவனும் தங்கி இருந்துள்ளார். அவரது வீட்டில் டிவி இல்லை என்பதால், இந்த பெண் வீட்டிற்கு வந்து டிவி பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்போது ஒருநாள் பெண்ணின் வீட்டிலுள்ள செல்போன் காணாமல் போயுள்ளது. வீடு முழுக்க தேடியும் அது காணவில்லை என்பதால், சிறுவனிடம் கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவனோ, தான் திருடவில்லை என்று கூறி மறுத்துள்ளார். இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பெண், அந்த சிறுவனை அடித்து வசைபாடியுள்ளார். மேலும் இனி இந்த பக்கம் வரவே கூடாது என்று கூறி திட்டியுள்ளார். இதனால் சிறுவன் அந்த வீட்டு பக்கம் செல்வதை நிறுத்தியுள்ளார்.

ஆனால் அது கிராமம் என்பதால், ஒரு இடத்தில் நடந்த சம்பவம் ஊருக்கே எளிதில் தெரிந்துவிடும். இதனால் சிறுவன் திருடியதாக அக்கம் பக்கத்தினர் அவரை கேலி செய்துள்ளார்.

மேலும் தொடர்ந்து அவரை கிண்டல் செய்து வசைபாடியும் வந்துள்ளனர். எங்கு சென்றாலும் அதுவே தொடர்ந்து வந்ததால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சிறுவன், அந்த பெண்ணை பழி வாங்க வேண்டும் என்று எண்ணியுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் பெண்ணின் வீட்டில் யாரும் இல்லை. இதனை அறிந்த சிறுவன், பெண் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கியுள்ளார். மேலும் அவரது கை கால்களை கட்டிப்போட்டு அந்த பகுதி அருகே இருக்கும் புது கட்டட கட்டி வரும் இடத்திற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கே அந்த பெண்ணுக்கு மயக்கம் தெளிந்த பின்னர், அவரை கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண், சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதையடுத்து அந்த சிறுவன், பெண்ணை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார். மேலும் அவரது நகைகளை எடுத்துக்கொண்டு பெண்ணின் உடலை நிர்வாண கோலத்தில் அங்கேயே போட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளார்.

மறுநாள் இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.

தொடர்ந்து இதுகுறித்து விசாரிக்கையில், அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் காணாமல் போயுள்ளது தெரியவந்தது. பின்னர் அவரது போட்டோவை பெண் குடும்பத்தாரிடம் காண்பித்து விசாரிக்கையில், பக்கத்து வீட்டு பையன் என்று தெரியவந்தது.

இதையடுத்து விசாரணை துரிதப்படுத்தியபோது அந்த சிறுவன் ஒரு இடத்தில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவரை சுற்றி வளைத்து காவல்துறையினர் விசாரித்தபோது அவரை கொலை செய்தது தான்தான் என்று நடந்தவற்றை எல்லாம் ஒப்புக்கொண்டுள்ளார். இதைதொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டார்.

58 வயது பெண்ணை பழி வாங்க எண்ணிய சிறுவன், அவரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் இன்று பதிவான மாற்றம்!!

தங்கத்தின் விலை..

உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 679,886 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் சிறு வீழ்ச்சி பதிவாகி வருகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 191,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 175,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,950 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. எனினும், ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மாதங்களில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்று வரலாறு காணாத வகையில் உயர்ந்து 200,000 ரூபாவை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் கிணற்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு : கொலையா அல்லது தற்கொலையா?

முல்லைத்தீவில்..

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு தேவிபுரத்தில் துவிச்சக்க வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் திருத்துனரான,

ராயன் என்பவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இளைஞனின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்று முழுமையான தகவல்கள் என்னும் கிடைக்கவில்லை.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் கொலையா அல்லது தற்கொலையா என புதுக்குடியிருப்பு போலீசாரால் விசாரணைகள் நடைபெறுகின்றன.

நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றில் எட்டி உதைத்த அண்ணி… துடிதுடித்த பெண்.. இறுதியில் நேர்ந்த பரிதாபம்!!

சென்னையில்..

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அவதார ராமசாமி தெருவை சேர்ந்த கவுசல்யா(32), இவரது கணவர் பிரபாகரன். கவுசல்யா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இதனிடையே, கவுசல்யாவின் அண்ணன் விஜயசிம்மன் அவரது மனைவி துர்காபாய் (36) ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வருகிறது.

இந்நிலையில், துர்காபாய் மற்றும் 2 பேர் கடந்த மாதம் 17ம் தேதி கவுசல்யா வீட்டிற்கு சென்று அவரிடம், “இந்த பிரச்சனைக்கு காரணம் நீ தான்” என்று கூறி அவரை அடித்து வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த கவுசல்யா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் கவுசல்யாவை மீட்டு தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 23ம் தேதி சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால் கவுசல்யாவிற்கு பெண் குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் இறந்துவிட்டது.

இதுகுறித்து கடந்த மாதம் 29ம் தேதி கவுசல்யா தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில், “என்னுடைய குழந்தை இறந்ததற்கு காரணம் துர்காபாய் தான்” என்று புகாரளித்தார்.

அதன்படி புகரை பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணை நடத்தியதில் அந்த சம்பவம் நடந்தது உண்மை என தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து துர்காபாயை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவான பப்லு, குஷிதா பானு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே பிரசவத்தில் பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்த நபர் : சுவாரஸ்ய சம்பவம்!!

கென்யாவில்..

பலதார மணம் (Polygamy) இன்றைய உலகில் கேள்விப்படாதது அல்ல. இருப்பினும், சகோதரிகள் ஒரே ஆணுடன் திருமணம் செய்துகொள்வது மிகவும் வித்தியாசமானது.

கென்யாவில் நடந்த வினோதமான தொடர் நிகழ்வுகளில், Identical Triplets என்று சொல்லக்கூடிய ஒரே பிரசவத்தில் பிறந்த ஒரே மாதிரியான மூன்று சகோதரிகள் ஒரே நபரை திருமணம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேட், ஈவ் மற்றும் மேரி (Cate, Eve and Mary) எனும் சகோதரிகள் மூன்று பேரும் கிறித்துவ நற்செய்தி இசைப் பாடகிகளாக உள்ளனர். இவர்கள் கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ (Stevo) என்ற நபரை மணந்தனர்.

முதலில் கேட் தான் ஸ்டீவோவை சந்தித்துள்ளார். அதற்கு பிறகு வழக்கத்திற்கு மாறான இந்த உறவுக்கு வழிவகுக்கும் நிகழ்வுகள் தொடங்கியது.

ஸ்டீவோ கேட்டின் மற்ற சகோதரிகளை சந்தித்தார். சகோதரிகளுடனான தனது சந்திப்பைப் பற்றி பேசிய ஸ்டீவோ, அவர்களுடனான தனது தொடர்பு தன்னை ஒரு பெண்ணுக்காக உருவாக்கப்படவில்லை என்ற உணர்வை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

விரைவில், அந்த நபர் மூன்று சகோதரிகளையும் திருமணம் செய்து கொண்டார். பிறப்பால் பலதார மணம் கொண்டவர் என்று கூறும் ஸ்டீவோ, தனது வாழ்க்கையில் மூன்று பெண்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.

மூன்று பெண்களின் தேவைகளையும் விருப்பங்களையும் சமமாகப் பூர்த்தி செய்வது கடினமா என்று கேட்டவர்களிடம், “நான் மூன்று பெண்களை திருப்திப்படுத்துவதில் மக்கள் ஏன் சந்தேகிக்கிறார்கள், அது ஒரு பெரிய விஷயமில்லை” என்று ஸ்டீவோ கூறுகிறார்.

அவர் ஒரு கண்டிப்பான கால அட்டவணையைப் பின்பற்றுவதாகவும், அனைத்து பெண்களுக்கும் போதுமான நேரத்தை உறுதி செய்வதாகவும் அவர் விளக்கினார். திங்கட்கிழமைகள் மேரிக்கு என்றும், செவ்வாய்க் கிழமைகள் கேட் என்றும், புதன்கிழமை ஈவ் என்றும் கூறினார்.

இதற்கிடையில், சகோதரிகள் தங்கள் குடும்பத்தில் மேலும் சேர்க்க வசதியாக இல்லை. “நாங்கள் மூவரும் அவருக்குப் போதும், இன்னொருவரை அழைத்து வர அனுமதிக்கப் போவதில்லை” என்று மூவரும் கூறினர்.

ஒரே நாளில் இரண்டு பரிசுகள்.. தாயாகப்போகும் இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில், மருத்துவர்களிடம் தான் தயாகப் போகிறார் எனற செய்தியை கேட்ட இளம் பெண்ணுக்கு, கூடவே லொட்டரியில் ஜாக்பாட் அடித்த செய்தியும் இரட்டை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்தில், தன்னை துரதிர்ஷ்டவசமாக நம்பிய இந்த இளம் பெண் இப்போது லக்கி மம்மா (அதிர்ஷ்டசாலி தாய்) என்று வர்ணிக்கபடுகிறார். தனது சுய விவரங்களை வெளியிட விரும்பாத அந்த இளம்பெண், தான் தாயக போகிற செய்தியை மருத்துவர்களிடமிருந்து கேட்ட சில மணி நேரங்களிலேயே, தனக்கு மற்றோரு அதிர்ஷ்ட வெற்றி கிடைத்திருப்பதை அறிந்தார்.

தனது குழந்தையின் வருகையால் தனக்கு இல்லாத அதிர்ஷ்டம் முழுமையாக வந்து சேரும் என நம்புகிறாள் அந்த இளம் பெண். அவருக்கு லொட்டரி அடித்தாலும், தனது மற்ற விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. லொட்டரியில் கூட அதிர்ஷ்டசாலி அம்மா என்று எழுதப்பட்டுள்ளது.

அந்த பெண்ணுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. இலங்கை பணமதிப்பின்படி, 1 கொடியே 84 லட்சம் ரூபாயாக்கு மேல் வரும். இதனால், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என இளம்பெண் முடிவு செய்துள்ளார்.

ஒரே நாளில் இரண்டு பரிசுகள் கிடைத்ததாக அந்தப் பெண் கூறுகிறார். அது உண்மையிலேயே அற்புதமான நாள். தனக்கு லொட்டரி அடித்ததை, நம்ப முடியவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த பணத்தை ஒரு சிறந்த விடுமுறைக்கு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறினார். மீண்டும் தாயாகப் போகிறேன் என்று தெரிந்த நாளில் லாட்டரி அடித்ததை மறக்க முடியாது என்று அவர் கூறினார்.

பாட்டியே பேத்தியை கொன்ற கொடூரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் சூரமங்கலத்தை அடுத்த போடிநாயக்கன்பட்டி பகுதியைச் சார்ந்தவர்கள் விமல் குமார் மற்றும் மேகலா தம்பதியினர் இவர்களுக்கு நான்கு வயதில் மதுபிரித்திகா என்ற பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் காரணமாக மேகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இவரது தாயார் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டு, புத்தி சுவாதீனம் இல்லாமல் இருந்திருக்கிறார். தனது குழந்தையின் துணிகளை காயவைப்பதற்காக மாடிக்கு சென்றுள்ளார் மேகலா. அப்போது தனது நான்கு வயது குழந்தையின் அலறல் சத்தம் கேட்கவே பதறி அடித்து ஓடி வந்துள்ளார்.

அப்போது குழந்தை அதன் பாட்டியின் அறையில் இருந்திருக்கிறது. தனது தாயாரின் அரை கதவை திறக்க முயன்றுள்ளார் மேகலா. கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்ததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை கூப்பிட்டு கதவை உடைத்து பார்த்தபோது மேகலாவின் தாயார் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

இதனை சற்றும் எதிர்பாராத அவர் தனது தாயிடம் இருந்து குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று இருக்கிறார். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்று பரிசோதித்துப் பார்த்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தையின் கழுத்தில் காணப்பட்ட நகக்கிரல்களை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல் துறையினர் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் அந்தப் பாட்டியின் இன்னொரு மகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததிலிருந்து அப்பன் மணி புத்தி சுவாதீனம் இல்லாமல் இருப்பதாகவும் அங்கிருக்கும் ஒரு தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

மகன் உயிரிழந்த அதே நாளில் மகளுடன் சேர்ந்து தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

விருதுநகரில்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் சாலமுத்து – பாண்டி தேவி தம்பதியினர். இவர்களுக்கு மகாராஜன், புவனேஸ்வரி என்ற இரு பிள்ளைகள் இருந்தனர்.

மகாராஜன் மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தம்பதியினர் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிதேவியின் கணவர் சாலமுத்து உயிரிழந்தார்.

இதனால் பாண்டிதேவி மாற்றுத்திறனாளி மகனையும், பள்ளிப் படிப்பில் ஈடுபட்டு வரக்கூடிய மகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் மிகுந்த சிரமப்பட்ட நிலையில் அரசு மூலம் உதவி கோரியுள்ளார்.

தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது விருதுநகரில் நடைபெற்ற நமது தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மகனுடன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்திருந்தார். தொடர்ந்து திமுக சார்பாக 5 லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தவுடன் சித்துராஜபுரம் பகுதியில் அங்கன்வாடி ஆசிரியராக பாண்டிதேவி பணியமர்த்தப்பட்டார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளி மகன் இதே நாளில் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து கணவன் மற்றும் மகன் இறந்த நிலையில் பாண்டிதேவி மிகுந்த மனவேதனையுடன் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனது மகன் இறந்த நாளான இன்று தாய் பாண்டிதேவி, விக்னேஸ்வரி இருவரும் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சி கொண்டுள்ளனர். நீண்ட நேரம் கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சிவகாசி நகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது மகன் இறந்த அதே நாளில் தாய் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஏற்பாட்டில் பெற்றோருடன் பிரச்சனை… கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் நகருக்குட்பட்ட காகுப்பம் சாலையில் உள்ள நாவலர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் டிராவல் ஏஜென்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராஜலட்சுமி, ஜோதி என 2 மகள்களும் உள்ளனர். ராஜசேகரின் முதல் மகளான ராஜலட்சுமிக்கு திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார்.

2வது மகளான ஜோதி (21) , விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ வரலாறு முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று காலை ராஜேசேகர் தனது மனைவி விஜயாவுடன் வெளியே சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த ஜோதி தனது வீட்டின் கதவினை உள்பக்கமாக தாழிட்டு கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி திடீரென தீ வைத்து கொண்டார்.

இதில் ஜோதியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிச்சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது ஜோதி தீயில் எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பொதுமக்கள் காப்பாற்ற முயன்றும் முடியாத நிலையில் பலரது கண்முன்பே தீயில் உடல் கருகி கல்லூரி மாணவி ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் விழுப்புரம் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயில் கருகி உயிரிழந்த கல்லூரி மாணவி ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து விழுப்புரம் நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி ஜோதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் திருமண ஏற்பாடு செய்வதில் பெற்றோருடன் ஜோதி தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், அதன் காரணமாகவே மனமுடைந்து கல்லூரி மாணவி ஜோதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் தற்கொலைக்கான முழு காரணம் என்ன என்பது குறித்து விழுப்புரம் நகர போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவி ஜோதி தீயில் எரிந்து உயிரிழக்கும்போது,

அங்கிருந்தவர்களால் செல்போனில் எடுக்கப்பட்ட பதைபதைக்கவைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

மொட்டை மாடியில் காதலியுடன் சந்திப்பு… சட்டென வந்த காதலியின் தாய்.. பதறிப்போன மாணவன்.. இறுதியில் நடந்த சோகம்!!

சேலத்தில்..

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே உள்ளது சின்னக் கொல்லப்பட்டி. இந்த பகுதியில் தனியார் சட்டக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தனியார் சட்ட கல்லூரி அருகே உள்ள வீடுகள் மற்றும் அப்பார்ட்மென்ட்களில் வாடகை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி அருகே உள்ள காமராஜர் நகரை சேர்ந்த சஞ்சய் (18) என்பவர் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சஞ்சயின் பெற்றோர் வங்கிகளில் பணியாற்றி வருகின்றனர்.

சஞ்சையும், மேலும் சில மாணவர்களும் தனியார் சட்ட கல்லூரி அருகே மாடி வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். சஞ்சயுடன் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது மாணவியும் படித்து வருகிறார்.

மாணவி தனியார் சட்டக் கல்லூரி அருகே உள்ள ஒரு அப்பார்ட்மெண்ட்டில் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். சஞ்சையும், அந்த மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று இரவு 1 மணியளவில் சஞ்சய் அவரது நண்பர்களிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு அவரது காதலியை பார்க்க அவரது வீட்டிற்கு சென்றார். பிறகு காதலிக்கு செல்போனில் மாடிக்கு வருமாறு தெரிவித்து மாடிக்கு சென்றார்.

காதலன் அழைத்ததால் மாணவியும் அங்கு சென்று பேசிக்கொண்டு இருந்ததாக தெரிகிறது.அப்போது மாணவியின் தாயார் அவரை தேடிக்கொண்டு மாடிக்கு வந்துள்ளார்.

அப்போது காதலியின் தாயாரை சஞ்சய் பார்த்ததால் அதிர்ச்சிடைந்தார். பிறகு அவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்துள்ளார். ஆனால் இருட்டில் மாடி படி இருக்கும் இடம் தெரியாததால் மாடியிலிருந்து சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் சஞ்சய்க்கு தலையில் பலத்த அடிப்பட்டு அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனே கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா மற்றும் கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குமாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவன் இறந்ததால் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு மாணவி மற்றும் அவரது தாயார் அழைத்து வரப்பட்டு,

தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. சேலத்தில் தனியார் சட்ட கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெற்றோர் சொன்ன ஒரு வார்த்தைக்காக 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய நபர்!!

உகாண்டாவில்..

உகாண்டாவிலுள்ள ஆணொருவர் சுமார் 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இருக்கும் காலக்கட்டங்களில் ஒரு திருமணம் செய்துக் கொள்ளவே கஷ்டப்படுகிறார்கள். இதன் மூலம் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு, படிப்பு என பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா எனும் 68 வயதான நபர், சுமார் 12 ஊர் பெண்களை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவர்களின் மூலம் அவருக்கு 102 பிள்ளைகள் மற்றும் 578 பேரப்பிள்ளைகளும் கிடைத்து புதிய கிராமமே உருவாகி உள்ளது. இதனை தொடர்ந்து மனைவிமார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உணவு, கல்வி, உடுத்த உடை போன்ற,

அடிப்படை தேவைகள் பற்றாக்குறையால் இரண்டு மனைவிகள் இவரை தனியாக விட்டு சென்றாகவும், இன்னும் மூன்று மனைவிகள் பக்கத்து ஊரில் வசித்து வருகிறதாகவும் அங்கிருக்கும் மனைவிகள் தெரிவித்துள்ளார்கள்.

மூசா சிறு வயதில் இருக்கும் போது அவரின் பெற்றோர்கள் இவரை தன்னுடைய இனத்தை பெருக்குமாறும், இதற்கு நீ நிறைய திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இதனால் தான் இவர் அடுத்தடுத்து பல திருமணங்களை செய்துள்ளார். மனைவிகள் மூலம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இவர்களை கவனிக்க மூசாவேிற்கு முடியாத காரணத்தினால் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லையாம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்தத பலர் “ ஒரு குடும்பத்தை பார்க்கவே காசு இல்லாத, நிலையில் இவ்வளவு மனைவிமார்களா? என அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.