தனது 2 கர்ப்பிணி மனைவிகளிடம் 3வது மனைவியை அறிமுகம் செய்த பிரபல யூடியூபர்.. இறுதியில் நடந்த கலவரம்!!

யூடியூபர் அர்மான்..

யூடியூபர் அர்மான் மாலிக் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குறிப்பாக தனது வீடியோக்கள் மற்றும் இரு மனைவிகளால் அவர் பிரபலமடைந்தார். அர்மான் மாலிக்-க்கு பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரு மனைவிகள் உள்ளனர்.

அன்மையில் தனது இரு மனைவிகளின் புகைப்படங்களை அர்மான் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் அவரது இரு மனைவிகளும் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது.

அதில், அர்மான் மாலிக் தனது மூன்றாவது மனைவியை, கர்ப்பிணி மனைவிகள் இருவருக்கும் அறிமுகம் செய்வதும், அதன்பிறகும் நடப்பபதும் தான் வைரலாகி வருகிறது.

பயலும் கிருத்திகாவும் வீட்டின் சோபாவில் அமர்ந்த போது அர்மான் மாலிக் மாலை அணிந்தபடி வருகிறார். அப்போது, கிருத்திகாவையும் பயலையும் கண்களை மூடச் சொன்னார்.

பின்னர் அர்மான் மாலிக் தனது மூன்றாவது மனைவி லக்ஷ்யாவை வீட்டிற்குள் அழைத்து வந்து, பயல்-கிருத்திகாவை அறிமுகப்படுத்தி, அவர்கள் திருமணம் செய்து கொண்டதாகக் கூறுகிறார்.

இதனால் பார்த்து அதிர்ச்சி அடைந்த பயலும் கிருத்திகாவும் பின்னர் ஆத்திரமடைந்தனர். அப்போது அர்மான் மாலிக் அவர்களிடம் இது ஒரு பிராங்க் என்றார். ஆனால் அவரது இரு மனைவிகளும் அதனை நம்பவில்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் அதிசய பெண்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!!

அமெரிக்காவில்..

இந்த உலகில் வாழும் அனைவருக்கும் வெளியே சொல்லமுடியாத ஏதாவது ஒரு நல்ல செயல் அல்லது கெட்ட பழக்கம் இருக்கும். அந்த வகையில் இந்த பெண்ணுக்கு இருந்த பழக்கம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. அந்த வகையில், மெத்தையை கடித்து சாப்பிட்டு பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.

My Strange Addiction என்ற நிகழ்ச்சிக்கு அமெரிக்காவை சேர்ந்த ஜெனிஃபர் என்ற பெண் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் சுமார் 20 ஆண்டுகளாக மெத்தையை சாப்பிடும் விநோத பழக்கத்திற்கு தான் அடிமையாகியிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்த மேலும் பல தகவல்களை கூறிய அப்பெண், ஐந்து வயது இருந்தபோது, தற்செயலாக கார் சீட்டில் இருக்கும் ஸ்பாஞ்சுகளை சாப்பிட ஆரம்பித்துள்ளார். ஆனால், அதன் சுவை பிடித்துவிட பின்னர் அவர் அதற்கு அடிமையாவார் என்று எதிர்பார்க்கவில்லை.

தொடர்ந்து மெத்தைகளில் உள்ள ஸ்பாஞ்சுகளை உண்ணத் தொடங்கினார். ஒரு நாளைக்கு ஒரு சதுரடி மெத்தையை அவரால் சாப்பிட முடியும். தன் மெத்தையை சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு முறை, தனது தாயின் மெத்தையை சாப்பிடத் தொடங்கியுள்ளார். மேலும் இவர் அந்த மெத்தையை எப்படி சாப்பிடுவார் என்றும் விவரித்திருந்தார்.

மெத்தையுடன் மயோனைஸோ அல்லது வெண்ணெயோ சேர்த்து சாப்பிட தனக்கு பிடிக்காது. நான் சாப்பிடும் ஸ்பாஞ்சில் கெட்ட வாடை அடித்தால் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன், என்றும் ஜெனிஃபர் கூறுகிறார்.

மெத்தையை சாப்பிட்டதால் இதுவரை அவருக்கு உடல்நலக் குறைவு எதுவும் இதுவரை ஏற்பட்டதில்லை. ஆனால், இந்த நிலை தொடர்ந்தால், வெகு சீக்கிரத்தில் அவரது கல்லீரல் பாதிக்கப்படும் மற்றும் குடல் அடைப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

வவுனியாவில் வடக்கு கிழக்கு பேரணிக்கு ஆதரவாக ஊர்வலம்!!

ஊர்வலம்..

அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று (05.02.2023) ஊர்வலமொன்று இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக முன்றலிலிருந்து நேற்று ஆரம்பமாகிய பேரணி இரணைமடுவில் இருந்து இன்று முல்லைத்தீவை நோக்கி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

தமிழர்களின் அடிப்படை உரிமைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்பவற்றை வென்றெடுக்கும் நோக்கில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சமூக அமைப்புகள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஒன்றிணைந்து இந்த பேரணியை ஆரம்பித்திருந்த நிலையில்,

இன்று வவுனியாவில் இருந்து பேரணியில் இணைந்து கொள்ள வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து புதிய பேரூந்து நிலையம் வரை ஊர்வலமாக சென்று அங்கிருந்து பேருந்தில் பேரணிக்கு சென்றனர்.

இதன்போது முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

கிளிநொச்சியில் சத்யசாயி சர்வதேச நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்யசாய் சேவா நிலையம்!!

சத்யசாய் சேவா நிலையம்

இலங்கை சத்யசாயி சர்வதேச நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்யசாய் சேவா நிலையம் நாளை ஞாயிற்றுக்கிழமை (05.02.2023) வைபவ ரீதியாக கிளிநொச்சி ஜெயந்திநகரில் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.

“எல்லோருடனும் அன்பாக இரு எல்லோருக்கும் சேவைசெய்” என்று பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் கோட்பாட்டினை பின்பற்றி உலகம் முழுவதும் பல பக்தர்கள் சத்ய சாயி பாபாவின் போதனைகளை பின்பற்றி பல்வேறு சேவைபணிகளை ஆற்றிவருகின்றார்கள்.

குறிப்பாக இலங்கையில் சத்யசாயி சர்வதேச நிறுவனம் ஐந்து பிராந்தியங்களில் அதாவது வடபிராந்தியம், வடமத்திய பிராந்தியம், மத்திய பிராந்தியம், தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தனது சேவைகளை ஆற்றிவருகின்றது.

அந்தவகையில் வடமத்திய பிராந்தியத்தில் வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சத்யசாயி நிறுவனம் பல்வேறுபட்ட கல்வி, ஆன்மீகம் மற்றும் சேவைதிட்டங்களை பல நெருக்கடியான சூழ்நிலைகளிலும் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சிறைச்சாலையில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெண் கைதி ஒருவர் உட்பட ஐவர் விடுதலை!!

ஐவர் விடுதலை..

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதி ஒருவர் உட்பட ஐவர் விடுதலை செய்யப்பட்டனர்.

75 ஆவது சுதந்திர தினத்தையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் சிறைக்கைதிகள் இன்று (04.02.2023) விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண் கைதி மற்றும் நான்கு ஆண் கைதிகள் என ஐந்து கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார், பிரதான சிறைச்சாலை பிரதாணி சந்திரசிறி உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

நண்பர்களுடன் விளையாடச் சென்ற 12 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

12 வயது சிறுவன்..

உஹன – குமரிகம பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் நண்பர்களுடன் புளி பறிக்கச்சென்ற போது நேற்று இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கித்துல் மரத்தில் இருந்த தேன்கூட்டை பருந்து ஒன்று தாக்கி அதன் ஒரு பகுதியை உடைத்ததாகவும், அதன் ஒரு பகுதி நடந்து சென்ற சிறுவனின் மீது விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

தனது பிள்ளைக்காக ஆசையாக சென்ற இளம் தந்தை பரிதாபமாக பலியான சோகம்!!

ஹொரனையில்..

ஹொரனையில் இடம்பெற்ற கோர விபத்தில் இளம் குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோனாபொல கும்புக பிரதேசத்தில் பாதுகாப்பற்ற வீதித் தடையில் கார் மோதி உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனது குழந்தையின் பால் தானத்துக்காக பூக்களுடன் சொகுசுக் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் கோனாபொல கும்புக கிழக்கில் வசிக்கும் 37 வயதுடைய நனோ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் இன்று காலை தனது மூன்று மாத குழந்தைக்கான பால் தானத்திற்கான பூக்களை எடுத்து வருவதற்காக பிலியந்தலை பகுதிக்குச் சென்று விட்டு வீடு திரும்பும் போது வீதித் தடுப்பில் கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் பின்னர் காரின் இரண்டு காற்று பலூன்கள் இயக்கப்பட்டு சுமார் 100 மீற்றர் முன்னோக்கி இழுத்து நிறுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காரின் காற்று பலூன் இயக்கப்பட்டவுடன், அதிலிருந்து வீசப்பட்ட பிளாஸ்டிக் துண்டு அவரது கழுத்தை வெட்டியதில் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

இச் சம்பவம் இவரின் குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளதுடன் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மொரகஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

என் மனைவி அப்படி சொன்னதை நம்ப முடியவில்லை… அதிர்ச்சியில் கணவன்!!

குஜராத்தில்..

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் திருமணம் செய்த கொண்டதாக தகவல் வெளியாகி இருந்த சூழலில், அந்த சம்பவத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது.

தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வினித் என்ற இளைஞர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த கிருத்திகாவும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.

இதனிடையே, வினித் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் காதலித்து பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி திருமணமும் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இதனையடுத்து, கிருத்திகாவின் வீட்டார், வினித் வீட்டிற்கு வந்து கிருத்திகாவை தூக்கி சென்றதாகவும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இது பற்றி வினித் தரப்பில் புகார் ஒன்றும் போலீசாரிடம் அளிக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் பற்றி விசாரிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அப்படி இருக்கையில், கிருத்திகாவின் வீடியோ ஒன்று வெளியானது. அதில், தான் பாதுகாப்பாகவும், நன்றாகவும் இருப்பதாகவும் கிருத்திகா கூற, ஏற்கனவே தனக்கு திருமணம் ஆனதாகவும் தெரிவிக்கிறார்.

என்னை பற்றி ஏதாவது பிரச்சனை அங்கே ஏற்பட்டால் அது வேண்டாம் என்றும் இது தொடர்பாக யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், இந்த விஷயத்தில் யாருக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறும் கிருத்திகா, நடந்தது அனைத்தும் தன்னுடைய விருப்பத்துடன் தான் நடந்தது என்றும் கூறி உள்ளார்.

அதே போல, கிருத்திகாவுக்கு வேறொருவருடன் திருமணம் ஆனது பற்றியும் அவரது தந்தை சான்றிதழ் ஒன்றை சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், கிருத்திகா வீடியோவில் பேசியுள்ளது குறித்து வினித்தும் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

“ஜனவரி 20 ஆம் தேதி நாங்க கல்யாணம் பண்ணோம். அதுக்கு முன்னாடியே என் வீட்டுல இருந்து பிரச்சனைகள் வரலாம்ன்னு கிருத்திகா சொன்னாங்க. அதுனால போலீஸ் கம்பளைண்ட் எல்லாம் குடுத்திருந்தோம். அதுக்கப்புறம் அவங்கள கடத்திட்டு போய்ட்டாங்க. அவங்க கடத்திட்டு போய் ஒரு வாரம் ஆகுது.

இப்ப என் மனைவி கிருத்திகா பேசுற மாதிரி வீடியோ ஒண்ணு ரிலீஸ் பண்ணி இருக்காங்க. எனக்கு அவங்க சொன்னது எதுலையுமே நம்பிக்கை இல்ல. ஏன் 1 வாரம் கழிச்சு பண்ணனும்.

அந்த விஷயம் உண்மைன்னா, அவங்க போலீஸ்க்கோ, கோர்ட்க்கோ நேரா போயிருக்கலாம். இங்க தனிப்படை போலீஸ் வந்து தேடிட்டு இருக்காங்க. இன்னும் அவங்க சிக்கல. இதுல இருந்து தப்பிக்க அப்படி பண்ணி இருப்பாங்களோன்னு தோணுது” என தெரிவித்துள்ளார்.

கேம் விளையாட 6 வயது மகனிடம் கைத்தொலைபேசியை கொடுத்த தந்தைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

கைத்தொலைபேசி..

இன்றைய காலத்தில் குழந்தைகள் ஸ்மார்ட் போன் மீது அதிக மோகம் கொண்டுள்ளனர். சிறு குழந்தைகள் போனில் வீடியோக்களைப் பார்க்கவும், கேம் விளையாடவும் கேட்டால் பெற்றோர்கள் எளிமையாக கொடுத்து பில்லைகளை கெடுப்பதை பார்க்கிறோம்.

அப்படி கொடுக்கும்போது, கேம் விளையாடுவது மட்டுமில்லால், மொபைலில் இருக்கும் அனைத்து செயலிகளும், விடயங்களும் குழந்தைகளுக்கு அத்துபடியாகிவிடுகிறது.

அப்படி ஒரு அப்பா தனது 6 வயது குழந்தைக்கு அரை மணி நேரம் கேம் விளையாடுவதற்காகத் தனது போனை வழக்கமாகக் கொடுத்துள்ளார். அனால் அதுவே அவருக்கு வினையாக மாறியது.

சிறுவன் கேம் விளையாடுவதற்குப் பதிலாக, உணவு டெலிவரி செயலியைத் திறந்து பல்வேறு உணவகங்களிலிருந்து ஏராளமான உணவை ஆர்டர் செய்தான், இதன் விளைவாக $1000 (இலங்கை பணமதிப்பில் ரூ. 3.7 லட்சம்) பணம் தந்தையின் கணக்கிலிருந்து பறிபோனது.

இந்த சம்பவம் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் Chesterfield நகரத்தில் சனிக்கிழமை நடந்தது. சிறுவன் Grubhub எனும் உணவு விநியோக பயன்பாட்டிலிருந்து அந்த உணவை ஆர்டர் செய்தான். அந்த நேரத்தில், அவரது தந்தை Keith Stonehouse, மகன் போனில் விளையாடுவதாகக் கருதினார்.

சிறுவன் ஒவ்வொரு ஆர்டருக்கும் 25% டிப்ஸ் கொடுத்தான்! வீட்டு வாசலில் மணி அடித்து, ஒன்றன் பின் ஒன்றாக உணவு விநியோகம் வந்தபோதுதான், ஏதோ நடந்து கொண்டிருப்பதை கீத் உணர்ந்தார்.

மதலில் ஹேப்பி’ஸ் உணவகத்தில் இருந்து சில இறால் உணவு வந்தது, பிறகு ஷவர்மாவில் இருந்து சிக்கன் பிடா சாண்ட்விச்கள் மற்றும் லியோவின் ஐஸ்கிரீம். ஜம்போ இறால், சாலடுகள், சில்லி சீஸ் பிரைஸ், ஐஸ்கிரீம், திராட்சை இலைகள், சோறு மற்றும் பலவற்றை உள்ளடக்கிய உணவுகள் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தன!

ஒரு கார் வந்தது, அதிலிருந்து ஒரு பெரிய பார்சல் இறக்கிவைக்கப்பட்டு, ஓட்டுநர் தந்நு அழைத்ததாக கீத் கூறினார். அவரது மனைவி ‘A Slice of Heaven Cakes” எனும் பேக்கரியை நடத்துவதால், யாரோ அவளிடமிருந்து அவர்கள் பயன்படுத்திய அலங்காரப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர் என்று நினைத்தேன்.

ஆனால், பிறகு தான் தெரிந்தது, அது Leo’s Coney Island-லிருந்து வந்தது. எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. தொடர்ந்து இதேபோல் கார்கள் அடுத்தடுத்து வந்துகொண்டே இருந்தன, அதில் பார்சல்கள் வந்துகொண்டே இருந்தன.

எதேச்சையாக நான் எனது வங்கிக் கணக்கைப் பார்த்தேன், அதிர்ச்சிச்சி அடைந்தேன் என்று கீத் கூறினார். சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, Grubhub ஆப் கீத் ஸ்டோன்ஹவுஸ் குடும்பத்தை அணுகி அவர்களுக்கு $1,000 பரிசு அட்டையை வழங்கியது.

‘என் அம்மாவை கண்டுபிடிச்சு தாங்க..’ கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த கன்றுக்குட்டி..!

விழுப்புரத்தில்..

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கொட்டியாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவர், பசுமாடு, கன்றுக்குட்டியை தனக்கு சொந்தமாக உலகலாம்பூண்டி கிராமத்திலுள்ள மாட்டு கொட்டகையில் மாலை கட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரவு மீண்டும் மாட்டு கொட்டகைக்கு சென்ற போது மாட்டுக்கொட்டகையில் இருந்த பசு காணாமல் போய் இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் கன்றுக்குட்டி நின்றுள்ளது.

இதனையடுத்து எங்கு தேடியும் பசுமாட்டை காணவில்லை. பின்னர் பசுவை மர்ம நபர்கள் திருடி சென்றது குறித்து கஞ்சனூர் காவல் நிலையத்தில் கோவிந்தன் கடந்த 19ம் தேதி புகார் அளித்தார்.  ஆனால், புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கை எடுக்காமல், பசுவை மீட்டு தராமல் கடந்த 14 நாட்களாக காலம் தாழ்த்தி வருவதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, தாய் பசுவை தேடி கண்டு பிடித்து தரக்கோரி கோவிந்தன் மற்றும் அவரது மனைவி சுபாஷினி நூதன முறையில் பசுவின் கன்றின் கழுத்தில் அம்மாவை கண்டுபிடித்து தரக்கோரி பதாகையை கழுத்தில் அணிய வைத்து கன்றுடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

கன்று குட்டியுடன் வந்த கோவிந்தனிடம் விரைவில் தாய் பசுவை கண்டுப்பிடித்து தருகிறோம் என கூறியதை தொடர்ந்து அவர் தனது கன்று குட்டியை அழைத்து சென்றார்.

எனினும், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரியிடம் அவர்கள் புகார் மனு அளித்தனர். இச்சம்பவத்தால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதை நீ கட்டாயம் செய்ய வேண்டும்… தொடர் தொல்லையால் இளம் பெண் மருத்துவர் எடுத்த விபரீத முடிவு!!

இந்தியாவில்..

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பிரியங்ஷி திரிபாதி. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள த.னியார் ம.ருத்துவமனையில் ப.ல் ம.ருத்துவராக ப.ணியாற்றி வ.ருகிறார்.

இ.வ.ரு.ட.ன் ப.ணி.பு.ரி.யு.ம் ச.க ம.ரு.த்.து.வ.ரா.ன சு.மி.த், பெ.ண் ம.ரு.த்.து.வ.ரை தொ.ட.ர்.ச்.சி.யா.க தொ.ல்.லை கொ.டு.த்.து வ.ந்.து.ள்.ளா.ர்.

த.ன்.னை கா.த.லி.க்.க வே.ண்.டு.ம் தி.ரு.ம.ண.ம் செ.ய்.து கொ.ள்.ள வே.ண்.டு.ம் எ.ன பி.ரி.ய.ங்.ஷி.யை சு.மி.த் து.ன்.பு.று.த்.தி.ய நி.லை.யி.ல் பெ.ண் ம.ரு.த்.து.வ.ர் கா.த.லை ஏ.ற்.க.வி.ல்.லை.

இதோடு பிரியங்ஷியை பு.கை.பி.டி.க்.க வே.ண்டும், ம.து அ.ரு.ந்.த வே.ண்டும் எ.ன சுமித் க.ட்..டாயப்படுத்தியதாகக் கூ.றப்படுகிறது. சுமித்தின் பேச்சுக்கு பெ.ண் ம.ருத்துவர் செவி கொ.டுக்காததால் ஆ.த்.தி.ரத்தில்,

பெ.ண்ணின் ந.ட.த்தையை ப.ற்றி சுமித் அ.வ.தூ.று ப.ர.ப்பினார். இ.தனால் ம.ன.மு.டை.ந்.த பிரியங்ஷி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். இ.ச் ச.ம்பவம் ஜனவரி 25ஆம் திகதி ந.டந்துள்ளது.

இ.து கு.றித்து பெ.ண் ம.ருத்துவரின் பெ.ற்றோர் கொ.டுத்த பு.கா.ரி.ல் பொ.லிசார் வி.சாரணையை த.ற்போது து.ரி.தப்படுத்தியுள்ளனர்.

85 வயது முதியவரை காதல் திருமணம் செய்த 24 வயது இளம்பெண் : சுவாரஸ்ய காதல் கதை!!

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் 24 வயது பெண்ணொருவர் 85 வயது முதியவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். மிஸிஸிப்பியின் ஸ்டார்வில்லேவைச் சேர்ந்த இளம் பெண் மிராக்கிள் போக்(24). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு சலவைக் கடையில் பணிபுரிந்துள்ளார்.

அப்போது சார்லஸ் போக் (85) என்ற நபரை சந்தித்துள்ளார். இருவரும் நட்பாக பழகத் தொடங்கியுள்ளனர். தனது தாத்தாவை விட சார்லஸ் 10 வயது மூத்தவர் என்பதை மிராக்கிள் பின்னாளில் அறிந்து கொண்டார். இருவருக்கும் வயது வித்தியாசம் 61 ஆகும்.

2020ஆம் ஆண்டில் சார்லஸ் தனது காதலை மிராக்கிளிடம் தெரிவித்துள்ளார். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த கோடையில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

தனது கணவர் குறித்து ஊடகத்திடம் மிராக்கிள் கூறுகையில், ‘நாங்கள் ஒருவரையொருவர் எங்கள் பிறந்த திகதியை கேட்டபோது உரையாடலில் கண்டுபிடித்தேன். அவர் 1937யில் பிறந்தார் என்று கூறினார். நான் அவருடைய வயதைக் குறிப்பிடவில்லை. அது எப்படி இருந்தது என்பதைப் பார்க்க விரும்பினோம்.

அவர் 100 அல்லது 55 வயதாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை, அவருக்காக நான் அவரை விரும்புகிறேன். அவர் மிகவும் அழகாக இருப்பதால் அவருக்கு வயது 60 அல்லது 70 இருக்கலாம் என்று நான் நினைத்தேன்.

அவர் எப்போதும் எழுந்து சுறுசுறுப்பாக இருப்பார்’ என தெரிவித்துள்ளார். தங்கள் உறவுக்கு தனது குடும்பம் தொடக்கத்தில் இருந்தே ஆதரவாக இருந்ததாக மிராக்கிள் குறிப்பிட்டார்.

6 வருடங்களாக குழந்தையும் இல்லை… கணவனும் சரியில்லை.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்!!

செங்கல்பட்டில்…

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (33), இவருக்கும், அங்காளம்மன் குப்பத்தை சேர்ந்த சுபா(28) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, வரதட்சணை கேட்டு ஸ்ரீதர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று இரவும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஸ்ரீதர் வெளியில் சென்றிருந்தார்.

இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய ஸ்ரீதர் அறையின் உள்ளே சென்று பார்த்தபோது சுபா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக ஸ்ரீதர் தனது மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

இதனால் சந்தேகமடைந்த சுபாவின் பெற்றோர் தனது மகளின் தற்கொலையில தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி கல்பாக்கம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்க வந்து சுபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சுபாவின் உறவினர்கள் கூறுகையில், “திருமணம் ஆன நாள் முதலே இருவருக்கும் இடையே வரதட்சணை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவும் அதேபோல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரத்தில் சுபாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தனது மனைவியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஸ்ரீதர் நாடகமாடுகிறார்” என குற்றச்சாட்டினர். மேலும் கணவன் ஸ்ரீதரை கைது செய்யாமல் சுபாவின் உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் கூறினர்.

இதையடுத்து, செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜீவனா சம்பவ இடத்திற்கு வந்து சுபாவின் உடலை பார்வையிட்டு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். இதையடுத்து சுபாவின் உடலை பெற்றுக்கொண்டு உறவினர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாய்க்கு வளைகாப்பு… 9 வகையான சாப்பாடுடன் விருந்து.. மொய்ப்பணம் வைத்து வாழ்த்திய உறவினர்கள்!!

நாமக்கல்லில்..

நாமக்கல் அருகே தங்களது வளர்ப்பு நாய்க்கு வளைகாப்பு நடத்தி அனைவரையும் ஆச்சரியப்பட செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியர். இந்நிலையில், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

பொதுவாக பலருக்கும் செல்லப் பிராணிகளை வளர்ப்பது பிடித்திருக்கும். அந்த வகையில் பலரும் நாய், பூனை உள்ளிட்டவற்றை தங்களது வீட்டில் வளர்த்து வருகின்றனர்.

இந்த பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தே மனிதர்களிடத்தில் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அந்த வகையில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான இணைப்பு மிக நீண்ட வரலாற்றைக் கொண்டதாகும். தங்களது வீட்டில் வளரும் நாயை குடும்பத்தில் ஒருவராகவே சிலர் கருதுவதும் உண்டு.

அப்படியானவர் தான் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் குச்சிக்காடு பகுதியை சேர்ந்த ரமேஷ். 35 வயதான இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி தேன்மொழி.

இவர்கள் தங்களது வீட்டில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் நாயை வளர்த்து வருகின்றனர். ஆண் நாய்க்கு பைரவன் எனவும் பெண் நாய்க்கு பைரவி எனவும் இந்த தம்பதி பெயர்சூட்டியிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் பைரவி கர்ப்பம் தரித்திருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த ரமேஷ் – தேன்மொழி தம்பதி அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து பைரவிக்கு வளைகாப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த விழாவிற்கு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ரமேஷ்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பைரவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. அப்போது புத்தாடை, வளையில், சந்தனம், குங்குமம் ஆகியவை பைரவிக்கு அணிவிக்கப்பட்டு ஒன்பது வகையான உணவுகளை தலைவாழை இலையில் பைரவிக்கு அளித்திருக்கின்றனர்.

மேலும் இந்த விழாவிற்கு வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் மலர் தூவி பைரவியை வாழ்த்தி இருக்கின்றனர். அத்துடன் உறவினர்கள் மொய் செலுத்தி தங்களது அன்பை பரிமாறி இருக்கின்றனர். தங்களது வளர்ப்பு நாய்க்கு தம்பதியர் ஒருவர் வளைகாப்பு நடத்திய நிகழ்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

தொடர்ந்து நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன்… பொறுமை இழந்த மனைவி எடுத்த விபரீத முடிவு!!

ராணிப்பேட்டையில்..

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ஏழுமலை. இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களது மகன் சரவணன் கல்லூரி பட்டப்படிப்பு படித்து வரும் நிலையில், மகள் நந்தினி திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

கட்டிட தொழிலாளியான ஏழுமலை குடிக்கு அடிமையான நிலையில், நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தை நடத்த வழியில்லாமல் கலைச்செல்வி மாந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோல் தொழிற்சாலையில் பணிக்கு சென்றுள்ளார்.

மேலும் மாலை நேரங்களில் கூடுதல் நேரம் பணியாற்றியும் வந்தார். இப்படி பணிக்கு சென்றுவிட்டு காலதாமதாக வரும்போதெல்லாம் மதுபோதையில் இருக்கும் ஏழுமலை தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு பிரச்சனை செய்துள்ளார்.

அதேபோல் இன்று அதிகாலையும் மதுபோதையில் இருந்த ஏழுமலை கலைச்செல்வியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வி வீட்டில் இருந்த அரிவாள்மனையால் ஏழுமலையின் தலையில் சரமாரியாக வெட்டினார்.

மேலும் சுத்தியலை கொண்டு ஏழுமலையின் தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஏழுமலை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜாபேட்டை போலீசார், உயிரிழந்த ஏழுமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து கணவனை வெட்டி கொலை செய்த மனைவி கலைச்செல்வியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சில நாட்களிலேயே கசந்துபோன காதல் திருமணம்… சேர்ந்துவாழ மறுத்த இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

மதுரையில்..

மதுரையில் பட்டப்பகலில் இளம்பெண் ஒருவர் காதல் கணவனால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்கு வெளிவீதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம். இவரது மகள் வர்ஷா (வயது 19).

கீரைத்துறை பகுதியை சேர்ந்த பழனி (வயது 28) – வர்ஷா இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவரது காதல் விவகாரம் தெரிந்தநிலையில் வர்ஷா வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வீட்டைவிட்டு வெளியேறி இருவரும் பெற்றோர்கள் சம்மதம் இன்றி திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் இருவரும் ஜெய்ஹிந்த்புரத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். சில நாள்களிலே காதல் திருமணம் கசந்துள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பழனியுடன் வாழமுடியாது என முடிவு எடுத்த வர்ஷா தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பியுள்ளார்.

காதல் திருமணம் செய்த சில மாதங்களில் பொருளாதார ரீதியிலாக இருவரும் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். அப்போது பொருளாதார தேவைக்காக நகைகளை விற்றும், அடகு வைத்தும் குடும்பம் நடத்தியுள்ளனர்.

இந்த தகராறில் தான் இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வர்ஷாவை தன்னுடன் மீண்டும் சேர்ந்து வாழ்வருமாறு பழனி வற்புறுத்தியுள்ளார். பழனியுடன் மீண்டும் இணைந்து வாழ இளம்பெண்ணுக்கு விருப்பம் இல்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 1.50 மணியளவில் தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு வர்ஷா சென்றுள்ளார். அப்போது இருசக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்துக்கொண்டு வேகமாக வந்த பழனி கண்ணிமைக்கும் நேரத்தில்,

தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வர்ஷாவின் கழுத்து முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். காதல் கணவனின் திடீர் தாக்குதலில் நிலைக்குலைந்த இளம்பெண் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தெற்குவாசல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீஸார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தலைமறைவான பழனியை தேடி வந்த நிலையில் கீரைத்துறை பகுதியில் வைத்து அவரை கைது செய்தனர்.