இருந்துவிட்டார் என இறுதிச் சடங்கு செய்த குடும்பம் : மீண்டும் உயிருடன் வந்த ஆச்சர்யம்!!

கேரளாவில்..

கேரளாவின் மேப்பையூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் கடந்த ஆண்டு ஜூன் ஏழாம் தேதி காணாமல் போயிருக்கிறார். குடும்பத்தினர் தீபக்கை தேடி அலைந்தபோதும் அவர் கிடைக்காததால் காவல்துறையில் இது குறித்து புகார் அளித்திருக்கின்றனர்.

இது தொடர்பாக காவல்துறையினரும் விசாரணை நடத்தி வந்திருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் ஜூலை 17ஆம் தேதி கடற்கரையில் ஒரு ஆண் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை அது தீபத்தின் உடலாக இருக்கலாம் என கருதிய போலீசார் உறவினர்களை அழைத்துச் சென்று விபரத்தை கூறியுள்ளனர்.

அப்போது உறவினர்களும் அது தீபக்கின் உடல் தான் என சொல்லவே உடல் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து இறுதி சடங்கும் நடைபெற்றது.

ஆனால் அதன் பிறகு பந்திரிக்காரா பகுதியைச் சேர்ந்த இர்ஷத் எனும் இளைஞர் காணாமல் போன வழக்கை காவல்துறையினர் விசாரிக்கவே இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட, கடற்கரையில் கிடைத்தது இர்ஷத்தின் உடல் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து காணாமல் போன தீபக்கை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் இறங்கினர். பின்னர், இந்த வழக்கு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கோவாவில் உள்ள மார்கா பகுதியில் போலீசார் வழக்கம் போல ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.

அப்போது அங்கிருந்த ஹோட்டல் ஒன்றில் தீபக் பணிபுரிவதை அறிந்த அதிகாரிகள் உடனடியாக அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். முன்னரே கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் அளித்திருந்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஹோட்டலில் வேலை பார்த்த முன் அனுபவம் இருந்ததால் கோவா சென்ற தீபக் அங்கே பணியாற்ற துவங்கியதாகவும், கோவா வருவதற்கு முன்பாக அவர் ஜெய்ப்பூர், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இடங்களுக்கும் சென்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அவர் கேரள காவல் துறை அதிகாரிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.

விசாரணையின் போது தன்னிடத்தில் மொபைல் போன் இல்லாததால் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தனது குடும்பம் இறுதி சடங்கு செய்த விஷயமே தனக்குத் தெரியாது எனவும் தீபக் கூறியதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

எட்டு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன நபர் முதலில் இறந்து போனதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநங்கை மனைவிக்காக கர்ப்பமான திருநம்பி… வெளியான புகைப்படங்கள்!!

கேரளாவில்..

கேரளாவில் திருநங்கை மனைவிக்காக திருநம்பி கர்ப்பமாகியுள்ளார். அதன்படி இந்தியாவின் முதல் மூன்றாம் பாலின தம்பதியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த சஹத்- ஜியா தம்பதி இப்போது தாங்கள் பெற்றோர் ஆகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோழிக்கோடு உம்மலத்தூர் பகுதியை சேர்ந்த இந்த மூன்றாம் பாலின தம்பதிகளான சஹத்- ஜியா இப்போது மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் மூழ்கியுள்ளனர். இதில் சஹத் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறினார். அதேபோல ஜியா ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறியவர்.

இந்த மூன்றாம் பாலின தம்பதி தங்கள் முதல் குழந்தையை வரவேற்க காத்திருக்கிறார்கள். இன்னும் ஓரிரு மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பிறக்க உள்ளது. அதன்படி சஹத் ஆணாக மாறியிருந்தாலும் கூட அவரால் கருத்தரிக்க முடியும் என்பதை அவர்கள் அறிந்து கொண்டனர்.

முதலில் இதற்கு தயங்கினர். பின்னர் ஜியாவின் அன்பும், தாயாக வேண்டும் என்ற அவரது தீவிர ஆசையும் சஹத்தின் மனதை மாற்றியுள்ளது. இதற்காக அவர்கள் மருத்துவர்களிடமும் ஆலோசனை எடுத்துள்ளனர்.

மருத்துவ ரீதியாக சஹத்தால் குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்பதால் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். சிகிச்சையையடுத்து ஆணாக பிறந்து பெண்ணாக மாறிய ஜியா மூலம் சஹத் கருவுற்றார்.

பாலின மாற்று அறுவை சிகிச்சையில் சஹாத்தின் மார்பகங்கள் அகற்றப்பட்ட போதிலும், கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் இன்னும் அகற்றப்படாமல் இருந்தது. இதன் காரணமாகவே அவரால் கர்ப்பமாக முடிந்துள்ளது. வரும் மார்ச் 4ஆம் திகதி பிரசவம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

50 மாணவிகளுக்கு நடுவே சிக்கிய மாணவன்.. இறுதியில் மருத்துவமனையில் சேர்ந்த பரிதாபம்!!

பீகார் மாநிலத்தில்..

மாணவர் ஒருவர் 50 மாணவிகளுக்கு நடுவே அமர்ந்து தேர்வு எழுத சென்ற தருணத்தில் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பொதுவாக தேர்வு என்றாலே அனைவருக்கும் மனதில் ஒரு கலக்கமும், பயமும் நிச்சயமாகவே இருக்கும். பீகார் மாநிலத்தில் மாணவன் ஒருவன் மாணவிகளுக்கு மத்தியில் தேர்வு எழுத சென்றுள்ளார்.

ஆம் பீகார் மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்கிய நிலையில், நாளந்தா மாவட்டத்தில் ஷெரிப் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் மனிஷ் ஷங்கர் பிரசாத் எனும் மாணவர் பொதுத் தேர்வு எழுத சென்றுள்ளார்.

கணித தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவர் தேர்வு எழுத தொடங்கிய போது, திடீரென மனிஷ் மட்டும் மயக்கமிட்டு கீழே விழுந்துள்ளார். உடனே அங்கிருந்த அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சில மணி நேரத்தில் சரியான மணிஷ்ஷிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் கூறிய பதில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஆம் தேர்வு மையத்தில் 50 மாணவிகள் இருந்த நிலையில், அவர்களின் மத்தியில் மனிஷ் மட்டும் இருந்து தேர்வு எழுத வந்ததால், அதில் ஏற்பட்ட பதற்றத்தில் மயங்கி விழுந்துள்ளதாக கூறியுள்ளார்.

வவுனியாவில் சுதந்திர தினத்திற்கு ஆதரவாக வாகனப் பேரணி!!

வாகனப் பேரணி..

வவுனியா மாவட்டத்தில் சுதந்திர தினத்திற்கு ஆதரவு தெரிவித்து வன்னி மக்கள் ஒன்றியம் அமைப்பினரினால் வாகனப் பேரணியேன்று இன்று (04.02.2023) காலை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெருமளவான பகுதிகளில் இலங்கையில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் புறக்கணிக்கப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுவதுடன்,

கறுப்புக்கொடிகளையும் கட்டி தமது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்ற நிலையிலேயே சுதந்திர தினத்திற்கு ஆதரவாக வாகனப்பேரணி முன்னெடுக்கப்பட்டது.

அனைத்து வாகனங்களிலும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் வாகனப்பேரணி வவுனியா நகரை வலம் வந்திருந்தமையுடன் மேளம் , இசை என்பனவற்றுடன் சென்றிருந்தது.

வவுனியாவில் இலங்கையின் 75வது சுதந்திரதினம் அனுஷ்டிப்பு!!

75வது சுதந்திரதினம்..

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2023) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றது.

தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தமையினையடுத்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் மாணவர்களால் பாடப்பட்டது.

மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்புடன் சர்வமதத் தலைவர்களின் உரை, தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை என்பவற்றுடன் மூன்று இனங்களையும் பிரதிப்படுத்தும் வகையிலான நடனமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் கலந்துகொண்டதுடன் சர்வமதத் தலைவர்கள், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள்,

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர்கள்,

மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

வவுனியாவில் சுதந்திர தின நிகழ்வின் போது திடீரென மயங்கி விழுந்த 28 மாணவர்கள் உட்பட 31 பேர்!!

சுதந்திர தின நிகழ்வின் போது..

வவுனியாவில் மாணவ, மாணவிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 31 பேர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம் வவுனியா மாவட்டத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே. காதர் மஸ்தான் அதிதியாக கலந்து கொண்டு நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2023) காலை இடம்பெற்றது.

இதன்போது அணிவகுப்பில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் பிரதான நிகழ்வு கொட்டகைக்கு முன்னால் மைதானத்தில் அணிவகுப்பு மரியாதை முடிந்த பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் ஒண்டரை ஒணித்தியாலத்திற்கு மேலாக குறித்த மாணவர்கள், இராணுவத்தினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு தரப்பினர் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டமையால் வெயில் தாக்கம் காரணமாக 28 மாணவர்களும், 3 சிவில் பாதுகாப்பு படை வீரர்களுமாக 31 பேர் மயங்கமடைந்திருந்தனர்.

அவர்களை உடனடியாக செஞ்சிலுவைச் சங்க தொண்டர்கள் மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து அழைத்து செல்லப்பட்டு நோயாளர் காவு வண்டியில் வைத்து முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும் வெயில் தாக்கம் காரணமாக 13 மாணவர்களும், 5 சிவில் பாதுகப்பு படை வீரர்களுமாக 18 பேர் மயங்கமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் சுதந்திர தின நிகழ்வுகளில் அணிநடை வகுப்பு முடிந்தவுடன் அவர்களை அவ்விடத்திலிருந்து செல்வதற்கு அனுமதி வழங்குதல் அல்லது மாற்று வழிகளை மேற்கொள்ளவது சிறந்தது.

வெளிநாட்டு மோகத்தால் சொந்த அண்ணனையே திருமணம் செய்த தங்கை : அதிர்ச்சியில் உறவினர்கள்!!

மத்தியப் பிரதேசத்தில்..

மக்களின் பணத்தாசையும், சொகுசு வாழ்க்கையின் மீதான காதலும் அனைத்து தவறுகளையும் செய்ய தூண்டும் போல. எளிதில் ஆஸ்திரேலியா விசா பெறுவதற்காக தனது கூடப் பிறந்த அண்ணனையே திருமணம் செய்து கொண்டு, தங்கை ஆஸ்திரேலியா விசாவும் வாங்கி, வெளிநாட்டுக்கு சென்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது, போலீசாரின் விசாரணையில் இந்த விஷயம் வெளியாகி, அண்ணன், தங்கை இருவருமே இரு நாட்டு விதிமுறைகளையும் மீறியதாக சட்ட சிக்கலில் மாட்டியுள்ளனர்.

மத்தியப் பிரதேசம் இந்தூரைச் சேர்ந்த பெண்ணின் அண்ணன், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். இதனால் அந்த பெண்ணுக்கும் ஆஸ்திரேலியா செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் ஆஸ்திரேலியா செல்வதற்கான விசா இல்லை.

சகோதரருக்கு ஆஸ்திரேலிய விசா உள்ள நிலையில், தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது ஆஸ்திரேலியாவில் எளிது என்கிற சட்டம் இளம்பெண்ணின் மூளையில் சாத்தானைப் போல குறுக்கு வழியை யோசிக்க செய்துள்ளது.

இந்த சட்டத்தை வைத்து அவர்கள் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து அருகிலுள்ள பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்தனர்.

அதன் பிறகு, அவர் தனது கணவருடன் ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பித்தார். விண்ணப்பித்த படியே விசாவையும் எளிதாக பெற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதனிடையே இரு நாட்டு சட்ட அமைப்புகளையும் அவர்கள் ஏமாற்றியது தெரிய வந்தது.

அவர்கள் இருக்கும் இடம் குறித்த சரியான தகவல்கள் கிடைக்காததால் சட்ட நடவடிக்கை எடுப்பதில் தடைகளை உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்தவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என கூறி உள்ளனர்.

இது குறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் ஜெய் சிங் கூறுகையில், சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்ததாகவும், அவர்கள் முதலில் ஒரு குருத்வாராவிடம் இருந்து திருமணச் சான்றிதழைப் பெற்று,

துணைப் பதிவாளரிடம் பதிவு செய்ததாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. குடியேற்ற ஊழலில் அவரது சகோதரர் மற்றும் சகோதரி உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தனர்.

சூனியக்காரி என்று கேலி செய்த கிராம மக்கள்… உலகக் கிண்ணத்தை வென்று வீராங்கனை கொடுத்த பதிலடி!!

உலக கோப்பை..

ஐசிசி நடத்திய முதல் மகளிருக்கான Under 19 டி 20 உலக கோப்பை இதுவாகும். இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னேற்றம் கண்டிருந்தது.

இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல், மகளிருக்கான முதல் 19 வயதுக்கு உட்பட்டோர் டி 20 உலக கோப்பையையும் இந்திய மகளிர் அணி வென்று வரலாற்று சாதனையும் புரிந்துள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெற்ற வெற்றியை கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கொண்டாடியும் வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்திருந்த அர்ச்சனா தேவி, ஒரு அற்புதமான கேட்ச்சையும் பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கையும் வகித்திருந்தார்.

இந்த நிலையில், அர்ச்சனா தேவி மற்றும் அவரது தாயார் பட்ட கஷ்டங்கள் தொடர்பான விஷயம் பெரிய அளவில் பலரையும் மனம் உருக வைத்து வருகிறது. உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ரதாய் புர்வா என்னும் கிராமத்தை சேர்ந்தவர் தான் அர்ச்சனா தேவி.

அர்ச்சனாவின் சிறு வயதில் அவரது தந்தை புற்றுநோய் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அதே போல, அவரது சகோதரரும் பாம்பு கடித்து சிறு வயதில் உயிரிழந்துள்ளார். இதனால், அர்ச்சனா தேவியின் தாயார் கிராம மக்கள் கிண்டலுக்கும் ஆளாகி உள்ளார்.

மேலும் சூனியக்காரி என்றும் ஊர் மக்கள், அர்ச்சனாவின் தாயை குறிப்பிட்டு வந்துள்ளனர். இதற்கிடையில், மகளின் கிரிக்கெட் கனவுக்காக அர்ச்சனாவை விளையாட அனுப்பியதும் அவருக்கு விமர்சனத்தை தான் பெற்று கொடுத்துள்ளது.

தவறான வழியில் மகளை செலுத்தியதாகவும் பழி போட, அவை அனைத்தையும் தாண்டி மகள் கனவை அடைய வேண்டும் என்பதில் அர்ச்சனா தேவியின் தாயார் உறுதியாக இருந்துள்ளார்.

தொடர்ந்து, தனது கிராமத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கான்பூர் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்றுள்ளார் அர்ச்சனா. ஆனால், அங்கு சென்று வர போதிய வசதி இல்லாத காரணத்தினால், பள்ளி ஆசிரியர் ஒருவர் கான்பூரில் அறை எடுத்து தங்க உதவி செய்துள்ளார்.

இப்படி பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் வென்று காட்டிய அர்ச்சனா தேவி, பலருக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அதே போல, அர்ச்சனாவின் தாயாரை வசைபாடி வந்த அதே கிராம மக்கள், உலக கோப்பை வென்ற அணியில் அர்ச்சனா தேவி இடம்பிடித்து சாதனை படைத்துள்ளதையடுத்து வசை பாடியவர்கள் அர்ச்சனா தேவியின் குடும்பத்தினரை கொண்டாடியும் வருகின்றனர்.

வயிற்று வலியால் துடிதுடித்த சிறுமி… பரிசோதனை செய்தபோது வைத்தியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

ஆந்திராவில்..

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது குடிவாடா என்ற பகுதி. இங்கு 12 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே வயிறு வலி இருந்துள்ளது.

மேலும் வாந்தி, உடல் எடை, சாப்பாட்டின்மை போன்ற குறைபாடுகள் இருந்துள்ளது. இதனால் அவரது குடும்பம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்போது அவரது வயிற்றில் கருப்பாக எதோ கட்டி போல் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்துள்ளது. எனவே அவருக்கு நேற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அப்போது கட்டி தான் என்று எண்ணிய மருத்துவர்களுக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவரது வயிற்றுக்குள் முடி இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியின் வயிற்றுக்குள் இருந்த முடிகளை அகற்றினர். அதனை முழுவதுமாக அகற்றிவிட்டு எடை போட்டு பார்த்தபோது, சுமார் 1 கிலோ வரை அந்த முடியின் எடை இருந்துள்ளது.

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “சிறுமிக்கு ‘டிரைக்கோபெசோர்’ என்று அழைக்கப்படும் தலைமுடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது. சிறுமி தனது சிறுவயதில் இருந்தே இதனை சாப்பிட பழகியுள்ளார்.

அது தற்போது அவரது வயிற்றில் குவிந்து செரிமான மண்டலத்தில் ஒரு பெரிய கட்டியாக உருவாகி, செரிமான மண்டலத்தை நிரப்பி உள்ளது. இதனால்தான் அவர் சாப்பிட்ட சாப்பாடு எதுவும் அவருக்கு செரிக்காமல் இருந்துள்ளது.

அதோடு அவருக்கு உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் இருக்கிறார். அவரது வயிற்றில் இருந்த முடிகள் முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது.

ரத்த சோகை உள்ளவர்கள் இந்த மாதிரியான தலைமுடி சாப்பிட பழக்கி கொள்வதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும்.” என்றார். இந்த நிகழ்வு அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று பல்வேறு இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. அண்மையில் சீனாவை சேர்ந்த சிறுமி ஒருவர், மன நோய் பிரச்னை காரணமாக தனது முடியை தானே சாப்பிட்டு அவரது வயிற்றில் இருந்து சுமார் 3 கிலோ எடை வரை முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கொட்டித்தீர்த்த மழை : கடந்த 24மணிநேரத்தில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

மழைவீழ்ச்சி ..

வவுனியா நகரில் நேற்று காலை முதல் இன்று காலை வரையான 24மணித்தியாலயத்தில் 189.2மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வவுனியா வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வவுனியா நகரில் நேற்று முதல் பரவலான மழை பெய்து வருகின்றது. இதனால் பல வீதிகள் தாழ் நிலங்களில் குடியிருக்கும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் குளங்கள் நிரம்பி வழிகின்றன. வயல் நிலங்கள் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 8.30மணி தொடக்கம் இன்று காலை 8.30 மணிவரையான 24 மணிநேர காலப் பகுதியில் 189.2 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி வவுனியா நகரில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவித்துள்ளது.

பிரசவ வலியால் துடிதுடித்த நிறைமாத கர்ப்பிணி.. திடீரென பற்றி எரிந்த கார்.. தம்பதிக்கு நேர்ந்த சோகம்!!

கேரளாவில்..

நிறைமாத கர்ப்பிணி பெண் தனது கணவருடன் மருத்துவமனைக்கு காரில் செல்லும்போது, கார் தீப்பிடித்து எரிந்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் அருகே குட்டியாட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரஜித் (32). இவருக்கும் ரீஷா (26) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவீட்டார் சம்மத்துடனும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், ரீஷா கர்பமுற்றார்.

இந்த நிலையில் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவுக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி ரீஷா அவரது கணவர் மற்றும் அவரது உறவினர் பெண்கள் 3 பேர், ஒரு குழந்தை என அனைவரும் காரில் சென்றனர். போகும் வழியிலேயே வலியால் துடிதுடித்து கொண்டிருந்தார். அப்போது கண்ணூர் மாவட்ட மருத்துவமனைக்கு சுமார் 100 மீட்டர் தொலைவில்,

திடீரென காரின் முன் பகுதி தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் பிரஜித் காரை நிறுத்தியுள்ளார். தொடர்ந்து தீ மளமளவென பற்றி எரிய தொடங்கியது. இதனால் பதறிப்போன குடும்பம் கத்தி கூச்சலிட்டனர்.

அதோடு காரின் பின்பகுதியில் இருந்த குடும்பத்தினர் (3 பெண்கள், 1குழந்தை) கீழே இறங்கினர். ஆனால் தீ பற்றி எரிந்ததில் காரின் முன் பகுதியில் அமர்ந்திருந்த பிர்ஜித் மற்றும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரீஷாவால் காரின் கதவை திறந்து தப்பிக்க இயலவில்லை. இதில் அலறி துடித்து சம்பவ இடத்திலேயே இருவரின் உடலும் கருக தொடங்கியது.

இதனை கண்ட பொதுமக்கள் அவர்களை மீட்க முனைப்பு காட்டினர். ஆனால் காரின் முன்புறம் உள்ள பெட்ரோல் டேங்க் வெடித்து விடுமோ என்ற பயத்தில் அவர்கள் அருகே செல்லவில்லை. இதனால் அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், காரில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை சிறிது நேர முயற்சிக்கு பிறகு கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதையடுத்து காரின் முன்பகுதியில் இருந்த இருவரையும் மீட்க முயன்றனர்.

ஆனால் இருவரும் உடல் கருகி சடலமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட கண்ணூர் நகர போலிஸ் கமிஷனர் அஜித் குமார் கூறுகையில், “காரின் பின் இருக்கையில் இருந்தவர்களுக்கு காயம் எதுவும் இல்லை.

அவர்கள் மருத்துவமனையில் உள்ளனர், அவர்கள் பரிசோதிக்கப்படுகிறார்கள். தீப்பிடித்த காரின் முன்பக்க கதவை திறக்க முடியாததால், ரீஷாவும், பிரஜித்தும் உள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

இறுதிச் சடங்கில் எழுந்து உட்கார்ந்த 102 வயது மூதாட்டி.. தெறித்து ஓடிய உறவினர்கள்!!

உத்தராகண்ட்டில்..

கல்யாண சாவுன்னு சொல்வாங்க இல்லையா? அப்படி 102 வயதுடைய பாட்டி ஒருவர் மரணித்ததும், கல்யாண சாவாகவே உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் சொல்லி, தனது தாயின் இறுதி பயணத்தை தடபுடலாக செய்து,

சுடுகாட்டிற்கு இறந்த தாயாரின் உடலை எடுத்துச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நிலையில், திடீரென பாடையில் இருந்து எழுந்து அமர்ந்து அத்தனைப் பேரையும் தெறிக்க விட்டுள்ளார் ஞானதேவி.

உத்தராகண்ட் மாநிலம் நர்சன் குர்த் பகுதியில் வசித்து வருபவர் வினோத். இவரது தாயார் ஞான தேவி (102). கடந்த சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஞானதேவி, திடீரென மூர்ச்சையாகி மயங்கி விழுந்தார்.

உடனடியாக குடும்பத்தினர் மருத்துவரை அழைத்து பரிசோதித்த போது, அவர் இறந்து விட்டதாக மருத்துவர் பரிசோதித்து விட்டு, அறிவித்தார். இந்த செய்தியால் குடும்பத்தினர், நல்லா வாழ்ந்த மனுஷி.. ரொம்ப சிறப்பா அடக்கம் செய்யணும் என்று தாயின் மரணம் குறித்து உறவினர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே, ஏராளமானோர் வீட்டில் திரண்டு இறுதிச் சடங்கிற்கு தயாராகினர். மகன் வினோத் குமார் கூறுகையில், “அம்மாவின் இறுதிச் சடங்கிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் குடும்பத்தினர் முடித்து விட்டனர், மேலும் அவரது இறுதிச் சடங்குகளுக்காக உடலைகப் பாடையிலும் கிடத்தி இருந்தோம்.

அப்போது திடீரென அம்மாவின் உடலில் சலனம் ஏற்பட்டது. கொஞ்சம் குலுங்கியதும் அம்மா கண்களைத் திறந்தார். இந்தக் காட்சியைக் கண்டு அனைவரும் வியந்து ஆச்சர்யத்தில் உறைந்தோம். சில உறவினர்கள் பயத்தில் தெறித்து ஓடினார்கள்.

அம்மாவுக்கு சுயநினைவு வந்தவுடனே, அந்தச் சூழல் முழுவதும் சந்தோஷமாக மாறியது” என்று கூறினார். அவளுடைய அம்மா குடும்பத்தில் மட்டுமல்ல, முழு கிராமத்திலும் மூத்தாட்டி உயிர்த்தெழுந்ததை கொண்டாடுகிறது.

சுயநினைவு திரும்பிய பிறகு, அவரது தாய் பழைய படி சாதாரண உணவை சாப்பிட்டு வருகிறார். மொத்த கிராமமும், செத்து பிழைச்ச பாட்டியை ஆச்சர்யத்துடன் வந்து பார்த்து, ஆசி வாங்கி செல்கிறது.

திரைப்பட பாணியில் தாலி கட்டும் நேரத்தில் ஓடிய மணமகன்… மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு!!

கடலூரில்..

திருமணத்தில் தாலி கட்டும் நேரத்திற்கு முன் மணமகன் திடீரென மாயமானதால் மணப்பெண்ணுக்கு மாற்று மணமகனுடன் திருமணம் நடந்துள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிற்கும் நேற்று தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. மாலை 7 மணி முதல் இரவு 9 மணிவரை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மணமக்கள் கலந்துகொண்டு அனைவரிடத்திலும் ஆசி பெற்றனர். பின்னர் இரவு 12 மணிவரை இருவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். பின்னர் அதிகாலை யாரிடமும் சொல்லாமல் மண்டபத்தை விட்டு மாப்பிள்ளை வெளியேறிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து மாப்பிள்ளையை பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. மணமகள் மற்றும் மணமகளின் பெற்றோர் அவர்களின் உறவினர்கள் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த உற்றார் உறவினர்களும் கவலை அடைந்தனர்.

பின்னர் மணமகள் மற்றும் அவரின் பெற்றோர் உறவினர்கள் சிதம்பரம் அருகேயுள்ள வேளங்கிபட்டு கிராமத்தில் உள்ள மணமகள் வீட்டார் உறவினர் மகன் இளவரசனை மாற்று மாப்பிள்ளையாக தேர்வு செய்து குறிப்பிட்ட நேரத்தில் திருமணம் செய்து வைத்தனர்.

திருமண நேரத்தில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்த சம்பவத்தால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பெண் வீட்டார் சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்து காவல்துறையினர் முன்னிலையில் திருமணத்திற்கு ஏற்பட்ட செலவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

திருநங்கையுடன் திருமணம் செய்து கொண்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

பஞ்சாப்பில்..

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியை சேர்ந்த அர்ஜுன் என்பவர் ரவி என்ற திருநங்கையை காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்து வாழ விரும்புவதால், ரவிக்கு அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக மாறுகிறார்.

பின்னர் தனது பெயரை மீன் ரியா என மாற்றி அர்ஜுனை திருமணம் செய்து கொண்டார். மகிழ்ச்சியுடன் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டிருப்பவர்களை,

ரியாவின் குடும்பத்தினர் துன்புறுத்துகின்றனர். சமீபத்தில் ரியாவின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து தன்னை அடித்ததாக அர்ஜுன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒழுங்கா போய் வேலையை பாரு… ரசிகர் செய்த செயலால் மிரட்டி அனுப்பிய சூப்பர் ஸ்டார்!!

ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை உலகளவில் வைத்துள்ளார்.

தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்கள் கூட்டணியில் இந்த வருட இறுதியில் படத்தினை வெளியிட திட்டமிட்டு அதற்கான ஷூட்டிங் வேலைகள் விறுவிறுவென சென்று கொண்டிருக்கிறது.

பெரும்பாலும் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை எப்போவது பார்க்க வருவார். ஆனால் கடந்த ஆண்டு தன்னுடைய் பிறந்த நாளுக்கு கூட ரசிகர்களை காண வராமல் ஏமாற்றினார். இதன்பின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் சமீபத்தில் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ஒரே ஒருவர் தான் என்று கத்தினார்கள். அதை பார்த்த ரஜினி, அந்த ரசிகரிடம் ஒழுங்கா போய் வேலையை பாருங்க என்று அன்போடு எச்சரித்து அனுப்பியுள்ளார். சிலர் இதை தகைக்கனம் என்று கூறி விமர்சித்தும் வருகிறார்கள்.

யாழில் பலரையும் வியக்க வைக்கும் 81 வயது மருத்துவர்!!

யாழில்..

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் மருத்துவர் அருளானந்தம் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. தனது அயராத சேவை மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் மருத்துவர் அருளானந்தம் ஆவார்.

அவருக்கு இப்போது 81 வயதாகிறது. இந்த வயதிலும் தினமும் காலை 7 மணிதொடக்கம் பகல் 2 மணிவரை தனது வைத்திய நிலையத்தைத் திறந்து, சேவை புரிந்து வருகிறார்.

இவரின் சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் குறைந்த கட்டணத்தோடு மருத்துவம் பார்க்கும் அதேவேளை, வறியவர்கள், தூர இடங்களில் இருந்து வருவோர் போன்றவர்களுக்கு இலவசமாகவும் சிகிச்சையளித்து வருகிறாராம் மருத்துவர் அருளானந்தம்.

‘இவர் ஒரு மனிதக் கடவுள்’ என இவரிடம் சிகிற்சை பெற்ற ஏழைகள் புகழாரம் சூட்டுகின்றனர். இந்நிலையில் 81 ஆவது வயதிலும் இப்படி சேவை மனத்தோடு அயராது உழைக்கும் மருத்துவர் அருளானந்தம் ஐயாவின் சேவை இன்னும் பல்லாண்டுகாலம் நீடிக்க வேண்டுமென பலரும் பாராட்டி வருகின்றனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார நெருகடியால் சிறந்த மருத்துவம் என்பது ஏழைமக்களுக்கு எட்டாக்கனியாகிவிட்ட நிலையில் இவர்போல வாழும் தெய்வங்கள் நம் தேசத்தில் உலாவருவது நாம் செய்த பாக்கியம் என்றுதான் கூறவேண்டும்.