வடக்கு கலிபோர்னியாவில் செங்குத்தான பாறை ஒன்றின் மீதிருந்து டெஸ்லா வாகனத்துடன் குதித்த விவகாரத்தில், கணவர் கொல்ல முயன்றதாக மனைவி புகார் அளித்துள்ளார்.
இந்தியரான 41 வயது மருத்துவர் தர்மேஷ் பட்டேல் என்பவரே தமது டெஸ்லா வாகனத்தில் மனைவி நேஹா மற்றும் இரு பிள்ளைகளுடன் வடக்கு கலிபோர்னியாவில் அமைந்துள்ள செங்குத்தான பாறை ஒன்றின் மீதிருந்து தற்கொலைக்கு முயன்றவர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக மொத்த குடும்பமும் உயிருக்கு ஆபத்தின்றி தப்பியது. டிசம்பர் 2ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், மூன்று வாரங்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவரான பட்டேல் மீது முதல் நிலை கொலை முயற்சி வழக்கும் சிறார் துஸ்பிரயோக வழக்கும் பதியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து பட்டேல் குடும்பம் மீட்கப்படும் போது, கணவர் தங்களை திட்டமிட்டே கொல்ல முயன்றார் என நேஹா மருத்துவ உதவிக்குழுவினரிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
San Mateo கவுண்டி மாவட்ட சட்டத்தரணி ஸ்டீவ் வாக்ஸ்டாஃப் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இது ஒரு விபத்தாக தாம் கருதவில்லை எனவும் நேஹா குறிப்பிட்டுள்ளதாக ஸ்டீவ் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் பட்டேலுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை, மட்டுமின்றி, மருத்துவமனையில் சிகிச்சையில் தொடரும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சவுஜன்யு (26) என்பவருக்கும், பலசாவை சேர்ந்த கிரிபிரசாத் என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்றே மாதத்தில் விசாகம் மாவட்டம், பெண்டுருத்தி மண்டலம் துவ்வபாலத்தில் வீடுகள் வாங்கி வசித்து வருகின்றனர்.
சௌஜன்யா அமேசான் நிறுவனத்தில் மென்பொருளில் பணிபுரிகிறார். ஆனால் சௌஜன்யாவை அவரது கணவர் பணத்திற்காக அடிக்கடி துன்புறுத்தி வந்தார்.
இதனால் மனமுடைந்த சௌஜன்யா சனிக்கிழமை மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் புழல் லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்து வருபவர் 24 வயதான சுதாசந்தர். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரு பெண்ணுடன் புழல் லட்சுமிபுரம் கல்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ராஜாராம், போலீஸ் உதவி கமிஷனர் ஆதிமூலம், இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து கொலையான வாலிபருடன் வந்த பெண்ணை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதில் அந்த பெண்ணின் பெயர் ராகவி என்பதும், 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அடுத்த ஆவடி மோரை பகுதியில் வசித்து வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுதாசந்தருடன் காதல் வயப்பட்டு இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இதை அறிந்த ராகவியின் பெற்றோர்கள் உடனடியாக அவரது உறவுக்காரரான வசந்த் என்பவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 2 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து சென்ற ராகவி முன்னாள் காதலன் சுதாசந்தருடன் வாழ முடிவு எடுத்தார். அதன்படி 2 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு கைக்குழந்தையுடன் வெளியேறிய ராகவி, சுதாசந்தருடன் புழல் லட்சுமிபுரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து குடித்தனம் நடத்தினார்.
தனது குழந்தையுடன் மனைவியை அபகரித்து வாழ்ந்து வந்ததால் ஆத்திரமடைந்த ராகவியின் கணவர் வசந்த் மற்றும் உறவினர்கள் அவர்களை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இதனால் நேற்று முன்தினம் சுதாசந்தரை கொலை செய்தது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் கொலை குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஆர்கெவ் கான்டனில் இடம்பெற்ற கார் விபத்துச் சம்பவத்தில், யாழ்ப்பாணம் சுழிபுரத்தை பூர்வீகமாக கொண்ட தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் சுவிஸ் வாழ் புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் தந்தையினது மகனதும் இறுதிக்கிரிகைகள் ஒன்றாக நடப்பெற்றமை பார்ப்பவர்கள் நெஞ்சங்களை கனக்கசெய்துள்ளது.
விபத்தில் செல்வராஜா தனபாலசிங்கம், தனபாலசிங்கம் றஜிதன் ஆகியோரே உயிரிழந்த நிலையில் அதே குடும்பதை சேர்ந்த 3 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்த இருவரின் இறுதிக்கிரியை நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில் உடல்களும் தகனம் செய்யப்பட்டன. கடந்த 21ஆம் திகதி இரவு மெர்சிடிஸ் ரக கார் ஒன்று, பேடன் மேற்கு வீதியில் கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து குடிபோதை அல்லது போதைப் பொருளினால் ஏற்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையாது என விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர். St.Gallen கான்டனில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்லும் வழியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காரில் பயணித்த 18 வயதான மகன் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் தந்தை படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த நெரிகம் கிராமத்தில் வெங்கடசாமி (55) – நீலம்மா தம்பதி வசிக்கின்றனர். இவர்களுக்கு லாவண்யா (26), பிரியங்கா (22) என்ற மகள்கள் உள்ளனர். இதில் மாற்றுத்திறனாளியான பிரியங்கா ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை பணிக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரியங்கா அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. தாய், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆந்திராவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் இருந்த வெங்கடசாமியை போனில் தொடர்பு கொண்ட ஒருவர், உங்கள் மகளை கடத்தி வைத்துள்ளதாகவும், 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறேன் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல், நீலம்மாவையும் அந்த நபர் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த நீலம்மா பேரிகை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
செல்போன் நம்பரை வைத்து விசாரித்ததில், பணம் கேட்டு மிரட்டல் விடுத்த நபர் முதுகுறுக்கியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (25) என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. டிரைவரான அவர் பிரியங்காவை 2 ஆண்டாக காதலித்து வந்த நிலையில், அவரை கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அவரது செல்போன் சிக்னலை வைத்து விசாரித்ததில், அவர் கர்நாடக மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. பின்னர் கர்நாடக போலீசார் உதவியுடன் நள்ளிரவு அவரை பிடித்து பேரிகை அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஸ்ரீகாந்த், அவரை கொலை செய்து கும்பளம் அருகேயுள்ள ஆற்றுப் பாறையில் வீசி விட்டதாக தெரிவித்தார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அங்கு சென்று பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரியங்காவை அவர் அணிந்திருந்த ஐ.டி. கார்டின் டேக்கால் கழுத்தை நெரித்துக் கொன்றதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் மிஸ்ரா (45). இவர் மனைவி நீலம்.
தம்பதிக்கு அன்மோல் (13), சர்தக் (7) என இரு மகன்கள் இருந்தனர். சஞ்சீவ் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் சஞ்சீவ் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் விசாரித்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், தனது மகன் muscular dystrophy என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 5 ஆண்டுகளாக மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.
மேலும் நோயின் சிக்கலைத் தாங்க முடியாமல் குடும்பத்தினர் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதோடு தற்கொலைக்கு முன்னர் சஞ்சீவ் சமூகவலைதள பதிவில், எதிரிகளின் குழந்தைகளைக் கூட இந்த நோயிலிருந்து கடவுள் காப்பாற்றட்டும்.
என்னால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை, இனி வாழ விரும்பவில்லை என பதிவிட்டிருக்கிறார். குடும்பமே உயிரை மாய்த்து கொண்டது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா, தாத்தா, பாட்டி, சகோதரன் உட்பட குடும்பமே தீயில் கருகி பலியான அதே நேரத்தில், நடந்தது எதுவும் தெரியாமல் மணப்பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் ஆஷிர்வாத் அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்தது. தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது தெரியாமல், சுவாதி என்ற பெண் திருமணம் செய்துகொண்ட சம்பவம் தான அது.
சுவாதி தனது குடும்பத்தினருடன் ஜோராபடக்கில் உள்ள ஆஷிர்வாட் கோபுரத்தின் நான்காவது மாடியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார், அங்கு செவ்வாய்க்கிழமை மாலை தீப்பிடித்து 14 பேர் உயிரிழந்தனர்.
மாலை 4 மணியளவில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தி விநாயக் ரிசார்ட் திருமண அரங்கிற்கு ஸ்வாதி வீட்டிலிருந்து புறப்பட்டார். அவரது தந்தை சுபோத் லால், அவரது தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் இன்னும் பிளாட்டில் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
மாலை 6.15 மணியளவில் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சுவாதியின் குடும்பத்தில் தாயார் மற்றும் அவரது தாத்தா பாட்டி மற்றும் சகோதரன் உட்பட 5 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
திருமண மேடையில் இருந்த சுவாதி தனது தாய் மற்றும் தாத்தா பாட்டியைப் பற்றி தொடர்ந்து கேட்டபோதும் திருமண சடங்குகள் தொடர்ந்து நடந்தது. உண்மையில், நடந்த சோகத்தைப் பற்றி அவரிடம் உடனடியாக கூறப்படவில்லை.
பின்னர், தீயிலிருந்து தப்பிய அவரது தந்தை மட்டும் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், ஆனால் அவர் அதிர்ச்சியில் இருந்ததால், அவரால் சடங்குகளில் பங்கேற்க முடியவில்லை. வேறு சில குடும்ப உறுப்பினர்கள் சடங்குகளை முடித்தனர். திருமணம் முடிந்த பிறகு நடந்த விடயங்களை மணப்பெண்ணிடம் தெரிவித்துள்ளனர்.
பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான சுவாதி மனமுடைந்து சோகத்தில் ஆழ்ந்தார். 55 வயதான தந்தை லால், தன்பாத் நகரில் உள்ள புரானா பஜாரில் மொத்த அழகுசாதனப் பொருள் கடை நடத்தி வருகிறார். கிரிதியில் வசிக்கும் சவுரவ் என்பவரை சுவாதி திருமணம் செய்து கொண்டார். பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, லங்கா பெட்ரோல் 92 ஒக்டேனின் விலை 370 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய , புதிய விலை லீட்டருக்கு ரூபா 400 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஏனைய ரக பெட்ரோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அறிவித்துள்ளது.
டெல்லியின் பஸ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கடந்த ஒருமாதத்திற்கு முன்புதான் உத்யோகர் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார்.
இவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, பஸ்சிம் விஹார் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பிறகு தான் மறைத்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜோதியைச் சுட்டுக் கொலை செய்துள்ளார். பின்னர் ஜோதி வந்த ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஜோதி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், “மகளுக்கு யாருடனும் எந்தவிதமான பகையோ அல்லது தகராறோ எதுவும் இல்லை.
தனது மகளைக் கொன்ற நபரை விரைவில் கைது செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மூன்று குழுக்களாகப் பிரித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஜோதியைச் சுட்டுக் கொன்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே கொலை குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்மையில் கூட இளம் பெண் ஒருவர் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி சாலையில் தனியாகச் செல்லும் பெண்கள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சொத்துக்காக தங்கையே தனது அண்ணனைக் கடத்தி சி.த்.ரவதை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேடபாளையம் பகுதியில் வசித்து வருபவர் வேலுச்சாமி (56).
இவர் தனது மனைவி அம்பிகா மற்றும் 2 மகன்களுடன் குடியிருந்து கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் வேலுச்சாமியின் மனைவி அம்பிகா மற்றும் அவரது தம்பி தங்கதுரை ஆகியோருக்கு இடையே சொத்து பிரச்சினை நிலுவையில் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 25ம் தேதி தங்கதுரையை காரில் கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது. ஆனால் அங்கிருந்து தப்பிய தங்கதுறை பல்லடம் காவல்நிலையத்தினுள் தஞ்சம் அடைந்துள்ளார்.
விசாரணையில், வேலுச்சாமி மற்றும் மகன் இருவரும் தங்கதுரையை கடத்திச் சென்று தலைகீழாக கட்டி தொங்கவிட்டு சித்ரவதை செய்துள்ளதாகவும், பின்பு பெங்களூருக்கு அழைத்து சென்று போதை மறுவாழ்வு மையத்தில்விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கு தங்கதுரையின் அக்கா, அதாவது வேலுச்சாமியின் மனைவியும் துணையாக இருந்துள்ளார். சொந்த தாய்மாமனையே தந்தையின் உதவியுடன் கடத்திய கோகுல் மற்றும் அவரது தந்தை வேலுச்சாமி இருவர் மீது வழக்கு பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராமில் ஆடல் பாடல் செய்து பதிவேற்றி பிரபலமானது பிரிக்யாவின் குடும்பம். இந்த பெண்ணின் தாயார், அண்ணன் அவ்வப்போது தந்தை உள்ளிட்ட பலரும் இவர்களது வீடியோவில் வலம் வருவார்கள்.
முன்னதாக பிரிக்யாவின் தாயார், “என் மகளுக்கும் மகனுக்கும் பாரபட்சமின்றி ஒரே மாதிரி செல்லம் கொடுத்து வளர்த்தேன். எங்கள் குடும்பத்தினரிடம் பலரும் சரிவர பேசுவதில்லை. உறவினர்கள் பிணைப்பில் இல்லை. என்னுடைய கோடீஸ்வர தம்பி கூட பேசுவதில்லை.
இந்த நிலையில் எங்களுடைய மகளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் நிச்சயக்கப்பட்டது. ஒரு வருட காலமாக மகளுக்கும் மருமகனுக்கென்றும் ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்தோம். மகளும் மிகவும் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளார்.
அவருக்கு மாப்பிள்ளையை பிடித்திருந்தது. இருவரும் பல இடங்களுக்கு சேர்ந்து சென்று வந்தனர் . இருவரும் சேர்ந்து கூட ரீல்ஸ் வீடியோக்களைச் செய்தனர். ஆனால் இதனிடையே யாரோ என் மகளை ஏன் உடனடியாக திருமணம் செய்கிறீர்கள்?
நீங்கள் இன்னும் வேறு இடங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் என்பது போல் சொல்லி குழப்பி விட்டிருக்கிறார்கள் போல தெரிகிறது, இதனால் அவள் திருமணம் வேண்டாம் என சொல்லிவிட்டு, அவளும் என் கணவரும் எங்களை பிரிந்து சென்றுவிட்டனர்” என கூறியிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்தில் பிரத்தியேக பேட்டி அளித்த பிரக்யா, “அந்த சமயத்தில் எனக்கு அப்பா சப்போர்ட்டும் இல்லை, அண்ணனோ அம்மாவின் நம்பிக்கையை சம்பாதித்த, அவரை தன் கைக்குள் வைத்திருந்தான்.
என்னை அவ்வளவு லவ் பண்ணியிருந்ததாக சொல்லும் அம்மாவுக்கு என் முகம் வாட்டமாக இருந்தது கூட புரியவில்லையா? திருமணத்துக்கு மாப்பிள்ளை வீட்டார் முன்பு நான் ஓகே சொல்லவில்லை என்றால், என் அம்மா உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றார்.
இதையெல்லாம் நிச்சயதார்த்த வீடியோவில் கூட பார்க்க முடியும். அந்த நிச்சயதார்த்தமே எனக்கு பிடிக்கவில்லை என்கிற சோகத்தில் தான் நின்றுகொண்டிருந்தேன். பிறகு அப்பா என்னை கவனித்து புரிந்துகொண்டார்” என கூறியுள்ளார்.
மேலும் தனக்கு நிச்சயம் பண்ணப்பட்ட நபர் குறித்து பேசும்போது, நான் இந்த டிரெஸ் தான் போட வேண்டும் என நிர்ப்பந்திப்பான், அத்தனை பேர் முன்னிலையும் சீரியஸாக இப்படி பேசுவான்.
அவனுடைய மைண்ட் செட்டே, என்னோடு இருந்து என்னை வைத்து ரீல்ஸ் வீடியோ போட்டு புகழ் அடைய வேண்டும் என்பதுதான். அவனுக்கு லவ் என்றாலே என்னை தொட்டு பேசுவதும், பிசிக்கலாக இருப்பதுமாகவே இருந்தது. அதை கண்டுபிடிச்சுட்டேன்.” என்று தெரிவித்துள்ளார் .
மேலும் பேசிய பிரிக்யா தனது தந்தை வீட்டில் இயல்பாக ட்ரவுசருடன் இருக்கும் போது எடுக்கப்பட்ட வீடியோவை தம்முடைய அம்மா பதிவேற்றிவிட்டதாகவும், உண்மையில் தன்னுடைய நண்பர்கள் எல்லாம் பேசும் பொழுது, “பெற்ற மகளே தவறு செய்து இருந்தாலும் ஒரு அம்மா மூடி மறைக்க தான் பார்ப்பார்கள்,
ஆனால் தவறே செய்யாத பெண்ணை இப்படி கஷ்டப்படுத்துகிறார்களே” என்றெல்லாம் சொல்வதாக கூறி வருந்துகிறார். அத்துடன், “அந்த குடும்பத்தையும் அம்மாவையும் உண்மையில் நான் மிஸ் பண்ணவே இல்லை. அந்த குடும்பம் இல்லாமல் நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
சமீப காலங்களில் திருமண தம்பதிகளின் நகைச்சுவை வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகம் வரவேற்பை பெற்று வருகின்றன. தங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்தும் அன்றாட வாழ்க்கையில் தங்கள் சந்திக்கும் சம்பவங்கள் குறித்தும் நகைச்சுவையுடன் இவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
அந்த வகையில் சமீபத்தில் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு கணவர் பரிசளிப்பது போன்ற வீடியோ நெட்டிசன்களை வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறது. இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து கொண்டிருக்க, அப்போது அவருடைய கணவர் கையில் ஒரு பையுடன் உள்ளே நுழைகிறார்.
அந்த பெண்ணிடம் பிறந்த நாள் பரிசு எனக் கூறி அந்தப் பையை நீட்டுகிறார் கணவர். ஆச்சரியப்பட்டவராக திரும்பி பார்க்கும் அந்த பெண் ஆர்வத்துடன் அந்தப் பையை வாங்கி உள்ளே பார்க்கிறார்.
அதன் பின்னர் உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுத்து அதனுள் இருந்த இன்னொரு கவரை பிரிக்கிறார். அதற்குள்ளே என்ன இருக்கிறது? என்று ஆர்வத்துடன் அவர் அந்த கவரை பிரித்துப் பார்க்கும்போது உள்ளே காம்ப்ளான் பாட்டில் இருப்பதை பார்த்து அவர் கொஞ்சம் ஷாக் ஆகிப்போகிறார்.
பின்னர் புன்னகைத்தபடியே தனது கணவரின் மீது அந்த பாட்டிலை வீச முற்படுகிறார் அந்த மனைவி. அதாவது தனது மனைவி உயரம் குறைவாக இருப்பதை தைரியமாக கிண்டல் அடிக்க முயற்சித்துள்ளார் அந்த கணவர்.
பரிசை கொடுக்கும்போதும்,”வாழ்க்கையில நீ மேலும் மேலும் பல உயரத்துக்கு போறதுக்கு என்னால முடிஞ்ச ஒரு உதவி” என சொல்கிறார் அவர். அப்போ புரியல, ஆனா இப்போ புரியுது என்ற மொமெண்ட்டில் பரிசை பார்த்ததும் அப்பெண்மணி ரியாக்ஷன் கொடுக்கும் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை (02.02.2023) வியாழக்கிழமை தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன்.
கற்கைநெறிகளுக்கு இணையம் மூலமாகவோ நேரடியாகவோ விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் நாளை இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியும் எனவும்,
விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்விற்கான அழைப்பு, கைத்தொலைபேசியில் குறுந்தகவல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்காத மாணவர்களும் நாளைய நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்றும்,
இதுவரை கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை (02.02.2023) தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரடியாக வருகைதந்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்த கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன்,
இவ் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்ததும் நேரடியாக வருகைதந்து தாங்கள் விரும்பும் கற்கைநெறிக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.
ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் இன்று (31.01) கோரியுள்ளனர்.
வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ஆம் திகதி வீதியில் பயணித்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.
அவ் வீதியால் சென்றவர்கள் முதியவர் வீதியில் கிடப்பதை அவதானித்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, அவ்விடத்திற்கு வந்த சோயாளர் காவு வண்டி குறித்த முதியவரை நோயாளர் காவு வண்டியில் ஏற்றி வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், வைத்தியசாலைக்கு செல்வதற்கு முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த முதியவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.
குறித்த முதியர் 70 வயது மதிக்கத்தக்கவர். 5அரை அடி உயரமுடையவர். தாடியுடன் உள்ள அவர் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்த சேட்டும், நீல சாரமும் அணிந்துள்ளார்.
தனது இரண்டு கைகளிலும் பச்சை குத்தியுள்ளதுடன், இடது கையில் பிள்ளையார் உருவமும், வலது கையில் நாகபாம்பு உருவமும் குத்தியுள்ளார்.
இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வவுனியா சிறுகுற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அல்லது வவுனியா பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட தம்பதியினர் ஒருவர் தங்கள் குழந்தைக்கு இந்தியா என்று பெயரிட்டு இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பாடகர் ஓமர் இசா என்ற நபர் வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அவரது மகன் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைத்து பெற்றோர்களுக்கும் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில் புதிய பெற்றோர் அனைவருக்கும் என்னுடைய எச்சரிக்கை மற்றும் எங்களை போன்ற செயலை செய்த பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என தெரிவித்து அறிவுரை தொடங்கியுள்ளார்.
எங்கள் மகன் இப்ராஹீம் பிறந்த போது அவன் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டு, அவனை எங்கள் அறையில் எங்களோடு உறங்க வைத்தோம், ஆனால் சிறிது ஆண்டுகளுக்கு பிறகு அவன் சிறுவனாக வளர்ந்த பிறகும், அவனுக்கு என்று தனியாக அறை இருந்தும், அவன் எங்களுடனே எனக்கும் எனது மனைவிக்கும் இடையில் படுத்து உறங்குகிறான்.
நான் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவன், எனது மனைவி வங்கதேசத்தை பூர்விகமாக கொண்டவர் எங்கள் இருவருக்கும் பிறந்த மகன் இப்ராஹிம், இவ்வாறு பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்திற்கும் நடுவில் இருப்பதால் அவரை நாங்கள் இந்தியா என்று நாங்கள் அழைக்கிறோம்.
இந்த இந்தியா எனது வாழ்க்கையில் மிகவும் பிரச்சனையாக உள்ளது என நகைச்சுவையாக குறிப்பிட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒமர் இசாவின் இந்த பதிவு சமூக ஊடகங்களில் வேகமாக பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது.
அண்மையில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்தது. இந் நிலையில் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு ஆனந்த விதுஹலேயைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான,
தினுத் தின்சர நந்தசிறி மற்றும் சனுத் தின்சர நந்தசிறி ஆகியோர் சம சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்வில் இந்த இரண்டு இரட்டை சகோதரர்களும் தலா 176 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
இரட்டையர்கள் ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து அந்தப் பிரிவில் சமமான புள்ளிகளுடன் சித்தியடைந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.