யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி கோர விபத்தொன்று நேற்று (30.01.2023) இடம்பெற்றது. இந்த விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் பிறிதொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து நேர்ந்துள்ளது. பிரான்சிலிருந்து யாழ்பாணத்திற்கு வருகை தந்த சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட இவர், ஒரு வருடத்திற்கு முன்னர் இங்கு திருமணம் முடித்து பின்னர் பிரான்சிற்கு சென்றுள்ளார்.அவருடைய மனைவி பிரான்ஸ் செல்ல முடியாத காரணத்தால் இங்கு வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவரது மனைவி பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பார்ப்பதற்காக பிரான்சிலிருந்து குறித்த இளைஞன் வருகை தந்துள்ளார். மனைவியை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி நாராயணன். இவர் ரஷ்யாவிற்கு சென்று அங்கு மருத்துவம் படித்து முடித்துள்ளார். பின்னர் கோவாவில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
இதற்கிடையில் இவரது நண்பர் தீலிப் என்பவர் சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது 30வது நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாலாஜி நாராயணன் சென்னை வந்துள்ளார்.
பிறகு விருகம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி, நண்பரது துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் உறவினர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தபோது அவர் சாலையில் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதைப்பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகே இருந்த மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவர் மாரடைப்பால்தான் உயிரிழந்தாரா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த நண்பரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நண்பர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். கார் ஓட்டுநரான இவருக்கு சோபனா (26) என்ற பெண்ணுடன் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், மாமியார் வீட்டிற்கு சென்றிருந்த அவர், நண்பர்களை சந்திக்க போவதாக கூறி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
பின்னர், மது போதையில் வீடு திரும்பிய நிலையில், செனாய் நகர் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, படுகாயங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மணிகண்டன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது சடலத்தை மீட்ட பொலிசார் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையில் கணவர் இறந்த தகவலை அறிந்து சோபனா கதறி அழுததும், அவரை உறவினர்கள் தேற்ற முடியாமல் தவித்ததும் அங்கிருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.
சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவர் கொளத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஏஜென்ட்டாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்திக் சாலையோர கடை ஒன்றில் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பரோட்டா பார்சல் வாங்கி சென்றுள்ளார். இதையடுத்து வீட்டில் இவர் வாங்கி வந்த பார்சலை பிரித்து அனைவரும் பரோட்டா சாப்பிட்டு உள்ளனர். பிறகு அனைவரும் தூங்கியுள்ளனர்.
இதையடுத்து சில மணி நேரத்திலேயே கார்த்திக் வாந்தி எடுத்துள்ளார். மேலும் அப்படியே ம.யங்கி வி.ழுந்துள்ளார். இதனால் அ.திர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை அருகே இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்குப் ப.ரிசோதித்த மருத்துவர்கள் அவரை மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இ.றந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதைக்கேட்டு உறவினர்கள் அ.திர்ச்சியடைந்து க.தறி அ.ழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து வி.சாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கார்த்திக் பரோட்டா சாப்பிட்ட பின்பு குளிர் பானம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் கார்த்திக்கைத் தவிர பரோட்டா சாப்பிட்ட குடும்பதில் உள்ள மற்றவர்களுக்கு எதுவும் ஆகவில்லை. அவரின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்த பின் முழுமையான காரணம் தெரியவரும் என போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாகப் பிரியாணி, பரோட்டா சாப்பிட்டு இளைஞர்கள் உ.யிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது உணவு பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கிளிநொச்சி மற்றும் வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இன்று (31.01.2023) தொடக்கம் பெப்ரவரி 11 ஆம் திகதிவரை பல்வேறு பகுதிகளில், “தெய்வீக சுகமளிக்கும் ஊழிய விடுதலைப் பெருவிழா”.
கிறிஸ்தவ மதபோதகர்களின் தலைமையில் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. மதபோதகர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு வசிக்கும் மக்களை சந்தித்து,
தொடர்ந்து மதமாற்றம் மேற்கொண்டு வருவதாகவும் இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கல்லூரி மாணவர் ஒருவர் விடுதியின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஆலம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுமித்ரன்.
இவர் கன்னியாகுமரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பாராமெடிக்கல் சயின்ஸ் படித்து வந்தார். மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிக் கொண்டு தினமும் வகுப்பறைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அறையில் இருந்த மாணவர்களிடம் கழிவறைக்குச் சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் அறைக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சக மாணவர்கள் கழிவறைக்குச் சென்று தேடிப் பார்த்துள்ளனர். ஆனால் அங்கும் அவர் இல்லை. இதனால் விடுதியின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது சுமித்ரன் தூக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலமாக இருந்ததைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். மேலும் அவரது அறையில் சோதனை செய்தபோது சுமித்ரன் எழுதிச் சென்ற கடிதம் ஒன்று போலிஸாருக்கு சிக்கியது.
அதில், “நான் எனது பெற்றோருக்கு நல்ல பிள்ளையாக இருக்கவில்லை. என்னால் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியவில்லை. உலகில் நான் பிறந்ததே பாவம். என்னை மன்னித்து விடுங்கள்.
” என இருந்ததாக போலிஸார் கூறுகின்றனர். மேலும் சுமித்ரன் தற்கொலைக்கு வேறு காரணங்கள் உள்ளதா? என்பது குறித்தும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவர் வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில் மனைவி தனது இரட்டை குழந்தைகளுடன் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலூரை சேர்ந்தவர் ஜெயா (25).
இவருக்கும் பெரம்பலூரை சேர்ந்த கண்ணன் – தமிழ்செல்வி மகன் விஜயகுமார் என்பவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு நிகிதா, நிகிசா என்ற இரட்டை குழந்தைகள் இருந்தனர்.
என்ஜினீயரான விஜயகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இதனால் ஜெயா தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும்,
துபாய்க்கு சென்றதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி கடந்த சில மாதங்களாக துபாயில் இருந்துவிட்டு பொங்கல் பண்டிகைக்கு முன்பாக சொந்த ஊர் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 23ம் திகதி தமிழ்ச்செல்வி அழைத்ததன்பேரில் ஜெயா குழந்தைகளுடன் கணவர் வீட்டிற்கு வந்தார். இந்த சூழலில் நேற்று காலை ஜெயா, தனது மாமியார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையிலும் அவரின் இரண்டு குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் இறந்து கிடந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிய நிலையில் 2 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, ஜெயா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
தங்களது மகள், பேத்திகள் சாவில் மர்மம் உள்ளதாகவும், விஜயகுமாரின் தாய் தமிழ்ச்செல்வி மற்றும் அண்ணன் வினோத்குமாரின் மனைவி பிரியா ஆகியோர் ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும், மேலும் கணவரின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு ஜெயாவை கொடுமைப்படுத்தி வந்ததாகவும் ஜெயாவின் பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேக மரணம் என்று மங்களமேடு பொலிசார் வழக்குப்பதிவு செய்து மூவரும் கொலை செய்யப்பட்டனரா அல்லது ஜெயா தனது பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்தாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடைக்குள் திருடுவதற்காக புகுந்த திருடன் ஒருவன், ப்ளீஸ்.. தயவு செய்து போலீசிடம் செல்லாதீர்கள். நான் உங்கள் விருந்தாளி’ என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்து சென்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால், தான் போலீசிடம் புகார் அளிக்கப் போவதில்லை என்று கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் புகுந்த திருடனின் கடிதத்தைப் பார்த்து கடை உரிமையாளர் நெகிழ்ந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சாலேமார் மாவட்டத்தில் பனியானா பகுதியில் வசித்து வருபவர் கோமாராம். பனியானா பகுதியில் ஜன சந்தடி அதிகமிருக்கும் பகுதியில் இவர் இனிப்பு கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 24ம் தேதி வழக்கம் போல கடையை திறக்க சென்றுள்ள கோமாராமுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கடையைத் திறந்ததும், உள்ளே இருக்கும் இனிப்புகள் அனைத்தும் அங்குமிங்குமாக கீழே சிதறி கிடந்தது.
யாரோ கடைக்குள் புகுந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்த கோமாராம், கல்லாப் பெட்டியைப் பார்த்ததும், அதனுள் இருந்த பணம் களவு போனதைப் பார்த்து திருட்டு நடந்துள்ளதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்.
கல்லா பெட்டிக்கருகில் திருடன் தன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் தென்பட்டுள்ளது. கடையில் கொள்ளை அடித்த திருடன் உரிமையாளருக்கு இரு பக்கத்தில் கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளான். அந்த கடிதத்தில், “ஹலோ சார், நான் நல்ல மனசு கொண்டவன்.
நான் உங்கள் கடைக்கு திருடுவதற்காக நுழையவில்லை. எனது ஆசையை நிறைவேற்ற தான் வந்தேன். நான் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆகிறது. ஒரே பசியாக இருந்ததால், உங்கள் கடைக்கு சாப்பிடத் தான் வந்தேன்.
பணம் திருட வரவில்லை. நீங்கள் ஏழை என்பதை நான் அறிகிறேன். அதனால் தான் ஆறுதல் கூறுவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனது காலில் அடிபட்டுள்ளதால் அதற்கு பணம் தேவைப்படுகிறது. எனவே, உங்கள் கல்லாவில் இருந்த பணத்தையும் நான் எடுத்துக் கொண்டேன்.
நான் உங்கள் கடையில் அதிகமாக ஒன்றும் சாப்பிடவில்லை. நான்கு பீஸ் இனிப்புகளை தான் சாப்பிட்டேன். சேவ் கிடைக்கும் என்று தேடிப் பார்த்தேன். அது இல்லை. கடைசியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.
நீங்கள் போலீசிடம் புகார் தெரிவிக்க வேண்டாம். ஏன் என்றால் நான் உங்கள் விருந்தாளி.” என்று எழுதி வைத்துள்ளான். இந்த கடிதம் விவகாரம் அக்கம் பக்கம் பரவிய நிலையில், சம்பவ இடத்திற்கு அப்பகுதியின் காவல்துறை ஆய்வாளர் அசோக் பெனிவால் வந்துள்ளார்.
ஆனால் கடித்ததைப் படித்து பார்த்த பின் கடையின் உரிமையாளர் கோமாராம் போலீசாரிடம் புகார் அளிக்க விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். அவர் கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் பணம் மற்றும் இனிப்புகள் திருடப்பட்டுள்ளன. உரிமையாளர் புகார் அளிக்காவிட்டாலும், அந்த திருடனைத் தாங்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சுமார் 2500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதிலும் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2485 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2022ஆம் ஆண்டில் 19,740 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 2371 விபத்துக்கள் உயிராபத்து ஏற்படும் வகையிலானவை எனவும் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகியுள்ளன. அதிக வேகமாக வாகனத்தைச் செலுத்தியமையே அதிகளவான விபத்துக்களுக்கான காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வாகன விபத்துக்களினால் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூன்று அடுக்கு கட்டிடத்தில் பிரபல துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ஷங்கர் என்பவர் காவலாளியாக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் அந்த கடையில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு ஹரிணி, ஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
தினமும் சங்கர் வேலையை முடித்துவிட்டு தனது மனைவி மற்றும் மகளுடன் இந்தப் பகுதியிலிருந்து கிளம்பி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். நேற்றும் வழக்கம்போல் மனைவி வாணி மற்றும் 5 வயது மகள் ஹரிணி ஆகியவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது துணிக்கடையின் வாசலில் இருக்கக்கூடிய இரும்பு கேட் அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் இரும்பு கேட்சிறுமி மேலே விழுந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த சிறுமி உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சம்பந்தப்பட்ட காரணமாக துணிக்கடையானது மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கு இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் (30.01.2023),
திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த எஸ்.என். நிபோஜன், மக்களின் பிரச்சனைகள் பலவற்றை செய்திகள் மூலம் வெளிகொண்டுவந்தவர் ஆவார்.
சிறந்த புகைப்பட கலைஞனாக புகைப்பட ஊடகவியலாளனாக பல கதை சொல்லும் புகைப்படங்களை செய்தி அறிக்கைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தவர்.
இந்திய மாநிலம் கேரளாவில் சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர், பெண்ணின் மீது மோதியதில் இருவரும் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் கோவளம் பைபாஸ் சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட்டனர். அப்போது சிந்து (53) என்ற பெண் அவ்வழியாக சாலையோரத்தில் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
அவர் பைபாஸ் சாலையை கடக்க முயற்சித்தபோது, இளைஞர் ஒருவர் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்து மோதினார். இதில் குறித்த பெண் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் பைக்கை ஓட்டிய இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் மாலை வேளையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பேஸ்புக் நண்பரை திருமணம் செய்து கொள்வதற்காக ஸ்வீடன் நாட்டு பெண் ஒருவர் இந்தியாவிற்கு பறந்து வந்து இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
கிறிஸ்டன் லிபர்ட்(Christen Liebert) என்ற ஸ்வீடன் நாட்டு பெண் கடந்த 2012ம் ஆண்டு பேஸ்புக்கில் இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவன் குமார் என்ற நபரை சந்தித்துள்ளார்.
இருவரும் நீண்ட நாட்களாக நல்ல நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர், இதற்காக ஸ்வீடன் நாட்டு பெண்ணான கிறிஸ்டன் லிபர்ட் இந்தியாவுக்கு பறந்து வந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை உத்திரபிரதேச மாநிலத்தின் எட்டாவில் உள்ள ஒரு பள்ளியில் இந்து முறைப்படி இருவருக்கும் பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
இது தொடர்பாக ANI பகிர்ந்துள்ள வீடியோவில், வர்மலா விழாவில் ஸ்வீடன் நாட்டு பெண் கிறிஸ்டன் லிபர்ட் இந்திய கலாச்சார திருமண உடையை அணிந்து மணமகனின் கழுத்தில் மாலை அணிவதை பார்க்க முடிகிறது.
திருமணத்திற்கு பவன் குமாரின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மணமகனின் தந்தை கீதம் சிங் தெரிவித்த கருத்தில், குழந்தைகளின் மகிழ்ச்சியில் தான் தங்களின் மகிழ்ச்சி உள்ளது.
இந்த திருமணத்திற்கு நாங்கள் முற்றிலும் உடன்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார். பவன் குமார் டெஹ்ராடூனில் பி.டெக் படிப்பை முடித்து, நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் அடுத்த பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரிகம் கிராமத்தை சேர்ந்த தலித் இளம்பெண் பிரியங்கா (22). மாற்றுத்திறனாளியான இவர் ஒசூர் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில், முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் (24) என்பவரும் பிரியங்காவும் காதலித்து வந்தனர். ஸ்ரீதரை முழுமையாக நம்பிய பிரியங்கா அவரை அளவுக்கு அதிகமாக்க காதலித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று மாலை ஸ்ரீதர், காதலியின் தந்தை வெங்கடசாமி என்பவருக்கு போனில் தொடர்புக்கொண்டு உன் மகளை கடத்திவிட்டோம் 10 லட்சம் ரூபாய் பணம் தந்தால் மட்டுமே விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து வெங்கடசாமி ஓசூர் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் இன்று காலை, இராமன்தொட்டி என்னும் வனப்பகுதியில் பிரியங்கா கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று மாலை காதலியை வெளியில் செல்வோம் என அழைத்து சென்ற ஸ்ரீதர், இராமன்தொட்டி வனப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தபோது பிரியங்காவிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டதாகவும், தர மறுத்ததால் அவரை பாறையில் இருந்து கீழே தள்ளி கொலை செய்தது தெரிய வந்தது.
மேலும், இந்த கொலை வழக்கை சாதியை காட்டி போலீசார் மெத்தனமாக கையாளுவதாக கண்டித்தும், பெண் கொலையில் மர்மம் இருப்பதாகவும், இக்கொலையில் மேலும் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி பேரிகை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
இதற்கிடையே, மாற்றுத்திறனாளி இளம்பெண், கொலை செய்யப்படுவதற்கு முன்பு காதலன், இளம்பெண்ணின் அக்கா லாவண்யா என்பவரிடம் பணம் கேட்கும் தொலைப்பேசி உரையாடல் வெளியாகி உள்ளது.
மாற்றுத்திறனாளி பெண் என்றாலும் வங்கியில் வேலை பார்க்கும் ஒரே காரணத்தில் காதலிப்பதை போல நடித்து பணம் பிடுங்க நினைத்த வாலிபர் தனது முயற்சி ஈடுபடாததால் இளம்பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் நடந்த கார் விபத்தில் இலங்கை தமிழர்களான தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில் அவர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இலங்கையின் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாக கொண்டவர்கள் தனபாலசிங்கம் கண்ணன் (69) மற்றும் கண்ணன் சுரேஷ் (34). இருவரும் தந்தை மற்றும் மகன் ஆவார்கள்.
இருவரும் சுவிஸ்லாந்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கார் விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மகன் உயிரிழந்த நிலையில், தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் அவர்கள் சென்ற கார் பலத்த சேதமடைந்து நொறுங்கியது வெளியான புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமை ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவிக்கையில்,
“கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு, அவருடைய தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சத்திர சிகிச்சை கூடத்தில்,
நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதல் முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு வரலாற்று சாதனை ஆகும்.
எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதோடு சத்திர சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தினையும்இ குறித்த சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்திய குழாமினுடைய புகைப் படத்தினையும் வைத்திய கலாநிதியும் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருமான தங்கமுத்து சத்தியமூர்த்தி வெளியிட்டார்.