4 வருடங்களாக வீட்டுக்குள்ளேயே இருந்த பெண்… கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

லாரா..

இளம் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டது பற்றி அவரிடம் தெரிவிக்க சென்ற சமயத்தில் உறவினர்களுக்கு திகிலூட்ட வைக்கும் விஷயம் ஒன்று காத்திருந்துள்ளது. சர்ரே என்னும் பகுதியில் ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் லாரா வின்ஹம் என்ற பெண்.

லாராவுக்கு சிறு வயது முதலே நோய் வாய்ப்பட்டு இருந்ததால் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் இருக்காமல் தனியாகவும் வசித்து வந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், அவருக்குள்ள நோயின் காரணமாக குடும்பத்துடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏதாவது செய்து விடுவார்கள் என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்ததால் அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றிலும் லாரா தனியாக தங்கி வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக லாராவின் தந்தை இறந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி, லாராவிடம் தெரிவிப்பதற்காக அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சுமார் 4 வருடங்கள் கழித்து உறவினர்கள் சென்றுள்ளனர்.

அங்கே கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், கடிதம் போடும் இடைவெளி வழியாக உறவினர் எட்டிப் பார்க்க, அங்கே கால் ஒன்று தெரிவதை அறிந்து உடனடியாக போலீசாருக்கும் அவர்கள் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

லாரா உயிரிழந்தபடி, உடல் காய்ந்து சுருங்கி போயிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. முன்னதாக தன்னுடைய காலண்டரில், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “உதவி தேவை” என்றும் லாரா எழுதி வைத்துள்ளார்.

இதன் பின்னர் சுமார் 4 ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு வந்த கடிதங்கள், பில்கள் உள்ளிட்ட எந்த ஒரு விஷயமும் தொடப்படாமல் கிடந்துள்ளது. தொடர்ந்து லாராவின் உடல் பாகங்களை கொண்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்த நிலையில், சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பலரையும் ஒரு நிமிடம் பீதியில் ஆழ்த்தி இருந்தது. இது தொடர்பாக லாராவின் உறவினர்கள் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.

தனியாக வாழ்ந்து வந்த பெண்ணை இத்தனை நாட்கள் எட்டி கூட பார்க்காமல் இருந்தது பற்றியும், சமூக சேவகர்கள் பராமரிப்பு குறித்தும் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும் என்றும் லாராவின் உறவினர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

உத்தப்பிரதேசத்தில்..

உத்தப்பிரதேசத்தில் கு.டும்ப ச.ண்டைக்கு ந.டுவே கோ.வத்தில் க.ணவனின் நா.க்.கை, பெ.ண் ஒ.ருவர் க.டி.த்.து து.ண்.டா.க்.கி.ய ச.ம்பவம் பீ.தி.யை கி.ள.ப்பியுள்ளது.

தி.ருமணம் இ.ன்பமும், து.ன்பமும் க.லந்தது. சி.ல ச.மயம் த.ம்பதிகளுக்குள் வா.ய்.ச்.ச.ண்.டை வ.ரும், சில ச.மயம் பு.ன்னகையுடன் கைகுலுக்குவார்கள். ஆ.னால் பல சமயங்களில் பொ.ருட்களை தூ.க்.கி எ.றி.வதில் ச.ண்.டை சூ.டு.பி.டிக்கிறது.

ஆ.னால் இ.தையெல்லாம் தா.ண்டி இ.ங்கு கு.டும்ப ச.ண்.டை ஒ.ருவரின் நா.க்.கை து.ண்.டி.த்.து.ள்.ள.து. இ.ந்த வி.னோத ச.ம்பவம் உத்தரப்பிரதேசத்தில் ந.டந்துள்ளது.

லக்னோவில் அமைந்துள்ள தாகுர்கஞ்ச் பகுதியில் வசிக்கும் சல்மா, வெ.ள்ளிக்கிழமை தன் க.ணவர் முன்னாவுடன் ந.டந்த ச.ண்.டை.யி.ல் இ.ந்த வெ.றி.ச்.செ.ய.லி.ல் ஈ.டு.ப.ட்டுள்ளார்.

முன்னாவுக்கும், சல்மாவுக்கும் இ.டையே நீ.ண்ட கா.லமாகவே த.க.ரா.று இ.ருந்தாகக் கூ.றப்படுகிறது. இ.தையடுத்து சல்மா த.ன் பெ.ற்றோர் வீ.ட்டுக்கு செ.ன்றுவிட்டார். ஆ.னால் முன்னா த.ன் ம.னைவியை த.ன்னோடு வ.ந்துவிடும்படி க.ட்.டாயப்படுத்தியுள்ளார்.

நேற்று (ஜன.27) வெள்ளிக்கிழமை ம.னைவியின் பெ.ற்றோர் வீ.ட்டுக்கு செ.ன்ற முன்னா, த.ன் வீ.ட்டிற்கு வ.ந்துவிடுமாறு சல்மாவை கே.ட்டு கொ.ண்டார். ஒ.ருகட்டத்தில் அ.து ச.ண்.டை.யா.க மா.றியுள்ளது.

ச.ண்.டை மு.ற்.றி.யபோது ம.னை.வி க.ண.வ.னி.ன் நா.க்.கை.க் க.டி.த்.து.வி.ட்.டா.ர் எ.ன கூ.றப்படுகிறது. சல்மா த.ன் க.ணவரின் நா.க்.கை கொ.டூ.ர.மா.க ப.ற்.க.ளா.ல் க.டி.த்.த.தி.ல், அ.து து.ண்.டா.க த.ரை.யி.ல் வி.ழு.ந்.த.து.

ப.ல.த்.த கா.ய.ம.டைந்த முன்னாவும் ம.ய.ங்.கி வி.ழு.ந்.தா.ர். அ.வரை போ.லீசார் சி.கிச்சைக்காக அ.ருகில் உ.ள்ள ம.ருத்துவமனைக்கு அ.னுப்பி வை.த்தனர். சல்மா த.ற்போது போ.லீஸ் கா.வலில் உ.ள்ளார். சல்மா ஏ.ன் அ.வ்வாறு ந.டந்து கொ.ண்டார் எ.ன்பது கு.றித்து வி.சாரணை ந.டந்து வ.ருகிறது.

இ.து கு.றித்து ஏடிசிபி சிரஞ்சீவ் நாத் சிங்க,”இ.ந்த த.ம்பதிக்கு இ.டையே ப.ல ஆ.ண்டுகளாக ச.ண்.டை ந.டந்து வ.ருகிறது. ம.னை.வி, க.ண.வ.னை வி.ட்.டு பி.ரிந்து பெ.ற்றோர் வீ.ட்டில் வ.சித்து வ.ந்தார்.

வெ.ள்ளிக்கிழமையன்று க.ணவர் த.னது பி.ள்ளைகளை ச.ந்திப்பதற்காக இ.ங்கு வ.ந்த போ.து இ.ந்த அ.ச.ம்.பா.வி.த.ம் ந.டந்துள்ளது. த.கவலறிந்த போ.லீசார் ச.ம்பவ இ.டத்திற்கு செ.ன்று அ.வரை ம.ருத்துவமனையில் அ.னுமதித்தனர். இந்.த வ.ழக்கின் பி.ன்னணியில் வி.சாரணை தொ.டங்கப்பட்டுள்ளது” எ.ன்றார்.

நட்பு காதலாகி காதலே மாணவிக்கு எமனான சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

சென்னையில்…

சென்னையில் உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார்.

இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள்.

இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார். இதன் பிறகு கடும் மனஉளைச்சல்லில் மாணவி இருந்திருக்கிறார்.

இதனையடுத்து, ஜனவரி 26ம் தேதியன்று இளங்கோவனுக்கு பிறந்த நாள் என்பதால் மீண்டும் மாணவியும், அவரும் வெளியே சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இதன்பிறகு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒன்றாக இனி இருக்க விட மாட்டார்கள் ஒன்றாக உயிரை மாய்த்து கொள்ளலாம் என எண்ணி இருவரும் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து குதித்து உள்ளார்கள்.

இதில் மாணவி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இளங்கோவன் உயிர் துடித்து கொண்டிருந்ததை பார்த்வர்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தார்கள் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கு சம்பவம்!!

பெரம்பலூரில்..

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள பென்னகோணம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் – தமிழ்ச்செல்வி தம்பதியினர். இவர்களுக்கு வினோத்குமார், விஜயகுமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் வினோத்குமாருக்கு பிரியா என்ற மனைவியும், விஜயகுமாருக்கு ஜெயா என்ற பெண்ணுடன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நிகிதா, நிகிஷா என்ற 2 இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், வினோத்குமார் மற்றும் விஜயகுமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். வினோத்குமார் தாய் தமிழ்ச்செல்வி, மனைவி பிரியா மற்றும் விஜயகுமாரின் மனைவி ஜெயா அவர்களது குழந்தை நிகிதா மற்றும் நிகிஷா ஆகியோர் பென்னகோணம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடலூர் மாவட்டம் ராமநத்தம் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்த ஜெயா ஒரு வாரத்திற்கு முன்பு பென்னகோணம் கிராமத்திற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார்.

அப்போது வீட்டில் உள்ள அறையில் நேற்று இரவு தூங்கிக்கொண்டிருந்த ஜெயா குழந்தைகளுடன் காலையில் எழுந்து வெளியே எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஜெயா மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு சடலமாக தொங்கி கொண்டிருந்தார்.

மேலும் 2 பெண் குழந்தைகளான நிகிதா(2) மற்றும் நிகிஷா(2) ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 பேரின் சடலங்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில் குழந்தைகள் இருவருக்கும் விஷம் கொடுத்து கொலை செய்த பிறகு ஜெயா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் தற்கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றாலும், ஜெயாவின் தந்தை செல்வராஜ் தனது மகளின் மாமியார் தமிழ்ச்செல்வி, மருமகனின் அண்ணன் வினோத்குமார் மற்றும் அவரது மனைவி பிரியா ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக,

மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி போலீசார் அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டகிராம் காதல் திருமணம் : கர்ப்பிணி மனைவியைக் கொன்று மலையிலிருந்து உருட்டிவிட்ட கணவன்!!

வேலூரில்..

வேலூர் அருகிலிருக்கும் பாலமதி மலை உச்சியில், ‘குழந்தை வேலாயுதபாணி’ திருக்கோயில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலில் இருந்து 100 அடிக்கு கீழிருக்கும் பாறைகளின் இடுக்கு பள்ளத்துக்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்தது.

தகவலறிந்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார், உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போதுதான் தெரிந்தது, அந்தப் பெண் கொலைச் செய்யப்பட்டு மலையில் இருந்து உருட்டிவிடப்பட்டிருக்கிறார் என்று!

கட்டையால் முகம், தலையில் கொடூரமாக தாக்கியிருப்பதும், பாட்டிலால் கழுத்தை குத்திக் கிழித்திருப்பதும் தெரியவந்தது. முகம் வீங்கி அடையாளம் காண முடியாதபடி விகாரமாகக் காணப்பட்டது. கழுத்தில் தாலி, கால் விரலில் மெட்டி அணிந்திருப்பதை வைத்து அவர் திருமணம் ஆனவர் என்று முடிவுக்கு வந்தது போலீஸ்.

கொலைச் செய்யப்பட்ட பெண் சுடிதார் அணிந்திருந்தார். பெண் போலீஸாரைக் கொண்டு ஆய்வு செய்த போது, மார்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்று சிக்கியது.

அந்தக் கடித்தத்தை வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கொலைச் செய்யப்பட்ட பெண் கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியைச் சேர்ந்த 23 வயதே ஆகும் குணப்பிரியா என்பது தெரியவந்தது.

அவரின் உடையில் சிக்கிய கடிதத்தை அவரே எழுதி மறைத்து வைத்திருந்ததும் தெரியவந்தது. அதில், ‘‘என் பெயர் குணப்பிரியா. நான் சென்னையிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைச் செய்து வந்தேன். ஓராண்டுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் வேலூரைச் சேர்ந்த கார்த்தி என்பவனுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் காதலித்து, கடந்த ஆண்டு காட்பாடி அருகேயுள்ள வள்ளிமலை முருகர் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், எங்களை இருத்தரப்பு பெற்றோர்களுமே ஏற்றுக்கொள்ளவில்லை.

எங்கள் திருமணத்தில் அவனது நண்பர்கள் 4 பேர் மட்டுமே கலந்துகொண்டனர். தற்போது, ஏழு மாதம் கர்ப்பமாக இருக்கிறேன். கார்த்தி வேலைக்குப் போவதில்லை. எனக்கு சாப்பாடும் வாங்கித் தருவதில்லை.

என் அப்பா, அம்மாவுக்கு சொல்லாமலேயே கல்யாணம் செய்ததற்கு நிறைய கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். இவனோடு வாழ்வதற்கு சாவதே மேல். என் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால், அதற்கு காரணம் கார்த்தி மட்டுமே!’’ என்று குறிப்பிட்டிருந்திருக்கிறார் குணப்பிரியா.

முன்கூட்டியே தனது காதல் கணவனால் தனக்கு நேரப் போகும் விபரீதம் குறித்து அந்தப் பெண் உணர்ந்ததாலேயே இப்படியான கடிதத்தை எழுதி உடைக்குள்ளேயே மறைத்து வைத்திருந்திருக்கிறார் என்கிறது போலீஸ். இந்தக் கடிதமே கொலையாளியை எளிதாகக் கண்டுபிடிக்கவும் காரணமாக அமைந்தது.

அந்தக் கார்த்தி யாரென்று விசாரித்தபோது, வேலூர் வடக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் சப்-இன்ஸ்பெக்டரின் மகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை தேடிப்பிடித்து கைது செய்த போலீஸார், விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். போலீஸாரிடம் கார்த்தி, ‘‘என்னை விட 1 வயது மூத்தவர் குணப்பிரியா. எங்களுக்குள் இன்ஸ்டாகிராம் மூலம்தான் பழக்கம் ஏற்பட்டது.

அவரை திருமணம் செய்து அழைத்துவந்து, பாலமதி மலை அடிவாரத்திலுள்ள நம்பிராஜபுரம் கிராமத்தில் வசிக்கும் என் நண்பன் வீட்டில் தங்க வைத்தேன்.

என் பெற்றோரும், அவளது பெற்றோரும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில், வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தும் அளவுக்கு என்னிடம் பணமும் இல்லை. இதனால், எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு குணப்பிரியாவை கடலூர் குள்ளஞ்சாவடியிலுள்ள அவளது சித்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். ‘உன் சித்தி வீட்டிலேயே இரு.

நான் வாடகைக்கு வீடு எடுத்துவிட்டுச் சொல்கிறேன். அப்புறம் வா..’ என்றேன். அவளிடம் போன் கிடையாது. அவளது சித்தி போனில்தான் பேசி வந்தாள். மூன்று வாரம் ஆன நிலையில், 25-ம் தேதி இரவு திடீரென வேலூர் கிளம்பி வந்துவிட்டாள்.

அன்று இரவு 12 மணி இருக்கும். வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அவளை எனது பைக்கில் அழைத்துக்கொண்டு, மீண்டும் பாலமதி மலை அடிவாரத்திலுள்ள எனது நண்பன் வீட்டுக்கே சென்றேன். அதற்கு குணப்பிரியா ‘உன் நண்பன் வீட்டுக்கு வரமாட்டேன்.

உன் அப்பா, அம்மாவிடம் அழைத்துச்செல். நாம் இருவரும் அவர்களுடனேயே இருப்போம்’ என்றாள். இதனால் எனக்குக் கோபம் வந்துவிட்டது. ‘இவளை இனியும் விட்டு வைத்தால் நிம்மதி இருக்காது’ என்று நினைத்து கொலைச் செய்யவும் திட்டமிட்டுக் கொண்டேன்.

அதன்படி, ‘இரவு நேரம் என்பதால், இப்போது வேண்டாம். நாளை காலை என் அப்பா, அம்மாவிடம் அழைத்துச் செல்கிறேன். இன்று இரவு மட்டும் பாலமதி மலை உச்சியிலுள்ள முருகர் கோயில் அருகில் தங்கிக்கொள்ளலாம்’ என்று சொல்லி, பைக்கிலேயே உட்கார வைத்து அழைத்துச் சென்றேன்.

கோயில் அருகில் சென்றபோதும், எங்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஏற்கெனவே திட்டமிட்டி அருகில் கிடந்த உடைந்த பாட்டிலை எடுத்து, அவளது கழுத்தில் குத்தினேன். ரத்தம் பீறிட்டு கொட்டியது. அவளும் நிலைக்குலைந்து சரிந்து விழுந்தாள். பின்னர், அருகில் கிடந்த பெரிய கட்டையை எடுத்து முகம், தலையில் சரமாரியாக தாக்கி காயப்படுத்தினேன்.

மூச்சு பேச்சின்றி அவள் கிடந்ததால், ‘செத்து ஒழிந்தாள்’ என்ற சந்தோஷத்தில் மலையில் இருந்து கீழே உருட்டிவிட்டேன். பின்னர், அங்கிருந்து பைக்கை எடுத்துக்கொண்டு நண்பன் வீட்டுக்கு வந்துவிட்டேன். விடிந்ததும், 26-ம் தேதி காலை குள்ளஞ்சாவடியிலுள்ள குணப்பிரியாவின் சித்திக்கு போன் செய்து, ‘அவள் வேலூருக்கு வரவில்லையே..!’ என்று சொன்னேன்.

‘நேற்று இரவு உனக்குப் போன் செய்துவிட்டு தான் அவள் இங்கிருந்து கிளம்பிச் சென்றாள்’ என்று அவளது சித்தி சொன்னார். நானும் எதுவுமே தெரியாதபடி அவரிடம் நடித்தேன். 26-ம் தேதி மாலையே அவளது சித்தி மீண்டும் எனக்குப் போன் செய்து கேட்டார்.

‘அவள் வரவில்லை’ என்ற பதிலையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தேன். 27-ம் தேதியான நேற்று காலை, நானே மீண்டும் அவளது சித்திக்குப் போன் செய்து கேட்டேன். அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது.

‘நடிக்கிறீயா, அவளை என்னடா பண்ண..’ என்று கோபமாகக் கேட்டார். ‘நானும் அவள் இன்னும் வரவில்லை’ என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டேன். இப்போது மாட்டிக்கொண்டேன்’’ என்று கூறியிருக்கிறார் கார்த்தி.

இதையடுத்து, அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகளை மேற்கொண்டிருக்கிறார்கள் பாகாயம் போலீஸார். இந்தக் கொடூரச் சம்பவம், வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

காதலியுடன் சண்டை… நடுவீதியில் 70 லட்சம் மதிப்புள்ள சொகுசுக் காரை எரித்த காதலன்!!

காஞ்சிபுரத்தில்..

காஞ்சிபுரம் அருகே காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் சொகுசு காரை காதலன் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனிதர்களுக்குக் கோபம் வந்தால் என்ன செய்வார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. சில நேரங்களில் இந்த கோபம் கொலை செய்யவும் வழிவகுத்து விடுகிறது.

அதனால் தான் மனிதர்கள் கோபம் அடையக் கூடாது என அடிக்கடி சொல்லப்பட்டு வருகிறது. காதலியுடன் ஏற்பட்ட சண்டையில் கோபம் பட்ட காதலன் ஒருவன் தனது சொந்த காரையே எரித்த கொடுமை காஞ்சிபுரம் அருகே நடந்துள்ளது.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவின். இவர் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஆண்டு படித்து முடித்துள்ளார். படிக்கும் போது அதே கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து தனது காதலியுடன் காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் சென்றபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபம் அடைந்த கவின் ரூ.70 லட்சம் மதிப்பில்ல தனது சொந்தமான பென்ஸ் காரை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதைப்பார்த்து காதலியும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

16 வயது மாணவிக்கு வகுப்பறையிலேயே நடந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

விரிந்தா திரிபாதி..

உலகம் எதை நோக்கி பயணிக்கிறது என்பது இதுவரையில் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் எல்லாம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. நாம் சத்தான, ஆரோக்கியமான பழக்கங்கள் என்று நம்பி, கடைப்பிடித்து வந்தவைகளை நம் பிள்ளைகள் புறந்தள்ளுகின்றனர்.

இதையே தான் நமது முந்தைய தலைமுறையினருக்கு நாம் செய்தோம். வெள்ளை வெளேரென பாலீஷ் செய்யப்பட்ட அரிசி தான் வேணும் என்று பந்தா செய்து, சத்துக்களை எல்லாம் இழந்த சக்கைகளைச் சாப்பிட்டோம்.

தெருவுக்கு இருபத்தைந்து முதல் ஐம்பது பேர் வரை ‘எனக்கு ஷூகர் இருக்கு.. சர்க்கரை இல்லாம காபி’ என்று ஸ்டைலாக பேசுகிறோம். கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இல்லாத பழக்கமாக இப்போது தேநீர் கடைகளில் ஷூகர் ப்ரீ மாத்திரைகள் நிரந்தரமாகி விட்டன.

தனியார் பள்ளியொன்றில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி, மாரடைப்பால் வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். பதினாறு வயசு தான்.. மாரடைப்பால் மரணமடைகிற வயசா அது. ஆனால் அது தான் நிஜம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மத்தியப் பிரதேசம் இந்தூரின் உஷா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி விரிந்தா திரிபாதி (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படித்து வந்த திரிபாதி, அன்றைய தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்றார்.

திரிபாதியின் நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கமான வகுப்புகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், சுமார் 12 மணி அளவில் திடீரென வகுப்பறையிலேயே திரிபாதி மயங்கி சரிந்து விழுந்தார்.

திடீரென மாணவி வகுப்பறையில் சரிந்து நிலைக்குலைந்து கீழே விழுந்ததும் பதறிப் போன ஆசிரியர்கள் உடனடியாக மாணவியை தூக்கிக் கொண்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மாரடைப்பு ஏற்பட்டதே மாணவியின் மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தி அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மாணவி விரிந்தாவுக்கு எந்த நோய் பாதிப்பும் இல்லை. சம்பவ தினத்தன்று இந்தூரில் வழக்கத்தை விட குளிர் அதிகமாக இருந்துள்ளது.

மாணவி மெலிதான விளையாட்டு பயிற்சிக்கான உடைகளை அணிந்து கொண்டு குடியரசு தின விழா ஒத்திகையைச் செய்துள்ளார்.மேலும், அந்த நேரத்தில் அவர் சில நொறுக்கு தீனிகளையும் சாப்பிட்டுள்ளார். மாணவிக்கு மாரடைப்பு ஏற்பட இவை காரணிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

உயிரிழந்த மாணவியின் சொந்த ஊர் ஊஜ்ஜைனி ஆகும். அவரின் தந்தைக்கு சிறுநீரகக் கோளாறு இருப்பதால் அவரது தாய் மாமா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இந்துரைச் சேர்ந்த முஸ்கான் என்ற சமூக தொண்டு நிறுவனம் மாணவியின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு கண் தானத்திற்காக கோரிக்கை வைத்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினர் அவரது கண்களை தானம் செய்துள்ளனர்.

குளிர் காலத்தில் இருதயம் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மளிகைக் கடை வருமானத்தை வைத்து உலகை சுற்றிவரும் சிங்கப் பெண் : சாதனைப் பெண்ணின் கதை!!

கேரளாவில்..

கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் மளிகை கடை மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்தே உலக சுற்றுலா சென்றுவருகிறார். இதற்கு இவர் சொல்லும் காரணம் தான் பலரையும் வியப்படைய செய்திருக்கிறது.

பொதுவாக, சுற்றுலா செல்வது பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இரைச்சல்களும், அழுத்தும் அலுவலக பணியும் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு ஒரு குட்டி டாட்டா சொல்லிவிட்டு ஒரு பயணம் போக வேண்டும் என விரும்பாத நபர்களே இருக்க முடியாது.

பயணம் மேற்கொண்டு புதிய இடங்களை தேடிச் செல்லும் அனுபவத்தை பெற அனைவருமே நினைப்பது உண்டு. ஆனால், பொருளாதார சூழ்நிலை, விடுப்பு என ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் திடீரென முளைத்துவிடும்.

ஆனால் கேரளாவை சேர்ந்த இந்த பெண், யாருக்காகவும் தன்னுடைய கனவுகளை விட்டுத்தரும் நபர் அல்ல. கேரளாவின் எர்ணாகுளம் அருகே உள்ள சித்ரபுழையில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார் இந்தப்பெண்.

பயணத்தின் மீது தீரா காதல் கொண்ட இவர் இதுவரையில் மலேஷியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் எல்லாம் உலக சுற்றுலா செல்ல முடியுமா? என கேட்கப்படும் கேள்விக்கு முடியும் என ஒற்றை வார்த்தையில் பதில் அளித்திருக்கிறார் இவர்.

மளிகை கடை நடத்தி வரும் இவர் இதில் கிடைக்கும் வருமானத்தில் உலக சுற்றுலாவுக்கு என தனியாக பணத்தை சேமித்து வைக்கிறார். இதுபற்றி அவர் பேசுகையில் தனக்கென ஒரு வாழ்க்கை இருப்பதாகவும் அதனை மகிழ்ச்சியோடு தனக்கு பிடித்தபடி வாழ விருப்பப்படுவதாகவும் கூறுகிறார்.

இதுவரை 12 நாடுகளுக்கு சென்றுள்ள இவர் ஐரோப்பாவில் 15 நாட்களும், சிங்கப்பூர், மலேசியாவில் 7 நாட்களும், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தலா 15 நாட்களும் சுற்றுலா சென்றிருக்கிறார். பயணத்தின் மீது தனக்கு இருக்கும் காதல் எப்போதும் குறைவதில்லை என கூறும் இந்த பெண்ணுடைய வயது 61.

தற்போது ஹிமாச்சல் பிரதேஷ் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருக்கிறார் இவர். கொஞ்சம் மனது வைத்தால் உலக சுற்றுலா செல்ல நம்மாலும் முடியும் என உரக்க சொல்லியிருக்கும் இந்த பெண்மணி பலருக்கு ரோல் மாடலாக தற்போது உருவாகி உள்ளார்.

28 வயது மருமகளை கோவிலுக்கு அழைத்துச் சென்று மாலை மாற்றி திருமணம் செய்த 70 வயது மாமனார்!!

உத்திரபிரதேசத்தில்..

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் அவரது மாமனாரையே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படும் செய்தி புகைப்படத்துடன் பரவி வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சபியா உம்ராவ் என்ற கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்கவராக சொல்லப்படும் கைலாஷ் யாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

கைலாஷ் யாதவ் அங்கு அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் வாட்ச்மேனாக வேலை செய்து வருவதாக தெரிகிறது. அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை பார்த்துக்கொண்டு வந்திருக்கிறார்.

இந்நிலையில் கைலாஷ், தனது மூன்றாவது மகனுக்கு 28 வயதான பூஜா என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். ஆனால் சமீபத்தில் பூஜாவின் கணவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இதனால் பூஜா தன்னுடைய அம்மா வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது.

ஆனால் தனது அம்மா வீட்டில் சிறிது காலம் தங்கி இருந்த பூஜா, எவ்வளவு காலம்தான் தனியாக இருப்பார் என்று யோசித்த அவருடைய வீட்டில் இருந்தவர்கள் அவருக்கு அடுத்த திருமணம் செய்து வைப்பதற்கு யோசித்தனர்.

ஆனால் பெற்றோரின் இந்த யோசனைகள் பிடிக்காமல் மீண்டும் தன் கணவர் வீட்டுக்கு வந்து பூஜா வாழ தொடங்கியதாகவும், அப்போது அவருடைய எதிர்கால வாழ்க்கை குறித்து கைலாஷ் தீவிரமாக கவலை அடைந்து வந்ததாகவும் தெரிகிறது.

மேலும் இது தொடர்பாக பூஜாவிடமும், உறவினர்களிடமும் கலந்து ஆலோசித்த கைலாஷ், பின்னர் இறுதியில் தன்னுடைய மருமகள் பூஜாவை அருகில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று, சுற்றம் மற்றும் கோவில் முன்னிலையில் பூஜாவுடன் மாலை மாற்றி திருமணமே செய்து கொண்டார்.

ஆம், அங்கு இருவரும் மாலை மாற்றிக் கொண்ட ஃபோட்டோ தான், இச்செய்தியுடன் பரவி வருகிறது. பிறகு பூஜாவின் நெற்றியில் கைலாஷ் குங்குமம் வைத்த புகைப்படங்களும் வைரலாகி பரவி வருகின்றன.

இந்த திருமணத்தின் மூலம் பூஜா மகிழ்ச்சியுடன் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தரப்பிலும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இது குறித்து விசாரித்த போலீசாருக்கும் இருவரும் விருப்பப்பட்டே திருமணம் செய்து கொண்டனர் என்கிற தகவல் கிடைத்ததாக தெரிகிறது.

இந்தோனேஷிய பெண்ணை பேஸ்புக் மூலம் காதலித்து திருமணம் செய்த 62 வயது போதகர்… சிறைவைத்த உறவினர்கள்!!

கன்னியாகுமரியில்..

இந்தோனேசியப் பெண் திபோராவை நாகர்கோவிலுக்கு வரவழைத்து, அங்குள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிறிஸ்டோபர்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள பருத்திவிளை பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர். 62 வயதான இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீடு வீடாகச் சென்று கிறிஸ்தவ மத போதனைகள் செய்வதை முழுநேரப் பணியாகச் செய்துவந்தார்.

பருத்திவிளையிலுள்ள தன் குடும்ப வீட்டில் தாயாருடன் வசித்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தாயார் இறந்துவிட்டார். பின்னர் தனியாக வசித்துவந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அவருக்கு ஃபேஸ்புக் மூலம் இந்தோனேசியாவைச் சேர்ந்த திபோரா என்ற 45 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டிருக்கிறது.

நாளடைவில் நட்பு காதலாக மாறியிருக்கிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி இந்தோனேசியப் பெண் திபோராவை நாகர்கோவிலுக்கு வரவழைத்து, நாகர்கோவில் பகுதியிலுள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்து வீட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் கிறிஸ்டோபர்.

கிறிஸ்டோபரின் காலம் கடந்த திருமணத்துக்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு கிறிஸ்டோபர் உணவு வாங்குவதற்காக ஹோட்டலுக்குச் சென்றிருக்கிறார். அந்தச் சமயத்தில் கிறிஸ்டோபரின் உறவினர்கள், இந்தோனேசியா பெண் திபோராவை வீட்டின் அறையில் பூட்டி சிறை வைத்திருக்கின்றனர்.

ஹோட்டலுக்குச் சென்றுவிட்டு திரும்பிய கிறிஸ்டோபரை வீட்டுக்குள் விடாமல் கேட்டையும் இழுத்து மூடியிருக்கின்றனர். தன்னுடைய மனைவியை உறவினர்கள் அறையில் பூட்டி சிறை வைத்ததோடு தன்னை வீட்டுக்குள் போகவிடாமல் வெளியேற்றிவிட்டதாகவும், மனைவியின் உயிருக்கு ஆபத்திருப்பதாகவும், தன்னையும் தன் மனைவியையும் காப்பாற்றுமாறு போலீஸ் அவசர அழைப்பு எண் 100-க்கு போன் செய்து புகாரளித்திருக்கிறார்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் கிறிஸ்டோபரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் இந்தோனேசியப் பெண் திபோராவை வீட்டைவிட்டு வெளியே விட மறுத்ததுடன், கிறிஸ்டோபரையும் வீட்டுக்குள் அனுமதிக்க மறுத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சுமார் மூன்று மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிறிஸ்டோபரின் உறவினர்கள் உடன்படாததால் போலீஸார், `பூட்டை உடைத்து வீட்டுக்குள் செல்வோம்’ என எச்சரித்தனர். இதையடுத்து, உறவினர்கள் கேட் மற்றும் வீட்டைத் திறந்தனர். பின்னர் இரு தரப்பையும் காவல் நிலையத்துக்கு அழைத்து போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

`கிறிஸ்டோபர் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது’ என உறவினர்கள் தெரிவித்தனர். அதே சமயம், `நான் இனி திருமணம் செய்துகொள்ளமாட்டேன், எனது வீடு மற்றும் சொத்துகளைப் பங்கிட்டுக்கொள்ளலாம் என உறவினர்கள் நினைத்தார்கள். சொத்து கிடைக்காது என்பதால் எனது திருமணத்தை உறவினர்கள் எதிர்க்கிறார்கள்’ என கிறிஸ்டோபர் தெரிவித்திருக்கிறார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், `நீங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்’ என போலீஸ் தரப்பில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். 62 வயது போதகர், 45 வயது இந்தோனேஷியப் பெண்ணைத் திருமணம் செய்ததற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் குளச்சல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருமணம் நிச்சயிக்கப்பட்டவரிடம் வேறொருவரை காதலிப்பதாக கூறிய இளம் பெண் மாயம் : விசாரணையில் அம்பலமான உண்மை!!

மகாராஷ்டிராவில்..

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மருத்துவ மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). ஹோமியோபதி மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சுபாங்கிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால், வேறொருவரை காதலிப்பதாக பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடம் சுபாங்கி கூறியுள்ளார். இதன் காரணமாக திருமணம் நின்றதால் சுபாங்கியின் குடும்பம் கோபமடைந்தது.

அதன் பின்னர் மாணவி சுபாங்கி மாயமானார். இதுகுறித்து சந்தேகமடைந்த சிலர் மாணவியை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் தெரிவித்தனர். மாணவியின் குடும்பத்தினரை பொலிஸார் விசாரித்தபோது அதிர்ச்சி உண்மை வெளியானது.

சுபாங்கியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் குடும்பத்தினர், கடந்த மாதம் 22ஆம் திகதி அவரை வயலுக்கு அழைத்துச் சென்று கயிற்றினால் கழுத்தை நெரித்து கொன்றனர்.

பின்னர் அவரது உடலை எரித்து அங்கு இருந்த கால்வாயில் சாம்பலை கரைத்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் உள்ளிட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

ஹாங்காங் பெண்ணை காதலித்து திருமணம் செய்த தமிழ் இளைஞன் : சுவாரஸ்ய காதல் கதை!!

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அமைந்துள்ளது மீமிசல் என்னும் பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பெயர் உமா. இந்த தம்பதியரின் மகன் பெயர் காத்த முத்து (எ) மணிகண்டன்.

இவர் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஐடி பிரிவில் பணி செய்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டு காலமாக ஹாங்காங்கிலும் பணிபுரிந்து வந்துள்ளார் மணிகண்டன்.

அந்த சமயத்தில் மணிகண்டனுக்கு ஹாங்காங் நாட்டை சேர்ந்த அலார்கான் – செரில் தம்பதியினரின் மகளான செல்சீயுடன் நட்பு உருவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நாளடைவில் இருவருக்கும் இடையே காதலும் மலர்ந்துள்ளதாக தெரிகிறது. வெவ்வேறு நாடுகள் என்பதையும் தாண்டி, இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.

அப்படி இருக்கையில், இதற்கடுத்த கட்டமாக இருவரும் தங்களின் பெற்றோர்களிடமும் தங்களது காதலை பற்றி தெரிவித்து உள்ளனர். முதற்கட்டமாக இருவரது வீட்டிலும் அவர்களின் காதலுக்கு சற்று தயக்கம் காட்டியதாக தெரிகிறது.

பின்னர் மணிகண்டன் மற்றும் செல்சீ ஆகிய இருவரின் காதலையும் உணர்ந்து கொண்டு அதற்கு அவர்கள் சம்மதமும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய முறைப்படியும்,

மணிகண்டன் மற்றும் செல்சீ ஆகியோரின் திருமணம் நடைபெற வேண்டும் என்றும் மணிகண்டன் பெற்றோர் கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதற்கு செல்சீயின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டையில் அமைந்துள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் உறவினர்கள் புடை சூழ, தமிழர்களின் முறைப்படி மணிகண்டன் மற்றும் செல்சீ ஜோடியின் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் தனது திருமணத்தில் சேலை அணிந்தபடி மணப்பெண் கோலத்தில் இருந்தார் செல்சீ.

இருவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தவும் செய்திருந்தனர். மணிகண்டன் – செல்சீயின் திருமண புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்!!

தங்கத்தின் விலை..

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, நேற்றைய தினம் (27.01.2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 699,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

மேலும், கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் பதிவான முதல் வீழ்ச்சி இதுவாகும். இவ்வாறான நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 197,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நடுவானில் 33,000 அடி உயரத்தில் விமானத்தில் இருந்து விழுந்த பணிப்பெண் உயிர் பிழைத்த அதிசயம்!!

ஜேர்மனியில்..

கடந்த 1972ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனியில் ஹெர்ம்ஸ்டோர்ஃப் மீது பறந்து கொண்டிருந்த விமானத்தில் வெடிகுண்டு விபத்து அரங்கேறியது, அப்போது பாராசூட் இல்லாமல் 33,000 அடியில் இருந்து விழுந்த விமானப் பணிப்பெண் வெஸ்னா வுலோவிக் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 1972ம் ஆண்டு ஜனவரி 26ம் திகதி JAT யுகோஸ்லாவ் ஏர்லைன்ஸ் விமானம் 357 கிழக்கு ஜேர்மனியில் ஹெர்ம்ஸ்டோர்ஃப் மீது பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ராடர் திரையில் இருந்து காணாமல் போனது மற்றும் விமானத்தின் அனைத்து தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவிற்கு மேலே நடுவானில் வெடித்தது, பிறகு அங்குள்ள மலைப்பகுதியில் மோதியது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரோஷியாவில் உள்ள தீவிர வலதுசாரி நாஜி/பாசிசக் குழுவான உஸ்தாஷே என்ற பயங்கரவாதக் குழுவால் விமானத்தில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆனால் 2009 ஆம் ஆண்டில், ஜெர்மன் மற்றும் செக் பத்திரிகையாளர்கள் குழு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், விமானம் எதிரி விமானம் என்று தவறாக கருதப்பட்டு செக்கோஸ்லோவாக்கிய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் இது மிகவும் சாத்தியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கு செக் இராணுவ வல்லுனர்கள் இந்த அறிக்கையை சதி கோட்பாடு என்று நிராகரித்துள்ளனர். விமானம் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளான போது அதில் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்த செர்பிய பெண் வெஸ்னா வுலோவிக், பாராசூட் இல்லாமல் பயங்கரமான 33,333 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

மேலும் இதற்காக வெஸ்னா கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். விமானம் 33,000 அடியில் இருந்து கீழே விழுவதற்கு 3 நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

வெஸ்னா வுலோவிக் குண்டு வெடிப்பின் போது விமானத்தின் உணவு தொகுப்பு பகுதியில் சிக்கிக் கொண்டதால் உயிர் பிழைத்துள்ளார். விமானத்தில் பயணித்தவர்களில் வெஸ்னா வுலோவிக் மட்டுமே உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இடுப்பிலிருந்து கீழே செயலிழந்த வெஸ்னா இறுதியில் முழுமையாக குணமடைந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வாய்த் தர்க்கம் முற்றியதால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞன்!!

யாழில்..

இளைஞர்களிடையே நேற்று முன்தினம் ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவம் இளவாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுவதோடு புஸ்பராசா நிஷாந்தன் (வயது 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் நேற்று முன்தினம் மாலை சுண்டல் விற்பனை செய்துவிட்டு இளைஞர்கள் இருவர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு மதுபோதையில் வந்த நபரொருவர் மேற்படி இளைஞர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியதையடுத்து மதுபோதையில் வந்தவர் மீது கம்பியால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலில் காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நிலையில் அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதன்பின் அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே சிகிச்சை பயனளிக்காமல் அவர் உயிரிழந்தார். மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச் சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி பெண்ணை மணந்த இளைஞன்… அதிரடியாக திரைப்பட பாணியில் பெண் வீட்டார் செய்த செயல்!!

குஜராத்தில்..

குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண்ணை தமிழக இளைஞர் திருமணம் செய்து கொண்ட சூழலில், பெண் வீட்டார் செய்த காரியம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே அமைந்துள்ள கொட்டாங்குளம் என்னும் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகனான வினித் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

வினித்தும் அதே பகுதியை சேர்ந்த கிருத்திகாவும் பள்ளி பருவம் முதலே காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. கிருத்திகா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவராவார். இவரது தந்தை நவீன் படேல் கடந்த 20 ஆண்டுகளாக அப்பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார்.

இதனிடையே, நீண்ட நாள் காதலின் பெயரில், கடந்த சில தினங்கள் முன்பாக நவீன் மற்றும் கிருத்திகா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு அதனை சட்ட பூர்வமாகவும் பதிவு செய்து கொண்டதாக தெரிகிறது.

மறுபக்கம் பெண் வீட்டாரை எதிர்த்து இந்த திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனால், பாதுகாப்பு கேட்டும் வினித் மற்றும் கிருத்திகா ஆகியோர் காவல் துறையினரிடம் மனு அளித்துள்ளனர்.

இதனிடையே, வினித் மற்றும் அவரது மனைவி கிருத்திகா ஆகியோர் வீட்டில் இருந்த சமயத்தில், கிருத்திகாவின் குடும்பத்தினர் கும்பலாக வந்து அங்கே தாக்குதலில் ஈடுபட பரபரப்பும் உருவானது.

அது மட்டுமில்லாமல், அங்கிருந்த வாகனங்களை சேதப்படுத்தி வினித் வீட்டில் இருந்த அவரது மனைவி கிருத்திகாவையும் அங்கிருந்து வலுக்கட்டாயமாக தூக்கி சென்றதாக தகவல்கள் கூறுகின்றது.

எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது வீட்டார் தூக்கி சென்றது அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை உண்டு பண்ணி உள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துள்ளார் வினித்.

தொடர்ந்து, இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வரும் சூழலில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கூட அதிக பதற்றத்தையும் உருவாக்கி உள்ளது.